வியாழன், 16 பிப்ரவரி, 2017

குடையாளி கொடையாளி ஆன கதை
குடையாளி கொடையாளி ஆன கதையும், 250 ரூபாய் மிச்சம் பிடித்த கதையும்!     ஞாயிறு மாலை பாகடோக்ரா விலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் இருக்கும் டார்ஜீலிங் வந்து சேரும் பொழுது மழை வந்து  வரவேற்றதால் புத்த மடத்துக்கு செல்லும் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சூடு சூடாக கொடுக்கப் பட்ட தேநீர் பிஸ்கட் இவற்றை சாப்பிட்டுவிட்டு ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தோம்.  ஆகையால் ஒரே இடத்திலிருந்து வேறு வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட கூரை மீது சின்டெக்ஸ் டாங்க் மசூதி இவை திருமபத் திரும்ப வந்து எல்லோர் பொறுமையையும் சோதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்..     சென்னையிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட வெப்ப நிலை மாறுதல் காரணமாக தூக்கம் சற்று தாமதமாக  வந்தது.  இருப்பினும் தீபாவளி அன்று எழுப்புவது போல காலையில் 0345 க்கு டிரைவர் கபில் சர்மா ஆஜராகி சீக்கிரம் கிளம்பினால் மட்டும் முன்னே போய் இடம் பிடிக்க முடியும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி எல்லோரையும் எழுப்பி விட்டார்.


     ஆனால் நண்பர் விங்ஸ் மட்டும் நான்  குளிரில் எங்கும் வருவதாக இல்லை என்று சொல்லிவிட்டுப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டதனால் நாங்கள் நால்வர் மட்டும் டைகர் ஹில் நோக்கிப் புறப்பட சாலை பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டி ருந்தமையால்   பக்கத்தில் இருந்த இன்னொரு குன்றின்மேல் போய் நின்றவுடன் மழையும் 'நானும் வந்தேன் உங்களோடு' என்று வந்தே சேர்ந்தது.  


     மணி 0420. குன்றின் உச்சியில் நின்றதால் காற்றும் மழையும் கடும் குளிருடன் போட்டி போட "சாய் ...சாய் " என்ற குரலைக் கேட்டதும் கடவுள் நம்மிடம் பேசினால் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது..     இதற்குள் ஒரு குரல் பக்கத்தில் இருக்கும் கடையில் குடை விற்கிறார்கள் என்று கூவ,  'அப்பா காசு வச்சிருக்கியா?'  என்று பெண் கேட்டதும் முதலில் 'இல்லை' என்று சொன்னாலும்,  பின்னர் நாம்தான் நம் ஃபோன் கவரில் ஒரு 500 ரூபாய் வைத்திருப்போமேன்னு கவரைக் கழற்றினால் ....  இருந்தது ஒரு 500.     குடை வாங்கி குழந்தைகளுக்கு பிடித்துக் கொண்டு தலையில் ஒரு கைக்குட்டையை போட்டுக் கொண்டு முடிந்த வரை படங்கள் எடுத்து திருப்தி பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று கைக்குட்டையை கொண்டு  போய் பள்ளத்தில் போட்டதும் காமெராவை குடைக்குள் இருப்பவரிடம் கொடுத்து விட்டு மழையில் நனைந்தவாறே போன் காமெராவை மட்டும் உபயோகித்து  ஹில் விஜயத்தை ரெகார்ட் செய்தோம்.  


     இதோ நாலரைக்குத் தெரியும்  ஐந்தேகாலுக்கு ஆறு மணிக்கு என்று பொழுது போய் ஏழரை என்றதும் இங்கே வராத வெயிலா கஞ்சன் ஜங்கா மேல் வீசப்போகிறது என்ற ஏமாற்றத்துடன் காரில் வந்து உட்கார்ந்தால்.......


