=====================================================================
நான் பதிவு எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதிய பதிவை நான் மறு பதிவாக நேற்று இட்டு
இருந்தேன். அதை படித்த திருமதி. உஷா அவர்கள் நீங்கள் ஆரம்ப முதெல்லர்ந்தே இப்படித்தான் எழுதுகிறீர்களா என்று
கேட்டு இருந்தார். அதற்கு பதில்தான் இந்த பதிவு. இதுவும் ஆரம்ப காலத்தில் நான் எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடித்த நல்ல பதிவு.
இது அந்த நேரத்தில் சீண்டுவார இல்லாமல் இருந்தது அதன் பின்தான் சீரியாஸா
எழுதுவதற்கு பதிலாக பல மொக்கை பதிவுகளை எழுத ஆரம்பித்தேன் அப்புறம் அந்த மொக்கைகள்
பிரபலமாகின...
சரி இதைப்படித்து விட்டு அப்படியே போகாமல் உங்கள் மனதில் பட்ட கருத்தை பதிவிட்டு
செல்லுங்கள். இல்லைன்னா உங்க கண்ணுலேயே வந்து
குத்துவேன் அல்லது மொக்கை பதிவுகளாக போட்டு பதிவுலகத்தையே கலங்கடிச்சுடுவேன்
================================================================================
மௌனமாக ஒரு அலறல்
மதுரைத்தமிழன்
அம்மா...நான் உங்ககிட்ட அனுமதி வாங்கிட்டுதான்
பார்ட்டிக்கு போயிருந்தேன்...
அம்மா நீங்க சொன்னீங்க குடிக்க கூடாது என்று.
அம்மா நீங்க சொன்னதை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தேன்.
அம்மா நான் கோக் மட்டும்தான் குடித்தேன்
அம்மா என் உள்ளத்திற்குள் ஒரு கர்வம் & பெருமை
அம்மா நீங்க சொன்னதை அப்படியே கடைபிடிகின்றேன் என்றுதான்
அம்மா எல்லோரும் குடி குடி என்று வற்புறுத்தினார்கள்
அம்மா நான் அதை மறுத்து கோக் மட்டும்தான் குடித்தேன்
அம்மா இருந்தாலும் நான் குடித்துவிட்டு கார் ஒட்டவில்லை
அம்மா நான் பார்ட்டியில் சரியாகத்தான் நடந்தேன்
அம்மா உங்கள் வழிகாட்டுதல் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும்.
அம்மா ஒரு வழியாக பார்ட்டி முடிந்து எல்லோரும் வெளியேறத் தொடங்கினார்கள்.
அம்மா நானும் என் காரில் வந்து உட்கார்ந்தேன் எனக்கு தெரியும் நான் நல்ல படியாக
வீடு வந்து சேர்வேன் என்று
அம்மா நீங்க என்னை ரொம்ப பொறுப்பான நல்ல பிள்ளையாக வளர்த்திர்கள்.
அம்மா நான் காரை பார்க்கிங் லாட்டில் இருந்து எடுத்து மெதுவாக ரோட்டிற்குள் வந்தேன்
அம்மா அப்போது இன்னொரு காரில் வந்தவன் என்னை பார்க்வில்லை.
அம்மா அந்த கார் என் காரில் ஒரு பாறாங்கல்லை போல வந்து மோதியதும்மா
அம்மா என்ன நடந்தது என்று தெரியவில்லை நான் தரையில் கிடந்தேனம்மா
அம்மா அப்போது போலிஸ்காரர் பேசியது என் காதில் விழுந்தது அம்மா
அம்மா அவர் யாரிடமோ சொன்னார் அந்த வாலிபன் நல்லா குடித்துவிட்டு கார் ஒட்டி வந்து
மோதியுள்ளான் என்று
அம்மா குடித்தது அவன் ஆனால் எனக்கு ஏன் அம்மா இந்த தண்டனை?
அம்மா உன் ஆசை மகள் நான் தரையில் கிடக்கின்றேன்.
நீ சிக்கிரம் இங்கே வாம்மா
அம்மா எப்படிம்மா இது நடந்தது? என் வாழ்க்கை பார்ட்டியில் உள்ள ஒரு பலூனை போல ஒரு நொடியில் உடைந்துவிட்டதேயம்மா
அம்மா இங்கே எங்க பார்த்தாலும் ஒரே ரத்தமயம்தானம்மா எல்லாம் இரத்தமும் உன் செல்லப்
பிள்ளையினுடையது தானம்மா
ஆம்புலன்சில் வந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் நான் சிக்கிரம் இறந்து விடுவேன்
என்று
அம்மா நான் உன்னிடம் ஓன்றை மீண்டும் சொல்ல விரும்புகிறேன் சத்தியமா நான் குடிக்கவில்லை
அம்மா மற்றவர்கள்தான் குடித்தார்கள் அந்த பார்ட்டியில்
அம்மா ஓன்று மட்டும் வித்தியாசம் குடித்து அவர்கள் ஆனால் இறப்பது நான் அம்மா
அம்மா இவர்கள் ஏனம்மா குடிக்கிறார்கள் இது அவர்கள் வாழ்க்கையை மட்டுமில்லாமல்
மற்றவர்கள் வாழ்க்கையயும் அழித்துவிடுமம்மா
அம்மா ரொம்ப வலிக்குதம்மா சில நொடியில் கத்தியை எடுத்து மெதுவாக அறுப்பது போலவும்
சில நொடியில் பாறாங்கல்லை மேலே தூக்கிபோட்டது போலவும் வலிக்குதம்மா...
ஆனால் குடித்து விட்டு என் மேல் மோதியவனோக்கோ சிறு அடி கூட இல்லையம்மா.
அவன் வைத்த கண் மாறாமல் என்னை பார்த்து கொண்டிருக்கிறான் அம்மா.
அம்மா இது நியாமில்லை அம்மா இது நியாமில்லை.......
அம்மா தம்பிய அழ வேண்டாம் என்று சொல்லும்மா
அம்மா என் செல்ல அப்பாவை தைரியாமாக இருக்க சொல்லம்மா
அம்மா நீதான் அவரை பார்த்து கொள்ள வேண்டும்
என் சாமாதியில் "டாடியின் பெண் இங்கே உறங்குகிறாள்
"என்று போடும்மா
அம்மா உன்னைப் போல யாரவது அவனுக்கு எடுத்து சொல்லி வளரத்திருந்தால்
இப்போது நானும் உயிரோட இருந்திருப்பேன் அம்மா.
அம்மா எனக்கு இப்போ பயமா இருக்கும்மா. என்னால முச்சுவிடமுடியலையம்மா
அம்மா எனக்காக அழாதேம்மா உனக்கு நான் எப்போது தேவையோ அப்போது உன் அருகில் இருப்பேனம்மா?
அம்மா நான் இறக்கும் முன் உன்னிடம் கடைசியாக ஒரு கேள்வியம்மா....
நான் குடிச்சிட்டு கார் ஓட்டவில்லை ஆனா நான் ஏனம்மா இப்போ சாகனும்?
