உண்மை வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கும்போது திரைப்படங்களில் பாடல் காட்சிகளே பொருத்தமில்லைதான். ஆனாலும் சில சமயங்களில் தேவை இல்லாத இடத்தில் பாடல் காட்சிகள் தலை காட்டும்.
சமயங்களில் அவை இனிமையான பாடல்களாயிருந்தால் இந்தத் தவறு மறக்கப்பட்டு, பாடல் மட்டுமாவது நினைவில் நிற்கும்.
இந்த வகையில் எனக்குத் தெரிந்து தமிழ்ப்பட பாடல் காட்சிகளில் பொருத்தமில்லாத இடத்தில் வருவதாக முதல் இடத்தில் இருக்கும் பாடலை இங்கு பகிர்கிறேன்.
கற்பழிக்க ஒருவன் வரும்போது, ஒன்று அவனை அடித்து உதைக்க வேண்டும். இல்லாவிட்டால் தப்பி ஓடிவிட வேண்டும். இரண்டுமில்லாமல், ஜானகி குரலில் இசையமைத்து பாட்டுப் பாடிக் கொண்டிருப்பார்களோ...! [ஆனால் அதே சமயம் புன்னகை படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று.]
அடுத்த பாடல்.
பெற்ற அம்மாவை ஒருவன் கடத்திக் கொண்டு போய்விட்டான். அதே சமயம் எதிர்பாராமல் ஒரு சகோதரன் கிடைத்து விட்டான்தான். அதற்காக கடத்திப் போகப்பட்ட அம்மாவைத் தேடிக்கொண்டு இப்படிப் பாடிக்கொண்டே போவார்களோ...!.
உங்களுக்குத் தெரிந்த பொருத்தமில்லா பாடல் காட்சிகளை இங்கே சொல்லலாம் நண்பர்களே..
நீங்கள் பகிர்ந்த பாடல்களை நாங்களும் கேலி செய்து சிரித்து இருக்கிறோம்.
பதிலளிநீக்குபிறந்தநாள் விழாவில் பாடச் சொன்னால் கண்ணீர் விட்டு கதை சொல்லி பாடுவது.
கல்யாண வரவேற்பு விழாவில் அழுது கொண்டு பாடுவது நிறைய பாடல்கள் இருக்கிறது.
உண்மை
பதிலளிநீக்குபொருந்தா காட்சிகள்தான்
பெரிய பட்டியலே உண்டு...! அதுவும் சமீபத்திய படங்களில் பொருந்துவதே சில...!
பதிலளிநீக்குநல்ல தேர்வு. ஆனால் பல படங்ஙகளில் பல பாடல்கள் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. இதைப் படிக்கும்போது, ந்ந்தலாலா படம் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது. இளையராஜா அருமையான 5-6 பாடல்கள் இசையமைத்துத் தந்தாராம். இயக்கிநர் மிஷ்கின் ஒரு பாடலை மட்டும் படத்தில் வைத்துவிட்டு மீதி பாடல்களை படத்தின் flowவழக்குப்பட பொருந்தாது என்று உபயோகப்படுத்தாத்தனால் இளையராஜாவின் கோபத்தைச் சம்பாதித்தேன் என்று மிஷ்கின் சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குநடிகர் திலகம் சிவாஜியின் பெருமையைக் குலைக்கும் விதமாக வந்த பாடல்களில் இதுவும் ஒன்று. (ஆனால் படம் பயங்கர வெற்றி)
Good
பதிலளிநீக்குபாடல் காட்சிகளை அமைப்பதில் ஒரு அட்வாண்டேஜ் உண்டு பல நிகழ்வுகளை ஒரே காட்சியில் சொல்ல முடியும் சினிமாவில் பாடல் காட்சிகள் ஆனால் நிஜ வாழ்வில் இல்லை என்றாலும் நிஜ வாழ்வில் பலரும் கற்பனையில் பாடுகிறார்கள் ஆடுகிறார்கள் கதா நாயகர்கள் ஆக நினைக்கிறார்கள் கண்ணதாசனின் பலபாடல்கள் என்றும் பொருந்தும்படி இருக்கும் பல திரை இசைப் பாடல்களைத் தொகுத்தே வாழ்வில் திரை இசைப்பாடல்கள் என்னும் ஒரு பதிவும் எழுதி இருந்தேன்
பதிலளிநீக்குதமிழ் படங்களில் வரும் பாடல்கள் பெரும்பாலானவை பொருந்தாதவை தானே :)
பதிலளிநீக்குஎந்த ஊர்ல லவ்வர்ஸ் குத்து டான்ஸ் ஆடறாங்க :) அதுவும் கலர்கலரா துணை நடிகர்கள் வெள்ளை தேவதைகள் கோ ஆர்ட்டிஸ்ட் எல்லாம் சேர்ந்து :)
ஐயோ நிறைய இருக்கே எதைனு சொல்ல...பாட்டில்லைனா படம் ஃபெயிலுவர் தான். மலையாளப் படத்தில் குறைவுதான். என்றாலும் ஒரு சில படங்களில் வைத்திருப்பதுண்டு.
