ஊரில் எங்கள் வீட்டில், மாமரத்தில், கொய்யா மரத்தில் எல்லாம் கொவ்வைக் கொடி படர்ந்து நிறையக் காய்க்கும், சமைக்கலாம் எனத் தெரியும் ஆனா சமைக்கப் பயம் சமைத்ததே இல்லை.. வெட்டி வெட்டி எறிந்திடுவோம்.
வெளிநாட்டுக்கு வந்தபின் பல இடங்களில் கோவைக்காயின் ரெசிப்பிகள் பார்த்ததுண்டு.. செய்ய ஆசை ஆனா இங்கு கோவைக்காய் கிடைக்கவில்லை.
இப்போ தமிழ்க் கடை எங்களுக்கு வந்திட்டமையால், போன கிழமை போனபோது நிறைய இருந்துது, சரி இம்முறை களம் இறங்கியே தீருவது என கோவைக் காய்களை எடுத்தேன்.. கவுண்டரில், பில் போடுவது ஒரு கேரளாவைச் சேர்ந்த தம்பி.
அவரிடம் சொன்னேன், முதன்முதலில் கோவைக்காய் வாங்கிப் போகிறேன் சமைச்சுப்பார்க்க என.. அவர் சொன்னார்.. “அக்கா இது கோவைக்காய் இல்லை”.. என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
திகைத்தவேளை,சொன்னார்.. “இல்லை அக்கா இதுவும் ஒரு கைண்ட் ஒஃப் கோவைக்காய்தான், ஆனா கேரளாவில் இருந்து வருவது, பிரச்சனை இல்லை கொண்டுபோய்ச் சமையுங்கோ” என்றார். அப்போ எப்படியும்.. கீதாவுக்கும் துளசி அண்ணனுக்கும் இது தெரிந்திருக்கும் என நம்பி.. வாங்கி வந்தேன்:)..
அதனால இவை என் கன்னிக் கோவைக்காய் ரெசிப்பீஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹையோ ஏன் ஓடுறீங்க கர்ர்ர்ர்:).. நின்று நிதானமா படிச்சு வோட்டும் போட்டிட்டு.. ஓடுங்கோ:).
முதல்ல எதுக்கும் இப்பூடி உயரத்தில ஏறி இருப்பம்:) கல்லிக் கில்லு வந்தாலும்:)
கோவைக்காய் வறை
நான் சேர்த்திருப்பவை.. வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, இடித்த செத்தல்(chillie flakes).. மற்றும் தேங்காய்ப்பூ(படத்தில் வைக்க மறந்திட்டேன்).முதலில் கோவைக்காயை நீளமாகவோ அல்லது வட்டமாகவோ வெட்டி எடுத்து நன்கு உப்புத்தண்ணியில் கழுவி எடுத்து வைக்க வேண்டும்.
சிலர் இதுக்கு அதிகம் எண்ணெய் சேர்த்துச் செய்கிறார்கள், எனக்கு அது விருப்பமில்லை, அதனால ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய் வெங்காயத்தை வதக்கினேன்.
பின்பு சில்லி ஃபிளேக்ஸ் ஐயும் பொட்டுக்கடலையையும் போட்டு நன்கு வதக்கினேன்..
வதங்கிய பின், கோவைக்காய்களைப் போட்டு நன்கு வதக்கினேன், எண்ணெய் போதாமையால், கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொஞ்ச நேரம் மூடி[இப்பூடியான தெக்கினிக்குகளை ஊஸ் பண்ண அஞ்சுவுக்குத் தெரியாது...:)... ஹையோ உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லிட்டனே.. இப்போ வோட் போடாமல் போயிடப்போறாவே:)] மெல்லிய நெருப்பில் வேக வைத்து, பின்பு திறந்து விட்டு, நன்கு வதக்கி, .. தேங்காய்ப்பூவைச் சேர்த்து வதக்கி இறக்கினேன்...
கோவைக்காய் வறை ரெடி..
சூப்பராக இருந்துது, ஆனா பச்சைமிளகாயும் சேர்த்தமையாலோ என்னமோ, காரம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது... உங்கள் விருப்பத்துக்கேற்ப காரத்தைக் கவனியுங்கோ.. சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்தமையால்ல்.. சமைச்சு முடிப்பதற்குள் 15 தும்மல்களும் தும்மி விட்டேன் ஹா ஹா ஹா:).அடுத்து ஆரியபவான் கிச்சினிலிருந்து:).. கோவைக்காய் ஃபிறை fry:)..எப்படிச் செய்வது என்பதை படங்களோடு விளக்குகிறார் அதிரா:)..
அதேபோல உப்பில் பிசைந்து கழுவி எடுத்த கோவைக்காய்களுக்கு.. கடலை மா, அரிசிமா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி... எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.. நீண்ட நேரம் எடுத்தது நன்கு பொரிந்து வர... நன்றி வணக்கம்_()_
இது, வறையை விடச் சுவையாக இருந்துதே!!!
இன்னொரு இனிய காலையில்.. இன்னொரு “கன்னி றெசிப்பியுடன்” :)உங்களை விரைவில் சந்திக்கிறேன்.. நன்றி.
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
இது என் இன்னொரு Diary இலிருந்து.. “என் கன்னிக் கலெக்ஷன்ஸ்”.. ஹா ஹா ஹா:)
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
[ விவரமான ராணுவ வீரன்...! குறும்புக்காரனும் கூட! நீங்க என்ன சொல்றீங்க? சுரேந்திரன் பதில் சொல்லாட்டி என்ன, நாம சொல்லிடுவம்!
அப்புறம் அதிரா... கோவைக்காய் எனக்கு கொஞ்சமாவது பிடிக்கும் என்று இருந்தது. ஆனால் பாஸ் எப்போ பார்த்தாலும் இதையே செய்து செய்து (நெல்லைத்தமிழன் பாணி) இப்போதெல்லாம் பார்த்தால் கோவைக்காய் கோவக்காய் ஆகி விட்டது. மற்ற படி வறை பிறை (ஃப்ரை) எல்லாம் ஸூப்பர்! - ஸ்ரீராம் ]
தமிழ்மணத்தில் வாக்களிக்க...........
கோவைக்காய் சாப்பிடுவதில்லை. என்றாலும் குழந்தைகளுக்காகப்பண்ணுவேன். வெங்காயம் போட்டு, போடாமல், கோவைக்காயில் சாதம் கூடப் பண்ணி இருக்கேன். சாப்பிட்டதில்லை. கோவைக்காய், சுரைக்காய் போன்றவை தள்ளுபடி. சுரைக்காயில் அல்வா கூடச் செய்வார்கள், கோஃப்தா செய்வார்கள்.
