வெள்ளி, 10 மே, 2019

வெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறும் இசைபாடு

1981இல் வெளிவந்த திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள். 



சுரேஷ்- சாந்திகிருஷ்ணாவுக்கு முதல் படம்.  இதை இயக்கிய பாரதி வாசுவுக்கும் முதல்படம்.  பின்னர் இருவரும் சந்தான பாரதி என்றும், பி வாசு என்றும் தனித்தனியாக படங்கள் இயக்கி புகழ் பெற்றனர்.



அலைகள் ஓய்வதில்லை படம் வெளிவந்த அதே சமயம்தான் இந்தப் படமும் வந்தது.  அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு நேர்மாறான காதலைச் சொன்ன படம்.  இரண்டு படங்களின் வெற்றிக்குமே முக்கிய காரணங்களில் ஒன்று இளையராஜாவின் இசை.



பன்னீர் புஷ்பங்கள் படத்திலிருந்து முதலில் பூந்தளிராட பாடலைப் பகிர்வு செய்ய நினைத்து விட்டு அப்புறம் இந்தப் பாடலைப் பகிர்கிறேன். மலேஷியா வாசுதேவன் குரலில் ஒரு இனிமையான பாடல்.



பள்ளிக் காதலில் விழும் படம்தான் இரண்டுமே.  இதில் காதலன் ஆசிரியரை சந்தேகப்பட்டு, கோபம், பொறாமை கொள்ளுவான்.  இந்தக் காட்சியிலும் அது தெரியும்.  அறியா வயதின் அயல் பாலின ஈர்ப்பை அழகாக கையாண்ட படம்.  அந்த மேன்மையை இளையராஜா தனது இசையில் கொண்டு வந்திருந்தார்.


சுரேஷ் முதலில் இயக்குனர் ஸ்ரீதரைச் சந்தித்து வாய்ப்பு கேட்டாராம்.  அது வெற்றி அடையாத நிலையில் அவருக்கு இப்படத்திலும், அலைகள் ஓய்வதில்லை படத்திலும் நடிக்கும் வாய்ப்பு ஒரே நேரத்தில் கிடைக்க, சுரேஷ் இந்தப் படத்தைத் தெரிவு செய்தாராம்.

ஆரம்பத்தில் ஒலிக்கும் அந்தக் குழல் ஒலியே பாடலின் மூடைச் சொல்லிவிடும்.

மலேஷியா வாசுதேவன் சற்றே பொய்க்குரலில் பாடி இருக்கும் பாடல்.  என்றாலும் ரசிக்க முடியும்.  அப்படியே இளவயதில் மனசஞ்சாரம் செய்ய முடியும்!

பாடல்கள் அனைத்தையும் எழுதி இருப்வர் கங்கை அமரன்.

கோடை கால காற்றே குளிர்த் தென்றல் பாடும் பாட்டே 
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு 
அதைக் கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும் 
இவைகள் இளம் மாலைப்பூக்களே புதுசோலைப் பூக்களே 

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ 
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ  
தன் உணர்வுகளை மெல்லிசையாக 
தன் உறவுகளை வந்து கூடாதோ 
இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும் 
இவைகள் இளம் மாலைப்பூக்களே புதுசோலைப் பூக்களே 

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே 
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் எங்கே என்றதே 
வெண் மலையருவி பன்னீர்த் தூவி 
பொன்மலையழகின் சுகம் ஏற்காதோ 
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளம் மாலைப்பூக்களே புதுசோலைப் பூக்களே 




87 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

    கார்த்திக் நடித்த் படத்தின் பாடலா கேட்டால்தான் தெரியும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! பார்த்தா கார்த்திக் போல இருக்கிறார் இது சுரேஷா? என் கண்ணுல ஏதோ பிரச்சனை போல ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா.

      நீக்கு
    3. கார்த்திக்கும் சுரேஷும் ஒரே சமயத்தில் அறிமுகம் ஆனார்கள். இவர் வேண்டாம் என்று சொன்னதால்தான் அலைகள் ஓய்வதிலையில் கார்த்திக் அறிமுகமாகி நடித்தாராம்.

      நீக்கு
  2. பன்னீர் புஷ்பங்கள் பார்த்தது இல்லை. பி.வாசு பின்னால் "சின்னத்தம்பி" படத்தின் மூலம் பெரும்புகழும், பணமும் ஈட்டினார் எனக் கேள்விப் பட்டிருக்கேன். சந்தான பாரதி பின்னர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடிச்சிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...

      குட் மார்னிங்.

      சந்தான பாரதி படங்கள் இயக்கி இருக்கிறார். கமலின் மைக்கேல் படத்திலும் வேறு சில படங்களிலும் நடித்திருக்கிறார். வில்லனாகக் கூட!

      நீக்கு
    2. கீசா மேடம்.... உங்கள் தலைவர் உலக்கை நாயகரின், குணா, மகாநதி, அப்புறம் நல்ல நகைச்சுவைப் படம் "சின்ன மாப்ளே" போன்றவை சந்தானபாரதி இயக்கிய படங்கள். இவர் கமலஹாசனின் மிக மிக நெருங்கிய நண்பர். (தேவர் சமூகம், கமலஹாசன் வீட்டில் நெருங்கிப் பழகியவர், சகோதரன் போல)

      நீக்கு
    3. திறமைசாலிகளை வளைத்துக்கொள்வதிலும் கூட்டு சேர்ந்து நட்பு பாராட்டுவதிலும் உநா ஜித்தர்!

