நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
14.4.10
சின்னதாய் ஐந்து கேள்விகள்
எல்லோரும் இன்று போல் என்றும் வாழ்க என்று அன்போடு வாழ்த்துகிறோம்.
ஒன்று: இந்த தமிழ் வருடத்தின் பெயர் என்ன?
இரண்டு : தமிழ் வருடங்கள் மொத்தம் எவ்வளவு?
மூன்று: தமிழர்களோடு சேர்ந்து இன்று புத்தாண்டு கொண்டாடும் மற்ற மொழியினர், நாட்டினர் யார் யார்?
நான்கு: இன்று யாருடைய பிறந்த நாள்?
ஐந்து: இன்று யாருடைய நினைவு நாள்?
ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில் கூற உங்களால் முடியுமா?
சின்னஞ்சிறு கதை.
13.4.10
ஜே கே 06 நிகழ்வதைப் புரிந்து கொள்ளுதல்.
12.4.10
வயலில் அவல் அகோனிபோரா !
11.4.10
அக்கா வந்தாள்.
"அம்மா, ஷோபா அக்கா மூணு நாள் லீவில வராளாம், ஹையா, ஹையா " என்று குதியாட்டம் போட்டுக் கொண்டு வந்தாள் அஞ்சு -- ஷோபாவின் ஆறு வயசு அருமைத் தங்கை.
"வரட்டும், வரட்டும். உனக்கு என்ன வேணும்னு போன்ல சொல்லு வாங்கிண்டு வருவா" என்று சொல்லிவிட்டு தான் என்ன கேட்கலாம் என்று யோசித்து கடைசியில் நல்ல காட்டன் புடவை என்று முடிவு செய்தாள் ஷோபாவின் அம்மா.
ஷோபா வந்தே விட்டாள். அஞ்சு கேட்ட பார்பி பொம்மை, அம்மாவுக்கு நல்ல கலரில் காட்டன் புடவை வந்து விட்டது. "கலர் பிடிச்சுருக்கா" என்று பத்து தடவை கேட்டாள் அம்மாவை. எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. அதற்குப் பின்புதான் கொஞ்சம் அதிருப்தி தலை காட்டியது.
" இந்த நேரத்தில் பிட்ஸா சாப்பிட்டா ஜோரா இருக்கும். அப்படியே பழகிடுச்சு இல்லையா " என்றாள் மாலை ஏழு மணிக்கு.
" கொஞ்ச நேரம் ஏ ஸி போட்டு ஆஃப் பண்ணிட்டு தூங்கினா நல்ல்ல்லா தூங்கலாம். அப்பிடியே வழக்கமாயிடுச்சு இல்லையா" என்று மூன்று நாளும் கமெண்ட்.
" போ அக்கா, சும்மா குத்தி குத்திக் காட்டாதே. இங்கே எல்லாம் நல்லாதான் இருக்கு" என்று அஞ்சு சிணுங்கினாள்.
" அப்பிடி இல்லைடி, நீ ஒரு தடவை மெட்ராஸ் வந்து ரெண்டு நாள் இருந்து பாரு, எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா! நான் பெர்மிஷன் வாங்கிட்டு சொல்றேன் . . ." என்ற் ஷோபாவை இடை மறித்து அம்மா சொன்னாள்:
" அடி ஷோபா, நீ பணக்கார வீட்டுல இருக்கிற பெரிய மனுஷி. அதுக்காக சும்மா சொல்லிச் சொல்லி இந்தக் குழந்தையை ஏன் ஏங்க வக்கறே! அப்பிடியெல்லாம் பர்மிஷன் குடுத்துடுவாங்களா மாமாவும் மாமியும்?. இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி!"
மூன்று நாள் லீவு விட்டு பள்ளி திறந்ததும் ஷோபா சென்னையில் வசதியான வீட்டுக் குழந்தைக்கு ஆயா உத்தியோகம் பார்க்க மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு பயணமானாள்.




