வியாழன், 9 பிப்ரவரி, 2017

இருத்தலும் இல்லாது இருத்தலும்


மனைவியும் குழந்தைகளும் 
ஊர் சென்ற நாளில் 
தனியாய் இருந்த வீட்டின் 
கதவைத் திறந்து 
உள்ளே நுழைந்த போது 
வழக்கமான 
ஆரவாரமின்றி 
அமைதியாய் இருந்தது வீடு 


இல்லாத செருப்புகள் 
முள்ளாக மனதை உறுத்த...எப்போதும் கத்திக் கொண்டேயிருக்கும் 
தொலைக்காட்சிப் பெட்டி.
அணைந்து அமைதியாய் இருந்தது  விளக்கேற்றி நான் 
அமர்ந்த அறை தவிர 
மற்ற இடங்கள் 
இருளில் கிடந்தன என்னைக் கண்டால் 
எப்போதுமே 
எழுந்து வராத 
எங்கள் பூனை 
இன்று என் காலடியில் 
வந்து அமர்ந்து 
காலில் உடம்பு உரசி 
தலையைத் தரையில் சாய்த்துக்
கொள்கிறது நாற்காலிகளும், சோஃபாவும், 
டைனிங் டேபிளும் கூட 
வெறுமையாகவே இருந்தன 
என் குரலே 
என்னைப் பயமுறுத்தும் இந்தத் 
தனிமையில்  
சிரித்தால் என்ன? அழுதால் என்ன?
யாரும் கவனிக்காத வரை  
இரண்டும் ஒன்றுதான்!கூட்டத்தில் கூட 
தனித்திருக்கும் மனம் 
தனித்திருக்கையில்  
எதைத் தேடும்?

தனிமையும் அமைதியும் மௌனமும் 
வரம் 
என்றுதான் நினைத்திருந்தேன் 
நானும் தனியாக இருப்பதும் 
தனிமையில் இருப்பதும் 
ஒன்றுதானா, வேறு வேறா?இருத்தலும் 
இல்லாது இருத்தலும் 
இருவேறு வகையா?படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்...

63 கருத்துகள்:

 1. நல்ல கவிதை! கூட்டமாக இருக்கையில் தனித்திருத்தல் வசப்படுகிற மாதிரித் தனியா இருக்கையில் வசப்படாது! இது என்னோட அனுபவம்! :)

  பதிலளிநீக்கு
 2. இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதை கொண்டு வருவது தான் _______...!

  பதிலளிநீக்கு
 3. செம வரிகள்!!! ரொம்பவே ரசித்தோம்....நிறைய யோசிக்க வைத்தது!!

  துளசி : மேலும் கருத்துடன் வருகிறேன். இப்போ குக்கிங்க்!!! தனியாக இருப்பதால்!!!!!!!!!!!!!!!!!

  கீதா: தனியாக இருப்பதும்
  தனிமையில் இருப்பதும்
  ஒன்றுதானா, வேறு வேறா?//

  இரண்டுமே ஒன்றாகும் நேரங்களும் உண்டு! ஆனால் இரண்டும் வேறாகவும் இருக்கும் நேரங்களும் உண்டு அது நம் மனதில்தான் இருக்கிறது!

  தனியாக இருந்து தனிமையில் இருப்பதும் நடக்குமே!! அது மனதைப் பொருத்து!

  தனியாக இருந்து நம் வேலைகளை நன்றாகக் கவனித்துக் கொண்டு நம்மைச் சுற்றி உள்ளவர்களுடன் தொடர்புடன் வைத்துக் கொள்லலாமே அப்போது தனியாக இருந்தாலும் தனிமை இல்லை. தனியாக இருக்கும் போது புத்தகங்களும், செல்லங்களும் கூட இருந்துவிட்டால் தனிமையாவர் ஒன்றாவது! புத்தகம் மட்டுமோ அல்லது செல்லங்கள் மட்டுமோ இருந்தாலும் போதும்!!! ஒன்றுமே இல்லாமல் இருந்தாலும் போதும்!

  ஆனால் கூட்டத்தில் இருந்தும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டால் அதற்கு வேறு பெயர்!!!! அது மனதைச் சார்ந்தது. அப்போதேனும் நம் தனிமைக்கு தார்மீக ஆதரவு கிட்டலாம் கிட்டாமலும் போகலாம். ஆனால் தனியாக வாழ்ந்து தனிமையில் இருந்தால் ரொம்பவே கஷ்டம்!!! கொஞ்ச நேரம் தனிமையில் இருப்பது நல்லது ஆனால் தொடர்ந்தால் நல்லதல்ல!!!!