      நீக்கு
  3. வந்திருக்கும் தி/கீதா,ஸ்ரீராம் இருவருக்கும், மகள்/மகன் வீட்டில் ஓய்வில் இருக்கும் துரைக்கும் மற்றும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. பாடல் மிக இனிமை ரேடியோவில், தொலைக்காட்சியில் கேட்டு ரசித்த் பாடல்.

    பள்ளியில் சுற்றுலா போன போது அப்போது பிரபலமான சினிமா பாடல்களை பாடி போய் இருக்கிறோம். நீங்கள் சொன்னது போல்
    இளவயதில் மனசஞ்சாரம் செய்ய முடிந்தது.

    ஆசிரியர், மாணவிகள் பாடி சென்று இருக்கிறோம், ஆட்டம், பாடம் கொண்டாட்டம் எல்லாம் உண்டு. ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து சேலை முந்தானையின் பயன்களை நடத்தி காட்டியது பசுமையான நினைவுகள். குட்டை முந்தானையால் பயன் இல்லை என்பதை சொல்வதே நிறைவு பகுதி. சியமாளா டீச்சர், (கணிதம்) "மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன" என்ற பாடலுக்கு அழகாய் ஆடினார்கள்.

    சினிமா பார்த்த நினைவு இல்லை, தொலைக்காட்சியில் காட்டினால் பார்க்க வேண்டும். ஆனால் பள்ளிப் பருவ காதல் காட்டியதால் ஏதோ சல சலப்பு ஏற்பட்டது நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... பாடலை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா. புத்தாண்டுக்கென்று சில பாடல்கள், தீபாவளிக்கென்று சில பாடல்கள் இருப்பது போல சுற்றுலாவுக்கென்று சில பாடல்கள் உண்டு. நாம் பள்ளியில் / கல்லூரியில் பார்த்த பயமுறுத்தும் ஆசிரியர்களின் வேறு திறமைகள், அவர்களும் ரசனையான மனிதர்களே (!!) என்பதை இது மாதிரி சுற்றுலாக்கள் காட்டிக்கொடுக்கும்.

      எங்களுக்கு கெமிஸ்ட்ரி எடுத்த ஆசிரியர் ஒருவர்... ராஜமாணிக்கம் என்று பெயர். அவர் சிவாஜி ரசிகர் எண்டபத்து அவரைப் பார்க்கும்போதே விளங்கிவிடும். வசந்தமாளிகை சிவாஜி போல இருப்பார். சற்றே நிறம் கம்மி. எனக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் வகுப்புகள் எடுத்தவர். எனக்கு மூன்றாம் வகுப்பு எடுத்த டீச்சரைக் காதலித்து மணந்தார். அவர் அருமையாகப் பாடுவார். இசை நிகழ்ச்சிகள் நடத்துவார்.

      நீக்கு
    2. //ஆனால் பள்ளிப் பருவ காதல் காட்டியதால் ஏதோ சல சலப்பு ஏற்பட்டது நினைவு.//

      பள்ளிப்பருவ காதல் காட்டியது ஒரே சமயத்தில் வெளிவந்த இந்த இரு படங்களும்தான். அதாவது அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள். அதற்குமுன் ஓ மஞ்சு போன்ற சில படங்கள் வந்திருந்தாலும் அவை பெறாத வெற்றியை இந்தப் படங்கள் பெற்றன. இரண்டில் தரமான படம் என்றால் என் பார்வையில் அது பொன்னேர் புஷ்பங்கள்தான். ஆனால் கமர்ஷியலாக அலைகள் ஓய்வதில்லைக்கு வெற்றி அதிகம்!

      நீக்கு
    3. பாரதிராஜாவுக்கு பல தோல்விப் படங்களுக்குப் பிறகு வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயம். இளையராஜாவின் அருமையான இசையும் ராதாவின் கவர்ச்சியும்தான் படத்தின் வெற்றிக்குப் காரணம். பன்னீர் புஷ்பங்கள் ரொம்ப டீசன்ட் கதை.

      நீக்கு
    4. பன்னீர் புஷ்பங்கள் பார்த்ததில்லை.

