வியாழன், 28 செப்டம்பர், 2017

ஜெ... ஓவியக் கவிதையின் நிறைவுப்பகுதி.

ஜெ... ஓவியத்துக்கு துரை செல்வராஜூ ஸார் எழுதிய கவிதை இந்த வாரம் இடம்பெறுகிறது.


=======================================================================


காட்சியின் காலகட்டம் 1970 - 75..
அங்கேயே போய் விட்டேன்..
அதனால் திரும்பி வருவதற்கு கொஞ்சம் தாமதம்!..

அன்புடன்துரை செல்வராஜூ* * *
கண்ணுக்குள் கதை..

- - - - - - - - - - - - - - - - - - -அந்தி மயங்கிய
ஆவணியின் மாலை..
தாவணியாள்
மையெழுதி
தனித்திருந்த வேளை..கண்ணுக்குள் கதை -
என்று வந்தான் கள்வன்..சரி.. சொல்!.. - என்றேன்..நிமிடங்கள் ஆயிற்று..
வாரங்கள் ஆயிற்று..
கதை சொன்னானில்லை!..சொல்லடா.. சீக்கிரம்
என்றேன்!..ம்.. அப்புறம்...
சொல்வதல்ல கண்ணே..
படிப்பது!.. - சிரித்தான்..என்ன நீ.. உளறுகிறாய்?..
சினந்தேன்.. பொய்யாய்!..உளறலா?..
உறுத்துகிறது!..
என்றான்..உறுத்தலா..
யாருக்கு!?..உன் கண்ணில்
ஒரு கதை..
உறுத்தல்
எனக்குத் தான்..கண்ணில் தான்
ஏதும் இல்லையே?..ஏதும் இல்லை எனில்
கலை எப்படி?..
கதை எப்படி?..
கவிதை தான் எப்படி?..அவன் அத்தான்
என் அகத்தான்..
ஆனதால்
கதைதானே..
சரி!.. -
என்றேன்..அவ்வளவு தான்..பூங்குழலைக் கோதினான்..
பூவிதழைத் தேடினான்..ஏய்.. ஏய்.. என்ன?!..இது.. இதுதான்..
ஆதி உலகில்
அன்றைக்குக் கேட்ட
அன்பின் சத்தம்!..அடுக்களையில் அம்மா..
எலிக்காது அவளுக்கு!..கலா.. என்ன..
அங்கே?..அம்மா - இது..
விவித் பாரதி..
நேயர் விருப்பம்..
தேன் கிண்ணம்!..ஓ!..
தேன் கிண்ணமா?..
பாரதி வந்திருக்கிறான்..
இல்லையா!..

இல்லை.. இல்லை..
ஆமாம்.. ம்ம்!..வரட்டும் அவர்..
சொல்கிறேன்..என்ன என்று!?..கார்த்திகையில்
கல்யாணம் என்று!..ஏன்.. ஐப்பசி
என்ன பாவம்
செய்தது?..கண்ணுக்குள்
கதைத்தான்..
பாரதி!..
காதுக்குள்
நகைத்தேன்..
கலாபாரதி!..
* * *51 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 2. அவ்வளவு தானா?.. வேறு கவிதைகள் அரங்கிற்கு வரவில்லையா!?..

  பதிலளிநீக்கு
 3. ஓவியக்கவிதையை ரசித்தேன். 1975-76வாக்கில் தினமணி (கதிர்) இணைப்பில் முதன் முதலாக கண்ணாடி அணிந்திருந்த ஜெ.யின் முகத்தை குறுக்குவெட்டில் பாதியாகக் கண்டோம். அடுத்த பாதியில் அவர் வரைந்திருந்த ஓவியம். கல்லூரிக்காலம் முதல் நான் ரசித்து வரும் ஓவியங்கள் ஜெ...யுடையது.

  பதிலளிநீக்கு

 4. அம்மா - இது..
  விவித் பாரதி..
  நேயர் விருப்பம்..
  தேன் கிண்ணம்!..//

  ஆஹா!! ஆஹா!! அருமை அருமை!! ஓவியக் கதையை இல்லை இல்லை கவிதை வடிவில் கதையாய் சொல்லிச் சென்ற விதம் அருமை! தமிழும், கவிதையின் இனிமையும் இரண்டுமே ஒன்றிற்கொன்று போட்டியிட்டு தேன் கிண்ணம்தான்!!!!

