திங்கள், 14 செப்டம்பர், 2015

'திங்க'க் கிழமை 150914 கடலை (வடை) போடக் கற்றுக்கொள்ளுங்கள் + சொ யா கே ... 1/7


வாங்க எல்லோரும் வரிசையாய். 

உங்களுக்கு கடலை வடை போடக் கற்றுத் தருகின்றேன் 

கடைக்குச் சென்று, இதெல்லாம் வாங்கிகிட்டு வாங்க:

பொட்டுக்கடலை : (Fried gram) : கால் கிலோ.
பச்சை மிளகாய் : ஐந்து.
பெரிய வெங்காயம் : மூன்று.
முந்திரிப்பருப்பு : பத்து.
கச முசா ஓ சாரி --- கச கசா  (poppy seeds) ஒரு மேசைக் கரண்டி. (சின்ன பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒரு மே க அளவு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்) 
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு. 
பொடி உப்பு :தோராயமாக இரண்டு மேசைக்கரண்டி. (சுவைக்கேற்ப மாறலாம்) 
ஒரு தேங்காய் மூடி. 
கொஞ்சம் கொத்தமல்லித் தழை. 

நல்லெண்ணெய் : கால் லிட்டர்.

பொட்டுக்கடலையை மிக்சியில் இட்டு, தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித் தழை இவற்றை பொடிப்பொடியாய் அரிந்து கடலைப்பொடியில் போடவும். முந்திரிப்பருப்பு, கசகசா, தேங்காய்த்துருவல் இவற்றையும் மிக்சியில் அரைத்து, கடலைமாவில் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து, வடை மாவு பிசைந்துகொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், வடைகளை ஒவ்வொன்றாகத் தட்டி, எண்ணெயில் இட்டு, இருபுறமும் திருப்பி, பொன்னிறமாகப் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
      
(இது கூகிளில் சுட்ட வடை) 

கடலை வடை தயார். 
   ============================================================

சொல்லாதே யாரும் கேட்டால் ... 1/7  

பெங்களூரு.

ஒரு பொன்மாலைப் பொழுது.

பார்க்கில் அதிகக் கூட்டம் இல்லை.

முகநூல், ட்விட்டர், ப்ளாக் என்று பல்வேறு சிந்தனைகள் பின்தொடர, பார்க்கில் சுற்றி வந்துகொண்டிருந்தேன்.

பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருவர், என்னைப் பார்த்து முறுவலித்த மாதிரித் தோன்றியது.
  
(இது அவர் படம் இல்லை)

(தொடரும்) 
     

22 கருத்துகள்:

  1. ஹூம், இதை நாங்க மெது பக்கோடானு சொல்லுவோம். :) கசகசா அவ்வளவு தேவையா? ஒரு டேபிள் ஸ்பூன்? தூக்கம் ரொம்ப வருமே! மற்றபடி செய்முறை எல்லாம் இப்படித் தான் இருக்குமோ, பிழைச்சீங்க! :))))

    பதிலளிநீக்கு
  2. படம் கூடத் தப்புத் தான். மெது பக்கோடா உருண்டையாக இருக்கும். :) அப்பாடி, தப்புக் கண்டு பிடிச்சால் தான் அன்னைய பொழுதுக்கு நிம்மதியா இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  3. கடலை மாவிலும் மெது பக்கோடா/வடை செய்யலாம். மாவு பிசைகையில் கொஞ்சம் எண்ணெயைக் காய்ச்சிச் சூடாக ஊற்றிக்கணும். அப்போ அந்தப்பொட்டுக்கடலை மாவின் கரகர வரும். :)

    பதிலளிநீக்கு
  4. கீதா அம்மா இப்படி வெளுத்து வாங்குகிறாரே..!

    பதிலளிநீக்கு
  5. ஆஹா நல்லா இருக்கும் போல இருக்கே! சண்டே செய்து பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  6. செய்து பார்த்துட்டுச் சூடாக இருக்கும்போதே சாப்பிட்டுடுங்க வெங்கட்! எனக்கு என்னமோ இது அவ்வளவா ருசிக்காது! போனால் போகிறதுனு சூடா ஒண்ணே ஒண்ணு சாப்பிடலாம். சென்னையில் அறுபதுகளில் பட்ஸ்(சங்கிலித் தொடர் ஓட்டல்கள்) ஓட்டலில் மாலை நாலு மணிக்குச் சூடான பட்டணம் பக்கவடா னு கொடுப்பாங்க. தி.நகர் உஸ்மான் ரோடு பட்ஸிலும், ரங்கநாதன் தெரு பட்ஸிலும் கூட்டம் அள்ளும். மதுரைப்பக்கம் இதை மெது பக்கோடா னு சொல்வோம். மாடர்ன் ரெஸ்டாரன்ட் (சிம்மக்கல்)டில் இது பிரபலம்! :) மதுரையிலே இப்போ மாடர்ன் ரெஸ்டாரன்டே இல்லை. அந்தப் பெயரில் இருக்கிறது பழைய ரெஸ்டாரன்டும் இல்லை. :)

