புதன், 24 பிப்ரவரி, 2010

சுட்ட பழங்கள் - சுவையானவை


கல்யாண விருந்தில் நீண்ட நேரமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த Mr. X இடம் "இன்னும் எவ்வளவு நேரம் சாப்பிடுவே.." என்று அவர் நண்பர் கேட்டார்.
 
Mr X : "கல்யாண பத்திரிக்கையைப் பார்..." கல்யாணப் பத்திரிகையைக் காட்டுகிறார்.

அதில் எழுதி இருந்தது...
சாப்பாட்டு நேரம் : 12 மணி முதல் 3 மணி வரை...
================================================================ 
   அவன் : "நல்ல மொபைலா இருக்கே, எப்போ வாங்கினே.."

    இவன் : "வாங்கலை...ஓட்டப் பந்தயத்துல ஜெயிச்சது..."

    அவன் : "அட, எத்தனை பேர் கலந்துகிட்டாங்க..."

    இவன் : "மூன்று பேர்...நான், இந்த மொபைலோட சொந்தக் காரன், போலீஸ்...."
==================================================================
   உலகம் எப்போது வெறுமையாய், இருளாய் இருப்பதாய் நினைக்கிறாயோ...
   அப்போது வந்து என் கையைப் பிடித்துக் கொள்...  
நான் இருக்கிறேன்....
   கவலைப் படாதே..உன் கைப் பிடித்து நான் உன்னை நிச்சயமாய் 
   கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போவேன்...!
=================================================================
"முளைச்சு மூணு இலை கூட விடலை...அதுக்குள்ள அந்தப் பையன் இப்படிப் பண்ணிட்டானே..."

"என்ன பண்ணினான்..?"

"செடியைப் புடுங்கிட்டான்..."
=================================================================
ஜேம்ஸ் பான்ட் ஓர் இந்தியனைச் சந்திக்கிறான்...

"மை நேம் இஸ் பான்ட்....(புன்னகையுடன் தோளைக் குலுக்கி) ஜேம்ஸ் பான்ட்...உங்கள் பெயர்...?"

இந்தியன் : "ஐ ஆம் நாயுடு...
வெங்கட்ட நாயுடு..... சிவ வெங்கட்ட நாயுடு... லக்ஷ்மி நாராயண சிவ வெங்கட்ட நாயுடு......ஸ்ரீனிவாசுலு லக்ஷ்மி நாராயண சிவ வெங்கட்ட நாயுடு...சீதாராம ராஜசேகர ஸ்ரீனிவாசலு லக்ஷ்மி நாராயண சிவ வெங்கட்ட நாயுடு... அனுமந்தராய சீதா ராம ராஜா சேகர........"

ஜேம்ஸ் பான்ட் : "தெரியாம சொல்லிட்டேன்...விட்டுடுப்பா...உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்..."
==================================================================

படிக்காமலே டிகிரி வைத்திருப்பது Thermometer மட்டும்தான்

=============================================

எறும்பு நினைச்சா ஆயிரம் யானையைக் கடிக்கலாம். ஆனால் ஆயிரம் யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக்  கூட கடிக்க முடியாது.

=============================================
ப்ளேடு...

டீச்சர் : "யானை பெருசா, எறும்பு பெருசா?"

மாணவன் : "டேட் ஆஃப் பர்த் சொன்னால்தானே டீச்சர் சொல்ல முடியும்..?

==============================================
எறும்புகள் சைக்கிள் ரேஸ் நடத்திக்கொண்டிருந்தபோது குறுக்கே ஒரு யானை வந்து விட்டது...ப்ரேக் போட்ட எறும்பு கோபத்துடன்,"நீ விழுந்த சாக என் வண்டிதான் கிடைச்சுதா?"

***********************************

ஏழெட்டு எறும்புகள் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது எதிரே ஒற்றை யானை..வழி விட்டு விலகி நிற்கச் சொன்னதில் பிரச்னை ஏற்பட்டு வாய் சண்டையில் முடிந்தது. ஒரு எறும்பு மற்ற எறும்புகளிடம் சொன்னது,"விடுடா..நாம நாலு பேர்..அவன் ஒத்தை ஆளு...இது நியாயமில்லை..பிழைச்சிப் போகட்டும்...


29 கருத்துகள்:

  1. படிக்காமலேயே டிகிரி காப்பியும் தான் வைத்திருக்கிறது!

    எறும்பு ரொம்பவே பி(க)டிக்குமோ?

    :-))

    பதிலளிநீக்கு
  2. ஜோக்ஸ்லாம் சூப்பர்.. நல்லா தான் சுட்டுருக்கீங்க.. but, last ரொம்ப over.. சிரிச்சி முடியல இன்னும்..

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே சூப்பர்!

    நான் சுட்டது இது.
    எறும்பும், யானையும் கண்ணாமூச்சி ஆடும்போது, எறும்பு கோவில் உள்ள ஒளிஞ்சுண்டுதாம். யானை சரியா கண்டு பிடிச்ச உடனே, எறும்பு கேட்டுதாம், 'எப்படி கண்டுபிடிச்சேன்னு'? அதுக்கு யானை சொல்லித்தாம் 'உன்னோட செருப்பு கோவில் வாசல்ல இருந்தத பாத்துதான்னு'.