Image result for kanjan janga images     முதலில் வந்தவர் கடைசியில் என்ற கூற்றுப்படி 30 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின் நகர்ந்து ஊர்ந்து ஒரு வழியாக கூம் ரயில்வே ஸ்டேஷன் வந்து  மழை பெய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை யுனெஸ்கோ வின் உலக சரித்திரத்  தளங்களில் ஒன்று என்ற அறிவிப்புப்பலகை யை  மட்டும் ஒரு படம் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் வண்டியை தண்டவாளம் அருகே நிறுத்துங்கள் என்று சொல்லி மழையில் காமெரா நனையாமல் இருக்க ஒரு சின்ன டவல் போட்டுப் போர்த்திக் கொண்டு மழையில் இறங்கி ஓடிப்போய் நிலையத்துக்குள் அடைக்கலம் புகுந்து எடுத்த காட்சிகள் தான் ஞாயிறு படங்களில் நீங்கள்  பார்த்தது.Image result for ghum railway station images     பின்னர் வண்டியில் ஏறி 3 அல்லது 4 நிமிடங்கள் பயணித்த பின்னரே போன் இல்லாதது தெரியவர வண்டியைத் திருப்பிக் கொண்டு வர ஒரு 5 அல்லது 6 நிமிடங்கள்.  தொலைந்தது தொலைந்ததுதான் . கிடைக்கவில்லை.


     அஜாக்கிரதையாய் இருந்ததன் பலாபலன்கள் :


     15000 பெறுமான கைபேசி நஷ்டம் 


     சென்னையில் கிளம்பி டார்ஜீலிங் டைகர் ஹில் வரை எடுத்த படங்கள் அவ்வளவும் கிடைக்காமல் போனது [எங்கள் நஷ்டம் ..உங்கள் நஷ்டமும் தான்]


     103 வயது பாட்டி கீபோர்டில் வாசித்த பாட்டுக்கள்  போயே போயிந்தி.[இருந்தால் வெள்ளிக்கிழமை போடலாமோ ?]


     தொலைந்த போனுக்குப் பதில் வாங்கிய 1+3 லாபம்.


     குடை வாங்கியதால் ஒரு குடையும் 250 சில்லரையும் மிச்சம்.


     குடையை அங்கு உபயோகப் படுத்திய பின் ஹோட்டல் காவலரின் பெண்ணுக்கு கொடுத்ததுதான் நாங்கள் டார்ஜீலிங்கில் செய்த நல்ல காரியங்களில் உயர்வானது என்று ஒரு எண்ணம். இரண்டு படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து...

40 கருத்துகள்:

 1. குடையாளி கொடையாளி ஆனா கதையும், 250 ரூபாய் மிச்சம் பிடித்த கதையும்!//

  கதை நன்றாக இருக்கிறது. அதில் சோகம் 15000 பெறுமான கைபேசி நஷ்டமானது. படங்கள் போனது வருத்தம்.

  // குடையை அங்கு உபயோகப் படுத்திய பின் ஹோட்டல் காவலரின் பெண்ணுக்கு கொடுத்ததுதான் நாங்கள் டார்ஜீலிங்கில் செய்த நல்ல காரியங்களில் உயர்வானது //

  உண்மையில் நல்ல காரியம்.
  குடையாளி, கொடையாளி ஆன கதையும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. அலைபேசியின் இழப்பு வருந்தத்தக்கது நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 3. கைபேசி தொலைந்ததை 15,000 நஷ்டம், 500 லாபம் என்று எழுதியிருக்கிறீர்கள். விட்டால் 25,000க்கு போன் வாங்குவதாய் இருந்தது ஆனால் அப்போ 15,000க்குத்தான் வாங்கினேன். அதனால் லாபம் 10,000ம்னு சொல்வீர்கள் போலிருக்கே. எங்கதான் போனை மிஸ் பண்ணினீர்கள்? மத்த போட்டோக்கள் எல்லாம் மொலைந்துபோனதுதான் பெரிய நஷ்டம்.

