ஜெ ஓவியத்துக்குக் கவிதை கேட்டிருந்ததில் இரண்டு கவிதை வந்திருக்கிறது. ஒன்று இங்கே, இன்று. இன்னொன்று அடுத்த வாரம்! நெல்லைத்தமிழன் நான் கவிஞனில்லை, நல்ல ரசிகன் என்கிறார்.. ஆனாலும் ஒரு கவிதை முயற்சிக்கலாம் என்பது எங்கள் அபிப்ராயம்!
ஆர்வத்துடன் உடனே க(வி)தை அனுப்பியுள்ள அதிராவுக்கு நன்றி.
முன்னுரை:-
எதுக்கு இப்பூடி விரட்டீனம்?:)
படம் பார்த்துக் கவிதை சொல்ல வேண்டும் என்பது விதி:).. நான் கவிதைபோல - கதை சொல்லியிருக்கிறேன்:)... அஜீஸ் பண்ணிடுங்கோ..,வளர்ந்துவரும் வருங்காலக் கவிப்பேரசு கவிமாமணியை [அது நாந்தேன்] வாழ்த்தி ஊக்கம் அளிங்கோ:).. நன்றி வணக்கம். [ஆரம்பத்திலயே இப்பூடிச் சொல்லி வாயடைச்சிடோணும், இல்லை எனில் கல்லு கத்தி எல்லாம் எடுப்பினம்.. எங்கிட்டயேவா? நான் “வருமுன் காப்போனாக்கும்:)” [கரீட்டுத்தானே?:)] ஹா ஹா ஹா:).
கண்ணுக்குள் 100 நிலவா.. இது ஒரு கனவா..
நண்பனே!!
இதற்கு மேல் எனக்குச்
சொல்லத் தெரியவில்லை
எப்படியெல்லாமோ
என் காதலை வெளிப்படுத்தினேன்
ஆனா அவை பாறையில் மோதும்
நீராகத் திரும்புகின்றனவே!!
நம் நட்பு புனிதமானதுதான் - ஆனால்
பாழாய்ப்போன எனக்கு
நண்பன் எனும் பெயரால்
நீ காட்டும் அதீத பாசம்
நட்பைத்தாண்டிக்
காதல் பூக்க வைத்து விட்டதே:(..
காதலுக்கு வரையறை இல்லையே
அது எப்போ எங்கு யார்மீதும்
வரலாமே... நீ - என்
பள்ளிக்கால இனிய தோழன்
என் மீது தூசி விழுந்தாலும்
பொங்கி எழும் பாசக்காரன்
உன் மீது காதல் வந்ததில்
என்ன தப்பு?..
என் காதலை
எப்படி வெளிப்படுத்தினாலும்
உன்னால் அதை உணர
முடியவில்லையே
அல்லது உணராதது
போல் நடிக்கிறாயா?..
நம் குடும்பங்களுக்கு ஊருக்கு
உலகுக்கு முன்னால்
நல்ல நண்பர்களாக
இதுவரை இருந்து விட்டோம்
அதனால் நேரடியாக காதலை - உன்னிடம்
சொல்ல முடியவில்லை என்னால்
என்னில் ஏற்படும்
எள்ளளவு மாற்றத்தைக் கூட
துல்லியமாகக் கண்டுபிடிக்கும் உனக்கு
என் காதலை மட்டும்
கண்டுபிடிக்க முடியவில்லையா?
அல்லது என்னைப்போல்
நட்பை எப்படிக் காதலாக்குவது
எனத் தவிக்கிறாயா?..
இதுக்கு மேல் என்னால் முடியாது
இதுதான் நான் உனக்குத் தரும்
கடசி வாய்ப்பு - கண்ணில்
தூசி என்றேன் பொய்யாக
சொல்லி வாய் மூடமுன்
கைக்குட்டையால் துடைக்கிறாயே
இப்போதாவது என் கண்ணில் தெரியும்
காதல் நிலவைக் காண்பாயா?..
இல்லை எனில்..
இன்றுதான் நீ என்
கண்ணைப் பார்க்கும் கடைசி நாள்
என் பிரிவிலாவது எனக்குள் இருக்கும்
காதலைப் புரிந்து
தேடி வருவாய் எனும்
நம்பிக்கையோடு
பிரிந்து செல்லப்போகிறேன்:(
[உன் கண்ணில் நீர் வடிந்தால்.. என் நெஞ்சில்.. உதிரம் கொட்டுதடி..டி..டி..டி.. அது சிட்டுவேஷன் சோங் போகுது:)]
[இவ் இனிய கவிதையை உங்களுக்காக எழுதி வளங்கியிருப்பவர்.. தமிழ் வித்துவான், கவிப்பேரரசு, கவி மாமணி, தமிழ்ப் புலவர், கதாசிரியர் அதிரா:).]
ஊசிக்குறிப்பு:
இக்கவிதை எங்கள் புளொக்கில் வெளிவந்தபின், ஒரு வாரமா நான் எங்கேயும் போகல்ல:) ( அப்படி பயப்படும்படி இல்லை அதிரா.. தைரியமா வெளில வாங்கோ... ஸ்ரீராம் ) வீட்டுக்குள்ளயே இருந்தேன், பின்னர் அஞ்சு வீட்டுக்குப் போகலாம் எனப் போனேன், போய் திரும்பும் வழியில் நகைக்கடை ஒன்று இருந்திச்சு, மோதிரம் அளவு எடுக்கலாமே என உள்ளே போனேன்.. அங்கு ஒரு சின்னப் பையன் என்னைப் பார்த்திட்டான், அவன் ஓடிப்போய் ஊருக்குள் சொல்லிட்டான்...
நா வெளிய வாறேன், ஒரு முன்ன்ன்ன்னூஊஊறு பேர் வரையில கூடி இருந்தாங்க என்னைப் பார்க்க.. அப்போதான் எனக்குத் தெரிஞ்சிச்சு நான் ஒரு “செலிபிரட்டி” ( எனக்கு அவ்வை பிராட்டிதான் தெரியும். அது யாரு செலி பிராட்டி? - ஸ்ரீராம் ) ஆகிட்டேன் என.. திரும்பி வரும்போதே ஸ்ரீராமிடமிருந்து ஃபோன் கோல் வந்துது .. இன்னொரு தடவை கவிதை எழுதுங்கோ என:). ஹா ஹா ஹா இதுக்கு மேல முடியல்ல முருகா.. நன்றி வணக்கம்
__()__
இங்கேயும் சோகமா.. நிச்சயம் புரிந்து கொள்வாள்..
