புதன், 3 பிப்ரவரி, 2010

எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...


எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மாதிரி யோசித்தாலோ, ஒரே மாதிரி அணுகினாலோ தீர்வுகள் கிடைப்பதில்லை. அந்த விஷயத்தை விட்டு விட்டு வேற ஏதாவது யோசித்துப் பாருங்கள்.முன்னதற்கு தேடிய விடை 'சட்'டெனக் கிடைக்கும்.இதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
மாத்தி யோசிக்கறது (Lateral Thinking) என்பது இதுதான். இன்னொரு உதாரணம் ஒரு பொருளைத் தொலைத்து விட்டு விழுந்து விழுந்து தேடுவோம். கிடைக்காது. ஆனால் அதே சமயம் எப்போதோ காணாமல் போன பல பொருட்கள் கிடைக்கும்! (அட! இப்போது இதெல்லாம் கிடைத்ததே' என்ற சந்தோஷத்துக்கு பதில் ஆத்திரம் வரும்...!) அதே போல தேடிக் கிடைக்காத பொருளை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை தொடங்குங்கள்..
ஒன்று தேடிய பொருள் கிடைக்காத டென்ஷன் குறையும்..இரண்டு, தொலைத்த பொருளை வைத்த இடம் மனதில் நினைவு வந்து விடும்...இந்த மாத்தி யோசிக்கற பயிற்சிக்காக அங்கங்கே கேள்விப் பட்ட & கிடைத்த இந்தக் கேள்விகளைப் பாருங்கள்..சிந்தியுங்கள்...விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்..கிடைத்தால் பதியுங்கள்..
(கிடைக்காவிட்டால்...? அட என்னங்க இது! நம்ம தொண்ணூறு ரசிகர்களில் எட்டு கேள்விகளுக்கு சுட்டோ சுடாமலோ பதில் சொல்கிறவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா என்ன?)

1. மிக உயரமான கட்டிடத்தின் மே...ல் தளத்தில் குடியிருந்த ஒருவன் தினமும் லிஃப்டில் கீழ் தளம் வரை வருவான். வீடு திரும்புகையில் பாதி வழி மட்டும் லிஃப்டில் ஏறி மீதி நடந்தே ஏறுவான்...மழை நாட்கள் தவிர...

2. ஒரு மனிதனும் அவன் மகனும் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கி அந்த மனிதன் அந்த இடத்திலேயே உயிரிழக்க, ஆஸ்பத்திரி கொண்டு செல்லப் பட்ட குழந்தையை கவனிக்க வந்த சர்ஜன் என்னால் சிகிச்சை அளிக்க முடியாது..இவன் என் மகன் என்கிறார்...எப்படி?

3. 'பாரு'க்குள் நுழைந்த மனிதன் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்க, 'பார்மேன்' துப்பாக்கியை எடுத்து இவன் முகம் முன் காட்டுகிறான். இவன் "நன்றி" என்று சொல்லி வெளியேறுகிறான்...ஏன்?

4. அந்த வீட்டுக்கு நான்கு சுவர்கள்...நான்கும் தெற்கு நோக்கி இருக்கின்றன. நான்கு சுவர்களிலும் நான்கு ஜன்னல்கள். ஒரு ஜன்னல் அருகே ஒரு கரடி ஒன்று கடக்கிறது.. அதன் நிறம் என்ன?

5. மேலும் கீழும் போகும் ஆனால் நகராது...அது....எது?

6. திங்கள், புதன், வெள்ளி சொல்லாமல் மூன்று நாட்களைத் தொடர்ந்து சொல்ல முடியுமா?

7. மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரனுக்கு மூன்று வாய்ப்பு. முதலாவது அறைக்குள் பயங்கரத் தீ, இரண்டாவது அறைக்குள் சுட்டுக் கொல்ல, துப்பாக்கியுடன் ஏகப் பட்ட ஆட்கள், மூன்றாவது அறையில் மூன்று வருடங்களாக பட்டினி போடப் பட்டிருக்கும் சிங்கங்கள்... எது நல்லது?

8. கணவனைச் சுட்ட ஒரு பெண்மணி பத்து நிமிடம் அவனைத் தண்ணீரில் ஊறவைத்தவள், அரை மணி நேரம் தொங்க விடுகிறாள். ஆனால் அரை மணி நேரம் கழித்து உற்சாகமாக பார்டிக்கு கணவனுடன் சந்தோஷமாகச செல்கிறாள்...எப்படி? 


35 கருத்துகள்:

 1. //"எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்..."//

  அப்படியெல்லாம் சொல்லக் கூடாது:)! பதில்களை அடுத்த பதிவில் தருவோம்னும் சொல்லுங்க. மாற்றி யோசிக்கிறேன். விடை சரியான்னு வந்து பார்த்துக்கறேன்:)!