      நான் இது வரை ஒரே ஒரு முறைதான் அதுவும் பி ஏ படிக்கும் போது கல்லூரியில் மூன்றாவது வருடம் போது சுற்றுலா அதுவும் ஒரே நாள் சுற்றுலா சென்று இருக்கிறேன். வீட்டில் எந்தச் சுற்றுலாவுக்கும் பைசா தரமாட்டார்கள். இந்தச் சுற்றுலா கூட எங்கள் பேராசிரியை உஷா தாமஸ் என்னைக் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று (நான் மட்டுமே வகுப்பில் காசு கட்டவில்லை என்பதால்) அவர் ரூபாய் செலுத்திவிட, மனம் எனக்கு நெகிழ்ச்சி ப்ளஸ் சங்கடமும் கூடவே. பிறர் செலவில் அதுவும் ஆசிரியரின் செலவில் சுற்றுலா என்பதை மனம் ஏற்கவில்லை. கடன் போலத் தோன்றவே வீட்டில் மாமா, பாட்டி அனைவரிடமும் சொல்லிப் போராடி ஆசிரியை கட்டிவிட்டார் எனவும் அவர்கள் அப்புறம் என்ன அவங்கதான் கட்டிட்டாங்களே என எனக்கோ கோபம் பொத்துக் கொண்டு வர, போராடிப் போராடி நான் எப்படியாவது அந்தக் காசை சம்பாதித்து தந்துவிடுகிறேன் என்று வைராக்கியமாகச் சொல்லி வாங்கிவிட்டேன். சொன்னபடியே சில பல போட்டிகளில் அதாவது கேஷ் கிடைக்கும் போட்டிகளில் சேர்ந்து வென்று, எம் ஏ சேர்ந்த போது ஏஐஆர் தொடங்கிய சமயம் கல்லூரி பிரின்சிப்பல் தாணுப்பிள்ளை என் பெயரை ஏஐஆர் ப்ரோக்ராம் ஒன்றிற்கு கொடுத்துப் போகச் சொல்ல அப்படி என் குரல் மற்றும் உரைச்சித்திரம் அவர்களுக்குப் பிடித்துப் போக அப்படி மூன்று உரைச்சித்திரம் செய்து அதில் கிடைத்த கேஷை அப்படியே வீட்டில் கொடுத்தேன். கல்லூரியிலும் போட்டிகளுக்குக் கேஷ், சர்டிஃபிக்கேட், மெடல் என்று கொடுப்பார்கள். அதை வைத்து வீட்டில் சமாளித்து....அதிலிருந்து நிறைய பாடங்கள் கற்றது எல்லாம் நினைவில் வந்தது.

      கீதா

      நீக்கு
    5. //என் குரல் மற்றும் உரைச்சித்திரம் அவர்களுக்குப் பிடித்துப் போக அப்படி மூன்று உரைச்சித்திரம் செய்து அதில் கிடைத்த கேஷை அப்படியே வீட்டில் கொடுத்தேன்//

      அருமை கீதா. உங்கள் வைராக்கியம் வெற்றி பெற எவ்வளவு உழைத்து இருக்கிறீர்கள்!
      உங்கள் திறமை வியப்பளிக்கிறது.

      நீக்கு
    6. நெகிழ்வு கீதா ரெங்கன்.

      நீக்கு
  7. பஸ்ஸில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... பஸ்ஸில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றதும் உங்களுக்கு சட்டென ஞாபகம் வரும் பாடல் எது? எனக்கு அன்பே வா பாடலான "ஒன்ஸ் பாப்பா மெட் எ மாமா இன் அ லிட்டில் டூரிஸ்ட் பஸ்" பாடல்!!

      நீக்கு
    2. அன்பே வா கல்லூரி பாடல் ஸ்ரீராம்.
      நீங்கள் பகிர்ந்தது பள்ளி பாடல்.
      பள்ளி சுற்றுலா குழந்தைகள் பாடும் பாடல் "கரம் தட்டு கரம் தட்டு மனம மனம் விட்டு '' என்ற பாடல் பிடிக்கும்.
      அவனா இவன் என்று நினைக்கிறேன் வீணை பாலசந்தர் படம் அவர் நடித்த படம். அதில் குடிபத்மினி இன்னொரு பையன் பேர் தெரியவில்லை பாடுவார்கள் பஸ்ஸில் அது நினைவுக்கு வரும் எப்போதும்.

      அடுத்து "திருமலை தென்குமரி" பாடல் நினைவுக்கு வரும்.

      நீக்கு
    3. ஓ... அதுசரி..

      நான் பள்ளி, கல்லூரி என்று பிரித்துப் பார்க்கவில்லை அக்கா.

      நீங்கள் சொல்லும் பாடல் கேட்ட நினைவில்லை.

      நீக்கு
    4. டூர் பாடல், பஸ்ஸில் என்றால் நீங்கள் சொல்வது சரிதான் ஏ. எல். ராகவன் அவர்கள் பாடல் நன்றாக இருக்கும்.
      ஆடல், பாடல் பஸ்ஸில் நடக்கும் பாடல்தான்.

      நீக்கு
    5. வீணை பாலசந்தர் படம் பாருங்கள் நன்றாக இருக்கும் மர்ம கதை போல் இருக்கும்.
      குழந்தைகள் பார்த்த கொலைக்காட்சி.(பள்ளி சுற்றுலா போன போது )
      குட்டிபத்மினி அந்த கொலையை விவரிப்பது அழகு.

      நீக்கு
    6. நேரம் அமைத்துப் பார்க்க முயற்சிக்கிறேன் அக்கா.

      நீக்கு
    7. பிக்நிக் என்றால் ஃபாஸ்ட் பீட்ஸ் கொண்ட பாடல்கள் தான் எல்லோருக்கும் பிடிக்கும். அந்த வகையில் 'சுராங்கனி,சுராங்கனி, சுராங்கனிக்க மாலு கண்ணா வா.." என்னும் சிலோனி பயாலா பாட்டிற்குதான் முதலிடம். பிறகு "அதோ அந்த பறவை போல .."

      நீக்கு
    8. பானு அக்கா... அது வெறும் சுற்றுப்பயண உற்சாகம். இது காதல் உருகல் கலந்த பயணம்!

      நீக்கு
  8. இன்றைக்கு என்ன ஆச்சு எபிக்கு? அட்டஹாசமான பாடல் வெள்ளிக்கிழமையில்.. மனம் 80க்குச் செல்கிறது... கல்லூரியின் முதல் செமஸ்டர்.... மனதில் பாடல் ஓடுகிறது... ஒரே நாளில் தொடர்ந்து இரு படங்களையும் பார்த்த நினைவு வருகிறது..... காலவ்களில் அவை வசந்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்...