பதிலளிநீக்குகாதல் வாழ்க..
>>> இன்னொரு கவிதை எழுதுங்கோ...
பதிலளிநீக்கு<<<
ஸ்ரீராம் அப்படியா கேட்டாரு!?..
எனக்கென்னமோ - இனிமேலுக்கும் கவிதை எழுதுவிங்களா...ந்னு கேட்ட மாதிரி...ல்லா இருந்துச்சு..
எதுக்கும் காது பத்திரம்!?...
அருமை
பதிலளிநீக்குதம+1
காதல் கவிதையெல்லாம் ஓகேதான்.
பதிலளிநீக்குபடத்தைப் பார்த்தால் தாவணி கட்டிய சின்னப் பெண்ணாகத் தெரியுது. 18 வயசு ஆனமாதிரிகூடத் தெரியலை. அதுக்குள்ள காதல் ஸ்டோரியை இழுத்து காதல் தோல்வி வரை கொண்டுவந்துட்டீங்க. வாழ்க உங்கள் சமூக அக்கறை. அந்தப் படத்தைப் பார்த்த உடனே எனக்கு, அவன் தன் தங்கையின் கன்னத்தில் உள்ள பவுடரைச் சரிபண்ணுவதாகத் தோன்றியது.
நீங்களே "கவிதாமாமாயினி" "கவிதா மாய மோகினி" ன்னு பட்டம் கொடுத்துக்கிட்டூங்க நம்ம வைரமுத்து தனக்கு கவிப்பேரரசு ன்னு பட்டம் கொடுத்துக்கிட்ட மாதிரி. அதுனால அவரைப்போல் நீங்களும் புகழ் பெற்றுவிடுவீர்கள். வாழ்த்துக்கள்.
ஹலோ ஏஞ்சல் ஒரு சின்ன உதவி இந்த அதிரா தேம்ஸ் நதியில் விழுறாங்களோ இல்லையோ ப்ளிஸ் அவங்களை அதில் தள்ளிவிட்டுடுங்கோ அப்படி செஞ்சா உங்க வெயிட்டுக்கு ஏற்ப தங்க கட்டிதாரேன் ப்ளிஸ் ப்ளிஸ் ப்ளிஸ்
பதிலளிநீக்குதலைப்பை பார்த்தது அதிரா ஏதோ கதை எழுதி இருக்கிறார்கல் என்று நினைத்து வந்தேன் சரி வந்ததுதான் வந்தேன் முதலில் ஸ்ரீராம் கவிதை கவிதை என்று எழுதி இருந்ததை பார்த்தது அப்படியே திரும்பி பார்க்காமல் ஒடி இருக்க வேண்டியதுதான் ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே அதை என்னை துரத்தி துரத்தி வந்து இந்த கவிதையை படிக்க வைத்துவிட்டது ஹும்ம்ம்ம்ம் தம +1
பதிலளிநீக்குரசிக்கும்படி உள்ளது.அருமை.
பதிலளிநீக்குகவிதா மாய மோகினி....யா!...
பதிலளிநீக்குஉங்கள் கவிதை மிக அருமை அதிரா!
பதிலளிநீக்கு"நெல்லைத்தமிழன் நான் கவிஞனில்லை, நல்ல ரசிகன் என்கிறார்.. ஆனாலும் ஒரு கவிதை முயற்சிக்கலாம் என்பது எங்கள் அபிப்ராயம்! "
பதிலளிநீக்குஸ்ரீராம் - சென்ற வியாழனிலிருந்து இன்னும் நான் Relaxஆக வில்லை. அதனால்தான் என்னால் அனுப்பமுடியவில்லை. கவிதை-நிச்சயம் சாத்தியமில்லை. எனக்கு சீராளன் என்றொரு பதிவர், எங்காவது பின்னூட்டமிடும்போது கவிதைகள் எழுதுவார் (மரபு, சந்தம்)-அது எனக்குப் பிடிக்கும். பார்க்கிறேன், அவருடையது எங்காவது அகப்பட்டு அதையொட்டி எழுதமுடியுமா என்று. அனுப்பமுடியாததற்கு வருந்துகிறேன் (உடல்/மன நிலைதான்). தவறாக நினைக்கவேண்டா. உங்கள் எண்ணத்தினால்தான், நான் கதையே எழுத ஆரம்பித்தேன்.. சொல்லமுடியாது... கவிதை உலகிற்கு போறாத வேளை வந்தால், நானும் கவிதை எழுதுவேனோ என்னவோ.
அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
ஒரு வேலையா அவசரமா ட்ராவலிங் ..இருங்க ஈவ்னிங் வரேன் ..
பதிலளிநீக்குநல்லவேளையா என்னைக் கேட்கலை ஶ்ரீராம்! ஹிஹிஹி, என்றாலும் இப்படி மடக்கி மடக்கி எழுதறது தான் கவிதைன்னா நானும் நிறையவே எழுதி இருக்கேனாக்கும்!
பதிலளிநீக்குஅந்தப் பெண் கண்ணில் தூசி விழுந்து அதை அவள் காதலன் ஊதுகிறாப்போல் பாவனை பண்ணிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் இடுகிறான். :)
//கண்(ணில்) தெரியாத காதல் - அதிரா
பதிலளிநீக்கு//
ஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்ததும் மீ ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:)).. மாட்டு வண்டிலில் ஏறி, மிகுதி கால் நடையா நடந்து.. பஸ் புடிச்சு.. ரெயின் எடுத்து இங்கு வருவதற்குள் ரொம்ப லேட்டாகிட்டுது... இன்று கொஞ்சம் பிஸியான நாளாகவே இருக்குது எனக்கு.
// ( அப்படி பயப்படும்படி இல்லை அதிரா.. தைரியமா வெளில வாங்கோ... ஸ்ரீராம் ) // அப்பூடியா சொல்றீங்க.. நெம்ம்ம்ம்பி வெளில வாறேன்ன்ன்.. கல்லெறி விழுந்தால் ஹொஸ்பிட்டல் செலவு ஸ்ரீராம் பொறுப்பெடுக்கோணும் சொல்லிட்டேன்ன்:)..
