வியாழன், 2 பிப்ரவரி, 2017

பதிவர்களின் எதிர்பார்ப்புகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் - நிறைவுப் பகுதி



     "ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?"

     என்ற எங்களின் கேள்விக்கு வலைப்பதிவை நண்பர்கள் பதில் சொல்லும்  நிறைவுப்பகுதியில் இன்று ஜீவி ஸார், கீதா சாம்பசிவம் மேடம், தில்லையகத்து கீதா, மிடில் க்ளாஸ் மாதவி ஆகிய பதிவர்களின் கருத்துக்களைக் காணலாம்.

     இந்தப் பகுதிக்கு பதில் அனுப்பி எங்களை கௌரவித்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் நன்றிகள்.



=================================================================






2018-ம்  வருட ஆரம்பத்தில் பொருளாதாரம்கலைஇலக்கியம்விஞ்ஞானம்அரசியல் இவற்றில் என்னன்ன மாற்றங்கள்முன்னேற்றங்கள் வரும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று  ‘எங்கள் பிளாக்  திருஸ்ரீராம் கேட்டிருக்கிறார்.



                      

மாற்றம் என்பது சயின்ஸ் விதி.  அந்த மாற்றத்தில் தான்  உலகின் உயிர்ப்பே இருக்கிறது.   அந்த விதி அமுலாகவில்லை என்றால்  உலகமே ஸ்தம்பித்துப்  போகும்.



இன்னொன்று.  எந்த மாற்றமும் திடீரென்று ஏற்பட்டு விடுவதில்லை.   இதற்கு அடுத்தது இது என்று அதன் வளர்ச்சிப் போக்கில் ஒரு வழிமுறை இருக்கிறது.   கருவாய் இருக்கும் குழந்தையின் முழு வளர்ச்சியும் முடிந்து வெளிவருவது போல.  முழு மாற்றத்தை  நோக்கிய இந்த படிப்படியான வளர்ச்சி இல்லாது போயின்  அது அரைகுறைப் பிரசவமாகி விடும்.   பூவிலிருந்து நேரடியாக கனி இல்லைபூவாகிக் காயாகிக் கனிய வேண்டும்.  



சில  அதிரடி மாற்றங்கள் திடீரென்று தோன்றிவிட்டது போல தோற்றம் கொள்ளுமே தவிர அதன் மாற்றத்திற்கான process  அதனுள்ளேயே புதைந்திருப்பது புலப்படாமல் பூகம்பம் போல சில  நேரங்களில் வெளிப்படுவதால் நமக்கு அப்படித் தோன்றுகிறது.  அந்த பூகம்பத்திற்குப்  பின்னாலும் அதைத் தொடர்ந்த மாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது தான் இயற்கையின் விதி. 



இந்திய பொருளாதார வளர்ச்சிப் போக்கில் பணநோட்டு இல்லாத பரிவர்த்தனை என்பதை இலக்காகக் கொண்டதின் ஆரம்பம்  தான் சில ரூபாய் நோட்டுகளின் ஒழிப்பு என்ற பெயரில் அமுலுக்கு வந்திருக்கிறது.   பணநோட்டு இல்லாத பிளாஸ்டிக் அட்டை பரிவர்த்தனைக்கு அடிப்படைக் காரணம்  மக்களின் செலாவணிகள், விற்பனைகள் அத்தனையும் கணக்குக்குள் கொண்டு வருவதற்காகத்தான்.   கணக்கில் வராத எந்த செலாவணியும்  விற்பனையும்  இல்லை என்று ஆகிவிட்டால்  எல்லா செலவுகளுக்கும் விற்பனைக்கும் ஒரு நியாயம் கிடைக்கும்கையூட்டு அவலங்கள் குறையும்பணம் தன் மதிப்பை இழக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து நிற்க வழி ஏற்படும்விலைவாசிகள் ஒரு  கட்டுக்குள் வரும்ஆரம்பத்தில் மருந்து கசந்தாலும்  போகப்போக நீடித்த பலன் எதிர்பார்க்கலாம்.

 


இது ஆரம்ப கட்டம் தான். மாற்றங்களின் நிர்பந்தம் மேலும் மேலும் வளர்ச்சிப் போக்கில் மாறிக்கொண்டே இருக்கும் இயற்கை விதியின் செயல்பாடு ஆகையால் இந்த  பணநோட்டு  இல்லா பரிவர்த்தனை மாற்றம் இப்படி ஆரம்பித்ததே, ஆரம்பித்தவர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் செல்லும்.   மத்தியில் ஆளும் ஆட்சி இதை  ஆரம்பித்து வைத்தது என்றால்  அவர்கள் அடுத்த கட்டத்திற்கு இந்த ஆரம்பத்தை நகர்த்திச் செல்லாமல் இருக்க முடியாதுஅடுத்த கட்டம் எதுவாக இருக்கும் என்பது அடுத்த கேள்வி.



அடிமட்டத்தில் ஆரம்பித்த கணக்கில் வராததை கணக்கெடுக்கும் ஆரம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மேல் மட்டத்தை நோக்கி நகராமல் இருக்க முடியாதுநகரவில்லை என்றால் ஆரம்பமானதின் காலகட்ட கட்டாயம்,   ஆரம்பித்தவர்களைத் தவிர்த்து விட்டு இதை மேலும் நகர்த்தக் கூடிய திறமைசாலி யார் என்று தேர்ந்தெடுத்து அவர் கையில் மேல் நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயத்தின் சாவியை ஒப்படைக்கும்.



எந்த மாற்றங்களும் எந்த ஒரு தனிநபராலும் ஏற்படுவதில்லை.   மாற்றங்கள் இயற்கையானது.   மாற்றங்களுக்கான தேவைகள் திறமையான தனி நபர்களை உபயோகித்துக் கொண்டு அடுத்த அடுத்த மாற்றங்களை நிகழ்த்திக்  கொண்டு முன்னேறுகிறது என்பதே உள்ளார்ந்த உண்மை. அதனாலேயே அவை நிகழ்வதற்கு கருவியாக உபயோகப்படும் நபர்கள் தாம் நமக்குத் தெரிவதால் அவர்கள் சரித்திர புருஷர்களாகின்றனர்மஹாத்மாவிலிருந்து இன்றைய பிரதமர்  மோடி  வரை இந்தக் கதை தான்.  


பிரிட்டிஷார்  அடக்குமுறை நுகத்தடியின் கீழ் சிக்கித் தவித்த அவலச் சூழ்நிலைகளும்,  விடுதலை தாகமும்,  மாற்றத்திற்கான தேவையும் தான்  மஹாத்மா என்ற மா மனிதரை உருவாக்கியது.    மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்கள் சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டிய காலக் கட்டாய சூழ்நிலையில் வல்லபாய் படேலின் ஆற்றலை காலம் உயபோகித்துக் கொண்டது.    தனியார் வசமிருந்த  வங்கிகள் தேசிய மயமாதலின் போதும்,  மன்னர் மானியங்கள் ஒழிக்கப்பட்டப் போதும் இந்திரா காந்தி அம்மையாரின் தீரத்தையும் விவேகத்தையும் காலம் மிகச் சரியாக கணித்து செயல்படுத்திக் கொண்டது.  கள்ளப் பணமும் கறுப்புப்  பணமும்  குவிந்து நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்கு சவால் விடுகிற அவலச் சூழ்நிலையில்  காலம் இன்றைய பிரதமரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.



ஆக, அடுத்த அடுத்த மாற்றங்களின் நகர்வுகளுக்காக  இந்த சரித்திர நாயகர்கள் செயல்படுவது காலத்தின்  கட்டாயம்இவர் இல்லை என்றால் இன்னொருர் இந்த காலத்தின் கட்டாயத்திற்கு உபயோகப்பட்டு  சரித்திர நாயகரின் மகுடத்தைச் சூட்டிக்கொள்வார் என்பதே வரலாற்றின் படிப்பினையாகிப் போன நிதர்சனம்.


இந்திரா காந்தி அம்மையார் வங்கிகளை தேசிய மயமாக்கியதும்ராஜிவ் காந்தி தொலைத்தொடர்புத் துறையில் அதன் வேகப்பாய்ச்சலுக்காக விதைகளை ஊன்றியதும்  அது அதன் வளர்ச்சிப் போக்கில் மலர்ச்சி கொண்டு இன்றைய  கட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்கு அடித்தளமாகியிருக்கிறது.   எதற்காக நகரின் பகுதிக்கு பகுதி கிளைகளைக் கொண்டிருக்கும் வங்கிகள் இருக்கின்றனவோ,   எதற்காக சாதாரண லேண்ட் லைன் தொலைபேசி, ஸ்மார்ட் போன் உபயோகம் வரை வளர்ந்திருக்கிறதோஅந்த வளர்ச்சிப் போக்கை உபயோகப்படுத்திக் கொள்ளும்  காலத்தின் கட்டாயமாக பிரதமர் மோடி அவர்களின் செயல்பாடுகளை ஒரே நேர்கோட்டில் பார்க்க வேண்டும்அப்படிப் பார்த்தால்  கனிந்து வரும் இன்றைய பொருளாதார மாற்றங்களின் சூட்சுமத்தை ஓரளவு உணரலாம்.  

ஒரு நாட்டின் தனித்த பொருளாதார வளர்ச்சி என்று பேச முடியாத காலம் இது.   எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிவலிமை, நலிவு எல்லாமே உலகப் பொருளாதார எழுச்சியையும் வீட்சியையும் ஒட்டியிருக்கிறது.   உலக நாடுகள் அத்தனையும் பொருளாதார மாயச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கின்றன.   அந்த பிணைப்பிற்கேற்ப போட்டி போட்டுக் கொண்டு வளர வேண்டிய சூழ்நிலை  இயற்கையான தேவையாக உருவாகியிருக்கிறது.   

இந்தியா போன்ற தேசத்தில் எந்த மாற்றத்தின்  பலனும் சாதாரண மக்களுக்கு நன்மைகள் பயக்குமெனில் அந்த மாற்றம் அவர்களின் ஆசை அபிலாஷைகளையும் உள்ளடக்கிக் கொண்டு மேலும் மேலும் வளர்ச்சிப் போக்கில் வேகமெடுக்கும்.  . 

ஏற்ற தாழ்வுகளும் பொருளாதார சிக்கல்களும் நிறைந்த நாட்டில் தனி நபர் வழிபாடுகளைக் குறைத்துக் கொண்டு காலத்தின் கட்டாயத்திற்கு செயல்படும் சரித்திர நிகழ்வுகளை இனம் கண்டு   கவனம் சிதறாது நோக்கமே குறிக்கோளாக மாறிப் போனால்            மாற்றங்களின் வேகம் பூரணத்தை நோக்கி விரையும்.

பூரணம் என்று எதுவுமில்லாமல் அதுவும் அதற்கு அடுத்த மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தம் தான் சரித்திர விசித்திரம்.

ஆக,  2016 இறுதியில்  துவங்கிய  பணமில்லா பரிவர்த்தனைக்கான  ஆரம்ப முயற்சிகளின் நீட்சிப் போக்கு  2017-லும் தொடரும்.   அப்படித் தொடர்வதற்கான பலன்கள்  சாதாரண மக்களை சென்றடைந்தால்அதன்  வளர்ச்சி வேகத்தை அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்..

அடுத்தது  இலக்கியம்.

எது இலக்கியம் என்பது ரொம்பவும் சிக்கலான கேள்வி.  

அதனால் அந்த  சிக்கலில் தலை  கொடுக்காமல்,   எதெல்லாம் இலக்கியம் என்று நாம் பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறோமோ அவற்றிலிருந்து ஆரம்பிப்போம்ஒட்டு மொத்த இந்தியாவின் முகமே தமிழகம் இல்லை என்றாலும்  நாம் நம்பிக்கொண்டிருக்கிற இலக்கிய வளர்ச்சியில் இங்கு என்ன நடக்கிறது என்பதைப்  பார்ப்போம்.  

ரொம்ப காலமாக தமிழகத்தில் வெளிவரும் நாலைந்து பத்திரிகைகள் தாம்  நாவல்கள்சிறுகதைகள் போன்ற இலக்கிய முயற்சிகளுக்கு காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டிருந்திருக்கின்றன.     இந்தப் பத்திரிகைகளில் வெளிவந்த  தொடர்கதைகள் தாம்  புத்தக ஆக்கம் கொண்டு நாவல்களாக நமக்கு தோற்றம் காட்டியிருக்கின்றன.    இந்தப் பத்திரிகைகளில் எழுதி நமக்குத் தெரிந்தவர்கள் தான் எழுத்தாளர்களாக  நம் மனசில் பதிந்திருக்கிறார்கள்கல்கியிலிருந்து இன்றைய சுபாஇந்திரா செளந்திர ராஜன் வரை.

தமிழ்ச்செல்வன்வேல. இராமமூர்த்திபாரதிபாலன்சிவகாமிதேவ காந்தன்,   பூமணிகந்தர்வன்சோலை சுந்தரபெருமாள்இரா. நடராஜன் என்று வெகு ஜன  பத்திரிகை  வெளிச்சத்தில்  முகம் அறியாதவர்கள் நிறையப் பேர் நிறைய   மக்கள்    இலக்கியத்திற்கான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் பொதுவாக சிறுபத்திரிகைகளுக்குச் சொந்தமானவர்கள்.   தமிழகத்தின் தலைவிதி  சிறு முதலீட்டில்  வெகுவான சிரமங்களை மேற்கொண்டு இலக்கிய தாகங்களுக்காக வெளிவந்து  பொருளாதார இடர்பாடு வேள்வியில் மாய்ந்து போன சிறுபத்திரிகைகள் ஏராளம்.