பதிலளிநீக்குகோவைக்காயில் வறை பிறை எதைச் செய்தாலும் ஒரு டேபிள் ஸ்பூன் கட்டித் தயிர் சேர்த்துப் பிசறி ஐந்து நிமிடங்கள்
பதிலளிநீக்குவைத்திருந்த பின் பக்குவம் செய்தால்... ஆஹா சுவையோ.. சுவை!..
அதிரடி ரெஸிப்பிதான்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகோவைக்காய் மிகவும் பிடிக்கும் ஆனால் எங்கள் வீட்டில் அதை நீள நீளமாக கட் பண்ணி கறி செய்தால்தான் பிடிக்கும் ஆனால் அதற்கு சிறிது நேரம் பிடிக்கும் என்பதால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறைதான் செய்வேன்...
நான் செய்யும் முறை சிறிது மாறுப்பட்டது
கன்னி போட்ட ரிசிப்பிக்கு 4 வோட்டு போட்டுட்டேன்
அதிரா முதலில் கேரளத்துக்குப் பதில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன் அப்புறம் ரெசிப்பிக்கு வருகிறேன்...இது கேரளத்து வெரைட்டி குண்டு...கோவைக்காய் கொஞ்சம் ஒல்லியாக நீளமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் குண்டும் ஒல்லியும் கலந்தே கிடைக்கிறது. இந்தக் குண்டு வெரைட்டி சாதாரணமாக வேலியில் படறும்....மலையாள உச்சரிப்பு கோவக்கா. இங்கு படத்தில் இருப்பது தொண்டங்கா. ஹிந்தியில் குந்த்ரு...வெங்கட்ஜி இதை உறுதிப்படுத்தவும்...ஏனென்றால் இந்தக் கோவைக்காய் வெரைட்டிஸ் நார்த்தில் வேறு வேறு பெயர்களுடன்...வெங்கட்ஜி பதிவில் சொல்லியிருந்தார்...
பதிலளிநீக்குஅப்புறம் ரெசிப்பிக்கு வருகிறேன்...இங்கும் திங்க நடக்கிறதே!!! ஹாஹாஹா
கீதா
நான் (மட்டும்) கோவைக்காய் சாப்பிட்டதில்லை. மனசுல பிடிக்காதுன்னு தோணிடுச்சு. பசங்க இங்க இருக்கும்போது ஹஸ்பண்ட் பண்ணியிருக்கா. நான் சாப்பிட்டதில்லை.
பதிலளிநீக்குஆனால் ஒடியல் கூழ் ரெசிப்பியை விட இது நல்லாருக்கு. இங்கு எப்போதும் சாதா கோவைக்காய் பார்ப்பேன். பார்க்கலாம் என்றைக்கேனும் பண்ணலாம் என்று தோன்றுகிறதா என. த ம
கோவைக்காய் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் செய்திருப்பது போல் நீள நீளமாக வெட்டிச் செய்வேன் அல்லது ரவுண்டு ரவுண்டாக...
பதிலளிநீக்குஇரண்டாவது முறை செய்வதுண்டு...முதல் முறையில் பொட்டுக்கடலை மட்டும் சேர்க்காமல் செய்வதுண்டு....உங்கள் டெக்னிக்கும் செய்து பார்த்துடறேன்
இங்கு ஓணம் சமையல்....
எல்லோருக்கும் எங்களின் ஓணாம்ஷதங்கள்!!! ஓணம் நல் வாழ்த்துகள்!
துளசியும் வாழ்த்துகிறார்...அவரது வாழ்த்துகளும்!!
கீதா
சத்துள்ள காய்.. ஆனால் நிறைய பேர் சாப்பிடுவதில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசெய்முறை நன்றாக இருக்கிறது. பிறைக்கு வறை மேலோ?
வேக வைத்த துவரம்பருப்பில் மிதமாக வதக்கிய கோவைக்காய், வெங்காயம், பூண்டு, சீரகம் கலந்து சப்பாத்தியுடன் கட்டு கட்டியிருக்கிறேன்.
படித்தேன், ருசித்தேன். ஓட்டுப் போட்டேன்.
பதிலளிநீக்குஅதிரா எண்ணெய் அதிகம் வேண்டாம் என்றால் கோவைக்காயைக் கட் செய்த பிறகு ஜஸ்ட் குக்கரிலோ, ஸ்டீமரிலோ போட்டு ஸ்டீம் செய்து விட்டுப் பயன் படுத்தினாலும் நன்றாக இருக்கும். வேலையும் எளிது.
பதிலளிநீக்குகீதா
ருசி ருசியாய் சாப்பிட ஆசைதான் நல்ல ரெசிபி பாராட்டுகள்
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ்வ் போட்டிட்டாரா? போட்டிட்டாரா? ஸ்ரீராம் என் ரெசிப்பியைப் போட்டிட்டாரா என்றேன்ன்ன்... ஹையோ நேக்கு காண்ட்ஸ் உம் ஓடல்ல லெக்ஸ் உம் ஆடல்ல... அஞ்சூஊஊஊஊஉ இன்னும் தூக்கமா.. கால்ல பிடிச்சு இழுத்து விழுத்திடுவேன்ன்:).. ஓடி வந்து அதிராவுக்கு கொஞ்சம் ஜெல்ப் பண்ண வாணாம்?? கர்:)..
பதிலளிநீக்குரெசிப்பி/கதை எது அனுப்பினாலும், வழமையாக எப்போ வெளிவரும் எனச் சொல்லுவார்தானே ஸ்ரீராம்.. ஆனா இம்முறை மெளனமாக இருந்திட்டார்ர்... எனக்கும் கேட்க விருப்பமில்லை சேப்பிறைஸ்தான் புய்க்கும் என்பதால்:)..
ஆனா எங்கள் புளொக்கில் எப்பவும் காத்திருந்து காத்திருந்தே பழக்கப்பட்டுவிட்டமையால்ல்.. இன்று இதை நான் எதிர்பார்க்கவில்லை அப்பூடியே ஷாக்ட் ஆகிட்டேன் என்றால் பாருங்கோவன்..:)
இம்முறை நீலமையில கை எழுத்து இருக்கு நன்றி நன்றி.
தமிழ்நாட்டுக்காரர்களுக்கு/ இந்தியர்களுக்கு.. கோவைக்காய் சிம்பிளான ஒரு சமையல் ரெசிப்பியாகத்தான் இருக்கும்.. ஆனா எங்களுக்கு[அதிலயும் நம் குடும்பத்துக்கு:)] இன்றுவரை அது விசித்திரமான ஒன்றுதான்.. இதில் குட்டிக் குட்டிக் கதைகள் பல இருக்கு.
பதிலளிநீக்குநான் குட்டிப்பிள்ளையாக இருந்தபோது, எங்கள் ஊரில் சண்டே ஃபெயார் நடக்கும்.. அதில் காடு கரம்பையில் இருக்கும் இலைவகை, காய்கறிகள் எல்லாம் சபைக்கு வந்திருக்கும்.