// ஜெ ஓவியத்துக்குக் கவிதை கேட்டிருந்ததில் இரண்டு கவிதை வந்திருக்கிறது. ஒன்று இங்கே, இன்று. இன்னொன்று அடுத்த வாரம்! ///
பதிலளிநீக்குஇப்போ தெரியுதோ ஸ்ரீராம்? நான் என்னுடையதை தனியே வெளியிட்டால் தான் இங்கு மக்கள்ஸ்ஸ்ஸ் க்கு:) திட்ட வசதியாக இருக்கும் ஹா ஹா ஹா.. இல்லை இன்னும் யாரோடும் சேர்த்துப் போட்டால்ல்.. சபை நாகரீகம் கருதி.. அதிராவின் (கதை:)) கவிதையைத் திட்டாமல் விட்டிடுவினம்:) அது நாட்டுக்கு நல்லதில்லையே:)) ஹா ஹாஅ ஹா:)..
// நெல்லைத்தமிழன் நான் கவிஞனில்லை, நல்ல ரசிகன் என்கிறார்.. ஆனாலும் ஒரு கவிதை முயற்சிக்கலாம் என்பது எங்கள் அபிப்ராயம்! //
அவர் நல்லபடி எழுத ஆரம்பிச்சிருப்பார்ர்.. ஆனா இன்று என் கவிதையையும் எனக்கு வழங்கவிருக்கும் பட்டங்களையும்:) பார்த்து அதிர்ச்சியில் கொஞ்சம் பின் வாங்கியிருப்பார் .. இவ்ளோ அயகா இருக்கே அதிராவின் கவிதை.. இதில் நான் எப்பூடி எழுதுவது என நினைச்சு:))[{எதுக்கு இப்போ முறைக்கிறீங்க?:) நேக்கு உண்மை பேசித்தான் பழக்கம்:)}] ஹா ஹா ஹா இட்ஸ் ஓகே நெல்லைத்தமிழன்.. அடுத்த வியாளன் உங்கள் கவிதையையும் எதிர்பார்க்கிறோம்ம்.. டு நொட் ஏமாத்திங்:))
//துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குஇங்கேயும் சோகமா.. நிச்சயம் புரிந்து கொள்வாள்..
காதல் வாழ்க..//
வாங்கோ துரை அண்ணன்.. அது ஸ்ரீராமின் அந்தப் படம் மனதில் நின்றது, எப்படி கவிதையை ஆரம்பிப்பது என நினைத்தபடி இருந்தவேளை.. எனக்கு எப்பவும் ரேடியோ கேட்கும் பழக்கமுண்டு.. அப்போ ரேடியோவில் கண்ணுக்குள் 100 நிலவா எனும் பாட்டு போய்ச்சுது.. உடனே காதல் கவிதையாக்கிட்டேன்.. மிக்க நன்றி.
///துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்கு>>> இன்னொரு கவிதை எழுதுங்கோ...
<<<
ஸ்ரீராம் அப்படியா கேட்டாரு!?../////
ஹா ஹா ஹா ஷொக்ட் ஆகிடாதீங்க .. கடவுளே என் கவிதையால இங்கு பலருக்கு ஹார்ட் அட்டாக் வந்திடப்போகுதே.. எங்கள்புளொக் ல இன்சூரன்ஸ் எடுத்திருக்கினமோ தெரியேல்லையே:))..
///எனக்கென்னமோ - இனிமேலுக்கும் கவிதை எழுதுவிங்களா...ந்னு கேட்ட மாதிரி...ல்லா இருந்துச்சு..
எதுக்கும் காது பத்திரம்!?...//
ஹா ஹா ஹா அப்பூடியா சொல்றீங்க.. இது புரியாமல் மீ அவசரப்பட்டு அடுத்த கவிதைக்குப் பிள்ளையார் சுழி போடப்பார்த்தேன்ன்ன்:).
//கரந்தை ஜெயக்குமார் said...
பதிலளிநீக்குஅருமை
தம+1//
வாங்கோ மிக்க நன்றி.
//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குகாதல் கவிதையெல்லாம் ஓகேதான். //
வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. நன்றி..
///படத்தைப் பார்த்தால் தாவணி கட்டிய சின்னப் பெண்ணாகத் தெரியுது. 18 வயசு ஆனமாதிரிகூடத் தெரியலை. அதுக்குள்ள காதல் ஸ்டோரியை இழுத்து காதல் தோல்வி வரை கொண்டுவந்துட்டீங்க.///
ஹா ஹா ஹா “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:)”.. இது 15 வயசிலயே ஆரம்பிச்ச நட்பு:).. இந்தக் காலத்தில குட்டி வயசிலயே காதல் மலர்ந்திடுதே.. அதனாலதானே இவ்ளோ பிரச்சனை:)..
//அக்கறை. அந்தப் படத்தைப் பார்த்த உடனே எனக்கு, அவன் தன் தங்கையின் கன்னத்தில் உள்ள பவுடரைச் சரிபண்ணுவதாகத் தோன்றியது.//
உண்மைதான், நாம் எப்படி நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அப்படியே தெரிகிறது படம்... அதுதான் ஓவியரின் திறமை:).
அருமை
பதிலளிநீக்கு@நெல்லைத் தமிழன் said...//நீங்களே "கவிதாமாமாயினி" "கவிதா மாய மோகினி" ன்னு பட்டம் கொடுத்துக்கிட்டூங்க நம்ம வைரமுத்து தனக்கு கவிப்பேரரசு ன்னு பட்டம் கொடுத்துக்கிட்ட மாதிரி. அதுனால அவரைப்போல் நீங்களும் புகழ் பெற்றுவிடுவீர்கள். வாழ்த்துக்கள்.///
பதிலளிநீக்குஹா ஹா ஹா எனக்கு வைரமுத்து அவர்களின் கவிதைகளும் பேச்சும் ரொம்பப் பிடிக்கும்.. அடிக்கடி தேடிக் கேட்பேன் யூ ரியூப்பில்.. அது அவர் தனக்கு தானே வைத்த பட்டமோ? உண்மையாவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. அவரே வைக்கும்போது அதிரா வச்சால் மட்டும் என்ன தப்பு?:).. பின்ன நமக்கு நாமே சூட்டிக்கொண்டால்தான் உண்டு:) இந்தக் காலத்தில அடுத்தவிங்களோ வந்து பட்டம் சூட்டுவினம்?:))
இருப்பினும் பட்டமளிப்பு விழா எப்போ எனக் கொஞ்சம் ஸ்ரீராமைக் கேட்டுச் சொல்லுங்கோ நெ.த.. அப்போதான் மீ ஹொலிடே எடுக்க வசதியா இருக்கும்.. ஹா...ஹா..ஹா... ஓகே ஓகே அமைதி அமைதி.. மிக்க நன்றி:).