அந்த ஏராளத்தில் ஏகப்பட்டதை சாதித்தவர்களின் சாதனைகளெல்லாம்  பெரியதொரு   வாசகர் வட்டத்திற்கு அறிமுகமாகமலேயே போய்விட்டனகல்கி பத்திரிகை சீராட்டவே  மேலாண்மை பொன்னுச்சாமியைக் கூட  நமக்குத் தெரியும்..








இதே கல்கி பத்திரிகையில்  சமீப இதழ் ஒன்றில் சாரு நிவேதிதா  எழுத்தாளர் பா.வெங்கடேசனின்பாகிரதியின் மதியம்’  படைப்பைப் பற்றிச் சொல்லி   பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் செரித்துக் கொண்டு போகும் நாவல் இது என்று குறிப்பிடுகிறார்.   கடந்த பத்தாண்டுகளில் இது போல் ஒன்றிரண்டு நாவல்களையே சுட்டிக் காட்ட இயல்கிறது என்கிறார்.   இன்றைய நிலையில் கூட வெகுதிரள் பத்திரிகைகள் வெளியிட்டு அடையாளம் காட்டப்படாததால் இப்படிப்பட்ட ஆகச்சிறந்த எழுத்துக்கள் எல்லாம்  பரந்த வாசகர் வட்டம் அறியப்படாமலேயே போயிருக்கிறதுசொல்லப்போனால்  ஜெமோவும்சாருவும்   சமீப காலமாகத்  தான் தமிழகத்து இந்த  நாலைந்து பத்திரிகைகளில்  காணக்கிடைக்கிறார்கள்.    அவர்களுக்கும்  கட்டுரைகள்பத்தி எழுத்துக்கள் என்று தான் இடம் கிடைத்திருக்கிறதே தவிர  சிறுகதை, தொடர்கதை என்று  ஆஸ்தான எல்லைக்குள்  உள்ளடக்கப்படவில்லை.    

தனித்த விஷயத்  தெளிவுள்ள வாசகர் வட்டம்  தமிழகத்தின் இந்த நாலைந்து பத்திரிகைகளைச் சீந்தவேயில்லை என்பது இன்னொரு பக்க  உண்மை.   ஜெயமோகனைக் கேட்டால்  தொடர்கதைகளெல்லாம் நாவல்களே  அல்ல என்று  ஒரே போடாகப்  போட்டு விடுவார்.

இந்த நாலைந்து பத்திரிகைகளுக்கும்  சினிமா, அரசியல் என்று  மாய்ந்து மாய்ந்து எழுதவே பக்கங்கள் போதவில்லை.   தொடர்கதைசிறுகதையெல்லாம்  தொட்டுக்கொள்ள ஊறுகாய்கள்.    எந்தப்  பகுதி வாசகர்களையும் விட்டு விடக்கூடாது பாருங்கள், அதற்காக  நவீன இலக்கிய  தொடர்புள்ளவர்களுடம் பாலம் போட  சாருவும் ஜெமோவும்.

கேட்டால்  சிறுகதைதொடர்கதையெல்லாம் யார் சார் படிக்கிறார்கள்?’   என்று நம்மையே திருப்பிக் கேட்பார்கள்புத்தகப் பதிப்பாளர்கள் கூட  சிறுகதைத் தொகுப்புநாவல் என்றால் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்.   மொத்தத்தில் தமிழகத்தில் படைப்பிலக்கியம் என்பது அருகிப் போன காலம் இது

என்றைக்கு சகல பகுதி பத்திரிகை வாசகர்களும் ஒருமனதாக விரும்புவது வாசிப்பது சினிமாவும், அரசியல் செய்திகளும் தாம் என்று இந்தப் பத்திரிகைகள் முடிவெடுத்து விட்டனவோ  அப்பொழுது  2017-ம்  இப்படியேத் தான் போகும்.

ஆதி காலத்திலிருந்தே இங்கு வாரப் பத்திரிகைகள் தாம் வாசிப்போருக்கு  நெருக்கமான ஒன்று.   வாசிப்புப் பழக்கமுள்ள குடும்பங்களில்  ஏதாவது ஒரு வார இதழை வாங்குவதையும்  எந்த வேலையும் இல்லாத நேரம் கிடைக்கும் ஒரு நேரத்தில் அதை அனிச்சையாக புரட்டிப் பார்த்து  விசிறி அடிப்பதையும் பரவலாக நீங்கள் பார்க்கலாம்.    அந்தக் காலத்தில்  வாரப்பத்திரிகைகளை மடியாமல்கசங்காமல் மேஜை மீது வைத்திருப்பார்கள்.   பத்திரிகைகளில் வரும் பிடித்தமான நல்ல பகுதிகளைக்  கிழித்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள்பல வாசகர்களின் வீட்டு நூல் நிலையம் என்பது அந்த பைண்டிங்  சேமிப்புகள் தாம்.

தனியாக வெளியிடப்படும்  புத்தகங்களில் இலக்கியம்  படைக்கப்படவில்லையா என்று இன்னொரு கேள்வி பாக்கியிருக்கிறது.   புத்தகங்களின்  அடக்க விலை  எளிய வாசகர்களின் கைக்கு எட்டாத விஷயம்மலிவுப் பதிப்பு கூட  பொன்னியின் செல்வனைத் தான் போடுவார்கள்அதனால் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்றால் பதில் சொல்லக் கூட முடியாமல் விக்கித்து நிற்கிறோம்.

அதனால்  2017-ம்  பத்திரிகைஇலக்கியம்  என்று எடுத்துக் கொண்டால்  மண் தேய்ந்து போன இதே வண்டிப் பாதை தான்




==================================================



கலை பற்றி அதிகம் சொல்லத் தெரியலை என்றாலும் மறைந்து கொண்டிருக்கும் பல கலைகளும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாய் நாதஸ்வரம். தமிழ்நாட்டிலேயே இன்று நாதஸ்வரம் முக்கியத்துவம் பெறுவதில்லை. அதற்குப் பதிலாகச் செண்டை மேளம் போன்றவை இடம் பெறுகின்றன. இவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தான். ஆனால் தமிழ்நாட்டுக் கலைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் இருக்கணுமே! 

அடுத்து இளைஞர்களிடம் சினிமா மோகம் குறையணும். அதன் மூலமாவது தமிழ்நாட்டு அரசியலில் ஓர் மாற்றம் ஏற்படணும். மற்றபடி அரசு கொடுக்கும் இலவசங்களை எதிர்பார்க்காமல் மக்கள் சுயமாகச் சம்பாதித்து எதையும் வாங்கிக்கணும்னு முடிவு கட்டணும். டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூடணும். மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றப் பாதையில் நாடு செல்ல மக்கள் ஒத்துழைக்கணும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். 

நாடு முழுவதும் பொதுவான கல்வித் திட்டமும், பள்ளிகள் திறக்கும் நாளும் நாடு முழுவதும் ஒன்று போல் இருக்க வேண்டும். மொழிப் பிரச்னை, சீதோஷ்ணப் பிரச்னை என்று இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடைமுறைக்குக் கொண்டு வரணும். ஆரம்பகால இடையூறுகள் நேரும்; நேரலாம். அதை எதிர்கொள்ள மனப்பக்குவம் மக்களுக்கு வரவேண்டும். தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னை தீர வேண்டும். முக்கியமாய்க் காவிரிப் பிரச்னை!  இன்னும் இருக்கு. நீளமாப் போயிடும்.




==================================================================

தில்லையகத்து கீதா ரெங்கன்  :





முதலில் எங்களுக்கும் இதனை அனுப்பி எங்கள் கருத்தையும் கேட்டதற்கு எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி. துளசி தற்போது விடுமுறையில் வீட்டில் இருப்பதால் தன்னால் இதில் பங்குபெற முடியவில்லை என்று தனது வருத்தத்தை எங்கள் ப்ளாகிற்குத் தெரிவிக்கச் சொல்லிவிட்டு, இந்தச் சின்ன தலையில், அதுவும் மூளையைத் தொலைத்துவிட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் என் தலையில் பெரும் பாரத்தைச் சுமத்திவிட்டுத் தப்பித்துவிட்டார்!!!!


அரசியல் பற்றியோ, பொருளாதாரம் பற்றியோ அடுத்து என்ன நடக்கும், நடக்கலாம் என்று எனக்குக் கணித்துச் சொல்லத் தெரியாது. ஆனால், இந்நாட்டின் சாதாரணக் குடிமகன், கடைக்கோடி குடிமகனும் எதிர்பார்க்கும், விரும்பும் சிலவற்றை இங்குக் குறிப்பிடுகிறேன். எல்லாமே “டும் டும்” தான்! “க்கும், லாம்” என்று எனக்குச் சொல்லும் அளவிற்கு அறிவில்லை.


சரி! முதலில் பொருளாதாரத்திற்கு வருகிறேன். எப்போதுமே ஒரு திடீர் மாற்றம் வரும் போது மக்கள் முதலில் எதிர்ப்பார்கள்! பின்னர் அதுவே பழகிவிடும் என்பதால் அமைதியாகிவிடுவார்கள். ஆனால், பிரதமர் மோடி அறிவித்த செல்லா நோட்டுகளைப் பற்றிய அறிவிப்பிற்கு அவ்வளவாக எதிர்ப்பில்லை. காரணம் எல்லோருமே விரும்பிய கறுப்புப் பண ஒழிப்பு. துபாயிலிருந்து புழங்கும் ஹவாலா பணம், கறுப்புப் பணம், மற்றும் கிழக்காசிய நாடுகளில் கேரளத்தவர் அதிகம் வேலைபார்ப்பதால் வரும் பணத்தின் முதலீடும் அதிகம் உள்ள கேரளத்தில் இதனால் சற்று பாதிப்பு அதிகம்தான். நடைமுறையில் வரும் சிக்கல்களை ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவு. அதில் சில சிக்கல்கள் எழுந்து எதிர்க்காத மாநிலங்களிலும் சாமானியர்களையும் பாதிக்கும் அளவிற்கு வந்திருப்பதால் அவரது முடிவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.


ஆனால், இந்தச் செல்லா நோட்டை அறிவிக்கும் முன் ஸ்விஸ் வங்கியில் பதுங்கியிருக்கும் பணத்தை மீட்டெடுப்பேன் என்றதை அவர் நிறைவேற்றியிருக்க வேண்டும். எதையோ சாதிக்க நினைத்து சாமானியர்களையும், சிறு தொழில்களையும் பாதித்த இந்த முடிவிற்கு முன் அவர் பெருந்தலைகளின் ஊழல் பணத்தை வெளியில் கொண்டுவந்திருக்க வேண்டும். விஜய் மால்யாவை கோர்ட்டில் நிறுத்தியிருக்க வேண்டும்.  2 ஜி ஊழல் இதற்கு முன் வெளியில் வந்து யார் என்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்று வெளியில் வரவில்லையா என்ன? அவர்கள் சில நாட்களேனும் சிறையில் இருக்கவில்லையா என்ன…அப்படியிருக்க விஜய் மால்யாவை முதலில் நாட்டிற்குள் மக்கள் முன் நிறுத்தியிருக்க வேண்டும். பெரிய முதலைகளின் பணத்தை வெளியில் கொண்டுவந்திருக்க வேண்டும். லாக் செய்திருக்க வேண்டும். ஊழலை ஒழிப்பேன் என்றால் அந்த ஊழல் சாமானியர்களிடம் இல்லையே. பெரிய இடத்தில்தானே இருக்கிறது. இதை எல்லாம் செய்ய முடியாத நிலை என்றால் பிரதமர், முதல் குடிமகன், எல்லா நாற்காலிகளும் வேஸ்ட். அவர்களால் முடியவில்லை என்றால் அட்லீஸ்ட், மீசையை முறுக்கி அறுவாளோடு திரியும் கில்லர்ஜியையோ, அரசியலை அக்கு வேறு ஆணி வேராக பீலாய்ந்து அவர்களுக்குச் சாணக்கியத் தந்திர ஐடியாக்களைக் கொடுக்கும் மதுரைத் தமிழனையாவது கன்ஸல்ட் செய்திருக்கலாம்.