  பதிலளிநீக்கு
 2. ராமலக்ஷ்மி மேடம் - பதில் யோசித்துச் சொல்பவர்கள் - இங்கே பதியும்பொழுது - சரியான பதிலை - நாங்க கண்டுபிடிச்சிடுவோம்!

  பதிலளிநீக்கு
 3. நா ஸ்கூல்ல sir கேள்வி கேட்டாலே பதில் ஒழுங்கா சொல்ல மாட்டேன். நீங்க கேட்டா மட்டும் சொல்லிடுவேனா.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்:

  1. கீழே உள்ள பாதி தலங்கலுக்கு மட்டும் லிஃப்ட் இருக்கு, மேலே உள்ள பாதி தலங்கலுக்கு லிஃப்ட் இல்லை.

  4. வெல்லை (நமக்கு தோன்ற color'அ சொல்ல வேன்டியது தான்), தப்பா இருன்ந்தா என்ன கலர்னு நீங்க சொல்லுங்க பாக்கலாம்.

  5. விலை. (Price)

  6. "சனி, ஞாயிறு, செவ்வாய்" என்று நிருத்தாமல், தொடர்ந்து சொல்லவும்

  7. எந்த அறைக்கு போனாலும் நல்லது தான். (கொலைகாரன் இறன்ந்தால் நல்லதுதானே.

  8. இன்னோறு (இரன்டாவது) கனவனுடன் செல்வால்

  பதிலளிநீக்கு
 5. அரசு பதில்கள் மழலை மொழியாக உள்ளது. எங்களின் இந்தப் பதிவிட்ட ஆசிரியர் அவசர அலுவல் காரணமாக அச்சரப்பாக்கம் வரை சென்றிருப்பதால், அவர் திரும்ப வந்தவுடன், அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கூறுவார் (என நம்புகிறோம்)

  பதிலளிநீக்கு
 6. 2. //ஒரு மனிதனும் அவன் மகனும்//
  இந்த இடத்தில் "அவன்" என்பது சர்ஜன்-ஐ குறிக்கிறது.

  5. Lift

  7. சிங்கங்கள் இருக்கும் அறை.

  8. அவள் சுட்டது அவன் சட்டையை, அயர்ன் பாக்ஸ் வைத்துதானே.

  சரியா எனது விடைகள். சரின்னு சொன்னீங்கன்னா கொத்துபரோட்டா சாப்பிடலாம், சொந்த செலவில :))

  பதிலளிநீக்கு
 7. அரசுவுக்கு ஒருவிடை சரி என்பதால் நூறு மதிப்பெண்களும், முதல் பதிலை முயற்சித்தவர் என்பதால் கூட ஐம்பது மதிப்பெண்களும், ஆகக் கூடி நூற்றைம்பது மதிப்பெண்கள் தரலாம். ஆனால் நிறம் மட்டும் முக்கியம் அல்ல...காரணம்..காரணம்...

  =========================

  சைவகொத்துபரோட்டா,

  ஒரு விடை சரி(7) என்பதால் நூறு மதிப்பெண் தரலாம்தான்.. ஆனால் எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்பதும் சொல்ல வேண்டுமே...

  பதிலளிநீக்கு
 8. //எங்கள் said...
  அரசுவுக்கு ஒருவிடை சரி என்பதால் நூறு மதிப்பெண்களும், //

  நன்றி.

  எந்த விடை சரி?

  பதிலளிநீக்கு
 9. லிப்ட் புதிர், தொடர்ந்து மூன்று நாள் புதிர் விடுவிக்கப் பட்டு விட்டன.

  கரடி புதிர் பாதி விடுவிக்கப் பட்டு விட்டது. எல்லா சுவரும் தெற்கு நோக்கி என்பதால் அது வட துருவம் போலார் கரடி வெண்ணிறம்.

  சர்ஜன் புதிரில் சர்ஜன் பையனின் அம்மா. இறந்தது பையனின் அப்பா.
  மரண தண்டனை புதிரில் மூன்று ஆண்டுகள் பட்டினி கிடந்த சிங்கங்களுக்கு உயிர் இருக்காது. எனவே...

  கணவனை சுட்ட பெண்மணி அவனது சட்டைக்கு இஸ்திரி போடும் பொது சுட்டுவிட்டாள். எனவே தண்ணீரில் கையை (?) ஊற வைத்தாள். அவள் தொங்க விட்டது கணவனை அல்ல, அவனது சட்டையை.

  பார், ஒரு கிளாஸ் தண்ணீர், முற்றிலும் புரியாத புதிர்.

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீராம் சார்..
  என்னது கேள்வி கேட்டு மார்க் போடுவீங்களா? ரைட்டு, போய்ட்டு அப்புறம் வர்றேன்.

