வியாழன், 23 பிப்ரவரி, 2017

இதுவும் அதுவும் - சின்ன வீடு


================================================================

சின்ன வீடு
Image result for old man sitting in a chair clip art


கட்டிலிலிருந்து எழுந்து நகர்ந்து
கதவுக்குப்
போவதற்குள்ளேயே
மூச்சு வாங்குகிறது
 
பின்பு கதவு
அப்புறம் வராண்டா
ஆளோடி
திரும்பினால் படிக்கட்டுகள்...

அப்பாடி..
Image result for old man sitting in a chair clip art

முன்னால் சின்ன வீட்டில் இருந்தபோது
இந்தக் கஷ்டம் இல்லை
சின்னதாகப் பேசினால் கூட
வீட்டில் இருக்கும்
எல்லோருக்கும் கேட்கும் 

எந்த சத்தமும்
எனக்குக் 
கேட்பதில்லை
இப்போது இந்த பங்களாவில்...


===========================================



வீடென்று...

Image result for happy home clip art

சத்தமாகவே இருக்கிறது
உங்கள் வீடு.. 
அத்தை எப்போதும் சொல்வது 


ஏனோ
எனக்கு அது குற்றச்சாட்டாகவே படுவதில்லை
பாராட்டாகவேதான் படுகிறது 

ஆம்,


குறுக்கேக் குறுக்கே, மறித்து மறித்து
ஒருவரோடொருவர் ஓயாத பேச்சுகள்
வாக்குவாதங்கள்
சிறு சண்டைகள்
ஒருபக்கம் தொலைகாட்சி
மறுபக்கம் அலைபேசியில் அரட்டை
அப்புறமும் 5.1 இல் பாட்டு....

உறவுகள் நட்புகள்
கலகலப்பாக இல்லாத வீடு
ஒரு வீடா?
நான்கு சுவர்கள்
மூடி
படுக்கவும், சாப்பிடவும்
மட்டும் இருப்பதா வீடு?

அத்தையின் மவுன வீட்டில்
அரைமணிநேரம் கூட இருக்க முடிந்ததில்லை
என்னால் 
=================================================================
படங்கள் :  இணையத்திலிருந்து நன்றியுடன்...

44 கருத்துகள்:

  1. என்ன... தனிமையில் இருக்கிறீர்களா? சத்தத்தை ரொம்ப இழக்கிறீர்கள் போலிருக்கிறது.

    கவிதை நல்லா இருக்கு. உண்மையைப் பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு

  2. உண்மையைப் சொல்லி செல்லும் கவிதை, நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை.
    நிசப்தம் எனக்கும் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  4. சத்தங்களுடன் வீடு ..என்றும் அழகு..

    பதிலளிநீக்கு
  5. அருமை ..வீட்ல சத்தமில்லாம இருந்தா நானெல்லாம் பயந்து போய்டுவேன் :)

    பதிலளிநீக்கு
  6. நவீன உலகத்தில் தாத்தாக்கள்(நான் உட்பட)முகநூல்,கட்செவி மற்றும் வலைத்தளங்களில் மூழ்கிவிட்டார்கள்.இல்லங்களில் ஒருவரடொருவர் பேசுவது கூட குறைந்துவிட்டது.இந்நிலை நீடித்தால் குடும்ப உறவுகள் சிதைந்துவிடும்.உங்கள் சித்திரம் சிந்தனைக்குரியது.

    பதிலளிநீக்கு
  7. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.. சரி சரி யாரும் ஓடிடாதீங்க:) இன்று நான் மெளன விரதம்+உண்ணா விரதம்:) என்பதால்:) கொஞ்சமத்தான் பேசுவேன்ன்ன்:)..

    “சின்னவீடு” என தலைப்பைப் பார்த்ததும்... அச்சச்சோஒ சகோ ஸ்ரீராம் ஆ இப்படி சொல்லிட்டார்ர்.. ஈக்காதேஏஏஏஏஏ அப்படி எதுவும் ஈக்காதேஏஏஏஏஏஎ எனப் பதறிக்கொண்டு ஓடிவந்தேன்ன்.. ஹா ஹா ஹா அழகிய குட்டிக் கதை போன்ற கவிதை. இக்காலத்தில் எல்லாமும் தனித்தனிக் குடும்பம் என்றானபின்.. வயதானால்ல்ல் நாம் இருவர் மட்டுமே பாக்கி ஆகும்... அதுக்கு நம்மை நாம் ஆரம்பமே தயார் படுத்தி, நமக்கு ஏற்ற பொழுதுபோக்குகளை ஏற்படுத்திக் கொள்ளவேணும்.