    பதிலளிநீக்கு
  5. ஜூப்பரு.

    இன்னோரு எறும்பு யான...
    எறும்புகள்லாம் குளத்துல குளிச்சிட்டு இருந்தாங்களாம். அப்போ ஒரு யான தொபக்கடிர்னு உள்ள குதிச்சிட்டாம். அப்போ ஒரு எறும்புக்கு கோவம் வந்துடுச்சாம். அது பக்கத்துல இருக்குற எறும்பப் பாத்து சொல்லிச்சாம்...
    “மச்சா, அவன கழுத்தப் புடிச்சி அப்படியே தண்ணிக்குள்ள அமுக்குடா...”

    பதிலளிநீக்கு
  6. சில சுட்ட பழம் கிளாசிக்..
    எத்தனை தடவை படிச்சாலும் சிரிப்பு வருது...

    பதிலளிநீக்கு
  7. அருமை அருமை
    அருமை அருமை
    சிரித்து வயிறு நோகிறது

    பதிலளிநீக்கு
  8. \\செடியைப் புடுங்கிட்டான்//

    Super ha ha

    பதிலளிநீக்கு
  9. உண்மையாகவே மனம் சோர்ந்த நிலைமையிலேயே வந்தேன் எங்கள் பக்கம்.கொஞ்சம் சிரிக்க வச்சீங்க ஸ்ரீராம்.

    முதலாவதும் எறும்புக் கடியும் சிரிக்க வச்சுது.

    *மீனு*வின் எறும்பும் கடிச்சிட்டுது.

    பதிலளிநீக்கு
  10. எறும்பு கடி மீனும் கடிச்சுடுச்சு...

    :)))))

    பதிலளிநீக்கு
  11. எறும்பும் யானையும் நண்பர்கள். யானையின் மேல் எறும்பு சவாரி செய்து ஆற்றை மரப்பாலம் வழியே கடந்த போது பாலம் கட கட வென்று ஆடியது. “ சே, நம் இரண்டு பேர் வெயிட் கூட தாங்காமல் இது என்ன பாலம்! “ என்று எறும்பு சலித்துக் கொண்டது.

    பதிலளிநீக்கு
  12. //எறும்பு கடி மீனும் கடிச்சுடுச்சு...//
    :))) ஹேமா எழுதினதையே அழகா திருப்பி போட்டு சூப்பரா கமெண்ட்டிடீங்க!

    பதிலளிநீக்கு
  13. எறும்ம்பு கடி வலிக்காம சிரிப்பு வருது..

    பதிலளிநீக்கு
  14. யம்மா எறும்பு கடி தாங்க முடியலம்மா ஹி ..ஹி ..ஹி

    பதிலளிநீக்கு
  15. சுட்டது பயங்கரமா கடிக்குது.

    நானும் சுட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
  16. //"மை நேம் இஸ் பான்ட்...." //

    செம காமெடி. சிரிப்பை அடக்க முடியல.

    பதிலளிநீக்கு
  17. எறும்பு நல்லா கடித்து விட்டது

    பதிலளிநீக்கு
  18. நல்ல கடி ஜோக் கௌதமன் அதுவும் எறும்பு பண்ணுற அழும்பு எல்லாமே சூப்பர்

    பதிலளிநீக்கு
  19. //*மீனு*வின் எறும்பும் கடிச்சிட்டுது.//

    படம் "காதலிக்க நேரமில்லை"

    காட்சி: நடிகர் "நாகேஷ்" நடிகை "சச்சு"வுக்கு காதல் காட்சி சொல்லிக்கொடுத்து நடிக்க வைத்துக்கொண்டு இருப்பார் - படத்தின் கதை, வசனகர்த்தா டைரக்டர் என்ற முறையில் !

    அந்த வழியாக வந்த நாகேஷின் அப்பா "பாலையா" நாகேஷிடம் யாரு இந்த குட்டி என்ற கேட்டவுடன் நாகேஷ் "அப்பா, மீனா அப்பா" என்பார்

    உடனே பாலையா "மீனாவது கருவாடாவது" என்று சொல்லியது நினைவுக்கு வருகின்றது !

    பதிலளிநீக்கு
  20. சிங்கத்தான்டயே யானக்கதையா?

    ஹி.... ஹி.......

    பதிலளிநீக்கு
  21. UNGA ALUMBUKKU ALAVAE ILLA MRS................................ UNGA JOKES ELLAM MEGA KADI'S

    பதிலளிநீக்கு
  22. சுட்ட பழங்களின் சூடு தாங்கமுடியவில்லை! அபாரம்! உங்கள் சேவை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  23. சுட்ட பழங்களின் சூடு தாங இயலவில்லை. உங்களின் சேவை தேவை இக்கணம்.தொடர்க, வளர்க.

    பதிலளிநீக்கு
  24. முரட்டு சிங்கம், போகி (மீனிங் அன்
    ஈவில் ஸ்பிரிட்) ஐயோ ஒவ்வொன்றும் படிக்க பயமா இருக்கு.
    மல்லிகை என்று படித்து மனம் ஆறுதல் அடைந்தாலும், சந்திரமுகியில் ரஜினி சொல்லுகின்ற மல்லிகை மணமோ என்ற பயம் வேறு! ரசிகர்களே - எங்களை பயமுறுத்தாதீர்கள். !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!