அவர் சொல்லும் கேஷ்லெஸ் பொருளாதாரம் என்பது மிகவும் நல்ல தீர்வு. அதாவது எல்லாவித பண வர்த்தகமும் கணக்கில் வர வேண்டும் என்பதே. ஆனால், நம் நாட்டில் அதை எப்படி அவர் நடைமுறைப்படுத்துவார் என்பது கேள்விக்குறிதான்.
அப்படி வந்தால் எல்லோருமே அட்டை வைத்துக் கொள்ள வேண்டும். தினக் கூலி வேலை செய்யும் ஏழைமக்கள் உட்பட. கேஷ் லெஸ் என்றால் மினிமம் எவ்வளவு என்பது பற்றிய விவாதம் எழத்தான் செய்யும். அமெரிக்காவில் ஒரு டாலருக்கும் தேய்க்கலாம். இவை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது நல்ல விஷயங்கள் சில பேசப்படுவது தெரிகிறது. அப்படி நடந்தால்……நல்லதே. வரவேற்போம்…


அதாவது விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் ஒவ்வொரு ஐந்தாட்டுத் திட்டத்திலும் பேசப்பட்டாலும் நடைமுறையில் அதற்கான முக்கியத்துவம் கானல் நீர்தான்.  நடுவண் அரசு தொழில்நுட்பத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், விவசாயத் துறையிலும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதே சமயம், காந்தியின் பொருளாதாரத்தையும் உட்படுத்த வேண்டும் அப்போதுதான் கிராமங்கள் உயிர்த்தெழும் உழவர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்படும் என்று சொல்லுவதோடு நிறுத்தாமல் எல்லாம் ஒழுங்காகச் சென்றடைகின்றதா என்பதையும் மேற்கொள்ள வேண்டும்.


இந்த நேரத்தில் நிச்சயமாக காந்தியின் பொருளாதாரம் மிகவும் பயன்படும். கிராமத்து மக்கள் நகரங்களை நோக்கி நகர நகர அது ஒரு நாட்டின் வளர்ச்சியை நிச்சயமாகப் பாதிக்கும். விவசாயமும், கால்நடைத்துறையும் வளர்ந்தால் ஒரு நாட்டின் வளர்ச்சி பெருகும் என்பது மறுக்க முடியாத உண்மை. (மோடி குஜராத்தி, காந்தி குஜராத்தி, நீயும் குஜராத்தியா என்று கேட்டு வாட்சப்பில் சுற்றி வராமல் இருந்தால் சரி ஹிஹிஹிஹிஹி!!) விவசாயத்தையும், கால்நடைத் துறையையும் வளர்க்க தொழில்நுட்பத்தைப் புகுத்துகிறேன் என்று ஒழிக்க வேண்டிய ஆன்லைன் வர்த்தகத்தையும், இடைத்தரகர்களையும், மேலும் புகுத்தி ஏழைக் குடியானவர்களிடமிருந்துப் பறிக்கப்பட்டு பெரிய முதலைகளின் கையில் இவை சிக்கிவிடாமல் இருக்க வேண்டும். உழவர்களுக்கு அவர்களது உழைப்பிற்கான, விளைச்சலுக்கான இலாபம் சென்றடைய வேண்டும். உழவர்களே நேரடியாகச் சந்தையில் இறங்க வேண்டும்.


விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும். கேஷ்லெஸ் கொண்டுவருவதென்றால், கார்டு தேய்ப்பதால் யாருக்கோ செல்லும் கமிஷன் பணம் கட் செய்யப்பட வேண்டும். பணப்புழக்கம் வேண்டும் என்றாலும், விலைவாசி ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் பெருக வேண்டும், நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஏழைக்கும் பணக்காரருக்கும் உள்ள வித்தியாசம் நீங்க வேண்டும்.


ஒரு நாட்டின் முதற்கண் கல்வி. அந்தக் கல்வி நாடு முழுவதும் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி அமைய வேண்டும். ஏழை பணக்கார வித்தியாசம் இருக்கக் கூடாது. தொடக்கக் கல்விமுதல் எல்லாமே அரசின் கீழ் வர வேண்டும். விஞ்ஞான ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சிக் கூடங்கள் பெருக வேண்டும். விளையாட்டு மைதானங்கள் இல்லாத கல்விக் கூடங்களை முதலில் மூட வேண்டும். அதே போன்று ஆய்வுக் கூடங்கள் இல்லாத பள்ளிகள், கல்லூரிகளை இழுத்து மூட வேண்டும். கல்வியில் தனியார் கூடாது, டொனேஷன் கூடாது. அரசின் கீழ் வந்துவிட்டால் இவை எல்லாம் ஒழிந்துவிடும். கல்வித் துறையில் பினாமிக்கள், ஊழல் ஒழிய வேண்டும். எந்த “த்துவமும், யிசமும்” இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும்


அதே போன்று பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமும் அரசின் கீழ் வர வேண்டும். எல்லோருக்கும் மருத்துவம் நல்ல முறையில் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் அவையும் கட்டுப்பாடு, கண்காணிப்பிற்குள் இருக்க வேண்டும். பெட்ரோல் விலை குறைய வேண்டும். கச்சா எண்ணையின் விலை குறைந்தாலும் நம்மூரில் மட்டும் அதன் விலை குறைவதே இல்லை. பன்னாட்டுச் சந்தையில் நம் பணத்தின் மதிப்பு உயர வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்


இலக்கியம், கலை உலகம் இதிலெல்லாம் என்ன மாற்றங்கள் வரும் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் தொழில்நுட்பம் பெருகிவருவதால், எல்லாமே அதீதமாகத் தொழில்நுட்பம் சார்ந்து வளர்ந்து வரத்தான் செய்கிறது. இனியும் வளரும் என்பதில் ஐயமில்லை.  இளைய சமுதாயம் பயன் பெரும். சினிமா துறையில் இளைஞரகள் பலர் இறங்குவதால், தொழில்நுட்ப ரீதியாகப் பல வளர்ச்சிகள் வந்துள்ளன. இனியும் உகலத் தரத்திற்கு இணையாக வரும் வாய்ப்புகள் உண்டு. பாடல்கள் தொழில்நுட்ப ரீதியாக நல்ல முன்னேற்றத்துடன் வரலாம்...ஆனால் தரம் பற்றிச் சொல்லத் தெரியவில்லை..


இலக்கிய உலகில் வாசிப்பு குறைந்து வருகிறது. மக்களின் கவனம் வேறு திசையில் இருப்பதால். தொழில்நுட்பம் இலக்கிய உலகில் நன்மையையும் புகுத்தியிருக்கிறது. அதனால் சில கெட்டவையும் இருக்கிறதுதான். நன்மை என்று பார்த்தால் மியப் பெரிய நன்மை, நம்மைப் போன்றோர் எழுதுவதற்கு இந்தத் தொழில்நுட்பம் எவ்வளவு உதவுகிறது! எத்தனை பேர் எழுத முன்வந்து அவர்களது திறமைகள் வெளி வருகின்றன. வயதானோர் முதல் இளம்வயதினர் வரை பலருக்கும் இந்த வலைத்தளம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடவும் உதவி வருவதால் இன்னும் பெருகலாம். தரம்? எப்போதுமே எதுவுமே அதீதமாகும் போது, தரம் சற்றுக் குறையும்தான். நாம் நல்லது மட்டுமே பார்ப்போம்.


மக்களின் வாழ்க்கை முறை மாறிவருகிறது. பணத்தின் வரவினாலும், தொழில்நுட்பத்தினாலும், அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல், சமூகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இனியும் அப்படி நிகழும். ஒரு பக்கம் ஹைடெக் ஆன்மீகம், மற்றொருபக்கம் சீரழிவுகள். சமுதாயச் சீர்கேடுகள் அதிகரிக்கும் என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது.


அரசியலைப் பொருத்தவரை.... ஊழலற்ற, பினாமிகளற்ற, மாஃபியாக்களற்ற, சுயநலமற்ற, மக்களின் நலனை மனதில் கொண்ட ஆட்சி வேண்டும். ஃபிடெல்காஸ்ட்ரோவைப் போல் இங்கு இப்போது யாருமில்லையே! புரட்சி செய்யும் ஒரு தலைவர் வேண்டும் எனலாம். பேராசைதான்…இருந்தாலும் ஆசைப்படுவதில் தவறு இல்லையே! சுருக்கமாக மக்கள் மனதில் என்றும் நீங்காது இடம் பெறும் அளவிற்கான கேரிஸ்மாட்டிக் தலைவர், மற்றும் ஆட்சியும் அமைய வேண்டும்.


கீதா


============================================================================



2016 எம் குடும்பத்திற்கு ஒரு சிரமமான ஆண்டாகவே கழிந்தது.  மறக்க முடியாத ஆண்டாகவும்.  அடுத்த ஆண்டுக்குள்  நியாயமான அபிலாஷைகள் பூர்த்தியாக வேண்டும், எனக்கும், எமக்கும், 'எங்களு'க்கும், எல்லோருக்கும்!!


 துறைவாரியாக   தனித்தனியாக இல்லாமல் மொத்தமாக என் எதிர்பார்ப்புகளைச் சொல்லுகிறேன் -




கடந்த ஆண்டுகளின் இயற்கைச் சீற்றத்தின் போது, மனிதம் மலர்ந்ததைப் பார்த்தோம். இயற்கைச் சீற்றத்துக்கு காத்திராமல் எப்போதும் எல்லாருடனும் சுமுகமாகப் பழக வேண்டும் என ஆசை. 'வசுதைவ குடும்பகம்' - உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வு மலர ஆசை.


டெக்னாலஜி வளர வளர, அதனைப் பயன்படுத்தி நாமும் முன்னேறுகிறோம். முக்கியமாக, இளைய சமுதாயம் நல்ல முறையிலே இதனைப் பயன்படுத்துகின்றனர்.   பொதுவாக இளைஞரைப் பற்றி பயந்தது போல் அல்லாமல்,  முக்கால்வாசிப் பேர் தெளிவாகவே இருக்கின்றனர்.   மிச்சமிருப்போரும் ஒருதலைக் காதல் மாயையிலிருந்து விலகி, முன்னேற்றப் பாதையில் கவனத்தை செலுத்திட ஆசை. இளைய பாரதம் எம் மகாகவி வரவேற்றதைப் போல் இருக்க ஆசை.


அடுத்த ஜனவரிக்குள் டிமானிடைஸேஷன் புண்ணியத்தில் அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்ட் கைப்பேசி முளைத்து, பயன்படுத்தவும் தெரிந்து  (கறுப்புப்) பணமில்லா பரிமாற்றத்தில் பரிமளிக்க வேண்டும் என்றும் ஆசை!


கலையும் இலக்கியமும் காலத்துக்கு ஏற்ப மாற்றத்தோடு வளரும்.  நம் மக்கள் விழிப்புடனேயே இருக்கிறார்கள் - ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.  ஊடகங்களில் சிறுமை கண்டு பொங்குகிறார்கள். இது அதோடு நின்று விடாமல் ஏதேனும் ஆக்கபூர்வமாகவும் மாற ஆசை. 


உதாரணமாக மரம் வளர்ப்பு. இலக்கியத்தில் புத்தக வடிவை விட டிஜிட்டலில் எல்லாம் மாறுகிறது.   எல்லா விஷயத்தையும் ஒரு மவுஸ் கிளிக்கில் தெரிந்து கொள்ளும் காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். அதனால் எழுதுபவர்கள் அனைவரும் நாம் வரலாறு படைக்கிறோம் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட ஆசை.



====================================================================

69 கருத்துகள்:

  1. அருமையான கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்
    நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  2. "நாம் நல்லது மட்டுமே பார்ப்போம்" என்று சகோதரி கீதா சொன்னதை மிகவும் வரவேற்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. //என்றைக்கு சகல பகுதி பத்திரிகை வாசகர்களும் ஒருமனதாக விரும்புவது வாசிப்பது சினிமாவும், அரசியல் செய்திகளும் தாம் என்று இந்தப் பத்திரிகைகள் முடிவெடுத்து விட்டனவோ அப்பொழுது 2017-ம் இப்படியேத் தான் போகும்.//

    ஸூப்பர் ஜீவி ஸார் அருமையாக சொன்னீர்கள் - கில்லர்ஜி

    ----------------------------------------------------

    //தமிழ்நாட்டிலேயே இன்று நாதஸ்வரம் முக்கியத்துவம் பெறுவதில்லை. அதற்குப் பதிலாகச் செண்டை மேளம் போன்றவை இடம் பெறுகின்றன.//

    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு ஒரு சல்யூட்

    ----------------------------------------------------

    //மூளையைத் தொலைத்துவிட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும்//

    ஐயய்யோ.....

    //ஒரு நாட்டின் முதற்கண் கல்வி. அந்தக் கல்வி நாடு முழுவதும் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி அமைய வேண்டும். ஏழை பணக்கார வித்தியாசம் இருக்கக் கூடாது. தொடக்கக் கல்விமுதல் எல்லாமே அரசின் கீழ் வர வேண்டும். விஞ்ஞான ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சிக் கூடங்கள் பெருக வேண்டும். விளையாட்டு மைதானங்கள் இல்லாத கல்விக் கூடங்களை முதலில் மூட வேண்டும். அதே போன்று ஆய்வுக் கூடங்கள் இல்லாத பள்ளிகள், கல்லூரிகளை இழுத்து மூட வேண்டும். கல்வியில் தனியார் கூடாது, டொனேஷன் கூடாது. அரசின் கீழ் வந்துவிட்டால் இவை எல்லாம் ஒழிந்துவிடும். கல்வித் துறையில் பினாமிக்கள், ஊழல் ஒழிய வேண்டும்.//

    ஸூப்பர் இதுதான் நிரந்தர தீர்வு எனது ஆசையும்கூட இவைகளையே கனவில் வந்த காந்தியில் சொல்லி இருந்தேன் ஆனால் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நினைவு வரவேண்டுமே....

