சனி, 26 மார்ச், 2011

பத்மபூஷன் எஸ் பி பாலசுப்ரமணியம் ஹை





எஸ் பி பி பத்மபூஷன் விருது வாங்கும் படத்தை நேற்று செய்தித் தாளில் பார்த்தேன். யார் இவர் என்று வட நாட்டு ஆட்கள் கேட்க முடியாது ஹிந்தியிலும் கொடி நாட்டியிருக்கிறார் எஸ் பி பி. நான் ரசித்த அவர் பாடல்களில் கொஞ்சம் இங்கே...(முதல் தவணை?)

பல சமயம் காட்சிகளைப் பார்க்கும் போது பாடலின் இனிமை தெரிவதில்லை. மிக, மிக மிகச் சில பாடல்களே காட்சியுடன் இணைந்து ரசிக்க பொருத்தமானவை. இருப்பினும் ஒரு சுவாரஸ்யத்துக்காகவும்,டெக்னாலஜியை உபயோகப் படுத்திக் கொள்ளவும் (!) காட்சியுடன் பாடல்கள் தந்திருக்கிறோம். ஆனால் பாடல்களை காட்சியைப் பார்க்காமலும் ஒரு முறை கேளுங்கள். அது பாடகருக்குக் கொடுக்கும் மரியாதை! இனிமையும் கூட...

இந்தப் பாடல் ஒரு தமிழ்ப் பாடலை நினைவு படுத்தும். என்ன பாடல் என்று சொல்ல வேண்டாம்..தமிழில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்தான். (ஆக்கேன் தேரே பாஹோன்மே..)




மாதிரி தீட்சித் ஹிந்தித் திரையுலகின் மூன்றாம் அழகி. Dancing Queen என்று பெயர் வாங்கியவர். இந்தப் பாடலில் எஸ் பி பியின் குரலை ரசிக்கும் அதே நேரம் மாதுரியின் நடனத்தையும் சல்மானின் இளமையையும் கூட ரசிக்கலாம்.தேகா ஹை பெஹலி பார்...


டைட்டில் சாங்'ஆக வரும் பாடல். எஸ் பி பியின் குரலில் இருக்கும் கவர்ச்சியை கவனியுங்கள். (எனக்குப் பிடித்ததை உங்களையும் கேட்க வைக்க என்னென்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு...முழுசா கேட்பீங்க இல்லே...?)


அந்தாஸ் அப்னா அப்னா என்ற நகைச்சுவைப் படத்தில் வரும் ஒரு பாடல். இரண்டு 'கான்'களும் ரவீனா டாண்டனுடன் இடம்பெறும் காட்சி. பாடல் நகைச்சுவை இல்லை. ரசிக்கக் கூடிய வகையில் மீண்டும் அவர் குரல்.


மீண்டும் பழைய சல்மான், இந்த முறை நம்ம தமிழ் ரேவதி சேச்சியுடன் இணைந்த படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் இளையராஜா இசை. தமிழில் மனோ சித்ரா பாடியது. ஹிந்தியில் எஸ் பி பி சித்ரா.



ஒரு கமல் படப் பாடல். தமிழில் சட்டம் என் கையில் என்ற பெயரில் வந்த படம். ஆரம்ப இசையும் எஸ் பி பி குரலும் ரசிக்கக் கூடியவை.


பாடல்களை முழுமையாகக் கேளுங்கள்.

மறுபடி,

பல சமயம் காட்சிகளைப் பார்க்கும் போது பாடலின் இனிமை தெரிவதில்லை. மிக, மிக மிகச் சில பாடல்களே காட்சியுடன் இணைந்து ரசிக்க பொருத்தமானவை. இருப்பினும் ஒரு சுவாரஸ்யத்துக்காகவும்,டெக்னாலஜியை உபயோகப் படுத்திக் கொள்ளவும் (!) காட்சியுடன் பாடல்கள் தந்திருக்கிறோம். ஆனால் பாடல்களை காட்சியைப் பார்க்காமலும் ஒரு முறை கேளுங்கள். அது பாடகருக்குக் கொடுக்கும் மரியாதை! இனிமையும் கூட

ஆனால் மாதுரியையும் அவர் நடனத்தையும் முழுதாக ரசித்திடுங்கள்...!!

படங்கள் நன்றி....கூகிள், நாட் ஃபோட்டோசிட்டி.காம்

18 கருத்துகள்:

  1. சொன்னது படியே செய்தாச்சு.எல்லாவீடியோவையும் பாத்து ,கேட்டு ரசிச்சாச்சு.
    நன்றி:))

    பதிலளிநீக்கு
  2. 'Hum Apko Hain koen' -- நல்ல படம் நல்ல பாடல்கள்..

    நீங்கள் ஏன் 'எக் துஜே கேலியே' பற்றி சொல்ல மறந்தீர்கள்..

    பதிலளிநீக்கு
  3. காட்சியே பரவாயில்லை போலிருக்கு - மன்னிச்சுருங்க ஒரு பாட்டு கூடத் தேறலியே?

    பதிலளிநீக்கு
  4. /பல சமயம் காட்சிகளைப் பார்க்கும் போது பாடலின் இனிமை தெரிவதில்லை. மிக, மிக மிகச் சில பாடல்களே காட்சியுடன் இணைந்து ரசிக்க பொருத்தமானவை. /

    நிஜம்

    பதிலளிநீக்கு
  5. ஏக் காம் மே ஏக் கிசான் ரகுதாத்தா... ;-)))

    பதிலளிநீக்கு
  6. ஆனால் பாடல்களை காட்சியைப் பார்க்காமலும் ஒரு முறை கேளுங்கள். அது பாடகருக்குக் கொடுக்கும் மரியாதை! இனிமையும் கூட


    ....Thats nice... ஆனால் ஒண்ணும் புரியல. :-(
    Hindhi, maalum nahi!

