திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஆத்மா
சின்ன(ஞ்)சிறுகதை முயற்சி...

வேறு வீடு பார்க்க வேண்டியதுதான்...ரொம்பவே ஆட்டம் கண்டு விட்டது இந்த வீடு...எவ்வளவு வருடம் இருக்கும் இந்த வீடு வந்து..

முதலில் நன்றாகதான் இருந்தது. வந்த புதிதில் எல்லாமே புதுசாக இருந்தன. தவழ்ந்து, புரண்டு விளையாடி, விழுந்து, எழுந்து, பேசிப் பழகி, எத்தனை எத்தனை அனுபவங்கள்...
பள்ளி செல்ல ஆரம்பித்து, கல்லூரி முடித்து, கல்யாணம் பண்ணி, குழந்தைகளும் வந்தாயிற்று...

வருடங்கள் ஓடி விட்டனதான்...
முன்னரே கூட சில முறை காலி செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் நேர்ந்ததுண்டு..ஏதோ சில காரணங்கள், வேறு சிலரின் தலையீடு காரணமாக அவை தள்ளிப் போயின...எனக்கு விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை தர்மதுரை கட்டளை.. வீடு காலியாகாமல் டாக்டர் சுரேஷ் ரொம்பவே உதவினார் அப்போது.

பொதுவாக குடியிருக்கும் வீட்டின் மீது பற்று வைப்பவன் அல்ல நான். இதைக் காலி செய்தால் வேறொரு வீடு. ஆனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்க முடிவதில்லை. சொந்தமாக வீடுவைத்துக் கொள்ளவே முடியாது எதுவும் நிரந்தரமல்ல என்பது எனக்குத் தெரியும். எல்லாமே கொஞ்ச நாள்தான்...

புது வீட்டை நான் அனுபவிக்க முடியும். வீட்டுக்குத் தெரியுமா நான் ஏற்கெனவே பல வீடுகளில் குடியிருந்தவன் என்று..என்ன பற்று வேண்டி கிடக்கிறது இதில் எல்லாம்...

இப்போது என் விருப்பத்தில் அல்ல..எனக்குதான் விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாதே...வீடு விழும் நிலையில் இருப்பதால் மாற வேண்டிய சூழ்நிலை. கூரை முதல் தரை வரை இப்போது ஏகப் பட்ட ஓட்டைகள். போதாக் குறைக்கு நடு ஹாலில் கரையான் வேற...சுத்தம் செய்ய செய்ய மீண்டும் எப்படியோ வந்து விடுகிறது. எவ்வளவு நாள் சமாளிப்பார்கள் அவர்களும்...இல்லாவிட்டால்தான் என்ன இதற்கும் வயது என்று ஒன்று உண்டல்லவா...அதுதான் மாற வேண்டிய நாள் அருகில்...மாறலாம். பக்கத்து வீட்டுக் காரர்களுடன் ரொம்பப் பழகி விட்டதால் நான் காலி செய்த பிறகு காலி வீட்டைப் பார்த்து அவர்கள் ரொம்ப வருத்தப் படுவார்கள். எதிர் வீட்டுக் காரர்கள் சந்தோஷப் படலாம்...சிலர் இப்படி என்றால் சிலர் அபபடி..வெறுப்போ, வருத்தமோ என்ன, எல்லாம் கொஞ்ச நாள்தான்..அப்புறம் மறந்து விடுவார்கள். வருத்தப் படுவதும், சந்தோஷப் படுவதும் இந்த வீட்டுக் காரர்களுக்கு பிடித்த விளையாட்டாக இருக்கலாம்..எனக்கென்ன வந்தது..என்னை எதுவும் பாதிப்பதில்லை...
நான் போன பிறகு இந்த வீடு மண்ணோடு மண்ணாக ஆகிவிடும்...

அப்ப்புறம் சில நாட்களில் புது வீடு, புது உறவுகள், நட்புகள்...அங்கு கொஞ்ச நாள் ஓட்டலாம்..அப்புறம்...

எனக்குத் தெரிகிறது...எதுவுமே நிரந்தரம் இல்லை

29 கருத்துகள்:

 1. சபாஷ்!

  கொஞ்சம் உள்ளேயிருந்து வருகிற குரலாக ஒலிப்பது நன்றாக இருக்கிறது!

  இங்கே பேசப்படுகிற வீட்டுக்கு, இன்னொரு வடிவம் கூட உண்டே தெரியுமா?

  சட்டை என்று சொல்வார்கள்!

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டைக் குறும்பன்8 பிப்ரவரி, 2010 அன்று பிற்பகல் 1:21

  ஆ! ஐயோ! - என்னங்க இது? பேய் படம் எல்லாம் போட்டு பயமுறுத்துறீங்க!

