வியாழன், 7 செப்டம்பர், 2017

கருப்பாய்ப் பிறந்த குற்றம்அன்புமிகு ஸ்ரீராம்,  


     எங்கள் ப்ளாகில் நேற்று (31-8-2017) வந்த உங்களின் ‘கலவரக் காக்கைகளும்’ அதனைத் தொடர்ந்து நான் நினைவுப்படுத்திக்கொண்ட Ted Hughes-ன் காக்கை கவிதைகளும் என்னை இன்றும் தொடர்ந்தவண்ணமிருந்தன. 

     இடையிலே உங்கள் கவிதைக்கான அதிராவின் வார்த்தைகள் ‘பின்ன என்ன.. எவ்ளோ பறவைகள் இருக்க ஆரும் காக்கைக்கு கவிதை எழுதுவினமோ?’ என்பதும் மனதில் ஓட, காகம் ஒருவேளை ஏதேனும் மனிதனிடம் சொல்லவிரும்புகிறதோ என ஆராய்ந்ததில் வந்து விழுந்தது இன்னுமொரு காக்கைக் கவிதை. கீழே தந்திருக்கிறேன். ஒருவேளை, எங்கள் ப்ளாகில் இதனைப் பறக்கவிட நினைத்தால், செய்யலாம் !

அன்புடன்,

ஏகாந்தன் 01—09-2017


பறக்க விட்டு விட்டேன் ஏகாந்தன் ஸார்...


காக்கையின் பாட்டு
கண்டுங்காணாததுபோல் போகிறீர்
கருப்பென் நிறம் என்பதால்தானே
பச்சை நீலம் மஞ்சளெனப்
பகட்டாய் நான் திரிந்திருந்தால்
பார்க்காது இப்படிப் போவீரா
பார்ப்பீர் நன்றாகப் பார்ப்பீர்
பிடித்துக்கொண்டுபோய்க்
கூண்டில் அடைத்துக்
கொஞ்சுவீர் குலவுவீர்
உமது பாஷையைக்கூட
எமக்கு சொல்லித் தருவீர்
ஆகச்சிறந்த ஜீவனென
ஆட்டம் பலவும் போடுகிறீரே
நானொன்றறிவேன் தெளிவாக
நானிலத்தில் நல்லபேரில்லை உமக்கு
உமை நெருங்கும் ஆசையும் எமக்கில்லை
கருப்பாக எமைப் படைத்தே, எம்மேல் உமக்கு
வெறுப்புண்டாகச் செய்தானே அவன் பேரை
மெருகூட்டத்தான் தினம் பாடுகின்றேன்
கா…கா…கா…
============================================================================================================================கவலைத் தாய் 


பெண் : ''ஹலோ...'கஸ்டமர் கேர்' தானே?"

கஸ்ட.கேர் : "ஆமாங்க.. ..வணக்கங்க... நாம பேசறது ரெகார்ட் ஆகுது மேடம்...  என்ன வேணும் சொல்லுங்க..."

பெண் : "என் அஞ்சு வயசுப் பையன் சிம் கார்டை முழுங்கிட்டான்..."

கஸ்ட.கேர் : "சொல்லுங்க மேடம்..."

பெண் : "அதுல எழுபத்தைந்து ரூபாய் மிச்சம் இருந்தது...."

கஸ்.கேர் : "சொல்லுங்க மேடம்..."

பெண் : இப்போ அவன் பேசும்போது காசு போகுமா.."=====================================================================================


ஜப்பானில் நல்ல ஆவிகளுக்கு டாமா என்று பெயர்.  கெட்ட ஆவிகளுக்கு ஒனீரோ என்று பெயர்.

மேற்கிந்தியத் தீவுகளில் ஆவிகளுக்கு டப்பீஸ் என்று பெயர்.

பூனை, நாய், குதிரை போன்றவைதான் ஆவிகளின் இருப்பை முதலில் உணருமாம்.  சங்கடமாக அசையுமாம்.

அதுசரி,  ஆவிகளும் பேய்களும் ஒன்றுதானா?  பிசாசு எந்த வகை?

சில தனிமை கணங்களில் யாரோ உடன் இருப்பது போல, யாரோ கடந்தது போல உணர்ந்திருக்கிறீர்களா?


=======================================================================


ஹி...  ஹி...  ஹி...  ஹி...  நான்கு வருடங்களுக்கு முன்பு முகநூலில்....!

==========================================================================


இந்தப் படம் நெல்லைத்தமிழனுக்காக...   இதற்கு ஒரு கவிதை எழுதி எனக்கு அனுப்புங்கள் நெல்லை...   அடுத்த வியாழன் போட்டு விடுவோம்.. (சீக்கிரம்தான் இல்லை?!!!  நெல்லை மட்டும் இல்லை, விரும்புபவர்கள் எல்லோரும் எழுதலாம்!)


====================================================================[ இன்று பகிரப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனிப் பின்னூட்டம் அனைவரிடமிருந்தும் வரும் என்று எதிர்பார்க்கலாமா?!! ]
73 கருத்துகள்:

 1. தனித்தனியே பின்னூட்ட்ம் என்றால் அப்புறமாகத் தான்!..

  இனியதொரு தொகுப்பு.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. ஜெ.யின் ஓவியத்தை அதிகம் ரசித்தேன். கல்லூரிக்காலம் முதல் நான் அவருடைய ரசிகன்.

  பதிலளிநீக்கு
 3. //சில தனிமை கணங்களில் யாரோ உடன் இருப்பது போல, யாரோ கடந்தது போல உணர்ந்திருக்கிறீர்களா?//

  ஆவி எல்லாம் நிஜம்மாவே இருக்குனு நம்பறவங்களுக்குத் தான் அப்படி எல்லாம் தெரியும். :)

  பதிலளிநீக்கு
 4. ஆனால் அந்த வரியை ஏற்கெனவே படிச்ச நினைவு. ஏகாந்தனின் காக்கைக் கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 5. நெ.த. கவிதை எழுதப் போட்டிருக்கும் படமும் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி வந்திருக்கே!

  பதிலளிநீக்கு
 6. கண்ணீர்க்கவிதை படிச்ச ஞாபகம் இல்லை. :) நாலு போட்டாச்சா?

