Saturday, September 12, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம். + கேட்டது கேட்டபடி 6/7
1)  ஆறு வயதில் கிராமத்துக்கே ரோல் மாடலாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்!  சானியாவின் பெருமையில் அர்த்தம் உண்டு.
2)  சுய அனுபவம் சமுதாயத்துக்குப் பாடுபடும் எண்ணத்தை விதைக்கிறது.  மும்தாஜ் போல!  அதையும் செயல்படுத்த வேண்டுமே..  நாலுபேருக்கு நல்லது செய்யும் மனுஷி.

 
3)  A 4,818 வயது மனிதர்,  120வயது மனிதர்...  இதெல்லாம் எங்கு?  வாக்காளர் பட்டியலில்!  18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களாகவும் பலரைச் சொல்லி இருக்கிறார்களாம்.  இதைச் சரிப்படுத்த முனைந்திருக்கும் 66 வயது P G பட்.

 
4)  நடனமாடிய குழந்தைகளின் பாதங்களை அவ்வப்போது குத்தியது, இது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தியதோ இல்லையோ மேடையில் விழா தலைவராக அமர்ந்திருந்த ஒருவருக்கு வலியை ஏற்படுத்தியது.
அவர் யாரையாவது கூப்பிட்டு நடனத்தை நிறுத்திவிட்டு கற்களை அப்புறப்படுத்தச்சொல்லி இருக்கலாம், யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்து இருப்பார்கள் ஆனால் அவரே விறுவிறுவென எழுந்துவந்து குழந்தைகளை ஒரு ஒரமாக இருக்கச்சொல்லிவிட்டு துருத்திய கற்களை எந்த கவுரவமும் பார்க்காமல் குனிந்து பொறுக்கி ஒரு
ரமாக போட்டுவிட்டு தரையை செம்மைப்படுத்திவிட்டு பிறகு குழந்தைகளை ஆடவைத்தார்.   பி.சங்கர் மகாதேவன்.5)  எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மனைவி திருமதி சீதாலட்சுமி.

6) விதைக் kalaam குழுவினருக்கு நம் பாராட்டுதல்களைத் தெரிவிப்போம்.

7)  நல்ல மனம் வாழ்க.. உலகம் போற்ற வாழ்க.. எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.


9)  இலவசமாகத் தருகிறார் என்றதும், நான் கூட மக்கள் இதை உபயோகப் படுத்திக் கொள்வார்களே தவிர, இதனால் அர்த்தமில்லை என்றுதான் நினைத்தேன்.  நல்லெண்ணத்தைப் பரப்பச் சொல்கிறார்,  தேவையில் இருப்போருக்கு உதவச் சொல்லி, அதைத்தான் விலையாகக் கேட்கிறார் என்றதும் மதிப்பு வந்தது.  மிராஜுதின் சையத்.


 
10)  சென்னபுரி அன்னதான சமாஜத்தைப் பாராட்டுவதா?  அறியத்தந்த நடராசன் அவர்களை பாராட்டுவதா?

11)  இப்படியும் ஒரு அடேடே பள்ளி!  மதுரை அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி.
12)  விளையும் பயிர்.  அனிருத் கதிர்வேல்
 

13)  நெகிழ வைக்கிறார் திவ்யா.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.======================================================================

கேட்டது கேட்டபடி 6/7 

அந்த மறுநாளும் இதோ வந்துவிட்டது. 
              
அது சனிக்கிழமை. 
            
மா ஜா எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்திற்கு அரை நாள் வேலை, அரை நாள் லீவு. மறுநாள் ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் எல்லோருமே ரொம்ப உற்சாகமாகக் காணப்பட்டனர். 
           
மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. 
            
'முகுந்தன் எப்போது வருவான்?  அவனிடம் நாமே பேச்சை ஆரம்பிப்பதா அல்லது அவன் பார்த்து மன்னிப்புக் கேட்கட்டும் என்று இருந்துவிடுவதா? ' ஜானகிக்கு ஒரே குழப்பம். 
              
மாலை நாலரை மணிக்கு டாக்சி வந்தது. அதிலிருந்து கோட் சூட் அணிந்து, டை, கூலிங் கிளாஸ் சகிதம் இறங்கிய முகுந்தனை மாடி பால்கனியிலிருந்து நோட்டமிட்ட ஜானகியின் மனம், 'அட ஆள் எப்படி மாறிப் போயிட்டான்! முந்தி இருந்த முகுந்தன் எங்கே? இப்போ இருக்கின்ற இந்த முகுந்தன் ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி ஆயிட்டானே! ' என்று எண்ணியது. 
               
மாடி அறையிலிருந்து கீழே முகுந்தன் பேசியது எல்லாம் நன்றாகக் கேட்டது. அந்த வெண்கலக் குரல் மட்டும் மாறவே இல்லை. 
              