//அது ஸ்ரீராமின் அந்தப் படம் மனதில் நின்றது//
பதிலளிநீக்குதிருத்தம். அது என் படமல்ல. யாரோ ஒருவன்!!! நான் வரைந்தும் அல்ல. ஜெ... வரைந்தது!!!!
//வைரமுத்து அவர்களின் கவிதைகளும் பேச்சும் ரொம்பப் பிடிக்கும்.//
பதிலளிநீக்குஎனக்கு அவர் கவிதை மட்டும் பிடிக்கும்.
//நல்லவேளையா என்னைக் கேட்கலை ஶ்ரீராம்! ஹிஹிஹி, என்றாலும் இப்படி மடக்கி மடக்கி எழுதறது தான் கவிதைன்னா நானும் நிறையவே எழுதி இருக்கேனாக்கும்!//
பதிலளிநீக்குகீதாக்கா... எழுதுங்களேன்...
//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குஹலோ ஏஞ்சல் ஒரு சின்ன உதவி இந்த அதிரா தேம்ஸ் நதியில் விழுறாங்களோ இல்லையோ ப்ளிஸ் அவங்களை அதில் தள்ளிவிட்டுடுங்கோ அப்படி செஞ்சா உங்க வெயிட்டுக்கு ஏற்ப தங்க கட்டிதாரேன் ப்ளிஸ் ப்ளிஸ் ப்ளிஸ்//
வாங்கோ ட்றுத் வாங்கோ:).. ஹா ஹா ஹா என் கவிபடித்த சந்தோசத்தில:) உங்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் அவசரப்பட்டிட்டீங்க ட்றுத்:))... ஏன் தெரியுமோ இப்போ 110 கிலோ தங்கத்துக்கு ரெடி பண்ணுங்கோ:)) ஹா ஹா ஹா அஞ்சுவின் வெயிட்டைச் சொன்னேன்ன்ன்ன்ன்:))..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ட்றுத் நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கை விடேல்லைப் பாருங்கோ:).. இன்று பார்த்து அஞ்சுவுக்கு.. கொஞ்சம்..... அதனால இப்பக்கம் இன்று திரும்ப வருவாவோ தெரியேலை.. மீ தப்பிச்சுட்டேன்ன்ன்ன்:))..
கெட்டகாலத்திலும் ஒரு நல்ல காலம் என இதைத்தான் சொல்லுவினமோ?:) ஹா ஹா ஹா..
///Avargal Unmaigal said...
பதிலளிநீக்குதலைப்பை பார்த்தது அதிரா ஏதோ கதை எழுதி இருக்கிறார்கல் என்று நினைத்து வந்தே//
ஹா ஹா ஹா.. முதலில் நீங்க இன்றைய நாள் எப்படி? எனும் ராசிப்பலரை செக் பண்ணிட்டு வந்திருக்கோணும்:)... அதுசரி ட்றுத்.. லீவு கிடைக்கேல்லை எனச் சொல்லிடாதீங்க... பட்டமளிப்பு விழாவுக்கு லேவு அப்பிளிக்கேஷன் போட்டு வையுங்கோ:)).. என்வலப் எடுத்து வர மறக்க வேண்டாம்ம்:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி ட்றுத்:).
//Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...
பதிலளிநீக்குரசிக்கும்படி உள்ளது.அருமை.//
வாங்கோ மிக்க மிக்க நன்றி.
///துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குகவிதா மாய மோகினி....யா!...///
ஹா ஹா ஹா துரை அண்ணன் முதேல்ல் கொமெண்ட் போடும்போது நல்லாத்தானே இருந்தார்ர்.. முழுவதும் படிச்சு முடிச்சதும் இப்பூடி ஆகிட்டாரே:)).. ஹையோ இப்போ வேப்பங்குழைக்கு எங்கின போவேன்ன் ஜாமீஈஈஈஈஈ.. அஞ்சூஊஊஊஊஊஊஉ.. கீதாஆஆஆஆஆஆ.. ஹையோ அந்தர அவசரத்துக்கு ஆரும் வரமாட்டினம்.. அதிராவைத் தேம்ஸ்ல தள்ள மட்டும் முதேல்ல்ல் ஆளா ஓடி வருவினம் கர்ர்:))..
//மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்குஉங்கள் கவிதை மிக அருமை அதிரா!//
வாங்கோ மனோ அக்கா.. நீங்க எப்பவும் நியாயத்தைத்தான் பேசுவீங்க.. மிக்க நன்றி.
நெல்லைத் தமிழன் said...// எனக்கு சீராளன் என்றொரு பதிவர், எங்காவது பின்னூட்டமிடும்போது கவிதைகள் எழுதுவார் (மரபு, சந்தம்)-அது எனக்குப் பிடிக்கும். பார்க்கிறேன், அவருடையது எங்காவது அகப்பட்டு அதையொட்டி எழுதமுடியுமா என்று.///
பதிலளிநீக்குஅச்சச்சோஓ சீராளனின் கவிதை எனக்கு ஒன்றுமே புரியாது:) ஹா ஹா ஹா அவர் இதைப் பார்த்தால் கவிதையிலயே என்னைத் திட்டுவார்ர்.. ஆனாப் பாருங்கோ. அது திட்டுவதுபோல தெரியாதெனக்கு.. ஏனெனில் எனக்குத்தான் அது புரியாதே.. ஹையோ ஹையோ..:)
நெல்லைத்தமிழன் நீங்க ஏன் அதிராவைப் பார்த்து ட்ரை பண்ணக்கூடாது?:).. ஹையோஓஓஓஓஓஓஓஒ அஞ்சூஉ பிளீஸ்ஸ் சேவ் மீ:)...
