செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சீ ரா ம - கே ஜி கௌதமன் - சீதை - 20     கதைத் தலைப்பினால் கவரப்பட்ட எங்கள் தலைமை ஆசிரியர்  இந்தத் தலைப்புக்கு ஒரு கதை எழுதி அனுப்பி இருக்கிறார்.


================================================================சீதை ராமனை மன்னித்தாள்! 

கே ஜி கௌதமன் 
"நாதா ! ஓரிரு நாட்களில், கார்த்திகை மாதம் துவங்குகிறது. மாதம் முழுவதும் வீட்டில் அகல் விளக்கேற்றினால், மங்களகரமாக இருக்கும். வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை விளையும். மழை பொழியும், பயிர் செழிக்கும்.  எனக்காக அகல் விளக்குகளை வாங்கி வருவீர்களா? " என்று கேட்டாள் சீதை. 


" அப்படியே செய்கிறேன் சீதா" என்றான் ராமன். 


அன்று மாலை. 


" சுவாமீ . வாங்கி வந்தீரா?"


"இன்று மறக்காமல் வாங்கி வருகிறேன்." 


மீண்டும் அதே கதை. 


வாங்கி வரவில்லை. 


இன்று ராமனை விடுவதில்லை. இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும் என்று தீர்மானித்தாள் சீதை. 


" இன்றும் வாங்கி வரவில்லைதானே?"


" ஆமாம்."


"என்னதான் உங்களுக்குப் பிரச்னை?" 


" சொல்கிறேன் கேள் வைதேஹி! ஒவ்வொரு நாளும் ஊருக்கு வெளியில் இருக்கும் மயன் (குயவர்) இடம் சென்று, 'அகல் விளக்குகள் வேண்டும் ' என்று கேட்பேன். 


அவர், " ராமா உங்களுக்கு அகல் கொடுக்கமாட்டேன்!" என்பார். நான் உடனே, 'இன்று ஏதோ பிரச்னை போலிருக்கு' என்று நினைத்து, 'நாளை வந்து வாங்கிக் கொள்ளலாம்' என்று வந்துவிடுவேன். 


நீ கேட்டது போலவே, இன்று அவரிடம், 'என்னதான் உங்களுக்குப் பிரச்னை?' என்று கேட்டேன். 


"அதற்கு மயன்,  'ராமா! உன் கால் பட்டு அகலிகை கல்லிலிருந்து பெண் ஆனாள். உன் கைகள் பட்டு, என்னுடைய அகல்கள் எல்லாம் பெண்ணுருவம் அடைந்துவிட்டால், அவர்களை ஏழையாகிய நான், கடைத்தேற்ற முடியாது.  ஏகபத்தினி விரதனான நீயும் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டாய். லவன் குசனுக்குத்  தங்கைகளாக, சீதை ஏற்று, அவர்களை ஆளாக்குவார்களா என்று கேட்டுக் கூறு' என்றார்" என்று கூறினான் ராமன். 


கலகலவென  நகைத்தவாறு, சீதை ராமனை மன்னித்தாள்.    
தமிழ்மணத்தில் வாக்களிக்க....

53 கருத்துகள்:

 1. நியாயம் தான்.. லவன் குசன் ஆகியோருக்கு தங்கைகள் இல்லை தானே.. ஏற்றுக் கொண்டு ஆளாக்கலாம்.. ரத்தினச் சுருக்கம்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. இருந்தாலும் சீதை நினைத்திருக்கலாம் - என் மகளுக்கு என்ன நேரக்கூடுமோ?.. - என்று.. யாரறிவார் அந்த நாடகத்தை!..

  பதிலளிநீக்கு
 3. சுருக்கமான கதை. ஆனா அப்போல்லாம் ஆண்தானே தன் வீரத்தைக் காண்பித்து, பணம் கொடுத்துப் பெண் எடுக்கவேண்டும்? ராஜாவாக இருந்தாலும் கட்டிய மனைவிக்கு சேவகன் என்று சொல்லிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. அருமை. இந்த தகவலைப் பகர்ந்துகொண்டமைக்கு நன்றி!
  தெலுங்கு செய்திகள்.

  பதிலளிநீக்கு
 5. துளசி: ஹாஹாஹா அட ! இப்படியும் யோசிக்கலாம் இல்லைஅய!! செமை கௌதம் சார்!

