திங்கள், 22 பிப்ரவரி, 2010

பெயரை சொல்லுங்க...

எனக்கு வந்த எஸ் எம் எஸ் - உங்களுக்கும் பொருந்தியிருக்கான்னு பாத்து சொல்லுங்க.  
உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால், (இனிஷியல் கணக்கில் வராது) பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்னவோ அதைக் கொண்டு உங்கள் பற்றி சிறு ஜோஸ்யம்.

A. Gifted ( திராணி படைத்தவர், வரசக்தி வாய்த்தவர், வரப்ரசாதி, பல வகைகளில்.) (அப்பிடியா துரை?)
B. எல்லோராலும் நேசிக்கப்படுபவர். 
C. அப்பாவி, வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கமாட்டார்.
D. எதையும் பார்த்தால் கேட்டால், அதை அப்படியே செய்து காட்டக் கூடியவர்.
E. ரோஜாப்பூ - முள்ளும் சேர்ந்து இருக்கிறது - ஜாக்கிரதை.
F. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பவர்.
G. எதையும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர். கற்பனா சக்தி அதிகம்.
H. நிச்சலனமாக இருப்பார்; ஆழமானவர். ( அப்படியா ஹேமா?)
I.  மற்றவர்களின் மரியாதைக்குரியவர்.
J. செய்யும் செயல் எல்லாவற்றிலும் நேர்த்தியாக, சிறப்பாக செய்து, வாழ்க்கையை அனுபவிப்பவர். 
K.  வித்தையும் இருக்கு, கர்வமும் இருக்கு. கோபம் அதிகம். (கிருஷ் சார் ?)
L.  கோபம் அதிகம். துணைவர், துணைவி மீது பிரியம் கொண்டவர்.
M. மிகவும் உயர்ந்த மனிதர். நல்லெண்ணங்கள் அதிகம். எதையும் எதிர் கோணத்தில் சிந்திப்பவர்.  (மாதவன்?)
N. கர்வம் உண்டு, அதற்கேற்ற செயல் திறனும் உண்டு.
O. எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளமாட்டார். எல்லோரையும் அனுசரித்துச் செல்பவர். 
P. புன்னகை மன்னர் + மன்னி. 
Q. எதற்குமே அலட்டிக்கொள்ளமாட்டார். 
R. எந்த நேரத்தில் என்ன செய்வார் அல்லது என்ன சொல்வார் என்று யாருக்குமே தெரியாது (அவர் உள்பட) 
S. புத்திசாலி - ஐ கியூ டெஸ்டில் முதல் ரேங்க் - ஆனா சில சமயங்கள்ல மத்தவங்க இவர் வாயில கடிபடுவாங்க. (இந்த எழுத்துல பெயர் ஆரம்பிக்கறவர்கள் அதிகம் - டெலிபோன் டைரக்டரி பார்த்தால் தெரியும். அவங்களே கூட ஒருத்தரை ஒருத்தர் கடிச்சிக்கக் கூடும்.)
T. உதவுபவர்கள், உண்மையானவர்கள்.
U. அனாவசியக் கோட்டை கட்டமாட்டார். நடைமுறை வழிகளைச் சிந்தித்துச் செயல் ஆற்றுபவர்.
V. எல்லோருக்குமே நண்பர். அதனால் - எதிரிகள் குறைவு.
W. "அப்படியா? - அடாடா! - சரி போனால் போகட்டும் - அடுத்தது என்ன?" - இவை இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். (Take it easy.)
X. மற்றவர்களை, அன்பாக, அனுசரணையாக பார்த்துக்கொள்வர். (Caring)
Y.எப்பொழுதும் புன்னகையோடு இருப்பார்கள். ஆனா இளிச்சவாயர்கள் அல்ல.
Z. இவரைச் சுற்றி எப்பொழுதுமே ஒரு சிறு கூட்டம் இருக்கும் இவர் அடிக்கும் ஜோக்குகளைக் கேட்டுச் சிரித்தவண்ணம்.

39 கருத்துகள்:

 1. இது எல்லாத்தையும் உக்காந்து யோசித்து எஸ்எம்எஸ் அனுப்புறாங்க பாருங்க...

  என்ன சொல்றது..

  எம் பேருக்கு கிட்டத்தட்ட சரியாக உள்ளது..

  பதிலளிநீக்கு
 2. //M. (மாதவன்?) // ஹா ஹா ஹா...

  //மிகவும் உயர்ந்த மனிதர். //

  Am I, just with a height of 155 cm?

  //நல்லெண்ணங்கள் அதிகம்.//
  எண்ணங்கள் அதிகம், சரிதான்.. 'நல்லதா'ன்னு தெரியலையே !

  // எதையும் எதிர் கோணத்தில் சிந்திப்பவர்.//
  அதுக்கு பேர் தான் 'மாத்தி யோசி'த்தலா?

