புதன், 10 பிப்ரவரி, 2010

1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும்

எல்லோருக்கும் சாப்பாடு என்பது முக்கியமான சமாச்சாரம். தஞ்சாவூர் ஜில்லா வாசிகளுக்கு வித விதமான் சமையல்களில் மிகுந்தஆர்வம் உண்டு. சமையலுக்கு உப்பு புளி பண்டங்களைத்தவிர சமையலறையும் சமையல் அடுப்பும் மிக இன்றிமையாதது. தஞ்சை வட்டாரத்து வீடுகளில் சமையல் அறை அமைப்பே அதன் முக்கியத்வத்தை தெள்ளென விளக்கும்.

1950களில்வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்ததுபொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர்மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும்தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும்பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும்அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர்காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள்காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும்வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. 

மண் அடுப்பிற்கான விறகு வாங்குவதுசேமிப்பதுஉபயோகிப்பது எல்லாமே கடினம்வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும்மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும்தேவையான அளவிற்கு வெட்டவேண்டும்எப்படி அதை உபயோகித்தோம் என்று இப்போது மலைப்பாயிருக்கு

கரி உபயோகித்து நிதானமான சூட்டில் சமையல் செய்ய குமுட்டி சிறிய அளவில் உபயோகப்பட்டதுஇது மண்ணாலோ அல்லது இரும்பினாலோ ஆனது. 

காலப் போக்கில் மண் அடுப்பு மாறி கெரஸின் ஸ்டவ் உபயோகத்திற்கு வந்தது. அதிலும் திரி ஸ்டவ் மற்றும் பம்ப் ஸ்டவ் என இரு வகை உண்டுதிரி ஸ்டவ்வில் திரி மாட்டுவது பெரிய காரியம்சரியான சைஸ் திரி பெரும்பாலும் கிடைக்காதுஅதை மாட்டுவதற்குள் கை கொப்பளித்துவிடும் பம்ப் ஸ்டவ்வில் கெரஸினும் காற்றும் சரி அளவில் பொருந்தி எரியும் வரை பகீரத ப்ரயத்தனம்தான்ஸ்டவ் உயரத்திற்கு தலையை குனிந்து கொண்டு ஸ்டவ் நாசிலை (nozzle) ப்ரத்யேகமான ஊசியால் க்ளீன் செயவது "கடினம் "என்பது மிக சுலபமான வார்த்தை.  

பின், ரோலிங் மில் உபயத்தால் எங்களூரில் உமியை கிட்டித்து மூட்டும் உமி அடுப்பு புது வரவானதுஅந்த உமி ஆணியை பாலிஷ் செய்ய உபயோகித்தபின் ரீ-சைக்ளிங்காக உபயோகமானதுஎல்லோரும் உப்யோகிக்க ஆரம்பித்தபின் டிமாண்ட் ஜாஸ்தியானதால் மில்லில் ப்ரச்னை உண்டாகி அதன் உப்யோகம் நிறுத்தப்பட்டது

அதன் பின் நெய்வேலியிலிருந்து லீக்கோ கரி அடுப்புநாகையில் கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் ஏஜன்ஸி எடுத்து மார்கட் பண்ணினார்அதன் சூடு மிக அதிகம் அதனால் பாத்திரங்களின் ஆயுள் குறைகிறது என்ற காரணத்தால்/புரளியால் அது பாப்புலராகவில்லை

காஸ் அடுப்பு எல்லாவற்றிற்கும் தீர்வாக அமைந்தது. அரசாங்க ஆதரிப்பால் மள மளவென எல்லோர் வீட்டிலும் இடம் பெற்றதுஃப்ளாட்கள் பெருகியதற்கு இதன் பங்கு மிக அதிகம். இந்தத் தலைமுறையினர் பெரும்பாலோருக்கு காஸ் அடுப்புக்கு முன் எப்படி சமைததார்கள் என்பதே தெரியாதுஅந்த காலத்திய சாதனங்களான கோடாரிஊதுகுழல்சாமணம்திரி நாடா பற்றி தெரியாதுஎலெக்ட்ரிக் அவனமைக்ரோவேவ் அவன்இண்டக்க்ஷன் ஸ்டவ் என பல மார்க்கட்டில் இப்போது வந்துவிட்டாலும் காஸ் அடுப்புதான் ராஜா.