      //அட்டஹாசமான பாடல்//

      இளையராஜா!

      எல்லாம் உங்களை பிராக்கெட் பண்ணதான்!

      நீக்கு
    2. ஆ! நெல்லை 80 லியே கல்லூரியில் முதல் செமஸ்டரா அப்ப ஜந்தகமே இல்லை நீங்க எனக்கு அண்ணனேதான்!! ஹா ஹா ஹா ஹா ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ!!!

      கீதா

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா ரங்கன்...80கள்லேயே... படமே ஜூலை 81ல்தான் வந்துச்சுக்காக்காக்காக்காக்காக்கா... ஹாஹா... சில நிமிடங்கள் முன்னப்பின்ன பொறந்த ரெட்டையர்களிலேயே "அண்ணன்", "தம்பி" சொல்லிக்கறாங்க.......அப்புறம் எனக்கென்ன......

      நீக்கு
    4. நெல்லை நீங்க் சொன்னது உங்க செமஸ்டர் பத்தி அதான் சொன்னேன் படத்தைப் பத்தி யாரு சொல்லியது ஹா ஹா ஹா ஹா..

      சரி சரி நான் காலைலேயே இந்த ரெட்டைபிள்ளைகள் சொல்ல நினைச்சு கரன்ட் போக... விட்டுப் போச்சு...பின்னாடி பொறந்ததுதான் மூத்ததுனு ஹிஹிஹிஹி பரவால்ல பரவால்ல நெல்லை நீங்க எனக்குத் தம்பியேதான் !!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    மிகப் பிடித்த இரு பாடல்கள்.
    அதுவும் எப்பொழுதும் மனதில் ரீங்காரமிடும் பாடல் கோடை காலக் காற்றே.

    அனுபவித்தேன். மீண்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      காலை வணக்கம்.

      உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. மலேஷியா வாசுதேவன்? வாய்ஸ் டக்கென்று தெரியவில்லை. எஸ்பிபியோ என்று நினைக்க வைத்துவிடும். ஆழ்ந்து கேட்டால்தான் வித்தியாசம் தெரிகிறது ஸ்ரீராம்.

    வெஸ்டர்ன் சி மேஜர் ஸ்கேல் (நம்ம ஊர் சங்கராபரணம்...அதே ஸ்வரங்கள் ...ஆனா அதுக்காக "மஹாலஷ்மி ஜெகன்மாதா நு பாடிப் பார்த்துடக் கூடாது ஹா ஹா ஹா ஹா கர்நாட்டிக் டக்கென்று பொருத்திப் பார்க்க முடியாது!!நான் முன்னாடி இப்ப்டித்தான் சி ஸ்கேல் னு தெரிஞ்சதும் சங்கராபரணம் பாடிப் பார்ப்பேன் ஹிஹிஹிஹி!)

    பாட்டு செமையா இருக்கு. என்ட் நோட்ஸ் அப்படியே வெஸ்டர்ன் பிட் குறிப்பா பிச் மாறும் இடம் ஜிங்கிள் பெஸ் ஜிங்கில் பெல் ஜிங்கிள் ஆல்தவே இசையின் பிட்ஸ்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலேஷியா வாசுதேவன்? வாய்ஸ் டக்கென்று தெரியவில்லை. எஸ்பிபியோ என்று நினைக்க வைத்துவிடும்//

      grrrr....... அப்படித் தோன்றவே வாய்ப்பில்லை... அதிலும் இந்தப் பாடலில்!

      சங்கராபரணமா? ஓ.. ஓம்கார நாதானு சந்தான மௌதானமே... சங்கராபரணமு.. என்று பாடிப்பார்க்கலாமா?

      நீக்கு
    2. ஸ்ரீராம் நீங்க நிறைய பாடல்கள் கேட்டு கேட்டு வாய்ஸ் எல்லாம் பழகிப் போயிருக்கும்....எனக்கு மலேஷியா என்றால் அவர் வாய்ஸ் வித்தியாசமாக அது தனி டைப். வெத்தலை வெத்தலை பாட்டு கேட்டுருப்பீங்களே அது போல வாய்ஸ் செமையா இருக்கும் அந்தப் பாட்டு அவர் ரொம்ப நல்லா பாடியிருப்பார். அது போல தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி (வரிகள் சரிதானே??!!) அவர் வாய்ஸ் செமையா இருக்கும். நிறைய சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த வாய்ஸ்.

      அந்த வாய்ஸ் இதில் தெரியவில்லை.....நீங்களே சொல்லிருக்கீங்களே கொஞ்சம் மாற்றிப் பாடியிருக்கிரார்னு...

      ஹா ஹா ஹா ஓம்கார பாடிப் பார்த்தாலும் பொருந்துவது கடினமே கர்நாட்டிக் ஸ்டைலாச்சே!

      ஒரே ராகத்தை கர்நாட்ட்டிக், வெஸ்டர்ன் என்று போடுவதே கலைதானே ஸ்ரீராம் இல்லையா...எனக்கு அது ரொம்ப வியப்பான ஒன்று. இதில் வேறு ராஜா ஒவ்வொரு கருவிக்கும் நோட்ஸ் எழுதுவாராம் அதாவது இன்டெர்லூட் கூட நோட்ஸ்....ஹப்பா பிரமிப்பாக இருக்கிறது....