    சரி நான் எப்ப அருவாளை தூக்கினேன் கோடரிதானே,,,
    வில்லங்கத்தாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. பதிவர்கள் மிகவும் நுட்பமான அறிவினைக் கொண்டுள்ளவர்கள் என்பதை இந்த பதிவுகள் மூலமாக அறியமுடிகிறது. அதனைத் தொகுத்துத் தந்த உங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. 1)

    அவரவர் பாணிகளில் அவரவர்கள் மிகவும் சிறப்பாக, தங்களின் எண்ணங்களையும், தங்களின் எதிர்பார்ப்புகளையும், ஏதோ ஜோஸ்யம் சொல்வதுபோலவும், சரித்திர வரலாற்றுக் கதைகள் சொல்வது போலவும், இங்கு சொல்லி வெளிப்படுத்தியுள்ளனர்.

    அவர்கள் அனைவருக்கும் (நால்வருக்கும்) பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. 2)

    ஏதோவொரு வெறுப்பிலோ, சலிப்பிலோ, இந்தப்பகுதி முடிவதற்குள் 2017-ஆம் ஆண்டே முடிந்துவிடுமோ என்ற பயத்திலோ, நம் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்கள் ஒரேயடியாக நான்கு பேர்களின் கருத்துக்களை, இந்தப்பகுதியில் ஒரேயடியாக, ஒரே நாளில் வெளியிட்டு தன் கடமையை செவ்வனே முடித்துக்கொண்டு விட்டதாக நினைத்துத் தப்பித்துக்கொண்டு விட்டார்.

    இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

    இதனால் ஆர்வத்துடன் ஒவ்வொன்றாகப் படித்து கருத்துச்சொல்ல நினைப்போருக்கு சலிப்பு ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளது இந்த இவரின் அவசர அவசரமான வெளியீடு.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. 3)

    இதுவரை இந்தத்தலைப்பினில் 14 பேர்களின் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை நம் ஸ்ரீராமால் வெறும் ஐந்து பகுதிகளிலேயே முடிக்கப்பட்டுள்ளன. :(

    இப்போது யார் யார் ஏற்கனவே என்னென்ன சொல்லியிருந்தார்கள் என்பது யாருக்குமே நினைவில் இருக்காது என்பதே யதார்த்தமான உண்மையாகும். :)

    அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது என்பதில் நமக்கு ஓர் ஆறுதல் மட்டுமே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. 4)

    எனினும் இந்தத்தலைப்பிலானக் கட்டுரையை எழுதி அனுப்ப, நேரம் ஒதுக்கி, ஆர்வம் காட்டியுள்ள கீழ்க்கண்ட 14 பதிவர்களுக்கும் நாம் மீண்டும் நன்றி சொல்லி மகிழ்வோம்:

    1) திருமதி. ரேவதி நரசிம்மன் அவர்கள்
    2) அடியேன் VGK (கோபு)
    http://engalblog.blogspot.com/2017/01/blog-post_5.html

    3) திருமதி. ஹேமா (HVL) அவர்கள்
    4) திருமதி. ஏஞ்சல் (அஞ்சு) அவர்கள்
    http://engalblog.blogspot.com/2017/01/2.html

    5) திருமதி. பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்
    6) திருமதி. காமாட்சி மஹாலிங்கம் அவர்கள்
    7) திருவாளர் GMB Sir அவர்கள்
    http://engalblog.blogspot.com/2017/01/3.html

    08) திரு. ’மனசு’ குமார் அவர்கள்
    09) திரு. வெங்கட் நாகராஜன் அவர்கள்
    10) திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள்
    http://engalblog.blogspot.com/2017/01/4.html

    11) திருவாளர். ஜீவி ஸார் அவர்கள்
    12) திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்
    13) திருமதி. தில்லையகத்து கீதா அவர்கள்
    14) திருமதி. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
    http://engalblog.blogspot.com/2017/02/blog-post_2.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. # படைப்பிலக்கியம் என்பது அருகிப் போன காலம் இது. #
    எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது :)

    பதிலளிநீக்கு
  10. 5)

    இருப்பினும் ......

    எதையாவது இதுபோலப் புதுமைகளைப் புகுத்தி, தினம் ஒரு பதிவு வீதம் வெளியிட்டு, படுத்த படுக்கையாகி மிகவும் சீரியஸ் கண்டிஷன் ஆகிவிட்ட, வலையுலகத்திற்கு ‘ஆக்ஸிஜன் சிலிண்டர் போல’ப் புத்துயிர் ஊட்டிக்கொண்டுவரும் ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்திற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -oOo-

    பதிலளிநீக்கு
  11. இந்த 14 கட்டுரையாளர்களில் 9 பேர்கள் பெண்மணிகள் என்பதை நினைக்கப் பெருமையாகத்தான் உள்ளது.

    இங்கும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ள பெண்கள் அணிக்கு நம் ஸ்பெஷல் பாராட்டுகள். :)

    பதிலளிநீக்கு
  12. பொதுவாக கருத்துகள் எல்லாமே அவரவர் பார்வையில்தான் இருக்கிறது. வேறு எப்படி எதிர்பார்க்க முடியும் கருத்துகளை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே தோன்றுகிறதுஎனக்கென்னவோ எல்லாமே அவரவர் விரும்பும் ஹேஷ்யங்களே இலக்கியத்துறையில் திருஜீவியின் கருத்துகளை வழிமொழிகிறேன் ஏன் என்றால் அவற்றில் அவர் தேர்ந்தவர்

    பதிலளிநீக்கு
  13. எல்லாப்பகுதிகளையும் படித்தேன். கோபு சார் லிஸ்டைக் கொடுத்து மீண்டும் அவர்கள் எழுதியதை நினைக்கவைத்துவிட்டார். பாராட்டுக்கள். இன்றைய ஜீவி சாரின், பணப்பரிமாற்றத்தைப் பற்றிய பகுதியும், இலக்கியம் பற்றிய பகுதியும் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. கீதா சாம்பசிவம் அவர்கள் நாதஸ்வரத்தைப் பற்றி எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. எங்கும், எதிலும் நம் கலாச்சாரத்தைச் சாராத செண்டைமேளம் நாதஸ்வரத்தை மறையச் செய்கிறது. அப்புறம் கலை, கலாச்சாரம் என்று பேசி என்ன புண்ணியம்? பயணம் தொடர்வதால் பிறகு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  15. அனைவரதும் ஆழமான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கள். நிநைவுப்பகுதியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா

    பதிலளிநீக்கு
  18. நன்றி வைகோ ஸார்..

    நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. 14 பதிவர்களின் கருத்துகளை 14 வாரங்கள் வெளியிட்டிருக்கலாம். ஆனால் அதன் காரம் குறைந்து விடுகிறது என்கிற எண்ணம் வந்தது. ஜீவி ஸாருடன் தொலைபேசியில் பேசியபோது என் இந்தச் சங்கடத்தை அவரும் உணர்ந்து பேசினார். ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு பதிவு வருவதால் எனக்கு வேறு வழியும் தோன்றவில்லை. அதை ஜீவி ஸாரும் குறிப்பிட்டார். அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    கருத்துகளை ஒவ்வொரு பதிவாகப் போட்டாலே விளக்கமாகப் படிப்பவர்கள் குறைவுதான் என்னும்போது மூன்று நான்கு பேர்கள் இணைத்து வெளியிட்டிருப்பது சற்றே அநீதிதான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ஜனவரியுடன் வருடம் முடிந்து விடவில்லை என்றாலும் அதன் சாரமும், காரமும் நீர்த்துப் போவது போலத் தோன்றியது. சலிப்பிலோ வெறுப்பிலோ சேர்த்துப் போடவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.......

    பதிலளிநீக்கு
  19. நன்றி வைகோ ஸார்..


    மொத்தமாகப் படிப்பதினால் வரும் எரிச்சலில் கோபத்திலும் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் எனக்கும் தோன்றியதுதான். ஆனால் வேறு வழியில்லாமல் போனது. ஒவ்வொன்றாகப் போட்டிருந்தாலும் முதலில் சொன்ன பதிவர் என்ன சொல்லியிருந்தார் என்பது நினைவில் இருந்திருக்காது! அதற்கு நீங்கள் என் சார்பில் எல்லாவற்றுக்கும் இணைப்பு கொடுத்திருப்பதற்கு எங்கள் நன்றி. ஜனவரி எதிர்பார்ப்புகள்! ஆனால் என் காலண்டரில் ஜனவரியைக் காணோம்!

    //எதையாவது இதுபோலப் புதுமைகளைப் புகுத்தி, தினம் ஒரு பதிவு வீதம் வெளியிட்டு, படுத்த படுக்கையாகி மிகவும் சீரியஸ் கண்டிஷன் ஆகிவிட்ட, வலையுலகத்திற்கு ‘ஆக்ஸிஜன் சிலிண்டர் போல’ப் புத்துயிர் ஊட்டிக்கொண்டுவரும் ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்திற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    பாராட்டுக்கு நன்றிகள் ஸார்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி ஜி எம் பி ஸார்.

    //பொதுவாக கருத்துகள் எல்லாமே அவரவர் பார்வையில்தான் இருக்கிறது.//

    ஆம். சொந்தக் கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

    //கருத்துகளை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே தோன்றுகிறது//

    உண்மை.

    // இலக்கியத்துறையில் திருஜீவியின் கருத்துகளை வழிமொழிகிறேன் ஏன் என்றால் அவற்றில் அவர் தேர்ந்தவர் //

    இதுவும் உண்மை.

    பதிலளிநீக்கு
  21. என் கருத்தையும் கேட்டுப் போட்டமைக்கு நன்றிகள்! வலையுலகின் இமயங்கள் கூட என் பெயரும் வந்தது என் பாக்கியம்!

    நான் ஜனவரி 6ந் தேதி தாமதமாகவே என் கருத்தைச் சொல்லியிருந்தேன், கடைசியாக!! அதற்கப்புறம் இளைஞர் சக்தி என் கருத்தில் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளனர், நன்றி!

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

    பதிலளிநீக்கு
  23. 7)

    //நன்றி வைகோ ஸார்..

    நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. 14 பதிவர்களின் கருத்துகளை 14 வாரங்கள் வெளியிட்டிருக்கலாம். ஆனால் அதன் காரம் குறைந்து விடுகிறது என்கிற எண்ணம் வந்தது.//

    காரமும் சாரமும் குறைந்து விடுகிறது என்று தாங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    >>>>>

    பதிலளிநீக்கு
  24. 8)

    இரண்டு நாட்களாக எனக்கு நெட் சரிவர தொடர்ச்சியாகக் கிடைக்காமல் பாடாய் படுத்தி, பம்பரமாய்ச் சுழற்றி, ஆட்டிப்படைத்து வருகிறது. இன்று தான் இப்போதுதான் ஒருவழியாகப் பிறரின் பதிவுகளைப் பார்க்கவே முடிந்தது.

    நான் முதலில் பார்த்துப் படித்தது உங்களின் மிக நீண்ண்ண்ண்ண்ட இந்தப்பதிவை மட்டுமே. பாஸிடிவ் ஆக ஏதோ எழுதத்தான் நினைத்து ஆரம்பித்தேன். அந்தப்பின்னூட்டமும் நெட் போனதால் காலியாகி விட்டது.

    அதே ஆத்திரத்துடன் வேறு ஒரு இடத்தில் இவற்றையெல்லாம் எழுதி சேமித்து வைத்துக்கொண்டு, பிறகு நெட் கிடைத்தபோது, வரிசையாக ஒவ்வொன்றாக அனுப்பி வைத்தேன். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  25. 9)

    //சற்றே அநீதிதான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ஜனவரியுடன் வருடம் முடிந்து விடவில்லை என்றாலும் அதன் சாரமும், காரமும் நீர்த்துப் போவது போலத் தோன்றியது. சலிப்பிலோ வெறுப்பிலோ சேர்த்துப் போடவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.......//

    நம்மாத்துக்கு வந்துபோன, நம் ஸ்ரீராம் தானே என்ற வாத்ஸல்யத்துடன், அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொண்டு வன்மையாகக் கண்டித்து விட்டேன். பிறகு வருந்தினேன். என்ன பிரயோசனம்?

    தங்களுக்கு இதில் சலிப்போ வெறுப்போ இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் மொத்தத்தில் இந்தத் தலைப்பும், பலரும் அவரவர்களுக்குத் தோன்றியபடி சொல்லியுள்ள பல ஜோஸ்யக் கருத்துக்களும் (ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோலவும் + நம் முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா இல்லாத சட்டசபை போலவும்), சுத்த வழுவட்டை மட்டுமே என்பது, இதைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் ஒருவித பேரெழுச்சியுடன் தெரியும்தான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  26. முகப்புத்தகம் பக்கம் மட்டும் சுற்றிக்கொண்டிருந்த எங்களை வலைப்பக்கம் இங்கே வரவழைத்ததே எங்கள் பிளாக் தான் ..முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு பின்னூட்டங்களை தொடர்கின்றேன்

    பதிலளிநீக்கு
  27. 10)

    முதுபெரும் வாசிப்பு அனுபவம் வாய்ந்த, மிக நல்ல எழுத்தாளரான நம் திரு. ஜீவி ஸார் அவர்களே இங்கு தன் கருத்துக்களை மிகவும் சுருக்கோ சுருக்கெனச் சுருக்கி எழுதியுள்ளார்கள். (அல்லது நீங்கள் ஏதேனும் அதில் கொஞ்சம் எடிட் செய்திருப்பீர்களோ என்னவோ !)