  கீதா: ஹாஹாஹாஹாஹா செமையா சிரிச்சுட்டேன் கௌதம் அண்ணா....நல்ல திங்கிங்க்!! அதானே அத்தனையும் பெண்கள் ஆனால் அப்புறம் என்ன ஆறது!!!!பரவாயில்லை நாட்டுப் பிரஜைகளை ராமன் தானே காப்பாத்துறார் அப்படியே நாட்டுல பிரஜைகளாகிவிட்டுப் போகட்டுமே!!!! ராமரால் காப்பாத்த முடியாதா என்ன?!!!ஹிஹிஹி....

  பதிலளிநீக்கு
 6. மிகவும் சுருக்கமாக. அதே சமயம் நச்சென்று. அருமை.

  பதிலளிநீக்கு
 7. அந்த கால ஆல் இந்தியா ரேடியோவில் 'நிலைய வித்வான்' என்பவர்கள் அவசரத்துக்கு கைகொடுப்பார்களாம்!! என் அப்பா சொல்லியிருக்கிறார்!! ரவா உப்புமாவுக்கு இந்தப் பெயரே வைத்து விட்டார்கள் எம் வீட்டில்!! அப்படி தலைமை ஆசிரியர் கை கொடுத்தாரோ?!! கேஜி ஜி சார், கோபிக்காதீங்க, சும்மா ஜ்
  ஜோக்ஸ் அபார்ட், கதை அருமை!! ராமர் சீதைக்காக தானே குயவரிடம் போய்க் கேட்ட கற்பனை ரசித்தேன்! :-)) காட்டில் நதி ஒன்றைக் கடக்க ராமர் சீதா லக்ஷ்மணன் முயன்ற போது, படகில் ஏற்ற ஒரு படகோட்டி மறுத்து, லக்ஷ்மணன் கோபிக்க, இதே காரணம் சொல்லி படகோட்டி பாத பூஜை செய்ததாக படித்த கதை ஞாபகம் வந்தது!!

  பதிலளிநீக்கு
 8. ரத்தினச் சுருக்கமாய்.... ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 9. மி மா!!! கௌதம் அண்ணா ஆபத்பாந்தவர்!! அனாத ரட்சகர்!!!!ஹிஹிஹி இப்ப கௌதம் அண்ணா ஸ்டாண்ட்ட் அப் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்கனு சொல்லப் போறார்...தலையில் மை வைக்காத..தலைமை ஆசிரியர்!!!!!! ஹாஅஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 10. ''அகலிகைக்கு நான் கொடுத்தது சாப விமோசனம் ,உன் அகல்கள் அப்படியா ?அப்படியெல்லாம் நடக்காது
  வீட்டிலே சீதையின் டார்ச்சர் தாங்க முடியவில்லை ,உடனே அகல் விளக்குகளை எடுத்து கொடு 'என்றல்லவா ராமன் கேட்டிருக்க வேண்டும் :)

  பதிலளிநீக்கு
 11. அகல் வேண்டாம். சொல்லவில்லை. ஸரி இதைக்கேட்கவும், நம்மிடம்தானே வந்து நிற்கிறார் என்று நினைத்து கலகலவென்று சிரித்தாளோ சீதை! பெண்கள் மனம் நன்றாகத் தெரிகிறது.கதை நன்றாக உள்ளது கௌதமன் ஸார். அன்புடன்

  பதிலளிநீக்கு
 12. ஹாஆஹா :) சூப்பர் ..வித்யாசமான கோணம் ...ஆனா அப்படி லவ குசனுக்கு ரெண்டு குட்டி தங்கச்சிங்க இருந்தாலும் அழகா இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 13. நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா?:).. இது கதாசிரியரைக் கேட்கவில்லை நான்:).

  பதிலளிநீக்கு
 14. வாவ்வ்வ்வ் இம்முறை கெள அண்ணனும் கதையும்:) அடுத்த கிழமை ஸ்ரீராமும் கதையும் வருமென அவலோடு காத்திருக்கிறோம்:)..

