செவ்வாய், 3 நவம்பர், 2009

இலக்கிய ரசனை. 4

இரண்டு பாடல்களாக ரசிக்க வேண்டிய நேரத்தில் ஒரு பாடல் மறந்த நிலையில் இதை எழுதுகிறேன்.  ஆனால் சாராம்சம் நினைவில் இருக்கிறது.  கம்ப ராமாயணத்திலே இராமன் பட்டாபிஷேகம் என்று அறிவித்த நாளில் சூரியன் அஸ்தமனம் ஆவதை வருணிக்கும் கவி, சக்ரவர்த்தி தசரதன் இருக்க இவ்வுலகுக்கு அபாயம் ஏதும் இல்லை என்று நிம்மதியாக மறைந்தான் என்று குறிப்பிட்ட பின்  பலப்பல பாடல்களுக்குப் பிறகு தசரதன் இறந்த பின் அடுத்த நாள் உதயமாவதை வருணிக்கிறார்.

மீநீர் வேலை முரசியம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச 
தூநீர் ஒளிவாள் புடை இலங்க சுடர்த்தேர் ஏறித் தோன்றினான்  
வானே புக்கான் அரும்புதல்வன் மக்கள் அகன்றார் வருமளவும்
நானே காப்பன் இவ்வுலகை என்பான் போல எரிகதிரோன்.

சூரியகுல அரசன் என்பதால் தசரதன் அரும்புதல்வன் என்று சொல்லப் படுவதும் இவ்வுலகுக்கு காப்பாக இருந்த தசரதன் இல்லை, அவன் மக்களும் கானகம் சென்றனர் என்பதால் நான்தான் காக்க வேண்டும் இவ்வுலகை என்று சூரியன் தோன்றினான் என்று குறிப்பதும் ரசிக்கத் தக்கது.  பல பாக்களுக்குப் பின் கனெக்ட் செய்யும் அழகு வியக்கத் தக்கது.

****
மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்து அனுப்பத் தவறிவிட்டேன். இம்மாதிரி மோசமான மறதி அடிக்கடி வருகிறது. எந்த நாளை நம் வாழ்வின் மிகச் சிறந்த நாள் என்று சொல்லலாம்?  நாம் ஒவ்வொருவரும் எதைக் குறிப்பிடுவோம்?  சுவையான ஆராய்ச்சி.


பிறந்த நாள் உண்டு பின்னும் வாழ்த்து அனுப்ப
மறந்த நாள் உண்டு மேலும் சொன்னால் பாசத்தைக் 
கறந்த நாட்கள் பலப்பல காலத்தே காணப்படும் 
சிறந்த நாள் எதுவோ சற்றும் அறிகிலேனே.

****

2 கருத்துகள்:

  1. ஒரு சந்தைச் சரக்கு, ஒரு சொந்தச் சரக்கு என்று நீங்க எழுதறது, நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  2. இலக்கியம் இனிக்கிறது ஸ்ரீராம்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!