இன்றைய இளைஞர்கள் நல்லிரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அவர்களே
காரை ஓட்டி சென்று விபத்திற்கு உள்ளாவதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். அந்தமாதிரியுள்ள இளைஞர்கள் & இளம்
சகோதரிகள் குடிப்பதற்கு முன்னால் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். நான் உங்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதிகமாக குடித்து விட்டு
விடிகாலையில் கார்களை ஒட்டி செல்ல வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் லிமிட் என்னவென்று தெரிந்து விட்டு அந்த அளவு குடியுங்கள் நண்பர்கள்
சொல்லுவதற்க்காக அதிக அளவு குடிக்காதிர்கள். முடிந்தால் குடிக்காமல்
இருக்க முயற்சி செய்யுங்கள்
இழப்பு என்பது இழந்தவர்களூக்குதான் புரியும். நீங்கள் இறப்பதினால் உங்களுக்கு பெரிய இழப்ப ஏதுமில்லை வாழ வேண்டிய ஆண்டுகளைதான்
இழக்கிறீர்கள். ஆனால் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உங்களின்
இழப்பு ஒரு பெரிய இழப்பு. உங்களால் அடைந்த சந்தோஷங்களையும் அவர்கள்
இழக்கிறார்கள்
அம்மம்மா
பதிலளிநீக்குமதுரைத் தமிழனின் எழுத்தா இது
மனதை கலங்க அடித்துவிட்டது
மாபெரும் எழுத்துத் திறமையினை எதற்காக ஒளித்து வைத்துள்ளார்
தொடர்ந்து இதுபோன்று எழுதலாமே
தம +1
வாரம் ஒரு பதிவாவது
பதிலளிநீக்குமதுரைத் தமிழன் இதுபோன்ற பதிவுகளை எழுத
என் அன்பு வேண்டுகோளினை முன் வைக்கின்றேன்.
நிச்சயமாக அனைவருமே வழிமொழிவர்கள்
@கரந்தை ஜெயக்குமார் எனக்கு உங்களைப் போலவோ அல்லது மற்றவர்களைப் போலவோ எழுத்து திறமை கிடையாது. இந்த பதிவு நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு கவிதையை உள்வாங்கி எனது பாணியில் எழுதியது முலக்கரு என்னுடையது இல்லை அதுதான் உண்மை நான் என்து பொழ்து போக்கிற்க்காக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கி கொண்டு என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன் அவ்வளவுதான்
பதிலளிநீக்குஸ்ரீராம் எனது பதிவுகளை அழகிய முன்னோட்டத்துடன் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றிகள்
பதிலளிநீக்குஎழுத்துத் திறமை இல்லாதப்போவேஇப்படி எழுதினால்! திறமை இருந்தால் எங்கேயோ போயிருப்பார்.
பதிலளிநீக்குto continue
பதிலளிநீக்குகரந்தை ஐயா சொல்வது சரி...
பதிலளிநீக்குமனதைத் தொட்ட பதிவு. அவரது வலைப்பூவிலும் படித்த நினைவு.
பதிலளிநீக்குபாராட்டுகள் மதுரைத் தமிழன்.
சிலிர்க்கிறது நண்பரே அருமை
பதிலளிநீக்குநல்ல எழுதியிருக்கீங்க மதுரைத்தமிழன். நகைச்சுவையா எழுதறதுல கில்லாடி நீங்க. மனதைத் தைக்கிறமாதிரியும் எழுதியிருக்கீங்க. கான்செப்டும் நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஅம்மம்மா ..... எத்தனை எத்தனை அம்மா !
பதிலளிநீக்கு//குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இழப்பு என்பது இழந்தவர்களுக்குதான் புரியும். நீங்கள் இறப்பதினால் உங்களுக்கு பெரிய இழப்பு ஏதுமில்லை வாழ வேண்டிய ஆண்டுகளைதான் இழக்கிறீர்கள். ஆனால் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உங்களின் இழப்பு ஒரு பெரிய இழப்பு. உங்களால் அடைந்த சந்தோஷங்களையும் அவர்கள் இழக்கிறார்கள்.//
அழகான முத்தாய்ப்பான முடிவுரை. எழுதியவருக்குப் பாராட்டுகள்.
இங்கு வெளியிட்டுப் பகிர்ந்தவர்களுக்கு நன்றிகள்.
மதுரைத் தமிழன் எங்கேயோ போய்ட்டீங்க!! அருமை,மனதைத் தொட்டது தமிழன் ரசித்தோம்..பாராட்டுகள், வாழ்த்துகள். ஸ்ரீராம் இங்கு பிடிச்சு இழுத்துக் கதை போட்டதுக்கும் நன்றி
பதிலளிநீக்குகீதா: அம்மா எங்கள் வலையுலகில் எங்கள் நண்பர் மதுரைத் தமிழன்னு ஒருத்தர் இருக்கார்னு சொல்லியிருக்கேன்லம்மா....
அம்மா அவர் இங்க கேவாபோ னு எங்கள் பிளாக்/ஸ்ரீராம் போடற கதைக்கு எழுதியிருக்கார்மா
அம்மா ரொம்ப நல்லா எழுதியிருக்கார்மா.
அம்மா அவர் அப்பப்ப இந்தக் குடி வைச்சே தனனையும் கலாய்ச்சுக்குவார் பூரிக்கட்டை அடி வாங்குவார்னு சொல்லியிருகேன்லமா..
அம்மா நிச்சயமா இந்தப் பதிவுக்கு அவர் மனைவிக்கிட்டருந்து பூரிக்கட்டை அடி வாங்கமாட்டார்மா...
அம்மா நான் எப்படி தினம் சாமி முன்னாடி நின்னு எல்லாம் பேசுவேனோ அப்படி ஒரு பொண்ணு அம்மாகிட்ட பேசறா மாதிரி எழுதிருக்கார்மா...
அம்மா அழுவாச்சியா வந்துருச்சுமா...நீயும் வாசிச்சனா அழுதுருவம்மா...
--------------------------------------------------------
அம்மா ஒன்னு சொல்ல விட்டுப் போச்சும்மா.. உங்கிட்ட சொல்லிருக்கேன்லமா அவரை நானும் துளசியும் நேர்ல பார்த்தோம்னு ....ஆனா அவரு ஒத்துக்கிடவே மாட்டேன்றார்மா....
அம்மா நீ மேல சாமிக்கிட்டதானே இருக்க நீ சொல்லும்மா இங்க ஸ்ரீராம்கிட்ட நானும் துளசியும் மதுரைத் தமிழன நேர்ல பார்த்துருக்கோம்னு. .அப்ப அவரு ஆமானு இங்க சொல்லிடுவார்லமா...ப்ளீஸ்மா...
கீதாவின் அம்மா: மதுரைத் தமிழா நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. மருவாதையா ஒத்துக்கங்க! நீங்க அப்பப்ப பார்த்துருக்காங்கன்றத ஏதாவது தளத்துல சொல்லித்தான் இருக்கீங்க..இருந்தாலும் ஸ்ரீராம்கிட்டயும் ஒரு வார்த்தை போட்டுருங்க...என் பொண்ண பாருங்க அழுவுது...