நம்ப மாட்டீங்க... அங்கு சில காடுகளில்.. காடு என்பது பயங்கரமான பெருங் காடல்ல... விழாம்பழம், தும்பங்காய், கஜூப்பழம், பாவல்காய்,நாவல்பழம், பலவகைக் கொடிகள்(சமைக்கும் இலைகள்), காணாந்தி, முசுமுசுட்டை..இப்படியானவை சும்மா சும்மா வளர்ந்திருக்குமாம்.. அவற்றை எல்லாம் இந்த சண்டே ஃபெயாரின்போது காணலாம்.
அப்பாவுக்கு விதம்விதமான இலைவகைகள்/கீரை வகைகள் பிடிக்கும் என்பதால், ஒவ்வொரு சண்டேயும் அங்கு போவார்ர்.. நானும் பெரும்பாலும் கூடவே ஒட்டிக்கொண்டு போய் விடுவேன்:).
இப்படித்தான் ஒரு தடவை, இதேபோல கோவைக்காய் விற்றார்கள்.. குட்டிப் புடலங்காய்போல பார்க்க அழகாக இருந்துது, சமைப்பதுதானே எனக் கேட்டு வாங்கி வந்தாச்சு.
அம்மாவுக்கு இதை எப்படிச் சமைப்பதெனத் தெரியாது, அத்தோடு எதுக்கு பழக்கமில்லாத மரக்கறியை வாங்கி வந்தீங்க எனக் கேட்டா .. அதனால நன்கு வதக்கி வத்தல் குழம்புபோல தளதள என அழகான குழம்பு வச்சா.
சாப்பிடப்போகும்போது பார்த்தால்ல்.. படு கச்சலாக இருந்துது.. பாவக்காய்கூட அப்படிக் கைக்காது... உடனே கொட்டச் சொல்லிட்டார் அப்பா, குப்பையில் கொட்டியாச்சு.
பின்பு சிலரை விசாரித்தபோது சொன்னார்கள்.. அது “பேய்ப்புடோல்”(ஒருவகைப் புடலங்காய்) என இருக்குது பார்க்க கொவ்வைக்காய்போலவே இருக்கும் ஆனா அது நஞ்சு என....ஙேஙேஙே... அன்றிலிருந்து கோவைக்காயே வேண்டாம் என விட்டாச்சு... அதனால்தான் வீட்டு மரத்தில் கொடி படர்ந்து காய்த்தாலும் திரும்பிப் பார்ப்பதில்லை..:)
என்ன இது போஸ்ட்டை விட கொமெண்ட்ஸ் பெரிதாக இருக்குதே என தானே ஓசிக்கிறீங்க?:) ஹா ஹா ஹா அது ஒன்றும் புதினமில்லைத்தானே:).. என்னைத்தெரிந்த எல்லோருக்கும் இது பழகியிருக்கும்.
பதிலளிநீக்குசமீபத்தில் அம்மா ஊருக்குப் போயிருந்தா, அப்ப்போ பக்கத்து வீட்டுப் பிள்ளை(என் வயதிருக்கும்) அவ அம்மாவைக் கூப்பிட்டாவாம்.. அன்ரி வாறீங்களோ.. கோயில் பக்கத்து மரத்தில் கொவ்வைக்காய்க் கொடி இருக்கு பிடுங்கி வந்து சமைக்கப் போறேன் என.. சரி என அம்மாவும் “யெல்ப்~ க்குப் போய், ஒரு ஷொப்பிங் பாக் முட்ட ஆய்ந்து வந்தார்களாம்.
அம்மா எதுவும் எடுக்கவில்லையாம்.. எனக்கு இதுபற்றி தெரியாது நான் சமைக்கவில்லை என்றிருக்கிறா...
அடுத்த நாள் அம்மா கேட்டாவாம்.. கறி வச்சனீங்களோ எப்படி இருந்தது என.... அவ சொன்னாவாம்ம்.. இல்லை அன்ரி அப்படியே எறிஞ்சிட்டேன்ன்.. அதைப்பார்த்த என் கணவர் சொன்னார்.. புது எக்ஸ்பரிமெண்ட் எல்லாம் வேண்டாம்ம்.. தெரியாத காய் என்பதால் எதுக்கு றிஸ்க் எடுக்கிறீங்க என:)...
பார்த்தீங்களோ இந்தக் கொவ்வைக்காயும் நாங்களும் படும் பாட்டை:)..
இம்முறைகூடப் பாருங்கோ ஒரிஜினல் கொவ்வைக்காய் எனக்கு கிடைக்கவில்லைத்தானே? இதன் உள்ப்புறம் வெள்ளைவிதைகள்தான் இருந்துது.. காய்கூட கொஞ்சம் தடிப்பானதாக இருந்துது சொவ்ட் இல்லை. ஒரிஜினல் கொவ்வைக்காய் சொவ்ட்டாக இருக்குமென நினைக்கிறேன்..
ஓகே அனைவருக்கும் பதில் சொல்ல பின்னர் வருகிறேன்ன்[சொறி:)].. இப்போ வந்தவை என் புலம்பல்ஸ்:)..
உங்களைப்போலதான் நானும் கோவைக்காயை தள்ளி வச்ச்சிருந்தேன். இப்ப சமைக்குறேன். உருளைக்கிழங்கு பொரியல் போல செய்வேன். இனி இது மாதிரியும் செஞ்சு பார்க்குறேன்.