  பதிலளிநீக்கு

 4. கொடையாளியானதற்கு பாராட்டுக்கள்.... ஆமாம் நீங்க பழைய போனை தொலைத்தது புது போன வாங்குவதற்காக நீங்கள் போட்டதிட்டமா? ஹீஹீ

  பதிலளிநீக்கு
 5. கஞ்சன் ஜங்கா போய் சூரியன் பார்க்காட்டிலும், ஒரு கைபேசி ஒரு கைக்குட்டை ஒரு கைக்குடை யின் சுய சரிதம் எழுதி , றம்ப் அங்கிளை விடக் கொடையாளி ஆனமைக்கு வாழ்த்துக்கள்......

  அந்தக் குடையைக் கொடுக்கும்போது ஒரு செல்பி எடுத்து இங்கின போட்டிருக்கலாம், சரி போனாப்போகுது தற்பெருமை பிடிக்காதாக்கும்:)...

  பதிலளிநீக்கு
 6. சேஏஏ சேஎ போனோடு அந்தப் பாட்டியையும் தொலைச்சீங்களே.... ஐ மீன் ரெக்கோர்ட்டும் போச்சே, இருப்பினும் அந்த 250 ரூபா மிச்சப் படுத்திய கதைதான் டொப்பூ இண்டைக்கு, இதைவிட நீங்களும் மாட்டேன் என சொன்னவரோடு சேர்ந்து ஹொட்டேல்லயே தூங்கியிருக்கலாமோ....

  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ச்ச்ச்:)

  பதிலளிநீக்கு
 7. அடாடா !!அந்த படங்கள் எல்லாம் போச்சே ..இதுக்குதான் நான் கைப்பையில் போன் இருக்க இல்லையான்னு 10 தரம் செக் பண்ணுவேன் அதோட எடுத்த படங்களை உடனே கணவர் மக்கள் அப்புறம் என் டாப்லட் எல்லாத்துக்கும் நீல பல்லில் உடனுக்குடன் அனுப்பிடுவேன் :) என்கிட்டே எக்கச்சக்கமா சேர்ந்திடும் ..
  அந்த 103 வயது பாட்டி இசை மிஸ் ஆனதுதான் ரொம்ப கவலை ..
  கைகுட்டைபோட்டு கவனமா மூடி அப்புறம் எங்கே கோட்டை விட்டீங்க :)
  குடையாளி கொடையாளியானதுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. sorry that was a silly spelling mistake //கணவர் ,மகள்//

  பதிலளிநீக்கு
 9. இதெல்லாம் யாருடைய அனுபவங்கள் நிறையவே கெஸ் செய்யவேண்டுமோ

  பதிலளிநீக்கு
 10. போன் போனால் கஷ்டம்தான் ,டெல்லி சென்றபோது ஒரு முறை நானும் இப்படித்தான் பறிகொடுத்தேன் :(

  பதிலளிநீக்கு
 11. கொடையாளிக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 12. தகுந்த விடைகளை எதிர்பார்த்து சில கேள்விகள்:

  1. கஞ்சன் ஜங்கா -- பெயர்க் காரணம்.

  2. குடை -- பெயர்க் காரணம்

  3. கொடை -- பெயர்க் காரணம்

  எது சரி?

  1. டார்ஜிலிங் 2. டார்ஜீலிங் 3. டார்சிலிங் 4. டார்சீலிங் 5. டார்ஜிலிங்க்

  பதிலளிநீக்கு
 13. என்னதான் கொடையாளி ஆனாலும் 15,000 ரூபாய் மதிப்பிலான கைபேசியைத் தொலைத்தது கூடத் தெரியாமல் பயணம் செய்தது ஆச்சரியமா இருக்கு! :( ஜீவி சார் கேட்டிருக்கும் கேள்விகள் புதன்கிழமைப் புதிரில் வந்திருக்கணுமோ! :)

  பதிலளிநீக்கு
 14. யாத்ரா தானம் என்று ஒன்று உண்டு. யாத்திரை கிளம்பும்போது யாருக்காவது ஒரு பத்துரூபாயை தானமாகக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டுமாம். அப்படிச் செய்யாதவர்களுக்கு யாத்திரை முடிவில் ஏதாவது ஒரு பொருள் இழப்பு வரும் என்று என் பாட்டி சொல்வார்கள்... அவர் இறந்துபோய் பல வருடங்கள் ஆகின்றன. இன்னுமா அவர் வாக்கு பலிக்கிறது?
  - இராய செல்லப்பா நியூஜெர்சி.