    அவரின் கட்டுரையை மட்டுமே, இன்னும் விரிவாக எழுதச் சொல்லி வாங்கி, நீங்கள் அதையே ஒரு 4-5 பகுதிகளாக பிரித்து வெளியிட்டிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.

    அப்படிச் செய்திருந்தால் ஒருவேளை தாங்கள் எதிர்பார்த்துள்ள காரம், மணம், குணமெல்லாம் (அந்தக்கால T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி போல) மேலும் கிடைத்திருக்கலாமோ என்னவோ.

    எனினும் நம் அதிரா சொல்லியுள்ளபடி நிறைவுப்பகுதியை நிறைவாகவும் விரைவாகவும் முடித்துள்ளதில் சந்தோஷமே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  28. 11)

    //ஸ்ரீராம். said... நன்றி ஆதிரா. //

    மீண்டும் கண்டிக்க வேண்டியுள்ளது. அவள் பெயர் ஆதிரா அல்ல. அதிரா மட்டுமே. ‘

    ’ஆதிரா முல்லை’ என்ற பெயரில், நல்ல தமிழ்ப்புலமை வாய்ந்த வேறொரு பதிவர், நம் வலையுலகில் இப்போது எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த எழுத்துப்பிழையை நம் அதிரடி அதிரா பார்க்கும் முன்பு கரெக்ட் செய்து விடவும்.

    இல்லையென்றால் அவள் இங்கு மீண்டும் வருகை தந்து, உங்களைக் கடித்துக் குதறிப்புடுவாள். ஜாக்கிரதை ஸ்ரீராம் :)

    -oOo-

    பதிலளிநீக்கு
  29. 12)

    இந்த ஐந்து பகுதிகளாகத் தாங்கள் பிரித்து வெளியிட்டுள்ளதில், தங்களுக்கு மிக அதிக பின்னூட்டங்களை அள்ளித்தந்துள்ளது திருமதி. ஹேமா (HVL) அவர்களும் திருமதி. ஏஞ்சலின் (அஞ்சு) அவர்களும், சேர்ந்துள்ள பதிவான நம்பர்-2 மட்டுமே.

    http://engalblog.blogspot.com/2017/01/2.html



    ஏனெனில் அதில் மட்டுமே, ஆண் பதிவர்கள் யாரும் கலக்காமல், மகளிர் அணி மட்டுமே காட்சியளிக்கின்ற பெருமையைப் பெற்றுள்ளதாலும்கூட இருக்கலாம்.

    ’எனக்கு எதற்கு ஊர்வம்ஸ்’ என்று அதிரா போல நினைத்து, மேற்கொண்டு எந்த ஆராய்ச்சிகளும் நான் இதில் செய்யவே இல்லையாக்கும்.

    பதிலளிநீக்கு
  30. அருமை நண்பர் ஸ்ரீராம் அவர்கள், 2017 எதிர்பார்ப்புகள் பற்றி என்னுடைய கருத்துக்களையும் தருமாறு கேட்டிருந்தார். அவருக்கு முதற்கண் நன்றி. பெரியதாக எதுவும் நான் எதிர்பார்க்கவில்லை. நடப்பது 'நாராயணன்' செயல் என்பது பெரியோர் வாக்கு. அதுவே எனக்கு வேத மந்திரமாக இருக்கிறது. 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து' -- இதனை இந்த கடைசிப் பகுதியில் பின்னூட்டமாக இடுதல் போதும் என்று நினைத்ததால், அவருக்கு பதில் சொல்லவில்லை. ஸ்ரீராம் சார், இ ஆம் சாரி. எனது பின்னூட்டத்தை ஏற்று, தங்கள் அழைப்பை நான் 'மரியாதை' செய்ததாக வைத்துக்கொள்ளவும். நன்றி.
    I request Sriram Sir to kindly take that I have not 'dis honoured' his want.

    பதிலளிநீக்கு
  31. @ ஜி.வி ஐயா
    //அவர் கையில் மேல் நோக்கி நகர்த்த வேண்டியகட்டாயத்தின் சாவியை ஒப்படைக்கும்.//
    பண பரிவர்த்தனை ..கார்ட் சிஸ்டம் குறித்த தங்கள் பார்வை அருமை ..ஆமாம் இயற்கை மாற்றங்கள் போல சிலநேரம் forced mutations மாற்றங்களும் ஏற்பட சாத்தியக்கூறுகளுண்டு ..//// //அந்தக் காலத்தில் வாரப்பத்திரிகைகளைமடியாமல், கசங்காமல் மேஜை மீது வைத்திருப்பார்கள். பத்திரிகைகளில் வரும் பிடித்தமானநல்ல பகுதிகளைக் கிழித்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். பல வாசகர்களின் வீட்டு நூல்நிலையம் என்பது அந்த பைண்டிங் சேமிப்புகள் தாம்.//
    ஆமாம் எங்க அம்மா எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் அரக்கு மாளிகை ,தி ஜாவின் கதைகள் ,அனுராதாம்மா சிவசங்கரி இந்துமதி ஆகியோரின் கதைகளை கலைஞரின் தென்பாண்டி சிங்கம் போன்ற தொடர் கதைகளை 30 ,35 வருடமுன்பே கிழித்து பைண்ட் செய்வார் ..
    இலக்கியம் அரசியல் குறித்த தங்கள் எதிர்பார்ப்புக்கள் அருமை

    பதிலளிநீக்கு
  32. @கீதா சாம்பசிவம் ...சினிமா குறித்தது தங்களது கருத்தே எனதும் .சும்மா பார்த்து ரசித்து அங்கேயே விட்டு வர வேண்டும் அது பொழுதுபோக்கு மட்டுமே அதை தூக்கி சுமந்து தெரியக்கூடாது .ஜஸ்ட் பொழுது போக்கு அவ்வளவே ..அதேபோல இலவசங்கள் குறித்த உங்கள் எதிர்பார்ப்பு மிக சரி ..இந்த இலவசங்களால் தானே வெளி நாடுகளில் பல பிரச்சினை எதெற்கெடுத்தாலும் இலவசம் மனிதரை சோம்பேறிகளாக்கும் உழைத்து சம்பாதிக்கும் மனநிலையை மழுங்கடிக்கும் ..

    டாஸ்மாக் //..ரோடில் நடக்கும்போதும் பஸ்ஸில் இருக்கும்போதும் என் நாசியை அடையும் அந்த துர்மணம் இப்போ நினைச்சாலும் வெறுக்கிறேன் ..மனிதரை சுயநினைவை தன்னிலை மறக்கடிக்கும் எந்த ஒரு விஷயமும் இல்லாமற்போகக்கடவது ..
    அந்த நாதஸ்வரம் பற்றி நீங்க சொன்னதும் ஒன்று நினைவுக்கு வருகிறது .அப்பா திருவாரூரில் வேலை செய்தப்போ ..அங்கே நாதஸ்வர வாசிக்கும் பல குடும்பங்கள் இதை மட்டுமே தொழிலாக செய்தனர் ஆனால் பின்பு அது அவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவாத காரணத்தால் பல வருடமுன்பே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிற இடங்களுக்கு வேலை தேடி போனாங்க ..ஒரு கலை அழிய நாமும் காரணமாகிவிட்டோம் மறைமுகமாக

    பதிலளிநீக்கு
  33. அந்தக் காலத்தில் வாரப்பத்திரிகைகளை மடியாமல், கசங்காமல் மேஜை மீது வைத்திருப்பார்கள். பத்திரிகைகளில் வரும் பிடித்தமான நல்ல பகுதிகளைக் கிழித்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். பல வாசகர்களின் வீட்டு நூல் நிலையம் என்பது அந்த பைண்டிங் சேமிப்புகள் தாம்.//
    ஜீவி சார் சொல்வது உண்மைதான். எங்கள் அம்மாவீட்டில் பாதி புத்தகங்கள் பைண்டிங் சேமிப்புகள் தான்.

    தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னை தீர வேண்டும். முக்கியமாய்க் காவிரிப் பிரச்னை!//

    இப்போது நாட்டுக்கு வேண்டியது தண்ணீர் தான். ராக்கெட் அல்ல என்று நடிகர் சிவக்குமாரும் சொல்லி இருக்கிறார்.
    கீதாசாம்பசிவம் அவர்கள் சொன்னது போல் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது.தீர்ந்தால் நல்லதுதான்.

    //அரசியலைப் பொருத்தவரை.... ஊழலற்ற, பினாமிகளற்ற, மாஃபியாக்களற்ற, சுயநலமற்ற, மக்களின் நலனை மனதில் கொண்ட ஆட்சி வேண்டும்.//


    கீதா சொல்வது போல் மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி வந்தால் நலம். அருமையாக சொன்னார்.

    //இளைய பாரதம் எம் மகாகவி வரவேற்றதைப் போல் இருக்க ஆசை.//

    மாதவி எண்ணம் ஈடேற ஆசை.

    இந்த ஆண்டு எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் .
    எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்களை கேட்டு வாங்கி அளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றி.


    பதிலளிநீக்கு
  34. @கீதா ..

    வாவ் கீதா நான் நினைச்சதை சொல்லிட்டிங்க ..நேர்மை நீதி நியாயம் அனைவருக்கும் பொதுவென்றால் அதுவும் ஏழை அன்றாடம் காய்ச்சிகள் எவ்வ்ளவு பணத்திற்காக அல்லல்பட்டனர் .கொஞ்ச நாளில் விஜய் மல்லையாவின் கடன் ரத்து என்று கேள்விப்பட்டபோது அரசு மீதும் வெறுப்பு மட்டுமே ஏற்படுது ..அதைவிட கொடுமை அந்த மனிதன் தான் கடனே வாங்கவில்லை என்று சொன்னாராம் :(
    கருப்பு பண ஒழிப்பில் எல்லா பெருந் டஹ்லாய்களும் சந்தோஷமாகவே இருந்தனர் கஷ்டப்பட்டது மிடில்க்ளாஸ் கூட்டம் மற்றும் அன்னாடங்காய்ச்சி பாவம் ...

    ஹா ஹா நாமெல்லாம் புரட்சி செய்து கில்லர்ஜீ அண்ணாவையும் மதுரை தமிழரையும் அரசியலுக்கு வர வச்சிடுவோம் :)
    அவர்கள் ட்ரூத் சகோ உங்க இலாகாவில் எந்த பொறுப்பும் வேணாம் எனக்கு ..பிளாஸ்கில் டீ காபி அப்புறம் சிறு எடுபிடி வேலை பொறுப்புகளை மட்டும் நான் பார்த்துக்கறேன் ..


    கேஷ்லஸ் பரிவர்த்தனை //// கீதா ஒரு பவுண்ட்க்கு பொருள் வாங்கினாலும் இங்கே கார்டில் செலுத்தலாம் ..நம் நாட்டில் ஒரே ஒரு காரட் சூப்பர் மார்க்கெட்டிலோ கடையிலோ வாங்கி காஷியர் கிட்ட நீட்ட முடியுமா ..முன்பு தம்பி சதீஸ் எதோ கொஞ்சூண்டு பொருள் வாங்கினாராம் கடைக்காரன் பில் போட மாட்டேன்னு சொன்னதை படித்திருக்கேன் ..நியாயவிலை கடைகள் கூட்டுறவு சந்தைகள் வரணும் ..இயற்கை ஆர்கானிக் பொருட்களுக்கு முக்கியத்துவம் மற்றும் எளிய விலையில் கி டைக்கவேண்டும் ..
    .வெளிநாட்டில் அனைவரும் சமம் அல்பா ரோமியோ காரில் வரவரும் ...ஹோம்லஸ் மனிதனும் ஒரே கியூவில் தான் நிக்கணும் ..
    பிடல் காஸ்ட்ரோக்களை உருவாக்க வேண்டும் ..இல்லை எங்கோ அமைதியாக இருக்கும் காஸ்ட்ரோக்களை ஆட்சிக்கு கொணர வேண்டும்
    அருமையான கருத்துக்கள் கீதா


    பதிலளிநீக்கு
  35. முதலில் எங்கள் தளத்திலொருவரின் கருத்தையும் இங்கு பகிர்ந்து கொண்ட எங்கள்பளாகிற்கு நன்றி.

    ஜூவி சாரின் கருத்துகள் மிக மிக ஆழமாக உள்ளது. விரிவான, கூர்மையான பார்வை. அதுவும் தற்போதைய பணப் புழக்கம் பற்றியும் எதிர்காலத்தில் அமைவது பற்றியும் சொல்லியிருப்பது அருமை.

    கீதா சகோ சொல்லியிருப்பது போல் நாதஸ்வரக் கலை பாதுகாக்கப்பட வேண்டும். இளையவர்கள் சினிமா பக்கம் ஆழ்ந்து போகாமல் கருத்துள்ளதை செய்ய வேண்டும்..நல்ல கருத்து.