    பதிலளிநீக்கு
  8. எத்தனை குழந்தைகள் பெற்றாலும் இக்காலத்தில் படிப்பு வேலை என எல்லோருமே ஒவ்வொரு இடத்துக்குப் புறப்பட்டு விடுவார்கள், அவர்களை இல்லை நம்மோடு இரு என மறிக்கவும் கூடாது.. பிள்ளைகளை அவர்களின் சுகந்திரம் + விருப்பத்துக்கேற்பவே வாழ விடோணும் எனத்தான் நான் எப்பவும் நினைப்பேன். கூடவே இருந்தால் சந்தோசம்தான்.

    எனக்கும் வீட்டில் நிறையக் குழந்தைகள் இருப்பது பிடிக்கும்... குறைந்தது 4 ஆவது இருக்கோணும் என நினைப்பேன்ன்... அதிலும் எனக்கு கைக்குழந்தைகள்தான் ரொம்ப பிடிக்கும்.. எப்பவுமே தூக்கி வச்சிருக்க ஆசை... சின்ன வயதிலிருந்து நான் தூக்கி வளர்க்காத எங்கள் ஊர்க் குழந்தைகளே கிடையாது, எவ்வளவு அழும் குழந்தையாயினும் அழுகையை நிறுத்திடுவேன்ன்ன்..

    ஒரு தடவை என் கணவரைக் கேட்டேன்... தூக்குவதற்கு எனக்கு ஒரு குழந்தை தேவை என.. அதுக்கு அவர் சொன்னார்..”அதிரா குழந்தை எப்பவும் குழந்தையாக இருக்காதே.. அது டக்கென வளர்ந்திடும்.. பிறகு நீங்க, திரும்பவும் குழந்தை கேட்பீங்க.. நான் என்ன பண்ணுவேன்” என்றார்.. ஹா ஹா ஹா அதுவும் சரிதானே என விட்டிட்டேன்ன்.

    உங்கள் கவிதை நிறைய நினைவுகளை கிளறுகிறது... அருமையான கற்பனை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ///அத்தையின் மவுன வீட்டில்
    அரைமணிநேரம் கூட இருக்க முடிந்ததில்லை
    என்னால் ///

    இந்த மருமகள், அத்தையாகும்போது, இவவுக்கும் இதே நிலைமைதான் வரப்போகிறது என்பதனை, இழமைக் காலத்தில் பலர் புரிந்து கொள்வதில்லை:)).. அதிரா சொன்னாலும் ஆரும் கேட்பதில்லை .. சரி விடுங்கோ:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

    பதிலளிநீக்கு
  10. சின்ன வீடோ பெரிய வீடோ
    சின்னதாய் டி.வி. வந்தபிறகு
    சின்னதாய் கைபேசி வாங்கியபிறகு
    ஒருவொருக்கொருவர் பேச்சே
    ஒழிந்து விட்ட உண்மை தெரிந்தது

    சின்னதாய் வீடு இருந்த பொழுது
    ஒரு டிவி தான்; எல்லோரும்
    பொதுவில் பார்க்கிற மாதிரி ஹாலில்.
    சின்னது போய் பெரிசு வந்த பிறகு
    அண்ணனுக்கும் தங்கைக்கும்
    ஆளுக்கொரு டிவி
    அவரவர் அறைகளில்.

    சிறிசுகள் தான் என்றில்லை
    பெரிசுகளும் அப்படித்தான்
    அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
    சுவர் தடுத்த தனித் தனி அறைகள்
    தனித் தனி உடைமைகள்
    தனித் தனி விருப்பு வெறுப்புகள்
    ஒன்றுமில்லாலதுக் கெல்லாம்
    ஹாலில் இரண்டு பேரும்
    லஜ்ஜை ஏதுமின்றி துவஜம்
    கட்டுவதை பார்க்க வேண்டுமே
    நான் போனால் தான்
    என் அருமை தெரியுமென்று
    இரண்டு பேருமே
    ஒற்றுமையாய் ஒரே குரலில்
    சொல்லாத நாளில்லை

    பதிலளிநீக்கு
  11. ஆம், மௌனம் எழுப்பும் அதிர்வலைகள் மிகுந்த சப்தம் உண்டாக்குபவை!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  12. இரண்டு குழந்தைகள் இருந்தாலே இப்போதெல்லாம் சின்ன வீடு போதாது :)

    பதிலளிநீக்கு
  13. மெளனத்தை வீடே தாங்காது. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  14. எதையும் பழகிக் கொள்ளும் விதத்தில் இருக்கிறதுவயது ஏற ஏற சப்தம் இம்சையைக் கொடுக்கும் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  15. வாங்க நெல்லைத்தமிழன். நான் ரொம்ப சத்தமான இல்லத்தில் இருக்கிறேன்! இதெல்லாம் ஜஸ்ட் கற்பனை!