    பதிலளிநீக்கு
  7. கடலைபருப்பு வடைத் தெரியும், இது என்ன பொட்டுக்கடலை வடை????????
    நல்லா இருக்குமா? சரி செய்து பார்த்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாழைப்பூ வடைக்கு, இதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்துச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதைக் கேட்டதுண்டு. கரகரஎன்று சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ஒரு மாறுதலுக்காகத் தானே செய்கிறோம்.
    பொட்டுக்கடலை வடை. செய்து பார்க்க வேண்டும். கசகசா ஒரு தனி ருசி. வயிற்றுப் புண் ஆற கூட கசகசா மிகவும் நல்லது. சாப்பிட்டு விட்டு ஒரு லேசான தூக்கம் போடலாம். நிறைய சாப்பிட்டால்தான். புதியருசி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. பாத்தா மசால் வடை மாதிரிதான் இருக்கு!
    செய்யும்போது சொல்லுங்க;வந்து சாப்பிட்டுப் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. அட மெது பக்கவடா...ஆறினா சுவை குறையும். எண்ணையும் குடிக்கும்...பிசையும் போது சூடா அந்த வாணலில காயற எண்ணை கொஞ்சம் எடுத்து விட்டா கொஞ்சம் க்ரிஸ்பா வரும்...மாவு கலந்துவிட்டு உடனே செய்துடணும் இல்லைனா இன்னும் எண்ணை ரொம்ப அள்ளும்...என்றாலும் கடலைப் பருப்பு இல்லைனா பட்டாணிப்பருப்பு அரைச்சு செய்யும் வடை இன்னும் க்ரிஸ்பா டேஸ்டியா இருக்குமோ...!

    கதை தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  11. வடையில் கச கசா போட்டது இல்லை ...அது டேஸ்ட் கூட்டுமா?

    பதிலளிநீக்கு
  12. வடையில் கச கசா போட்டது இல்லை ...அது டேஸ்ட் கூட்டுமா?

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. அட மெது பக்கவடா...ஆறினா சுவை குறையும். எண்ணையும் குடிக்கும்...பிசையும் போது சூடா அந்த வாணலில காயற எண்ணை கொஞ்சம் எடுத்து விட்டா கொஞ்சம் க்ரிஸ்பா வரும்...மாவு கலந்துவிட்டு உடனே செய்துடணும் இல்லைனா இன்னும் எண்ணை ரொம்ப அள்ளும்...என்றாலும் கடலைப் பருப்பு இல்லைனா பட்டாணிப்பருப்பு அரைச்சு செய்யும் வடை இன்னும் க்ரிஸ்பா டேஸ்டியா இருக்குமோ...!

    கீதா..

    கதை தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  15. சென்னைப் பித்தன் சார் சொன்னதை வழிமொழிகிறேன். :)

    பதிலளிநீக்கு
  16. நாங்களும் கசகசா வடையில்/பக்கவடாத்தில் போட மாட்டோம். தில்லையகத்து/கீதா! மசால் வடைக்கு ஒவ்வொருத்தர் சோம்பு அரைச்சு விட்டுப் பார்த்திருக்கேன். கசகசா சேர்த்துப் பார்த்தது இல்லை. :)

    பதிலளிநீக்கு
  17. பொட்டுக்கடலையை மிக்சியில் அரைத்தால், மாவாகிவிடுமே. அப்புறம் வடை எப்படி கிரிஸ்பியாக இருக்கும்? கசகசா பாயாசத்துக்குப் போடுவதைக் கேள்விப்பட்டிருக்கேன். ('நல்லா பாயாசம் சாப்பிட்டால், தூக்கம்தான்). வடைக்கு கச கசாவா? ஒரே கசா முசாவான்னா இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. நெல்லைத் தமிழன், ரொம்பவெல்லாம் மாவாகாது. கொஞ்சம் கரகரனு இருக்கிறச்சே எடுத்துடணும். அப்புறமா அன்னிக்கே சொல்லணும்னு நினைச்சுச் சொல்லலாமா வேண்டாமானு ஒரு யோசனை. இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போடாதீங்க. கரிச்சுத் தொலைக்கும். :) உப்புப் பொடின்னா ஒரு டீஸ்பூனே போதுமானது. நான் இன்னும் குறைப்பேன். :) கல் உப்புன்னா பொட்டுக்கடலையை மிக்சியில் அரைக்கிறச்சேயே சேர்த்துப் போட்டுடலாம். அதுவும் ஒரு டீஸ்பூனுக்குள் இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  19. கசகசாவை வடைக்கோ அல்லது பக்கவடாத்துக்கோ போட்டுப் பார்க்கலை. அதுக்குப் பதிலா சோம்பு போடலாம். மசாலா வாசனை வரும். :) அதைத் தான் தப்பா கசகசானு சொல்லிக் கசமுசாப் பண்ணிட்டாரோ? :)))))

    பதிலளிநீக்கு
  20. ஆஹா! தூங்கப்போற நேரத்துல இங்க வந்துட்டேன், பசிக்குதே..

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே.

    பொட்டுக்கடலையை மட்டும் வைத்து வடையா.? அதுவும் நல்லெண்ணையிலா? நான் இதுவரை பொரிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தியதில்லை.! வித்தியாசமாக இருக்கிறது. ஆகவே கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

    இதிலிருந்து தொடரும் தொடரையும் தொடர்ந்து விட்டேன். நன்றாக போகிறது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!