  கீதா: அக்கருத்துடன் எனக்கு இப்பாடலும் நினைவுக்கு வந்தது...விவித்பாரதியில் தேன் கிண்ணம் என்றவுடன்.."காற்றுவெளியிடைக் கண்ணம்மா.....அமுதூற்றினை ஒத்த இதழ்களும்!!!

  நாங்கள் மிக மிக ரசித்தோம் ...

  பதிலளிநீக்கு
 5. கவிதைக் கதை, கதைக் கவிதை அருமை!!

  பதிலளிநீக்கு
 6. பிடித்திருந்தது. ஆனால் உரையாடல் எனக்கு சாண்டில்யனை ஞாபகப்படுத்திற்று. Sweet nothings எழுதுவதில் மிகச்சிறந்தவர் அவர். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. //ஏன்.. ஐப்பசி
  என்ன பாவம்
  செய்தது?.. //

  முத்தாய்ப்பான மூன்றே வரி.. ஏக்கத்தில் விளைந்த என்ன அவசரம்?..
  நூலைப் போல சேலை அல்லவா தாயும்? அவளுக்கா மகளைத் தெரியாது?..

  ஐப்பசியில் கொட்டோ கொட்டென்று
  மழை கொட்டும் மகளே
  விருந்தினர் வருகை
  செளகரியத்திற்கு
  கல்யாண தீபம் ஏற்ற
  கார்த்திகை தான்
  உகந்தது, செல்ல மகளே!..  பதிலளிநீக்கு
 8. ///கண்ணுக்குள் கதை -
  என்று வந்தான் கள்வன்..

  சரி.. சொல்!.. - என்றேன்..////
  ஹா ஹா ஹா இதுக்குத்தான் ஊர் பேர் தெரியாதோரை எல்லாம் உள்ளே விடக்கூடாதென்பது:)... இப்ப பாருங்கோ கல்யாணத்தில வந்து நிக்குது:)...
  இருப்பினும் ஏமாத்திட்டு ஓடல்ல நல்ல விசயம்தான்:)..

  பதிலளிநீக்கு
 9. நல்ல அம்மா... காதில கேட்டதுக்கே பச்சைக்கொடி காட்டிட்டாவே 70 களில் அம்மாக்கள் அப்பூடியா இருந்தாங்க???...

  படத்துக்கேற்ப அழகிய ஒரு கதையை, கவிதையில்
  சொல்லி முடித்தவிதம் மிக அருமை...

  ஏன் ஆவணியிலயே மிகுதி நாள் இருக்குமே:)...

  பதிலளிநீக்கு
 10. பிங்கி:) யில கவிதையைப் போட்டவர் ... புலூ:) வில் கருத்தேதும் சொல்லவில்லை:)...
  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...
  ஆவ்வ்வ் நெல்லத்தமிழன் கையில் மை இருக்கு:)

  பதிலளிநீக்கு
 11. #கலாபாரதி#
  பெயர் பொருத்தம் அருமை :)

  பதிலளிநீக்கு
 12. ஆஹா !! அருமை ...மிக அழகான கவிதை படத்துக்கு

  பதிலளிநீக்கு
 13. கோமதி அரசு said...

  >>> ஓவியக் கவிதை அருமை.<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 14. @ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University ..

  அன்புடையீர்..
  தாங்கள் குறிப்பிடுள்ள படமும் என் நினைவில் உள்ளது..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 15. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>> ஆஹா!! ஆஹா!! அருமை!! அருமை!!..<<<

  அன்புமிகு துளசி மற்றும் கீதா..
  தங்களுடைய வருகையும் உற்சாகமான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 16. @ கரந்தை ஜெயக்குமார் said...

  அன்புடையீர் .. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 17. @ middleclassmadhavi said...

  >>> கவிதைக் கதை, கதைக் கவிதை அருமை! <<<

  அன்புடையீர்.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 18. @ நெல்லைத் தமிழன் said...

  >>> பிடித்திருந்தது. ஆனால் உரையாடல்... <<<

  ஏதோ என்னளவில் எழுதினேன்..
  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 19. @ ராஜி said...

  >>> கவிதை அருமை..<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 20. @ ஜீவி said...

  //ஏன்.. ஐப்பசி
  என்ன பாவம்
  செய்தது?.. //

  >>> கல்யாண தீபம் ஏற்ற
  கார்த்திகை தான்
  உகந்தது, செல்ல மகளே!.. <<<

  ஆகா.. என்னே ஒரு வாத்சல்யம்!.. மனம் மகிழ்கின்றது..
  ஆக்கங்களுக்கு இப்படியான ஊக்கம் கிடைத்தால் இன்னும் இருபது வருடங்களுக்கு ஆயுள் நீடிக்கும்..