உள்ளூரில் கிடைக்கும் மண், விறகுசுள்ளி இவை சிக்கலில்லாத எரி தேவை தீர்வுஅவசரம் என்பது இல்லாமல்உணவில் ருசிக்குசுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் தரவேண்டும்இன்றும் மண் அடுப்பில், மண் பானையில் செய்த சமையலுக்கு ருசி அதிகம் என்று சொல்லும் ஆர்வலரகள் உள்ளனர்.

நாகையில் இசக்கியாப்பிள்ளை உணவகம் மேற்கு வீதியில் இருந்தது. அதில் மண்பானை சமையல் என்றே போர்டு வைத்திருந்தார்கள். ஹோட்டல் இன்றும் இருக்கிறது. ஆனால் மண்பானை சமையல்தான் இல்லை. 
அன்புடன்
ரங்கன்

22 கருத்துகள்:

  1. //பின், ரோலிங் மில் உபயத்தால் எங்களூரில் உமியை கிட்டித்து மூட்டும் உமி அடுப்பு புது வரவானது//

    இதையே எங்கள் ஊரில் மரத் தூள் அடுப்பு என்போம். மரவாடியில் (மரங்களை அறுக்கும் தொழிற்சாலை) மரங்களை அறுக்கும் போது கொட்டும் துகள்களை சேமித்து அதை கிலோ கணக்கில் விற்பார்கள். அதை வாங்குவதற்கு ஒரு பெரிய queue - வே நிற்கும். பிறகு அந்த மர தூளை சிலிண்டர் போலுள்ள அடுப்பில் நடுவில் ஒரு சிறிய வட்டம் ஏற்படுத்தி விட்டு (குழாயோ அல்லது உருண்டையான ஒரு குச்சியோ உபயோகித்து - இந்த இடைவெளி மூலமாக தான் நெருப்பு உருவாகி மேல் உள்ள பொருளை சூடாக்கும்) மீதம் உள்ள பகுதியில் கிடிக்க வேண்டும். பிறகு நடுவில் சொருகிய விறகையோ/குழாயையோ சுற்றியுள்ள மரத்தூள் கொட்டாமல் மெதுவாக எடுக்க வேண்டும். அது ஒரு தனி கலை.

    இன்னும் நிறைய எழுதலாம் அப்புறம் பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு பதிவு போல் ஆகிவிடும்.

    பதிலளிநீக்கு
  2. எந்த அடுப்பில் சமையல் செய்தாலும் மண்பானை சமையலுக்கு ஈடு ஆகாது. கேஸ் அடுப்பு வைத்து சமைத்தால்லும் இன்னும் எங்கள் வீட்டில் மீன் குழம்பு வைப்பது மண்சட்டியில் தான்.
    உங்களின் தகவல்கள் அருமை

    பதிலளிநீக்கு
  3. மாத மாதம் எங்க அம்மா விறகு வாங்க போவார்கள். கரி அடுப்பும் பயன் படுத்துவோம். பிறகு ரேஷன் கடையில் மண்ணெணெய் வாங்கினோம். அப்புறம் கேஸ் அடுப்பு. இடைப் பட்ட காலத்தில் மின் அடுப்பு. மைக்ரோ வேவ் ஒவனுக்கு போகவில்லை. இந்த தலைமுறை பெண்கள் அதிர்ஷடசாலிகள்.

    பதிலளிநீக்கு
  4. ரோலிங் மில்லிலிருந்து வாங்கப்படுகின்ற மரத்தூள் மூட்டை, வீட்டீற்கு வந்து இறங்கியவுடன், 'எங்கள்' அண்ணன் - ஒரு காந்தம் சகிதமாக அந்த மூட்டையில் இருக்கும் மரத்தூளை உழுது, இருபது ஆணிகளாவது (பள பள என்று இருக்கும்) எடுத்து, வீட்டில் உள்ள கருவிப் பெட்டியில் சேர்ப்பார். இந்தக் காலத்தில் அந்த ஆணிகள் என்ன விலையோ - அந்த விலைதான் அப்போது ஒரு மூட்டை மரத்தூளும்.