  பதிலளிநீக்கு
 7. வெளியூர் ஆகவே விரிவாக எவுத இயலவில்லை
  இரசித்தேன் செல்வழி....

  பதிலளிநீக்கு
 8. காக்கையின் பாட்டு அருமை...

  என்னவொரு கவலை...

  உணர்ந்திருக்கிறேன்...

  அட...! ஜோசியம்...!!?

  பதிலளிநீக்கு
 9. ஏகாந்தன் - கவிதையை ரசித்தேன். இறைவன் படைப்பில் பிடிக்காத்து என ஒன்று உண்டா? யாருமே, "காக்காயக்கு சோறு போட்டுவிட்டு வருகிறேன்" என்று சாப்பிடுவதற்கு முன்னால் செய்வார்களே தவிர, புறாக்கு உணவு வைக்கிறேன், கிளி/நாய்/பூனைக்குச் சோறிட வேண்டும் என்பார்களா? காக்கையை நம் முன்னோர்கள் என்று உருவகப்படுத்துவதால் நாம் கூண்டில் வளர்க்க ஆசைப்படுவதில்லையோ?

  அல்லது சனியின் வாகனம் என்று உருவகப்படுத்தியுள்ளதால், நம்மைப் பீடிக்கக்கூடாது என்று வளர்ப்பதில்லையோ?

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. தனிமை கணங்களில் யாரோ உடனிருப்பதுபோல --- தனியாக இருக்கும்போது தவறு செய்யும்போது யாரோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. கண்ணீரோடு உள்ள படங்கள் அருமை.

  ஜெ.வின் பெண்கள் படத்தை ரசிக்காதவர் யார்? அவருடைய பிம்பத்தையும் தாண்டி அவர் வெற்றிபெற்றது, அப்புசாமி சீதாப்பாட்டி தொடர்கதையில் அ., சீ படங்கள்.

  நான் ஒருதடவை, ஜெ. படம் மாதிரியான பெண் என ஒருவரைக் கண்டு படம் எடுத்து ஒரு கட்டுரை படித்த ஞாபகம் (80களில்?). யாருக்கேனும் நினைவிருக்கிறதா?

  பதிலளிநீக்கு
 12. கருப்புதான் பலருக்கும் புடிச்ச கலரு ...காக்கைக்கு தாழ்வு மனப்பாங்கு வேண்டாம்! காக்காத புடிக்கதான் நிறைய மனிதருக்கு பிடிக்கும்....

  பதிலளிநீக்கு
 13. காக்கா கவிதை நன்றாக இருக்கிறது.
  காக்காபிடிப்பது என்று சொல்வழக்கில் உள்ளது , ஐஸ்வைத்து நட்பு வைத்துக் கொள்வதை காக்காபிடிப்பது என்று காகத்தை பெருமை படுத்துகிறார்களே!
  நெல்லைத் தமிழன் சொல்வது போல் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு காத்திருந்து அது உண்டபின் உணவு உட்கொள்வது அதற்கு பெருமைதானே! சனிபகவானை துதிக்கும் போதும் காக வாகனனே காக்கும் சனிதேவா என்றும் காகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

  நம் வீட்டு கூறை மேல் உட்கார்ந்து கா கா கா என்று பாடினால், விருந்தினர் வருவார்களென்றும் , கடித போக்குவரத்து இருந்த போது கடிதாசு வரும் என்றும் பெரியவர்கள் சொல்வார்கள். (ண்ல்ல தகவல் வரும் என்றூம் சொல்வார்கள்)

  நாம் வெளியில் போது காக்கா பற்ந்து போகும் திசை வைத்து நல்லது, கெட்டதை அந்தகால முன்னோர்கள் சொல்வார்கள். காக்கா சுகாதாரத்தின் காவலர் . பெருமை வாய்ந்த காகத்திற்கு கவிதை படைக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 14. வித்தியாசமாக கவலைபடும் தாய்.

  தனியாக இருக்கும் போது சில சமயம் உணர்ந்து இருக்கிறேன் கடந்து போவது போல்.

  கண்ணீர் ஜோசியம் நல்லா இருக்கிறது.

  நினைத்தது நடக்கும்
  கேட்டது கிடைக்கும்
  இமையின் முடியால்

  அப்படியே அசையாமல் இரு
  உன் இமை முடி கன்னத்தில் ஒட்டி இருக்கு
  அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டு வேண்டிக் கொண்டு ஊதி
  பறக்க விட்டால் நினைத்தது நடக்கும்.

  சினிமாவில் பார்த்த கதைகளில் படித்த விஷ்யம் இது.

  பதிலளிநீக்கு
 15. காக்கை கவிதை நன்று என் பிளாக்கில் காக்கைக்கு ஒரு கவிதை உண்டு

  பதிலளிநீக்கு
 16. அன்புக்கும் நேசத்துக்கும் கலர் என்ன செய்யும்? சில நாட்களாக காக்கைகள் மிகப் பிடித்து விட்டன - தினம் ஒரு காகம் என் ஜன்னல் அருகே கரைகிறது - தீனி இடுவதில்லை - தானாகவே. அது அண்மையில் மறைந்த என் அம்மா என்ற உணர்வு எனக்கு...

  பதிலளிநீக்கு
 17. 1) அழகா இருந்தால் ஆபத்து தான்.. பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள்..
  பறவையாக இருந்தாலும் விடமாட்டார்கள்!..

  2)க.கேர்:- அப்படியே போகலைனாலும் நாங்க புடுங்கிடுவோமே!..

  3)பேய் என்பதும் பிசாசு என்பதும் வேறு வேறல்ல.. பைசாசம் என்பதே பிசாசு என சுற்றிக் கொண்டிருக்கின்றது.. ஆவிகள் என்பவை எவ்வுலகும் புகாமல் இடையில் தவித்துக் கொண்டிருப்பவை.. இறையருள் கூடியிருப்பின் - மந்திரவாதிகள் எனும் இடைத் தரகுகள் இல்லாமல் ஆவிகளையும் பேய்களையும் நல்லவர்களால் உணரமுடியும்..

  4)இதற்கும் அதற்கும் Miss தான் காரணமா!?..

  5)இந்தப் படம் எங்களுக்காக இல்லையா!.. அப்போ இன்னொரு கவிதை வேண்டாமா?..

