புதன், 22 பிப்ரவரி, 2017

புதன் 170222


சென்ற  வாரக்
கேள்விகள் : 

1 ) அடுத்த எண் என்ன? 

234, 136, 127, --

2)  What comes next? 
     Vikramaditya, Viraat, 

3) இவைகள் என்ன? 

சாயா , சிலம்பு குகை, மலைநாடு இளவரசன், குமார தேவன். 


பதில்கள் : 

1 )  பதில் கூறியவர் : நெல்லைத் தமிழன். சரியான பதில் யாருக்கும் தெரியாது! 
காலம்தான் சொல்லவேண்டும்! 

2 ) விக்ராந்த் சரியான பதில் . சொன்னவர்கள் : பெசொவி , அதிரா, பானுமதி, கீதா 

3 )  எல்லாமே சினிமாப் பெயர்கள். ஆரம்பக் காலங்களில் எம்ஜியார் நடித்து, வெளியில் வராத பல படங்களில் இவைகள் சில. 


இந்த வாரம் :  


1) what comes next? 

J   K    L    -- 


2) What comes next? 

<     >      ?    --  


3)   " தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுனைக்  கலந்தானந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே  " பாடலின் நடுவில் வரும் இந்த வரிகள். 

 ஆரம்ப வரிகள் என்ன?  
      

5 கருத்துகள்:

 1. 2. இவையெல்லாம் கணினியின் விசைப் பலகையின் கீழ் வரிசையில் வரும், எனவே அடுத்தது shift key.

  பதிலளிநீக்கு
 2. 1. டைப் ரைட்டர்/கணினி விசைப்பலகையில் நடு வரிசை. அதன்படி J,K,L, அடுத்து ;&:

  பதிலளிநீக்கு
 3. ஆடை கட்டி வந்த நிலவோ...?
  கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ...?
  இவள் ஆடை கட்டி வந்த நிலவோ...?
  கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ...?
  குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
  காடு விட்டு வந்த மயிலோ...?
  நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ...?

  துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை...
  சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை... (2)
  எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
  தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
  கிளை தான் இருந்து கனியே சுமந்து
  தனியே கிடந்த கொடி தானே...?
  கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
  காவினில் வாழும் கிளி நானே...!

  துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை...!
  சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை...!

  அந்தி வெய்யில் நிறத்தவளோ...?
  குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ...?
  உந்தி உந்தி விழும் நீரலையில்
  ஓடி விளையாடி மனம் சிந்தி வரும் தென்றல் தானோ...?
  இன்பம் தந்த மயில் இவள் தானோ..?

  ஆஹா....ம்ம்... லாலா...
  அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை...

  அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை...!

  வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை...!

  மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை...!

  இதயம் கனிந்து எதையும் மறந்து
  இருவர் மகிழ்ந்து உறவாட...

  நன் நேரமிதே...

  மனம் மீறிடுதே...

  நன் நேரமிதே...
  மனம் மீறிடுதே...
  மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்...

  ஆஆஆஆ

  ஆஆஆஆஆ

  ஆஆஆ

  பாடல் : ஆடை கட்டி வந்த நிலவோ
  திரைப் படம் : அமுதவல்லி
  பாடியவர்கள் : டி.ஆர்.மஹாலிங்கம் - பீ.சுசீலா

  பதிலளிநீக்கு
 4. 1. ';' செமிகோலன் key. (அந்தக் காலத்தில் கற்றுக்கொண்ட ASDFGF LKJHJ வை நினைவுகூற வைத்துவிட்டீர்கள்)
  2. இதற்கு இரண்டு பதில் சொல்லலாம். ஒன்று. SHIFT Key (Keyboardல் அடுத்து வருவது). இரண்டு. <, >, =, <> இதில் ? இருக்கும் இடத்தில் = தான் வரும் (Less than, Greater than, Equal to, Not Equal to)
  3. எனக்கு கேஜிஜி சார், திண்டுக்கல் தனபாலனைப்போல் 65+ வயது இன்னும் ஆகவில்லை.

  பதிலளிநீக்கு
 5. 1) 2 answers are possible
  'M' ( English alphabetical order)
  ';' ( From typical keyboard)

  2) 'Shift' Key (typical keyboard)

  3) ஏற்கனவே தி.த. அவர்கள் பதில் சொல்லிவிட்டார்.

  @ KKG, Did you get my email dt. 20th Feb. 2017 ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!