புதன், 11 நவம்பர், 2009

சும்மா கேட்டு வைப்போமே!

சிலவற்றை, பழமொழிகள் என்கிறோம்.
சிலவற்றை, பொன்மொழிகள் என்கிறோம்.
இரண்டுக்கும், என்ன வித்தியாசம்?
பதியுங்கள் இங்கே, உங்க கருத்துக்களை!
பார்க்கலாம் உங்க திறமையை!

17 கருத்துகள்:

  1. நல்ல தத்துவங்கள்தான் பொன்மொழிகள். எல்லாமே ஆழ்ந்த அர்த்தங்களை கொண்டதுதான். இவைகளை அந்த காலத்தில் பெரியவர்கள் அனுபவபட்டுதான் சொல்லி இருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த பொன் மொழிகளில் பலது, பேச்சு வழக்கில் மாறி, வேறு அர்த்தங்களுடனும், இன்னும் பலது அர்த்தமே இல்லாமலும் ஆகிவிட்டது. இப்படி ஆனவை எல்லாம்தான் 'பழமொழி' என்ற பெயரில் இன்று வழக்கத்தில் இருக்குன்னு நான் நினைக்கிறேன்.
    உதாரணம்: 'தனக்கும் விஞ்சி தானம் செய்' என்பது பொன்மொழி. இது இப்பொழுது பேச்சு வழக்கில் 'தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்' என்ற பழமொழியாகி விட்டது. சரி, இதுக்காவது ஏதோ அர்த்தம் இருக்கு. ஆனா இன்னும் பேச்சு வழக்குல மாறின சிலவற்றுக்கு அர்த்தமே இல்லை.
    உதாரணம்: பெண்கள் வெத்தல போட்டு 'உதடு செவந்தா ஓர்பொடி பிரியமா இருப்பா, நாக்கு செவந்தா நாத்தனார் பிரியமா இருப்பா'. ஆனா பல்லு செவந்தா? இதுக்கு ஏன் ஒண்ணுமே சொல்லல, ரிதமிக்கா எதுவும் தோணலியா இத பேச்சு வழக்குல மாத்தினவங்களுக்கு? சரி, ஆண்கள் வெத்தலை போட்டா?

    பதிலளிநீக்கு
  2. மேடம்! நல்ல கருத்துகளை இங்கே சொல்லி, விவாதத்தை ஆரம்பிச்சுருக்கீங்க. பழமொழிக்கு ஒரு தனி பதிவே போடணும்னு தோனுது. பாக்கலாம் நம் அறிவுசார் உறுப்பினர்கள் என்ன சொல்றாங்கன்னு!

    பதிலளிநீக்கு
  3. நீங்க என்னை மேடம்ன்னு கூப்பிட்டா, நானும் உங்களை எங்கள் ஐயான்னு கூப்பிடணும். இதெல்லாம் வேண்டாமே! நீங்க என்னை மீனாக்ஷி அப்படின்னே கூப்பிடுங்களேன். இதான் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. பொன்மொழி வாழ்ந்து அனுபவித்தது என்றும் ,பழமொழி திரிபு அடைந்தது என்றும் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி மீனாக்ஷி,
    நன்றி ஹேமா.
    ஹேமா அவர்கள் கூறியுள்ள கருத்துகளும் - சிந்தனையைத் தூண்டும் விதமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. மீனாக்ஷி - கோவிச்சுக்காதீங்க - வெத்தல போட்டு பல்லு சிவந்தா - பல் டாக்டர் பிரியமா இருப்பாரு - ஏன்னா அவருக்கு அதனால வருமானம் வருமே!

    பதிலளிநீக்கு
  7. ஆண்கள் வெத்தலை போட்டா?
    பொண்ணுங்க பொகையிலை போட்டுக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  8. இதுல கோவப்பட என்னங்க இருக்கு? வெத்தலை போட்டு
    'பல்லு செவந்தா பல் டாக்டர் பிரியமா இருப்பார்' இல்லை
    'பல்லு செவந்தா பக்கத்து வீட்டுக்காரா பிரியமா இருப்பா'. இதுல எது ரிதமிக்கா இருக்கோ அதையே சொல்லுவோம். பழமொழி மாதிரி இது 'புதுமொழியா இருக்கட்டுமே, என்ன சொல்றீங்க, சரிதானே?