  பதிலளிநீக்கு
 18. திரு. ஏகாந்தன் அவர்களுடைய கவிதை அழகு..
  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 19. புரட்டாதிச்சனி வரமுன்பே.. காக்கையாருக்கு மருவாதை:) புளெக் எங்கும் அதிகமாகிக்கொண்டே போகுதே.. ஒரு வேளை காகத்துக்கு 11 இல வியாளனோ?:) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

  //எங்கள் ப்ளாகில் நேற்று (31-8-2017) வந்த உங்களின் ‘கலவரக் காக்கைகளும்’ ................ ........... ......... தொடர்ந்தவண்ணமிருந்தன. ///

  அச்சச்சோ.. கொத்திடேல்லைத்தானே?:).. இதெல்லாத்துக்கும் காரணம் ஸ்ரீராம் தான்:).. அங்கு கீதா.. கமெராவும் கையுமா காகத்தைக் கலைச்சபடி திரிஞ்சா:)

  பதிலளிநீக்கு
 20. ///பகட்டாய் நான் திரிந்திருந்தால்
  பார்க்காது இப்படிப் போவீரா
  பார்ப்பீர் நன்றாகப் பார்ப்பீர்
  பிடித்துக்கொண்டுபோய்க்
  கூண்டில் அடைத்துக்
  கொஞ்சுவீர் குலவுவீர்//

  ஹா ஹா ஹா உண்மைதானே மனிசரை மனிசரை புரிஞ்சிருக்கினமோ என்னமோ.. காகங்கள் நன்கு புரிஞ்சு வச்சிருக்கினம் போல... அழகிய கற்பனை..

  ஆனா கலர் கலரா இருந்தா அழகென்றும் கறுப்பா இருக்கும் பறவைகள் அழகில்லை என்றும்... யார் மனிசருக்குக் கற்றுக் கொடுத்தது?.. ஒரு குழந்தைகூட கலரான பறவையைப் பார்த்தால் பின்னால ஓடுதே:)..

  //உமது பாஷையைக்கூட
  எமக்கு சொல்லித் தருவீர்//
  இங்குதான் கடவுள் கொஞ்சம் விளையாடியிருக்கிறார்பாருங்கோ... எங்கள் பண்பாடு, எங்கள் பாரம்பரியம்.. நம் பாசைதான் பேசுவோம் வேற்று மொழி பேச மாட்டோம்ம்.. என்றெல்லாம் திமிராகப் பேசும் நாம்:), எங்கள் பாசையை சொல்லிக்கொடுப்பதை விட்டுப்போட்டு.. அவர்களின் பாசையில நம்மைக் கத்த வைத்தெல்லோ உணவு கொடுக்கிறோம்..

  இப்பூடி எல்லாம் கிட்னியை ஊஸ் பண்ணிச் சிந்திக்கோணும் அதிராவைப்போல:)..

  பதிலளிநீக்கு
 21. நல்ல அம்மா.. நல்ல கவலை:)..இது யாராக இருக்கும் என ஓசிச்சு:).. வாணாம் எனக்கெதுக்கு ஊர்வம்பு என் வாய்தேன் நேக்கு எதிரி என.. கையை விட்டிட்டேன்ன்.. ஓசிப்பதை:)..

  ///அதுசரி, ஆவிகளும் பேய்களும் ஒன்றுதானா? பிசாசு எந்த வகை?///

  ரொம்ப முக்கியமான சிந்தனை:).. ஸ்ரீராமை யார் நடு இரவில் மொட்டை மாடிக்குத்தனியே அனுப்பியது?:).. பாருங்கோ அவருக்கு இப்போ என்னமோ ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))...

  அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ கமோன்ன்ன்ன்ன்.. அந்த தேம்ஸ்கரை, வேய்ப்ப்பமரத்தில இருந்து, ரெண்டு கொத்துப் பிடுங்கி வாங்கோ... இதுக்கு குழையடி வைத்தியம் தான் சரி என முச்சந்தி முனியம்மாக்கா மூண்டாம் வகுப்பிலயே சொல்லித்தந்தவ:)..

  பதிலளிநீக்கு
 22. ///சில தனிமை கணங்களில் யாரோ உடன் இருப்பது போல, யாரோ கடந்தது போல உணர்ந்திருக்கிறீர்களா?///

  உப்பூடியெல்லாம் மறைமுகமா மிரட்டினால்ல்.. உடனேயே ரிக்கெட் போட்டுக்கொண்டு, நெல்லைத்தமிழன் ஊருக்குப் போயிடுவார் எனத்தானே நினைக்கிறீங்க?:) கர்ர்:) அதுதான் இல்லை.. அவர் கட்டிலைச் சுற்றி.. விளக்குமாறு.. தும்புத்தடி, இரும்பு எல்லாம் வச்சுப்போட்டுத்தான் நித்திரை கொள்ளுவாராம்ம்:).. இதுக்கு மேலயும் அவரை ஏதும் நெருங்குமோ?:)..

  ஹையோ அடிக்கடி என் வாய் என் கட்டுப்பாட்டை மீறித்தொலைக்குதே:)).. அஞ்சு கமோன் என் கையைப் பிடிங்கோ.. கொஞ்சம் லைட்டா பில்டிங் ஆடுதே:).. இது வேற பில்டிங்:)..

  பதிலளிநீக்கு
 23. ///சில தனிமை கணங்களில் யாரோ உடன் இருப்பது போல, யாரோ கடந்தது போல உணர்ந்திருக்கிறீர்களா?///

  கொஞ்சம் பிரேக் எடுங்கோ.. தொடர்றேன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 24. தொகுப்பு அருமை....
  அந்த சிம் கார்டு விஷயம்... ஆடியோவா வந்து பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன்.

  படத்துக்கு கவிதை.... எழுதுபவர்களை வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 25. நல்ல தொகுப்பு.

  காக்கைப் பாடல் அருமை.


  கண்ணீரின் மொழி.. உண்மை.

  கவலைத் தாய்.. நோ கமெண்ட்ஸ்:)

  ஆவி ஆராய்ச்சியை விடவே மாட்டீர்கள் போலும்..