ஹிஹிஹிஹீ...இது கீதா...மதுரைத் தமிழன் பாராட்டுகள், வாழ்த்துகள்! நல்லாருக்கு வித்தியாசமா. கண்ணுல கண்ணீர் வந்துருச்சு தமிழா...அதுதான் கதையின் ஹைலைட்...ஒரு வேளை நான் தினமும் என் அம்மாவுடன் பிரார்த்தனை பண்ணும் போது பேசுவதால் அதன் தாக்கமும் இருக்கலாம்..
நன்றி தமிழனக்கும், எங்கள் ப்ளாகிற்கும்
அவனின் கடைசி நிமிடங்களின் தவிப்பு மனதை கனமாக்கி விட்டது!
பதிலளிநீக்குநெகிழ்வானபதிவு
பதிலளிநீக்குTouching story!
பதிலளிநீக்குசோகத்தையும் அற்புதமாக வெளிபடுத்தமுடியும் என்பதை நிருபித்தவர்கள் நகைச்சுவை மன்னர்கள்சந்திரபாபு, நாகேஷ் போன்றோர். அதே போல சிரிக்க சிரிக்க எழுதும் மதுரைத் தமிழன் உருக்கமாக எழுதி கண்கலங்க வைத்துவிட்டார்.
பதிலளிநீக்குவேதனை
பதிலளிநீக்குஆரம்பத்திலிருந்தே வருகிறேனே...
பதிலளிநீக்கு//// நண்பருடைய தளத்தின் பெயரும், அவர் பின்னூட்டம் இடும்போது வரும் பெயரும் "அவர்கள் உண்மைகள்" என்று இருந்தாலும் மதுரைத்தமிழன் என்கிற பெயராலும் அவர் அறியப்படுகிறார் ///// ஓ அவரா நீங்க?:)...
சத்தியமா என் டவுட்டைக் கிளியர் பண்ணுங்கோ... மதுரைத் தமிழன் என்பவர் என்பாலா எதிர்ப்பாலா?:) எனக்கு குழப்பமாவே இருக்கு.... நேற்றுக்கூட அந்த தவவடை ரெசிப்பியில்.. குழம்பியிருந்தேன்.. இன்று கதையில் பெண்ணாக எழுதியிருக்கிறார்ர்... ஆனா சகோ ஸ்ரீராமோ நண்பர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார்ர்... ஹையோ இதைவிடத் தேம்ஸ்ல குதிச்சிடுவேன்போல இருக்கே நான்ன்ன்:))
கொஞ்சம் குதூகலமாக ஓடிவந்தேன் கதைபடிக்க, ஆனா கதை என்னைக் கொஞ்சம் கலங்கடித்துவிட்டது, கற்பனைக் கதை எனினும் மனம் ஏற்க மறுக்கிறது... உண்மையேதான், நம் வீட்டில் யாரும் குடிப்பதில்லை அதனால் எனக்கு இது ஒரு பெரிய விசயமாக தெரிவதில்லை, குடித்தால் என்ன? அளவோடு குடித்தால் ஓகேதானே எனத்தான் நினைப்பேன், ஆனா சொல்வதெல்லாம் உண்மை, இப்போ நிஜங்கள் பார்ப்போம்... அதன் பின்னரே குடிப்பதால் அக்குடும்பம் படும் வேதனைகள் பார்த்து இப்போ குடியை அடியோடு வெறுக்கிறேன், குடிப்போரைக் கண்டால் கொலை செய்யலாமா என அப்படியே ரத்தம் எல்லாம் கொதிக்குது... குடியை ஒழிக்கோணும்... அழகாக சொல்லிட்டீங்க, குடியால் அவர்களை விட அடுத்தவருக்கும் குடும்பத்துக்குமே ஆபத்து அதிகம்.
பதிலளிநீக்குஅஞ்சுவை இன்னும் காணம் இண்டைக்கும் ஊர் சுத்தக் கிளம்பிட்டாபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
பதிலளிநீக்குஒரு மரண வாக்குமூலத்தைக் கதையாக்கி விட்டார் ஒரு சந்தேகம் அவரது பதிவுகளில் பின்னூட்டம் எழுதினால் இன் பாக்சில் டெலிவெரி ஃபெய்லியர் என்று வருகிறது அவரது சரியான மெயில் முகவரி எது
பதிலளிநீக்குபடிச்சு முடிச்சதும் மனசை என்னமோ செய்தது மதுரை தமிழன் நண்பரே :(
பதிலளிநீக்குஆங்கிலத்தில் எங்கோ வாசிச்சிருக்கேன் ஆனா இவ்வளவு பாதிக்கலை அப்போ ..
கொடுமையான விஷயமில்லையா ..ஒரு அப்பாவி யாரோ ஒரு இரெஸ்பான்ஸிபில் குடிகாரனால் உயிரிழப்பது மிகவும் வேதனையான விஷயம் :(
நாம் ரோட்டில் ஒழுங்கா நடந்து சாலை விதிகளை பின்பற்றி சென்றாலும் நம் எதிரில் அருகில் பின்பக்கம் வருவோரும் ஒழுங்கா விதிகளை கடைபிடிச்சாதான் இப்படிப்பட்ட உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்
@athirraav கதையை வாசிச்சிட்டு எல்லாருமே தேம்பி அழுறாங்க .இந்த பூனைக்கு இந்த நேரத்திலும் டவுட்டை பாருங்க மக்களே ..
பதிலளிநீக்குமதுரை தமிழன் நண்பர் தான் ..நிச்சசயம் பூனை இல்லை :) அதாவது உங்களை மாதிரி குண்டு பூனை இல்லை
ஆவ்வ்வ்வ்வ்வ் எமெரேட்ஸ் பிளைட் லாண்ட் பண்ணும்போது உடம்பெல்லாம் ஒருக்கால் ஆடுமே அப்படி ஒரு ஆட்டம்:) ஓடிவந்து பார்த்தால் அஞ்சு லாண்டட்:)).. ஹையையோ என் வாய்தேன் நேக்கு எதிரி.. என்னை ஆராவது காப்பாத்துங்கோஓஓ:)
பதிலளிநீக்குஅம்மா அம்மா ன்னு வார்த்தைக்கு வார்த்தை படிக்கும்போது மனசை என்னமோ பண்ணுது சகோ ..
பதிலளிநீக்குஇப்பவும் மகள் கையை பிடிச்சு ரோட் க்ராஸ் செய்யும் பழக்கமுண்டு எனக்கு அவ திட்டினாலும் நானா விட மாட்டேன் ..