  ஏற்கனவே காக்கைக் கவிதை நீளமாக அமைந்து விட்டது.. இதுவும் அப்படி ஆகி விடக்கூடாது என்று - சில கண்ணிகளை நீக்கி விட்டேன்...

  நான் தற்செயலாகத் தான் கார்த்திகையில் நாள் குறித்தேன்.. அதற்கான மறைபொருளை உணர்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 21. //பிங்கி:) யில கவிதையைப் போட்டவர் ... புலூ:) வில் கருத்தேதும் சொல்லவில்லை:)...
  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...​//

  அதிரா... அவர் மெயிலுக்கு என் அபிப்பிராயங்களை உடனே அனுப்பி விட்டேன். எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்றாலும், அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்...

  =================================================================================================


  "உணர்வுகள் கொப்பளிப்பதால் நடந்த நிஜக் க(வி)தையோ என்கிற சம்சயம் எனக்கு! உண்மை சொல்லுங்கள். உரிமையுடன் கேட்கிறேன். அந்தக்காலத்துக்கே சென்றுவிட்டேன் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்."

  பதிலளிநீக்கு
 22. @ athira said...
  ///கண்ணுக்குள் கதை -
  என்று வந்தான் கள்வன்..

  சரி.. சொல்!.. - என்றேன்..////
  ஹா ஹா ஹா இதுக்குத்தான் ஊர் பேர் தெரியாதோரை எல்லாம் உள்ளே விடக்கூடாதென்பது:)... இப்ப பாருங்கோ கல்யாணத்தில வந்து நிக்குது:)..

  என்ன இது?.. இத்தனை நேரமா ஆளைக் காணலையே..
  ஆத்தங்கரைப் பக்கம் ஆளை அனுப்பி தேடலாம்..ன்டு நெனைச்சன்..

  நல்லவேளை சரியான நேரத்தில் வந்து சேர்ந்தீங்கள்..

  அது சரி.. இன்னும் அந்தப் பக்கம் கோழி கூவலையா?.. தூக்கம் கலையலையா!..

  கண்ணுக்குள்ள கதை..யென்டு வந்தவன் அத்தை மகனாக்கும்!..

  அவள் தான் சொல்றாள்..இல்லை..

  அவன் அத்தான்
  என் அகத்தான்.. எண்டு!..

  அப்புறம் என்னத்துக்கு சந்தேகம்?..

  பதிலளிநீக்கு
 23. @ athira said...

  >>> நல்ல அம்மா... காதில கேட்டதுக்கே பச்சைக்கொடி காட்டிட்டாவே 70 களில் அம்மாக்கள் அப்பூடியா இருந்தாங்க???... <<<

  படத்துக்கேற்ப அழகிய ஒரு கதையை, கவிதையில்
  சொல்லி முடித்தவிதம் மிக அருமை...

  >>> ஏன் ஆவணியிலயே மிகுதி நாள் இருக்குமே:).<<<

  அவங்களோட அண்ணன் மகன் தானே.. பிரியம் இருக்காதா!..
  எந்தக் காலம் ஆனாலும் அம்மாக்களின் அன்பே தனி!..

  அவர்கள் அடுக்களையில் இருந்தாலும் மனமெல்லாம் அன்பு மகளிடம் தானே இருந்திருக்கிறது..

  இருந்தாலும் நாத்தனார் இல்லாத குறையை நீக்கி விட்டீர்கள்.. ஏதோ புள்லையக் கண் கலங்காமப் பார்த்துக் கொள்ளுங்கள்.. அவ்வளவு தான் சொல்லமுடியும்!..

  அப்புறம் ஏதோ ஆவணியில் மிகுதி நாள்.. - அப்படின்னு கேட்டீங்களே!..

  ஆவணி மாசம் அவங்க வீட்டுல மாரியம்மனுக்கு விரதம்.. அதான்!..

  பதிலளிநீக்கு
 24. @ athira said...

  >>> பிங்கி:) யில கவிதையைப் போட்டவர் ... புலூ:) வில் கருத்தேதும் சொல்லவில்லை:)...
  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)... <<<

  காலையிலேயே வறுத்த நிலக்கடலை கொஞ்சம் (!)சாப்பிட்டேன்.. கூட வெல்லமும் தான்..
  ஏதோ கோளாறு .. ஆளை அசத்தி விட்டது..