  ஓவியத்துக்கான கவிதைக்குக் காத்திருக்கிறோம்.  பதிலளிநீக்கு
 26. மக்கள்ஸ்ஸ்ஸ்.. நான் என் “செக்”[ஹையோ இது செக்கரட்டறிக்கு சோட் நேம் ஆம் பகவான் ஜீ சொல்லித்தந்தார்:)] ஐ டிவோஸ் பண்ணப்போகிறேன்:).. எனப் பகிரங்கமாக அறிவிக்கிறேன்ன்:) பின்ன என்ன வரவர ஒரு மருவாதையே இல்லை.. கூப்பிட்டால் ஓடி வருவதில்லை:).. ஆனா “செக்” கொடுக்க{இது வேற செக்} தாமதமானா மட்டும் தேம்ஸ்ல தள்ளிடுவேன் என மிரரரரட்டுறா கர்ர்:)).. சரி ..உத விடுங்கோ...:)..

  ஸ்ரீராமின் கண்ணீர் ஸ்டேட்டஸ் ஐப் படிக்கும்போது கண்ணீர் வந்தா.. அதுக்கு என்ன அறுத்தம்?:))

  பதிலளிநீக்கு
 27. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு நிறம் என்பதே ஏதோ ஆதிக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறதோமுன்பே ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தேன் காக்கைகளிலும் சாதிகள் உண்டாமேஏகாந்தன் கவிதை ரசிக்க வைக்கிறது
  /
  சில தனிமை கணங்களில் யாரோ உடன் இருப்பது போல, யாரோ கடந்தது போல உணர்ந்திருக்கிறீர்களா?/ தவறு செய்பவருக்கு அந்தமாதிரி எண்ணம் வரலாம் யாரோகவனிக்கிறார்கள் போலத் தோன்றலாம் ஓவியத்துக்குக் கவிதை எழுத மனம் வரவில்லை தனிமையிலே இனிமை காண விரும்புகிறாரா இல்லை பிக் பாசில் ஏதோடாஸ்கா தும்மல் வரவழைக்க

  பதிலளிநீக்கு
 28. //இந்தப் படம் நெல்லைத்தமிழனுக்காக... இதற்கு ஒரு கவிதை எழுதி எனக்கு அனுப்புங்கள் நெல்லை...//

  ஆஹா ஆஹா.. சிவனே எனத் தன்பாட்டில இருப்பவருக்கு இப்படி ஒரு படத்தைப் போட்டுக்காட்டி.. அதில கவிதை எழுதச் சொல்லிப் பயமுறுத்துறீங்களே.. இது நியாயமா?:)).. ஆனா அவர் ரோசக்காரர்:) நிட்சயம் எழுதுவார் பாருங்கோ:)).

  //அடுத்த வியாழன் போட்டு விடுவோம்.. (சீக்கிரம்தான் இல்லை?!!! நெல்லை மட்டும் இல்லை, விரும்புபவர்கள் எல்லோரும் எழுதலாம்!)//
  ஹா ஹா ஹா வியாழக்கிழமையை கவிதைக் கிழமை ஆக்கிடலாம்ம்.. சூப்பரா இருக்கும்.. ஆனா எனக்கு கதை எழுதுவதுபோல கவிதை எழுத வராது.. அது எப்பவாவது சட்டுப் பட்டென உதிக்கும்.. அப்போ உடனேயே என் காண்ட் பாக்கில் இருக்கும் நோட் புக்ல குறிச்சு வச்சிடுவேன்ன்:).

  இடில ஒரு கண்டிஷன்.. கவிதை எழுதுவோர்ர்.. பேச்சு வழக்கில எழுதுங்கோவன் பிளீஸ்ஸ்:).. சங்ககாலத்தமிழ் எல்லாம் போட்டு எழுதினால் எனக்கு ஏனோ அப்படிக் கவிதை பிடிப்பதில்லை.. :).

  இன்னொரு டவுட்டூஊஊ படத்தில அந்த அண்ணா:) அந்தக்காவுக்கு என்ன பண்ணுறார்ர்?:).. உத்து உத்துப் பார்த்தேன்ன்.. மூக்குத்தி போடுவதுபோலவும் தெரியுது... மூக்கில் தும்பு விட்டு தும்மல் வர ட்றை பண்ணுவதுபோலவும் தெரியுதே.. ஹா ஹா ஹா.. ஏதோ நினைவுகள் மனதிலே இப்போ ஓடுமே:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

  பதிலளிநீக்கு
 29. நேக்கு ஒரே ஷை ஷையா வருதே.. இங்கின தனியே நிண்டு பேச:) இருப்பினும் விடமாட்டேன்ன் அதிராவோ கொக்கோ?:)..

  ///[ இன்று பகிரப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனிப் பின்னூட்டம் அனைவரிடமிருந்தும் வரும் என்று எதிர்பார்க்கலாமா?!! ]///

  ஹையோ இது “குரோம்பேட்டைக் குசும்பனின் குசும்பை விட ஓவர்க் குசும்பா இருக்கே:)” ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 30. ///இடையிலே உங்கள் கவிதைக்கான அதிராவின் வார்த்தைகள் ‘பின்ன என்ன.. எவ்ளோ பறவைகள் இருக்க ஆரும் காக்கைக்கு கவிதை எழுதுவினமோ?’ என்பதும் மனதில் ஓட,///

  என் கொமெண்ட்டையும் நினைச்சதுக்கு.. ரசிச்சமைக்கு நன்றி நன்றி... எதுக்கு இப்போ கிழக்கால மேற்கால எல்லாம் புகைப்புகையா வருதூஊஊஊஊஊஊஊ:)).. அடாது புகை வந்தாலும் விடாது என் கொமெண்ட்ஸ் தொடரும்.. ஹா ஹா ஹா ஹையோ இன்னொரு விசயம் சொல்ல இருக்கு பட் இப்ப முடியாது கொஞ்சம் லேட்டா வாறேன்ன்:).. இப்போ இங்கிருந்து போவதுதான் நேக்கும் நாட்டுக்கும் நல்லது:).

  பதிலளிநீக்கு
 31. https://www.youtube.com/watch?v=RZ3o5S61lBY

  இந்த லிங் ஐ கொப்பி பண்ணி எடுத்துப்போய் மேலே சேர்ஜ் பார் இல் பேஸ்ட் பண்ணிப் பார்க்கவும்:)..