இங்கே நிறைய துர் சம்பவங்கள் யாரோ ஒருவரின் அஜாக்கிரதையால் தான் நடக்குது :((
ஓ அஞ்சு நன்றி.. மதுரைத் தமிழன்.. நண்பர்... சரி இனி மறக்க மாட்டேன்ன் எனக்கு ஞாபக சக்தி அதிகம்.. யூ நோ.. மீக்கு இப்போ சுவீட் 16.. இதையும் அங்காங்கு அடிக்கடி ஞாபகப் படுத்த வேண்டிக்கிடக்கு:)
பதிலளிநீக்கு@athira சுவீட் 61 .. இதையும் அங்காங்கு அடிக்கடி ஞாபகப் படுத்த வேண்டிக்கிடக்கு:)//haa haa
பதிலளிநீக்குஅஞ்சுவைக் காணம் கதை படிச்சு மயங்கிட்டாவோ என நினைச்சேன்ன்.. ஏனெனில் நானே சரியான சென்சிட்டிவ் அதாவது ரோட்டில் ஒரு குருவி செத்துக் கிடப்பதை பார்த்தாலே அன்று முழுக்க கலங்கிப்போயிருப்பேன், சாப்பிடக்கூட முடியாது, ஆனா அஞ்சு என்னைவிட மோசம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பல சந்தர்ப்பங்களில் “இதுவும் கடந்து போகும்” என மனதை தேற்றிக் கொள்ளோனும்...
பதிலளிநீக்கு@athiraa ...உண்மைதான் அதிரா ..நான் கொஞ்சம் அதிகமாவே உணர்ச்சிவசப்படுவேன் ..கணவர் முன்பு வேலை விட்டு நைட் லேட்டா வரும்போதும் ட்ரைவ் பண்ணும்போதும் எப்பவும் போனெடுக்கவே மாட்டேன் ..சின்ன டிஸ்டிராக்சன் கூட வேணாம்னு நினைப்பேன்
பதிலளிநீக்குஅதோட கவனமா போக சொல்வேன் ரோட்டில் பெரிய ரெண்டு கால் ஜீவனும் சின்ன நாலு கால் ஜீவன்களும் நடக்கும் அதுங்களுக்கு ஸ்பெஷல் ப்ரேயர்ஸ் செய்துதான் அனுப்பி வைப்பேன்
இந்த கதைல அம்மா அம்மானு வர்ற வார்த்தைகள் உண்மையா என்னமோ செய்துச்சு மனசை ..மகள் வேறு யூனிவர்சிட்டி படிக்கச் ஸ்விஸ் போவேன் அமெரிக்க போவேங்கிரா ..நிச்சயம் நானும் மூட்டை கட்டிக்கிட்டு அவளோட போயிடுவேன் ..
////Angelin said...
பதிலளிநீக்குஇந்த கதைல அம்மா அம்மானு வர்ற வார்த்தைகள் உண்மையா என்னமோ செய்துச்சு மனசை ..மகள் வேறு யூனிவர்சிட்டி படிக்கச் ஸ்விஸ் போவேன் அமெரிக்க போவேங்கிரா ..நிச்சயம் நானும் மூட்டை கட்டிக்கிட்டு அவளோட போயிடுவேன் .///
ஹா ஹா ஹா இந்த விசயத்தில் நான் வன்மையா கண்டிக்கிறேன், பிள்ளைகளை சுதந்திரமா உலாவர விட்டிடோணும்.. அதுவும் இக்காலப் பிள்ளைகள் நட்புக்களோடு சேர்வதையே அதிகம் விரும்புகிறார்கள்... அதனால் நாம் தொல்லையாக என்றைக்கும் இருந்திடக்கூடாது எனத்தான் நினைப்பேன், ஆனா என் மனமும் மகன் யூனிவசிட்டி போகும்போது எப்படி பிரிந்திருப்பது, வீட்டை விற்றுப்போட்டு அங்கு போய் வாங்கோணும் என மனதில் எண்ணுது[ மாத்தோணும் நம்மை:)].
நீங்க வேற...சொன்னா சிரிப்பீங்க அதிரா :) இந்த மூட்டை கட்டி போற ஐடியாவை கொடுத்ததே என் கணவர் தான் ...மகளும் அப்பாவும் அவ்ளோ திக் ப்ரண்ட்ஸ்
பதிலளிநீக்குஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஉ இப்போ ஒண்ணும் மட்டும் நேக்குத் தெளிவாப் பிரியுது:) அது என்ணெண்டால்ல்ல் இக்கதை எம்மை அறியாமல் நிறையத் தாக்கத்தைக் கொடுத்துவிட்டது என்பதே உண்மை.. அதனாலேயே இவ்ளோ புலம்பிட்டோம்ம் கதைக்கு வெளியே வந்து... கதாரிசியருக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇதுக்கு மேலயும் எங்கட யொந்தக்கதை:) யோகக் கதை:) பேசிக்கொண்டிருந்தால் அடிதான் விழும்.. கையைப் புடிங்க அஞ்சு ஓடிடுவோம்ம்ம்ம்:))
@athiraaடோன்ட் வொரி :) கதாசிரியர் நம்ம ப்ரண்டுதான் ..
பதிலளிநீக்குஅவருக்கு அடிக்கலாம் தெரியாது
@Geetha Sambasivam said...
பதிலளிநீக்கு//எழுத்துத் திறமை இல்லாதப்போவேஇப்படி எழுதினால்! திறமை இருந்தால் எங்கேயோ போயிருப்பார்.///
திறமை இல்லாததால் இங்கே கொஞ்சம் பேரை சாக அடிக்கிறேன் திறமை இருந்த்தால் இன்னும் நிறைய பேரை சாக அடிக்கலாம் அல்லது எல்லோரும் சேர்ந்து என்னை விரட்டி அடிக்கலாம்
@திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்கு//கரந்தை ஐயா சொல்வது சரி...//
தனபாலன் அப்ப வாரம் ஒரு கதை எழுதி எனக்கு அனுப்புங்க அதை என் பெயரில் பதிவிட்டுவிடுகிறேன் சரிதானே
@வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//மனதைத் தொட்ட பதிவு. அவரது வலைப்பூவிலும் படித்த நினைவு.
பாராட்டுகள் மதுரைத் தமிழன்.//
ஆமாம் என் மனதை தொட்ட & பாதித்த பதிவுதான் பாராட்டிற்கு நன்றி
@KILLERGEE Devakottai said...
பதிலளிநீக்கு//சிலிர்க்கிறது நண்பரே அருமை//
பாராட்டிற்கு நன்றி
@நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்கு//நல்ல எழுதியிருக்கீங்க மதுரைத்தமிழன். நகைச்சுவையா எழுதறதுல கில்லாடி நீங்க. மனதைத் தைக்கிறமாதிரியும் எழுதியிருக்கீங்க. கான்செப்டும் நல்லா இருக்கு//
பாராட்டிற்கு நன்றி ஆனால் நான் கில்லாடி இல்லை வூட்டுகாரம்மாவிடம் வாங்கி கட்டிக் அல்லாடிக் கொண்டுதான் இருக்கிறேன்
@வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குஅம்மம்மா ..... எத்தனை எத்தனை அம்மா !
//குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இழப்பு என்பது இழந்தவர்களுக்குதான் புரியும். நீங்கள் இறப்பதினால் உங்களுக்கு பெரிய இழப்பு ஏதுமில்லை வாழ வேண்டிய ஆண்டுகளைதான் இழக்கிறீர்கள். ஆனால் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உங்களின் இழப்பு ஒரு பெரிய இழப்பு. உங்களால் அடைந்த சந்தோஷங்களையும் அவர்கள் இழக்கிறார்கள்.//
அழகான முத்தாய்ப்பான முடிவுரை. எழுதியவருக்குப் பாராட்டுகள்.