    பதிலளிநீக்கு
  5. அஹா.. என்னையும் 20 -25 வருடங்களுக்கு முன்னால் செல்ல வைத்தீர்கள். எங்கள்(உங்களை அல்ல) வீட்டில், சமையல் அறையில் ஒரு ஓரத்தில் சுமார் 4 அடி நீளம் , 0.75 அடி அகலம் 2 அடி ஆழ குழியில் விறகு வைத்து பெரிய அளவில் சமைப்பதற்கு (விசேஷ நாட்களில்), கோட்ட அடுப்பு இருந்தது. மற்ற நாட்களில், அந்த குழியை மண் வைத்து அடைத்து விடுவோம்.

    அதுசரி.. எதுக்கு 'கௌதமன்' சார் அவர் போட்ட பதிவிற்கு அவரே பின்னூட்டமும் இடுகிறார்? அதனை, நான் பலமுறை பார்த்து வருகிறேன், 'எங்கள்' பிளாக்கில்.

    பதிலளிநீக்கு
  6. அடுப்பின் பரிணாம வளர்ச்சி நன்றாகவே இருக்கு :))

    பதிலளிநீக்கு
  7. ஆதிமனிதன் // இன்னும் நிறைய எழுதலாம் அப்புறம் பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு பதிவு போல் ஆகிவிடும்.//
    எழுதி தாராளமா அனுப்புங்க - விருந்தினர் பதிவா போட்டுருவோம்.
    நன்றி Mrs.Faizakader
    தமிழ் உதயம் கூறுவது போல இந்தத் தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். அடுப்பு அருகே இடுப்பு ஒடிய வேலை செய்ய வேண்டாம்.
    மாதவன், இந்தப் பதிவை இட்டவர் 'அன்புடன் ரங்கன்' என்று கையொப்பமிட்டிருக்கிறார் - அதை நீங்கள் பார்க்கவில்லையா? எனவே பின்னூட்டம் கௌதமன், ஸ்ரீராம், கேஜி, ராமன், காசு சோபனா - யார் வேண்டுமானாலும் எழுதலாம்!
    சைவகொத்துப்பரோட்டா - எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நம் நாடுகளில் மண்பானை,மண் அடுப்பை நாகரீக வளர்ச்சியால் ஒதுக்கி வர வெளிநாடுகளில் அதை விரும்பி அதன் பாவிப்பிலே ஒரு தாய்லாந் உணவகம் என் இடத்தில் இருக்கிறது.சாப்பாடு சாதாரணமாக இருந்தாலும் விலையோ அதிகம்.
    ஆனாலும் வெளிநாட்டவர்கள் விரும்பிப் போகிறார்கள்.

    நாங்கள் இப்படித்தான் எங்கள் நல்ல பழக்க வழ்க்கங்களை ஒதுக்க வெள்ளையர்கள் அதை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.
    இது எங்கள் சாபம்.

    பதிலளிநீக்கு
  9. // 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும்
    எங்கள் Blog இல் kggouthaman ஆல் இடுகையிடப்பட்டது – 5 மணி நேரத்திற்கு முன் //

    That's what my 'dashboard' says.. in the update section of the blogs('engalblog' here) that I follow.

    Means, Post was written by Mr. Rangan, posted by 'Gowthaman' Sir. ok.. ok.. He can comment on others' writings.

    பதிலளிநீக்கு
  10. இத எழுதப்போய்தான் வாங்கி கட்டிக்கிட்டேன்:)

    பதிலளிநீக்கு
  11. ஹேமா அவர்களின் ஆதங்கம் புரிகிறது. நல்ல பழக்க வழக்கங்களை ஒரு சமுதாயம் ஒதுக்கினாலும், வேறொரு சமுதாயம், நல்லவைகளை ஆய்ந்து ஏற்றுக் கொள்வது நல்லதுதான். பின்னொரு நாளில் அவை பிறந்த வீட்டிற்கே திரும்ப வர ஒரு வாய்ப்பு உள்ளது.