  பதிலளிநீக்கு
 32. நல்லாயிருக்கே காக்கா கவிதை :)

  //நானொன்றறிவேன் தெளிவாக
  நானிலத்தில் நல்லபேரில்லை உமக்கு
  உமை நெருங்கும் ஆசையும் எமக்கில்லை//

  காக்காஸ் மட்டும்தான் மனுஷங்களை சரியா கணிச்சிருக்கு :)


  எனக்கு ரொம்ப பிடிச்சது அண்டங்காக்கா நல்லா பளபளன்னு கொழுமொழுன்னு இருக்கும் ஆனா சாம்பல் காக்காவின் ஓரப்பார்வையும் அழகுதான் ..ஜன்னல் கம்பியில் புட்ப்போர்டில் தொங்கிட்டுவர பசங்கபோல ஒய்யாரமா கம்பியை பிடிச்சிட்டு குறு குறுன்னு பார்க்கிற அழகே தனி :) ..நான் காக்காய்ங்கள மட்டுமே அழகென்றேன்


  ஊரில் எங்க வீட்டு கோழிங்க எப்ப முட்டை போடும்னு பார்த்து ஓடுவந்து சாப்பிடும் நாங்க ப்ரிட்ஜ்க்குள்ள வச்சிருக்கறது தெரிஞ்சி ஒரு காக்கா தினமும் வந்து ஜன்னல் வழியே ஃபிரிட்ஜை கொத்தும்


  ஆனாலும் கொடுத்து வச்ச காக்காய்கள் நித்தம் காகாகா னு கடவுளை கூப்பிடறதால தான் கூண்டுக்குள்ள PET அனிமல் ஆகாம தப்பிச்சிருக்காங்க

  பதிலளிநீக்கு
 33. @ athiraa அந்த லிங்க்கில் உங்க சமையல் குறிப்பு இல்லை னு சத்தியம் பண்ணுங்க அப்போதான் நான் லிங்க்கை திறப்பேன்

  பதிலளிநீக்கு
 34. @athirrrrrrraa garrr narrrr

  //. அதுக்கு என்ன அறுத்தம்?:))//

  பதிலளிநீக்கு
 35. கண்ணீர் கவிதைக்கு எங்க தலைவி பியூட்டி ஓவியா படத்தை போடாமல் விட்டதுக்கு மென்மையான கண்டனங்கள் :)

  பதிலளிநீக்கு
 36. கஸ்டமர் கேர் :) பாவந்தான் அங்கே வேலை செயறவங்க நிலைமை ..முந்தி ஒரு ஜோக் வந்துச்சி godrej பிரிட்ஜ் puff உடன் என்று கடையில் போட்டிருப்பாங்க விளம்பரத்தில் .வீட்டுக்கு ப்ரிட்ஜ் வந்ததும் மனைவி திறந்து பார்த்து கோத்ரெஜ் கம்பெனிக்காரன் பப்ஸ் வைக்காம ஏமாத்திட்டான்னு புலம்புவாங்க அந்த ஜோக் நினைவுக்கு வந்திச்சி

  பதிலளிநீக்கு
 37. //பூனை, நாய், குதிரை போன்றவைதான் ஆவிகளின் இருப்பை முதலில் உணருமாம். சங்கடமாக அசையுமாம்.//

  நல்லவேளை நான் ஆவியோ பிசாசோ இல்லை :) என்ன பார்த்தா நாய் பூனைகள் எல்லாம் சந்தோஷத்தோடதான் அசையும் :)

  //சில தனிமை கணங்களில் யாரோ உடன் இருப்பது போல, யாரோ கடந்தது போல உணர்ந்திருக்கிறீர்களா?//
  ங்கே ஞே ???
  இதுக்குதான் நான் தனியாவே இருந்ததுமில்லை இருப்பதுமில்லை

  பதிலளிநீக்கு
 38. //நேக்கு ஒரே ஷை ஷையா வருதே.. இங்கின தனியே நிண்டு பேச:) இருப்பினும் விடமாட்டேன்ன் அதிராவோ கொக்கோ?:)..//

  ஷூ ஷு ஷூ காக்கா ஷூ

  பதிலளிநீக்கு
 39. அந்த படத்துக்கு கவிதை கதை ரெண்டையும் எழுதக்கூடியவர் அவர்தான் அவரேதான் :)
  சீக்கிரம் எழுதுங்க நெல்லைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 40. முதல் வருகைக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 41. வருக முனைவர் ஜம்புலிங்கம் ஐயா... நன்றி.

  பதிலளிநீக்கு
 42. வாங்க கீதா அக்கா...

  //ஆவி எல்லாம் நிஜம்மாவே இருக்குனு நம்பறவங்களுக்குத் தான் அப்படி எல்லாம் தெரியும்.//

  சரி, உங்களுக்கு எப்படி?!! அந்த வரி முக நூலில் பகிர்ந்து! ஏகாந்தன் ஸார் கவிதையை பாராட்டியதற்கு நன்றி. நெல்லைத்தமிழன் மட்டுமில்லை, கவிதை நீங்க கூட எழுதலாம். முன்னர் பகிர்ந்த ஜெ ஓவியம் வேறு என்று நினைக்கிறேன்! கண்ணீர் விஷயம் முன்னர் எங்கள் பிளாக்கில், பின்னர் முக நூலிலும் வந்தது!!

  பதிலளிநீக்கு
 43. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். கருத்துக்கும், வாக்குக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 44. வாங்க டிடி,

  //உணர்ந்திருக்கிறேன்...//

  அதைபற்றிச் சொல்லுங்களேன். மற்ற மூன்று கருத்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. வாங்க நெல்லை...

  ஏகாந்தன் ஸார் கவிதை பற்றிய கருத்துக்கு நன்றி. காக்கையை நாம் உபயோகப்படுத்துகிறோமோ? பாலகுமாரனோ யாரோ ஒன்று எழுதியிருந்த நினைவு. ஏன் காக்கைக்கு சோறிடுகிறார்கள் என்றால், உணவில் விஷம் வைத்திருக்கிறதா என்று சோதிக்கவாம்!

  //தனியாக இருக்கும்போது தவறு செய்யும்போது //

  உங்கள்த அனுபவத்தைக் கொஞ்சம் எடுத்து விடுவதுதானே? தவறு செய்யும்போதா? ஆ? அதென்னது? கஞ்சம் (புளி போட்டு) விளக்குங்கள்!