"நாராயணன் ! வெந்நீர் ரெடியா இருக்கா? முதல் விஷயமா குளிக்கணும். பார்க் ஹோட்டல் பாத் டப் குளியல் பிரயோசனமே இல்லை. சின்னம்மா எங்கே? " 

"சின்னம்மாவை ஏன் தேடறீங்க?" 
     
(தொடரும்)

22 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டுதலுக்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

பி.சங்கர் மகாதேவன் அவர்களின் செயல் சிறப்பு...

விதைக்kalam ஆழமாக விதைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது... விரைவில் குழுவினரை சந்திக்க உள்ளேன்...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள். தொடரட்டும் நற்பணி.

mageswari balachandran said...

அனைத்தும் அருமை, அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்,
விதைக்கலாம்,,,,,,,,,, அவர்களின் செயல் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்,
தங்கள் பகிர்வுக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

நல்ல மனம் வாழ நாடு போற்ற வேண்டும், போற்றுவோம், பாராட்டுவோம்.

G.M Balasubramaniam said...

கேட்டது கேட்டபடி தொடர்கிறேன்

பரிவை சே.குமார் said...

சிறந்த தகவல் பகிர்வுகள்...
கேட்டது கேட்டபடி தொடர்கிறேன் அண்ணா...

இளமதி said...

அத்தனையும் அதி சிறப்புத் தகவல்கள்!

பகிர்தலுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

வலிப்போக்கன் - said...

நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!!

Mythily kasthuri rengan said...

வாவ்!!!!! இந்த முறை நம் விதைக்Kalam பாசிடிவ் பக்கத்தில்!!! நண்பர்கள் சார்பாக மிகுந்த நன்றிகள் சகாஸ்!!

ஒரே சிட்டிங்கல கேட்டது கேட்டபடி fullலா படிச்சிருக்கேன். உங்களில் யார் எழுதும் கதை என தெரியவில்லை. ஆனால் நடை எனக்கு மிகவும் பழக்கபட்டதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கிறது. நாளைக்கே படித்திருக்கலாம்:(( இப்போ நாளை வரை வெய்ட் பண்ணனுமே!!!

சென்னை பித்தன் said...

வழிகாட்டி மனிதர்கள்
நன்று

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்து செய்திகளும் வாசித்துவிட்டோம்...அனைத்துமே அருமையான பாசிட்டிவி செய்திகள்....விதைக்"கலாமும்" அதில் இருப்பது ...அட! அங்கேயே வாசித்தோம்...அருமையான ஒரு முயற்சி நம் நண்பர்களிடமிருந்து ஆரம்பித்துள்ளது.

நக்கீரனில் கூட ஒரு கட்டுரை வரப் போவதாக விளம்பரம் ...ஆகலாம்...கலாம் என்று அவரது அறிவியலைச் சொல்லும் தொடர் போல...

Thulasidharan V Thillaiakathu said...

கதையைத் தொடர்கின்றோம்....நாளை முடியப் போகிறது....மனதில் முடிவு இப்படி இருக்குமோ என்று தோன்றுகின்றது...பார்க்கலாம்....

கோமதி அரசு said...

பெற்றோர்களுக்கு பாடம் கற்பிக்கும் குழந்தைகள் மனதை கவர்ந்தனர்.
வாழ்த்துக்கள்.

கதை நன்றாக போகிறது.

வல்லிசிம்ஹன் said...

முதலில் நன்றி. ஏகப்பட்ட நல்ல செய்திகள். எண்பது வயது மங்கை மனதைக் கவருகிறர்,.பெட் ரோல் கொடுக்கும் போலீஸ்,
சங்கர் மஹாதேவன் போன்றொர் இருக்கும் வரை தர்மங்கள் பிழைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

That does not mean I did not think highly about others. It is judt overwhelming.Thank you.

ராமலக்ஷ்மி said...

தொகுப்புக்கு நன்றி.

ஞாயிறு படத்துடன் நாளை தொடரின் முடிவை எதிர் நோக்கி...

Bagawanjee KA said...

பரவாயில்லையே ,நம்ம அவனியாபுரம் பள்ளியிலா :)

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

திவ்யா போன்ற கடவுளராக எல்லோரும் இருந்தால் முதியோர் இல்லங்களை மூடிவிடலாம்.

விதைக்Kalam said...

விதைக்கலாமை வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களுடன்கூடிய நன்றிகள்

Kasi Pandi said...

வாழ்த்துங்கள் விருச்சமாகே வளர ! ! ! வளர்வோம்

Kasi Pandi said...

வாழ்த்துங்கள் விருச்சமாகே வளர ! ! ! வளர்வோம்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!