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் கீதா. எஸ் பி பி சில பாடல்களை பொய்க்குரலில் பாடியிருக்கிறார். உதாரணம் "தொடுவதென்ன தென்றலோ மலர்களோ..." ஏ எம் ராஜா பாடியது எல்லாமே பொய்க்குரல்தான் என்பார்கள். நீங்கள் சொல்லி இருக்கும் ம வே பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
    4. //சொல்லி இருக்கும் ம வா பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.// -வெள்ளியில் வருமா? (ஐயையோ...இது புதன் கேள்வி இல்லை)

      நீக்கு
  11. பாட்டு நல்லாருக்கு ஆரம்பம் புல்லாங்குழல் ராகத்தைச் சொல்லிவிடுகிறது. பாட்டு நலலருக்கு ஸ்ரீராம். முன்பு கேட்டிருந்தாலும் இப்படி நிதானமாகக் கேட்டதில்லை. அவ்வளவு கேட்காததால் இருக்கலம.

    இந்த இன்டெர்லூட் லாலாலா வேறு பாடல்களிலும் கேட்டது போல இருக்கு..நிறைய இடங்கள் வேறு இதே பேஸில் அமைந்த பாடல்களை நினைவூட்டுது..ஆனால் எனக்கு டக்கென்று சொல்லத் தெரியவில்லை....எப்படி ஒரு வெஸ்டர்ன் ஸ்கேலை நம்ம ஊருக்கு ஏற்றாற் போல போடுவது என்பதும் பெரிய கலைதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆரம்பம் புல்லாங்குழல் ராகத்தைச் சொல்லிவிடுகிறது.//

      ஆரம்பப் புல்லாங்குழலை நானும் சொல்ல நினைத்தேன். ஓ... ஓ... சொல்லியிருக்கேனே,..

      அப்புறம் அந்த கோரஸ் பற்றிச் சொல்ல நினைத்து மறந்து விட்டேன்! இளையராஜா ஒரு கோரஸ் ஸ்பெஷலிஸ்ட். அவரின் நிறைய இனிமையான பாடல்களில் இந்த கோரஸ் அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

      நீக்கு
    2. யெஸ் யெஸ் அதே அதே ஸ்ரீராம் கோரஸ் செமையா இருக்கும் அவர் பாடல்களில் ரொம்பப் பொருத்தமாகவும் இருக்கும்...அவர்தான் அதுக்கும் நோட்ஸ் எழுதுபவர் ஆயிற்றே...

      எனக்கும் ஒரு கர்நாட்டிக் ராகத்தை சினி ம்யூஸில் போல போடணும்னு நினைச்சு போட்டா ....அட போங்கப்பா எல்லாமே அல்ரெடி எம்எஸ்வி, ராஜா அல்லது யாராவது போட்ட ட்யூன் போல இருக்கு ஹிஹிஹிஹிஹி....

      கீதா

      நீக்கு
  12. பன்னீர் புஷ்பங்கள் வெளியான நேரத்தில் சுரேஷுக்கு சோப்ளாங்கி என்ற பெயரும் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? எனக்குத் தெரியாது. நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  13. இனிமையான பாடல்... அன்றும் இன்றும் ரசிக்கும் பாடல்...

    பதிலளிநீக்கு
  14. மிகவும் பிடித்த பாடல்..

    ஆனால் பன்னீர் புஷ்பங்கள் படம் பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? நான் இந்தப் படம் பார்த்தேன். ரசித்தேன். இந்தப் படத்தில் மூன்று இனிய பாடல்களைக் கொடுத்திருந்தார் இளையராஜா.

      நீக்கு
    2. ஸ்ரீராம் மற்ற மூன்று பாடல்கள் என்னனு பார்த்தேன் நெட்டில். செமையா இருக்கு. ஆனந்த ராகம் இதில் தானா? அந்தப் பாட்டு நிறைய கேட்டிருக்கேன். இந்தப் படம் என்று தெரியாமல்....சிம்மேந்திரமத்யமம் ராகம்....மற்றொரு பாட்டு ஏதோ வெங்காய சாம்பார்...கரகரப்பிரியா ..பூந்தளிர் ஆட பாட்டு சுத்த தன்யாசி...சுத்தமா சினிமாவிலயும் போட முடியும்னு வாவ்!! இதுல ஸ்டார்ட்டிங்க் ம்யூசிக் ரொம்ப நல்லாருக்கு....இந்தப் பாட்டும் கேட்ட நினைவிருக்கு..

      கீதா

      நீக்கு
    3. உண்மையில் எனக்கு இந்தப்படத்தில் மிகவும் பிடித்த பாடல் சுத்ததன்யாசிதான்! அதாவது "பூந்தளிராட.." நீங்கள் சொல்வதுபோல அதன் ஆரம்ப இசையே சுண்டி இழுக்கும். இந்தப் பாடலில் அமைதியாக ரசிக்க வைக்கும் ஆரம்ப இசை அதில் மெல்லிய ஆட்டம் போட வைக்கும்.