  //கண்ணீரோடு உள்ள படங்கள் அருமை.//

  அப்போ கருத்து அவ்வளவு சுகமில்லையா?!!!

  //ஜெ.வின் பெண்கள் படத்தை ரசிக்காதவர் யார்? //

  அதெல்லாம் ஓகே, கவிதை? கவிதை?

  பதிலளிநீக்கு
 46. நன்றி நண்பர் பிரசாத்.

  //காக்காத புடிக்கதான் நிறைய மனிதருக்கு பிடிக்கும்...//

  ஆமாம்... ஆமாம்...!!

  பதிலளிநீக்கு
 47. வாங்க கோமதி அரசு மேடம்...


  நன்றி. ஏகாந்தன் ஸார் கை(மன)வண்னணம். காக்கை சொல்லும் / உணர்த்தும் தகவல்கள் சுவாரஸ்யம்.

  //தனியாக இருக்கும் போது சில சமயம் உணர்ந்து இருக்கிறேன் கடந்து போவது போல்.//

  அந்த அனுபவத்தைத்தான் பகிருங்களேன்... ஒரு தொடர் போலவே போட்டு விடலாம் போலவே... எண்களின் பழைய அமானுஷ்ய அனுபவங்கள் படித்திருக்கிறீர்கள்தானே?

  //நினைத்தது நடக்கும்
  கேட்டது கிடைக்கும்
  இமையின் முடியால்​.........
  ............................//​

  ஓ... கவிதையை இங்கேயே வடித்து விட்டீர்களா? நன்று, நன்றி!

  பதிலளிநீக்கு
 48. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 49. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி... ஜன்னலில் வந்தமரும் காக்கை பற்றிய உங்கள் எண்ணம் நெகிழ்வு. எனக்கும் சில காக்கை நண்பர்கள் உண்டு. நேற்று கூட வாசல் வந்து தேடிச் என்றது. அதே சமயம் கூடு கட்டியபின், மொட்டை மாடி செல்லும்போது தலையில் தட்டவும் அல்லது தாழ்வாகத் தலை அருகே பறந்து பயமுறுத்தவும் தவறுவதில்லை!

  பதிலளிநீக்கு
 50. வாங்க துரை செல்வராஜூ ஸார்..

  மீள் வருகைக்கும், விருப்பத்தை நிறைவேற்றி வைத்திருப்பமைக்கும் நன்றிகள்.

  //அழகா இருந்தால் ஆபத்து தான்.. //

  சரியாச் சொன்னீங்க...

  //க.கேர்:- அப்படியே போகலைனாலும் நாங்க புடுங்கிடுவோமே!..//

  அதானே? அதையே வேறு வார்த்தையில் சொல்வதுதான் அந்த ஜோக்கின் நோக்கமும்!!!


  //ஆவிகளையும் பேய்களையும் நல்லவர்களால் உணரமுடியும்..//


  தீயவர்களும் பயமுறுத்த உபயோகிக்கிறார்களே... சினிக்குமாக்காரங்களுக்கு கதை உபாயம் செய்யும் வள்ளல் ஆவிகள்!

  //இதற்கும் அதற்கும் Miss தான் காரணமா!?..//

  ஆமாம்... :))))

  //இந்தப் படம் எங்களுக்காக இல்லையா!.. அப்போ இன்னொரு கவிதை வேண்டாமா?..//

  என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? நெல்லையைத் சொன்னாலும் எல்லோரையுமே எழுதக் கேட்டிருக்கிறேன்... என் மெயில் ஐ டிக்கு அனுப்பலாம்!

  //திரு. ஏகாந்தன் அவர்களுடைய கவிதை அழகு..//

  நன்றி ஸார்.

  பதிலளிநீக்கு
 51. வாங்க அதிரடி அதிரா...

  பறவைகளும்கா, நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகளும் மனிதரை நம்பி வாழ்கின்றன. ஆனால் மனிதன் தன் சுயநலத்துக்கு அவற்றைப் பலிகொடுக்கத் தயங்குவதில்லை! க்கைக்கு மொழி பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்து அபாரம். நானும் எங்கோ படித்திருக்கிறேன்.

  //நல்ல அம்மா.. நல்ல கவலை:)..இது யாராக இருக்கும் என ஓசிச்சு:)//

  ஆராக்கும் அது? என் ஆவல் பெருகுதே....!!!

  //இதுக்கு குழையடி வைத்தியம்//

  இதற்குக் குழை சாதம் சாப்பிடலாமா?

  பதிலளிநீக்கு
 52. நன்றி பரிவை குமார். நீங்களும் எழுதலாமே...

  பதிலளிநீக்கு
 53. நன்றி ராமலக்ஷ்மி. கருத்துகளை ஒரு வரியில் சுருக்கி விட்டீர்கள்!

  //ஓவியத்துக்கான கவிதைக்குக் காத்திருக்கிறோம்.//

  ஓவியத்துக்குக்கவிதை நான் எழுதப்போவதில்லை என்று பொருள்!

  பதிலளிநீக்கு
 54. அதிரா...

  //ஹையோ இது செக்கரட்டறிக்கு சோட் நேம்//

  நானே கேட்கவேண்டும் என்றிருந்தேன் ஏஞ்சல் காணோமே என்று. வந்து விட்டார்!

  பதிலளிநீக்கு
 55. வாங்க ஜி எம் பி ஸார்...

  //தவறு செய்பவருக்கு அந்தமாதிரி எண்ணம் வரலாம்//


  தனிமை கணங்கள் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் போலும். அமானுஷ்யமாகஉணர்ந்திருக்கிறீர்களா என்று கேட்டேன்!

  //கவிதை எழுத மனம் வரவில்லை //

  ஏன் ஸார்? நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 56. காக்கையின் பாட்டுக்கும் கனிவோடு இடமளித்த ஸ்ரீராமுக்கு நன்றி
  பாட்டைக் கேட்டவர்கள், ரசித்தவர்கள், பின்னூட்டியவர்கள் என அனைவருக்கும் நன்றி ! நன்றி !

