மிகப் பழங்காலத்தில் - சென்னையில் சாலைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் செய்யப்பட்டது. சாலைப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் அகற்றப்பட்டன. அப்போ என் நண்பர் வீட்டுக்கு வந்த தென்மாவட்ட நண்பர் ஒருவர், 'எக்மோர்ல - சாலை எங்கே இருக்குன்னு தெரியுமா?' என்று கேட்டார். நான், "எல்லா இடத்திலும் இருக்கு. ஏன்?" என்று கேட்டேன். "விளையாடாதீங்க சார். சாலை எங்கே இருக்கு? அங்கே ஒரு இண்டர்வியூ" என்றார். நான், "ஆமாம், சாலையில விளையாடக்கூடாது - வண்டி வந்து மோதிடும்" என்றேன். பிறகு நாங்க எக்மோர் போயி தேடிக் கண்டுபிடித்தோம் - " டாக்டர் நாயர் சாலை " வெறும் "சாலை" என்ற பெயருடன் இருந்தது. இப்போ அந்த சாலைக்கு என்ன பெயர்?
சில நாட்களுக்கு முன் வானொலியில் ஒரு பாடல் நிகழ்ச்சி அறிவிக்கப் படும்போது " பாடியவர் எம். எம். தண்டபாணி " என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்கள். எம். எம். தண்டபாணி தேசிகர் என்ற பெரும் கலைஞர் மிகப் பிரபலாமானவர். அவரை ஏதோ அவமதிப்புச் செய்தாற்போல அவரு டைய பெயர் குறைக்கப் பட்டத்தாக எனக்குத் தோன்றியது.
ஜாதிப் பெயரை வெறும் பலகைகளிருந்து நீக்கி மட்டுமே புரட்சி எதுவும் வந்து விடாது என்பது கிருஷ்ணமாச்சாரி சாலை கிருஷ்ணமா சாலை என்று சிதைக்கப் பட்ட போதே நமக்குத் தெரிய வந்தது. ராஜ கோபாலாச்சாரி ராஜகோபாலா என்று சுருக்கப் பட்டால் என்னவோ விளித்தல் விகாரமாக ஆகிவிடும். ரா. பி. சேது, நாமக்கல் ராமலிங்கம், எஸ். வையாபுரி, மகா வித்துவான் மீனாக்ஷி சுந்தரம் என்றெல்லாம் பெயரைச் சொன்னால் நன்றாக இருக்குமா?
மாறாக கமல ஹாசன் அய்யங்கார், (எழுத்தாளர் சுஜாதா ) ரங்கராஜன் அய்யங்கார் மதுரை சோமுப்பிள்ளை இதெல்லாம் எடுபடுமா? அரியக்குடி ராமனுஜம் பாடிய பாடல் என்று சொன்னால் என்னவோ போல இருக்கிறது இல்லையா? பெயரில் அய்யர், அய்யங்கார், முதலியார் செட்டியார் என்று வால்கள் ஒட்டிக் கொண்டு அறியப் பட்டவர்களை அப்படியே குறிப்பிடுவதுதான் பொருத்தம், மற்றும் மரியாதை. உலகம் சுற்றும் தமிழர் என்று பிரபலமான A.K.செட்டியாரை AK dash dash என்றோ A.கருப்பன் என்றோ (அவர் பெயர் கருப்பன் செட்டியார்) குறிப்பிடமுடியுமா? ஆர். எம். அழகப்ப செட்டியார் தன கையெழுத்தை ராம. அழகப்பன் என்றுதான் போடுவார். எனினும் அவர் பெயரை முழுமையாகக் குறிப்பிடுவதில் தொனிக்கும் மரியாதை முக்கியமானது அல்லவா? சாதிக் குறிப்பீடு வேண்டாம் தான். விரும்பத் தக்கது இல்லைதான். இப்போதைய தலைமுறை அதை நன்றாக கடைப் பிடித்து வருகிறது. மிக்க மகிழ்ச்சி. ஆனால் வரலாற்று ரீதியாக ஒருவரை சுட்டும் பொழுது அவர் எந்தப் பெயரில் வழங்கி வந்தாரோ அந்தப் பெயரிலேயே குறிப்பிடுவது நல்லதுதானே. அதுவே அவர் பெயர். ப. சிதம்பரம் செட்டியார், வாசன் மூப்பனார் என்றெல்லாம் குறிப்பிட்டால் வேடிக்கையாக இருக்கும். என்றாலும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்பதில் உள்ள கம்பீரம் விட்டுக் கொடுக்கப் பட என்ன நிர்ப்பந்தம் வந்து விட்டது?
