புதன், 18 நவம்பர், 2009

செய்திகளும் - திசெயகளும்!

* சென்னையில் அடைமழை!
# அவியல் மழை எங்கே பெய்கிறது? அதைச் சொல்லுங்க மொதல்ல!

* பெரியாறு அணையில் வெள்ள எச்சரிக்கை.
# முல்லை பக்கம் மேலும் ஒரு தொல்லை!


* சபரிமலை சீசன் துவங்கியது.
# கலர்க் குடைகளும், கலர் வேட்டிகளும் இனி அமோகமா  விற்பனையாகும்!

* இந்தியாவில் 1050 சிறிய கட்சிகள்! 
# நல்லா எண்ணிப் பாத்தீங்களா? - அவ்வளவுதானா? மொத்த ஜனத்தொகை நூற்றுப் பத்து கோடிக்கு மேல ஆச்சே!

* பதவி விலகத்தயார் : ராஜ்நாத் சிங்.
# பதவி ஏற்கத் தயார் : பா ஜ க வில் பலர்.

 * மதுரையில் 150 கோடியில் மருத்துவமனை.
# மதுரையில அவ்வளவு தெருக்கோடிகள் உள்ளனவா!

 * பொள்ளாச்சியில் ஒரே வேரில் ஏழு மரங்கள்.
# அடுத்த தேர்தலில் போட்டியிட ஒரு அருமையான கூட்டணி தயார்!

 * மும்பை தாக்குதலில் ஹெட்லிக்கு தொடர்பு?
# சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ வாய்ப்பு!

* சாகச பயணம் : பள்ளி மீது நடவடிக்கை; கார் ஓட்டிய 8 வயது சிறுவனுக்கு - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
# ஒரு வேளை - எட்டு போட்டுக் காட்டு என்றதை - எட்டு ஓட்டிக் காட்டுன்னு நெனச்சிட்டாங்களோ?

6 கருத்துகள்:

  1. கடைசியாகச் சிரிக்கப் பண்ணிவிட்டீங்க.முயற்சிக்கு உங்களுக்கே வெற்றி.

    பதிலளிநீக்கு
  2. பிரசன்ன குமார், ஹேமா - சிரிங்க, சிரிங்க - சிரிச்சுகிட்டே இருங்க.

    பதிலளிநீக்கு
  3. //மதுரையில் 150 கோடியில் மருத்துவமனை.
    # மதுரையில அவ்வளவு தெருக்கோடிகள் உள்ளனவா!//

    Super!!!

    பதிலளிநீக்கு
  4. கலக்கல் ... தொடர்க.
    கருணாகரசு ... தொடர்(ந்துவரு)க!

    பதிலளிநீக்கு
  5. //* மதுரையில் 150 கோடியில் மருத்துவமனை.
    # மதுரையில அவ்வளவு தெருக்கோடிகள் உள்ளனவா!//

    ரொம்ப ரசித்தேன்

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!