  இனி அடுத்த ஐட்டங்கள் பற்றி:

  2) கஸ்டமர் கேர், கஷ்டம், கஷ்டம் என்றாகிவிட்ட நாட்டினில் நாம் ஜோக்கடித்து சமாளிக்கவேண்டியதுதான்
  3) ஆவிகள் சுற்றாத நாடில்லை. அதற்கு எங்கும் போவதற்கு விசா தேவையில்லை! லண்டன் மாநகரத்திலேயே ‘haunted houses’ என ’அறிவிக்கப்பட்ட’ வீடுகள், மாளிகைகள் ஏகத்துக்கும் உள்ளன என்பது நம்மவர்களில் பலருக்குத் தெரியாது (-அதிரா கவனிக்க!).
  நாய், குதிரை இவற்றின் அமானுஷ்ய அறிவு பற்றிப் படித்துள்ளேன். மூன்றாம் ஜாமத்தில் நாய்களின் குரைப்பு pattern-ஐ நான் கவனித்து ஆச்சரியப்பட்டதுண்டு.(பூனை எங்கிருந்து வந்தது இதில்?)
  சில சமயங்களில் ஏதோ நிழலுருவம்போல் ஒன்று சட்டென மறைந்ததாக உணர்ந்திருக்கிறேன். இது பயம் சம்பந்தப்பட்டதல்ல என்பதனை நன்கறிவேன்.

  4) இழப்பதும், தேடுவதும், ஏங்குவதுமே வாழ்க்கை.

  5) ஜெயராஜ் ஓவியம் – அடுத்தவாரம் எத்தகைய கவிதைகளை அழைத்துவரும் வருமெனப் பார்ப்போம்..

  பதிலளிநீக்கு
 57. @அதிரா

  //ஆனா அவர் ரோசக்காரர்:) நிட்சயம் எழுதுவார் பாருங்கோ//

  காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

  //கவிதை எழுத வராது.. அது எப்பவாவது சட்டுப் பட்டென உதிக்கும்.//

  நோட் செய்து எழுதி அனுப்புங்கள். காத்திருக்கிறேன்!

  //கவிதை எழுதுவோர்ர்.. பேச்சு வழக்கில எழுதுங்கோவன் பிளீஸ்ஸ்:).//

  கவலையே வேண்டாம்.. நான் வசனத்தைத்தான் மடக்கி மடக்கிப் போட்டு கவிதை என்று உட்டாலக்கடி செய்து வருகிறேன். தைரியமாக எழுதுங்கள்.

  //இது “குரோம்பேட்டைக் குசும்பனின் குசும்பை விட ஓவர்க் குசும்பா இருக்கே:)”

  கு கு இதை கவனிக்கவில்லை போலும். வலைப்பக்கம் எப்போதாவதுதான் வருவார் போல!

  பதிலளிநீக்கு
 58. வாங்க ஏஞ்சலின்.. நலம்தானே?

  காக்கைகளை நீங்களும் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா. உங்கள் பாராட்டு ஏகாந்தன் ஸாருக்கு சென்று சேரும்.

  //@ athiraa அந்த லிங்க்கில் உங்க சமையல் குறிப்பு இல்லை னு சத்தியம் பண்ணுங்க அப்போதான் நான் லிங்க்கை திறப்பேன்//

  ஹா.... ஹா... ஹா....


  //கண்ணீர் கவிதைக்கு எங்க தலைவி பியூட்டி ஓவியா படத்தை போடாமல் விட்டதுக்கு //

  அடடே.. எனக்குத் தோன்றாமல் போனதே...


  //சீக்கிரம் எழுதுங்க நெல்லைத்தமிழன்//

  சீக்கிரம்... சீக்கிரம்!

  பதிலளிநீக்கு
 59. வாங்க ஏகாந்தன் ஸார்.. காக்கைக் கவிதைக்கு நன்றி.

  பூனை நாய் குதிரை பற்றி எல்லாம் ஒரு புத்தகத்தில் படித்தேன்.

  //லண்டன் மாநகரத்திலேயே ‘haunted houses’ என ’அறிவிக்கப்பட்ட’ வீடுகள், மாளிகைகள் ஏகத்துக்கும் உள்ளன//

  இதையும்அ படித்தேன்.

  அமானுஷ்ய அனுபவம் இருந்தால் எழுதி அனுப்புங்களேன். ஜெ ஓவியத்துக்கு உங்களிடமிருந்து கவிதை வருமா?

  பதிலளிநீக்கு
 60. காக்கைக் கவிதை - சிறப்பு.

  பேசும்போது காசு போகுமா? நல்ல சந்தேகம் தான்! காசு குறைந்தாலும் குறையலாம்!

  பேய் - சில பேய்க்கதைகள் - நிகழ்வுகள் நினைவில்! :)

  கண்ணீர் மொழி - ரசித்தேன்!

  ஜெ படம் - எனக்கு அ-சீ படங்கள் ரொம்பவே பிடிக்கும்!

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 61. @நெல்லைத்தமிழன் : /அவருடைய பிம்பத்தையும் தாண்டி அவர் வெற்றிபெற்றது, அப்புசாமி சீதாப்பாட்டி தொடர்கதையில் அ., சீ படங்கள்../

  உண்மை. ஜெயராஜைத் தவிர வேறுயாரும் அப்புசாமி/சீதாப்பாட்டியை அப்படி வரைந்து தள்ளியிருக்கமுடியாது. இரண்டு கேரக்டர்களுக்கும் உருவம் கொடுத்து மனதில் பதியவைத்தவர். அபாரம்.

  @ஸ்ரீராம்: /ஜெ ஓவியத்துக்கு உங்களிடமிருந்து கவிதை வருமா?/

  சின்னதாக முயற்சித்துப் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 62. //Angelin said...
  @ athiraa அந்த லிங்க்கில் உங்க சமையல் குறிப்பு இல்லை னு சத்தியம் பண்ணுங்க அப்போதான் நான் லிங்க்கை திறப்பேன்///

  உப்பூடிச் சொன்னால் எப்பூடி?:).. இனித்தான் அடிக்கடி என் சமையல் மழையில் நனைந்து குண்டாகிடப்போறீங்க:)..

  ஸ்ரீராம் இந்த பிரித்தானிய ஆவிக்கதைகள் என்னிடம் கொஞ்சம் இருக்கு:).. ஒரு போஸ்ட்டாகப் போட்டு எல்லோரையும் பயமுறுத்துகிறேன்:)..