    பதிலளிநீக்கு
  12. ஐம்பதுகளில், நான் தில்லியில் முதன்முறையாக நிலக்கரி அடுப்பைபார்த்தேன். சிறிய தகரவாளியில் உட்புறம் களிமண்ணால்பூசி நடுவே சாம்பல் விழ (நமது) கரியடுப்பைப்போல இரும்பில் பில்ட்டர் இருக்கும் கீழே காற்றுப்போக ஒரு எலிப்பொந்து!

    நிலக்கரி பற்றியெரிய, ஏகப்புகையோடு சமயமும் எடுக்கும். அப்போது அதை வீட்டுக்கு வெளியே வைத்துவிடுவார்கள். அதிகாலையில் எங்கள் காலனியே புகைமூட்டத்தில் இருக்கும். எரிய ஆரம்பித்தால், பகாசுரன் மாதிரி எரியும். ரொட்டியை கரியாமல் பார்த்து சுட்டெடுக்க வேண்டும்.

    மரக்கரியை விட நிலக்கரி பத்துமடங்கு விலை குறைவு. அதன்பின்னர் தான் காஸ் ஸ்டவ் வந்தது!

    பதிலளிநீக்கு
  13. மாதவன் - இந்தக் கணக்கைப் பாருங்கள். ஐந்து ஆசிரியர்கள், ஏழு கம்பியூட்டர்கள் - மூன்று நாடுகளிலிருந்து ஆக்சஸ் - சில கம்பியூட்டர்களுக்கு - நெட் கனக்ஷன் அடிக்கடி புட்டுக்கும். சிலவற்றிற்கு மெயில் ஆக்சஸ் மட்டுமே. எங்கள் பிளாகுக்கு எழுதுகின்ற விருந்தினர்களும் மாலி, ரங்கன், வலையாபதி போன்று எவ்வளவோ பேர்கள். இவர்களிடையே - எப்பவும் நெட்டிலே வலம் வந்துகொண்டேயிருக்கும் ஓரிரு ஆசிரியர்கள் மட்டும், ஆசிரியர் குழு அப்ரூவ் செய்கின்ற பதிவுகளை, உடனே வலை ஏற்றிவிடுவர். மத்தபடி வலை ஏற்றுபவருக்கும் பதிவாசிரியருக்கும் சம்பந்தம் பல சமயங்களில் அதிகம் இருக்காது.

    பதிலளிநீக்கு
  14. வானம்பாடிகள் எழுதியிருப்பது சரியாகப் புரியவில்லை. ஏதேனும் 'சுட்டி' கொடுத்து உதவினால் நாங்களும் பாப்போமுல்ல....(எங்கெங்கே எப்பிடி எப்பிடி வீங்கியிருக்குன்னு...!!)

    பதிலளிநீக்கு
  15. பாரதி மணி சாரின் - தலைநகர் நினைவலைகளுக்கு - எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. கோட்ட அடுப்பு மற்றும் சமையல்காரர்கள் உபயோகிக்கும் அடுப்புகள் பற்றி தனி வலைபதிவு அளவிற்கு சமாசாரங்கள் இருக்கு.பின்னொரு சமயம் வாய்ப்பு கிடைத்தால் எழுதுகிறேன் . நன்றி
    அன்புடன் ரங்கன் (நாகை)

    பதிலளிநீக்கு
  17. அருமை ரங்கன் என் அம்மா மன்னார்குடியில் ரம்பத்தூள் அடுப்பு என ஒன்று வைத்து இருப்பார்கள் ..
    மலயா அடுப்பு என பட்டைதிரிப் போட்ட அடுப்பு காபிக்கு இருந்தது

    பதிலளிநீக்கு
  18. காஸ் அடுப்பு இருந்தே சமைப்பது அரிதாக நடக்கும்போது அந்தக்காலத்து சமையல் வகை என்றால், அடுப்பில் பாத்திரம் இருக்காது. என் பக்கம் திரும்பி இருக்கும் !

    ஏன் கே.ஜி. சார், உங்கள் மனைவி "எங்கள் ப்ளாக்" படிப்பதில்லையோ !

    இன்னிக்கி சாப்பாடு யார் வீட்டுக்கு போனீங்க. நீங்கள் இருப்பது பெங்களூர். ஸ்ரீராம் சென்னை ! புவ்வா ? கோவிந்தாவா !