  (ரொம்ப ஓவரா நடிகர் விசு மாதிரி பேசிட்டனோ??!!! ஹிஹிஹி)

  பதிலளிநீக்கு
 4. இல்லாத போதும் இருத்தலை நினைவு படுத்தும் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 5. இருத்தலும்
  இல்லாது இருத்தலும்
  இருவேறு வகையா?//

  இரு வேறு வகை என்றாலும் இல்லாது இருத்தலிலும் இருத்தல் வருவதுண்டே...இருத்தலிலும் இல்லாது இருத்தல் வருமே!!! இந்த வரிகளும் உங்களது இறுதி வரிகளும் தொடர்புடன் செம!!! ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..

  கீதா

  பதிலளிநீக்கு
 6. எப்படி முயற்சி செய்தாலும் உங்கள் தமிழ்மணப் பட்டை எங்களுக்கு வருவதே இல்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. மிகவும் இரசித்தேன் நண்பரே சிறந்த வரிகள்

  பதிலளிநீக்கு
 8. தனிமையே துணையிருக்க தனிமை எங்கிருந்து வந்ததோ?
  வெறுமை நிறைந்திருக்க வீடும் வெறிச்சோடிக்கிடந்ததோ!

  பதிலளிநீக்கு
 9. இருந்தும் இல்லது இருக்க வேண்டும் :)

  பதிலளிநீக்கு
 10. எனக்கு இப்போதைக்கு தனிமை தான் பிடிக்குது. ஆனால் அது கிடைப்பதும் அரியதாக இருக்கின்றது.
  வயதான பின் நான் தேடும் தனிமை கிடைத்தாலும் அது ருசிக்காது என நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 11. நான் கவிதையைப் பெரும்பாலும் கடந்துசென்றுவிடுவேன். (இலக்கியங்களைத் தவிர). சமீபகாலமாகத்தான் அதை எப்படிப் புரிந்துகொள்ளமுடிகிறது என்ற ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்துள்ளேன். இந்தக் கவிதை இரண்டு விதத்தில் என்னுடன் ஒட்டிய காரணத்தினால் ரசிக்க முடிந்தது. நல்ல வரிகள்.

  இங்க வீட்டுல பசங்கள்லாம் இருந்தபோது, கொச கொச என்று எப்போதும் பேச்சு நிறைந்திருக்கும். தனிமை வாய்த்திடாதா என்று தோன்றும். தியானம் வாய்த்திடாமல் கோபம் அதிகமாகும். எல்லாரும் லீவுக்குப் போய்விட்டால் (பொதுவாக அவங்க 2 வாரம் முன்னால போயிடுவாங்க), முதல் இரண்டு நாட்கள்.... அதீத அமைதி, தனிமை, என்ன வேண்டுமோ எப்போ வேண்டுமோ அப்போ சாப்பிடலாம். ரொம்ப டிசிப்பிளின்டாக இருக்க வேண்டியதில்லை. மனைவி ஊர் சென்ற நாளில் இந்தக் கவிதை சொல்லும் அனுபவம் வாய்க்காது. இரண்டு நாட்கள் கழிந்தபின்புதான் இந்த அனுபவங்கள் வாய்க்கும். ஆனால் இதற்கு ரெமெடி உண்டு. மீண்டும் அவர்கள் அனைவரும் வரும்போது, வீடு பழையபடி ஆகிவிடும். பேப்பர் குப்பை, புத்தகம் இரைந்துகிடப்பது எல்லாம் ஆரம்பமாகிவிடும். இதைப் போன்ற தனிமை/வெறுமை அனுபவம் இன்னுமொரு சந்தர்ப்பத்திலும் வாய்க்கும். வீட்டில் அப்பாவோ அம்மாவோ நம்மோடயே இருந்து, அவர்கள் மறைந்த ஓரிரு நாட்களில் வீடு வெறிச்சோடிக்கிடப்பதுபோல் இருக்கும். இது ரெமெடி இல்லாத தனிமை.

  "தனியாக இருப்பதும் தனிமையில் இருப்பதும்" -வேறு வேறுதான். 'தனித்திரு-விழித்திரு'-இது அனுபவம். 'தனிமை-இது வெறுமை'. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

  ஏகாந்தனின் வரிகளும் பொருத்தமாக இருந்தன.