உண்மைதான்.. கேட்டவுடன் கவிதை பல நேரம் வராது, உடல் + மனம் ஒத்துழைக்கும்போது முயற்சியுங்கோ நெ. தமிழன்.. இல்லாவிட்டால் பறவாயில்லை [இது என் கருத்து மட்டுமே].
மிக்க நன்றி.
//விஜய் said...
பதிலளிநீக்குஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//
வாங்கோ விஜய்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவரைக் கொஞ்சம் பிடிச்சுக் கூட்டி வாங்கோ தேம்ஸ் கரைக்கு... என் கவிதையைப் பார்த்துத் தகவல் என்று சொன்னமைக்காக விஜய் ஐ உடனடியா பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கட்டளையிடுகிறார்.. நீதிபதி:)..
மிக்க நன்றி .. மை வச்சனீங்களோ..:).
//Angelin said...
பதிலளிநீக்குஒரு வேலையா அவசரமா ட்ராவலிங் ..இருங்க ஈவ்னிங் வரேன் ..//
வாங்கஞ்சு.. மெதுவா மெதுவா.. வெள்ளி வீடியோவுக்கு வந்தாப்போதும்:).. அப்பாடா இப்போதான் நெஞ்சில தண்ணி வந்தமாறி:) இருக்கு:)..
ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.
//Geetha Sambasivam said...
பதிலளிநீக்குநல்லவேளையா என்னைக் கேட்கலை ஶ்ரீராம்! ஹிஹிஹி, என்றாலும் இப்படி மடக்கி மடக்கி எழுதறது தான் கவிதைன்னா நானும் நிறையவே எழுதி இருக்கேனாக்கும்!//
வாங்கோ கீதாக்கா... ஸ்ஸ்ஸ்ஸ் கவிஞர்களைக் குறுக்குக் கிளவி ஹையோ கேள்வி கேய்க்கப்பூடாதாம்:) வைரமுத்து சொல்லியிருக்கிறார் எங்கோ:).. அப்போது மனதில் என்ன எழுகிறதோ அதுதான் கவிதையாம்:)..
அதுதான் கீழே ஸ்ரீராம் கேட்டிட்டாரே.. விரைவில் உங்கள் கவிதையை.. அதாவது மடக்கி மடகீஈஈஈஈஈஈ எழுதி அனுப்புங்கோ:) ஆவலோடு நாங்க வெயிட்டிங்:).
///அந்தப் பெண் கண்ணில்
தூசி விழுந்து அதை அவள்
காதலன் ஊதுகிறாப்போல்
பாவனை பண்ணிக் கொண்டு
அவள் கன்னத்தில்
முத்தம் இடுகிறான். :)///
ஹா ஹா ஹா இந்தச் சம்பவம் எப்போ நடந்துது... மிக்க நன்றி கீதாக்கா.
//Nagendra Bharathi said...
பதிலளிநீக்குஅருமை//
வாங்கோ மிக்க நன்றி.. மை வச்சனீங்கதானே?:)
//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//அது ஸ்ரீராமின் அந்தப் படம் மனதில் நின்றது//
திருத்தம். அது என் படமல்ல. யாரோ ஒருவன்!!! நான் வரைந்தும் அல்ல. ஜெ... வரைந்தது!!!!//
ஹா ஹா ஹா எங்களுக்குப் படம் போட்டுக் காட்டியது நீங்கதானெ.. அதனாலதான்:)..
//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//வைரமுத்து அவர்களின் கவிதைகளும் பேச்சும் ரொம்பப் பிடிக்கும்.//
எனக்கு அவர் கவிதை மட்டும் பிடிக்கும்.//
ஹா ஹா ஹா நானும் அறிஞ்சிருக்கிறேன்ன் அவர் அதிகம் அலட்டுவார்.. மைக்கை வாங்கினால் திரும்பக் கொடுக்க மாட்டாராம் என.. ஆனா அலட்டினாலும் .. பொறுமையாகக் கேட்டும்போது பல விசயங்கள் சொல்லுவார்ர்.. நேற்றுக்கூட மயானத்தில் வைத்து, அவரின் ஒரு பேச்சுக் கேட்டேன்ன் உண்மையில் நன்றாக இருந்தது.
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//நல்லவேளையா என்னைக் கேட்கலை ஶ்ரீராம்! ஹிஹிஹி, என்றாலும் இப்படி மடக்கி மடக்கி எழுதறது தான் கவிதைன்னா நானும் நிறையவே எழுதி இருக்கேனாக்கும்!//
கீதாக்கா... எழுதுங்களேன்...///
நானும் படு பயங்கரமாக ஆமோதிச்சு வழிமொழிகிறேன்ன்:).
/// ( எனக்கு அவ்வை பிராட்டிதான் தெரியும். அது யாரு செலி பிராட்டி? - ஸ்ரீராம் ) ///
பதிலளிநீக்குஹா ஹா ஹா நீங்க “ஆர்மி”யில் இருப்பதால்.. அவ் கடசிப்பந்தி.. யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என உங்களுக்கு நிட்சயம் தெரிஞ்சிருக்கும்:)...
அனைத்துக்கும் மியாவும் நன்றிகள் ஸ்ரீராம்.
என் சார்பாக ஒரு சிறு முயற்சி!
பதிலளிநீக்குதூசி இல்லை
கண்ணில்...
கண்ணீர்தான்.
காதலில்தான் சந்தேகம்,,
கண்ணீரிலுமா?
கண்ணுக்குள் நூறு நிலவா..
பதிலளிநீக்குஅழகான தலைப்பினால் ஆசை மேலிட
யூ-ட்யூப் பக்கம் போய்வந்தேன்
பாட்டுக் கேட்கும் சாக்கில் நைஸாகப்
பார்த்து வந்தேன் அமலாவை - இருப்பினும்
அதிராவின் கவிதையை விமரிசிப்போரை
அயராது விளாசுவேன் இப்படி :
அதிராவைப்போலொரு கவிஞரில்லை- அவரை
அலட்சியப்படுத்துவோர்.. மனிதரில்லை..
மண்ணில்.. மனிதரில்லை..ய்..ய்..
>>> அதிராவைப் போலொரு கவிஞரில்லை<<<
பதிலளிநீக்குதிரு. ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..