      நீக்கு
    4. எ.பிக்கு வருகை தந்திருக்கும் செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரையும், எம்.சி. வசந்தகோகிலத்தையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      //பாடல் சுத்ததன்யாசிதான்! // சிம்மேந்திரமத்யமம் ராகம்.//

      நீக்கு
  15. //நான் இந்தப் படம் பார்த்தேன். ரசித்தேன்.// ரசித்தீர்களா? ரசிப்பதற்கு என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? படம் அங்கங்கே தேங்கி நின்று நொண்டி அடிக்கும். இந்தப் படத்தின் முடிவு மட்டும்தான் பிடித்தது.

    அலைகள் ஓய்வதில்லையில் அதுவும் பிடிக்கவில்லை. அதில் திரைக்கதை இதை விட பெட்டர். அந்தப்படத்தை திரை அரங்கில் பார்க்கவில்லை. எப்போதோ தொலைகாட்சியில் போட்டபொழுது பார்த்தது.

    என் கடைசி அக்காவுக்கு திருமணம் ஆனவுடன் ஒரு பெரிய gang ஆக இந்தப் படத்திற்குச் சென்றது ஞாபகம் இருக்கிறது. திருச்சி சென்ட்ரல் டாக்கீஸ் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... இப்போது தான் துணைக்கு வந்திருக்கிறார்கள்..

      இந்த இரண்டும் தான் கோடாலிக் காம்புகள்... வீட்டுக்கு வீடு விடலைகள் தான் தோன்றித் தனனமாகத் தலையெடுப்பதற்கு அடிப்படை...

      இவற்றையும் கொண்டாடினோமே...

      கதை, பாடல், இசை, படப்பிடிப்பு என்று எரிகொள்ளியால் சொறிந்து கொண்டது தான் மிச்சம்...

      நட்பாய் பழகி காதலிக்க மறுத்தததால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் ஒரு இளம் பெண்....

      இதற்கு முன் இது மாதிரி எத்தனை எத்தனையோ என்றாலும் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி விழவில்லையே...

      இந்தப் பதிவுக்கும் இந்தக் தருத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்...

      மன்னித்துக் கொள்ளவும்...

      பூணூலையும் சிலுவையையும் கழற்றிப் போட்டு விட்டு ஊரை விட்டுப் போகும்படி அன்றைய தலைமுறைக்குக் கற்பித்தவர்கள் எல்லாம் பாதுகாப்பான வட்டத்துக்குள் இருக்க மாயையில் மயங்கிய விட்டில் பூச்சிகளாக இளந்தலைமுறை மட்டும் இன்னும் கஷ்டத்தில்!...

      விதி என்ற படத்தில்
      சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகளை இஷ்டத்துக்கு ஆடிப்பாடுங்கள் என்பார் கல்லூரி ஆசிறியர்..

      அப்போது பிடித்த ஏழரை
      இன்னும் விடவில்லை..

      பாடல் இசைக்காகத்தான் இன்றைய பதிவு..

      அதை நான் ரசித்திருக்கிறேன்...

      அதே சமயம் இந்தப்பாடல்களின் படங்களால் விளைந்தவற்றை மறக்க முடியவில்லை...

      நீக்கு
    2. ஆம். ரசித்தேன். அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்த பிறகுதான் இந்தப் படம் பார்த்தேன். அதனால் இந்தப் படம் ரசிக்க முடிந்தது - அப்போது.

      நீக்கு
    3. துரை செல்வராஜூ ஸார்...

      இந்தப் படங்கள் வந்த பிறகுதான் பள்ளிக்கதல்படங்களும் பெருகின. வளரும் பிள்ளைகள் கெட்டுப்போயினர். அதில் அஓ வுக்கு முதலிடம். ஆனால் அதற்கு முன்னரே ஓ மஞ்சு போன்ற படங்கள் வந்தன.

      //நட்பாய் பழகி காதலிக்க மறுத்தததால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் ஒரு இளம் பெண்...//

      நிறைய சம்பவங்கள் என்றாலும் இப்போதே ஒன்றல்ல, இரண்டு சம்பவங்கள்!

      படங்கள் மக்களைக் கெடுக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பாடல்களை ரசிப்பதில் தவறில்லை.

      நீக்கு
    4. ஏன் இவர்களில் பாலசந்தரை விட்டு விட்டீர்கள். ஆரம்பித்து வைத்துத் திரையுலகப் பிதாமகர்னு பெருமையாகப் பட்டம் வாங்கியவர் ஆச்சே! அவர் போட்ட பிள்ளையார் சுழி தான் பின்னர் தரங்கெட்ட திரைப்படங்கள் தொடர்ந்து வரக் காரணம்!

      நீக்கு
    5. //எல்லாம் பாதுகாப்பான வட்டத்துக்குள் இருக்க மாயையில் மயங்கிய விட்டில் பூச்சிகளாக இளந்தலைமுறை மட்டும் இன்னும் கஷ்டத்தில்!..// - துரை செல்வராஜு சார்.... படம் எடுப்பதும், அதன் சப்ஜெக்டும் வியாபாரத்துக்கு மட்டும்தான். மணிரத்னத்தின் சகோதரர் ஜீவெ கொடுத்த கடைசி பேட்டியை பொதிகையில் பார்த்தேன் (அடுத்த வாரத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார்). அவர் சொல்வது, 'படம் பார்க்க வருபவர்களில் 80% இளைஞர்கள் இளைஞிகள். அவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட், திரைக்கதை, சீன் தான் வைக்கமுடியும். நல்ல படம் வேணும், நல்ல தீம் வேணும்னு கேட்கறவங்களெல்லாம் வீட்டில் உட்கார்ந்திருப்பவர்கள். தியேட்டருக்கு வராதவர்கள்' என்ற பொருள்படும்படி சொன்னார்.

