சனி, 6 பிப்ரவரி, 2010

சொல்லி அடிப்பேனடி !


ஒரு கேள்வி கேட்கப் படும்போது சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டும் சொல்லலாம், சொல்லாமலேயும் இருக்கலாம், சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு சொல்லியும் விடலாம் என்றெல்லாம் சொன்னாலும் சொல்லுதல் என்பது இங்கு முக்கியமாகக் கொள்ளப்பட்டு, சொல்லவந்த கருத்தை சொல்லி விடுகிறார்களா, அல்லது சொல்லாமலே விடுகிறார்களா, சொல்ல வந்ததை விட்டு விட்டு சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதாவது சொல்கிறார்களா, என்றெல்லாம் பார்த்து விட்டு பதில் சொல்லலாம் என்று சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் எவ்வளவுதான் சொல்வது, நாம் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள், கேட்பவர்கள் முழுமையாகக் கேட்பார்களா, கேட்காமலே விடுவார்களா, கேட்டும் கேட்காத மாதிரி போய் விடுவார்களா, கேட்டதை கேட்டோம் என்று ஒத்துக் கொண்டு மற்றவர்களிடமும் சொல்வார்களா என்றெல்லாம் ஆராயாமல் நாம் சொல்ல வந்ததை சொல்லிதான் ஆகவேண்டும் என்று சொல்லி விட்டோமானால், நமக்கு வேண்டுமானால் திருப்தி என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, கேட்டவர்கள் சொல்லப் பட்டதை திருப்பிச் சொல்லுமளவு கேட்டார்களா, கேட்டதை விரும்புகிறார்களா, மறுக்கிறார்களா என்றெல்லாம் தெரியாமல் நாம் பாட்டுக்குச் சொல்வது என்பது, சொல்வது ஒன்றுதான் முக்கியம் கேட்பவர்கள் அபிப்ராயமோ, விருப்பமோ தேவை இல்லை என்று ஆகிவிடுகிறது என்று சொல்லாமல் சொல்வது போல ஆகி விடுவதால், அவர்கள் சொல்வதையும் கேட்டு விட்டு நாம் சொல்ல நினைப்பதைச் சொல்லலாம் என்பதோடு கேட்பவர்கள் விருப்பத்தையும் அறிந்துதான் நாம் சொல்லலாமா கூடாதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் சொல்வது எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடடாயமுமல்ல, கேட்பது எல்லாவற்றையும் மறுக்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல என்று சொல்லி, சொல்லப் படுவதில் என்ன நியாயம் இருக்கிறதோ அதை கேட்டுக் கொண்டு சொல்லுபவர் கருத்துக்கு பதில் கருத்தை சொல்லத் தொடங்கும்போது...


விரும்புவதை விரும்புகிறேன் என்று கூட சொல்ல விரும்பாதவர்கள் எத்தனை பேர் எத்தனை பேரை விரும்புகிறார்களோ அத்தனை பேரிடமும் போய் விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று சொல்லிக் கொள்ள விரும்பாமல் விரும்புவதை தனக்கு விருப்பமில்லாமலே கூட மனதுக்குள் வைத்து விரும்பிக் கொண்டிருப்பார்கள் என்றாலும் விளக்கம் கேட்டால் விரும்புகிறேன் என்பதற்கு புத்தகம் படிக்க விரும்புகிறேன், சினிமா பார்க்க விரும்புகிறேன் இந்த இடத்துக்கு செல்ல விரும்புகிறேன், அந்த நபரைப் பார்க்க விரும்புகிறேன் என்றெல்லாம் கூறி விரும்பிய விஷயத்தையே மாற்றி விருப்பங்களை பட்டியல் போட்டு நாம் கேட்க விரும்பாமல் செய்து விட்டு, தான் விரும்பிய உண்மையான விஷயத்தை மட்டும் மனதோடு வைத்துக் கொண்டு விருப்பங்களை வெளியில் சொல்லாமல் இருப்பவர்களின் விருப்பங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி...
(இந்தப் பதிவை இவருக்குப் படித்துக் காட்டினோம். கேட்டவுடன், ஓடியவர், பக்கத்தில் இருக்கின்ற பளிங்குக்கல் சுவரில் தலையை மோத ஆரம்பித்தவர், இன்னும் நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.)