  பதிலளிநீக்கு
 11. 1. அவன் குள்ளமானவன். மழை நாளில் குடை இருப்பதால், மேலே செல்ல லிப்ட் பொத்தான் உபயோகபடுத்துவான்
  2. அம்மா(விடை சொல்லியாச்சி)
  3. விக்கல்
  4. வெள்ளை(விடை சொல்லியாச்சி)
  7. மூன்றாவது ரூம் (விடை சொல்லியாச்சி)

  பதிலளிநீக்கு
 12. 1) short person.. only few buttons(lower potion) are reachable to him.
  (Advice for him.. Take umberalla with you..)

  2) Dr. is Mother of the boy

  3) to stop the 'vikkal' (hickup)

  4) White (polar bear)

  5) glass windows in some busses too..!

  6) Sunday, Tuesday, Thursday

  7) Lion might be died.. of fasting.


  Advice, to 'engal' You should have enabled moderation.. so that we get to post our answers, without the answers leacked..

  Remember My post ..http://madhavan73.blogspot.com/2010/01/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 13. என்னாதிது இத்தன பேர் போட்டி போட்டுட்டு பதில் சொல்றாங்க? சரி நாம வேடிக்கை பாப்போம்..

  பதிலளிநீக்கு
 14. முதலில் அடியேனின் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி.

  கதை எழுதின கதையே இத்தனை சுவாரஸ்யமாக இருந்தால், கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லாதது.

  சந்தடி சாக்கில் என் காலை லைட்டாக வாரி இருக்கிறீர்கள். என்னை ஏணியில் ஏற்றி விட்டவர் எகிறி ஒரு குட்டுக் குட்டினால் குறைந்து போக மாட்டேன். மேலும் அது மோதிரக் கை வேறு!

  அடுத்த ஆளை அழைத்திருக்கலாமே?

  உங்கள் சார்பில், வளர்ந்து வரும் இன்னொரு ப்ளாக்கான எங்கள் ப்ளாக் காரர்களை அவர்களின் எழுத்துலகப் பிரவேசம் குறித்து எழுதித் தொடரச் சொல்வோமா?

  http://kgjawarlal.wordpress.com


  மேலே இருப்பது ந்சொக்கன்.வோர்ட்ப்றேச்ஸ்.கம இல் நான் எழுதியிருக்கும் காமென்ட். டாக்டர் சுரேஷ் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி, சொக்கனை அழைத்திருந்தேன். இப்போது அவர் சார்பில் உங்களை அழைக்கிறேன். உங்கள் எழுத்துலகப் பிரவேசம் பற்றி எழுதி விட்டு அடுத்த ஆளை தொடர அழையுங்கள்.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 15. Sorry, nchokkan.wordpress.com has not come out properly. visit, read it and continue.

  பதிலளிநீக்கு
 16. I misunderstood Q6 & answered wrongely.

  The right answer is
  'Yesterday, Today, Tomorrow'


  I realised just now.

  பதிலளிநீக்கு
 17. 8) சுடப்பட்ட கணவன்
  மற்ற எவருக்காவது கணவனாக இருக்கலாம்.. ஆனாலும், என் அவனை தண்ணியில் நனைத்து உலர்த்தி.. மேலும் கொலை செய்துவிட்டு எப்படி சந்தோசமாகவெளியே செல்வது... இடுக்குதே..
  -- இப்படி யோசிப்பதைத்தான் 'சாதரணமான யோசனை' எனவும்.. .. (குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு யோசிப்பது.. )

  ( ?????????????????????? ) இப்படி யோசிப்பதை lateral thinking என்றும் சொல்லுவாகள்...
  ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லையே..!

  I haven't give up.. let me try..

  பதிலளிநீக்கு
 18. ஓஹோ அதான் "மாத்தி யோசி மாத்தி யோசின்னு" பாட்டு வந்ததா ! பலே பலே

  Some are very old. Am trying few that I remember

  1. He was short and could not reach the top most button but had umbrella on rainy days
  3. The guy had hiccups. (Anything to do with Bar, ask me !!!)
  3. Surgeon was the kids mother and father died !!
  4. என்னை மாதிரி கருப்பு !
  6. இரண்டு சனி ஒரு ஞாயிறு !! அல்லது ஒரு சனி இரண்டு ஞாயிறு !! இது எப்படி இருக்கு !

  ஸ்ரீராம் அண்ணே நான் நெட்டில் சுடலை. சொந்த மூளை ஹுக்கும் !!

  பதிலளிநீக்கு
 19. முதல் கேள்விக்கு விடை சரியா தெரியலை நான் நினைக்கிறேன் மழை வர்றப்போ எதும் ஸ்பெசலா எடுத்துட்டு போவாரோ?

