Saturday, February 4, 2017

இளைஞர்களின் சாதனை
1)  சாதாரணக் குப்பைகளைக் கழித்துக்கட்டும் வேலையே கடினமாக இருக்க, ஈ வேஸ்ட் எனப்படும் மின்கழிவுகளை வெற்றிகரமாக உபயோகமாக ரீசைக்கிள் செய்யும் 15 வயது   நிஷாந்த் ஜெயின்.

2)  ஒடிஷா மலைக்குடிக் குழந்தைகளின் வாழ்வை வளப்படுத்தவதற்கு தனது வளமான வேலையை விட்ட ஷாலினி.3)  இப்படியும் போலீஸ் உண்டு.  பெங்களூரு துணை ஆய்வாளர் கே. நாராயணன்.


4)  சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த இளைஞர் சமுதாயம் மீண்டும் மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, வரத்துக் கால்வாய்களை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.  (நன்றி எல்கே)
5)  விவசாயத்துக்குத்தான் தமிழ்நாட்டில் எவ்வளவு சோதனைகள்?  வரும் தண்ணீரை வழிமறித்து விடுவார்கள்,  அணை கட்டிக்கொள்வார்கள் அண்டை மாநிலத்துக்காரர்கள்.  அந்நிலையில் விருது வாங்கியிருக்கும் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூரையடுத்த இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுயநலமில்லா மனிதர்கள்... அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

கோமதி அரசு said...

நம்பிக்கையை விதைக்கும் நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள்.

'நெல்லைத் தமிழன் said...

அனைவருக்கும் பாராட்டுக்கள். (தேடிப்பிடிக்கும் உங்களுக்கும்)

athira said...

அச்சச்சச்சோஒ என்னா இது “எங்கள் புளொக்” இப்படி மயான அமைதியாகிப் போய் இருக்கே:).. உள்ளே வர எனக்கே பயம்ம்ம்ம்ம்மாஅக்க் கிடக்கூஊஊஊ:).

/// இப்படியும் போலீஸ் உண்டு. /// ஹா ஹா ஹா இதைப் படிச்சதும், தொப்பிக்கு மேல் ஹெல்மெட் போட்டு, பெரீயா “வண்டி” உடன் நிற்பதனால சொல்றீங்க என ஒரு கணம் தப்பா நினைச்சிட்டேன்ன்:).. பின்புதான் லிங்கை டச்சுப் பண்ணிப் பார்த்தேன்..

KILLERGEE Devakottai said...

வாழ்த்துவோம்

athira said...

அதாவது “சாண் ஏற முழம் சறுக்கும்” என்பார்களே அதுபோல, இப்படியான நல்ல மனிதர்களைக் காட்டிலும் ஏமாற்றுபவர்கள், மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனாலேயே நாட்டில் பிரச்சனைகள்தான் அதிகம்...

நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

ஆனா ஆரும் கல்லெடுத்து அடிக்கக்கூடா:).. நல்லவர்களா இருந்து என்னதான் சாதிக்கிறோம், இன்னும் சோதனைகளைச் சந்திப்பதுதான் அதிகம், மோசடி செய்வோர்தானே நல்லா இருக்கிறார்கள் நாட்டில்.
நான் சின்ன வயதிலிருந்தே பொய் பேசக்கூடாது என்பதில் மிக உறுதியா இருப்பேன்ன், கணவர் குழந்தைகளிடமும் சொல்லியிருப்பது.... என்ன செய்தாலும் பறவாயில்லை ஆனா உண்மையை மட்டுமே பேசுங்கோ என.

ஆனா பின்பு ஒரு அண்ணாவை சந்தித்தேன் வலையுலகில்.. அவர் சொன்னார் இல்லை அது தப்பு... தேவைக்கு பொய் சொல்லலாம்... அகலியைக் காப்பாற்ற முனிவர்கூட பொய் சொல்லியிருக்கிறார் என... ஆனா நான் நினைப்பேன்.. பொய் சொல்வதை விட, உண்மை சொல்ல விருப்பமில்லாட்டில்.. மெளனமாகி விடுவது நல்லது என. பொய் சொல்லிட்டாவே அதிரா எனப் பெயரெடுப்பதை விட, பதிலே சொல்லவில்லையே அதிரா என திட்டுவது மேல் என நினைப்பேன்:))...

“யாரும் நன்மை செய்தாலும்.. நீங்கள் தீமை செய்யுங்கள்... யாரும் மெய்யைச் சொன்னாலும்.. நீங்கள் பொய்யைச் சொல்லுங்கள்... நேர்மையாய் வாழ்வதில் ஒன்றுமே இல்லையே”””... ஹையோ அஞ்சு கண்டால் தேம்ஸ்ல தள்ளி விடுத்திடப்போறாவே...:)

athira said...

