சனி, 25 பிப்ரவரி, 2017

இந்த ஏ ஸி க்கு மின்சாரம் தேவையில்லை. ஆட்டோ சுமதி
1)  ஒரு திருமணம் நடக்க
எவ்வளவு செலவாகும் என்பதை நாம் அறிவோம்.  அதைச் சிக்கனமாகச் செய்தால் எவ்வளவு மிச்சமாகும்?  அப்படி மிச்சம் செய்து அந்தப் பணத்தை ஜெயந்த் போலே ஒரு கிராமத்தின் குடிநீரத் தேவையை நிறைவேற்றி இருக்கிறார், தன் மகன் திருமணத்தில்.2)  சுயவேலைவாய்ப்பில் நேர்மை, சமூக சேவை.  அந்நியப் பொருட்களை பகிஷ்கரித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரிப்போம்.  ஆரோக்கியத்துக்கும் நல்லது.  வேலுார், காந்தி நகரை சேர்ந்த கவுரி தாமோதரன்.


3)  வாழ்க்கைக் கைவிட்டது என்று கலங்கி நிற்கவில்லை தோழி..  கைகொடுத்ததடி தன்னம்பிக்கையும், மனதைரியமும்.  சுமதி மற்றும் சிலர்.


4)  தவிர்க்கமுடியாத நகரமயமாக்கல் மரங்களை வெட்டிச் சாய்க்கும் அவலத்தைப் பார்த்து அதற்கு வழி கண்டுபிடித்து நமக்கு முக்கியத் தேவையான அந்த மரங்களை வேறொரு இடத்துக்கு மாற்றும் ராமச்சந்திர அப்பாரி இதுவரை 5000 மரங்களை அப்படிக் காத்திருக்கிறாராம்.

5)  தங்கள் கிராமத்துப் பெண்கள் தண்ணீருக்காக படும் அவஸ்தையையும், அலைச்சலையும் குறைத்த இந்த மூன்று பெண்கள்.


6)  சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை.  ஓசோன் ஓட்டை இல்லை.  செலவும் கம்மி.  முக்கியமாக இந்த ஏ ஸிக்கு மின்சாரம் தேவை இல்லை!

13 கருத்துகள்:

 1. சாதனையாளர்களின் அறிமுகத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மின்சாரமோ, தண்ணீரோ இல்லாமல் சூரியக்கதிரை மட்டுமே வைத்துக் குளிர்காற்றைத் தருவிக்கும் புது ஏ ஸி வந்தால் மிகவும் நல்லது. அரிய கண்டுபிடிப்பு. மரங்களை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் ராமச்சந்திராவும் பாராட்டுக்குரியவர்.

  பதிலளிநீக்கு
 3. அனைத்துமே அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.....

  பதிலளிநீக்கு
 4. மணமகனின் பெயரைப் போலவே (tanmay) மனுஷத் 'தன்மை'யுடன் திருமணம் நடத்தியிருக்கும் ஜெயந்த் போலேவை போலவே அனைவரும் திருமணத்தை சிக்கனமாய் செய்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்:)

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 6. அனைத்து தகவல்களும் அருமை,குறிப்பாக மரம் இடம் மாற்றும் பணி போற்றுதலுக்குறியது..
  செய்திகளை தொகுத்து வழங்கி சம்பந்தப்பட்டவர்களை அறிமுகப்படுத்தியமை பாராட்டுக்குரியது.

  கோ

  பதிலளிநீக்கு
 7. மரங்கள் வெட்டப்படும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.
  வெட்டபட்ட மரங்களை வேறு இடத்தில் நடும் திரு. ராமசந்திரா அவர்களை வாழ்த்த வேண்டும் , வாழ்க வளமுடன்.
  அனைத்து செய்திகளும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இன்றைய வழிகாட்டிகள் காட்டிய
  நுட்பங்கள் அருமை
  ஏனையோரும் பின்பற்றலாம்.

  பதிலளிநீக்கு
 9. அனைத்துச் செய்திகளும் அருமை. மரம் இடம் மாற்றியது..அசாதாரணமான ஒரு செயல்!! பாராட்டுகள்!, கல்யாணத்தைச் சிக்கனப்படுத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது...அடுத்தது...(கீதா: நம் மக்கள் இதனைக் கடைபிடித்தால் நல்லது!)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!