  //ஏகாந்தன் Aekaanthan !
  3) ஆவிகள் சுற்றாத நாடில்லை. அதற்கு எங்கும் போவதற்கு விசா தேவையில்லை! லண்டன் மாநகரத்திலேயே ‘haunted houses’ என ’அறிவிக்கப்பட்ட’ வீடுகள், மாளிகைகள் ஏகத்துக்கும் உள்ளன என்பது நம்மவர்களில் பலருக்குத் தெரியாது (-அதிரா கவனிக்க!).///

  கவனிச்சிட்டேன்ன்ன்:) ஹா ஹா ஹா லண்டன், பரிஸ், ரொரண்டோ என பல ஹூண்டட் கவுஸ்களுக்குள் நுழைந்து வெளியே ஒரு தெகிறிய:)சாலியாக வந்தேனாக்கும்:).. 90 வீதமும் என் கண்ணை மூடிவிடுவேன் என்பது எனக்கு மட்டுமே தெறி:)ந்த உண்மை:)..

  பதிலளிநீக்கு
 63. // லண்டன், பரிஸ், ரொரண்டோ என பல ஹூண்டட் கவுஸ்களுக்குள் நுழைந்து வெளியே ஒரு தெகிறிய:)சாலியாக வந்தேனாக்கும்:)//

  ஏகாந்தன் சொன்னது எங்களைப் போல் சாதாரண ஆட்களுக்கு. நான் கேள்விப்பட்டது, அங்கெல்லாம் அதிரா சென்றுவந்தபின் அவைகள் சாதாரண வீடுகளாக ஆகிவிட்டதாம். அதற்கப்புறம் ஒரு ஒஇசிட்டர்கள்கூடக் காணோமாம். (சிலரைக் கண்டு ஆவிகள் பயந்து ஓடிவிட்டனவா என்பது தெரியாது)

  பதிலளிநீக்கு
 64. //நெல்லைத் தமிழன் said...

  ஏகாந்தன் சொன்னது எங்களைப் போல் சாதாரண ஆட்களுக்கு. நான் கேள்விப்பட்டது, அங்கெல்லாம் அதிரா சென்றுவந்தபின் அவைகள் சாதாரண வீடுகளாக ஆகிவிட்டதாம்///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதோ போகிறேன்ன்ன்.. எங்கள்புளொக் ஒபிஸ் இன் முன்னால் இருக்கும் அபாய மணியை அடிக்கிறேன் நேக்கு நீதி தேவை:)... ஒரு சுவீட் 16 ஐ இப்பூடி ஒரு பபுளிக்குப் பிளேசில் வைத்து மானபங்கப்படுத்திய நெல்லைத்தமிழனை... கொஞ்சமும் கண்டிக்காமல் இருக்கும் ஸ்ரீராமுக்கு என் படுபயங்கரமான கண்டங்கள்...:)..

  எனக்கு நீதி டேவை:)... நீதி கிடைக்கும்வரை “என் ஆத்மா” சாந்தியை ..ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. சாந்தி அடையாது(இது வேற சாந்தி) ஸ்ரீராம் வீட்டு மொட்டைமாடியையே சுற்றிச்சுற்றி வரும் என்பதனை, அஞ்சுவின் அந்த மீன் தொட்டி மேல் அடிச்ச்ச்சுச் சத்தியம் செய்கிறேன்:)..

  ஊசிக்குறிப்பு: தொடர்ந்து ஆவிக்கதைகளாகப் போட்டு.. நெல்லைத்தமிழனை பிரைவேட் ரூமிலிருந்து.. செயார் (share) ரூமுக்கு மாத்தாமல் விடமாட்டேன்ன்ன்ன்ன்:).. இது நடக்காட்டில் ... என்னைப் பூஸ் என்று கூப்பிடுங்கோ:)

  பதிலளிநீக்கு
 65. //அஞ்சுவின் அந்த மீன் தொட்டி மேல் அடிச்ச்ச்சுச் சத்தியம் செய்கிறேன்:)..//


  கர்ர்ர்ர் குழந்தை ஹாப்பி ஹாப்பியா நீந்திட்டிருக்கான் டோன்ட் டிஸ்டர்ப் ஹிம் :)

  பதிலளிநீக்கு
 66. ஏகாந்தன் சார் சூப்பர் காக்காய்...பறக்க விட்டிருக்கிறீர்கள்...அதான் எங்கள் தளத்தில் பின்னூட்டத்திலும் எல்லா இடங்களிலும் காக்காய் பறக்கிறது என்று கொடுத்தீர்கள் போலும்..

  ரொம்ப அழகாக எழுதியுள்ளீர்கள். ஆனால் ஏன் சோகம் காக்காய்க்கு??!! காக்காய் மிக மிக அருமைஅயன பறவை!!

  தாயின் கவலையா அது??!! ஹாஹாஹா கொடுமை...

  ஆவி அமானுஷ்யம் நம்பிக்கை இல்லை...(கீதா: நானும் நம்புவதில்லை ஆனால் தனியாக இருக்கும் போது நீங்கள்சொல்லியிருப்பது போல் யாரோ டக்கென்று க்ராஸ் ஆவது போல் தோன்றியுள்ளது...ஆனால் பயம் எல்லாம் இல்லை....)

  முகநூல் பதிவை மிகவும் ரசித்தோம்...(கண்ணீர் அனுஷ்காவினுடையதா??!!! ஹிஹிஹிஹிஹ் - கீதா)

  கீதா: நெல்லைத்தமிழன் ஜெ யின் படத்திற்குக் கவிதை எழுதிவிடுவார்...கதையும் கூட எழுதிவிடுவார்!! ஏகாந்தன் சார் அதிரா துரை செல்வராஜு சகோ என்று பலர் இருக்கின்றனரே!! கவிதை எழுத...காத்திருக்கிறோம்...

  பதிலளிநீக்கு
 67. @துளசிதரன் தில்லையகத்து://ஏகாந்தன் சார் சூப்பர் காக்காய்...பறக்க விட்டிருக்கிறீர்கள்...அதான் எங்கள் தளத்தில் பின்னூட்டத்திலும் எல்லா இடங்களிலும் காக்காய் பறக்கிறது என்று கொடுத்தீர்கள் போலும்..//

  நன்றிகள் பல. இப்போதுதான் உங்களது பின்னூட்டத்தை கவனித்தேன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!