வியாழன், 11 பிப்ரவரி, 2010

கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி!

சென்ற வியாழனன்று (தொலைத்ததும் .. கிடைத்ததும்) பதிவிட்டவரை தொலை, அலை, வலை எல்லாவற்றிலும் தொடர்புகொண்டு - அப்புறம் என்ன ஆச்சு? என்று அக்கறையாக விசாரித்தோம். அவர் அனுப்பிய follow up பதிவு இதோ:

அறிவு ஜீவியின் புலம்பல் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. "போச்சு போச்சு எல்லாம் போயே போச். போயந்தி It's gone " என்று அமிர்தாஞ்சனம் விளம்பரம் மாதிரி கூவிக் கொண்டே வந்தார்.

"என்னய்யா என்ன ஆயிற்று?" என்று கேட்டால், "எல்லாம் அந்த அது படுத்தும் பாடு தான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவ்வளவு புத்தகம், ஒலி நாடா, பாட்டுக் குறுந்தகடு இன்னும் என்னவெல்லாமோ சேர்த்து வைத்திருந்தேன். எல்லாம் போச்சு." என்று கொஞ்சம் விவரமாகவே புலம்ப ஆரம்பித்தவர், 'போன வாரம் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு மந்திரம் சொன்னோமே நினைவிருக்கிறதா? யாருக்கு என்ன திரும்பிக் கிடைத்தது ?' என்று கேட்டார்.

லட்சுமிக் குட்டி வந்து, 'என்னுடைய ரப்பர், பென்சில் எல்லாமே கிடைச்சுட்டது ' என்றாள். அம்மா வந்து கைத் தவறுதலாக வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்த தன் மூக்குத்தி கிடைத்து விட்டது, 'மந்திரம் சக்தி வாய்ந்தது தான். ஆனா நாம எவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறோம் என்கிற ஒரு அளவு கொண்டு தான் எல்லாம் நடக்கும் போலுள்ளது' என்றாள்.

"ஏன் சார் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?"  என்று அறிவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே ஷ்யாம் பிரசன்னமானான். அறிவு மீண்டும் ஒரு முறை தன் நஷ்டங்களைப் பற்றி முறையிட்டு ஓய்ந்தார். ஷ்யாம், "அப்போ மற்றவர்கள் எல்லோரும் உங்களை விட மகா நம்பிக்கையுடன் மந்திரத்தை சொல்லி இருப்பார்கள் போலிருக்கிறது. உங்கள் புத்தகங்களில் எவ்வளவு நீங்களே வாங்கி சேர்த்தது?' என்று வினவ, அறிவு 'அது ... வந்து......" என்றிழுக்க, "ஆக, எல்லாமே சுட்டவை - எனவே அதது அவரவர் வீட்டுக்குத் திரும்பி விட்டன இல்லையா?' என்று கேட்டான்.
மந்திரத்தின் மகாத்மியம் எங்களுக்கும் புரிய ஆரம்பித்தது!
(நன்றி : தினகரன் ஆன்மீக சிறப்பு மலர்.)

7 கருத்துகள்:

  1. மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுறிங்களா.

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்11 பிப்ரவரி, 2010 அன்று 6:30 PM

    நான் உங்களுடைய நாலாம் தேதி பதிவைப் படித்துவிட்டு, சரி - மந்திரம் சொன்னவுடன் - சார்ஜ் தீர்ந்துபோன பாட்டரி செல் எல்லாம் - திரும்பவும்
    ஃபுல் சார்ஜ் ஆகியிருக்கும் என்று நினைத்தேன். இப்போ பாத்தா அறிவு ஜீவியின் தலையிலேயே கை வைத்துவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  3. // குரோம்பேட்டைக் குறும்பன் said...
    நான் உங்களுடைய நாலாம் தேதி பதிவைப் படித்துவிட்டு, சரி - மந்திரம் சொன்னவுடன் - சார்ஜ் தீர்ந்துபோன பாட்டரி செல் எல்லாம் - திரும்பவும்
    ஃபுல் சார்ஜ் ஆகியிருக்கும் என்று நினைத்தேன். இப்போ பாத்தா அறிவு ஜீவியின் தலையிலேயே கை வைத்துவிட்டீர்களே!//

    hahaha superb.......

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம்...என்ன ஒரு சேட்டை இது !

    பதிலளிநீக்கு
  5. தமிழ் உதயம் - பாத்தீங்களா - எவ்வளவு தெறமையா முடிச்சுப் போட்டிருக்கோம்னு!
    குறும்பனுக்கும், குறும்பு ரசிகர் தேனம்மைக்கும், ஹேமாவுக்கும், புலவன் புலிகேசிக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இப்போதான் படிச்சேன். ஹா ஹா -- அறிவு ஜீவிக்கே ஆப்பு - சூப்பரப்பு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!