    பதிலளிநீக்கு
  7. எஸ்.பி.பியின் குரலில் எந்த மொழிப்பாடல்களும் புரியவிட்டாலும் இளமை இனிமைதான்.அந்தக் குரலின் பாவமும் குழைவும் ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.
    ஏதாச்சும் ஒரு தமிழ்ப்பாட்டாவது சேர்த்திருக்கலாம் !

    பதிலளிநீக்கு
  8. லவ் (அன்புசின்னம்) படப்பாடலை மறக்கவே இயலாது.

    பதிலளிநீக்கு
  9. //இந்தப் பாடல் ஒரு தமிழ்ப் பாடலை நினைவு படுத்தும். என்ன பாடல் என்று சொல்ல வேண்டாம்..தமிழில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்தான். //

    நாங்க சொல்லுவோம்

    வா வா அன்பே அன்பே - அக்னிநட்சத்திரம்..!

    பதிலளிநீக்கு
  10. //இந்த முறை நம்ம தமிழ் ரேவதி சேச்சியுடன் இணைந்த படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் இளையராஜா இசை. தமிழில் மனோ சித்ரா பாடியது. ஹிந்தியில் எஸ் பி பி சித்ரா.//

    அய்யய்யோ நான் ஹிந்தில மட்டும்தான் கேட்ருக்கேன் தமிழ் பாட்டு எதுன்னு சொன்னா தேவலாம் என்னோட ஐபாட்ல எப்பவும் கேட்கிற பாட்டு இது..!

    பதிலளிநீக்கு
  11. //மாதுரியையும் அவர் நடனத்தையும் முழுதாக ரசித்திடுங்கள்...!!//

    ரசிச்சாச்சு - மீனாக்‌ஷி கோச்சுக்க மாட்டாங்கதானே..!

    பதிலளிநீக்கு
  12. இப்பொழுதுதான் 'அன்பு மேகமே, இங்கு ஓடிவா' பாடலில் எஸ்.பீ.பீ. அவர்களின் குரலில் மனம் உருகி மீள முடியாமல் மீண்டு வந்து உங்கள் பதிவை பார்த்தேன். இதில் எஸ்.பீ.பீ. படத்தை பார்த்த உடனேயே ஆஹா! என்னென்ன பாடல்கள் என்று ஆர்வமாய் பார்த்தால், எல்லாம் ஹிந்தி பாடல்கள். மன்னிக்கவும்! நான் இவர் குரலை தென்னிந்திய மொழிகளில் மனம் உருகி உருகி ரசிப்பதை போல், ஹிந்தியில் ஏனோ ரசித்ததில்லை. கிஷோர் குரலில் மயங்கி நான் ஹிந்தி பாடல்களை ரசிக்க ஆரம்பித்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் இந்த பதிவு எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
    என் அபிமான தேன் குரல் எஸ்.பீ.பீ. அவர்கள் இந்த விருதை பெற்றதில் எனக்கு மிகவும் சந்தோஷம். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வசந்த், மீனாக்ஷி சேஷாத்ரி இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாங்க! :)

    பதிலளிநீக்கு
  13. எஸ்.பி.பி.யின் குரலைவிட என்னை ஆச்சர்யப்படுத்துவது, இவ்வளவு உயரம் வந்தபின்னும், அவரிடம் இருக்கும் பணிவு!!

    பதிலளிநீக்கு
  14. பலமுறை கேட்ட பாடல்கள். எப்படியென்றால் மொழி புரியா விட்டாலும் எஸ் பி பி-யின் குரலுக்காகவே இதில் பல படங்களின் கேஸட் வாங்கிக் கேட்டிருக்கிறேன். மீண்டும் காட்சியுடனான பகிர்வுக்கு நன்றி. ரசனையுடன் விவரித்திருப்பது அழகு.

    பதிலளிநீக்கு
  15. எஸ்,பி,பி. ஒரு சச்சின் மாதிரி . நமக்கு கிடைத்த பொக்கிஷம் .
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. எஸ்.பி.பி. மிகச்சிறந்த பாடகர்..

    ஹிந்தி நஹி மாலும்.. :-)

    பதிலளிநீக்கு
  17. ஹிந்தியில் சல்மான் கானுக்காக நிறைய பாடல்கள் பாடினார்...

    ஹிந்தியில் இருந்து அவரை முற்றிலும் ஒழிக்க எடுத்த முயற்சியில் வெற்றி பெற்ற வகையில் எஸ்.பி.பி. மீண்டும் தென்னிந்தியாவை மட்டுமே ஆள திரும்பி வந்து விட்டார்...

    ஆனாலும், அவர் ஹிந்தியில் பாடிய பாடல்கள் பட்டையை கிளப்பும் ரகம்..

    கமலஹாசனுக்காக :

    ஏக் துஜே கேலியே
    சாகர்
    ஏ தோ கமால் ஹோ கயா (சட்டம் என் கையில் ரீமேக்)

    போன்ற படங்களில் அருமையான பாடல்களை பாடியிருக்கிறார்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!