Friday, February 10, 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170210 :: ரிக்ஷா பாடல்கள்ரிக் ஷா!  முன்பு கையால் இழுத்துக் கொண்டு செல்வது போல இருக்கும்.  பின்னர் அது மிதிக்கும் வாகனமாக மாற்றப்பட்டது.  பின்னர் அதிலேயே மோட்டார் பொருத்தப்பட்டு வந்தது.  வாகனங்களை வைத்து படங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் சில.. குதிரையில், மாட்டுவண்டியில், சைக்கிளில், பைக்கில், ரயிலில் என்று வாகனங்களில் பாடிக்கொண்டே வருவது ஒரு ஸ்டைல்...  அதில் இந்தவாரம் ரிக்ஷாவில் வந்துகொண்டே பாடும் சில பாடல் காட்சிகளை பதிவேற்றுகிறேன்..  சும்மா ஒரு சுவாரஸ்யம்தான்!

இந்தப் பாடல் நாகேஷ் நடித்த கல்யாண ஊர்வலம் படத்திலிருந்து..  அருமையான நாகேஷ்..  டி எம் சௌந்தர்ராஜன் குரலில் என்ன ஒரு அருமையான பாடல்!அடுத்து எனக்குப் பிடிக்காத நடிகர் ( ! ) ஆனால் பிடித்த பாடகர் டி எம் எஸ் பாடிய ஒரு பாடல்.  முருகன் காட்டிய வழி படத்திலிருந்து..  ஒரு கொசுறுத் தகவல்.  இதில்தான் நடிகை ஸ்ரீப்ரியா அறிமுகம்.இளையராஜா இசையில் உருவான பாடலாக இருந்தாலும் அவ்வளவாக பிரபலமாகாத பாடல்.  இந்தப் பாடல்தான் பிரபலமில்லையே தவிர இந்தப் படத்தில் மற்ற பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.  மனோ குரலில் ரிக் ஷா மாமா படத்திலிருந்து..


போஜ்புரி படம் ஒன்றில் வரும் ரிக் ஷா பாடல்.  ஹீரோ மனோஜ் திவாரியாம்.  தேடும்போது கிடைத்தது..  பரவாயில்லை ராகம்... ச்சே.. ரகம்!சட்டம் என் கையில் பாடலைத் தவிர்க்கிறேன்!!

29 comments:

'நெல்லைத் தமிழன் said...

எம்ஜியார் பாடலை விட்டுட்டீங்களே. மற்றவை நல்லாருக்கு. ஏவிஎம் ராஜன் நடிப்பு பிடிக்காமல் போனதேனோ

Angelin said...

ரிக் ஷா ..எனக்கும் இந்த சேர்ந்து வர ஷா பிரச்சினை அடிக்கடி வரும் :) நம்ம டைப்பிங்க்ல எதோ பிரச்சினைனு நினைச்சேன்.. ரிக் ஷா பாடல்களில் நாகேஷ் ஒட்டிய ரிக் ஷா தான்மிக பிடித்தது ..
ஹா ஹா :)ஏவிஎம் ராஜன் cry face மாதிரி ஆனா ஒரு படத்தில் ரொம்ப பிடிக்கும் அது தில்லானா மோகனாம்பாள்

athira said...

எல்லா ரிக்‌ஷோ வும் நல்லாத்தான் இருக்கு...
எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை பார்க்கப் பிடிக்காத நடிகர் எனில் அது அனைவராலும் விரும்பப்படும் எம் ஜி ஆர் தான். ஏனோ தெரியவில்லை அவரின் படம் ஏதும் பார்க்கவே பிடிக்காதெனக்கு.. ஆனா அவர் நடிச்ச படங்கள் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும், பார்க்காமல் காதால் மட்டும் கேட்பேன்.

Thulasidharan V Thillaiakathu said...

நாகேஷ் ரிக் ஷா சூப்பர். டி எம் எஸ் குரல் என்ன க்ளாரிட்டிப்பா..!!! யங்க் வாய்ஸ்..டி எம் எஸ் முருகனை அழைப்பதும் பிடித்தது.இப்ப நிஜமாவே பொருட்களின் விலை அப்படித்தான் இருக்கு. அப்பவே முருகனை அழைச்சு அவர் வரவே இல்லையோ இன்னும் விலை ஏறித்தான் இருக்கு!!! அப்பவே சொல்றார் பாருங்க பாப்பாவின் கேள்விக்கு விலைவாசி ஏறுவதற்கு காரணம் என்ன? அதுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்குனு சொல்றாரு பாருங்க இப்பவும் அதுதானெ!! என்ன நல்ல பாடல் தாங்க்ஸ்!!!வெண்டைக்காய் விலை இப்போ கிலோ 100 ஆமே அப்படியா? மயக்கம் வந்துவிட்டது.

சத்யராஜ் ரிக் ஷா பாட்டு கேட்டதுண்டு. பிரபலமாகவில்லையா இருக்கலாம்..போஜ்புரி...ஹிந்திப் பாட்டு சுமார் தான்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

ஐயோ சொக்கா இந்த அதிசயத்தை ஆச்சரியத்தை, ஆனால் உண்மையை எங்க சொல்லுவேன் எப்படிச் சொல்லுவேன்!!! சந்தோஷத்துல கையும் ஓடலை காலும் ஓடலை...ஐயோ என்ன அதிசயம்பா..ஜீ பூம்பா ஏதேனும் இருக்கா...மாயமா மந்திரமா...சொக்கா சொக்கா..