  பதிலளிநீக்கு
 3. இப்பத்தான தெரியுது

  ராஜேந்தர் ஏன் விஜய டி.ராஜேந்தர் ஆ மாறினார்ன்னு..,

  பதிலளிநீக்கு
 4. //V. எல்லோருக்குமே நண்பர். அதனால் - எதிரிகள் குறைவு.//

  நானும் ஊஹூம் சொல்றேன்... அப்பிடியே தலைகீழ் எனக்கு இது தப்பு...

  //H. நிச்சலனமாக இருப்பார்; ஆழமானவர். ( அப்படியா ஹேமா?)//

  நானும் கேக்குறேன் அப்பிடியா ஹேமா?

  //M. மிகவும் உயர்ந்த மனிதர். நல்லெண்ணங்கள் அதிகம். எதையும் எதிர் கோணத்தில் சிந்திப்பவர். (மாதவன்?)//

  மீனாட்சி மேடத்தை விட்டுட்டீங்க...

  //L. கோபம் அதிகம். துணைவர், துணைவி மீது பிரியம் கொண்டவர்.
  //

  இதுதன் எனக்கு சரி பேரை மாத்தி வச்சிக்கவா லசந்தகுமார் நல்லாருக்குல்ல ஹேமா?

  பதிலளிநீக்கு
 5. வசந்த், ம்ம்ம்ம்.... உங்களுக்காகவது என் ஞாபகம் வந்துதே,ரொம்ப சந்தோஷமா இருக்கு.
  பாருங்க! 'V' இந்த எழுத்துக்கு எழுதி இருக்கா மாதிரி, நண்பர் அப்படிங்கற முறையில, எனக்காக நீங்க கேட்டு இருக்கீங்க!
  நீங்கதான் நல்ல நண்பர்!

  பதிலளிநீக்கு
 6. // meenakshi said...
  வசந்த், ம்ம்ம்ம்.... உங்களுக்காகவது என் ஞாபகம் வந்துதே,ரொம்ப சந்தோஷமா இருக்கு.
  பாருங்க! 'V' இந்த எழுத்துக்கு எழுதி இருக்கா மாதிரி, நண்பர் அப்படிங்கற முறையில, எனக்காக நீங்க கேட்டு இருக்கீங்க!
  நீங்கதான் நல்ல நண்பர்!//

  கண்டிப்பா நீங்க என்னோட ஃப்ரண்ட்ன்னா உங்க ரியல் நேம் சொல்லுங்க சார்....

  பதிலளிநீக்கு
 7. நான் சார் இல்லைங்க, மேடம்தான். ஆமாம், உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் ஒரு சந்தேகம் வருது?

  பதிலளிநீக்கு
 8. எங்கள் ப்ளாக் படிச்சு ஓட்டு போட்டுட்டு போயிடுறேன் கவுதம் ஸ்ரீராம் கமெண்ட்ஸ் வேணும்னா கவுதம் சாரோட பஸ்ல போட்ட்டுறேன் சரியா சாரிங்க...

  பதிலளிநீக்கு
 9. Sorry எல்லாம் எதுக்கு வசந்த், வேண்டாம். இது என்னுடைய பெயரின் ஒரு பகுதி. இதுவே முழு பெயர் இல்லை. நீங்க என்னை மேடம் அப்படின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம். ஹேமாவை எல்லாம் கூப்பிடறா மாதிரி பெயர் சொல்லியே கூப்பிடுங்க. நண்பர்களுக்குள்ள formalities தேவை இல்லையே!

  பதிலளிநீக்கு
 10. என் பேருக்கு நேரே இருக்கிறது சரியா தப்பா ?என்னை நானே புரிஞ்சுகிட்டாலும் அடுத்தவங்க சொல்றப்போத்தான் சரியா இருக்கிறேனான்னு புரிஞ்சுக்க முடியும்.

  எல்லாமே எல்லாருக்கும் ஒருவிதத்தில பொருந்துது.

  இது கள்ளச் சாத்திரம் !

  மீனாட்சிக்கு சரியா இருக்கா ?

  வசந்து சாமிக்கு எவ்ளோ சரியாப் பொருந்தியிருக்கு.சாமி நீங்க பேரை மாத்திக்காதிங்க.இதுதான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப அழகு.

  பதிலளிநீக்கு
 11. ஹேமா, நீங்க எழுதி இருக்கறத போல நம்முடன் பழகுபவர்கள்தான் நம்மை பற்றி சொல்ல வேண்டும்.
  என் அப்பிப்ராயபடி நீங்க ஆழமான மனநிலை கொண்டவர் இல்லை. உங்கள் சந்தோஷத்தையும், வருத்தத்தையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிபடுத்தி கொண்டுதான் இருக்கிறீர்கள். மனதில் எதையுமே வைத்துக் கொள்வதில்லை. நானும் இந்த விஷயத்தில் உங்களை போலத்தான். என்னால் எந்த விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள முடியாது.