இங்கு வெளியிட்டுப் பகிர்ந்தவர்களுக்கு நன்றிகள்.///
பாராட்டிற்கு மிகவும் நன்றி
@கீதா
பதிலளிநீக்குநீங்களும் துளசி அவர்களும் பார்த்தது எனது டூப்தான் அது நான் இல்லை. நல்ல ஞாபகப்படுத்தி பாருங்க நீங்க பார்த்தது மதுரைத்தமிழன் என்றால் அவர் நிறைய காயங்களோடும் கட்டுகளோடும் இருந்தாரா என்ன? ஆமாம் என்றால் அது நாந்தான்.. அப்படி இல்லையென்றால் நீங்கள் பார்த்தது எனது டூப்தான் அடுத்தடவை வரும் போது டூப்பை அனுப்பாமல் ஒரிஜனலாக வருகிறேன் சரியா
கீதாவுடைய அம்மா: உங்களிடம் ஒரு கேள்வி ஏனம்மா நீங்க உங்க பெண்ணை மிகவும் அப்பாவியாக வளர்த்து இருக்கீங்க...இப்ப பாருங்க இந்த மதுரைத்தமிழன் அவரை அடிக்கடி ரொம்பவே கலாய்ய்சு கிட்டு இருக்கிறார்.
@கீதா
பதிலளிநீக்குபடிக்கிறவங்க ஜெயலிதா போனதற்கு அப்புறம் எல்லோரும் சின்னம்மா சின்னம்மா என்று சொல்லும் போது இந்த மதுரைத்தமிழனும் கீதாவும் இன்னும் அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் கீதா வூட்டிற்கு டாடா சுமோவும் ஒரு ஆட்டோவும் மதுரைத்தமிழன் வீட்டிற்கு ஒரு விமானமும் அனுப்பி நல்லா கவனிக்கப் போறாங்க ஜாக்கிரதையாக்த்தான் நாம் இருவரு இருக்க வேண்டும்
@மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு/அவனின் கடைசி நிமிடங்களின் தவிப்பு மனதை கனமாக்கி விட்டது!//
முதன் முதலில் நான் படித்த போது அந்த குழந்தையின் இடத்தில் என் பெண்ணை வைத்து பார்த்தேன் கண்கள் அருவியாக ஆனது இந்த பதிவை நான் பலதடவை மறுபதிவு செய்து இருக்கிறேன் சில மனிதர்களாவது சிந்திப்பார்கள் என்று
@Asokan Kuppusamy said...
பதிலளிநீக்குநெகிழ்வானபதிவு
உண்மைதான் மனதை நெகிழ வைக்கும் எப்பொழுது எல்லாம் இதை படிக்கும் போது
@middleclassmadhavi said...
பதிலளிநீக்குTouching story!
மனதை தொட்ட மட்டுமல்ல மிகவும் தைத்த கதை
@டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
பதிலளிநீக்கு/சோகத்தையும் அற்புதமாக வெளிபடுத்தமுடியும் என்பதை நிருபித்தவர்கள் நகைச்சுவை மன்னர்கள்சந்திரபாபு, நாகேஷ் போன்றோர். அதே போல சிரிக்க சிரிக்க எழுதும் மதுரைத் தமிழன் உருக்கமாக எழுதி கண்கலங்க வைத்துவிட்டார்.//
ஆஹா சந்தர்ப்ப சாக்கில் என்னை நாகேஷ் சந்திரபாஉ லிஸ்டில் சேர்த்துவிட்டீங்களே நீங்கள் நேரில் பார்த்த போது நான் அவர்களை போலவா மிக ஒல்லியாக இருந்தேன்
@Nagendra Bharathi said...
பதிலளிநீக்குவேதனை
உண்மைதான் இப்படிதான் பல விபத்துக்கள் நடந்து பல குடும்பங்களில் பலரை இழந்து வேதனை பட்டுகொண்டிருக்கிறார்கள்
@athira said...
பதிலளிநீக்குஆரம்பத்திலிருந்தே வருகிறேனே...
//// நண்பருடைய தளத்தின் பெயரும், அவர் பின்னூட்டம் இடும்போது வரும் பெயரும் "அவர்கள் உண்மைகள்" என்று இருந்தாலும் மதுரைத்தமிழன் என்கிற பெயராலும் அவர் அறியப்படுகிறார் ///// ஓ அவரா நீங்க?:)...
சத்தியமா என் டவுட்டைக் கிளியர் பண்ணுங்கோ... மதுரைத் தமிழன் என்பவர் என்பாலா எதிர்ப்பாலா?:) எனக்கு குழப்பமாவே இருக்கு.... நேற்றுக்கூட அந்த தவவடை ரெசிப்பியில்.. குழம்பியிருந்தேன்.. இன்று கதையில் பெண்ணாக எழுதியிருக்கிறார்ர்... ஆனா சகோ ஸ்ரீராமோ நண்பர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார்ர்... ஹையோ இதைவிடத் தேம்ஸ்ல குதிச்சிடுவேன்போல இருக்கே நான்ன்ன்:))
எனக்கும் உங்களை போல சந்தேகம்தான் உங்கள் பெயரை பல இடங்களில் பார்த்து இருக்கிறேன் நீங்கள் என்னபால் என்பதில் எனக்கு சந்தேகம்தான் பூரிக்கட்டையால் அடிவாங்குவது என்றால் நிச்சய்ம ஆண்பாலாகத்தான் இருக்கனும்.
அப்புறம் தேம்ஸ் நதியில் குதித்துவிட வேண்டாம் அப்புறம் இந்த பதிவு படித்துதான் நீங்கள் குதித்துவிட்டீர்கள் என நினைத்து என் மேள் கேஸ் போட்டுவிடப்போகிறார்கள்
@athira said...
பதிலளிநீக்கு///இப்போ குடியை அடியோடு வெறுக்கிறேன், குடிப்போரைக் கண்டால் கொலை செய்யலாமா என அப்படியே ரத்தம் எல்லாம் கொதிக்குது... குடியை ஒழிக்கோணும்... அழகாக சொல்லிட்டீங்க, குடியால் அவர்களை விட அடுத்தவருக்கும் குடும்பத்துக்குமே ஆபத்து அதிகம்.//
அய்ய்யோ ஸ்ரீராம் இப்படி ஸ்லீப்பர் செல்லை உங்கள் பக்கத்தில் வைத்து கொண்டு கேட்டு வாங்கி கதை போட்டு இருக்கின்ங்களே இது என்னை போட்டு தள்ள நீங்க செய்த எண்கவுண்டர் முயற்சியா? நாம் ஒரே ஊர்காரங்க இல்லையா இப்படி எல்லா பழி வாங்கலாமா?