  பதிலளிநீக்கு
 3. மிக அருமை அண்ணாமலையான் சொன்னதை வழி மொழிகிறேன் ராம்

  பதிலளிநீக்கு
 4. //எதுவும் நிரந்தரமல்ல என்பது எனக்குத் தெரியும். எல்லாமே கொஞ்ச நாள்தான்..// ஆம்.. எல்லாமே கொஞ்ச நாள் தானே

  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டைக் குறும்பன்8 பிப்ரவரி, 2010 அன்று பிற்பகல் 4:27

  மரத்தில் (வலது புற ) நடுவில் ஒரு அம்மாவும், ஒரு பையனும் நின்று பேசிக்கொள்வதுபோல படத்தில் காணப் படுகிறதே - அவைகள் கூட பேய் உருவங்கள்தாமோ?

  பதிலளிநீக்கு
 6. என்னாதிது நின்னு வீடு கட்டி அடிப்பீங்க போல..:))

  அருமை கலக்குங்க..:)

  பதிலளிநீக்கு
 7. சூர்யா கண்ணன் - சிறிய சந்தேகம் - நிஜமாவே நீங்க அவ்வளவு வலைப்பதிவுகள் பின் தொடர்கிறீர்களா? நீங்கள் தொடரும் பதிவுகளில் 'எங்கள்' தவிர மீதி எல்லாமே இருக்கும்போல தோணுதே !!

  பதிலளிநீக்கு
 8. எனக்குத் தெரிகிறது...எதுவுமே நிரந்தரம் இல்லை
  உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீராம்

  இதானே வேணாம் ? ஏற்கனவே பெண்டாட்டி என்னை பேய் மாதிரி தான் பார்கின்றாள் - நீங்க வேற !

  காலாங்காத்தாலே பெண்டாட்டி "நீங்கள் சாய்ராமா இல்லே ஆத்மாவா, நீங்கள் போனபின் சாய் என்னாகும் !" அப்படி இப்படின்னு பயமுடுத்துற நிலைக்கா எழுதுவது !!

  பதிலளிநீக்கு
 10. நிரந்தரமில்லாமைப் பற்றி அழகா சொல்லிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 11. நன்றி கிருஷ் சார்,

  ஏழாவது எட்டாவது படிக்கும்போது இந்த சட்டை உவமையை வைத்து ஒரு சிறுகதை எழுதி நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் போட்டது நினைவு வருகிறது

  பதிலளிநீக்கு
 12. நன்றி சைவகொத்துபரோட்டா

  ==================

  கி.குறும்பன்,
  அது பேய் இல்லைங்க..

  பதிலளிநீக்கு
 13. ஆமோதிப்புக்கு நன்றி அண்ணாமலையான்..

  =======================

  தேனு மேடம்,

  வழிமொழிதலுக்கு நன்றி நவில்கிறோம்...

  பதிலளிநீக்கு
 14. நன்றி சரவணகுமார்..

  ===================

  நன்றி பல்சுவைவித்தகர் Mrs Faizakader...

  பதிலளிநீக்கு
 15. நன்றி Romeo,

  ===============

  நன்றி ஷங்கர்,
  ரசித்தீர்கள் என்றால் சந்தோஷம்

  பதிலளிநீக்கு
 16. நன்றி தமிழ் உதயம்,

  =========================

  சிரித்து விட்டோம் சாய்,
  அந்த அளவு போய் விட்டதா? ரசனைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 17. மிக்க நன்றி புலிகேசி,

  சமீப காலங்களில் உங்கள் பதிவுகளில் சமூக அக்கறையுடைய பதிவுகள் நிறைய எழுதுகிறீர்கள்..கவிதையும் கலக்குகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 18. என்னங்க இது! ஆன்மா, ஆத்மா அப்பிடின்னாலே எல்லாரும் இப்படிதான் படம் போடறாங்கன்னா, நீங்களுமா! பயமா இருக்குங்க!

  சரிதான், எதுவுமே நிரந்தம் இல்லை, நினைவுகளை தவிர!
  சுவாரசியமான பதிவு!

  பதிலளிநீக்கு
 19. //சாய்ராம் கோபாலன் ...
  ஸ்ரீராம்

  இதானே வேணாம் ? ஏற்கனவே பெண்டாட்டி என்னை பேய் மாதிரி தான் பார்கின்றாள் - நீங்க வேற !//

  கொஞ்சம் கொஞ்சமா ரகசியம் எல்லாம் வெளில வருது.
  ஸ்ரீராம் ,கிருஷ்ண்ணா சார்,அப்பா சார் எல்லார் நிலைமையும் என்னவோ !

  சரி....விடுங்க எதுதான் நிரந்தரம் !மாயையாய் உலவும் பேய்கள்தான் எல்லோருமே !

  பதிலளிநீக்கு
 20. வசந்த்,

  இங்கயும் இருவரிக் கதையா?

  ============

  நன்றி மீனாக்ஷி,

  ==============

  ஹேமா,

  ஆத்மா விசாரணையா?

  பதிலளிநீக்கு
 21. That Ghost image.. :) A good trick to draw reader's attention... :)

  Liked the way in which the message was delivered..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!