பதிலளிநீக்குநான் வந்திட்டேன் :)
பதிலளிநீக்குகடைசீலருந்தே வருவேன் :)
அந்த படை வீரன் என்னை போல ஒருவர் :) என்னை தேம்ஸில் தள்ளி விட்டாலும் உங்க கையை செயின் போட்டு கட்டிக்கிட்டே குதிப்பேன் :)
கோவக்காய் ஊர்ல அம்மா அடிக்கடி சமைப்பாங்க ஆனா நான் அப்போ சாப்பிட்டதே இல்லையே :) ..இங்கே வந்துதான் நானும் பழகினேன்
பதிலளிநீக்குஜெர்மனிலயும் கண்ணுக்கு பார்க்க கிடைக்காது ..இங்கே இங்கிலாந்து வந்துதான் கோவக்கா மொகினி நிறைய வட இந்திய காய்கள் எல்லாம் பார்த்தேன்
சரி கமிங் டு கோவக்காய் நான் அதை சாம்பாரில் போடுவேன் ..கலந்த சாதம் செய்வேன் குழம்பும் செய்வேன் நெய் கத்திரி போல் கொஞ்சமா தேங்கா எண்ணெய் விட்டு சட்டில வதக்குவேன் .என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் :)
அப்புறம் இந்த கொடியின் இலைகளை பரிசை போர்ட் தேய்ப்போம் ஸ்கூலில் ..கருப்பா வரும் எழுது பலகை
அடிக்கடி டிலீட் பண்ண பிடிக்கலை //பரிசை // அது பறிச்சு என்று வாசிக்கவும்
பதிலளிநீக்கு/நீண்ட நேரம் எடுத்தது நன்கு பொரிந்து வர... //
பதிலளிநீக்குகர்ர்ர்ர் வன்மையான கண்டனங்கள் எண்ணையில் டீப்பா பொரிச்சா அன் ஹெல்த்தி டயாபெட்டீஸ் கொலெஸ்டெரோல் எல்லாம் வரும் இப்போவே கோர்ட் போறேன் :)
பின்பு சில்லி ஃபிளேக்ஸ் ஐயும் பொட்டுக்கடலையையும் போட்டு நன்கு வதக்கினேன்..//
பதிலளிநீக்குகர்ர்ர் கோவைக்காய்க்கு எதுக்கு சில்லி பிளேக்ஸ் அதோட பச்சை மிளகாயும் அது என்னது கூட சட்னி டாலும் கர்ர்ர்ர்ர் :)
நானா சமைக்கும்போது பச்சை மிளகாய் அதும் நெல்லை தமிழன் ரெண்டா கீறி சீட்ஸ் எடுத்து போடுவாரே அது போலத்தான் கடுகு தாளிச்சத்துக்கு பின் போட்டு வதக்குவேன் காரம் தெரியாது
/என்னாது தண்ணியா சேர்த்திங்க கர்ர்ர்ர் ஹாஹாஆ இது தெக்கினிக்கு இல்ல தொக்குனிக்கு :)
நான் வெண்டைக்காய் ஃப்ரை போலவே கோவைக்காய் சமைப்பேன். நேற்று ஒரு மாறுதலுக்கு கோவைக்காய் ஸ்டஃப்ட் ஃப்ரை செய்தேன். மிக நன்றாக இருந்ததாக மகன் சொன்னான். இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன்!
பதிலளிநீக்குஅஞ்சு இப்போ கோவைக்காய் கிடைக்கிறது.(அஞ்சுவுக்கு தகவல்)
பதிலளிநீக்குஎங்க வீட்டில செய்வாங்க அம்மா. ஆனா நாங்தான் திரும்பியும் பார்ப்பதில்லை. இப்ப இங்கன வந்து தேடியலைகிறோம். (இருக்கும்போது அருமை தெரியாது)நல்லவேளை இப்ப இங்கனயும் கிடைக்குது. ரெசிப்பி நோட் செய்தாச்சு
//'திங்க'க்கிழமை 170904 :: கோவைக்காய் வறை & பிறை - அதிரா ரெஸிப்பி///
பதிலளிநீக்குஅதென்ன அது ஒவ்வொரு தலைப்பிலும் நம்பர் வருகிறதே ஸ்ரீராம்? அத்தனை ரெசிப்பிகள் இங்கே வெளிவந்திருக்கோ?..
இன்னுமொன்று “F" வரும் இடங்களில் எல்லாம் தமிழில் ரைப் பண்ணும்போது F பட்டினையே பாவியுங்கோ அப்போதான் ஃப். என அக்கன்னாவுடன் வரும்.. இந்த அக்கன்னா வராவிட்டால் அது பி எனும் உச்சரிப்பாகும்.. மூன்றாம் பிறை போல:)..
ஊசிக்குறிப்பு:
இவ்வசதி கீ போர்ட்டில் மட்டுமே உள்ளதாக்கும்.. மொபைலில் எனில் பி எனத்தான் வரும்.. :)
ஹையோ தமிழ் படிப்பிச்சே நேக்கு வயசாகிடும்போல இருக்கே முருகா:).. இருப்பினும் விடமாட்டேன்ன் அனைவருக்கும் அழகு தமிழ் கற்பித்தே தீருவேன்ன்:).. பூஸோ கொக்கோ:).. நேக்குத் தமிழில் டி ஆக்கும்..க்கும்..க்கும்:)...
//Geetha Sambasivam said...
பதிலளிநீக்குகோவைக்காய் சாப்பிடுவதில்லை.//
வாங்கோ கீதாக்கா... இங்கே பார்க்கிறேன்.. பல வோட்டுகள்.. சாப்பிடுவதில்லை எனும் கட்சிக்கே அதிகமாக விழுந்திருக்கு ஏன்?.. இங்கு நான் செய்து போட்ட ரெசிப்பி.. இரு வகையும் மிக சூப்பராக இருந்துதே.. இரண்டும் மிக அருமை சும்மாவே சாப்பிடலாம்.. வாழ்க்கையில் முதல் தடவையாக இதைச் சாப்பிட்டேன்ன்.. செய்த கையோடு சுடச்சுடவே முடிந்து விட்டது.
ஆனா உங்களுக்கு, ஏன் பெரிதாக யாருக்கும் பிடிக்கவில்லை... கசப்பு தன்மை ஏதும் இதில் இல்லையே..
இனி அடுத்தமுறை.. உள்ளே சிவப்பாக இருக்கும் கொவ்வைக்காய்கள் வாங்கிவந்து உங்கள் ஒவ்வொருவர் முறையிலும் முயற்சிக்கிறேன்.
நன்றி.
//துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குகோவைக்காயில் வறை பிறை எதைச் செய்தாலும் ஒரு டேபிள் ஸ்பூன் கட்டித் தயிர் சேர்த்துப் பிசறி ஐந்து நிமிடங்கள்
வைத்திருந்த பின் பக்குவம் செய்தால்... ஆஹா சுவையோ.. சுவை!..//
வாங்கோ.. அடுத்ததடவை முயற்சிக்கிறேன்.. மிக்க நன்றி.
//KILLERGEE Devakottai said...
பதிலளிநீக்குஅதிரடி ரெஸிப்பிதான்..//
ஹா ஹா ஹா வாங்கோ கில்லர்ஜி.. அதிரடி ரெசிப்பிகளை இனி அடிக்கடி பர்த்து மகிழுங்கள்:).. மிக்க நன்றி.
//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குகோவைக்காய் மிகவும் பிடிக்கும்//
ஆங்ங்ன் வாங்கோ ட்றுத்.. நீங்க அப்போ என் கட்சி:).. நீளமாகக் கட் பண்ணுவது ஒன்றும் பெரிய வேலை இல்லையே.. எனக்கு யூ ரியூப் ல பார்த்து சில மரக்கறிகளை ரெஸ்டோரண்ட் ஸ்டைலில் மினக்கெட்டு கட் பண்ணப் பிடிக்கும்.. போஞ்சி/ கிரீன் பீன்ஸ் போன்றவை:)..