  பதிலளிநீக்கு
 12. ஹேமாவோட நிறைய பேசி பழகியிக்கிறதுனால சொல்றேன் அவங்களுக்கான ஆருடம் சரியே...
  ஆழமான எண்ணங்களும் ஆசையும் கொண்டவர் எதிலும் நிறைய பிடிமானம் உடையவர் தாங்கள் எப்படியோ தெரியாது....எழுத்தை மட்டும் வைத்து யாரையும் எடை போட இயலாதுங்க...

  பதிலளிநீக்கு
 13. ஒருவர் எழுதுவதை வைத்தும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையாக கருத்துக்கள் சொல்வதை வைத்தும், ஓரளவுக்கு அவரைப் பற்றி கணித்து விட முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போதுதான் ஒருவருடைய உண்மையான குணங்கள் வெளிப்படும். அதனால் நீங்கள் சொல்வது சரிதான் வசந்த்.

  பதிலளிநீக்கு
 14. எந்த ஊர் நீங்க இந்நேரத்தில எனக்கு பதில் கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க இது உங்களின் புனைப்பெயர் என்று உங்கள் நண்பர்கள் மூலம் அறிந்தேன்...

  பதிலளிநீக்கு
 15. வசந்த், நான் இருப்பது அமெரிக்காவில். என் அம்மாவின் பெயர்தான் மீனாக்ஷி. எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். இது என் அம்மாவின் பெயர் என்பதால் மட்டும் அல்ல, இந்த பெயர் மேல் எப்போதுமே எனக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு. எல்லோருக்கும் அவர்கள் அம்மா என்றால் உயிர் என்றால், என் அம்மா எனக்கு அதற்கும் மேல். இதற்கு காரணம் என்றுமே அவர்கள் தன்னை பற்றியே சிந்திக்காமல், என்னையே நினைத்து, என்னிடம் காட்டி வரும் அளவு கடந்த அன்பு. இன்றும் அவர்களுக்கு நான் ஒரு குழந்தைதான். புனை பெயர் வைத்து எல்லாம் எழுத நான் ஒன்றும் எழுத்தாளர் இல்லை வசந்த். இந்த பெயர் மேல் உள்ள அபிமானத்தால், நிறைய இடங்களில் இந்த பெயரை நான் உபயோகித்ததால், இதுவே என் பெயர் ஆகிவிட்டது. எனக்கும் இது பழக்கம் ஆகி, பிடித்தும் விட்டது. அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 16. நீங்க வேற. என் பேர் ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லைங்க. என் பெயரை சொன்னா எல்லாரும் அந்த பெயர்ல கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. நான், என்னை எல்லோரும் 'மீனாக்ஷி' அப்படின்னு கூப்பிடறத கேக்கற சந்தோஷத்தை இழந்துடுவேன், அதனாலதான் சொல்லல. வேற ஒண்ணுமே இதுக்கு காரணம் இல்லைங்க. நீங்க என்னை தவறா நினைக்காதீங்க. நீங்க இவ்வளவு கேக்கறதால ஒண்ணே ஒண்ணு சொல்றேன், என் பெயர் ஆரம்பிக்கற எழுத்து 'U'. இந்த பதிவுல, இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவரை பற்றி எழுதி இருப்பது, என்னை பொறுத்தவரை முற்றிலும் உண்மை. நான் அப்படிதான்.

  வசந்த், இந்த பதிவை பத்தின பின்னூட்டங்களை எழுதாம, நான் என் ராமாயணத்தை எழுதினத, பதிவாசிரியர்கள் தூங்கி எழுந்து, படிச்சு பாத்து என்ன சொல்ல போறாங்களோ! பெஞ்சு மேல ஏறி நிக்க சொல்லாம இருந்தா சரிதான்.:)

  பதிலளிநீக்கு
 17. சுவையான விவாதங்களும், கண்ணோட்டங்களும், பின்னூட்டங்களும். மிகவும் இரசித்துப் படித்தோம், படித்துக்கொண்டிருக்கிறோம். பதிவைப் படிப்பவர்கள், தங்கள் சுற்றம் மற்றும் நட்புக்கு இது பொருந்தி வருகிறதா என்பதையும் ஆராய்ந்து கூறுங்கள். எல்லோருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
  மீனாக்ஷி - நாங்க வகுப்பாசிரியர்கள் இல்லை, வாசகர்களிடம் கற்றுக்கொள்ளும் வலைஞர்கள். எங்களிடம் - வாசகர்கள் எல்லோருமே நிறைய பேச வேண்டும், அரட்டை அடிக்கவேண்டும், நிறைய கூத்தடிக்கனும். அப்போதான் கிரியேடிவிட்டி தங்கு தடை இன்றி வளரும், உங்களுக்கும், எங்களுக்கும்!