அதிரா நான் குடிப்பதாக யாரவது சொன்னால் நம்பாதீங்க நான் இன்னும் ஹார்லிக்ஸ்மட்டும்தான் குடித்து வருகிறேன்
@G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குஒரு மரண வாக்குமூலத்தைக் கதையாக்கி விட்டார் ஒரு சந்தேகம் அவரது பதிவுகளில் பின்னூட்டம் எழுதினால் இன் பாக்சில் டெலிவெரி ஃபெய்லியர் என்று வருகிறது அவரது சரியான மெயில் முகவரி எது
இப்படி பலரும் சொல்லி இருக்கிறார்கள் எனது மின்னஞ்சல் முகவரி avargal_unmaigal@yahoo.com
@athira said...
பதிலளிநீக்குஅஞ்சுவை இன்னும் காணம் இண்டைக்கும் ஊர் சுத்தக் கிளம்பிட்டாபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
அய்யோ அஞ்சு வந்திட்டா இந்த இடம் ரதகளமாகிவிடுமே... இப்ப நான் வேலைக்கு போகும் நேரம் ஆகிவிட்டது அதனால் அஞ்சுவிற்கு வந்து பதில் சொல்லுறேன் இல்லேன்னா நான் லேட்டாகிடுச்சுன்னு காரை ஸ்பீடாக ஒட்டி சென்று அதனால் விபத்து ஏற்பட்டால் அப்புறம் யாரவது கவிதை எழுதி கட்டுரை எழுதி இப்படி பொறுப்பில்லாமல் இணையத்தில் கதையளந்துவிட்டு வேகமாக காரை ஓட்டி மனிதர்களை சாகாடிக்கிறார்கள் என்று குறை சொல்லப் போகிறார்கள் நான் பொறவு வருகிறேன்
@ avargal unmaikal friend //நாம் ஒரே ஊர்காரங்க இல்லையா இப்படி எல்லா பழி வாங்கலாமா?//நானும் half மதுரை பொண்ணுதான் (ஆனால் மதுரையில் பிறக்கலை )என்பதை மிகுந்த சந்தோஷத்தோடு கூறிக்கொள்கிறேன் மை டியர் ப்ரண்ட் :)
பதிலளிநீக்கு@athiraav athiraaav :) அதிரா ஓடிவாங்க நமக்கு ஒருத்தர் இன்னிக்கு கிடைச்சிட்டார் விடாதிங்க
பதிலளிநீக்குஹாஆ ஹாஅ ஹா இப்பூடிக் கிடைக்கும் அரிய வாய்ப்பை மிஸ் பண்ணலாமோ ..... தோஓஓஒ கிளம்பிட்டேன்ன்ன் எதுக்கும் அஞ்சூஊஉ என் புரொண்ட் லெக்கை கொஞ்சம் பிடிச்சுக்கோங்க... மீ ஸ்ரெடிதான் இருப்பினும் உதறுது....
நீக்கு@ avargal truth :) ஆனாலும் உங்களுக்கு அசாத்திய தைரியம்தான் :) எங்க லேடி தாதாவையே ஸ்லீப்பர் செல்னு சொன்ன தைரியமான மொத ஜீவன் நீங்கதான்
பதிலளிநீக்குஅஞ்சூஊஊ எதுக்கும் ஆள் உண்மையில் வேர்க்குக்கு போயிட்டாரா என ஒருக்கால் கொன்போம் பண்ணுங்கோ... அதன் பின்பே நான் பிளேன் கோன் பூட்டிக்கொண்டு களமிறங்குவேன்ன்ன்ன்:)
பதிலளிநீக்குஇதைத்தான் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் அதிராவ் :) யூ கன்டின்யூ நான் வெஜிடபிள் சூப் போட்டு குடிச்சிட்டு வந்து ஜாயின் செஞ்சுக்கறேன்
பதிலளிநீக்கு///Avargal Unmaigal said...
பதிலளிநீக்குஅப்புறம் தேம்ஸ் நதியில் குதித்துவிட வேண்டாம் அப்புறம் இந்த பதிவு படித்துதான் நீங்கள் குதித்துவிட்டீர்கள் என நினைத்து என் மேள் கேஸ் போட்டுவிடப்போகிறார்கள்//// அஞ்சூஊஊஊஉ ஓடியாங்கோ... தேம்ஸ்ல தள்ளிடுவோம்..:) ஸ்பெல்லிங்கூ மிஸ்ரேக்கூஊஊஊஊ:) என் கண்ணுக்கு ள, ழ எல்லாம் கிளியராத் தெரியுமெல்லோ:))...
நல்ல மெஸேஜோடு வித்தியாச நடையில் எழுதப்பட்டிருக்கும் கதை. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.எங்கள் ப்ளாகிற்கு நன்றிகள்!
பதிலளிநீக்கு@Bhanumathy Venkateswaran said...
பதிலளிநீக்கு// நல்ல மெஸேஜோடு வித்தியாச நடையில் எழுதப்பட்டிருக்கும் கதை. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.எங்கள் ப்ளாகிற்கு நன்றிகள்!//
பாராட்டிற்கு மிகவும் நன்றி
@Angelin
பதிலளிநீக்குபடிச்சு முடிச்சதும் மனசை என்னமோ செய்தது மதுரை தமிழன் நண்பரே :(
ஆங்கிலத்தில் எங்கோ வாசிச்சிருக்கேன் ஆனா இவ்வளவு பாதிக்கலை ////
ச்சே ச்சே இப்படி உங்க மனசு பாதிக்கும் என்று தெரிஞ்சிருந்தா ஆங்கிலத்திலே பதிந்திருப்பேன் ஹும்ம்
@Angelin said...
பதிலளிநீக்கு//@athirraav கதையை வாசிச்சிட்டு எல்லாருமே தேம்பி அழுறாங்க//
மதுரைத்தமிழனும் விஜய்டிவி டி ஆர் பி ரேட்டை கூட்ட செய்யவது மாதிரி இந்த மதுரைததமிழனும் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கப் போறான்
@athira
பதிலளிநீக்கு//ஆவ்வ்வ்வ்வ்வ் எமெரேட்ஸ் பிளைட் லாண்ட் பண்ணும்போது உடம்பெல்லாம் ஒருக்கால் ஆடுமே அப்படி ஒரு ஆட்டம்:) ஓடிவந்து பார்த்தால் அஞ்சு லாண்டட்:)).. ஹையையோ என் வாய்தேன் நேக்கு எதிரி.. என்னை ஆராவது காப்பாத்துங்கோஓஓ:)//
உங்களை காப்பாற்றனுமா இல்லை உங்களிடம் இருந்து இந்த மதுரைத்தமிழனை அல்லது மற்றவர்களை காப்பாற்றனுமா?
பதிலளிநீக்கு@Angelin
அம்மா அம்மா ன்னு வார்த்தைக்கு வார்த்தை படிக்கும்போது மனசை என்னமோ பண்ணுது சகோ ..
இப்பவும் மகள் கையை பிடிச்சு ரோட் க்ராஸ் செய்யும் பழக்கமுண்டு எனக்கு அவ திட்டினாலும் நானா விட மாட்டேன் ..