  அதுசரி இந்த சீதை திருந்தவே மாட்டாவோ.. எப்பவும் ராமன் எதையாவது சொல்லிச் சமாளிப்பார்ர்.. உடனே டக்குப் பக்கெனக் கவிண்டு மன்னிச்சிடுறா இவ கர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 15. கதை ஓகே, ஆனா இப்போ கார்த்திகை தீபம் ஏற்ற, சீதைக்கு யார் அகல்விளக்குக் கொடுப்பது?:).. இதைப்பற்றி ஏன் இங்கின ஆருமே சிந்திக்க இல்ல??:))..

  //கலகலவென நகைத்தவாறு//

  கலகவெனச் சிரிப்பார்கள்.. நகைப்பதுவும் கலகல எனவோ?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு... :) இம்முறை ஒரு சுட்டி யை வச்சு குட்டியாக் கதை சொல்லி அசத்திய ”மை தடவாத ஆசிரியருக்கு” வாழ்த்துக்கள்:).

  பதிலளிநீக்கு
 16. //ஸ்ரீராமும் கதையும் வருமென அவலோடு காத்திருக்கிறோம்:)..//

  ஸ்ரீராமும் கதையும்? அவல் சுதாமாரிடமிருந்து திருடியதுதானே?

  பதிலளிநீக்கு
 17. //ஸ்ரீராம். said...
  //ஸ்ரீராமும் கதையும் வருமென அவலோடு காத்திருக்கிறோம்:)..//

  ஸ்ரீராமும் கதையும்? அவல் சுதாமாரிடமிருந்து திருடியதுதானே?//

  ஆவ்வ்வ்வ்வ் அப்போ நலம்தான்:)... ஹா ஹா ஹா எப்பூடியாவது என் குட்டிக் கிட்னியை ஊஸ்பண்ணி எதையாவது எழுதினால்.. இந்த ஸ்பெல்லிங் மிசுரேக்கு அப்பப்ப காலை வாரி விட்டுடுதே:).. ஹா ஹா ஹா அது நவராத்திரிக்காலம் என்பதால அவல் நினைப்பாயிட்டுது:))... நான் பயங்கர ஸ்பீட்டா ரைப் பண்ணுவேன்... திரும்ப படிச்சுப் பார்ப்பதில்லை:) நேர அவசரம்:) அதனால இப்பூடி ஆகிடுது:).. உங்களுக்கும் தப்பி ஓட சான்ஸ் கிடைச்சிடுது:)...

  மக்கள்ஸ் எல்லோரும் மறக்காமல் வந்திடுங்கோ:) அடுத்த செவ்வாய் அதிராவின் “ஆட்டுக்கார அலமேலு” வெளிவர இருகிறது:)...

  பதிலளிநீக்கு
 18. சுருக்கமாயினும் சிறப்பான கதை பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 19. ///மக்கள்ஸ் எல்லோரும் மறக்காமல் வந்திடுங்கோ:) அடுத்த செவ்வாய் அதிராவின் “ஆட்டுக்கார அலமேலு” வெளிவர இருகிறது:)...


  அப்பப்போ பூனை எனக்கு நல்லது செய்வாங்க :)அதாவதுதெரியாமலேயே :)
  நான் ஹைபெர்னேட்டிங் மோடுக்கு போறேன் :) bye friends

  பதிலளிநீக்கு
 20. ஆவ்வ்வ் !!கதையா ??? தெளிவா சொல்லக்கூடாதா :) நான் எதோ ரெசிப்பின்னு நினைச்ட்டேன் :) சரி சரி வந்திடறோம் .டெம்பராரியா ஹைபெர்னேட்டிங் கான்சல்ட்

  பதிலளிநீக்கு
 21. ///Angelin said...
  ///மக்கள்ஸ் எல்லோரும் மறக்காமல் வந்திடுங்கோ:) அடுத்த செவ்வாய் அதிராவின் “ஆட்டுக்கார அலமேலு” வெளிவர இருகிறது:)...


  அப்பப்போ பூனை எனக்கு நல்லது செய்வாங்க :)அதாவதுதெரியாமலேயே :)
  நான் ஹைபெர்னேட்டிங் மோடுக்கு போறேன் :) bye friends //

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடி எதையாவது சொல்லி நீங்க ஹைபனேட் ஆகுறீங்களோ இல்லயோ.. ஸ்ரீராமுக்கு மைல்ட் அட்டாக் வரப்பண்ணிடுறீங்க:)..