  சற்று அயர்ச்சி நீங்கியதும் இதோ - தங்களுடன் பதிவில்!..

  >>> ஆவ்வ்வ் நெல்லத்தமிழன் கையில் மை இருக்கு:)<<<

  உண்மை தான்.. இனிமை, குளுமை, திறமை - இப்படி பலவகையான மை கள்..

  தற்சமயத்துக்கு ஒற்றை வரியில் சொல்லி விட்டு
  அப்புறமாக வந்து சலித்து எடுப்பார்கள் என நினைக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 25. @ Bagawanjee KA said...

  #கலாபாரதி#
  >>> பெயர் பொருத்தம் அருமை <<<

  அன்பின் பகவான் ஜி..
  அவசியம் கல்யாணத்துக்கு வந்துடுங்க..
  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 26. @ Angelin said...

  >>> ஆஹா!! அருமை... மிக அழகான கவிதை படத்துக்கு.. <<<

  அன்புடையீர்.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 27. @ விஜய் said...

  >>> இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி << <

  அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 28. @ ஸ்ரீராம். said...

  //பிங்கி:) யில கவிதையைப் போட்டவர் ... புலூ:) வில் கருத்தேதும் சொல்லவில்லை:)...
  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...​//

  அதிரா... அவர் மெயிலுக்கு என் அபிப்பிராயங்களை உடனே அனுப்பி விட்டேன். எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்றாலும், அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்...
  ========================================================================================
  >>> "உணர்வுகள் கொப்பளிப்பதால் நடந்த நிஜக் க(வி)தையோ என்கிற சம்சயம் எனக்கு! உண்மை சொல்லுங்கள். உரிமையுடன் கேட்கிறேன். அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டேன் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்." <<<

  அப்போதே நினைத்தேன்..
  குட்டிப் பூனை வெளியில் வரும்.. - என்று..
  வந்தே விட்டது!!..

  பதிலளிநீக்கு
 29. துரை செல்வராஜு எல்லா genre லயும் கலக்குகிறார்

  பதிலளிநீக்கு
 30. அருமையான அனுபவக் கவிதை! துரை செல்வராஜூ எல்லாத்திலேயும் நன்றாக அசத்துகிறார். கார்த்திகையிலும் பல சமயங்களில் மழை தொடர்கிறதே! :)))) எங்க பையர் கல்யாணத்தைக் கார்த்திகையில் வைச்சுட்டுத் தவிச்சோம்! புயல் பயமுறுத்தல்! அதை விட்டுடுவோம்.

  அண்ணன் மகன் தான் என்பதாலும் நிச்சயம் ஆனது தானே என்பதாலும் மகளைக் குறித்த பயம் இல்லை அம்மாவுக்கு! மகளும், மருமகனும் தனித்திருந்து மகிழட்டும்னு விட்டுட்டாங்க! :))))

  பதிலளிநீக்கு
 31. தொடர! போட்டேன். க்ளிக் ஆகலை போல! :)

  பதிலளிநீக்கு
 32. கண்ணுக்குள்
  கதைத்தான்..
  பாரதி!..
  காதுக்குள்
  நகைத்தேன்..
  கலாபாரதி!..அருமையா முடிச்சிருக்கீங்க பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 33. @ G.M Balasubramaniam said...

  அன்பின் ஐயா,
  தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 34. @ Geetha Sambasivam said...
  >>> கார்த்திகையிலும் பல சமயங்களில் மழை தொடர்கிறதே!..<<<
  ஆமாம்.. கார்த்திகையை சமயத்தில் நம்பமுடியாது..

  சிறு வயதாக இருக்கும்போது அரிசி தின்றால் - கல்யாணத்தின் போது மழை வரும் என்று பயமுறுத்துவார்கள்.. உண்மையாக இருக்குமோ!?..

  தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 35. @ Asokan Kuppusamy said...

  >>> அருமையா முடிச்சிருக்கீங்க.. பாராட்டுகள் <<<

  தங்களது வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 36. கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே..என்று மூடு கிளம்ப, காதல் கடலில் நீந்தி நேயர் விருப்பத்தைத் திறம்படப் பூர்த்திசெய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 37. //இருந்தாலும் நாத்தனார் இல்லாத குறையை நீக்கி விட்டீர்கள்..//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)..
  ///அவங்களோட அண்ணன் மகன் தானே.. பிரியம் இருக்காதா!..///
  //ஆவணி மாசம் அவங்க வீட்டுல மாரியம்மனுக்கு விரதம்.. அதான்!.///