வட புலத்தில் வாழும் சில தமிழர்கள் தங்கள் சாதி ஒட்டு மதிக்கப் படுவதன் காரணமாக வைத்துக் கொண்டு விளங்குவதாகத் தெரிகிறது. சாதி வித்தியாசம் பாராட்டி அடித்துக் கொள்ளாதவரை அவரவர்களுக்கு விருப்பமான ஒட்டுகள் இருந்து விட்டுப் போகட்டுமே! ஒரு வருக்கு பிடிக்கிறது என்பதால் என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டால் என்ன? ஜாதிப் பெயரை யாராவது சொல்லிவிட்டால் குற்றம் என்று கருதப் படுகிறதோ அதை பெரிய எழுத்தில் போட்டு, பெயரோடு ஒட்ட வைத்துக் கொள்ளும் சில தலைவர்கள் பெயரையும் நம்மால் பார்க்க முடிகிறது. சாதிப் பெயர்களை தேவை இருக்கும் போது குறிப்பதில் பெரிய தவறோ ஆபத்தோ இல்லை என்றே தோன்றுகிறது.மீண்டும் சமுதாய சீர்கேடுகள் நுழைந்து விடும் என்று அஞ்சும் அளவுக்கு இதில் ஆபத்து இல்லை என்றே எண்ணுகிறேன்.
பார்ப்பன ஆரிய ஆதரவாளர், பிற்போக்குவாதி, சமுதாய எதிரி - என்றெல்லாம் பட்டங்களைப் பெறப் போகும் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
பதிலளிநீக்குசீரியசாக சொல்லவேண்டும் என்றால், இந்தப் பதிவு, தங்கத் தட்டில் பொறிக்கப்பட்ட வைர வரிகள் கொண்ட பதிவு.
பதிலளிநீக்குபெயர் சொல்ல விருப்பமில்லை - ஐயோ பயமுறுத்தாதீங்க.
பதிலளிநீக்குகாதை கொடுங்க. கமெண்ட்ஸை ரகசியமா சொல்றேன்........ ........... ............... ...................... எப்படி இருந்தது நம்ம கமெண்ட்ஸ்.
பதிலளிநீக்குநன்றி தமிழ் உதயம் - மூக்குல குத்தாம காதுல சொன்னதுக்கு.
பதிலளிநீக்குகே.ஜி.ஜி.
பதிலளிநீக்குஎன் பெரியப்பா அடிக்கடி சொல்லும் ஜோக் இது !
"மாம்பலத்தில் "நாயக்கமார்" தெரு வெறும் "மார்" தெரு ஆச்சு தெரியுமா என்று !!!
என் உறவுமுறைகள் கொஞ்சம் குசும்பர்கள் - ஜாக்கிரதை !
- சாய்
'காந்தி', 'நேரு', 'பட்டேல்' எல்லாம் குறிப்பிட்ட பிரிவினரின் அடையாளம்(சாதியைப் போன்றே) தான்.
பதிலளிநீக்குநாம் நமது சாதிப் பெயர்களை ஒழித்தொமே ஒழிய, சாதிச் சண்டைகளை ஒழித்தொமா?
'sur name ' என்பது நமது வழக்கத்தில் இல்லாததால், வட இந்தியாவில், பாஸ்போர்ட், பேங்க் a /c மற்றும் IT pan கார்டு வாங்க நான் பட்டகஷ்டம் எனக்குத்தான் தெரியும்.
உண்மையில் மக்களிடையே உள்ள வேறுபாட்டினை (வாழ்க்கை வசதி etc.) ஒழிப்பதை விட்டுவிட்டு வெறும் சாதிப்பெயரை ஒழிப்பதால் ஒரு பிரயோஜனம் இல்லை என்பது ஆண்டாண்டு காலமாகநாம் காணவில்லையா?
நல்ல பதிவு..
மிக மிக அருமையான பதிவு
பதிலளிநீக்குசிலபெயர்களில் சாதிப்பெயரின் அடைமொழியோடு சொன்னால் தான் தெரிகிறது.
என்னை கேட்டால் சாதி ஒழிக்கப்பட வேண்டியது இல்லை, (ஒழிக்கவும் முடியாது) அடுத்தவரின் மனது புண்படாதவரை
விஜய்
மிக அருமையான பகிர்வு
பதிலளிநீக்குநல்லா சொன்னீங்க ராம்
super pathivu . tupaakur aasaamikalukku ithukku mela yaaralaiyum solla mudiyathu. unakal karuththu engkal karuththu.
பதிலளிநீக்குசில பெயர்களுக்கு முன் ஒட்டியுள்ள சாதிப்பெயர்களே ஒரு அழகுதான். பிரச்சனைப் படுத்தாதவரை !