//கன்னி போட்ட ரிசிப்பிக்கு 4 வோட்டு போட்டுட்டேன்///
ஹா ஹா ஹா , நான்கு வோட்டுக்கள் என அவசரத்தில நினைச்சு எண்ணிப்பார்த்தனே:).
மிக்க நன்றி ட்றுத்..
//Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குஅதிரா முதலில் கேரளத்துக்குப் பதில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன் //
வாங்கோ கீதா, ஓ இதுக்கு கேரளத்தில் தொண்டங்காயா பெயர்.. நல்லாத்தான் இருக்குது பெயர்.. புதுசாவும் இருக்குது.. இதன் தோல் கொஞ்சம் மறமற என இருந்துது.. சொவ்ட் இல்லாமல்..
அப்போ காகங்களில் 40 வகைபோல.. கோவைக்காயில் பலவகை உண்டுபோலும்:).. மிக்க நன்றி கீதா.
வந்த பின்னூட்டங்களைப் பிற்கு பார்க்கிறேன் இதை ஆந்திராவில் வெகுவாக ரசிப்பார்கள் அங்கெல்லாம் தொண்டக்காய் என்றுதான் அறியப்படுகிறது எனக்குப் பிடிக்காதகாய்
பதிலளிநீக்குஅதிரா-- 170904 அப்படீன்னா, 2017ல் செப்டம்பரில் (09) 4ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த ரெசிப்பியை முயற்சி செய்து லட்சத்து எழுபதாயிரத்து தொள்ளாயிரத்து நாலு பேர் இன்ஸ்யூரன்ஸ் கிளெயிம் பண்ண அப்ளை பண்ணியிருக்காங்கன்னு அவங்க (லண்டன்காரங்க) சொன்னா நம்பாதீங்க.
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குநான் (மட்டும்) கோவைக்காய் சாப்பிட்டதில்லை. மனசுல பிடிக்காதுன்னு தோணிடுச்சு.//
வாங்கோ நெல்லைத்தமிழன்...
ஹா ஹா ஹா மனசு சொல்றதைக் கேளாதீங்கோ. புத்தி சொல்வதைக் கேளுங்கோ.. ஏன் பிடிக்காது என ஆரும் சொல்கிறார்கள் இல்லையே.. அறிய ஆவல் நேக்கு:).
//ஆனால் ஒடியல் கூழ் ரெசிப்பியை விட இது நல்லாருக்கு// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
///Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குகோவைக்காய் ரொம்பப் பிடிக்கும்//
ஆவ்வ் இன்னொரு ரசிகை நம்ம கட்சியில் இணைஞ்சிருக்கிறா:).. வெல்கம் படி:) இது வேற [B]படி யாக்கும்:)).
//இரண்டாவது முறை செய்வதுண்டு...முதல் முறையில் பொட்டுக்கடலை மட்டும் சேர்க்காமல் செய்வதுண்டு....உங்கள் டெக்னிக்கும் செய்து பார்த்துடறேன்//
எல்லோரும் அதிகம் பொட்டுக்கடலை தாள்தங்களுக்கு பாவிக்கிறார்களே என நானும் பாவிச்சேன்ன்.. நல்லாத்தான் இருந்துது. நான் எப்பவும் ஈ அடிச்ச கொப்பிபோல.. இப்படியான கறி வகைகளைச் சமைப்பதில்லை.. இடையிடையே என் கிட்னியையும் ஊஸ் பண்ணி இப்பூடி அசம்பாவிதங்கள் செய்வேன்:)..
///எல்லோருக்கும் எங்களின் ஓணாம்ஷதங்கள்!!! ஓணம் நல் வாழ்த்துகள்!
துளசியும் வாழ்த்துகிறார்...அவரது வாழ்த்துகளும்!!//
ஓ அப்போ இன்றுதானே பெண்கள் வேஷ்டி கட்டும் நாள்.. அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி கீதா.
///Durai A said...
பதிலளிநீக்குசத்துள்ள காய்.. ஆனால் நிறைய பேர் சாப்பிடுவதில்லை என்று நினைக்கிறேன்.
செய்முறை நன்றாக இருக்கிறது. பிறைக்கு வறை மேலோ?//
வாங்கோ வாங்கோ அப்போ நீங்களும் நம்ம கட்சி:).. அதாவது கோவைக்காய்க் பட்சி.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகத்தொடங்குதே.. கட்சி.
இல்ல எனக்கு வறைக்கு ஃபிறை மேலாக இருந்துது ஹா ஹா ஹா..
//வேக வைத்த துவரம்பருப்பில் மிதமாக வதக்கிய கோவைக்காய், வெங்காயம், பூண்டு, சீரகம் கலந்து சப்பாத்தியுடன் கட்டு கட்டியிருக்கிறேன்//
அடுத்த தடவை செய்திடுறேன்ன்.. மிக்க நன்றி.
//வேக வைத்த துவரம்பருப்பில் மிதமாக வதக்கிய கோவைக்காய், வெங்காயம், பூண்டு, சீரகம் கலந்து சப்பாத்தியுடன் கட்டு கட்டியிருக்கிறேன்//
பதிலளிநீக்குஅடுத்த தடவை செய்திடுறேன்ன்.. மிக்க நன்றி.//
பின்னூட்டத்தில் ரெசிப்பி கொடுத்த அப்பாதுரைக்கு நன்றீஸ்..
இன்னிக்கு லன்ச்சுக்கு செய்தென் ..பொண்ணு ஆஹா ஓஹோன்னு பாராட்டினா ..பூண்டு சேர்க்கலை ஒரு டீஸ்பூன் வருத்தரச்ச மல்லி உளுந்து பொடி மட்டும் சேர்த்தேன்
பொட்டுக்கடலை சேர்த்து கறிகாய் செய்ததே இல்லை.. அடுத்த முறை சேர்த்துப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு@ ammulu @))))))))))
பதிலளிநீக்கு//priyasaki said...
அஞ்சு இப்போ கோவைக்காய் கிடைக்கிறது.(அஞ்சுவுக்கு தகவல்)//
thankyou :)
ஆஹா அங்கேயும் வந்தாச்சா :)நாங்க இருந்தப்போ முருங்கை கறிவேப்பிலைக்கும் ப்ராங்ப்பர்ட் ஓடுவோம்
//கோவைக்காயில் வறை பிறை எதைச் செய்தாலும் ஒரு டேபிள் ஸ்பூன் கட்டித் தயிர் சேர்த்து..
பதிலளிநீக்குபல (பச்சை) காய்களுக்கு இது பொருந்தும்.. பாகற்காய், கோவைக்காய், புடலங்காய், திண்டா, பீன்ஸ், அவரைக்காய்.. தயிர் பிசறல் தனி ருசி தான். என் நண்பன் வீட்டில் முதன்முதல் கார வெண்டைக்காய் தயிர் பிசறல் ருசித்த அனுபவம் மறக்க முடியாதது.