நான் இதுபற்றி வீட்டில் கணவரிடம் தொடங்கி... அப்பா அம்மா அண்ணன் அத்தான், வெளியே இருக்கும் வயதில் மூத்தோரிடம் எல்லாம் இது பற்றி வாதாடியிருக்கிறேன்ன்ன்..

ஆனா எல்லோரும் சொல்லும் பதில்... அது முற்பிறப்பு வினையால்தால் இப்பிறப்பில் அப்படி இருக்கிறார்கள், இப்போ நல்லவர்களா இருப்போர் அடுத்த பிறப்பில் நல்லதை அனுபவிப்பார்கள் என...

ஆனா இதில எனக்கிருக்கும் பிரச்சனை.. போன பிறப்பு நமக்கு நினைவிலில்லை, அடுத்த பிறப்பு இருக்குதோ என்பது யாருக்கு தெரியும்... அப்போ இப்போ இருப்பது மட்டும்தானே நமக்கு தெரியும்.. நம்மை நல்லவர்களாக வாழ வைக்க இவர்கள் இப்படி சொல்கிறார்களோ என நினைப்பேன்ன்.. எதைத்தான் என் குட்டி இதயம் நம்பும் சொல்லுங்கோ?:)

athira said...

////உங்கள் ப்ளாக்! எங்கள் விருப்பம் !!///
அஞ்சூஊஊஊஊஊஊஊஊ ஓடியாங்கோ இனியும் நாங்க உயிரோடிருக்கோணுமோ?:) இந்த லிஸ்ட்ல எங்கட நேம்ஸ் இல்லவே இல்ல.. நான் நல்ல வடிவாப் பார்த்திட்டேன்ன் என் கண்ணுக்கு தெரியுதே இல்ல... எம்மையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்கும்வரை “உண்ணாவிரதம்”:) இருக்கப்போறேன்ன்ன்ன் தேம்ஸ் கரையில:))..

ஊசிக்குறிப்பு:
அஞ்சு வழமைபோல ஃபயர் எஞ்சினை ரெடியா வச்சிருந்து என்னைக் காப்பாத்திடுங்கோ:)) காலை வாரி விட்டிடாதைங்கோ கர்ர்ர்:))

Bagawanjee KA said...

பூங்கோதைக்கு மட்டுமல்ல ,அனைவருக்கும் இந்த வார பூங்கொத்தைக் கொடுக்கலாம் :)

G.M Balasubramaniam said...

இம்மாதிரி நல்ல செயல்களை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதற்கு பாராட்டுகள்

Angelin said...

வரத்துக் கால்வாய்களை சொந்த செலவில் சீரமைக்கும் இளைஞர்கள் , நல்ல விஷயத்தை செய்த காவல் நண்பர் நாராயணன் ,ஷாலினி ..இ கழிவுகளை ரீசைக்கிள் செய்யும் நிஷாந்த் பூங்கோதையின் பொய்க்காத நம்பிக்கை என் அனைத்துமே அருமை ..பாராட்டுக்கள் பகிர்வுகளுக்கு நன்றி எங்கள் பிளாக்

Angelin said...

@ Athiraav //இந்த லிஸ்ட்ல எங்கட நேம்ஸ் இல்லவே இல்ல.. நான் நல்ல வடிவாப் பார்த்திட்டேன்ன் என் கண்ணுக்கு தெரியுதே இல்ல.//

ஆமாம் எப்பவோ பார்த்தேன் ஆனா சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அவர்கள் ட்ரூத் நேமும் இல்லை ..அதனால் எங்க சார்பா அவரை 10 நாள் உண்ணாவிரதம் இருக்க சொல்லுவோம்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

இவர்கள் சிறந்தவர்கள் தான்
ஆனால்,
வரும் தலைமுறையினருக்கான
வழிகாட்டிகள்

Geetha Sambasivam said...

கல்லல் பற்றி ஏற்கெனவே படிச்சாலும் மறுபடி படிச்சேன். எல்லாமும் அருமையான பகிர்வு. தன்னலமில்லா மனிதர்கள் இருப்பதால் தான் இந்த அளவுக்காவது நடக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

விவசாய செய்திகள் அனைத்தும் மகிழ்வைத் தருகிறது! போலீஸ், நிஷாந்த், ஷாலினி வாவ்!!

துளசி வாசிக்க நேரமானதால்தாமதம்....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!