42 கருத்துகள்:

 1. கம்ப்யூட்டர் மானிட்டர் உடைஞ்சு போச்சுங்கோ, ஒண்ணுமே தெரியிலீங்கோ....

  பதிலளிநீக்கு
 2. எஸ்.பி.பி ஒரு பாடலில் மூச்சு விடாமல் ஒரு பகுதியைப் பாடியிருப்பார். அதுபோல நிறுத்தாமல் எழுதியிருக்கிறீர்கள்... இல்லை சொல்லி அடித்திருக்கிறீர்கள். அடித்தவை யாவும் சரியாகத்தான் இருக்கிறது.‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல’ :)!

  பதிலளிநீக்கு
 3. இது வேறேயா?

  தமிழ்நாட்டு ஜனங்கள் கல்லுளி மங்கர்கள், எத்தனை அடித்தாலும் தாங்கிக் கொண்டு 'நீங்க ரொம்ப நல்லவர்னு' ஒரே வார்த்தை சொல்லிட்டாப் போதும் ஓகோன்னு வாழலாம்னு கனாக் கண்டு, எதையும் தாங்குபவர்கள் என்பதற்காக இப்படியா சொல்லி சொல்லி......?

  பதிலளிநீக்கு
 4. பேசி குழப்புறவங்கள விட பேசாம்ம குழப்புறவங்க மேல்.

  பதிலளிநீக்கு
 5. ஏன்? நல்லாத்தானே போயிகிட்ருந்துச்சு??
  இனி எத்தனை கொலை விழப்போகுதோ???

  பதிலளிநீக்கு
 6. Indication of summer at your place.. just take care of ur head & its contents..

  தினமலரிலிருந்து சுடப்பட்ட போட்டோ ..!! அதக்கூட முழுசா சுடத் தெரியலியே..!!
  பாதிய கட் பண்ணிட்டா உண்மை(சுட்டதுன்னு) எங்களுக்கு (உங்களைச் சொல்லவில்லை) தெரியாதா?

  பதிலளிநீக்கு
 7. நல்லா படிச்சுக் காண்பிச்சீங்க போங்க எங்க பில்டிங்கே ஆடுது

  பதிலளிநீக்கு
 8. மாதவன் - முழுசா சுட்டிருந்தா - எங்கள் இஷ்டத்துக்கு - சுவர் என்றெல்லாம் ரீல் விடமுடியாதே - எவ்வளவு சூப்பரா எடிட் பண்ணியிருக்கோம் - அதை பாராட்டாம ....

  பதிலளிநீக்கு
 9. கட்சி பெயரும், கொடியும் அறிவித்து விடுங்கள்..:))

  பதிலளிநீக்கு
 10. அன்பு அனானி,
  தலை சுற்றிய வேகத்தில்தான் உங்கள் பெயரைப் போட மறந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்..

  பதிலளிநீக்கு
 11. சைவகொத்துபரோட்டா,
  அந்தப் பொண்ணு மோதின மோதல்லதானே மானிட்டர் உடைஞ்சது...அப்புறம் இப்படி சாக்கு சொல்லாம முழுசாப் படிச்சிடுங்க...ஆமாம்..

  பதிலளிநீக்கு
 12. நன்றி ராமலக்ஷ்மி,
  உங்கள் பலம் தெரிந்துகொண்டோம். இனி இன்னும் பலமாக அடிக்கலாம்..(உங்கள் பழைய திருநெல்வேலி வீடு பதிவு படித்து மகிழ்ந்தோம். கருப்பு வெள்ளைக் காவியம்...)

  பதிலளிநீக்கு
 13. //எவ்வளவு சூப்பரா எடிட் பண்ணியிருக்கோம் - அதை பாராட்டாம ...//

  s, boss.. I forgot to appreciate.. நல்லாவே 'மாத்தி யோசிச்சிருக்கீங்க..'

  பதிலளிநீக்கு
 14. நன்றி கிருஷ் சார்,
  நல்லா இருக்குன்னு சொல்றீங்களா, நல்லா இல்லைன்னு சொல்றீங்களா, எங்களை நல்லவன்னு சொல்றீங்களா சொல்றது எல்லாம் சொல்லுங்கன்னு கேட்டுக்கறீங்களா..

  பதிலளிநீக்கு
 15. தமிழ்,
  படிச்ச குழப்பத்துல ஓட்டு கூட போடாம ஓடிட்டீங்களே அப்பு...நியாயமா...?