//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஅதிரா-- 170904 அப்படீன்னா, 2017ல் செப்டம்பரில் (09) 4ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த ரெசிப்பியை முயற்சி செய்து லட்சத்து எழுபதாயிரத்து தொள்ளாயிரத்து நாலு பேர் இன்ஸ்யூரன்ஸ் கிளெயிம் பண்ண அப்ளை பண்ணியிருக்காங்கன்னு அவங்க (லண்டன்காரங்க) சொன்னா நம்பாதீங்க.//
@ நெல்லை தமிழன்ஹாஹாஆ ஆ :) NHS தனி ஹெல்ப் லைன் கொடுத்திருக்கங்களாம் இந்த பதிவை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்தோர் செய்து சாப்பிட்டு மயங்கி விழுந்தோர் என தனித்தனியா :)
ஏஞ்சலின் - சும்மா ஜோக்குக்காகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று அதிடா அவர்களுக்குத் தெரியும்.
பதிலளிநீக்குஅருமையான ரெஸிபி
பதிலளிநீக்குதம+1
அதாரது நான் இல்லாத நேரமாப் பார்த்துக் கரெக்ட்டா உள்ளே வந்து குதிச்சு விளையாடிட்டுப் போறது கர்:)
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...
ஏஞ்சலின் - சும்மா ஜோக்குக்காகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று அதிடா அவர்களுக்குத் தெரியும்///
என்னாதூஊஊஊஊஊஊஊஉ அதிடா வாஆஆஆஆஆ?:).. வரவர என் நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டே போகுதே:).. மக்கள்ஸ்ஸ் என்னுடைய பெயர் வந்து.. அடிரா.. ஹையோ எனக்கே டங்கு ஸ்லிப்பாகிக் கெடுக்குதேஎ.. அதிரா வாக்கும் ..க்கும்..க்கும்:)
ஸ்ஸ்ஸ்ஸ் சத்து இருங்கோ.. இந்த ரெசிப்பி வெளிவந்த நேரம் தொடங்கி.. ஒரே ஓன்லைன் ல ஓடர்ஸ் வந்த வண்ணமிருக்கு:).. ஓடர் எடுத்தே களைச்சிட்டேன் எனில் பாருங்கோவன்:)
நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஏஞ்சலின் - சும்மா ஜோக்குக்காகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று அதிடா அவர்களுக்குத் தெரியும்.
garrrrrrrr :) ஹாஹாஆ எவ்ளோ பயம் :)
இதுக்கெல்லாம் //காதில் மண்புழு மூக்கில் கொசு முதுகில் பூரான் //இப்படிலாம் சொல்லி மிரட்டியிருக்காங்க ஆனாஎன்கிட்ட அது நடக்காது :) இதில் எதோ ஒன்றுக்கு பயந்துபோய் பின்வாங்கிட்டீங்க :)
நான் சிங்கம் சிங்கிளா தைரியமா நிப்பேனாக்கும் :)
//Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...
பதிலளிநீக்குபடித்தேன், ருசித்தேன். ஓட்டுப் போட்டேன்.//
வாங்கோ மிக்க நன்றி.
//Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குஅதிரா எண்ணெய் அதிகம் வேண்டாம் என்றால் கோவைக்காயைக் கட் செய்த பிறகு ஜஸ்ட் குக்கரிலோ, ஸ்டீமரிலோ போட்டு ஸ்டீம் செய்து விட்டுப் பயன் படுத்தினாலும் நன்றாக இருக்கும். வேலையும் எளிது.///
வாவ்வ்வ் இது ஜூப்பர் ஐடியா.. பின்பற்றிடுவோம்.. நன்றி கீதா.
//Asokan Kuppusamy said...
பதிலளிநீக்குருசி ருசியாய் சாப்பிட ஆசைதான் நல்ல ரெசிபி பாராட்டுகள்//
வாங்கோ மிக்க நன்றி.
//இந்த ரெசிப்பி வெளிவந்த நேரம் தொடங்கி.. ஒரே ஓன்லைன் ல ஓடர்ஸ் வந்த வண்ணமிருக்கு:).. ஓடர் எடுத்தே களைச்சிட்டேன் எனில் பாருங்கோவன்//
பதிலளிநீக்குநானும்தான் உங்க ரெசிப்பி பார்த்தவங்களுக்கு அன்டிடொட் ப்ரிஸ்க்ரைப் செஞ்சே களைச்சிட்டேன்
//விஜய் said...
பதிலளிநீக்குஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவரை ஆராவது பிடிச்சுத்தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. காலில் கல்லுக் கட்டிப்போட்டு தேம்ஸ்ல தள்ளப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. :)..
ஹா ஹா ஹா வருகைக்கு நன்றி விஜய்.
வாங்கோ ராஜி வாங்கோ.. ஓ நிட்சயம் செய்து பாருங்கோ.. புதுசு புதுசா முயற்சிப்போம்ம்.. சிலது நல்லாவரும் சிலது காலை வாரிடும்.. மிக்க நன்றி.
பதிலளிநீக்கு//Angelin said...
பதிலளிநீக்குநான் வந்திட்டேன் :)
கடைசீலருந்தே வருவேன் :)//
வாங்கோ அஞ்சு வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடம் புய்க்கக்கூடா.. முதல்ல இருந்துதான் படிக்கோணும்:)
///அந்த படை வீரன் என்னை போல ஒருவர் :) என்னை தேம்ஸில் தள்ளி விட்டாலும் உங்க கையை செயின் போட்டு கட்டிக்கிட்டே குதிப்பேன் :)//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆஆஅ இதனாலதானே நான் என் நேரமும் கிரீஸ் பூசிக்கொண்டு திரிகிறேன்ன்:)
///Angelin said...///
பதிலளிநீக்குகோவைக்காய் பற்றி நிறையத் தகவல்கள் சொல்லுறீங்க... நன்றி.
///அடிக்கடி டிலீட் பண்ண பிடிக்கலை //பரிசை // அது பறிச்சு என்று வாசிக்கவும்/// எங்களுக்கும் இப்போ உங்க எழுத்துப்பிழை அடிக்கடி:) பார்த்துப் பழகிடுச்சூஊஊஊ:).
//கர்ர்ர்ர் வன்மையான கண்டனங்கள் எண்ணையில் டீப்பா பொரிச்சா அன் ஹெல்த்தி டயாபெட்டீஸ் கொலெஸ்டெரோல் எல்லாம் வரும் இப்போவே கோர்ட் போறேன் :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீயும் பொரியல் வகைகள் செய்ய மாட்டேன்ன். பப்படம் கூட இடைக்கிடைதான் பொரிப்பேன் எதுக்கு எண்ணெய் என நினைச்சு.. ஆனா இப்பூடி லக்ஸறி:) ரெசிப்பீஸ் செய்து அனுப்புவதற்காகவே பொரிக்கிறேன்..