      ஆனா, நீங்க சொல்றதுல அர்த்தம் இருக்கு. எனக்கு அலைகள் ஓய்வதில்லை படத்துல ஞாபகத்துல இருக்கற சீன் 'காதல் ஓவியம் பாடும் காவியம்' பாடல்ல வரும் சீன். ஹாஹா....

      நீக்கு
    6. பூணூலையும் சிலுவையையும் மட்டுமே அந்த படத்தில் தடையாக அதாவது முதிர்ச்சியற்ற பப்பி லவ்வுக்கு எதிரியாக காட்டினார்கள் .அந்த பள்ளி படிக்கும் ஹீரோ ஹீரோயினின் பிள்ளைகளின் இள வயது பேசிக் கல்வி இல்லாம ,வேலையில்லாம உணவில்லாம வாழ வழியில்லாம எப்படி வாழ்வை துவங்குவது இதெல்லாம் கொஞ்சமும் சினிமாக்காரங்க யோசிக்கலை அவர்களின் ஓரே எண்ணம் புரட்சி சிந்தனை .சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கும் வயதுக்கேற்ற மனதிடம் வலிமை எல்லாருக்குமில்லை என்பதை நவீன புர்ச்சியாளர்கள் புரிஞ்சிக்கணும்

      நீக்கு
    7. அவ்வ்வ் தெரியாம க்யூரியாசிட்டில பாட்டை பார்த்துட்டேன் கொஞ்சம் கர்ர்ர் நெல்லைத்தமிழன் ...

      இப்போ புரியுது எங்க வீட்ல திருவிளையாடல் கந்தன் கருணை அப்புறம் சில பழைய படங்கள் எல்லாத்துக்கும் மேலே ஒன்லி சாமி படங்களும் இராமநாராயணன் படங்களுக்கும் மட்டுமே எங்களை கூட்டிட்டுபோனதன் ரகசியம்

      நீக்கு
    8. //பாட்டை பார்த்துட்டேன் கொஞ்சம் கர்ர்ர்// - அதைச் சொன்னதற்கு காரணம் இருக்கு ஏஞ்சலின். எப்போதும் நல்லனவைகளைவிட, அல்லனவைகள் மனசுல பதியும், அதிலும் இள மனதில். அதனால்தான் திரைப்படம் எடுக்கறவங்க ரொம்ப கேர்ஃபுல்லா எடுக்கணும். அப்படி எடுக்காம, பின்பு, 'திரைப்படத்தைப் பார்த்தா சமூகம் கெட்டுப் போகுது? சமூகத்திலிருந்துதானே நாங்கள் கதை எடுக்கிறோம்' என்று சாக்கு சொன்னால், யாரும் ஏற்கமாட்டார்கள்.

      நீக்கு
    9. உண்மைதான் நெல்லை தமிழன் .சமூக பொறுப்புணர்வு கட்டாயம் சினிமா எடுக்கிறவங்களுக்கு இருக்கணும் .
      கிளிஞ்சல்கள் படம் வந்தப்போ அதாவது டிவியில் தூர்தர்ஷனில் ஈவ்னிங் போட்டப்போ எங்கம்மா ஈவ்னிங் சர்வீஸ் ஆலயத்துக்கு எக்ஸ்சாம்ஸை காரணம் காட்டி வலுக்கட்டாயமா கூட்டிட்டுபோனாங்க அந்த படத்தை பத்து வருஷம் முன்னாடிதான் இங்கே லண்டன் தொலைக்காட்சியில் பார்த்தேன் அப்போ பேரன்ட்ஸ் தவிர்க்க வேண்டியதை நாசூக்கா தவிர்த்தாங்க .

      நீக்கு
  16. சிறப்பான பாடல்கள்
    அருமையான சினிமாத் தகவல்

    பதிலளிநீக்கு
  17. //..பூணூலையும் சிலுவையையும் கழற்றிப் போட்டு விட்டு ஊரை விட்டுப் போகும்படி அன்றைய தலைமுறைக்குக் கற்பித்தவர்கள்..//

    அரைவேக்காடுகள். தங்களைப் புரட்சி சிந்தனையாளர்களெனக் காட்டிக்கொண்ட மூதேவிகள். இவர்களின் வார்த்தைகளை ஏதோ வாழ்வின் பெருந்தத்துவமென நினைத்து சிரமேற்கொண்டு அலைந்தவர்கள்.. அலைந்துகொண்டேயிருக்கிறார்கள் சட்டையைக் கிழித்துவிட்டுக்கொண்டு. தனிமனித, சமூக வாழ்வியல்கூறுகளை சிதைத்த இந்த மேதாவிகள் ஆங்காங்கே வெவ்வேறு ’இயக்க’ங்களில் தங்களை இணைத்துக்கொண்டு கொழுத்தோ செழித்தோ திரிகிறார்கள்.