  //டெம்பராரியா ஹைபெர்னேட்டிங் கான்சல்ட்// ஹா ஹா ஹா அப்போ கதை எழுதியே ஆகோணுமோ?:) ஆனா இப்போ எழுதினால் அது 2018 லதான் வரும்போல:( கர்ர்ர்ர்ர்:).

  பதிலளிநீக்கு
 22. அது சரி, கேஜிஜி சார், இந்தக் கதையில் பொருள் பிழை இருக்கே! லவனும், குசனும் சீதை காட்டுக்குப் போனப்புறமாத் தானே பிறக்கறாங்க! ராமரே அவங்களைப் பல வருஷங்கள் கழிச்சுத் தான் பார்க்கிறார். அப்படி இருக்கிறச்சே இந்தக் கதைலே சொன்னாப்போல் மயன் எப்படிக் கேட்டிருக்க முடியும்?

  ஹிஹிஹிஹி, ஒரு வழியா மாட்டி விட்டாச்சு! இனிமேலே நாளைக்கு வரைக்கும் மீ த எஸ்கேப்பு! இருந்தாலும் நான் கேட்டதில் அர்த்தம் இருக்காக்கும்! :) இது சீதைக்குக் குழந்தைகள் பிறந்தப்புறமா நடந்துச்சா? :) யப்பாடி! கௌதமன் சார்! வரேன், அப்புறமாப் பார்க்கலாம். :)))))

  பதிலளிநீக்கு
 23. தர்க்கரீதியாப் பார்க்கலைனா ஓகே தான் கதை! கேஜிஜிக்கு ஒரு பெரிய "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ" போட்டுடலாம்.

  பதிலளிநீக்கு
 24. மிகிமா, நாங்க தான் க.வி.எ. ஊத்திக்கிற ரகமாச்சே! :))))

  பதிலளிநீக்கு
 25. மிகிமா, நீங்க சொல்லி இருக்கும் படகோட்டி குகன் தான்!

  ஸ்ரீராம், கேஜிஜி, இந்தப் பக்கமே வர மாட்டார் பாருங்க! :)

  பதிலளிநீக்கு
 26. ஆவ்வ்வ்வ்வ் கெள அண்ணன் இப்போ கட்டிலுக்குக் கீழே:))..

  எங்கள்புளொக் ஆடும்போதே நினைச்சேன்ன் இது கீதாக்காவாத்தான் இருக்குமென:).. கரெக்ட் ரைமுக்கு லாண்ட் பண்ணினீங்க கீதாக்கா:)..

  அவர் நினைச்சார்ர்.. இங்கின வந்து படிப்போர் எல்லோரும் “டை பண்ணாத”:).. கொயந்தைகள்தானே.. ஐ மீன் தலை.. மை இல்லாத:).... அதனால என்னத்தை எழுதினாலும்.. ஆஹா ஓகோ எனப் புகழ்வார்கள் என:).. இப்போ அவர் சூப்பர் மாட்டி:)..

  உண்மையில் லவ.. குசா இருவரும் சீதையின் தம்பியாட்கள் என்பது இன்றுதான் தெரியும் எனக்கு ஹையோ ஹையோ:).. ஆனாப் பாருங்கோ மகாபாரதம் மீக்கு பத்துப்படி:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே:) அத்துப்படி:)..

  பதிலளிநீக்கு
 27. //உண்மையில் லவ.. குசா இருவரும் சீதையின் தம்பியாட்கள் என்பது இன்றுதான் தெரியும் எனக்கு //

  என்னாது? லவனும், குசனும் சீதையின் தம்பியாட்களா? ஙே!!!!!!!!\

  தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :))))
  சீதைக்கும், ராமனுக்கும் பிறக்கும் பிள்ளைகள் அவங்க ரெண்டு பேரும்! :) கர்ப்பிணியா இருக்கிறச்சே தான் சீதையை மறுபடி ராமர் காட்டுக்கு அனுப்பறார். :)

  பதிலளிநீக்கு
 28. ///தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :))))
  சீதைக்கும், ராமனுக்கும் பிறக்கும் பிள்ளைகள் அவங்க ரெண்டு பேரும்! :) கர்ப்பிணியா இருக்கிறச்சே தான் சீதையை மறுபடி ராமர் காட்டுக்கு அனுப்பறார். :)////

  ஹா ஹா ஹா ஹையோ.. விடுங்கோ விடுங்கோ வழிவிடுங்கோ இதென்ன வம்பாப் போச்சூஊஊஊஊஊ..

