புதன், 11 நவம்பர், 2009

மிசலனி

கதை விடுகள் அல்லது விட்டுக் கதைகள் அல்லது கட்டுக் கதைகள்.
மிசலனி என்று ஒரு பகுதி அந்தக் கால டைம் பத்திரிகையில் வரும்.  அதில் என்ன வேண்டுமானாலும் இருக்கும்.  ஆனால் ரசிக்கத் தக்கதாக இருக்கும்.  அந்த மாதிரி நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது என்ற நல்ல (?) எண்ணத்தில் இதோ சில உதிரிகள்.

* ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரை எப்படி எழுத வேண்டும், ஏன்?
ஐஸ், வர்யா,  ராய்                   பச்சன்   
ஐஸ் வரியா வா, வா, ராய் பச்சன் தூரப்ப் போ லே என்று பொருள்.

* சூர்யா, நீ ஜெயிப்பது ஷ்யூர்யா.

* பிரியங்கா (ரொம்ப) சேப்ரா

* பென்ஸ் வண்டியா, லதா மங்கேஷ் கார்.

* அம்பா, நீ வரம் தா, என செல்வம்  அம்பானியைப் போல் ஆக.

* கேசில் தோற்றால் அண்ணன் அம்பானி மூகேஷ் அம்பானி தான். 
கேசில் தோற்றால் தம்பி அம்பானி அனில் அம்பானி இல்லை நில் அம்பானி.

* பத்து நாள் உபவாசத்துக்குப்பின் காந்தி படத்தைப் பார்த்தால்? 
சோனியா காந்தியைப் பார்க்கலாம்.

* ராகுலுக்கு பிரியங்கா இல்லை பிரியக்கா.

* அமைச்சர் முதல்வரிடம் அன்றைய வசூல் கணக்கை ஏன் முன் கூட்டியே சொல்ல வேண்டும்?  மந்திரிக்கழகு வரும் பொருளுரைத்தல்.

* வில்லனுக்கு முக்கியமான வேலை?  அடியார்க்கு அமுதூட்டல்.  

K.G.Y.Raman

9 கருத்துகள்:

  1. பிரியங்கா இல்லை பிரியக்கா!
    இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. இது எப்பிடி இருக்கு?11 நவம்பர், 2009 அன்று AM 8:41

    எங்களுக்கும் காலம் வரும்,
    இடதுபக்கம் ஓரம் வரும்!

    பதிலளிநீக்கு
  3. //* சூர்யா, நீ ஜெயிப்பது ஷ்யூர்யா.

    * பிரியங்கா (ரொம்ப) சேப்ரா//

    சூப்பரு.....

    பதிலளிநீக்கு
  4. நன்றி ரசிகன், இது, புலவர் !

    பதிலளிநீக்கு
  5. எடியூரப்பா ஆட்சிக்கு எவ்வளவு இடையூறப்பா!

    பதிலளிநீக்கு
  6. பிரபல அறிவிப்பாளர் ஒருவர்.
    வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவிக்கவில்லை.கடன் கொடுத்தவ்ர் கேட்கிறார்.ஏனப்பா தினமும் தத்துவமாய் பொழிகிறாயே வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாதா என்று.அறிவிப்பாளர் அதற்கு அறிவிக்க மட்டுமே தத்துவங்கள்.எனக்கல்ல அது என்கிறார் !

    பதிலளிநீக்கு
  7. ஹேமா - நான் அந்த அறிவிப்பாளராக இருந்திருந்தால் - கடன் கொடுத்தவரிடம் சொல்லியிருப்பேன். ஐயா நான் என்றென்றும் உங்களுக்கு கடன் பட்டிருக்கிறேன் என்று சொல்லிக்க ஆசைப்படுகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. நகைச்சுவையும் கலந்த கிரியேட்டிவ் திங்கிங். ரொம்ப ரசித்தேன்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!