    பதிலளிநீக்கு
  19. பதிவிட்டவரே பின்னூட்டம் எழுதலாம், தவறென்ன? அதிகப்படி தகவல் தர, சுய விமரிசனம் செய்து கொள்ள இப்படி பின்னூட்டத்துக்கு பல அவசரங்கள்.

    அடுப்பு எரிபொருள் எனும்போது இதோ ஒரு உபரி தகவல். விழுப்புரத்தில் நாங்கள் இருந்த போது இருபத்தியேழு ரூபாய்க்கு சிலிண்டர் விற்ற காலம். என் வீட்டில் காஸ் வேண்டாம் என்று விட்டு விட்டோம்!! காரணம் விசித்திரமானது. அப்போது ஆறு லிட்டர் மண்ணெண்ணெய் சுமார் பன்னிரண்டு ரூபாய். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குஜராத் சேட் வீட்டில் ஏராளமாக விறகை எரித்து, அதில் விழும் கரியை குளிர வைத்து ஒரு இருபத்து நாலு லிட்டர் டின் நிறைய இரண்டு ரூபாய்க்கு விற்பார்கள். அதை வாங்கி கரி அடுப்பில் பயன் படுத்துவோம். வாங்கிக்கோ காஸ் என்ற போது வேண்டாம் என்று ஒதுக்கி பின் காஸ் வாங்க படாத பாடு பட்டது தனிக்கதை.

    பல ஆண்டுகளுக்கு முன்னாள் தண்ணீரில் எரியும் அடுப்பு என்று பரவலாக செய்திகள் வந்தன. அதன் பின் மூச்சுப் பேச்சு இல்லை. பெட்ரோல் கொழிக்கும் நாடுகள் அதை அமுக்கி விட்டன என்று சொல்வார்கள். உண்மையாக இருக்குமோ?

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிப் பெட்டியில் கருப்பு பேப்பர் ஒட்டி கண்ணாடியால் மூடி வெயிலில் வைத்து முட்டை வேக வைத்தல், சோறு சமைத்தல் போன்ற அட்வேஞ்சர்களை செய்து பார்த்திருக்கிறோம். நாகர் கோயிலில் ஒரு பிரபல ஹோட்டல் மாடியில் சோலார் சுடு நீர் அமைப்பு வைக்கப் பட்டிருப்பதை சுவாரசியமாகப் பார்த்திருக்கிறோம். அதில் கிட்டத் தட்ட கொதி நிலையில் சுடு நீர் வருவது ஆச்சரியத்தைத் தந்தது. ராஜேஷ் கன்னா தன வீட்டில் சோலார் panel மூலமாக மின் உற்பத்தி செய்கிறார் என்று பிரபலப் படுத்தின பத்திரிகைகள். சூரிய சக்தியில் ஓடும் கார், மின்சார சேமிப்பில் இயங்கும் கார் ஆகியவை இன்னும் பிரபல மாகவில்லை. பெட்ரோல் இருப்பு வறண்டு சிங்கி அடிக்கும்போது இவை அவசியமாகி விடும். அந்த விசித்திர நாட்களைக் காண நான் உயிருடன் இருப்பேனா என்று அவ்வப் போது யோசிப்பது என் வழக்கம். பல்லாயிரக்கணக்கான நகரங்களில், பல்லாயிரக்கணக்கான சாலைகளில் பல்லாயிரக் கணக்கான கார் மற்றும் வாகனங்கள் செல்வதைப் பார்க்கும் போது இந்த பூமியின் கர்ப்பத்தில் எவ்வளவு பெட்ரோல் தான் இருக்கும் என்று ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  20. நல்லா இருக்கு இந்த பதிவு.
    எங்க அம்மா வீட்ல முதல்ல இருந்தது திரி ஸ்டவ் மற்றும் பம்ப் ஸ்டவ்தான். எனக்கு தெரிஞ்சு நான் எங்கம்மாவுக்கு உருப்படியா பண்ணி குடுத்த ஒரே வேலை திரி ஸ்டவுக்கு திரி மாத்தி குடுக்கறதுதான். மண்ணெண்ணெய்ல முக்கி முக்கி திரிய உள்ள தள்றது பெரும்பாடுதான். காஸ் அடுப்பு கொஞ்ச வருஷம் கழிச்சுதான் வாங்கினாங்க. குமுட்டி அடுப்பு மட்டும் எங்க பெரியம்மா வீட்ல பாத்திருக்கேன், அவ்வளவுதான். என் திருமணத்துக்கு பின் நான் முத முதல்ல சமைச்சது திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ் இந்த ரெண்டுலேயும்தான். எங்க அம்மாவோட எப்ப போன்ல பேசினாலும், எங்கம்மா என்கிட்டே மறக்காம முதல்ல, எப்பவும் சொன்னது இதுதான் "பம்ப் ஸ்டவ் ரொம்ப உபயோகிக்காதே, திரி ஸ்டவ்லேயே முடிஞ்ச வரைக்கும் சமை". நான் பம்ப் ஸ்டவ்ல சமைக்கறதுக்கு எங்க அம்மா அவ்வளவு பயந்தாங்க. நான் காஸ் ஸ்டவ்ல சமைக்க ஆரம்பிக்கற வரைக்கும் எங்கம்மா சரியா தூங்கி இருப்பாங்களா அப்படிங்கறதே சந்தேகம்தான்.