  http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

  ///அது சரி, கேஜிஜி சார், இந்தக் கதையில் பொருள் பிழை இருக்கே! லவனும், குசனும் சீதை காட்டுக்குப் போனப்புறமாத் தானே பிறக்கறாங்க!///

  இதைப் படிச்சதும் கீதாக்கா.. நான் நினைச்சேன்.. சீதை காட்டுக்குப் போனபின், சீதையின் பெற்றோருக்கு நாட்டில் பிறந்த கொயந்தைகளாக்கும் என ஹையோ ஹையோ.. சொல்றது தெளிவாச் சொல்லலாமெல்லோ.. அப்போத்தானே கொயந்தைக்கட்குப் புய்யும்:)..

  பதிலளிநீக்கு
 29. //சீதை காட்டுக்குப் போனபின், சீதையின் பெற்றோருக்கு நாட்டில் பிறந்த கொயந்தைகளாக்கும் என ஹையோ ஹையோ.. சொல்றது தெளிவாச் சொல்லலாமெல்லோ.. அப்போத்தானே கொயந்தைக்கட்குப் புய்யும்:).//

  சரியாப் போச்சு போங்க, ராமாயணத்தை மறுபடி படிங்க! :) முதல்முறை சீதை காட்டுக்குப் போனப்போ ராவணனால் கடத்தப்பட்டாள். இரண்டாம் முறை அவள் மேல் நாட்டு மக்கள் சந்தேகப்படுவதால் ராமன் அனுப்பினான்! அப்போத் தான் சீதை கர்ப்பிணி! காட்டுக்குப் போனப்புறம் பிறக்கும் குழந்தைகளை ராமர் வெகு காலம் (கன காலம்?) கழிச்சே பார்க்கிறார். அப்போக் கூடத் தன் பிள்ளைகள்னு தெரியாது!

  ஹிஹிஹி, இங்கே ராமாயணம் எழுதினா கேஜிஜியும், ஶ்ரீராமும் கம்பைத் தூக்கிட்டு வரப் போறாங்க! :)

  பதிலளிநீக்கு
 30. கீதா சாம்பசிவம் மேடம் - இப்போ பதில் இப்படி வரும் "எங்கட ஊர்ல தம்பியாட்கள்' அப்படின்னா பையங்கன்னு அர்த்தம். நாம என்ன உடனே 'யாழ் இரதத்தில்' ஏறி போய்ச் செக் பண்ணப்போறாமா என்னன்னு ஒரு தைரியம்தான்.

  பதிலளிநீக்கு
 31. சூப்பரா சொல்றீங்க கீதாக்கா.. இப்போதான் எனக்கு ராமாயணம் புரிய ஆரம்பிக்குது..
  இங்கே சீதை ராமனை மன்னிச்ச கதையை.. தொடராக இல்லாமல்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை மட்டும் எடுத்து எழுதிட்டுப்போகினம்... அதனால எது ஆரம்பம்.. எது முடிவு என்றே தெரியாமல் இருக்கு.. நான் படிச்சதும் அப்படித்தான்.. தொடராகப் படிக்கவில்லை.. அங்கொரு கதை இங்கொரு கதையாகத் தொகுத்துப் படிச்சமையால்ல்.. ஒரே கொன்ஃபியூசிங் யா:))

  //நெல்லைத் தமிழன் said...
  கீதா சாம்பசிவம் மேடம் - இப்போ பதில் இப்படி வரும் "எங்கட ஊர்ல தம்பியாட்கள்' அப்படின்னா பையங்கன்னு அர்த்தம்///

  ஹா ஹா ஹா பார்த்தீங்களோ.. அதிராவை அட்டாக் பண்ண ... கோழிக்குஞ்சுக்கு ஆலா வெயிட் பண்ணுவதுபோல:) வெயிட் பண்ணிக்கொண்டிருக்கினம் சிலர்:).. இங்கின இன்னொராளும் வந்து குதிச்சிருப்பா:).... ஆனா அவவுக்கு எனக்குத் தெரிஞ்சளவுகூடத் தெரியாது:) ஹா ஹா ஹா... அதனால.. வாயைத் திறந்து நான் முட்டாளேதான் என(என்னைப்போலத்தேன்ன்:)).. நிரூபிப்பதை விட:) வாயை மூடி இருந்து முட்டாள்போல இருக்கே என நினைக்க வைப்பது எவ்ளோ மேல் என அவ இருக்கிறா ஹா ஹா ஹா:))..