  பதிலளிநீக்கு
 12. ஹா ஹா ஹா .. இந்தத் தனிமை எங்க ஸ்ரீராமையும் கவிஞராக்கிட்டுதே...:).. அப்படியே மிக மிக அமைதியான ஒருவர், ரொம்ப நல்ல ஒருவர், மிக மென்மையான ஒருவர், மிகவும் நொந்து போன ஒருவர், மிகக் கவலையில் இருக்கும் ஒருவர், மிகத் தனிமையில் வாடும் ஒருவர் எழுதியதுபோல இருக்கு கவிதை படிக்க.....

  இக்கவிதையை அழகாக ருசிச்சு ரசிச்சுப் படிக்கவும் ஒரு தனிமை தேவைப்படுதே:)..

  பதிலளிநீக்கு
 13. தனிமையில் இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும், மன அமைதியைக் கொடுக்கும் பல நேரங்களில், ஆனா தனியாக இருப்பது என்பது கொடுமை...

  தனிமையில் இருப்பதென்பது நிரந்தரமில்லாதது ஆனா தனியாக இருப்பது நிரந்தரமானது... அதனால அங்கு மகிழ்ச்சிக்கு இடமேது..

  பதிலளிநீக்கு
 14. ///இரு வேறு வகை என்றாலும் இல்லாது இருத்தலிலும் இருத்தல் வருவதுண்டே...இருத்தலிலும் இல்லாது இருத்தல் வருமே!!! இந்த வரிகளும் உங்களது இறுதி வரிகளும் தொடர்புடன் செம!!! ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..

  கீதா///

  அச்சச்சோ நம்ம கீதாவுக்கு என்னமோ ஆச்சூ:) இதுக்குத்தான் ஓவரா வோக்கிங் போகாதீங்க எங்கட அஞ்சுவைப் போல எனச் சொல்லுறது:)).. என் பேச்சை யாரு கேட்கிறாங்க??:) ஒரு பூஸ் குட்டிகூடக் கேட்காது:))

  பதிலளிநீக்கு
 15. ///Thulasidharan V Thillaiakathu said...
  எப்படி முயற்சி செய்தாலும் உங்கள் தமிழ்மணப் பட்டை எங்களுக்கு வருவதே இல்லை.

  கீதா///

  அதே அதே... எனக்கும் பல நேரங்களில் அப்படித்தான்.. இருந்தாலும் விட்டிட மாட்டேன்ன்ன்.. எங்கிட்டயேவா:))...

  பதிலளிநீக்கு
 16. கவிதை அருமை ..தனிமை கவிதைக்கு வழி வகுத்து விட்டதே :)தனிமையும் தனித்திருப்பதும் வெவ்வேறு :)தனித்திருக்கலாம் ஆனால் யாராலும் நாம் தனிமைப்படுத்தப்படக்கூடாது
  ஆனால் என்னாலெல்லாம் தனியா இருப்பதை நினைத்தும் பார்க்க முடியாது ..எங்க வீட்ல ஒரு முப்பது ஜோடி புறா 40 கோழி ஆடு மாடு நாய் பூனை கிளி இவங்ககூட கொஞ்சூண்டு மனிதர்கள் நாங்கள் வாழ்ந்தோம் :)
  அதனால் தனிமை என்ற பீலிங்க் வந்ததில்லை இப்பவும் மூணாவது வீட்டு கருவாண்டி என் கால் கிட்ட படுத்திருக்கான் :)அவனுக்கே தனிமை புடிக்கல ..இப்போ தனிமை இளவயதில் சிலருக்கு இனிமையா இருக்கும் ஆனால் வயதான காலத்தில் இங்கே பல இந்திய வெளிநாட்டு தாத்தா பாட்டிங்களை பார்க்கும்போது அவங்க யாராவது பேச மாட்டார்களா எனதனிமையில் ஏங்குவது புரியும்

  ஆமாம் //இருத்தலும்
  இல்லாது இருத்தலும்
  இருவேறு வகையா?//

  பதிலளிநீக்கு
 17. ஆஹா.... அருமையான சிந்தையின் அற்புத சிதறல்கள்.

  பாராட்டுக்கள்.

  உங்கள் தனிமை விரைவில் முற்றுப்பெற்று இனிமை பொங்க வாழ்த்துக்கள்.

  பி.கு: தங்களின் தனிமை துயரை நுட்பமாய் உணர்ந்து நட்புடன் பரிவாய் உடலுரசி ஆறுதலாய் அமைந்த அந்த பூனைக்கும் என் வாழ்த்துக்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
 18. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 19. தனிமை வேறு, தனியாக இருத்தல் என்பது வேறு. எப்போதுமே தனிமை என்பது எல்லாமல் இருத்தல் நல்லது. ஒரு சில சமயங்களில் நாம் தனித்து இருப்பதை விரும்புவோம். தனிமையிலே இனிமை காண்பது என்பது. ஆனால் தனிமை உணர்வு என்பது மனிதனுக்கு வருவது நல்லதல்ல.