ஹா ஹா ஹா இன்னும் என் பொரியல்கள்.. எக்ஸ்சட்டா.. எக்ஸ்ஸட்டா.. அப்பப்ப டொடரும்:)
///Angelin said...
பதிலளிநீக்குபின்பு சில்லி ஃபிளேக்ஸ் ஐயும் பொட்டுக்கடலையையும் போட்டு நன்கு வதக்கினேன்..//
கர்ர்ர் கோவைக்காய்க்கு எதுக்கு சில்லி பிளேக்ஸ் அதோட பச்சை மிளகாயும் அது என்னது கூட சட்னி டாலும் கர்ர்ர்ர்ர் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பவும் அரைச்ச மாவையே அரைக்கக்கூடா:) புதுசா ஒரு ரெசிப்பி போட்டா அதை ட்றை பண்ணோணும்:)..
நான் இந்த கொவ்வைக்காயை வாங்கி வந்திட்டு.. ஒரு 30,40 செய்முறை வீடியோக்கள் பார்த்திட்டுத்தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன் ..
சில்லி ஃபிளேக்ஸ் இப்படி போட்டு .. இதே செய்முறையில்.. கத்தரிக்காஅய், உருளைக்கிழங்கிலும் செய்யலாம் சூப்பரா இருக்கும்.
நானும் பொதுவா தூள் சேர்ப்பனவற்றிற்கு பச்சை மிளகாய் சேர்க்க மாட்டேன் அஞ்சு.. ஆனா இது என்னமோ கொஞ்சம் காரசாரமாக சாப்பிடோணும் போல இருந்துதா, என்னிடம் இருந்தது தமிழ்க்கடையில் கிடைக்கும்.. குட்டிக் குட்டிப் பச்சை மிளகாய்.. அது ஓவர் காரம்... அத்தோடு சில்லி ஃபிளேக்ஸ் உம் கொஞ்சம் கூடிட்டுது... பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை .. பொரியலை மட்டும் கொடுத்தேன்ன்..
நான் எப்பவுமே அப்ப தொடங்கி இப்போவரை தமிழ் இங்கிலிஸ் என அனைத்து குக்கிங் சனலும் பார்ப்பேன்ன்... முன்பு ஒரு காலத்தில ஆதித்தியன் கிச்சின் என ஒரு சமையல் போகும்.. தலையில் ஹங்கியுடன் ஒருவர் சமைப்பார்ர்.. அவர் சொன்னார் பச்சை மிளகாய்க்கு விதை நீக்கி விட்டே பாவியுங்கோ என... அன்றிலிருந்து அப்படித்தான் செய்வேன். அத்தோடு மிளகாய் விதையில் அலர்ஜி இருக்குதாமே.
//middleclassmadhavi said...//
பதிலளிநீக்குவாங்கோ.... ஓ கோவைக்காயிலும் மிளகாய்க்கு ஸ்ரவ் வைத்துப் பொரிப்பதுபோல பொரிக்கலாமோ நல்ல ஐடியா.. நன்றாகத்தான் இருக்கும்.. மிக்க நன்றி.
//priyasaki said...//
பதிலளிநீக்குவாங்கோ அம்முலு வாங்கோ.. இப்போ தமிழ்க்கடைகள் அனைத்திலுமே அனைத்தும் கிடைக்குது அம்முலு.. ஊரில்கூட வாங்கமுடியாதவை எல்லாம் வெளிநாட்டில் ஈசியா கிடைக்குது.. குட் செய்து பாருங்கோ.. மிக்க நன்றி.
//G.M Balasubramaniam said...//
பதிலளிநீக்குவாங்கோ ஜி எம் பி ஐயா...
///எனக்குப் பிடிக்காதகாய்//
ஹா ஹா ஹா உங்களுக்கு என்ன பிடிக்கும் என்றாவது சொல்லலாமெல்லோ:).. மிக்க நன்றி.
//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஅதிரா-- 170904 அப்படீன்னா, 2017ல் செப்டம்பரில் (09) 4ம் தேதி வெளியிடப்பட்டது.///
ஹா ஹா ஹா இதுவோ சங்கதி.. ஒவ்வொரு தடவையும் பார்த்து கேட்க நினைச்சு மறந்திருந்தேன்.... ஏன் போஸ்ட்டில் டேட் எல்லாம் ஓட்டமெட்டிக்கா வருமெல்லோ.. சரி சரி அது ஸ்ரீராம் ஸ்டைல்:)..
///அந்த ரெசிப்பியை முயற்சி செய்து லட்சத்து எழுபதாயிரத்து தொள்ளாயிரத்து நாலு பேர் இன்ஸ்யூரன்ஸ் கிளெயிம் பண்ண அப்ளை பண்ணியிருக்காங்கன்னு அவங்க (லண்டன்காரங்க) சொன்னா நம்பாதீங்க.//
நல்லவேளை நீங்க முந்தி வந்து தகவல் சொல்லிட்டீங்க.. இல்லை எனில் என்னை மிமிமிரட்ட்டியிருப்பாஆஆஆஆஆ:) மீ கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருப்பேன்ன் கொமெண்ட்ஸ் க்கு பதில் போடாமல்:)..
ஹா ஹா நன்றி நெ.த.
//Durai A said...
பதிலளிநீக்குபொட்டுக்கடலை சேர்த்து கறிகாய் செய்ததே இல்லை.. அடுத்த முறை சேர்த்துப் பார்க்கிறேன்.//
செய்துபோட்டு வந்து என்னை ஏதும் தெரியாத பாஷையில திட்ட மாட்டீங்கதானே?:) ஹா ஹா ஹா:).. நன்றி.
///Angelin said...
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...
@ நெல்லை தமிழன்ஹாஹாஆ ஆ :) NHS தனி ஹெல்ப் லைன் கொடுத்திருக்கங்களாம் இந்த பதிவை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்தோர் செய்து சாப்பிட்டு மயங்கி விழுந்தோர் என தனித்தனியா :)///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) என் ரெசிப்பி பார்த்து எங்கட ஹொஸ்பிட்டலிலேயே.. ஒரு வாசகம் எழுதி அங்காங்கு ஒட்டியிருக்கினம்..
“கொவ்வைக்காய் சாப்பிடுவீர்ர்.. கொவ்வை இதழ்/ள் பெறுவீர் “ என.. இப்போ தெரியுதோ அடிராவின்.. சே..சே.. அதிடா வின் .. ஹையோ நெல்லைத்தமிழனால வரவர எனக்கே என் பெயர் மறக்குதே:).. அறு:)மை எறுமை:) ஹையோ அது பெருமை களை?:))அதிராவின் ரெசிப்பி பார்த்து வந்த எபெக்ட்டாஆஆஆஆஆம்ம்ம்:))
//செய்துபோட்டு வந்து என்னை ஏதும் தெரியாத பாஷையில திட்ட மாட்டீங்கதானே?:) ஹா ஹா ஹா:).. நன்றி.//
பதிலளிநீக்குசீச்சீ :) அவர் திட்ட மாட்டார் ஆனா :) உங்களுக்கு அந்த பல் கொட்டி பேயை அனுப்பி வைக்கப்போறார் :))))))
//கரந்தை ஜெயக்குமார் said...