  ரெண்டாவது கேள்வி சர்ஜன் ஆணா பெண்ணானு சொல்லுங்க நான் சொல்றேன்

  மூணாவது தெரியலை

  நாலாவது கரடி எந்த சுவத்துபக்கம் போனாலும் கருப்புதானே இல்ல சுவத்துப்பக்கம் போனதும் மாறுறதுக்கு வேற எதும் மந்திரம் இருக்கா?
  நாலு சுவரும் ஒரே திசையில இருந்தா அது வீடா? பொதுச்சுவரு ஆமா......

  அஞ்சும் தெரில ஒருவேலை லிஃப்டா இருக்குமோ?

  ஆறாவது சண்டே,மண்டே,ட்யூஸ்டே அடிக்க கூடாது சரியான்னு சொல்லுங்க

  ஏழாவது பட்டினி போட்ருக்க சிங்கங்கள் உசிரோட இருக்குமா?

  எட்டாவது கணவனை எதுல சுட்டாங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்...

  பதிலளிநீக்கு
 20. நாங்களும் கேக்குற ரகம்தான்..பதில் எல்லாம் சொல்லத் தெரியாது

  பதிலளிநீக்கு
 21. புலவர் புலிகேசி அவர்கள் கூறியதையே நானும் வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 22. பிரியமுடன் வசந்த் said ..
  // எட்டாவது கணவனை எதுல சுட்டாங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்...//

  ஏழு கணவர்களை எதனால் சுட்டாங்களோ - அதுலயே இருக்குமோ ??

  பதிலளிநீக்கு
 23. சரவணகுமார் - கிள்ளிவளவனைப் பாருங்க - ஜகா வாங்காம என்ன அழகா பதில் சொல்லியிருக்கார்னு!

  பதிலளிநீக்கு
 24. மாதவன் - கடைசியா என்ன சொல்றீங்க / சொல்லப் போறீங்க? நாங்க நல்லா குழம்பிட்டோம்.

  பதிலளிநீக்கு
 25. சாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி. அஞ்சுக்கு மூன்று பழுதில்லை.

  பதிலளிநீக்கு
 26. அனானி பதிலில் சுட்ட விடை தவறு.

  பதிலளிநீக்கு
 27. // எங்கள் said...

  மாதவன் - கடைசியா என்ன சொல்றீங்க / சொல்லப் போறீங்க? நாங்க நல்லா குழம்பிட்டோம்.//

  //Maddy said...
  1) short person.. only few buttons(lower potion) are reachable to him.
  (Advice for him.. Take umberalla with you..)

  2) Dr. is Mother of the boy

  3) to stop the 'vikkal' (hickup)

  4) White (polar bear)

  5) glass windows in some busses too..!

  6) Sunday, Tuesday, Thursday
  (reposted the answers as 'Yesterday, Today & Tomorrow' )

  7) Lion might be died.. of fasting. //


  ----------

  'engal' please respond for the above answers first..

  I understand you got confused by my statement for 8th Q.. but till 7th, u have not said (appreciated) anything for my (right) answers.. (he .. he.. he...)

  பதிலளிநீக்கு
 28. விடைத் தாளில் ஒன்றும் எழுதாமல் கொடுத்த
  ராமலக்ஷ்மி,
  தமிழ் உதயம்,
  சரவணக்குமார்,
  அண்ணாமலையான்,
  பின்னோக்கி,
  புலவன் புலிகேசி
  மீனாக்ஷி
  எல்லோருக்கும் - நீட்னஸ் மார்க் உண்டா என்று யோசனை செய்துகொண்டிருக்கிறோம்!
  ஜவஹருக்கு எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. மாதவன் - உங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஐநூறு பாயிண்டுகளும், அதிக கமெண்ட் இந்த போஸ்டுக்குப் போட்டவர் என்பதால் ஒரு ஐநூறும் ஆக மொத்தம் ஆயிரம் பாயிண்டுகள். எங்கே சிரிங்க!

  பதிலளிநீக்கு
 30. //எங்கள் said...
  சாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி. அஞ்சுக்கு மூன்று பழுதில்லை.//

  நல்ல வேளை, நடிகர் பாலையா "பாமா விஜயம்" படத்தில் பெஞ்சு மேல் நாகேஷை நிற்க சொன்னமாதிரி சொல்லாமல் இருந்தால் போதும் !!

  பதிலளிநீக்கு
 31. Wife shot [a picture of] the husband, developed the film for 10 minutes and allowed it to hang dry for 30 min and had her husband in tact for going out

  பதிலளிநீக்கு
 32. ஸ்ரீராம் கேள்வி கேட்டீங்கள்ள, கொஞ்சம் நம்ம ப்ளாக் பக்கம் வறர்து ?

  உங்களுக்காக ஒரு கேள்வி தயார் பண்ணி வைச்சிருக்கேன் !

  எனக்கும் கேள்வி தான் கேட்க தெரியும் ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!