  பதிலளிநீக்கு
 16. வாங்க வாங்க நாஞ்சில் பிரதாப்,
  நல்வரவு..அப்போ நீங்க சொல்றதைப் பார்த்தா சத்தமில்லாம வந்து பார்த்துகிட்டு இருக்கீங்க போல..ஓட்டுப் போட்டு கமெண்டும் போடுங்க சார்...மீண்டும் மீண்டும் வருக..

  பதிலளிநீக்கு
 17. மேடி,
  உங்க பெயருக்கு தகுந்தாற்போல யோசிக்கறீங்க... படம் எங்கிருந்து எடுத்தோம் என்பது முக்கியம் அல்ல...எதற்காக எடுத்தோம் என்பதுதான் முக்கியம். இதையெல்லாமா துப்பறிவாங்க...ரொம்ப குறும்பு நீங்க.

  பதிலளிநீக்கு
 18. தேனு மேடம்,
  அவ்வளவு வீக்கான கட்டிடத்துலய இருக்கீங்க...ஏதோ கட்டிடம் பலமா இருக்கா இல்லையா என்று தெரிந்து கொள்ளவாவது இந்த பதிவு உதவியதே...பாவங்க..ரொம்ப ஒல்லிப் பொண்ணு அது..

  பதிலளிநீக்கு
 19. புதிய ஐடியா தந்தவர் நீங்கதான் ஷங்கர்,
  கொ.ப.செ வா வந்துடுங்க...

  பதிலளிநீக்கு
 20. பாஸ் தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் .. என்ன மன்னிச்சு விட்டுங்க. இனி இந்த சைடு வரவே மாட்டேன்.

  பதிலளிநீக்கு
 21. Romeo,

  இருங்க...இருங்க...ஓடாதீங்க...நில்லுங்க...ஹலோ...அடுத்த பதிவு பாத்துட்டு போங்க பாஸ்...அட, கொஞ்சம் பழைய பதிவுகளாவது பாத்துட்டு முடிவு பண்ணுங்க..ஓடாதீங்க..

  பதிலளிநீக்கு
 22. ஐய்யோ ... தாங்க முடியவில்லை..
  தலை சுற்றுகிறதே...

  பதிலளிநீக்கு
 23. அய்யோ சாமி விசு ப்ளாக்கா

  ஸ்ரீராம் இருப்பாருன்னு வந்துட்டேன்

  சாரிங்க

  விஜய்

  பதிலளிநீக்கு
 24. Mrs. Faizakader,

  ரெண்டு மிளகு இருந்தா எடுத்து மெல்லவும். தலை சுத்தல் நின்னுடும்

  பதிலளிநீக்கு
 25. வாங்க விஜய்,

  தைரியமா வாங்க..ஒண்ணுமில்ல...ஒண்ணு...மில்லை...நாங்க இருக்கோம்..வாங்க..

  பதிலளிநீக்கு
 26. விருப்பங்களை விரும்புவரிடம் விருப்பமாக சொல்வதற்கும், விரும்புபவர் நம் விருப்பங்களை விருப்பமாக கேட்பதற்கும், விருப்பமான சூழ்நிலை அமையாவிடில், விருப்பங்களை கூட விரும்புபவரிடம் விருப்பமாக சொல்ல முடியாமல், நம்மை விரும்புவரும் நம் விருப்பங்களை விருப்பமாக கேட்க முடியாமல், விருப்பங்கள் எல்லாம் வீணாக போய்விடும், இல்லையா?

  எங்களை, நாங்கள் புரிஞ்சுக்காமா...!

  பதிலளிநீக்கு
 27. எனக்கு புரிஞ்சது இதுதான்......
  நான் பெயர் சொல்ல விருப்பமில்லை.
  நீங்க எதுவும் சொல்ல விருப்பமில்லை

  (சொல்ல, விருப்பம் இரண்டையும் எப்படி கோர்க்கிறேன் பாத்தீங்களா...?)

  பதிலளிநீக்கு
 28. மீனாக்ஷி,
  அபாரம்...இதை..இதைதான் எதிர்பார்த்தோம்.. புரிதலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 29. பெயர்சொல்லவிருப்பமில்லை,

  எவ்வளவு சொல்லி இருக்கோம்..எதுவும் சொல்ல விருப்பமில்லன்னு சொல்லிட்டீங்களே...

  பதிவுகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டியதுதான்...ஆனாலும் நீங்கள் நீ..ண்ட இடைவெளி விடுகிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 30. ஹேய் அவன்தானா நீ. அப்பாலிக்க வரேன். வர்ட்டா.

  பதிலளிநீக்கு
 31. இப்ப என்ன பிரச்சினை? என்ன சொ(கொ)ல்ல வரீங்க?

  பதிலளிநீக்கு
 32. அவன் நாங்க இல்லை சாய்,
  தெளிவா குழம்பிட்டீங்கன்னு தெரிஞ்சதுல ஒரு சந்தோஷம்...

  பதிலளிநீக்கு
 33. புலிகேசி,
  என்ன சொல்ல வந்தோம்னா...இருங்க முன்னாடி போய் படிச்சுட்டு வந்துடறோம்...

  பதிலளிநீக்கு
 34. //பதிவுகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டியதுதான்...ஆனாலும் நீங்கள் நீ..ண்ட இடைவெளி விடுகிறீர்கள்!
  //

  கொஞ்சம் ஆணி புடுங்கற வேலை அதிகம்........வாரத்துல ஒரு நாள்தான் கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார முடியுது....அதான்
  (நம்ம மண்டையில அவ்வளவுதான் மசாலா அப்பிடீன்னு ஒத்துக்க மனசு வர மாட்டேங்குது, இல்ல?)

  பதிலளிநீக்கு
 35. அய்யோ...அய்யோ...இண்ணைக்கு வந்தே இப்பிடி இருக்கே என்க்கு.
  நேத்து வந்தவங்களுக்கு எப்பிடி ஆயிருக்கும்.
  அதுவும் மீனு ரொம்பவே குழம்பியிருக்காங்கன்னு தெரிது.

  ஸ்ரீராம் சொல்ல வந்ததை சரியா சொல்லாம சொல்றேன் சொல்றேன்னு சொல்லாம சொல்லித் தந்தவங்களை தேடி சொல்லச் சொல்லிக் கேட்டு அவங்க சொல்லி நீங்க அதுக்கு பதில் சொல்லி அதை அப்புறம் எங்களுக்குச் சொல்லி நீங்க சொல்ல வர போதும்டா சாமி சொல்லவே வேணாம்ன்னு சொல்லாமலே போறதுக்குததானே இப்பிடிச் சொல்ல்த் தொடங்கினீங்க ஸ்ரீராம் !

  பதிலளிநீக்கு
 36. பெயர் சொல்ல விருப்பமில்லை,
  (இதை எழுதியதுமே ஒரு பதிவு எழுதிய ஃபீலிங்...)


  உங்கள் பெயரை எங்கள் காதில் மட்டும் ஒருமுறை சொல்லுங்களேன்...!

  பதிலளிநீக்கு
 37. ஹேமா,

  லேட்டா வந்ததுக்கு பெஞ்ச் மேல ஏத்தலாம்னு பார்த்தோம்..உங்க முயற்சியைப் பார்த்து நெகிழ்ந்து போய் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்

  பதிலளிநீக்கு
 38. //ஹேமா said...அதுவும் மீனு ரொம்பவே குழம்பியிருக்காங்கன்னு தெரிது.//

  ஹேமா, விசு பீல்டை விட்டு போனதுக்கு காரணமே மீனாக்ஷி தான் என்று ஊரெல்லாம் பேச்சு. அது தெரியாத உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 39. விசு போய்ட்டாரா ?அதுவும் காரணம் மீனுவா!நல்ல விஷயம் !
  அந்தச் சுவர்ல முட்டிக்கிட்டு நிக்கிறதும் அவங்கதானோ !
  ஸ்ரீராம் ஏதாச்சும் சொல்லி சமாதானபடுத்துங்க.பாவம்ல !

  பதிலளிநீக்கு
 40. ஹேமா, நானே சொல்லிட்டு நானே முட்டிப்பேனா!

  பதிலளிநீக்கு
 41. நான் என்ன சொல்ல வரேன்னா..சொல்லவா வேண்டாமா நான் சொன்ன பிறகு நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு சொன்னாதான் சொல்லுவேன் இல்லேன்னா சொல்லாமலேயே இருப்பேன் அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..அதுக்கு அப்புறமும் சொல்லு சொல்லுன்னு நின்னே இதுக்கு மேலே எதுவும் சொல்றதுக்கு இல்லை....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!