    //பொண்ணுங்க பொகையிலை போட்டுக்கலாமோ?// விருப்பம் இருக்கறவா தாராளமா போட்டுக்கட்டுமே. ஆனா உடலுக்கு இது கெடுதல் அப்படின்னு இருக்கும்போது யாருக்குமே வேண்டாமே.

    பதிலளிநீக்கு
  9. மீனாக்ஷி - எங்கியோ போயிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  10. நல்ல விவாதம்...

    பழமொழிகள் யாவும் பழந்தமிழரின் அனுபவத்தில் வந்த பழமையான மொழிகள் ஆகும்..

    பொன்போன்ற விலைமதிப்பற்ற மொழிகள் பொன்மொழகளாகக் கொள்ளப்படும்..

    பழமொழிகள் பொன்மொழியாகலாம்..
    பொன்மொழிகள் பழமொழியாக இருக்கவேண்டும் என்ற தேவையில்லை..

    இன்று,நாளை கூட பொன்மொழிகள் வழக்கில் வரலாம்...

    ஆனால் பழமொழிகள் என்பவை பழமையானவையே...

    இச்சொற்களுக்கான் நேரடியான விளக்கத்தை இங்கு சொல்லியிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. வாங்க ஐயா குணசீலன் - பெரிய மனிதர்கள் எல்லாம் எங்கள் குடிசையை எட்டிப் பார்ப்பது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் குடிசைக்கு கதவுகளே கிடையாது, சாளரங்கள்தான் நிறைய உண்டு. நீங்க தொடருகின்ற வலைப்பூக்கள் வரிசை பட்டியலையே எங்களால் படித்து முடிக்க இயலவில்லை - அவ்வளவு நீளமாக உள்ளது - அதில் எங்களையும் சேர்த்து எங்களைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி. அடிக்கடி வந்துகொண்டிருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. அனுபவத்தில் உணருகிற உண்மைகளை சில சமயம் அப்படியே அல்லது பல சமயம் சற்று மிகைப்படுத்தி கூறப் படுபவை - பழமொழிகள்

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

    கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

    கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்து தான் ஆகனும் - இப்படி பல

    வாழ்கையை நல்வழி படுத்துகிற கருத்துக்கள்/அறிவுரைகள் பொன் மொழிகள்.

    காலம் பொன் போன்றது.

    கடமையை செய் பலனை எதிர்பாராதே.

    work is worship - போன்றவை

    ஏதோ என் சிற்றவிற்க்கு எட்டியது. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை " இது எனக்கு மிகவும் பிடித்த பொன் மொழி .

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஆதி மனிதன்! எங்கே ரொம்ப நாளாக் காணோம் நம்ப பக்கம்? சரியாகச் சொன்னீர்கள் - குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. இப்போ ரொம்பப் பேருங்க,
    குற்றம் (செய்வது) பார்க்கில்;
    சுற்றும் யாரும் இல்லை என்றால் !
    (வண்டலூர் மிருகக் காட்சி சாலை போனதுண்டா!)

    பதிலளிநீக்கு
  14. சொன்னவர் பெயர் சேர்த்து சொல்லும் பொது, " ராமகிருஷ்ணர் பொன்மொழி" அல்லது "புத்தரின் பொன்மொழி" என சொல்கிறோம். சொன்னவர் பெயர் காலப் போக்கில் மறைந்த பின் அல்லது நம்ம ஊர் மணி சொன்னது பழமொழி ஆகி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  15. நல்ல சிந்தனை நெ து அவர்களே!
    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. முனைவர் குணசீலரின் விளக்கம் அருமை.
    நம் தமிழ் இலக்கியங்களில் "பழமொழிகள்"
    கையாளப்பட்டுள்ளனவா? இருப்பின் சில
    உதாரணங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. முனைவர் இரா குணசீலன் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப்படுகிறார்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!