என்னத்துக்கு இப்படி ஒரு கூவல்?விஷயத்தைச் சொல்லு

அதை ஏன் கேக்கறீங்க இவ்வளவு நாள் ரகசியமாக இருந்த எங்கள் ப்ளாக் தமிழ்மண வாக்குப் பெட்டி இன்னிக்குக் கண்ணுல தெரிஞ்சுச்சே!!! வெள்ளிக்கிழமை தரிசனமோ??!!!! வாக்குப் போட்டதும் உடனே வாங்கிக்கிடுச்சே!!!! பிள்ளையார் பால் குடிச்சா மாதிரி, ஷிர்டி பாபா வாயிலிருந்து பால் வந்துச்சாமே அது மாதிரி எங்கள் ப்ளாக் தமிழ்மண வாக்குப் பெட்டி...இன்று தரிசனம்!!! ஹிஹிஹிஹி...பிள்ளையார், பாபா கதை எல்லாம் டுபாக்கூர்னு சொல்றா மாதிரி இதயும் சொல்லிடாதீங்கப்பா ...மெய்யாலுமே வாக்கு போயிருச்சு!!!

சரி நாளைக்கும் பெட்டி தெரியுதானு பார்ப்போம். இல்லைனா வெள்ளி தோறும் தரிசனம் தருமோ??!!!

ஒரு வழியா இன்னிக்கு வாக்கு போட்டாச்சுப்பா...

கீதா

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் இன்று 2 மணி நேரமா விட்டு விட்டு ரிபிறெஸ் பண்ணுறேன், கண்ணில் தெரியுதே இல்ல தமிழ்மணம்:(..

Asokan Kuppusamy said...

அனைத்தும் இனிமை பாராட்டுகள்

Bagawanjee KA said...

சோகம் என்னவென்றால் ,இன்றைக்கும் மேற்கண்ட பலவகை ரிக்ஸாக்கள் கல்கத்தாவில் ஓடிக் கொண்டுள்ளன :)

திண்டுக்கல் தனபாலன் said...

Superb (From Mobile)

G.M Balasubramaniam said...

எனக்கு இம்மாதிரி வாகனங்களில் சவாரி செய்வது பிடிக்காது மனிதனை மனிதன் இழுக்கும் அவலம்

கோமதி அரசு said...

பாடல்கள் பகிர்வு அருமை. ஓரு மாறுதல் நல்லாதான் இருக்கிறது.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான தெரிவுகள்
இனிமையான பாடல்கள்

Geetha Sambasivam said...

சில சமயம் இப்படி ஆகும் தான். ரிக்க்ஷா என்று எனக்கு அடிக்க வருது. ஆனால் அப்படி இடைவெளி விட்டால் அப்புறமா "க்" ஐ ஒட்டினாற்போல் கீ போர்ட் ஸ்ட்ரோக்கைக் கொண்டு வந்து டெலீட் தட்டுங்க. க்ஷா தானாகவே "க்" பக்கத்தில் வந்து உட்கார்ந்துக்கும். :ஹிஹிஹி, பாட்டெல்லாம் எதுவும் கேட்கலை! :))

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லைத்தமிழன்.. எம் ஜி ஆர் பாடல் போதாததற்கு காரணம் ரிக் ஷாக்காரன் படத்தில் அதில் பயணம் செய்தபடி வருமாறு பாடல் காட்சி இல்லை. அதிலிருந்து இறங்கி அப்புறம் பாடும் பாடல் "கடலோரம் வாங்கிய காத்து..."

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின்.. ஏ வி எம் ராஜன் நடித்த எந்தப்போ படமுமே பிடிக்காது எனக்கு. இந்தப் பாடல் ஓகே. ஆனால் நீங்கள் சொல்லியுள்ளபடி நாகேஷ் காட்சியில் வரும் பாடல்தான் பெஸ்ட்!

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா..

//எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை பார்க்கப் பிடிக்காத நடிகர் எனில் அது அனைவராலும் விரும்பப்படும் எம் ஜி ஆர் தான். ஏனோ தெரியவில்லை//

ஆ... இப்படிச் சொல்லும் ஆள் கூட உண்டா!

ஸ்ரீராம். said...

வாங்க கீதா.. அப்போதைய விலையே ஏறியிருக்குன்னா இப்போ என்ன சொல்ல! ஏழை பாருங்க.. என்ன ஆகுமோ ஏதும் புரியல்ல...!!!

ஸ்ரீராம். said...

மீள் வருகைக்கு நன்றி கீதா... ஒரு வழியாய் உங்களிடமிருந்து(ம்) ஒரு தம வாக்கு எங்களுக்கு விழுந்ததில் மகிழ்ச்சியே...

ஸ்ரீராம். said...

மீள் வருகையில் அதிரா.. நன்றி! உங்கள் வோட்டு எங்களுக்கு விழும் பாக்கியமில்லையா!

ஸ்ரீராம். said...

நண்பர் அசோகன் குப்புசாமி அவர்களுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

வாங்க பகவான்ஜி. சென்னையிலும் ஒரு சில இடங்களில் இந்த ரிக் ஷாக்கள் உண்டு. ஆனால் கையினால் இழுக்கும் ரிக் ஷாக்கள் வழக்கொழிந்து விட்டன.

ஸ்ரீராம். said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்..

//எனக்கு இம்மாதிரி வாகனங்களில் சவாரி செய்வது பிடிக்காது மனிதனை மனிதன் இழுக்கும் அவலம்//

அதுக்காக பாட்டு கூட கேட்காமல் போய்விட்டீர்கள் போலவே...

:)))

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அரசு மேடம்.

ஸ்ரீராம். said...

நன்றி யாழ்பாவாணன்.

ஸ்ரீராம். said...

நன்றி கீதாக்கா.. முதல் பாடல் நல்லா இருக்குமாக்கும்!

பரிவை சே.குமார் said...

நல்ல தொகுப்பு.

Geetha M said...

நல்ல நினைவுகள் நிழலாய் மனதில்...நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!