  என்ன இது நெல்லைத்தமிழன் புதுக்கதை சொல்றார்ர் கர்ர்:).. தம்பி என்பது ஆம்பிளைப்பிள்ளைகளைக் கூப்பிடுவது.. அது மகனைக்கூடப் பல வீடுகளில் தம்பி என்றுதான் கூப்பிடுவினம்.. ஹையோ ஹையோ... அப்போ பையன் எனில் போய்:) ஹா ஹா ஹா இது இங்கிலீசில சொன்னேன்:))... போய் எனில் தம்பி, மகன், எதிர்வீட்டு மகன் ஆராகவும் இருக்கலாமெல்லோ:).. ஹா ஹா ஹா ஹையோ விடுங்கோ.. எனக்கு கொஞ்சம் தேம்ஸ் காத்துப் பிடிச்சால்தான் மீ நோர்மலாவேன்ன்:))

  பதிலளிநீக்கு
 32. ராமன் படுறபாடு ஜாஸ்தியாப் போய்க்கிட்டிருக்கே..

  பதிலளிநீக்கு
 33. //இங்கின இன்னொராளும் வந்து குதிச்சிருப்பா:).... ஆனா அவவுக்கு எனக்குத் தெரிஞ்சளவுகூடத் தெரியாது:) ஹா ஹா ஹா... அதனால.. வாயைத் திறந்து நான் முட்டாளேதான் என(என்னைப்போலத்தேன்ன்:)).. நிரூபிப்பதை விட:) வாயை மூடி இருந்து முட்டாள்போல இருக்கே என நினைக்க வைப்பது எவ்ளோ மேல் என அவ இருக்கிறா ஹா ஹா ஹா:))..//

  @அதிரராவ் வேணாம் :) அப்புறம் நான் நெல்லைத்தமிழனை சாட்சிக்கு கூப்பிட்டு அந்த உங்க முந்தைய போஸ்ட் விஷயத்தை கீதாக்கா கிட்ட போட்டு குடுப்பேன் :) அன்னிக்கு அவங்க லேட்டா வந்திட்டாங்க அவங்க மட்டும் சீக்கிரம் வந்திருந்தா அந்த மோதிர கையாலேயே நங் ங்ங் வாங்கியிருப்பீங்க :)

  பதிலளிநீக்கு
 34. அவ்வ்வ் அதிரா லவ குச எங்களுக்கெல்லாம் தெரியுமே :) நாங்கல்லாம் ராமாயண் கிருஷ்ணா மகாபாரத எல்லாத்தையும் டிவில பார்த்தே மனப்பாடமாக்கிட்டோம் :)

  பதிலளிநீக்கு
 35. /உண்மையில் லவ.. குசா இருவரும் சீதையின் தம்பியாட்கள் என்பது இன்றுதான் தெரியும் எனக்கு //

  ஆஆவ் !!!!!!!!!!! இதை பார்த்தும் சும்மா இருக்கிறதே என் கைகள் :) காரெடுத்து நேரா ஸ்கொட்லான்ட் மலை உச்சில இருந்து தள்ளிவிட்டே ஆகணும் அதிராவை

  பதிலளிநீக்கு
 36. போய் எனில் தம்பி, மகன், எதிர்வீட்டு மகன் ஆராகவும் இருக்கலாமெல்லோ:).. ஹா ஹா ஹா ஹையோ விடுங்கோ.. எனக்கு கொஞ்சம் தேம்ஸ் காத்துப் பிடிச்சால்தான் மீ நோர்மலாவேன்ன்:))//

  வாங்க ஒரே தள்ளி விடறேன் :) தேம்ஸ் காத்து என்ன தண்ணி லேயே மூழ்கியடிக்கலாம் athiraav :)

  பதிலளிநீக்கு
 37. /வாயைத் திறந்து நான் முட்டாளேதான் என(என்னைப்போலத்தேன்ன்:)).. நிரூபிப்பதை விட:) வாயை மூடி இருந்து முட்டாள்போல இருக்கே என நினைக்க வைப்பது எவ்ளோ மேல் என அவ இருக்கிறா ஹா ஹா ஹா:)).//