  பதிலளிநீக்கு
 15. நல்ல பயண விவரங்கள்! கஞ்சன்சங்கா எல்லாம் பார்ப்பேனா என்று தெரியவில்லை...ஃபோன் தொலைந்தது அதுவும் 15000 ரூபாய் மதிப்புள்ள ஃபோன்!!! சிகரம் பார்க்காமல் சிகரம் தொட்ட உங்களுக்கு வாழ்த்துகள்!!

  கீதா: கேஜி சார்... சே சே வடை போச்சேனு ஃபோட்டோஸ் எல்லாம் இப்படியா தொலைத்து விட்டு வருவது??!!!ஹும் அந்த 103 வயது யுவதியின் பாட்டை மிச் செய்து அவரது அழகிய ஃபோட்டோவையும் பார்க்க முடியாமல் போச்சே! ( அடப் பாவி நான் ஃபோனைத் தொலைச்சுட்டேனு சொன்னா நீ ஃபோட்டோவைத் தொலைச்சுட்டீங்களேனு..)

  அந்தக் கைக்குட்டையைப் பறக்க விட்டதை வாசித்த போது ..!!? வேதம் புதிது படப் பாடல் நினைவுக்கு வந்தது!!!ஹிஹிஹி

  குடை கொடையானது அருமை!!!!நிறைவு!!

  பதிலளிநீக்கு
 16. யாத்ரா தானம் என்று ஒன்று உண்டு. யாத்திரை கிளம்பும்போது யாருக்காவது ஒரு பத்துரூபாயை தானமாகக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டுமாம். அப்படிச் செய்யாதவர்களுக்கு யாத்திரை முடிவில் ஏதாவது ஒரு பொருள் இழப்பு வரும் என்று என் பாட்டி சொல்வார்கள்... அவர் இறந்துபோய் பல வருடங்கள் ஆகின்றன. இன்னுமா அவர் வாக்கு பலிக்கிறது?//

  செல்லப்பா சார் இது சும்மா இல்லையோ. குடை தானமும் செய்துவிட்டு பொருளையும் இழந்து விட்டுத்தான் வந்திருக்கார்...இங்கு வொர்கவுட் ஆகலையோ..

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ஜீவி சாரின் கருத்தை மிகவும் ரசித்தோம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 18. பயணம் செய்தது ஸ்ரீராம் இல்லை என்பது தெரிந்துவிட்டது!!! அதெப்படிக் கண்டு பிடித்தாய் என்று கேட்டால் அதெல்லாம் பரம ரகசியம்....ஹிஹிஹிஹி..வேறு யாருக்கேனும் தெரிந்திருக்கலாம்....(2 விஷயம்...)

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 19. கொடுங்கள் ஒரு ஹை பைவ்!நானும் என்னுடைய 10,000 ரூபாய் போனை தொலைத்து விட்டேன்(((::: .

  ஒரு மனிதன் கண்டிப்பாக செய்ய வேண்டிய தானங்களுள் குடையும் ஒன்று. மற்ற இரண்டு தடி, மற்றும் செருப்பு என்று கருட புராணம் செப்புகிறது. ஒன்றை செய்து விட்டீர்கள். நன்று!

  பதிலளிநீக்கு
 20. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
 21. வாங்க நெல்லை.. ஆம், சோகத்தை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறோம்! அவ்வளவுதான்! நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க மதுரை.. ஆஹா... வில்லனுக்கு வில்லனா இருப்பீங்க போலிருக்கே.. இப்படி எல்லாம் சந்தேகப் படறீங்க!