இப்போ தான் நிம்மதி.. பால் பாயசம் குடிச்ச மாதிரி இருக்கு!..
ஏதோ கவிதை எழுதுகிறாரே பாராட்டுவோமென்றில்லாமல் .... இது போல் ஒரு கவிதை வாசித்தது இல்லை எழுதவும் முடியாது எங்கே அந்த இன்னொருகவிதை
பதிலளிநீக்கு///September 14, 2017 at 2:59 PM
பதிலளிநீக்குஸ்ரீராம். said...
என் சார்பாக ஒரு சிறு முயற்சி!///
ஆங்ங்ங்ங்ங்ங்ங் கவித...கவித...கவித... எங்கே அந்த தேம்ஸ் கரையின் கிழக்குப் பக்கமாக 4 அடி தள்ளி மேடையைப் போடுங்கோ.. அரண்மனையில் வைரம் பதிச்ச கதிரையை குயின் அம்மம்மாட்டைக் கேட்டு வாங்கிவந்து மேடையில் வையுங்கோ:)..
அஞ்சு வீட்டு முற்றத்துத் தென்னை மரத்தில நல்ல நடுக்குருத்தா வெட்டி வந்து தோரணம் கட்டிச் சோடியுங்கோ.. முனியாண்டி விலாஸ் ஸ்பீக்கரைக் கழட்டி வந்து ரெண்டு பக்கமும் பூட்டி... அதில் பாகுபலி 2 .. அனுஸ்கா பாட்டை தேம்ஸ்ல எதிரிரொலிக்குமாறு பாட விடுங்கோ.. எங்கே புஷ்பா அஞ்கிள் கடையில் வாங்கிய முடித்தேங்காய்.. டமால் என உடையுங்கோ:)...
ஸ்ஸ்ஸ் ஸ்ரீராமுக்குப் பட்டமளிப்புவிழா நடக்குது... நான் தான் மொத்தமான என்வலப் வச்சிருக்கிறேன் அதனால மீ தான் 1ஸ்ட்டூஊஊ... கியூவரிசையில்:) ஒயுங்கா நில்லுங்கோ கர்ர்ர்ர் இடிக்காதீங்கோ.. பிறகு நான் கீழே விழுந்தால் என் பால்பற்கள் கொட்டுப்பட்டிடும்:))..
ஹா ஹா ஹா நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்.. என்னைத்தேட வேண்டாம்ம்ம்ம்:).
//ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்குகண்ணுக்குள் நூறு நிலவா..
அழகான தலைப்பினால் ஆசை மேலிட
யூ-ட்யூப் பக்கம் போய்வந்தேன்
பாட்டுக் கேட்கும் சாக்கில் நைஸாகப்
பார்த்து வந்தேன் அமலாவை //
வாங்கோ வாங்கோ ஹா ஹா ஹா ஒவ்வொரு தடவையும் என்னைச் சாட்டிச் சாட்டிப் பழையபாட்டெல்லாம் ரசிக்கிறீங்க:)..
நெல்லைத்தமிழனுக்கு உடம்பு முடியவில்லையாம்:) அதனால மிஸ் பண்ணிட்டார் அமலாவை.. இல்லையெனில் அவரும் ஓடிப்போய்ப் பார்த்திருப்பார்:)..
இப்பாட்டின் தொடக்க கவிவரிகள் எனக்கு பசுமரத்தாணிபோல பதிஞ்சிருக்கு மனதில்...
அன்பே...
அந்த நதிகரையில்
கைக்குட்டை ஒன்றைக் கண்டெடுத்தேன்ன்
அது கைக் குட்டையா? - இல்லை
காதல் தேவதை.. தன் ஒரு
சிறகை ஒடித்து விட்டுப் போய் விட்டதா..
நீ சற்று வித்தியாசமானவள்..
காதல் கடிதத்தை நெசவு செய்து அனுப்பியவள்
நீ மட்டும்தான்ன்ன்ன்ன்....
கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவாஆஆஆஆஆஆஆஆ:) ஹா ஹா ஹா:).
///ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்கு- இருப்பினும்
அதிராவின் கவிதையை விமரிசிப்போரை
அயராது விளாசுவேன் இப்படி :
அதிராவைப்போலொரு கவிஞரில்லை- அவரை
அலட்சியப்படுத்துவோர்.. மனிதரில்லை..
மண்ணில்.. மனிதரில்லை..ய்..ய்..//
ஆஆஆஆஆஆஆங்ங்ங்ங் இது.. இது... பார்த்தீங்களோ பெரியவர்கள் என்றும் பெரியவர்களே..:) உங்களுக்குப் புரியுது.. நான் ஒரு வளர்ந்துவரும் விசித்திரமான புரட்சிக் கவிஞர் என்று:) ஆனா இங்கின பலருக்குப் புய்ய்ய்ய்யவே மாட்டுதாமே:)..
இருப்பினும் நீங்க கடசியாப் போட்டிருக்கும் அந்த ..ய்...ய்....:)) எங்கயோ இடிக்குதே ஹா ஹா ஹா:).
மிக்க மிக்க நன்றிகள்.
//அதிராவைப்போலொரு கவிஞரில்லை- அவரை
பதிலளிநீக்குஅலட்சியப்படுத்துவோர்.. மனிதரில்லை..
மண்ணில்.. மனிதரில்லை..ய்..ய்..//
அதிரா.... ரொம்ப மகிழ்ச்சியடையாதீங்க. ஏகாந்தன் அவர்கள், 'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை- அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை... மண்ணில் மனிதரில்லை' என்ற படப் பாடலைக் காப்பியடித்திருக்கிறார். இதையே இன்னொரு தளத்தில்,
"அஞ்சுவைப் போலொரு கவிஞரில்லை-அதை
அலட்சியப் படுத்துவோர் மனிதரில்லை-
மண்ணில் மனிதரில்லை...."
என்று பார்த்த ஞாபகம் இருக்கிறது :)) (எனக்குத்தான், மகிழ்ச்சி என்ற பலூனிலிருந்து காற்றைப் பிடிங்கிவிடுவதில் எத்தனை மகிழ்ச்சி)
///துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்கு>>> அதிராவைப் போலொரு கவிஞரில்லை<<<
திரு. ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..