  ஹாங் ஹாஆஹாஆ :) இப்போல்லாம் நான் ரொம்ப கேர்புல் :) நீங்க கமெண்ட் குடுத்தப்புறம்தான் அதாவது விளங்காம தானே வண்டியில் ஏறி எதையாச்சும் சொல்லி அதுக்கு கீதாக்கா, கீதா ,நெல்லைத்தமிழன் எல்லாரும் உங்களை உருட்டி போட்டதுக்கப்புறம்தான் இங்கே கால் வைக்கிறேனாக்கும் :)
  சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் எது தெரியுமா நம்மளை மாதிரியே ஒராள் அடி வாங்குறத ஒளிஞ்சி ரசிக்கிறதுதான் :)

  பதிலளிநீக்கு
 38. ஒரு வேளை சீதை தீக்குளித்த பின் ராமனை மன்னித்து விட்டாள், மனம் குளிர்ந்த ராமன் வண்ணார் பழி சொன்ன பின், அவரைக் கூப்பிட்டு புத்தி சொல்லி திருத்திட்டார்.... ஸோ, சீதையை காட்டுக்கு அனுப்பலை; லவனும் குசனும் பிறந்து அரண்மனைலேயே வளர்றாங்க... இப்படி கதையைக் கொண்டு போலாமோ? குருகுலவாசம்ல ராமாயணம் கத்துக்கறாங்க லவகுசர்கள்!! கதை எப்படி? உத்தர காண்டத்தை உல்டாவாக்கினால் போச்சு!!
  கீதா சாம்பசிவம் மேடம், படகோட்டியை குகன் என்று தான் முதலில் எழுதினேன், ஆனால் என்னிடம் ஆதாரம் இல்லையாதலால் (!) படகோட்டி என்றே விட்டு விட்டேன்! சின்ன வயதில் கோகுலம் இதழில் படித்த கதை!!

  பதிலளிநீக்கு
 39. ///சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் எது தெரியுமா நம்மளை மாதிரியே ஒராள் அடி வாங்குறத ஒளிஞ்சி ரசிக்கிறதுதான் :)///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பூனைக்கும் ஒரு காலம் வரும் வெயிட் வெயிட்:))

  பதிலளிநீக்கு
 40. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பப்லிக் :) வெயிட் பற்றி மூச் :)

  பதிலளிநீக்கு
 41. முன்னாளில் ஒரு பாட்டு உண்டு. நான் ராமனைப் போல இருப்பேன்
  என்கிற ஆணுக்கு, அவன் மனைவி, ஐயோ ஸ்வாமி என் வளைகளில் அத்தனை ரத்தினக் கற்கள் இருக்கே, அவ்வளவும் பெண்ணானால் நான் என்ன செய்வது என்று ஊடல் செய்வாள்.
  அது போல கௌதமன் சார் கதையிலும் சீதை நகைத்து நல்ல பதிவாக்கிவிட்டார். இதமான பதிவு. மிடில் க்ளாஸ் மாதவி போல ஒரு உத்தர காண்டம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
  மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 42. AS HIQOO FOR CUTE SMALL POEMS IT IS AN EXTRAORDINARY HIKAA HATSOFF the head master KGG.

  பதிலளிநீக்கு
 43. கதை அருமை . ரத்தின சுருக்கமாய் கதை.

  பதிலளிநீக்கு
 44. வல்லிசிம்ஹன் அவர்களின் கருத்து மிகவும் ரசித்தேன். அப்படி ஒரு பாட்டு இருப்பது தெரியாது. மேல் விவரங்கள் தேடத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 45. எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு பேருங்க பாராட்டுவாங்க என்று! பாராட்டியவர்கள் எல்லோருக்கும் அன்பார்ந்த நன்றி, நன்றி, நன்றி! இது நிலையவித்வான் சமாச்சாரம் இல்லை! ஏப்ரல் மாதத்தில் எழுதி அனுப்பியதை, வெளியிடும் ஆசிரியர், டிராப்டில் போட்டு வைத்திருந்து, இப்போதான் வெளியாகியுள்ளது. இந்தக் கதையை எழுதி மெயிலில் அனுப்பியபிறகு, என் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள்!! அதெல்லாம் ஒரு தனிக்கதை! சந்தர்ப்பம் வாய்த்தால் அந்தக் கதையை எழுதுகின்றேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!