    பதிலளிநீக்கு
  21. //பெட்ரோல் இருப்பு வறண்டு சிங்கி அடிக்கும்போது இவை அவசியமாகி விடும். அந்த விசித்திர நாட்களைக் காண நான் உயிருடன் இருப்பேனா என்று அவ்வப் போது யோசிப்பது என் வழக்கம். பல்லாயிரக்கணக்கான நகரங்களில், பல்லாயிரக்கணக்கான சாலைகளில் பல்லாயிரக் கணக்கான கார் மற்றும் வாகனங்கள் செல்வதைப் பார்க்கும் போது இந்த பூமியின் கர்ப்பத்தில் எவ்வளவு பெட்ரோல் தான் இருக்கும் என்று ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.//

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.

    என் பெரிய பையன் சொல்லுவான், மனிதன் தனக்கு தேவை என்று வரும்போது புதிய வழியை கண்டுகொள்வான் என்று.

    நானும் அவனும் பேசும்போது அடிக்கடி சொல்லுவேன் - "உலகம் நல்லவேளை 79 சதவிகிதம் கடல் நீரால் சூழபட்டுவிட்டது, மாறி போகி இருந்தால் என்றோ பெற்றோலை உறிந்து தொலைத்திருப்போம்." அவன் அதற்கு அப்படி இருந்திருந்தால் மனிதன் வேறு ஏதாவது கண்டுபிடித்திருப்பான் என்று !! அது உண்மை தான்.

    நீங்கள் கடைசி வரி சொல்லுவதை போல், நான் அடிக்கடி நினைப்பது உண்டு. கதை எழுத கூட ஆசை. கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுத எண்ணம். சயின்ஸ் பிக்ஸன் !! கிழே உள்ளது போல். (படம் தயாரித்தால் நல்ல ஓடும். இதை பற்றி யோசிக்கும்போது - திரைக்கதை ஈசியாக வருவது போல் கதை ஓட்டம் வராததால் - கொஞ்சம் delay)

    பூமியை சுரண்டி சுரண்டி (மண், கரி, பெட்ரோல், குடி தண்ணீர் முதல் எவ்வளவு தாது பொருள்கள் - சொல்லி கொண்டே போகலாம் !!). அது ஒரு புறம் இருக்க, நமக்கு தேவை என்று பல விதமாய் "பூமியின்" எடையை ஏற்றிக்கொண்டே வருவதால்; பூமியின் சுற்று பாதை மாறலாம், பூமியை பிடித்திருக்கும் சூரியனின் ஈர்ப்பு சக்தி குறையலாம், பூமியே சூரியனை விட்டு அகலலாம், இப்படி !!

    ஐயோ நல்ல கதை கரு கொடுத்துவிட்டேனே !! இருந்தாலும் இது என்னுது !! ஜாக்கிரதை

    பதிலளிநீக்கு
  22. சுவாரஸ்யமான பல தகவல்களை பின்னூட்டமாக இட்ட தேனம்மை லக்ஷ்மணன், மீனாக்ஷி, சாய்ராம் கோபாலன் ஆகியோருக்கு எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!