  பதிலளிநீக்கு
 18. அட்டகாசம் போங்க.. அப்படியே புட்டு புட்டு வைக்குறீங்க

  பதிலளிநீக்கு
 19. உலகத்துல யாருமே கெட்டவங்க இல்லைங்கறது இப்பதான் எனக்கு தெரியுது.

  A to Z எல்லாரும் நல்லவங்களாவே இருக்காங்களே!

  ஹ்ம்ம் மத்தபடி எனக்கு கொஞ்சம் கர்வமும், கோவமும் வித்தையும் இருக்குங்கறத இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.

  பதிலளிநீக்கு
 20. //D. எதையும் பார்த்தால் கேட்டால், அதை அப்படியே செய்து காட்டக் கூடியவர்.//

  எனக்கு பொருந்துது ஸ்ரீராம்.. பகிர்ந்தமைக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 21. என்னோட இனிசியல் . தொடங்குது..
  அதுக்கு ஏதாவது பலன் சொல்றீங்களா ஜோசியரே..

  பதிலளிநீக்கு
 22. சொல்ல மறந்துட்டோம் SUREஷ் பழனியிலிருந்து கமெண்டை படித்து நாங்க எல்லோருமே ரொம்ப ரசிச்சுச் சிரிச்சோம்.

  பதிலளிநீக்கு
 23. //எதையும் பார்த்தால் கேட்டால், அதை அப்படியே செய்து காட்டக் கூடியவர்//

  எனக்கு சரியாக இல்லை......

  பதிலளிநீக்கு
 24. // Anonymous said...
  //எதையும் பார்த்தால் கேட்டால், அதை அப்படியே செய்து காட்டக் கூடியவர்//

  எனக்கு சரியாக இல்லை......//

  அனானிக்கு ஆரம்ப எழுத்து A
  அல்லவா? ஹ ஹ அ அ !!

  பதிலளிநீக்கு
 25. இந்த மாதிரி நல்ல விஷயங்களை ஜோசியமாகச் சொல்வது ஒரு யுக்தி. எல்லாரிடமும் நல்லன இருப்பதாக அவரவர் நினைத்துக் கொள்கிறார் என்ற உண்மையை அடிப்படையாக வைத்து இது செய்யப் படுகிறது. ஆங்காங்கே அளவாக புளி காரம் உப்பு கலந்து தருவது பத்திரிகை ராசி பலன்களின் டெக்னிக். உறவினர்களிடம் எச்சரிக்கை யாக இரு, பணவரவு இந்தவாரம் இல்லை, நெருங்கிய ஒருவரின் ஆரோக்கியம் கவலை அளிக்கும் என்பது போல அவ்வப்போது கலந்து எழுதுவது. தூர தேசத்திலிருந்து நல்ல சேதி வரும் என்பது அமெரிக்காவில் வேலை பார்க்கும் பிள்ளைகளைப் பெற்றவருக்கு இதமளிக்கும். பொய்மையும் வாய்மையுடைத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் என்று இந்த வாழும் வள்ளுவர்கள் நினைக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 26. இப்போது எல்லாம் போய், மீனாட்சி யின் யு வில் ஆரம்பிக்கும் அசல் பேர் என்ன என்று ஆராய ஆரம்பித்து விட்டேன். உமா, ஊர்மிளா, உஷா இது தவிர மற்ற பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வரவில்லை!! உக்கிர சேனன், உத்தம சோழன், உருத்திரங்கண்ணனார் இவை யாவும் ஒதுக்கி வைக்கப் பட்டன!

  பதிலளிநீக்கு
 27. க்யூ இசட் எழுத்துக்களுக்கு அபூர்வமாக காணப்படும் அரிய நபர் என்று போடலாமே.

  பதிலளிநீக்கு
 28. // மீனாட்சி யின் யு வில் ஆரம்பிக்கும் அசல் பேர் என்ன என்று ஆராய ஆரம்பித்து விட்டேன்.//
  நானும் உங்களுக்கு உதவி பண்றேன்.
  உதயா, உத்ரா, ஊர்வசி, உண்ணாமலை........
  உங்க பெயரையே சொல்லல, என் பேரை ஆராய்ச்சி பண்றீங்க! சரியான ஆசாமி சார் நீங்க! :))))

  ஆமாம், நீங்க ஆசாமியா, அம்மாமியா? (வசந்த், என்னை மன்னிச்சுடுங்க, பெருசா உங்களை சொன்னேன், இப்ப நானே இந்த கேள்வி கேட்டிருக்கேன்!:) )

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!