இப்போ தான் நிம்மதி.. பால் பாயசம் குடிச்ச மாதிரி இருக்கு!..//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) துரை அண்ணன் என்ன சொல்றார்ர்ர்.. :) நான் ஒரு அப்பாஆஆஆஆஆஆவி:) எனக்கு எதுவும் புரியவே மாட்டுதாமே:))..
எனக்குக் கிடைக்கும் புகழ்ச்சிகளால மீ புல்ல்லாஆஆஆஆஆஅ அரிச்சிட்டேன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)..
///G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குஏதோ கவிதை எழுதுகிறாரே பாராட்டுவோமென்றில்லாமல் .... இது போல் ஒரு கவிதை வாசித்தது இல்லை எழுதவும் முடியாது எங்கே அந்த இன்னொருகவிதை///
வாங்கோ வாங்கோ...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது ஜி எம் பி ஐயாவின் கொமெண்ட்டோஓஓ?.. மீ ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன் எனக்காராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்பிவிடுங்கோ:) அவசரத்தில மாறிக்கீறி கோல்ட் வோட்டர் அடிச்சிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:) பிறகு தடிமனாக்கினால்.. ஆஷா போஸ்லே போல் பாடிக்கொண்டிருக்க முடியாதெல்லோ:)).
அதுதானே ஐயா... நீங்கள் இப்படி எனக்குப் ஃபுல் சப்போர்ட்டாக இருக்கும் வரை, ஒரு கவிதை என்ன 90 கவிதை எழுதி என் பேனாவை உடைக்கிறேன்ன்ன்ன்ன்...
//இது போல் ஒரு கவிதை வாசித்தது இல்லை எழுதவும் முடியாது எங்கே அந்த இன்னொருகவிதை//////
ஹா ஹா ஹா இங்கினதான் கொஞ்சம் இடிக்கிறமாதிரி இருக்குது:).. இருப்பினும் காக்கா போயிடுவதுதான் நல்லது:) பொஸிடிவாவே திங் பண்ணோனும் என அம்மம்மா அடிக்கடி சொல்லுவா:)..
மிக்க நன்றி ஐயா.
நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்கு///என்று பார்த்த ஞாபகம் இருக்கிறது :))///
ஹா ஹா ஹா சே..சே..சே.. அது மனப்பிரமையாக இருக்கும்:).. இது “மகா கவி, கவிஞர் - அதிரா” வுக்காக..:) அவரிடமிருந்து பூத்த புத்தம் புயுக்:) கவிதை:))..
/// (எனக்குத்தான், மகிழ்ச்சி என்ற பலூனிலிருந்து காற்றைப் பிடிங்கிவிடுவதில் எத்தனை மகிழ்ச்சி)/// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).. நல்லவேளை நீங்கள் கவிதை எழுதாததால் இந்தப் “புகழ்ச்சி”:) களிலிருந்து தப்பிச்சிட்டீங்க:).
கவிதா யினி கவிதை யெழுதும் போதெல்லாம்
பதிலளிநீக்குபுவியெங்கும் தேவர்கள் மலர்சொரிய கரங்கள்
குவித்தே வணங்கிடுவார் குவலயம் போற்ற
கவிகள் பலவடித்திடு கவிதா யினிவாழ்கவே!
'நம்ம ஏரியா'வில் கண்டிஷனல் கருவுக்கு கீதா அக்கா கதை எழுதி அனுப்பியிருக்கிறார். இதில் ஒரு சின்ன விசேஷம் இருக்கிறது. அது என்னவென்று யார் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாமா?!
பதிலளிநீக்குhttps://engalcreations.blogspot.in/2017/09/blog-post_14.html
இதோ வந்திட்டேன் :)ஆமா இந்த/// கண் // தலைப்பு யார் வைச்சது ..ஸ்ரீராமா இருந்தா பரவாயில்லை ஆனா அதிராவாயிருந்தா துரத்து துரத்தி தேம்ஸில் முக்கி எடுப்பேன் :) எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டேன் :)
பதிலளிநீக்குஇவ் இனிய கவிதையை உங்களுக்காக எழுதி வளங்கியிருப்பவர்.. தமிழ் வித்துவான், கவிப்பேரரசு, கவி மாமணி, தமிழ்ப் புலவர், கதாசிரியர் அதிரா:).]//
பதிலளிநீக்குகடவுளே இதென்ன சோதனை :) ழ வரவேண்டிய இடத்தில ள போட்டு கவிமாமணியா ?????
அதெப்படி வெள்ளிக்கிழமை வரைக்கும் விட்டா என்னால் பொறுக்க முடியாது உடனே சூடா ஏதாச்சும் தரணும் அதான் கண்ணை மூடிக்கிட்டு ஓடி வந்தேன் மியாவ்
பதிலளிநீக்கு//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குஹலோ ஏஞ்சல் ஒரு சின்ன உதவி இந்த அதிரா தேம்ஸ் நதியில் விழுறாங்களோ இல்லையோ ப்ளிஸ் அவங்களை அதில் தள்ளிவிட்டுடுங்கோ அப்படி செஞ்சா உங்க வெயிட்டுக்கு ஏற்ப தங்க கட்டிதாரேன் ப்ளிஸ் ப்ளிஸ் ப்ளிஸ்//
இதோ உடனே செய்றேன் கவலைப்படாதீங்க :) ஆனா என் கவலை இப்போ என்னன்னா வெயிட்டுக்கு ஏற்பன்னு சொல்லிட்டிங்க 2 வருஷமுன் வெயிட்டுக்கு ஏற்ப்பன்னு மாற்றிடுங்க ப்ளீச் :)
@நெல்லைத்தமிழன் :)
பதிலளிநீக்கு//அஞ்சுவைப் போலொரு கவிஞரில்லை-அதை
அலட்சியப் படுத்துவோர் மனிதரில்லை-
மண்ணில் மனிதரில்லை...."