பதிலளிநீக்குஅருமையான ரெஸிபி
தம+1//
வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. உங்கள் இந்த வோட்டுடன்.. இனி அநேகமா மகுடம் கிடைச்சிடும் என நம்புறேன்ன்..
எதுக்கும் கொஞ்சம் நில்லுங்கோ வாறேன்ன்ன்.. கில்லர் ஜிக்கு ஏ கே 34:) ஐக் காட்டி மிரட்டினால்தான் எல்லாம் சரிவரும்:).. இல்லாட்டில் மகுடத்தை தரமாட்டார்ர் கர்ர்ர்:))
//Angelin said...
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் said...
ஏஞ்சலின் - சும்மா ஜோக்குக்காகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று அதிடா அவர்களுக்குத் தெரியும்.
garrrrrrrr :) ஹாஹாஆ எவ்ளோ பயம் :) ///
ஹா ஹா ஹா பிராண்டிடுவேன் என்றுதான்ன்:))
///////இதுக்கெல்லாம் //காதில் மண்புழு மூக்கில் கொசு முதுகில் பூரான் //இப்படிலாம் சொல்லி மிரட்டியிருக்காங்க ஆனாஎன்கிட்ட அது நடக்காது :) இதில் எதோ ஒன்றுக்கு பயந்துபோய் பின்வாங்கிட்டீங்க :)
நான் சிங்கம் சிங்கிளா தைரியமா நிப்பேனாக்கும் :)/////
எங்கே ஒருக்கால் சிங்கிளா:) எங்கட லண்டன் பிரிஜ்ல நடந்து வாங்கோ பார்ப்போம்:)... கீதாவின் காகக் கதையில என் பின்னூட்டம் படிக்கவும் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).. ஹா ஹா ஹா:).
வீட்டில் சொல்லி சமைக்க சொல்கிறேன் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரி .
பதிலளிநீக்கு///Angelin said...
பதிலளிநீக்கு//இந்த ரெசிப்பி வெளிவந்த நேரம் தொடங்கி.. ஒரே ஓன்லைன் ல ஓடர்ஸ் வந்த வண்ணமிருக்கு:).. ஓடர் எடுத்தே களைச்சிட்டேன் எனில் பாருங்கோவன்//
நானும்தான் உங்க ரெசிப்பி பார்த்தவங்களுக்கு அன்டிடொட் ப்ரிஸ்க்ரைப் செஞ்சே களைச்சிட்டேன் ///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை எல்லாம் படிச்சு இப்போ:) ஸ்ரீராமுக்கு இருமல் வந்திடப்போகுதூஊஊஊஊஊ:)..
ஸ்ஸ்ஸ்ஸ் அனைவருக்கும் நன்றி நன்றி...._()_
//vimal said...
பதிலளிநீக்குவீட்டில் சொல்லி சமைக்க சொல்கிறேன்//
வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.
/// ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரி // ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) கடசிவரியில இப்பூடிக் கவிட்டுப்போட்டீங்களே:).
//Angelin said...
பதிலளிநீக்கு//செய்துபோட்டு வந்து என்னை ஏதும் தெரியாத பாஷையில திட்ட மாட்டீங்கதானே?:) ஹா ஹா ஹா:).. நன்றி.//
சீச்சீ :) அவர் திட்ட மாட்டார் ஆனா :) உங்களுக்கு அந்த பல் கொட்டி பேயை அனுப்பி வைக்கப்போறார் :))))))///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் இதுக்கெல்லாம் பயப்பூடாத.. புலிக்காட்டுப் பூஸாக்கும்:).. ஹையோ வழிவிடுங்கோ வழிவிடுங்கோ.. முருங்கியில ஏறிடுறேன்ன்ன்:).
//மற்ற படி வறை பிறை (ஃப்ரை) எல்லாம் ஸூப்பர்! - ஸ்ரீராம் ]///
பதிலளிநீக்குஹாஅ ஹா ஹா இந்த கடசி வரியை இப்போதான் பார்க்கிறேன்ன்:)..
கொவ்வைக்காய் சாப்பிடுவீர்ர்.. கொவ்வை இதழ்/ள் பெறுவீர் “ என..-- ரொம்ப நன்றி.. ஆண்கள் இந்த வறை, பிறையைச் சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு நன்றி.
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஆண்கள் இந்த வறை, பிறையைச் சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு நன்றி.//
karrrrrrrrrrrrrrr:) அப்பூடியெல்லாம் லேசில தப்பித்துப் போக விட்டிடுவோமா?:).. அடுத்த நெ.தமிழனின் சமையல் ரெசிப்பியில்..
ஊசிக்குறிப்பில்.. இப்படி இருக்கோணும்.. படத்தோடு:-
“அதிராவின் கோவைக்காய் வறை செய்தேன், ஒபிஸ் க்கு எடுத்துச் சென்றேன்... அதன் சுவையால், என்னால லஞ் ரைம் வரை பொறுக்கமுடியாமல் ஏழியாகவே சாப்பிட்டேன்.. அத்தோடு யாருக்கும் பங்கும் கொடுக்கவில்லை:).. ஏனெனில் எனக்கு ரொம்பப் பிடிச்ச சாப்பாடெனில் தனியாவே சாப்பிட்டு விடுவேன்”:) என..
ஊசிக்குறிப்பு: சில நேரங்களில் அவித்த முட்டையை நானும் இப்படி ஒளிச்சிருந்து சாப்பிட்டு முடிப்பதுண்டு ஹா ஹா ஹா:)..[யாரும் அதுக்கு பங்குக்கு வரமாட்டினம் எனத் தெரிந்தாலும் ஒரு சேஃப்ட்டிக்காக.. ஹா ஹா ஹா:).
மறு மொழிகளைக் ஒரு வழியாக கடந்து வந்தேன் தம போட்டாச்சு
பதிலளிநீக்குஅருமையான கோவைக்காய் பிறை .
பதிலளிநீக்குநானும் செய்வேன். பொட்டுகடலை போட்டு செய்தது இல்லை. ஆந்திராவில் வெண்டைக்காய் பொரியலுக்கு இதே முறையில் செய்வார்கள்.பொட்டுகடலை பொடியை கடைசியில் தூவி பிரட்டி எடுத்து விடுவார்கள்.
அதிராவின் முறையில் செய்து பார்க்கிறேன்.