செவ்வாய், 8 செப்டம்பர், 2015

கேட்டது கேட்டபடி 2/7

               
"இங்கேதான் இருக்கியா? நான் பேசினதை எல்லாம் ஒட்டுக் கேட்டியா?"
   

"அப்படித்தான் வெச்சுக்கோயேன்! "
           
"சரி சரி - முகுந்தன் வரானாம்." 
              
"வரட்டுமே!"
                
"ஒருவாரம் இங்கே நம்ம வீட்டிலே தங்கிப்பானாம்." 
               
"அண்ணா உன்னுடைய பிசினெஸ் ட்ரிப் எவ்வளவு நாள்?" 
                
"இன்னிக்கு சாயந்திரம் கிளம்பிப் போயிட்டு மூன்றே நாளில் திரும்பி வந்துடுவேன்." 
                    
"முகுந்தன் எப்போ வரானாம்?" 
               
" என் நண்பன் முகுந்தன் என்னை விட இரண்டு வயது பெரியவன். அவனை நீ மரியாதை இல்லாமல் வரான் போறான் என்று பேசக்கூடாது." 
               
"சரி - அந்தப் பெரியவர் எப்போ வருவாராம்?" 
             
"இன்னிக்கு நைட்டே வரானாம்." 
              
"அண்ணா நானும் உன் கூட பிசினெஸ் ட்ரிப் வந்துவிடுகிறேன். அந்த முகுந்தர் கூட இங்கே நான் தனியாக இருக்க ஒரு மாதிரியா இருக்கு." 
               
"அது முடியாதுடா செல்லம்! நான் ஏற்கெனவே ரிசர்வ் செய்துள்ளேன். மேலும் வீட்டைப் பார்த்துக்கொள்ள நீ மட்டுமாவது இங்கு இருக்கவேண்டும். அதான் வேலைக்காரர்கள், வாட்ச்மேன் எல்லோரும் இருக்காங்களே! உனக்கு என்ன பயம்?" 
              
"அண்ணா! முகுந்தன் கூட நான் கோபித்துக்கொண்டு அவரோடு பேசுவதை நிறுத்தி ஆறு வருஷம் ஆயிடிச்சு. இப்போ, அதுவும் நீ ஊரில் இல்லாதபோது, இந்த சிக்கலில் நான் மாட்டிக்கணுமா?  "  
   
(தொடரும்) 

                 

12 கருத்துகள்:

  1. தொடர்கதையா? முதல் பகுதியைப் படிக்கவில்லையே, இங்கேயே இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பகுதி நேற்றைய (திங்க) பதிவின் இறுதியில் உள்ளது.

      நீக்கு
    2. முதல் பகுதி நேற்றைய (திங்க) பதிவின் இறுதியில் உள்ளது.

      நீக்கு
  2. அப்படி என்ன மனஸ்தாபமோ? அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. ஆ....ஆறு வருசமாச்சா....???? எப்படி....எதோ...இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  4. ஆ....ஆறு வருசமாச்சா....???? எப்படி....எதோ...இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  5. அருமையாக தொடர்கின்றது....சம்திங்க் சம்திங்க் நு சொல்லுது கதை...தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  6. ஆறுவருட சண்டை நேரே பேசினால் சரியாகிவிடும் என்று இந்த ஏற்பாடா?

    பதிலளிநீக்கு
  7. வரட்டும் முகுந்தன் சாரி முகுந்தர்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!