  நான் வார இறுதி நாட்களில், விடுமுறைகளில் மட்டும்தான் வீட்டில், குடும்பத்துடன். மற்ற நாட்களில் தனியாகத்தான் இங்கு பாலக்காட்டில். ஆனால் இது வரை தனிமை என்பதை உணர்ந்தது இல்லை. தனியாக இருக்கப் பிடிக்கும். ஆனால் தனிமை உணர்வு பிடிப்பதில்லை.

  நல்ல கவிதை. வாழ்த்துகள்.

  துளசி

  பதிலளிநீக்கு
 20. அச்சச்சோ நம்ம கீதாவுக்கு என்னமோ ஆச்சூ:) இதுக்குத்தான் ஓவரா வோக்கிங் போகாதீங்க எங்கட அஞ்சுவைப் போல எனச் சொல்லுறது:)).. என் பேச்சை யாரு கேட்கிறாங்க??:) ஒரு பூஸ் குட்டிகூடக் கேட்காது:))//

  யாரது இப்படி மியாவ் மியாவ்னு ரொம்ப மிரட்டுவது!!! அட நம்ம அதிரா அதான் இப்படி அதிருது புள்ள!!! ஹலோ நான் ஏஞ்சல் எல்லாம் வாக் போறதுனால்தான் எங்க மூளை எல்லாம் நல்லா வேலை செய்யுதுங்கோ..ஹிஹிஹிஹி மூளை எல்லாம் எங்கருக்குனு இந்தப் பொதுவெளில கேட்கப்படாது அதிரா...பெர்சனல் பாக்சுக்கு வாங்க உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்த சொல்லறேன்...என் மூளைய எங்க வைச்சுருக்கேனு...

  கீதா

  பதிலளிநீக்கு
 21. தனிமை இரண்டும் கொண்ட ஒரு தவ நிலை!

  பதிலளிநீக்கு
 22. ///அதிரா...பெர்சனல் பாக்சுக்கு வாங்க உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்த சொல்லறேன்...என் மூளைய எங்க வைச்சுருக்கேனு...

  கீதா//// நோஓஓஓஓஒ வெயிட் நான் நம்பமாட்டேன்ன், நில்லுங்கோ முதல்ல என் “கிட்னியை” க் கழட்டி பிரீசரில வச்சிட்டு வாறேன்ன்:)).. நாம எப்பவும் உசாராக்கும்..க்கும்..க்கும்..:)

  பதிலளிநீக்கு
 23. மனைவி மக்கள் வீட்டில் இல்லையேல்
  அது வீடல்லவே
  அருமையாய் உணர்த்தியிருக்கிறீர்கள்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 24. நன்றி கீதாக்கா..எதுவுமே சூழ்நிலையைப் பொறுத்தது ன்று சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 25. நன்றாகச் சொன்னீர்கள். நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 26. நன்றி துளஸிஜி.. யோசித்து விட்டு இரண்டு முறை சொல்லியிருப்பதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. நன்றி கீதா. சிந்தனையைத் தூண்டி விட்டேனோ... புத்தகங்களும் செல்லங்களும் இருந்தாலும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும்? என் டாக்டர் நண்பர் ஒருவர் ஒரு நாள் கூடத் தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்றார்.

  பதிலளிநீக்கு
 28. மீள்வருகைக்கு நன்றி கீதா. பாராட்டுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 29. மீள் மீள் வருகையில் தமிழ்மண வாக்கு பற்றிச் சொல்லியிருப்பதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. நன்றி ஏகாந்தன் ஸார். தனிமை(யை)யே துணையா(க்)கும், வெறுமையையே நிறைவாக்கும் உங்கள் வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 31. நன்றி நிஷா.