இங்கே நிறைய துர் சம்பவங்கள் யாரோ ஒருவரின் அஜாக்கிரதையால் தான் நடக்குது :((//
நானும் உங்களை போலத்தான் பெண்ணை கையைபிடிச்சு ரோட்டை கிராஸ் பண்ண முயற்சித்தேன் ஆனால் அந்த பெண் ஊரைக் கூட்டி விட்டது. அது என் பெண்ணல்ல அடுத்த வீட்டு பெண்ணையும் என் வீட்டு பெண்ணா நினைச்சதது தப்பாங்க
@athira
பதிலளிநீக்குஓ அஞ்சு நன்றி.. மதுரைத் தமிழன்.. நண்பர்... சரி இனி மறக்க மாட்டேன்ன் எனக்கு ஞாபக சக்தி அதிகம்.. யூ நோ.. மீக்கு இப்போ சுவீட் 16.. இதையும் அங்காங்கு அடிக்கடி ஞாபகப் படுத்த வேண்டிக்கிடக்கு:)
உங்க ஞாபகசக்தியை கண்டு வியக்கிறேன் ஆனால் அதே சம்யத்தில் நீங்க ஒன்றை மட்டும் மறந்துட்டீங்க் நீங்க் சுவிட் 16 டைம்ஸ் எத்தனை என்று சொல்ல மறந்துட்டீங்க
@athira
பதிலளிநீக்குஅஞ்சுவைக் காணம் கதை படிச்சு மயங்கிட்டாவோ என நினைச்சேன்ன்.. ஏனெனில் நானே சரியான சென்சிட்டிவ் அதாவது ரோட்டில் ஒரு குருவி செத்துக் கிடப்பதை பார்த்தாலே அன்று முழுக்க கலங்கிப்போயிருப்பேன், சாப்பிடக்கூட முடியாது, ஆனா அஞ்சு என்னைவிட மோசம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பல சந்தர்ப்பங்களில் “இதுவும் கடந்து போகும்” என மனதை தேற்றிக் கொள்ளோனும்...
அதாவது ரோட்டில் ஒரு குருவி செத்துக் கிடப்பதை பார்த்தாலே அன்று முழுக்க கலங்கிப்போயிருபீங்க உங்களால் சாப்பீடு இருக்க முடியாது ஆனால் வீட்டில் கோழியை கைமா பண்ணி சாப்பிடுங்க
பதிலளிநீக்கு@athiraa . மக அமெரிக்கா வாராங்களா வரட்டும் வரட்டும் வரும் போது பயந்தாங்க்கொள்ளி அம்மாவை அங்கேயேவிட்டுவிட்டு வரட்டும் அதுமட்டுமல்லா இங்கே ஒரே ஊரில் இ ருந்தாலும் முதல் 6 மாதம் அவர்கள் தனியாக கல்லூரி ஹாஸ்டலில்தான் இருந்து படிக்கனும்
பதிலளிநீக்கு@Angelin
நானும் half மதுரை பொண்ணுதான் (ஆனால் மதுரையில் பிறக்கலை )என்பதை மிகுந்த சந்தோஷத்தோடு கூறிக்கொள்கிறேன் மை டியர் ப்ரண்ட் :)
///
ஆஹா நானும் உங்களை மாதிரி அரை அதாவது half ஆள்தான் நானும் மதுரையில் பிறக்கலை பிறந்தது செங்கோட்டையில் குற்றாலம் அருகில் உள்ள ஊர்
@Angelin @athira கடவுளே என்னை இவர்களிடம் இருந்து காப்பாற்றியத்ற்கு நன்றி
பதிலளிநீக்கு@avargal unmaigal
பதிலளிநீக்கு//நானும் உங்களை போலத்தான் பெண்ணை கையைபிடிச்சு ரோட்டை கிராஸ் பண்ண முயற்சித்தேன் ஆனால் அந்த பெண் ஊரைக் கூட்டி விட்டது. அது என் பெண்ணல்ல அடுத்த வீட்டு பெண்ணையும் என் வீட்டு பெண்ணா நினைச்சதது தப்பாங்க
//
..?:@@:IY^$&RURR$"QWsfhn&$"!"^GARRRRRRRRRRR பூரிக்கட்டைல டெய்லி நீங்க வாங்குவதில் ஆச்சரியமேயில்ல
@AVARGAL UNMAIGAL //@Angelin @athira கடவுளே என்னை இவர்களிடம் இருந்து காப்பாற்றியத்ற்கு நன்றி//
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் ஒருத்தர் சந்தோஷப்பட விட மாட்டோம் ..கடவுள் உங்களை காப்பாத்துனதா தப்பு கணக்கு போடாதீங்க :)
இன்னிக்கு சர்ச்சில் வேலை ..முடிச்சிட்டு வருவேன்
ஹஹஹ தமிழா நாங்கள் பார்க்கும் போது நீங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து காயங்கள் ஆறி தேறி வந்ததாகத்தான் அறிந்தேன்.... காயங்களுடன் வந்தால் எல்லோரும் பரிதாபப்படுவார்களே அப்படின்ற காரணத்துனால லாஸ்ட் மினிட் வரை கூட நீங்க வரது தெரியக் கூடாதுனு ஆறினா வருவேன்னு சொன்னதாகத் தகவல் கூட வந்ததே.
பதிலளிநீக்குஒரு வேளை மதுரைத் தமிழன் கட்டுடன் வந்தால் ஏமாந்து விடாதீர்கள் அவர் மதுரைத்தமிழந்தான் அவர் ரகசியமா வரதுக்கு மாறுவேஷத்தில வருவார்னு விசு கூட எனக்கு முன்னரேயே தகவல் சொல்லிவிட்டாரே!
சரி பரவால்ல அப்படியே போகட்டும் நீர் டூப்புதான்யா....ஹிஹிஹீஹி
கீதா
//கீதாவுடைய அம்மா: உங்களிடம் ஒரு கேள்வி ஏனம்மா நீங்க உங்க பெண்ணை மிகவும் அப்பாவியாக வளர்த்து இருக்கீங்க...இப்ப பாருங்க இந்த மதுரைத்தமிழன் அவரை அடிக்கடி ரொம்பவே கலாய்ய்சு கிட்டு இருக்கிறார்.//
பதிலளிநீக்குஅம்மாவுக்கு இந்த மெசேஜை பிரார்த்தனையின் மூலம் அனுப்பினேன் தமிழா வாட்சப்பவிடச் சீக்கிரமா போகுமோனு நினைச்சேன் பரவால்ல போயிருச்சு. ஹும் எனக்குச் சப்போர்ட் இல்ல...போனா போகுது மதுரைப் பிள்ளை கலாய்க்கட்டும்...நீ எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு சொல்லிட்டாயங்க்...!!!!!