    மிடில்க்ளாஸ் மாதவி...யின் பார்வை பெயரில் உள்ளதை போல ஒரு நடுத்தரவர்க்கம் என்ன விரும்புமோ அதை அப்படியே அதுவும் முத்தாய்ப்பாக பாரதியின் இளையபாரதம் போல் என்று சொல்லி முடித்திருப்பது அருமை.ஆம் அதுதானே நம் எல்லோரது விருப்பமும்.

    கீதா: மேற்சொன்ன கருத்துகளுடன்.... ஜீவி சார் சொல்லியிருப்பது போல் இலக்கியச் சிந்தனைகள் சிந்திக்க வைக்கிறது. என் மாமனார் மற்றும் என் அப்பாவின் அம்மா எனது பாட்டி பல இதழ்களையும் மிக நேர்த்தியாக தேதி வாரியாக அடுக்கி வைத்திருப்பார்கள். நல்ல தொடர்கதைகள் பிரிக்கப்பட்டு பைன்ட் செய்யப்பட்டு இப்போதும் உள்ளது வீட்டில். எனது பாட்டி எடுத்தவை எனது பிறந்த வீட்டில் சிக்கிக் கொண்டதால் அனைத்தும் யார் கையிலோ கிடைத்து பழைய பேப்பர் கடைக்குச் சென்றுவிட்டது. எனக்குச் சொத்து எதுவும் வேண்டாம்...நகை நட்டு பாத்திரம் எதுவும் வேண்டாம் ஆனால் என் மாமனாரின் கலெக்ஷன் முழுவதும் எனக்குத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டேன். கொஞ்சம் மட்டும் எடுத்துக் கொண்டு வந்துள்ளேன் எல்லாம் கொஞ்சம் அழுத்தினால் பொடியும் நிலையில் இருக்கின்றன. இனிதான் ஒவ்வொன்றாய் நிதானமாகப் பார்க்க வேண்டும். ஜீவி சாரின் இலக்கியப் பார்வை அவர் அதில் வல்லவராக இருப்பதால் மிக அழகாக இருக்கிறது.

    நான் இன்னும் பல எழுத நினைத்து சரியாகக் கட்டுக் கோப்பாக எழுத வராததால் எப்படியோ ஆகி விட்டது போல் உள்ளது. இப்போதைய எழுச்சி இதை எழுதியதற்குப் பின்பு என்பதால் ஒரு சில அப்போது சொல்லத் தெரியவில்லை..
    மிக்க நன்றி எங்கள்ப்ளாக் எங்கள் பார்வையையும் கேட்டு இங்கு வெளியிட்டமைக்கு.

    பதிலளிநீக்கு
  36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  37. @மிடில் க்ளாஸ் மாதவி ..வித்தியாசமான பேர் ..பிளாக் வைச்சிருக்கீங்களாப்பா ?
    //இயற்கைச் சீற்றத்துக்கு காத்திராமல் எப்போதும் எல்லாருடனும் சுமுகமாகப் பழக வேண்டும் என ஆசை. 'வசுதைவ குடும்பகம்' - உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வு மலர ஆசை.//

    ஆஹா அருமையான விருப்பம் ..25 வருடங்கள் முன் //90 க்கு முன் அப்படித்தான்பா இருந்தது நம்ம நாட்டில் அப்போல்லாம் பணம் குறைவு அன்பு அதிகமா இருந்தது ..இப்போ தலைகீழா மாறிடுச்சு ,,

    நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன அதில் விழிப்புணர்வும் ஒன்று ..பாரதி கனவு கண்ட இளைய பாரதம் பொறுப்புணர்வு என தங்கள் நியாமான விருப்பங்கள் அனைத்தும் மெய்ப்படட்டும்


    பதிலளிநீக்கு
  38. கில்லர்ஜி ஆமாம் ல...மன்னிக்கவும்..அருவா என்று தெரியாமல் எங்கள் ஊர் திருநெல்வேலி நினைவில் அதுவும் மீசை என்றாலே அருவா என்று நினைவுக்கு வந்துவிடுவதால் அப்படி எழுதிவிட்டேன்...அந்த அருவா எடுத்துட்டுக் கோடரினு வாசிச்சுக்கங்க...வாபஸ்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
  39. எல்லோருடைய கருத்துகளும் அருமை. நானும் முதலில் தயங்கி விட்டுப் பின்னர் கொஞ்சமாக எழுதினேன். அதன் பின்னர் இன்னும் நிறையச் சேர்த்தாலும் தேவை இல்லை என அவற்றை எடிட் செய்து விட்டேன். :) மற்றபடி அவசரத்தில் எழுதினது போல் என்னுடைய கருத்துகள் காணப்படுகின்றன. :) அது என்னுடைய குறை தான். ஜீவி சார் சொன்னது போல் பைன்டிங் புத்தகங்கள் என் சித்தப்பாவிடமும் நிறைய இருந்தது. எடைக்குப் போட்டதாகச் சொன்னார். அவற்றைப் பாதுகாத்தாலும் பின்னால் கரையான்கள் படை எடுக்கின்றன. :(

    பதிலளிநீக்கு
  40. 13)

    உயர்திரு. ஜீவி ஸார் அவர்களுக்கு:

    // அவை நிகழ்வதற்கு கருவியாக உபயோகப்படும் நபர்கள் தாம் நமக்குத்தெரிவதால் அவர்கள் சரித்திர புருஷர்களாகின்றனர். மஹாத்மாவிலிருந்து இன்றைய பிரதமர் மோடி வரை இந்தக் கதை தான். //

    மிகப்பெரிய விளக்கத்திற்குப் பின் இந்த வரிகள் அருமை. நாட்டு நலனுக்காக மட்டுமே உழைத்த தீரர்களான மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், ஸ்ரீமதி இந்திரா காந்தி ஆகியோரின் வரிசையில் இன்றைய பிரதமரையும் ஒப்பிட்டுச் சொன்னது மனதுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

    //வெகுதிரள் பத்திரிகைகள் வெளியிட்டு அடையாளம் காட்டப்படாததால் இப்படிப்பட்ட ஆகச்சிறந்த எழுத்துக்கள் எல்லாம் பரந்த வாசகர் வட்டம் அறியப்படாமலேயே போயிருக்கிறது. //

    இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான்.

    //என்றைக்கு சகல பகுதி பத்திரிகை வாசகர்களும் ஒருமனதாக விரும்புவதும் வாசிப்பதும் சினிமாவும், அரசியல் செய்திகளும் தாம் என்று இந்தப்பத்திரிகைகள் முடிவெடுத்து விட்டனவோ அப்பொழுது 2017-ம் இப்படியேத்தான் போகும். .........................................

    அதனால் 2017-ம் பத்திரிகை, இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் மண்தேய்ந்து போன இதே வண்டிப் பாதை தான்.
    //

    பத்திரிகை + இலக்கியங்களின் எதிர்காலம் பற்றி நன்கு யோசித்து அலசி ஆராய்ந்து மிகச் சரியாகச் சொல்லிப் புரிய வைத்துள்ளீர்கள்.

    பாராட்டுகள் + வாழ்த்துகள், ஸார்.

    பதிலளிநீக்கு
  41. 4)

    திருமதி. கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கு:

    நாதஸ்வர ’க லை’ பற்றிய தங்களின் ’க வ லை’ மிகவும் வேதனையளிப்பதாகவே உள்ளது.

    சில கோயில்களிலேயே மேளம், நாதஸ்வரம் ஆகியவற்றை வாசித்து வந்த கலைஞர்களின் பிழைப்பைக் கெடுக்க, எலெக்ட்ரானிக்ஸ் மேளம் பொருத்தி, அங்கு அருகில் நின்று சாமி கும்பிடும், நம் காதைப் பிளக்க வைத்துள்ளார்கள்.

    ஒருசில குறிப்பிட்ட பிரிவினரின், மங்கலமான கல்யாணங்களில் மட்டுமே மேளம் + நாதஸ்வர வித்வான்களான இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

    //யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். //

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் இதில் சரிபாதிக் கருத்தினைச் சொல்லியிருந்த ஞாபகம் உள்ளது.

    //தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னை தீர வேண்டும். முக்கியமாய்க் காவிரிப் பிரச்னை!//

    இதுதான் இன்றைய மிக முக்கியப் பிரச்சனை. கங்கைக் காவிரியை நேரிடையாக தரைவழியாக இணைக்க முடியாமல் போனாலும், இரயில் பாதைக்கு இணையாக, ராக்ஷஸக் குழாய்களைப் போட்டு ஹரித்வாரிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் கங்கை நீரை அனுப்பி வைக்க, ஏதேனும் முரட்டு ஏற்பாடுகள் போர்க்கால நடவடிக்கையாக எடுத்து செயல் படுத்தலாம்.

    எதற்கும் மனது இருந்தால் மார்க்கமுண்டு. நாற்கரச் சாலை திட்டங்களை ஆங்காங்கே ஊர் ஊராக நிறைவேற்ற முடியவில்லையா .... அதுபோல இதையும் பல்வேறு பெரிய பெரிய கம்பெனிகளுக்கு காண்ட்ராக்ட் ஆகப் பிரித்துக்கொடுத்து நிறைவேற்ற முயற்சிக்கலாம்.

    இதற்கு எத்தனை கோடிகள் செலவானாலும் முன்னுரிமை கொடுக்கலாம்.

    இதற்கான செலவுகளுக்காக, தாகத்துடன் உள்ள பகுதி மக்களிடம் ஸ்பெஷல் வரிகள் கூட வசூலிக்கலாம்.

    இதை மட்டும் இப்போதுள்ள மத்திய அரசு துணிந்து செய்யுமானால், ஆங்காங்கே பாதிக்கப்பட்டு வரும் மக்கள் யாருமே, என்றுமே அவர்களை மறக்க மாட்டார்கள்.

    இதனால் பெரும்பாலான மாநிலங்களில் அவர்கள் ஆட்சியே என்றும் நீடித்து நிலையாக நிற்கும்.

    பாராட்டுகள் + வாழ்த்துகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  42. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  43. 15)

    தில்லையகத்து கீதா ரெங்கன் மேடம் அவர்களுக்கு:

    //கேஷ்லெஸ் பொருளாதாரம் என்பது மிகவும் நல்ல தீர்வு. இப்போது நல்ல விஷயங்கள் சில பேசப்படுவது தெரிகிறது. அப்படி நடந்தால் …… நல்லதே. வரவேற்போம்…

    விவசாயமும், கால்நடைத்துறையும் வளர்ந்தால் ஒரு நாட்டின் வளர்ச்சி பெருகும் என்பது மறுக்க முடியாத உண்மை. உழவர்களுக்கு அவர்களது உழைப்பிற்கான, விளைச்சலுக்கான இலாபம் சென்றடைய வேண்டும். உழவர்களே நேரடியாகச் சந்தையில் இறங்க வேண்டும்.

    விலைவாசி ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் பெருக வேண்டும், நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஏழைக்கும் பணக்காரருக்கும் உள்ள வித்தியாசம் நீங்க வேண்டும்.

    கல்வியில் தனியார் கூடாது, டொனேஷன் கூடாது. அரசின் கீழ் வந்துவிட்டால் இவை எல்லாம் ஒழிந்துவிடும். கல்வித் துறையில் பினாமிக்கள், ஊழல் ஒழிய வேண்டும்.

    அரசியலைப் பொருத்தவரை.... ஊழலற்ற, பினாமிகளற்ற, மாஃபியாக்களற்ற, சுயநலமற்ற, மக்களின் நலனை மனதில் கொண்ட ஆட்சி வேண்டும்.//

    இந்த மேற்படி அனைத்து வரிகளும் என் மனதை மயக்கியது. இவையெல்லாம் என்று, எப்போது நடக்கும் என்ற ஏக்கத்துடன் உள்ளேன்.

    பாராட்டுகள் + வாழ்த்துகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  44. 16)

    ’மிடில் கிளாஸ் மாதவி’ மேடம் அவர்களுக்கு:

    //கடந்த ஆண்டுகளின் இயற்கைச் சீற்றத்தின் போது, மனிதம் மலர்ந்ததைப் பார்த்தோம். இயற்கைச் சீற்றத்துக்கு காத்திராமல் எப்போதும் எல்லாருடனும் சுமுகமாகப் பழக வேண்டும் என ஆசை. 'வசுதைவ குடும்பகம்' - உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வு மலர ஆசை.//

    //இளைய பாரதம் எம் மகாகவி வரவேற்றதைப் போல் இருக்க ஆசை.//

    //அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்ட் கைப்பேசி முளைத்து, பயன்படுத்தவும் தெரிந்து (கறுப்புப்) பணமில்லா பரிமாற்றத்தில் பரிமளிக்க வேண்டும் என்றும் ஆசை!//

    //இலக்கியத்தில் புத்தக வடிவை விட டிஜிட்டலில் எல்லாம் மாறுகிறது. எல்லா விஷயத்தையும் ஒரு மவுஸ் கிளிக்கில் தெரிந்து கொள்ளும் காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். அதனால் எழுதுபவர்கள் அனைவரும் நாம் வரலாறு படைக்கிறோம் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட ஆசை.//

    தன்னலமற்ற மிகவும் அழகான ’சின்னச் சின்ன’ ஆசைகள்.

    விரைவில் நிறைவேறட்டும். வாழ்த்துகள்.