    கடந்த மூன்று தசாப்த, தமிழ் சமூக உளவியல் சிதைவின் ஊற்றுக்கண் நமது தரங்கெட்ட சினிமாக்கள்; அவை இளைஞர்களுக்கு ’கற்பிக்கும்’ ‘முற்போக்கு’சிந்தனைகள். விளைவுகளை சமூகச்சீரழிவின் விதவிதமான அத்தியாயங்களாக, தினமும் மீடியாக்களின் கைங்கரியத்தில் ஆடியோ/வீடியோ என கண்டுகளிக்கிறோம் நாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. இந்த வரிசையில் சீடர் படம் ஒன்றையும் நினைவு படுத்துகிறேன். இது நம்ம ஆளு.

      நீக்கு
    2. ஆனந்தராகம் மிக உத்சாகமான பாடல். உமா ரமணனின் குரலில்
      உன்னதமாக ஒலிக்கும்.

      யதார்த்தத்தை எடுப்பதாகச் சொல்லி குழியில் தள்ளிய படங்கள் அ.ஓ
      போன்றவை.
      அதற்குப் பின் தான் இப்படியும் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம் என்ற நிகழ்வுகள் அதிகரித்தன.

      உண்மையில் அவர்கள் கண்டது தோல்வியும் மரணமும்.
      இளம் மனதுகளை அலைக்கழிக்க வந்த படங்கள்.
      பன்னீர்ப்பூக்கள் கௌரவமாக எடுக்கப் பட்டிருந்தது.
      இதமாக முடியும்.
      மிகவும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஆமாம் வல்லிம்மா.... உண்மைதான். அதனால்தான் இந்தப் படம் எனக்கு அப்போது பிடித்திருந்தது.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றுதான் இந்த பாடல் கேட்கிறேன். பாடல் இளையராஜா இசையுடன் மலேசியா வாசுதேவனின் குரலில்,நன்றாக உள்ளது. இந்தப்படம் கேள்விபட்டுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை. இந்தப்பாடலும் கேட்டதில்லை. இப்படம் பற்றிய மற்ற தகவல்களும் அறிந்து கொண்டேன். அலைகள் ஓய்வதில்லை படப் பாடல்கள் கேள்விப்பட்டுள்ளேன். அதிலும் பாடல்கள் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..

      இந்தப்படப்பாடல்கள் கேட்டதில்லை என்பது சற்றே ஆச்சர்யம்! கேட்டு ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  19. எனக்கு பிடிச்ச பாட்டு.

    பதிலளிநீக்கு
  20. பன்னீர் புஷ்பங்கள் பாடல்கள் எல்லாமே அடிக்கடி கேட்டதுண்டு எல்லாம் ரேடியோ உபயம் . பப்பி லவ் பற்றி எடுக்கப்பட்ட படம் .அந்தக்காலத்தில் அதாவது படம் எடுக்கப்பட்ட கால கட்டத்துக்கும் இப்போதைக்கும் எவ்ளோ வித்யாசம் .
    இப்போல்லாம் எல்லாரும் தெளிவா இருக்காங்கன்னு தோணுது .
    இந்த பாட்டு இசை குரல் எல்லாமே சூப்பர் .அப்புறம் சில கேர்ள்ஸ் ஸ்கூல் படிக்கும்போது யங் சுரேஷை விட்டுட்டு பிரதாப் அங்கிளை சைட் அடிச்ச சம்பவமும் நினைவிற்கு வருது :))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  21. // அதற்குப் பின் தான் இப்படியும் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம் என்ற நிகழ்வுகள் அதிகரித்தன.

    உண்மையில் அவர்கள் கண்டது தோல்வியும் //

    அப்படியே வழிமொழிகிறேன் வல்லிம்மா கருத்தை ..

    ராஜ பார்வை படம் பார்த்து தேவாலயத்தில் பாதிரியார் மணமகளிடம் இந்த groom மணம் செய்ய விருப்பமா என கேட்கும் சமயம் இல்லைனு சொல்லி திருமணத்தை நிறுத்திய பெண்களும் உண்டு :(
    ரவுடிகளை /குடிகாரர்களை திருத்துகிறேன் என்று குப்பையில் விழுந்த சம்பவங்களும் சினிமா கொண்டுவந்ததுதானே .அலைபாயவைத்த சினிமா பார்த்து எத்தனை முட்டாள்கள் ரெஜிஸ்டர் பண்ணிட்டு பின்னாடி கயவர்களின் உண்மை சொரூபம் தெரிந்து விடுபடமுடியாம நொந்திருக்காங்க .மே பி அழகான பாடலுக்கு பொருத்தமில்லாததாக இந்த பின்னூட்டம் இருக்கலாம் .மனதில் பட்டது சொல்லிட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டோ சங்கரோ யாரோ சிவப்பு ரோஜாக்கள் பார்த்துதான் கொலைகள் செய்ததாய்ச் சொன்ன நினைவு.

      நீக்கு
  22. அந்தத் திரைப்படங்கள் மக்களைக் கெடுத்தன... ஆனாலும் அந்தப் படங்களின் பாடல்கள் இனிமையானவை.. கேட்பதில் தவறில்லை...

    உண்மைதான்...

    அந்தப் பாடல்கள் இல்லாவிட்டால் அந்தப் படங்கள் நாற்றக் குப்பையைச் சேர்ந்திருக்கும்...

    நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது...

    பதிலளிநீக்கு
  23. இளையராஜா சார் இவர்களை எல்லாம் காப்பாற்றி இருக்கிறார்.
    பாடல்களை மட்டும் கேட்டு மகிழ்ந்த காலம் இருந்ததே தொலைக்காட்சி வருவதற்கு முன்.
    அது பொற்காலம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!