  பதிலளிநீக்கு
 23. வாங்க அதிரா.. ஆமாம்ல... ஒரு போட்டோ எடுத்துக் போட்டிருக்கலாம்! டிரம்ப் அங்கிள் எப்படி கொடையாளி?

  பதிலளிநீக்கு
 24. தொலைஞ்சது தொலைஞ்சதுதானே அதிரா.. என்ன செய்ய? ஹோட்டலில் தங்கியிருந்திருந்தால் தொலைக்காமல் இருந்திருக்கலாம். நிறைய காணற்கரிய காட்சிகளைக் காண முடிந்திருக்காதே..

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஏஞ்சல்.. ஆமாம், படங்கள் போனது வருத்தம்தான். அங்கே அலைபேசியில் சார்ஜ் நிற்பதற்கே அல்லது குறையாமல் பார்த்துக் கொள்வதே பெரிய காரியமாக இருந்தது! எங்கே மற்றவர்கள் அலைபேசிக்கு அனுப்ப? அவர்களும் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்களே...

  பதிலளிநீக்கு
 26. வாங்க ஜி எம் பி சார். கெஸ் செய்வது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லை!!

  :))

  பதிலளிநீக்கு
 27. வாங்க பகவான்ஜி. உங்கள் ஃபோனும் தொலைந்து போனதா? வருத்தம்தான்.

  பதிலளிநீக்கு
 28. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி

  பதிலளிநீக்கு
 29. நன்றி ஜீவி ஸார். தகுந்த விடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எது சரி என்கிற கேள்விக்கு ஒரு உதாரணத்த்டு பதில். கிரிக்கெட்டர் கவாஸ்கரை கவாஸ்கர் என்றும் சொல்வார்கள், காவஸ்கர் என்றும் சொல்வார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பேயியை வாஜ்பேயி, வாஜ்பேயி, வாஜ்பாயி என்று பலவிதமாகச் சொல்வார்கள். அவரவர்கள் பாஷையின் சரியான பொருள் தெரியாமல் நம் மொழியில் படிக்க முடியும் சௌகர்யத்தில் படிக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 30. வாங்க கீதாக்கா.. தொலைத்தது தெரிந்து உடனே தேடியும் கிடைக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 31. வாங்க செல்லப்பா ஸார்.. நீங்கள் சொல்லியிருப்பது சரி.

  பதிலளிநீக்கு
 32. வாங்க துளஸிஜி. நன்றி.

  வாங்க கீதா ரெங்கன். கைக்குட்டை நினைவு படுத்தும் பாடல் சூப்பர். உங்கள் அடுத்தடுத்தடுத்த கருத்துகளுக்கும் நன்றி. பயணம் செய்வது ஸ்ரீராம் இல்லை என்று கண்டுபிடித்த முதல் நபர் நீங்கள்தான்!

  பதிலளிநீக்கு
 33. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன்.. வலுக்கட்டாய தானம்!

  பதிலளிநீக்கு
 34. //பயணம் செய்வது ஸ்ரீராம் இல்லை என்று கண்டுபிடித்த முதல் நபர் நீங்கள்தான்!//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இருக்கே! பொற்கிழியில் எனக்கும் பங்கு இருக்காக்கும். எனக்கும் ஶ்ரீராம் இல்லைனு தெரியும். நல்லாவே தெரியும். ஆனால் இங்கே சொல்லலை. அதுக்காகப் பொற்கிழி எல்லாம் இல்லைனு சொன்னா! சும்மா விடுவேனா! :))))

  பதிலளிநீக்கு
 35. //எனக்கும் ஶ்ரீராம் இல்லைனு தெரியும். நல்லாவே தெரியும். ஆனால் இங்கே சொல்லலை. //


  ஹிஹிஹி... சொல்லலைன்னா உங்களுக்குத் தெரியும்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? நல்லாவே தெரியுமா? எப்படி?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!