செவ்வாய், 13 ஏப்ரல், 2010

ஜே கே 06 நிகழ்வதைப் புரிந்து கொள்ளுதல்.


{அற்புதக் காட்சிகள் குறித்து ஜேகே}

இது ஒன்றும் சிக்கலானது அல்ல. கொஞ்சம் சிரமமானதாக இருக்கலாம்.  நாம் எப்போதும் உள்ளதான ஒன்றிலிருந்து தொடங்குவதில்லை.  நாம் உண்மையில் நினைப்பது, செய்வது, ஆசைப் படுவது இவற்றில் எதிலுமிருந்தும் அல்லாது, நாம் சில முடிவுகள், அனுமானங்கள், உண்மைக்குத் தொடர்பில்லாத அபிப்பிராயங்கள் இவற்றிலிருந்து ஆரம்பிப்பதால் தடம் புரண்டு சென்று விடுகிறோம்.  அனுமானங்கள், முடிவுகள் என்றில்லாது, உண்மைகளிலிருந்து துவங்க வேண்டுமானால், ஆழ்ந்த கவனம் வேண்டும்.  உண்மையான ஒன்றிலிருந்து வெளிப்படாத எந்த ஒரு எண்ணமும் நம்மை திசை திருப்பி விடும்.  அதனால் ஒருவர் தன்னைச் சுற்றிலும் மற்றும் தனக்குள்ளும் என்ன நடக்கிறது என்று சரியாக உணர்ந்து கொள்வது முக்கியமானதாகிறது. 

ஒரு கிறிஸ்தவருக்கு ஏற்படும் தரிசனம் அல்லது அற்புதக் காட்சி ஒரு குறிப்பிட்ட மாதிரியில் செல்கிறது.  அதுவே ஒரு இந்துவுக்கு, பௌத்தருக்கு அல்லது முஸ்லிமுக்கு வேறு மாதிரியில் இருக்கிறது.  ஏசுவையோ அல்லது கிருஷ்ணரையோ நீங்கள் எதைச் சார்ந்தவர் என்ற அடிப்படையில் காண்கிறீர்கள்.  உங்கள் பாரம்பரிய கலாசாரம், கல்வி, பண்பாடு இவற்றால் இது தீர்மானிக்கப் படுகிறது.  இதில் உண்மை எது?  கண்ட அற்புதக் காட்சியா, அல்லது அதை ஒரு குறிப்பிட்ட மாதிரியில் சிருஷ்டி செய்த மனமா?  மனத்தின் பின்னணியில் இருக்கும் பாரம்பரிய பழக்க வழக்கம் எந்த மாதிரி காட்சி என்பதை முடிவு செய்கிறது. மனதின் இந்த ‘பதப் படுதல்’ தான் உண்மையே அல்லாது ‘அற்புதக் காட்சி’ உண்மை அல்ல. இந்த உண்மை உணர்தலுக்கு மிக எளிது. ஆனால் நமது மனம் கொண்டுள்ள ‘பிடிக்கும்’ ‘பிடிக்காது’ காரணமாக உணர்தல் மிகக் கடினமாக்கப் படுகிறது.  நாம் கண்டனம் செய்ய விரும்பும் உண்மைகள், நாம் உண்மையைப் பற்றி வைத்துக் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள், சரி/தப்பு என்ற தீர்மானங்கள் இவை உண்மையைக் காண்பதற்கு தடைகளாக இருக்கின்றன.  இந்த மாதிரியான ‘மதிப்பீடு’ வழி முறைகளைப் பற்றி நன்கு விழிப்புடன் இருப்பது ஒன்றே உண்மையை உள்ளவாறு அறிதலுக்கு ஒரே வழி.  

5 கருத்துகள்:

  1. நன்கு விழிப்புடன் இருப்பது ஒன்றே உண்மையை உள்ளவாறு அறிதலுக்கு ஒரே வழி.



    உண்மை. அதை பகுத்தறிவு என்று சொன்னலாம். ஆனால் அந்த பகுத்தறிவே சில நேரம் இப்படியாகி விடுகிறது




    நாம் கண்டனம் செய்ய விரும்பும் உண்மைகள் பிடிக்கும்’ ‘பிடிக்காது’ காரணமாக உணர்தல் மிகக் கடினமாக்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  2. மன அடித்தளத்து நம்பிக்கைகளின் அதிர்வுகூட சில தீர்மானங்களை எடுக்க வைக்கிறதுதானே !

    பதிலளிநீக்கு
  3. நான் வந்திட்டேன்
    உங்கள் ஆக்கங்களை
    உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
    தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
    இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

    நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நமது மனம் கொண்டுள்ள ‘பிடிக்கும்’ ‘பிடிக்காது’ காரணமாக உணர்தல் மிகக் கடினமாக்கப் படுகிறது.

    ..... including all serious thinking and understandings - religious or not. :-)

    பதிலளிநீக்கு
  5. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!