திங்கள், 1 பிப்ரவரி, 2010

இதுதான் நமக்குத் தெரியுமே!

RBC 20 நொடியில் உலகை..சீ...உடலை ஒரு முழு ரவுண்ட் அடித்து விடும்
அந்த நேரத்துல மாமூல் ஏதானும் வசூல் பண்ணுமா?

முப்பத்திரண்டு பல்லையும் உடைச்சிடுவேன்னு நாய் கிட்ட சொல்ல முடியாது ஏன்னா அதுக்கு நாற்பத்திரண்டு பற்கள்.
நாயினுடைய ஒரு பல்லைக் கூட நம்பளால உடைக்க முடியாது. அதுக்குள்ள அது நம்மைக் கடிச்சிடுமே!

மனிதனைத் தவிர ப்ரோஸ்ட்ரெட்  இருக்கற ஒரே உயிரினம் நாய்
மனிதனிடம் இல்லாத நன்றியுணர்ச்சி கூடத்தான் நாயிடம் இருக்கு.

லிபர்டி சிலையின் ஆள்காட்டி விரல் எட்டு அடி நீளம்.
ஒரு முழம் பூ வாங்கினா கூட அதை லிபர்டி கையாலத்தான் வாங்கணும்னு நான் சொல்றேன்!

ஒரு எழுபத்தைந்து வயது மனிதன் சுமார் இருபத்து மூன்று வருடம் தூக்கத்தில் கழித்திருப்பான்.
அப்படியா? இப்பிடி சொன்னா எங்களுக்கு என்ன தெரியும்? அவரோட பேரு, ஊரு எல்லாம் சொல்லுங்க.

கொசுக்கள் நீல நிறத்தால் மிகக் கவரப் படுகின்றன.
ச்சீ - கொசுக்களுமா ?

கங்காருவால் பின்னால் நடக்க முடியாது.
யாரு பின்னால?

பில் கிளிண்டன் தன் ஜனாதிபதி பதவி காலத்தில் இரண்டே இரண்டு ஈ மெயில்தான் அனுப்பி இருக்கிறாராம்.
ஆமாம் - அவரு தன்னுடைய காரியதரிசிகூட எப்பவுமே பிசியா இருந்தார்னு சொன்னாங்க.

அக்டோபசுக்கு மூன்று இதயங்கள்.
அப்போ ஆக்டபஸ் வெச்சி தமிழ் சினிமா எடுத்தா முக்கோணக் காதல், இல்லை - நாற்கோணக்  காதல் என்று நவகோணக் காதல் வரை எடுக்கலாம்.

Sperm Whales என்ற ஒருவகைத் திமிங்கிலத்துக்குதான் பெரிய மூளை. 20lb.
எடை அதிகமிருந்து என்னங்க பிரயோஜனம்? சுவை எப்பிடி இருக்கும் என்று கேட்கிறார் - ஒரு அசைவப் பிரியர்.


Tiger Shark என்ற சுறா வகை தாயின் கருவில் முட்டையாக இருக்கும்போதே ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டு அழித்துக் கொள்ளும். மிஞ்சுவதுதான் பிறக்கும்.
பிறந்தபின் இரண்டிரண்டாகச் சேர்ந்து - இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுமோ? 

Blue Whale திமிங்கிலத்தின் நாக்கு ஒரு யானையை விட எடை கூடியது.
அடேங்கப்பா - படிக்கும்போதே நாக்குத் தள்ளுது, கண்ணைக் கட்டுதே!

மூங்கில் இருபத்துநாலு மணி நேரத்தில் மூன்று அடி வளரும்.
எங்கள் பள்ளி ஆசிரியர் கையில் உள்ள மூங்கில் குச்சி ஒரு மணி நேரத்தில் இருபத்து நாலு அடி போடும்.

உலகின் மிகப் புகழ் பெற்ற செவிலி Florence Nightingale தன் வாழ்வில் மொத்தம் மூன்று வருடங்கள் மட்டுமே நர்சாக இருந்திருக்கிறார்.
நம்ம ஊருல - ரொம்பப் பேருங்க செவிலித் தகுதி கூட இல்லாமல் டாக்டர் ஆயிடுராங்களே. இதுக்கு அது எவ்வளவோ மேல்.  




15 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் அத்தனை விஷயங்களும் புதிது.அதற்கு நீங்கள் கீழே கொடுத்திருக்கும்
    "கடி"களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. // Liberty Statue Finger //

    நல்ல வேலை அமெரிக்கன் "ஆத்தாவுக்கு" மாட்டுப்பெண் இல்லை, ஒரு அறை விட்டால் என்ன ஆவர்து

    பதிலளிநீக்கு
  3. செய்திகள் நன்று அதனினும் அதன் கீழ்
    பெய்துள்ள நகைச் சுவை நன்று நன்று - வைது
    சொன்னால் கேட்பாரிலர் மாற்றாக சற்றே
    பின்னால் இடித்துப் பார்ப்போமே நாம்.

    பதிலளிநீக்கு
  4. லிபர்டி சிலையின் ஆள்காட்டி விரல் எட்டு அடி நீளம்.
    ஒரு முழம் பூ வாங்கினா கூட அதை லிபர்டி கையாலத்தான் வாங்கணும்னு நான் சொல்றேன்!

    \\
    super

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுகளுக்கு எங்கள் நன்றி, இவர்களுக்கு:
    மாதவன்,
    ராமலக்ஷ்மி,
    அண்ணாமலையான்,
    மதுரை சரவணன்,
    அப்பாதுரை,
    மீனாக்ஷி,
    ஹேமா,
    சாய்ராம் கோபாலன்,
    புலவன் புலிகேசி,
    அனானி,
    தியாவின் பேனா,
    தேனம்மை லக்ஷ்மணன்.
    உங்க எல்லோருக்கும் இந்தப் பதிவு பிடிச்சிருக்கு என்பதில் எங்களுக்கு சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப சுவாரஸ்யமான காமேன்ட்டுகள். பொறாமைப் படுகிறேன்!!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஜவஹர் - இங்கே கமெண்ட் எழுதியிருக்கிறவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுறீங்களா? ஏன்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!