  //ஆனால் அது கிடைப்பதும் அரியதாக இருக்கின்றது. //

  அரிதாக இருப்பதால்தான் பிடிக்கிறது. அடிக்கடி வந்தால் சலித்துப்போகும்

  :)))

  பதிலளிநீக்கு
 32. நன்றி நெல்லைத்தமிழன். படைப்பின் கருத்தோடு நம் அனுபவங்கள் ஒத்துப்போகும்போதுதான் படைப்பு நம் மனதுக்கு நெருங்கியதாகிறது. அந்த வகையில் இந்தப் படைப்பு உங்களுக்குத் பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 33. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

  பதிலளிநீக்கு
 34. நன்றி செல்லப்பா யக்யசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 35. நன்றி அதிரா. ஏற்கெனவே சில கவிதைகளைக் கிறுக்கியுள்ளேன். அதாவது கவிதை என்று நினைத்துக்கொண்டு! மனவரிகள் என்ற தலைப்பில் தேடிப்பார்க்கவும்!! (சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். பழைய பதிவுகளைத் தேட வேலை வைத்து விடுகிறேன், இல்லை? ஹிஹிஹி...)

  பதிலளிநீக்கு
 36. வாங்க அதிரா... எத்தனை பெரிய கூட்டம் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தனித்தீவுதான்! ஆனால், தனிமனிதன் தீவல்ல என்றொரு படைப்பு முன்னர் வெளியான நினைவு!

  பதிலளிநீக்கு
 37. அதிரா.. தம பட்டை உங்கள் கண்களிலிருந்து எப்படி மறைகிறது என்று எனக்குத் தெரியமாட்டேன் என்கிறது!

  பதிலளிநீக்கு
 38. வாங்க ஏஞ்சலின்.

  //தனிமை கவிதைக்கு வழி வகுத்து விட்டதே//

  இல்லை, நான் தனிமையில் இல்லை. என்னைச் சுற்றி எப்போதும் எட்டிலிருந்து பத்து பேர்கள் இருக்கிறார்கள்!!!

  //.எங்க வீட்ல ஒரு முப்பது ஜோடி புறா 40 கோழி ஆடு மாடு நாய் பூனை கிளி இவங்ககூட கொஞ்சூண்டு மனிதர்கள் நாங்கள் வாழ்ந்தோம்//

  ஒரு பழைய ஜோக் நினைவு வருகிறது.

  "தனியாவா இருக்கீங்க?"

  "இல்லை. என் சிஸ்டரோட இருக்கேன்.."

  எங்கே உங்க சிஸ்டர்?"

  "இதோ..." என்று தன் டிரான்சிஸ்டரைக் காட்டுவார் அவர்!

  பதிலளிநீக்கு
 39. நன்றி சகோதரி கோயில் பிள்ளை. முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

  பதிலளிநீக்கு
 41. நன்றி நண்பர் பால சிவசங்கரன். முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 42. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளஸிஜி. வரிகள் மனதில் பதிந்ததால்தான் மீள் மீள் வருகை என்பதில் சந்தோஷம் வருகிறது.

  பதிலளிநீக்கு
 43. நன்றி நேசன். நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை. மகிழ்ச்சியும், சந்தோஷமும்.

  பதிலளிநீக்கு
 44. நன்றி வக்கீல், நண்பர் நன்றி @நொரண்டு - ஈரோடு.

  பதிலளிநீக்கு
 45. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
 46. எப்பொழுதும் நாம் தனியாக இருப்பதே இல்லை.

  நம் மனம் இன்னொருத்தராய் கூடவே துணைக்கு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 47. //தனிமனிதன் தீவல்ல என்றொரு படைப்பு முன்னர் வெளியான நினைவு! //

  'மனிதன் தீவல்ல' என்ற அற்பதமான குறுநாவலை உஷா சுப்பிரமணியன் எழுதியிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 48. தனிமை இனிமைதான், வெறுமை தோன்றாத வரை. தனிமையின் வெறுமையைத்தான் அருமையான கவிதையாக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.!
  //தனியாக இருப்பது வேறு, தனிமையில் இருப்பது வேறா?// இந்த வரிகள் "மௌன விரதம் என்றல் பேசாமல் இருப்பது மட்டும்தானா"? என்ற காஞ்சி மா முனிவரின் கேள்வியை நினைவூட்டியது. வளரட்டும் கவிதை!

  பதிலளிநீக்கு
 49. அருமையான எண்ணங்கள்
  சிறந்த பாவரிகள்

  பதிலளிநீக்கு
 50. அருமை.... அழகான கவிதை...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 51. அருமை. மனம் அமைதி நாடும் நேரங்களில் தனிமை இனிமை என்றும் தோன்றும். தனியாக விடப்படுகையில் அதே தனிமை அச்சுறுத்துகிறது.

  /தனியாக இருப்பதும்
  தனிமையில் இருப்பதும்
  ஒன்றுதானா, வேறு வேறா?/

  வேறு வேறுதானோ ?

  /இருத்தலும்
  இல்லாது இருத்தலும்
  இருவேறு வகையா?/

  சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!