  @ஸ்ரீராம்///"உணர்வுகள் கொப்பளிப்பதால் நடந்த நிஜக் க(வி)தையோ என்கிற சம்சயம் எனக்கு! உண்மை சொல்லுங்கள். உரிமையுடன் கேட்கிறேன்.//

  ஹா ஹா ஹா அதே.. அதேதான் ஸ்ரீராம்ம்ம்:)) எனக்கு எல்லாமே பிரிஞ்சுட்டுது வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்:).. புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:)).. இன்று துரை அண்ணனின் நல்ல காலம் என்னால்..நேரகாலத்துக்கு வரமுடியவில்லை.. அதனால தப்பிச்சுக்கொண்டார்ர்:)

  பதிலளிநீக்கு
 38. மிக மிக மிக அமிர்தமான, தே கவிதை. மாலை நேரத்தையே மயக்கிவிட்டது இவர்களின் காதல். கண்ணில் ஒரு கவிதையா கண்டார். ஆயிரம் தோன்றும் போலிருக்கிறதே.
  மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்.
  இந்தக்காதலனையும்கன்னியையும் கவிதையையும் கண்டு நெஞ்சு பாலில் விழுந்த பழம்.
  வாழ்த்துகள் துரை செல்வராஜு.

  பதிலளிநீக்கு
 39. @ ஏகாந்தன் Aekaanthan ! said...
  >>> காதல் கடலில் நீந்தி நேயர் விருப்பத்தை.. <<<

  இப்படியும் அர்த்தம் வருகின்றதா!.. சரிதான்..
  தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 40. @ athira said...

  >>> இன்று துரை அண்ணனின் நல்ல காலம் என்னால்..நேரகாலத்துக்கு வரமுடியவில்லை.. அதனால தப்பிச்சுக்கொண்டார்ர்:)<<<

  நீங்கள் எல்லாரும் மறுபடியும் வந்து பிய்த்துப் போட்டு வறுத்து எடுப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.. மிகவும் ஏமாற்றம் தான்..

  தங்கள் அன்பின் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 41. வல்லிசிம்ஹன் said...

  >>> கண்ணில் ஒரு கவிதையா கண்டார்.. ஆயிரம் தோன்றும் போலிருக்கிறதே..<<<

  அன்புடையீர்.. தங்கள் வருகை மட்டற்ற மகிழ்ச்சி.. கருத்துரையும் வாழ்த்துரையும் உற்சாகம்.. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 42. ஆஹா இப்பொழுதுதான் பார்க்கிறேன்....

  அன்பின் ஜி அருமையான வரிகள் ஹைக்கூ போன்ற வரிகளில் அர்த்தம் பொதிந்தவை வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 43. அன்பின் ஜி
  அர்த்தம் பொதிந்த ஹைக்கூ போன்ற வார்த்தைகள் அருமை.

  தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 44. துரை செல்வராஜு சார்... மீண்டும் படித்துப்பார்த்தேன். "Sweet nothings" எழுதுவது சுலபமல்ல. காதலர்கள் பேசுவதை எழுதிவதற்கு பெரிய திறமை வேண்டும்.

  எலிக்காது-பாம்புக் காது என்றுதானே சொல்லுவார்கள்?

  கல்யாணத்துக்கு அவசரப்படுவது இயல்புதான். ஆக்கப் பொறுத்தவர்கள் பெரும்பாலும் ஆறப் பொறுக்க மாட்டார்கள்.  பதிலளிநீக்கு
 45. @ KILLERGEE Devakottai said...

  >>> ஆஹா இப்பொழுதுதான் பார்க்கிறேன்...<<<

  ஜி.. கருத்துரையில் தங்களைக் காணாமல் தவித்து விட்டேன்..

  தங்கள் வருகையும் கருத்துரையும் உற்சாகம் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 46. @ KILLERGEE Devakottai said...
  >>> அன்பின் ஜி.. தொடர்ந்து கவிதை எழுதுங்கள்...<<<

  ஜி.. தாங்கள் அளிக்கும் ஊக்கம் மிக்க மகிழ்ச்சி..
  மீள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
 47. @ நெல்லைத் தமிழன் said...

  >>> மீண்டும் படித்துப்பார்த்தேன். "Sweet nothings" எழுதுவது சுலபமல்ல. காதலர்கள் பேசுவதை எழுதுவதற்கு பெரிய திறமை வேண்டும்..<<<

  நான் இன்னும் அங்கேயிருந்து மீளவே இல்லை...
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!