பதிலளிநீக்குவிடுங்க தல பேர்லயாவது அந்தக் கருமாந்திரம் புடிச்ச ஜாதி ஒழியட்டும்.
பதிலளிநீக்கு//வட புலத்தில் வாழும் சில தமிழர்கள் தங்கள் சாதி ஒட்டு மதிக்கப் படுவதன் காரணமாக வைத்துக் கொண்டு விளங்குவதாகத் தெரிகிறது.//
பதிலளிநீக்குதிரு மாதவன் சொன்னது ரிபீட்டு .
சுமார் நூறு ஆண்டுகளாக பள்ளியில் பதியும் போது சாதி பெயரை எழுவதை தமிழ் நாட்டில் தவிர்த்தது மிக மெச்ச வேண்ட விஷயம். (என் தாத்தா s s l c சான்றிதழில் சாதி பெயரின் வாலாக இல்லை. )
(ஆனால், சாதியை எப்படியோ தெரிந்து கொண்டு விட வேண்டும் என முயல்வது கண்டிருக்கிறேன். அதாவது எழுத்தில் போனாலும், மனத்திலிருந்து அது போக வில்லை என்பது வெறுக்க பட வேண்டிய உண்மை.)
பிரபலமானவர்களின் பெயரில் பழகிப் போன பகுதியை நீக்குவது தேவை இல்லாதது. உ. முத்துராமலிங்க தேவரும், ஆர். கே சண்முகம் செட்டியும், உ வே சாமிநாத ஐயரும் அப்படியே இருக்கட்டும்.
சாய்ராம் - கரெக்டா சொன்னீங்க - சாலைப் பெயர் மாற்ற குழப்பத்தை. அதை ஏன் கே ஜி ஜி ன்னு கூப்பிட்டுச் சொல்லியிருக்கீங்க - எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா?
பதிலளிநீக்குமாதவன், ஆமாம் - பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்கள் எல்லோருக்குமே இந்த சர் நேம் குழப்பம் பெரும் குழப்பம்.
பதிலளிநீக்குவிஜய் - சரியாகச் சொன்னீர்கள். யார் எந்தப் பெயரில் பிரபலம் ஆகிரார்களோ - அவர்களை அந்தப் பெயரிலேயே குறிப்பிடுவதுதான் மரியாதை என்று தோன்றுகிறது. அது ஒரு அடையாளம்தானே தவிர - உயர்வு தாழ்வு கிடையாது.
பதிலளிநீக்குநன்றி தேனம்மை லக்ஷ்மணன், மதுரை சரவணன், ஹேமா, புலவன் புலிகேசி, நெற்குப்பை தும்பி -- உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும்.
பதிலளிநீக்கு//ஆனால், சாதியை எப்படியோ தெரிந்து கொண்டு விட வேண்டும் என முயல்வது கண்டிருக்கிறேன். அதாவது எழுத்தில் போனாலும், மனத்திலிருந்து அது போக வில்லை என்பது வெறுக்க பட வேண்டிய உண்மை.//
பதிலளிநீக்குrepeataaaaiiiiiii
நெற்குப்பைத் தும்பி சொல்வதிலும், ஜெய்சங்கர் ஜெகநாதன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. யாராவது ஒருவரை நமக்குப் பிடித்திருக்கிறது என்றால் - அவர் எந்த ஜாதி என்றோ எந்த ஊர் என்றோ, அல்லது ஏதேனும் ஒரு விவரம் - நம்மோடு ஏதாவது ஒரு வகையில் ஒத்துப் போகிறதா என்ற ஆர்வம் பலருக்கு இருப்பதை நான் அலுவலகங்களில் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இது எல்லா ஜாதியினருக்கும், எல்லா மதத்தினருக்கும் பொதுவான இயல்பாகத் தான் தோன்றுகிறது. சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.
பதிலளிநீக்கு//எங்கள் said... சாய்ராம ஏன் கே ஜி ஜி ன்னு கூப்பிட்டுச் சொல்லியிருக்கீங்க - எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா?//
பதிலளிநீக்குYou have so many in the mix to write in your blog. I remember writing something - as Kasu Shobana to realize that it was written by somebody else.
I become clever to click on the comment page (Show Original Post) that tells me who posted the content !! It does not still tell me who wrote it !!
ஹி ஹி
//I become clever to click on the comment page (Show Original Post) that tells me who posted the content !! It does not still tell me who wrote it !!//
பதிலளிநீக்குOne gets update from the blogs he/she follows, saying the latest post, 'by, at' etc.,
Infact, I made a comment on this, but it became a boomarang & hit me back. S, the postman(am I wrong here.. I mean 'the man who posts'.. ha ha ha) need not be the author of the post.