செவ்வாய், 3 நவம்பர், 2009

வாழ்க்கையில் முன்னேற ...015

பாடம் பதினைந்து.
உங்க கை கடிகாரம் - டே அண்ட் டேட் (கிழமை, தேதி) இருக்கின்ற கடிகாரமா?
டே சரியாக இருக்கும் - (என்று நினைக்கிறேன்) --
ஆனால் - இன்றைய தேதியை அது சரியாகக் காட்டுகிறதா?
ஆமாம் என்றால் - வெரி குட்.
இல்லை என்றால் - நீங்க இன்னும் கொஞ்சம் அலர்ட் ஆக இருக்க உறுதி பூணுங்கள்.
உங்க கடிகாரம் - சரியான தேதியை ஏன் காட்டவில்லை / என்ன தேதி காட்டுகிறது  - என்று இதற்கு பின்னூட்டம் போடுங்கள்.


# இப்போ ஒரு கடிகாரப் புதிர்.
என் நண்பன், கடிகார விஷயத்தில் எப்பவுமே - கன கச்சிதமாக தன கடிகாரத்தில், தேதியை மெயின்டெயின் செய்பவன். 
இந்த இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் - ஒரு நாள் - தன கடிகாரத்தில் தேதியை சரி செய்துகொண்டே - சொன்னான், 
"அப்பாடி - எவ்வளவு நாள் ஆச்சு - இந்த கடிகாரத்துல தேதியை சரி செய்து? போன வருஷம் பண்ணினது - இப்போதான் சரி செய்யறேன்" என்றான்.
அன்றைக்கு என்ன தேதி?
அதற்கு அப்புறம் ஒரு நாள் கடிகாரத்தை சரி செய்துகொண்டே சொன்னான் " ச்சே என்னடா இது! இப்பத்தான் சரி செஞ்ச மாதிரி இருக்குது - அதுக்குள்ள திரும்பவும் தேதி சரி செய்யவேண்டி இருக்கிறதே?"
அன்றைக்கு என்ன தேதி?

4 கருத்துகள்:

  1. நான் புதிருக்கு பதில் சொல்ல மாட்டேன்.நீங்க அப்புறம் சொல்லாமலே போறீங்க !இதுக்கு உங்க பதிலை எதிர் பார்க்கிறேன்.

    ஜனவரி முதலாம் திகதி.சும்மா சொல்லிப் பாக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. டே டேட் கடிகாரம் எதுவானாலும் 28 க்குப்பின் 29 30 31 என்று வந்து கொண்டேதான் இருக்கும். முப்பது நாள் மாதம் தாண்டினால் ஒரு முறை, பிப்ரவரி மாதம் ஒருமுறை என்று சரி செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். மாறாக டிஜிட்டல் கடிகாரத்தில் லீப் வருஷம் வரும்போது ஒரு சின்ன செட் அப செய்துவிட்டால் பின் நிம்மதியாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. ஹேமா - நீங்க ஞாயிறு 15 பின்னூட்டங்களை - கடந்த நான்கு நாட்களுக்குள் படிக்கவில்லையா? புதிருக்கு நீங்க சொன்ன பதில் சரியானது என்று அங்கே ஒரு பின்னூட்டம் பார்த்தேனே!

    பதிலளிநீக்கு
  4. நேரத்துக்கு எல்லாம்.4 நவம்பர், 2009 அன்று PM 1:52

    உரக்க சிந்திக்கிறேன்:
    வாட்ச் - எந்த எந்த தேதிகளில் சரி செய்வோம்?
    ஒன்றாம் தேதிகளில் - அதற்கு முந்தைய தேதி முப்பத்தொன்று இல்லை என்றால். அவ்வகையில்,
    மார்ச் ஒன்று,
    மே ஒன்று
    ஜூலை ஒன்று
    அக்டோபர் ஒன்று
    டிசம்பர் ஒன்று ஆகிய நாட்களில்தான் சரிசெய்வோம்.
    எனவே, நண்பன் மார்ச் முதல் தேதி முதல் ஆச்சரியமும், மே ஒன்றாம் தேதி அடுத்த ஆச்சரியமும் பட்டிருப்பார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!