    //கலையும் இலக்கியமும் காலத்துக்கு ஏற்ப மாற்றத்தோடு வளரும். நம் மக்கள் விழிப்புடனேயே இருக்கிறார்கள்//

    அப்படியா ! மிக்க மகிழ்ச்சி. :)

    பாராட்டுகள் + வாழ்த்துகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  45. ஏஞ்சல் ஹைஃபை!!!! கருத்துக்கும், ஆமாம் டாலர் சொன்னேன் பௌன்ட் விட்டுட்டேன்ல ஆமாம் அங்க தேய்க்க முடியும்....எல்லா நாட்டுலயும்...இங்க சில கடைகள் ல 100 ரூபாய்க்கானும் வாங்கினாதான் தேய்க்க முடியும் ஆனா பல கடைகள்லியும் குறைந்தது 150, 200 250 க்கு வாங்கினாத்தான் தேய்க்க முடியும்...ரூ 1 வேல்யு கம்மியில்லையா அதனால அங்கு 1 பௌன்ட், 1 டாலருக்குத் தேய்க்கறாமாதிரி தேய்க்க முடியாதுதான். ஸோ இங்க மினிமம் ரூ 50 கொண்டு வரணும். ஆனால் 50க்கு குறைவுனா, அல்லது 50 ஆனாலும், நம்ம கடைக்காரர்கள் பலரும் அந்த ரூபாய்லயும் அன்னியன் கணக்கு பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க....பேட்டா கணக்கு...399, 499 அதென்னவோ மீதி ரூ 1 பெரும்பாலும் தரவே மாட்டாங்க. சின்ன கடைல கூட சில்லறை தருவதே இல்லை அதுக்குப் பதிலா வேண்டாத மிட்டாய்கள். அப்படியிருக்க இந்தக் கார்டு கொண்டு வரணும் ஆனால் தினக் கூலிக் காரர்கள் 100 ரூபாய்க்கு வாங்கவா போறாங்க? நம்ம ஊர்ல ஏழைகள் தானே அதிகம். அப்ப இந்தக் கடைக்காரர்களின் ரூ 40, 50 கணக்கில் வரவே வராது ஏன்னா பில் தருவதில்லை பல கடைகளில். எனவே அந்நியன் கணக்குதான்...எனவே கார்டு கொண்டு வரும் போது பல விஷ்யங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்...
    இன்னுரு ஹைஃபை இதோ கீழே உள்ளதற்கு

    அவர்கள் ட்ரூத் சகோ உங்க இலாகாவில் எந்த பொறுப்பும் வேணாம் எனக்கு ..பிளாஸ்கில் டீ காபி அப்புறம் சிறு எடுபிடி வேலை பொறுப்புகளை மட்டும் நான் பார்த்துக்கறேன் ..// ஹஹ்ஹ ஏஞ்சலின் அப்படியே நமக்கும் ஒரு வேலைய பிடிச்சுக் கொடுத்துருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  46. கீதாம்மா, தில்லையகத்து கீதா அவர்கள், மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்-- எல்லோருடைய கருத்துக்களையும் படித்து மகிழ்ந்தேன். யாரும் யாருடனுடன் பேசி வைத்துக் கொண்டோ அல்லது இப்படியாக எழுத வேண்டும் என்று கலந்து கொண்டோ எழுதவில்லை. இருந்தாலும் அனைவர் எழுதியிருப்பதும் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்திச் சொல்கிறது.

    இந்த நாட்டில் இல்லாமை இல்லாது ஒழிய வேண்டும், ஏழைகள், எளிய வர்க்கத்தினர், விவசாயிகள் இவர்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதைத் தான் ஒரே குரலில் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றனர்.

    ஜிஎம்பீ ஐயா அவர்கள் 'கருத்துக்கள் எல்லாமே அவரவர் பார்வையில் தான் இருக்கிறது' என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எளியவர்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாக ஒரே குரலாக இருந்தால் அது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்?.. அந்த விருப்பத்தில் ஆதமார்தமான ஏக்கம் இருப்பது தெரிந்தது.

    தில்லையகத்து கீதா அவர்கள் குரலில் சத்தியம் ஒளிர்விட்டது. ஆற்றோட்டமான உரையைக் கேட்பது போல அவர்கள் எழுதியிருப்பதை வாசித்தேன்.

    ஒரு காலத்தில்--

    'மொத்த தானிய வர்த்தகத்தை
    அரசே ஏற்று நடத்தாமல்
    இறங்குமா விலைவாசி?
    இறங்கித்தா விலைவாசி?' என்று தொழிற்சங்க ஊர்வலங்களில் தெருவில் இறங்கி கோஷமிட்டவன் நான்.

    ஒரு காலத்தில் நியாயமான கோரிக்கையாக இருந்த அதிலும் கால ஓட்ட மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் அரசு மயம் என்கிற சீரிய கொள்கைகளும் ஊழலின் ஊற்றுக்கண்ணாய் சின்னாபின்னமாகியிருக்கிற காலம் இது. தில்லையகத்து கீதா அவர்கள் எல்லாம் அரசு மயம் என்று உயர்ந்த எண்ண்த்தில் உரைத்த பொழுது இது தான் என் நினைவில் படிந்தது.

    தனியார் மயம் போலவே அரசு மயமும் செல்லரித்து போய்விட்ட காலத்தில் என்ன தான் வழி?..

    நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  47. //தனியார் மயம் போலவே அரசு மயமும் செல்லரித்து போய்விட்ட காலத்தில் என்ன தான் வழி? .. நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.//

    தனியார் மயம் என்பதில், அவர்களுக்குள்ளேயே போட்டிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், பொதுமக்களுக்கு தரமான நல்ல பல சேவைகள், உடனடியாகக் கிடைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவர்கள் பலவிதமான தேவையில்லாத கெடுபிடிகள் செய்து மக்களுக்கு இன்னல்கள் தருவது இல்லை. வீடு தேடி வந்து சேவை செய்யவும் தயாராக உள்ளனர். இருப்பினும் இவர்கள் இலாப நோக்குடன் மட்டுமே செயல்படக்கூடும் என்பதால் அவ்வப்போது நம்மிடம் கொஞ்சம் கொள்ளையும் அடிப்பார்கள். இருப்பினும் அரசுத்துறையை விட தனியார் துறையின் சேவைகள் மிகத் தரமாக மட்டுமே இருக்கும் என்பது மறுக்கவே முடியாததாகும்.

    [ என்னிடம் பல்லாண்டுகளாக இருப்பது BSNL BRAND BAND CONNECTIONS மட்டுமே. அதைக் கட்டிக்கொண்டு நான் படும்பாடு எனக்கு மட்டுமே தெரியும். ]

    அரசு மயம் என்பதில் எங்கும் எதிலும் ஊழல்களும், லஞ்ச லாவண்யங்களும் மட்டுமே ஊடுறுவி உள்ளன. இன்னும் இதேபோன்று ஊடுறுவ மட்டுமே வாய்ப்புகளும் உள்ளன. மேலும் இதில் தேவையில்லாத Formalities, Rules & Regulations, Unnecessary paper work தான் அதிகமாக உள்ளன. இவ்வளவுக்கும் மேல் தரமான சேவைகள் என்பதே அரசு மயமாக்கப்பட்டுள்ளவற்றில் கிடைப்பதும் இல்லை. இவற்றிற்கு நம்மால் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். பொதுவாக வேலை + சேவை ஒழுங்காகச் செய்தாலும் செய்யாவிட்டாலும், சம்பளமும் கிம்பளமும் சேர்த்தே இதில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்களுக்கும் கரெக்டாகக் கிடைத்துவிடுகின்றன.

    கஸ்டமர்களையும், நுகர்வோரையும் மதித்து நடக்காத, திருப்திப்படுத்தாத எந்தத்துறையும் (தனியார் துறையோ அல்லது அரசுத்துறையோ) என்றும் உருப்படவே உருப்படாது. மக்களின் நம்பிக்கையை அவை நாளடைவில் சுத்தமாக இழந்து விடும்.

    பதிலளிநீக்கு
  48. அருமையான விவாதக்களத்தை உருவாக்கியளித்த உங்களுக்கு மிக்க நன்றி! அவரவர் வலைத்தளங்களில் வழக்கமான விஷயங்களை மட்டுமே எழுத முடிவதால், இம்மாதிரி மூன்றமவ்ர் தளத்தில் மக்கள் மன்றம் விவாதம் நடத்துவது மறுமலர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது. ஒரே சங்கடம், பதிவர்கள், நீட்டி முழக்கிவிட்டார்கள். வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். அவ்வளவே. மற்றபடி, இது ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  49. சிலவற்றில் தனியாரின் பங்கு தேவை. ஆனால் அரசு சார்ந்த படிப்பு, தொழில், இணையச் சேவை, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலா போன்றவற்றில் அரசின் பங்கே அதிகமாக இருத்தல் வேண்டும். இதற்கான காரணங்களை இப்போது பட்டியலிட்டால் பெரிதாகி விடும். எல்லாத் தொழிலதிபர்களின் தொழிலிலும் அரசின் பங்கு குறிப்பிட்ட அளவு இருந்தால் நல்லது. அரசின் நேரடிக் கண்காணிப்பு அப்போது கிடைக்கும். லாப, நஷ்டக் கணக்குகளைச் சரியாகக் காட்டலாம். ஆனால் இதிலும் ஊழல் புகுந்து கொள்ள வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது. கல்வி நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அதிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் எல்லா மாநிலங்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும். கைத்தொழில், நலிந்த கலைகள், நெசவு, தச்சு வேலை, கொல்லு வேலை போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பள்ளியிலேயே அவற்றைக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதன் மூலம் இந்தத் தொழில் கற்றோருக்கு வேலை வாய்ப்புகள் பள்ளியிலேயே உருவாகும் என்பதோடு நசிந்து போன கைத் தொழில்களைப் போல் இவையும் நசியாமல் காப்பாற்றலாம். இது பார்க்கக் குலக்கல்வி போலத் தெரிந்தாலும் இது தான் நாடும், மக்களும் முன்னேற வழி. படிப்புக்குப்படிப்பும் ஆயிற்று. தொழிலும் கற்றுக் கொண்டால், அதில் காலத்துக்கேற்ற நுண்ணிய மாற்றங்களைச் செய்யவும் படிப்பு உதவும். தொழில் சார்ந்த படிப்பாக இருத்தல் நலம். யோகா, விளையாட்டு, நீதி போதனை அவரவருக்கு விருப்பமான மொழியைக் கற்றல் போன்றவையும் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு மொழி பேதத்தைக் கற்பிக்கக் கூடாது! ஶ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பள்ளிகளிலேயே தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் ஆகியன பாடமாகக் கற்பிக்கப்படுவது போல் நம் தமிழ்நாட்டிலும் வர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கற்கலாமே! நாம் தமிழ், தமிழ்னு முழங்குகிறோம். தமிழில் எழுதப் படிக்க மட்டும் தானே நமக்குத் தெரியும். அதே இலங்கைத் தமிழர்கள் இம்மாதிரி சைவ, வைணவ இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டும் அளவுக்குத் திறமையானவர்கள்.

    பதிலளிநீக்கு
  50. அடுத்துத் தண்ணீர்ப் பிரச்னை. சுகாதாரம், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், சாலை மேம்பாடு, கால்நடைப்பராமரிப்பு. இவற்றை அந்த அந்தக் கிராம மக்களே ஊர்ப் பஞ்சாயத்தின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். முன்னெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பொதுக்குளத்தில் குடிக்கும் நீர் மட்டுமே கொண்டு செல்லலாம். மீறித் துணி துவைத்தாலோ அல்லது குளித்தாலோ ஊர்க்கட்டுப்பாட்டின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. குளக்கரையில் காவலுக்கு ஆள் போட்டிருப்பார்கள். துணி துவைக்க, குளிக்க, மாடு, கன்றுகளைக் குளிப்பாட்ட ஊருக்கு வெளியே ஓர் குளமோ, பொதுக்கிணறோ இருக்கும். அங்கே தான் அவற்றைச் செய்ய வேண்டும். சாலைகளும் அந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்தின் மூலம் கட்டும் வரியின் வருமானத்தில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அவரவர் ஊர்ச்சாலையைப் போட்டுக் கொள்வதோடு இணைப்புச் சாலைகளையும் பக்கத்து ஊர்க்காரர்களோடு கலந்து பேசிப்போட்டுக்கொள்ள வேண்டும். ஊருக்கு வெளியே செல்லும் பொதுச்சாலையை மட்டும் அரசு போட்டுக் கொடுக்கலாம். தண்ணீர்க் கால்வாய்கள், வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் போன்றவற்றை ஊர் மக்களே முறை போட்டுக் கொண்டு தூர் வாரிச் சுத்தப்படுத்தினால் போதும். ஆற்றில் நீர் இல்லை என்றாலும் மணல் எடுக்கக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கல்விக்கும் இதேபோல் ஊர்க்காரர்கள் சேர்ந்து பள்ளியை நிர்வகித்தால் போதும். தங்கள் குழந்தைகள் எந்த மொழி படித்தால் நல்லது என்பதைப் பெற்றோரும், பிள்ளைகளும் மட்டும் முடிவு செய்யணும். அரசு அளிக்கும் மருத்துவ உதவியை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு சுகாதார நிலையத்தைத் துப்புரவாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். து எல்லாம் அரசை எதிர்பார்க்காமல் நாமே செய்து கொண்டால், கிராமங்களைத் தொடர்ந்து நகரங்களும் சுத்தமாகும்.