    பதிலளிநீக்கு
  16. வாங்க கோமதி அரசு மேடம். நன்றி. உண்மையில் ரொம்ப சத்தம் எனக்குப் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
  17. வாங்க அனுராதா பிரேம்குமார். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க பால சுப்ரபோஸ். உங்கள் பெயர் எனக்கு என் தந்தையை நினைவு படுத்துகிறது. அவர் பெயர் பாலசுப்ரமணியம். அவரது புனைப்பெயர் சுபாஷ்சந்திரன். வருகைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  20. வாங்க அதிரா. சின்ன வீடு என்று தலைப்பைக் கூட்டம் சேர்க்கவே வைத்தேன்! என்ன தலைப்பு வைக்கலாம் என்பதில் ஒரு சின்னக் குழப்பம் இருந்தது!

    பதிலளிநீக்கு
  21. வாங்க அதிரா.. நான் சொல்ல முயன்றிருப்பது பெரியவரை யாரும் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை என்பதை. தனியாக மாடியில் இருக்கிறார். மறைபொருளாக உணர்த்த முயன்றேன்! வெற்றி இல்லை என்று தெரிகிறது!!!!

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப மவுனமாக இருந்தாலும் போரடித்து விடும். அதே போல ரொம்ப சத்தமாக இருந்தாலும் வெறுத்து விடும். என் நண்பர் ஒருவர் எங்கள் வீட்டை ரொம்பச் சத்தமான வீடாக்க குறிப்பிடுவார்!

    பதிலளிநீக்கு
  23. வாங்க ஜீவி ஸார். நன்றி பதிலை ஒரு கவிதையாகவே வடித்து விட்டீர்கள். அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க செல்லப்பா ஸார். மௌனமான அலறல் என்கிற வார்த்தை நினைவுக்கு வருகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க நன்று நொரண்டு @ ஈரோடு, நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அருமையான கவிதை! இப்போது பல வீடுகளில் இப்படித்தான் ஆகிவருகிறது!

    கீதா: முன்பு எவ்வளவு கலகலப்பான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தேனோ, (மிகவும் பிடித்த சூழ்நிலை அது) அதன் பிறகு (எப்போது என்று கேட்கக் கூடாது!!!!ஹிஹிஹி) குறைந்து மகனுடனான நண்பர்களுடனான தருணங்கள் மீண்டும் கலகலப்பாகி தற்போது மீண்டும் குறைந்து குறைந்து சமீபகாலமாகக் குறைந்தே போனது, அலைபேசி, கணினியுடனான உறவு மட்டும் என்று ஆனதால் மௌனம், அமைதி பழகிவிட்டது என்றாலும் சில சமயமே நன்றாக இருக்கிறது! பல சமயங்களில் அந்த மௌனத்தினால் விளையும் ஏக்கங்கள்...என்றாலும் அதற்கும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது என்றே தோன்றிவிட்டது. என்னை மகிழ்வாக வைத்துக்கொண்டுவிடுவேன்... இதோ இப்போது கூட அடையார் ஆலமரத்தைப் பார்க்கக் கிளம்பிவிட்டேன்...மரங்களுடன் பேசிவிட்டு வர்லாமே என்று!!ஹஹ்ஹஹ் இப்போது ஓகே ஆனால் முதுமையில்???!!! அப்போதும் தனியாக இருக்க நேர்ந்தால், தனியாக உலா வர (என் தந்தை (82) இப்போதும் தனியாக ஊர் சுற்றுவார், பிரயாணம் செய்வார்) சக்தி கொடு இறைவா என்றுதான் ! பிரார்த்தனை!!

    பதிலளிநீக்கு
  28. ஜிவி சாரின் கவிதையிலான கருத்து அருமை!! சார் அதில் கணினியும் சேர்த்துக் கொண்டுவிடுங்கள்!! தனித்தனி வண்டியும் சேர்த்துக் கொள்ளூங்கள்!! திஸ் இஸ் மை ஏரியா...பெர்சனல் ஸ்பேஸ் என்றுதான் மாறி வருகிறது சார்!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!