பதிலளிநீக்குகீதா: இந்த மாதிரி பாட்டுகள் வந்தால் படம் பார்க்கும் போது போரடித்துவிடும். ஆனால் பாட்டு நல்லாருந்து என்றால் லயித்துவிடுவோம். அந்த சீன் அப்படி வைக்கப்பட்டிருப்பது கூடத் உரைக்காமல் போய்விடும். இப்ப சமீபத்தில் வந்த படம் நல்ல படம் துருவம் 16 அவ்வளவாக ஓடவில்லை ஏனென்றால் பாட்டில்லை.
சரி அவங்க ரெண்டு பேரும் அவங்க அம்மாவ எங்க ஒளிச்சு வைச்சுருக்காங்கனு தேடி பல தூரம் போகும் போது போரடிக்காதா அதான் பாட்டு ஹிஹிஹி..ஆனால் பொதுவாகப் படங்களில் இப்படித்தான் தேடும் போது பாடல்கள். ஒரு சில படங்களில் பாடலோடு கதையையும் நகர்த்தி விடுவார்கள். அது பரவாயில்லை...
இந்த இரு பாடல்களையும் கலாய்த்ததுண்டு...நிறைய கலாய்த்ததுண்டு இப்போது சட்டென்று நினைவுக்கு வரலை...
எந்த ஊர்ல லவ்வர்ஸ் குத்து டான்ஸ் ஆடறாங்க :) அதுவும் கலர்கலரா துணை நடிகர்கள் வெள்ளை தேவதைகள் கோ ஆர்ட்டிஸ்ட் எல்லாம் சேர்ந்து :)// ஹேய் ஏஞ்சல் என்ன ஷூட்டிங்க் போகுதான் உங்க ஊர்ல? என்ன படத்தோட ஷூட்டிங்கபா...
பதிலளிநீக்குகீதா
இப்ப உள்ள படங்களில் நிறைய காட்சிக்குப் பொருத்தமில்லாமல்தான் இருக்கின்றன அண்ணா...
பதிலளிநீக்குஹாஹாஹா, பாடல்களே இல்லாமல் எடுத்த ஒரே படம் தான் எனக்குப் பிடித்ஹ்ட படம். :)
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.. இந்த வகையில் வேறு பாடல் எதுவும் நினைவுக்கு வரவில்லையா?
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்
பதிலளிநீக்குநன்றி டிடி. இந்தக் காலப் பாடல்களில் பாடல்கள் என்று தேறுவது தீருவது மிகச்சிலதான்!
பதிலளிநீக்குவாங்க நெல்லை. நந்தலாலா படத்தில் ஒரு பாடல் கூடக் கேட்டதில்லை. ஆமாம், திரிசூலம் பயங்கர வெற்றிதான். அதிலும் சிவாஜியின் தொப்பை பெரிதாகத் தெரிந்தும்!
பதிலளிநீக்குநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார். ஆமாம். பாடல்கள் காட்சியில் சுருங்கச் சொல்லி காட்சியை நகர்த்தலாம் என்பது உண்மைதான். கண்ணதாசன் பாடல்கள் நன்றாக இருக்கும்தான். ஆனால் நான் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு குறிப்பிட்ட படங்களில் பொருந்தாத இடத்தில் வரும் பாடல் பற்றி!
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்.. உங்க ஊர்ல நடக்கற ஷூட்டிங்கில் யார் ஹீரோ? என்ன படம்? இப்போ வருவதை பாடல்கள் என்ற லிஸ்ட்டில் சேர்க்க ரொம்ப யோசிக்க வேண்டும். ஜி எம் பி ஸார் சொல்லியிருப்பது போல படத்துக்குப் பொருத்தமான இடங்களில் வரும் பாடல்களையும் குறிப்பிடலாம். அதுபோல நிறைய உண்டு
பதிலளிநீக்குவாங்க துளஸிஜி, கீதா ரெங்கன்..
பதிலளிநீக்குநிறைய இருக்கேன்னு சொல்லிட்டு ஒண்ணு கூட உதாரணம் சொல்லாமாப் போனா எப்படி!
நன்றி 'மனசு' குமார்.
பதிலளிநீக்குநன்றி கீதாக்கா... மாத்திச் சொல்றீங்க.. உங்களுக்குத்தான் படமே பிடிக்காதே...
பதிலளிநீக்கு//நன்றி கீதாக்கா... மாத்திச் சொல்றீங்க.. உங்களுக்குத்தான் படமே பிடிக்காதே..//
பதிலளிநீக்கு"அந்தநாள்" போன்ற அர்த்தமுள்ள படங்கள் பிடிக்காமல் இருக்குமா என்ன?
//"அந்தநாள்" போன்ற அர்த்தமுள்ள படங்கள் பிடிக்காமல் இருக்குமா என்ன?//
பதிலளிநீக்குபாடல்கள் இல்லாமல் வந்த படங்கள் எல்லாவற்றையுமே நல்ல லிஸ்ட்டிலும் சேர்க்க முடியாதே...