    பதிலளிநீக்கு
  51. கீதாக்காவின் நமக்கு நாமே திட்டத்துக்கு என் ஆதரவு! வைகோ ஸார் தன் பின்னூட்டத்தில் நதிநீர் இணைப்புப் பற்றியும் சொல்லியிருந்தார். அதில் அவரும் இந்தக் கருத்தைச் சொல்லியிருந்தார். ஒவ்வொன்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

    சீமைக் கருவேல ஒழிப்பு ஆகட்டும், சாலைகள் போடுவது, தூர் வாருவது ஆகட்டும், கீதாக்கா சொல்லியிருப்பது போல உள்ளூர்ப்பள்ளிகளைப் பேணுவது ஆகட்டும்.. அந்தந்த ஊர் நிர்வாகங்களே மக்களுடன் கலந்து செய்துவிட / செய்துவர வேண்டும். முன் ஒரு காலத்தில் அப்படித்தானே இருந்தது?

    நதிநீர் இணைப்புக்கு அந்தந்த மாநிலங்கள் தங்கள் எல்லைக்குள் இருக்கும் வேலைகளை தாங்களே முடித்துக்கொள்ள வேண்டும். ரஜினி பல வருடங்களுக்கு முன்னர் நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி தருவதாகச் சொன்னார். அது போல, பிரபலமானவர்களிடமிருந்தும், பணம் படைத்தவர்களிடமிருந்தும் பெரிய அளவிலும், பொது மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் முடிந்த அளவிலும் பணம் திரட்டலாம்.

    பதிலளிநீக்கு
  52. தனியார் மயமாக்கப்பட்ட சேவை / அரசங்கச் சேவை எதெதில் கட்டாயம் இருக்கலாம்? தனியார் நிறுவனச் சேவை என்பது நன்றாயிருக்கும் என்பது சரிதான். ஆனால் அதற்கு அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணம்? சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல் ஒன்று : அவர்கள் செலவு செய்த தொகை எப்போதோ வசூலாகியும், இன்னமும் டோல் கட்டணம் பல இடங்களில் வசூலிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். அரசாங்கமும் பொதுவெளியில் இதற்கெல்லாம் அவர்களிடம் கணக்கு கேட்பதில்லை.

    பதிலளிநீக்கு
  53. //@மிடில் க்ளாஸ் மாதவி ..வித்தியாசமான பேர் ..பிளாக் வைச்சிருக்கீங்களாப்பா ? //

    @ஏஞ்சல்... ஆமாம். உங்கள் பெயர் உட்பட இங்கு பதில் சொல்லியிருக்கும் அனைத்து நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் வலைத்தளத்தோடு லிங்க் செய்திருக்கிறேன். அவர்கள் பெயரைக் க்ளிக் செய்தால் அவர்கள் தளத்துக்குப் போகலாம்.

    பதிலளிநீக்கு
  54. ஜீவி சார் ஹேட்ஸ் ஆஃப் டு யு சார்!!!!! நீங்கள் கோஷம் போட்டது ஆஹா!!! நியாயமான கோரிக்கை சார்! அது இப்போதும் பொருந்துமே சார். அரசு சில துறைகளில் தனியாரை அதுவும் குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களை உட்படுத்துவதை ஏனோ ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதுவும் நாம் என்ன மருத்துவத் துறையில், உணவுத் துறையில் தாழ்ந்தவர்களா? நம் நாட்டு மருத்துவம், உணவு எல்லாம் எவ்வளவு உயர்ந்தவை? இல்லை கல்வியை வழி நடத்த இயலாதவர்களா? இல்லை விவசாயம் அறியாதவர்களா? இந்த மூன்றையுமேனும் அரசு கையகப்படுத்தி முறைமைப் படுத்த வேண்டும் என்பதுதான் நம் எல்லோரது விருப்பமும் இல்லையா சார்...

    //தனியார் மயம் போலவே அரசு மயமும் செல்லரித்து போய்விட்ட காலத்தில் என்ன தான் வழி?..// மிகவும் சரியான கேள்வி சார்...யார் பூனைக்கு மணி கட்டுவது??!!! நாளைய பாரதமேனும் நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல வழி வகுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை விட்டு வெளியில் சென்றவர்கள் மீண்டும் இங்கு வந்து நாட்டிற்கு உதவும் ஒரு நல்ல மன நிலையை உருவாக்கும். குறிப்பாக இளைஞர்களை. நிறைய பேசலாம் இதில் இல்லையா சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  55. கீதாக்காவின் யோசனைகளே எனதும் அதைத்தான் சுயசார்பு/காந்தியப் பொருளாதாரம் சொல்லுகிறது. கிராமங்கள் அதன் குழுக்கள்....எட்சற்றா எட்சற்றா....எல்லாவற்றிற்கும் அரசை நம்பாமல்....ஆனால் அரசின் மேற்பார்வையில்..இதனால்தான் நான் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்துடன் அதே சமயம் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சுயசார்புப் பொருளாதரத்தை/மேலாண்மையை உட்புகுத்த வேண்டும் என்று சொல்லுகிறேன். இதில் வாட்டர் மேனேஜ்மென்ட் என்பதும் விவசயாப் பொருளாதாரமும் அடங்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த விவசாயப் பொருளாதாரம் மற்றும் நீர் மேலாண்மையைத்தான் நான் எனது எம்ஃபில் படிப்பில் படித்து பிஎச்டி செய்ய விழைந்தேன்....ஆனால் காலம் செய்த கோலமடி!!!

    ஸ்ரீராம் //தனியார் மயமாக்கப்பட்ட சேவை / அரசங்கச் சேவை எதெதில் கட்டாயம் இருக்கலாம்? தனியார் நிறுவனச் சேவை என்பது நன்றாயிருக்கும் என்பது சரிதான். ஆனால் அதற்கு அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணம்? சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல் ஒன்று : அவர்கள் செலவு செய்த தொகை எப்போதோ வசூலாகியும், இன்னமும் டோல் கட்டணம் பல இடங்களில் வசூலிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். அரசாங்கமும் பொதுவெளியில் இதற்கெல்லாம் அவர்களிடம் கணக்கு கேட்பதில்லை.//


    யெஸ் ஹைஃபை ஸ்ரீராம்!!! இதையும் நான் கூட்டாஞ்சோறு செந்தில் குமாரின் தளத்தில் சொல்லியிருந்தேன்....அதாவது நாம் பொது மக்கள் வருமான வரி, சொத்துவரி எல்லாவற்றிற்கும் கணக்குக் காட்டுகிறோம் இல்லையா? அது போல எல்லா நிறுவனங்களும், ஏன் அரசுமே பொது மக்களுக்குச் செய்யும் சேவையில் கணக்குக் காட்ட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை வரும். அரசாங்கம் கணக்குக் கேட்காது ஸ்ரீராம் ஏனென்றால் அரசு என்பது என்ன? அரசியல்வியாதிகள் சூழ்ந்தது தானே அவர்களுக்கும் பங்கு இருக்கிறதே! சென்னையில் மெட்ரோ வேண்டுமா? அதன் பயன் யாது? அது போக்குவரத்து நெரிசலைக் குறைத்துள்ளதா? இல்லை இல்லவே இல்லை. அது போல மேம்பாலங்கள்...டோல் ரோடுகள் எல்லாம் நன்றாக இருக்கின்றனவா? இல்லை என்பதே உண்மை. பராமரிப்பு இல்லை அப்படியென்றால் அவர்கள் வசூல் செய்யும் பணம் எங்கே போகிறது? நிறைய கேள்விகள் இருக்கின்றன..அதற்குத்தான் அரசு அதாவது அரசின் பொகுமக்கள் சேவையைச் செய்யும் ஆட்சியாளர்கள் அது நடுவண் அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசானாலும் சரி பொதுத்துறை டிபார்ட்மென்டாக இருந்தாலும் சரி தனியார் என்றாலும் எல்லோரும் மக்களுக்குச் செய்யும் சேவைகளுக்குப் பொது வெளியில் கணக்குக் காட்ட வேண்டும். பொதுமக்கள் மட்டும் கணக்கு காட்ட வேண்டுமாம்...இவர்கள் நமக்குச் செய்வதற்குக் கணக்குக் காட்ட மாட்டார்களாம் என்ன நியாயம்??

    கீதா

    பதிலளிநீக்கு
  56. வைகோ சார் மிக்க நன்றி சார் எனது கருத்த்துகளைக் கோடிட்டுக் காட்டி தங்களது எண்ணமும் அதுவே என்று சொன்னதற்கு. நம் எல்லோரது நல்லெண்ணங்களும் கனவுகண்டு மெய்ப்படட்டும்! எதிர்கால இளையபாரதமேனும் நன்றாக ஒளிர்விடுமே இல்லையா!! எங்கள் ப்ளாகிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்..பாராட்டு விழா எடுத்துரலாமா!!! இங்கு இப்படி அனைவரது கருத்துகளையும் ஒருமித்து முக்கடல் சங்கமிப்பது போல் - அட இங்கும் கூட நான் பிறந்து வளர்ந்த ஊர் - சங்கமிக்க வைத்து எல்லோரது விருப்பமும் அடித்தளத்தில் ஒன்றுதான் என்பதை சொன்னதற்கு. நல்ல முயற்சி எங்கள் ப்ளாக்!!! ஹேட்ஸ் ஆஃப் டு யு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  57. நன்றி கருத்துரைத்தவருக்கு. ஸ்ரீராம் சார், உங்களுக்கும் நன்றி!
    இந்த பதிவில் மற்ற பதிவர்களுடைய எதிர்பார்ப்புகளுடனே தான் என் கருத்தும் வெளிவரும் என்று தெரிந்திருந்ததால், நான் என் கருத்துகளை சுருக்கியே தந்திருந்தேன்.
    எனக்கும் வை.கோபாலகிருஷ்ணன் சார் மாதிரி தோன்றத் தான் தோன்றியது. இதை ஒரு தொடர் பதிவு போன்று கூப்பிட்டு அவரவர் வலைப்பூவில் எழுத வைத்திருக்கலாமோ என்று கூடத் தோன்றியது. ஆனாலும் மேலே உள்ள கருத்துரைகளையும் வினாக்களையும் விடைகளையும் பார்க்கும் போது ஒரு நல்ல விவாத மேடையைப் பார்த்த திருப்தி!!
    சிறந்த சீரிய முயற்சிக்கும் ஆக்கத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்! 'எங்கள்' ப்ளாக்!
    வை. கோபாலகிருஷ்ணன் சார்! பதிவுலக பிதாமகராகவே செயல்படுகிறீர்கள்!! என் மரியாதையும் பிரமிப்பும் கலந்த வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  58. அரசுத் துறையும் வேண்டும், தனியார் துறையும் வேண்டும் என்ற உணர்தலில் தான் இந்தியாவில் கலப்புப் பொருளாதாரக் கொள்கை (Mixed Economy) சிந்தனை உருவானது. எந்த சிந்தனை உருவானாலும் யாருக்கு என்ன லாபம் என்பது நோக்கமானதே மொத்த சீரழிவுக்குக் காரணமாகி சாதாரண எளிய மக்களின் அல்லாடலுக்கு வழி வகுத்தது.

    எதெல்லாம் தனியார் வசம் இருக்க வேண்டும் எதெல்லாம் அரசு வசம் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் ஆழ்ந்து சிந்தித்து கருத்துக்களைச் சொன்னார்கள். இந்த கருத்துக்களில் நம் நலன் என்ன என்பதின் அடிப்படையில் இல்லாமல் இந்த நாட்டின் 80% எளிய மக்களின் நலனுக்கு எது உகந்தது என்ற யோசிப்பின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  59. //ஏன் அரசுமே பொது மக்களுக்குச் செய்யும் சேவையில் கணக்குக் காட்ட வேண்டும். //

    அரசின் வரவு செலவு கணக்குகளும் தணிக்கைக்கு உட்பட்டதே. தலைமை கணக்கு தணிக்கை
    அதிகாரி (சி.ஏ.ஜி) தணிக்கை அறிக்கையை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார். சி.ஏ.ஜி. குடியரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர். அரசின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்.

    பதிலளிநீக்கு
  60. ஜீவி அய்யா...
    கீதா சாம்பசிவம் அம்மா...
    தில்லையகத்து கீதா மேடம்...
    என மிகப்பெரியவர்களின் பதில்கள்...நீளமாய்...
    ஜீவி அய்யா எல்லாவற்றையும் பிரித்து அலசி மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார் என்றால் மற்ற இருவரும் அவர்கள் பாணியில் மிகச் சிறப்பான பகிர்வும்
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  61. ஆழ்ந்து வாசித்துக் கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி, பரிவை குமார்.

    பதிலளிநீக்கு
  62. வாழ்த்துகள் ஸ்ரீராம்...

    அனைவருடைய கருத்துகளுக்கான சுட்டியை இங்கே பகிர்ந்த வை.கோ. அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!