கீதா
கதை அருமை ,அதைப் போன்றே பின்னூட்டங்களும் ரசிக்க வைக்கின்றன :)
பதிலளிநீக்கு///Avargal Unmaigal said...நானும் உங்களை போலத்தான் பெண்ணை கையைபிடிச்சு ரோட்டை கிராஸ் பண்ண முயற்சித்தேன் ஆனால் அந்த பெண் ஊரைக் கூட்டி விட்டது. அது என் பெண்ணல்ல அடுத்த வீட்டு பெண்ணையும் என் வீட்டு பெண்ணா நினைச்சதது தப்பாங்க////
பதிலளிநீக்குஅச்சச்சோ இவ்ளோ அப்பாவியா இருக்கிறீங்களே.. எவ்ளோ நல்ல விசயம் பண்ணியிருக்கிறீங்க... நில்லுங்கோ வாறேன்ன்.. அஞ்சூஊஉ எங்கே அந்தப் பரிசூஊஊஊஊஊ:) எடுத்து வாங்கோ இப்பவே இந்த மேடையில் வைத்தே கொடுத்திடுவோம்:)..
////Avargal Unmaigal ...//// பிளீஸ்ஸ்ஸ் கொஞ்சம் பிரித்தானியா வரை வந்து ஒருக்கால் “ஊத” முடியுமோ?:)...
பதிலளிநீக்குஅஞ்சூஊஊஊ நீங்க சொன்னீங்களே மதுரைத் தமிழன் என் நண்பர்தான் அவர் அடிக்கல்லாம் மாட்டார் என, அப்போ அவரைக் கொஞ்சம் ஊதச் சொல்லுங்கோவன்:) காசா பணமா.. ச்சும்மாதானே.. ஊதிக் காட்டச் சொல்லுங்கோ:)
Angelin
பதிலளிநீக்கு///அப்படியெல்லாம் ஒருத்தர் சந்தோஷப்பட விட மாட்டோம் ..கடவுள் உங்களை காப்பாத்துனதா தப்பு கணக்கு போடாதீங்க :)
இன்னிக்கு சர்ச்சில் வேலை ..முடிச்சிட்டு வருவேன் ///
பிதாவே சர்ச்சில் இருக்கும் ஃபாதரை நீதானப்பா காப்பாற்ற வேண்டும்
@கீதா
பதிலளிநீக்குடூப்புன்னு நம்புறதுக்கு உங்களுக்கு இத்தனை வருடங்கள் ஆயிருக்கின்றன
@கீதா
பதிலளிநீக்கு///நீ எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு சொல்லிட்டாயங்க்...!!!!!///
அம்மா நல்லாதான் சொல்லிட்டாங்களோ எப்பவும் சிரிச்சுகிட்டே இருந்தால் அதை வேற மாதிரி அல்லவா சொல்லூவாங்க..பார்த்தீங்களா உங்க அம்மா கூட எனக்கு சப்போர்ட்தான் பண்ணுறாங்க
@Bagawanjee KA .
பதிலளிநீக்கு//கதை அருமை ,அதைப் போன்றே பின்னூட்டங்களும் ரசிக்க வைக்கின்றன :)//
எல்லாவற்றிற்கும் காரணம் ஸ்ரீராமும் அவரின் சிஷ்யகோடிகளும்தான். நன்றி
@athira
பதிலளிநீக்கு//அச்சச்சோ இவ்ளோ அப்பாவியா இருக்கிறீங்களே.. எவ்ளோ நல்ல விசயம் பண்ணியிருக்கிறீங்க... நில்லுங்கோ வாறேன்ன்.. அஞ்சூஊஉ எங்கே அந்தப் பரிசூஊஊஊஊஊ:) எடுத்து வாங்கோ இப்பவே இந்த மேடையில் வைத்தே கொடுத்திடுவோம்:)..///
நயன்தாரா கையில் இருந்து பரிசை தர ஏற்பாடு செய்யுங்கள்... நயந்தாராவுக்கு வயசாயிடுச்சு என்று இளம் கதாநாயகிகளை ஏற்பாடு பண்ணிவிட வேண்டாம். அதுமட்டுமல்ல உங்களை போல "இளம் பெண்களிடமே" நான் படும்பாடு போதுமே ( இதை படிக்கும் இரண்டு பெண்களுக்கு சந்தோஷம் தாளாமல் துள்ளி குதிச்சு காலை கையை உடைத்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல) வயசானலும் நயன் அழகாகத்தான் இருக்கிறாங்க
athira said...
பதிலளிநீக்கு////Avargal Unmaigal ...//// பிளீஸ்ஸ்ஸ் கொஞ்சம் பிரித்தானியா வரை வந்து ஒருக்கால் “ஊத” முடியுமோ?:).//
நீங்க நல்லா சமைச்சு போட்டால் நான் நல்லாவே ஊதி பெருத்து போவேன்... இங்க மாமி சமைச்சால் பத்திய சாப்பாடாகவே இருக்கும் அதனால நானே சமைச்சு சாப்பிடுகிறேன் அதனாலதான் ஏதோ பார்க்கிற அளவிற்கு இருக்கிறேன் மாமி சமையலை சாப்பிட்டால் ஆவியாகத்தான் திரிந்து கொண்டிருப்பேன்
மதுரைத்தமிழன் மைண்ட் வாய்ஸ் : ஆஹா ஒரு கதைக்கே மூன்று ஆடுகள்( கீதா, athira
பதிலளிநீக்குAngelin ) நம் வசம் சிக்கிவிட்டன கரந்தையார் சொல்வது போல வாரத்திற்கு ஒரு கதை எழுதி அதை ஸ்ரீராம் மூலம் பதிவிட்டால் எவ்வளவு ஆடுகள் சிக்கும் கந்தா கடம்பா எனக்கு கதை எழுத வராதே இப்ப நான் என்ன செய்ய கடவுளே எனக்குமட்டும் கதை எழுதும் ஆற்றலை கொடுத்துவிட்டால் என்னிடம் சிக்கும் ஆட்டை வைத்து பிரியாணி பண்ணி உனக்கு பூஜை பண்ணுவேனே மனம் இறங்கய்யா
ஹா ஹா :) நாங்கல்லாம் ஆட்டுத்தோல் போர்த்திட்டு திரியற பொல்லாத புலிகள் :) டைம்டேபிள் போட்டுக்கிட்டு ஒவ்வொருத்தர் காலை வாரி விடுவோம்
பதிலளிநீக்குஒண்ணா சேர்ந்து உங்களுக்கு கல்லு கட்டி ஆத்துலயா குளத்திலேயே தள்ளி விட்ருவோம் :)
நயன்எ துக்கு ? முதல்மரியாதை பொன்னாத்தாவையே கூட்டிட்டு வரோம் உங்களுக்கு பரிசு கொடுக்க:) ஹோப் யூ டோன்ட் மைண்ட் கிக்கிய்க்கீ
ஹா ஹா ஹாஅ என்னாதூஊஊ நயன்:) கையால வேணுமோ?:) ஹையோ எனக்கு கண்ட நிண்ட பழமொழி எல்லாம் வாயில வருதேஏஏஏஎ ஆனா சொல்ல மாட்டேன்ன்ன்ன், இவருக்குப் பூரிக்கட்டை பத்தாது, மாமீஈஈஈ எடுங்கோ அந்த "ஏ கே 36 " ஐ .... முடியல்ல சாமி எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே:)
பதிலளிநீக்கு