//
எஏன்ன் !!!!!!!!!! ஹையோ நான் இல்லை :) நான் இல்லவேயில்லை
//ஊக்கம் அளிங்கோ:).. நன்றி வணக்கம். [ஆரம்பத்திலயே இப்பூடிச் சொல்லி வாயடைச்சிடோணும், இல்லை எனில் கல்லு கத்தி எல்லாம் எடுப்பினம்.. எங்கிட்டயேவா? //
பதிலளிநீக்குநீங்களே ஐடியா எடுத்து கொடுத்திட்டீங்க இருங்க ஹார்ட்வ்ர் ஷாப் போய் வாங்கிட்டு வரேன் :)
உன் கண்ணில் நீர் வடிந்தால்.. என் நெஞ்சில்.. உதிரம் கொட்டுதடி..டி..டி..டி.. அது சிட்டுவேஷன் சோங் போகுது:)]//
பதிலளிநீக்குஇல்லியே கண்ணை நம்பாதே அது உன்னை ஏமாற்றும் பாட்டுதான் இப்போ போய்க்கிட்டிருக்கு :)))))))
அம்மாடி :) டயர்ட் ஆகிட்டேன் அங்கே நம்ம ஏரியாக்கும் போகணும் அதனால் அப்புறம் தொடர்கிறேன் :)
பதிலளிநீக்கு@அதிரா //.... ரொம்ப மகிழ்ச்சியடையாதீங்க. ஏகாந்தன் அவர்கள், 'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை- //
பதிலளிநீக்குநெல்லை சொன்னது சரிதான். ஏனோ அந்தப்பாட்டு நினைவுக்கு வந்தது அப்போது. அன்னையின் ஆணை படத்தில் கவிஞர் கா.மு.ஷெரீஃப் படைத்த காலங்கடந்த வார்த்தை ஓவியம். நீங்கள் கேட்டதில்லையா அதிரா? ஆச்சரியம்.
//Asokan Kuppusamy said...
பதிலளிநீக்குகவிதா யினி கவிதை யெழுதும் போதெல்லாம்
புவியெங்கும் தேவர்கள் மலர்சொரிய கரங்கள்
குவித்தே வணங்கிடுவார் குவலயம் போற்ற
கவிகள் பலவடித்திடு கவிதா யினிவாழ்கவே!///
ஆஹா வாங்கோ வாங்கோ.. வழமையாக ஒரு சில சொற்களோடு போகும் நீங்கள் இம்முறை கவிதையில் கொமெண்ட் போட்டுச் சென்றது மிக ஆச்சரியம்.. மிக்க மிக்க நன்றிகள்.
//Angelin said...
பதிலளிநீக்குஇதோ வந்திட்டேன் :)ஆமா இந்த/// கண் // தலைப்பு யார் வைச்சது ..ஸ்ரீராமா இருந்தா பரவாயில்லை ஆனா அதிராவாயிருந்தா துரத்து துரத்தி தேம்ஸில் முக்கி எடுப்பேன் :) எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டேன் :)//
வாங்கஞ்சு வாங்கோ.. ஆமா உங்க கண்.. மூக்கு.. வாய் எல்லாம் நலமோ?:) ஹா ஹா ஹா... தலைப்பு யார் வச்சது என.. அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டனே:).
//Angelin said...
பதிலளிநீக்குஇவ் இனிய கவிதையை உங்களுக்காக எழுதி வளங்கியிருப்பவர்.. தமிழ் வித்துவான், கவிப்பேரரசு, கவி மாமணி, தமிழ்ப் புலவர், கதாசிரியர் அதிரா:).]//
கடவுளே இதென்ன சோதனை :) ழ வரவேண்டிய இடத்தில ள போட்டு கவிமாமணியா ?????//
ஹா ஹா ஹா கர்ர்ர்:) கனநாளா அஞ்சு எழுத்துப் பிழை கண்டுபிடிக்கவில்லையே.. நாம திருந்திட்டம்போல என நினைச்சேன்ன்.. மறுபடியுமோ?:) ஹா ஹா ஹா.. வழங்குதல்:).. ஓகே.
//Angelin said...
பதிலளிநீக்குஉன் கண்ணில் நீர் வடிந்தால்.. என் நெஞ்சில்.. உதிரம் கொட்டுதடி..டி..டி..டி.. அது சிட்டுவேஷன் சோங் போகுது:)]//
இல்லியே கண்ணை நம்பாதே அது உன்னை ஏமாற்றும் பாட்டுதான் இப்போ போய்க்கிட்டிருக்கு :)))))))//
ஹா ஹா ஹா இது உங்கள் கண்ணுக்கான சிட்டுவேஷன் சோங் அஞ்சு:).. கரெக்ட்டா நீங்க வரும்போது போட்டிருக்கினம்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.
//ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்கு@அதிரா //.... ரொம்ப மகிழ்ச்சியடையாதீங்க. ஏகாந்தன் அவர்கள், 'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை- //
நெல்லை சொன்னது சரிதான். ஏனோ அந்தப்பாட்டு நினைவுக்கு வந்தது அப்போது. அன்னையின் ஆணை படத்தில் கவிஞர் கா.மு.ஷெரீஃப் படைத்த காலங்கடந்த வார்த்தை ஓவியம். நீங்கள் கேட்டதில்லையா அதிரா? ஆச்சரியம்.//
அச்சச்சோ இந்தப் பாடல் கேட்டதுண்டு, நான் தான் அதிகம் ரேடியோ கேட்பேனே.. புதுசும் பழசும் கலந்து பாடிக்கொண்டே இருக்கும்... ஆனா நெல்லைத்தமிழனுக்க,ு அது பாடல்தான் என ஒத்துக்கொண்டிட்டால்ல்.. நீங்க எனக்கு கவிதை எழுதேல்லை என்றாகிவிடுமெல்லோ:)) அதனாலதான் அது கவிதைதான் எனச் சொன்னேனாக்கும் ஹா ஹா ஹா அதிராவொ கொக்கோ?:).
அருமை!நன்றி !தொடரலாம்!த ம 10
பதிலளிநீக்குகவிதை பெட்டிப் பாம்பாய் ஊர்கிறது
பதிலளிநீக்குஅதிராவால் எப்படி இது சாத்தியமாயிற்று?..
தெரியவில்லை.
துளசி: அதிரா!! நன்றாகத்தான் இருக்கிறது. நான் எழுதினாலும் இப்படித்தான் எழுதுவேன். எனக்கும் கவிதை எழுத வராது!!!! அதனால் தைரியமாக எழுதுங்க!!!! ஹாஹாஹாஹா...
பதிலளிநீக்குகீதா: அதிரா இந்தக் கமென்ட் வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருக்குல்ல??!!! மீக்கும் கவிதை எல்லாம் ரொம்ப கஸ்ட்டம்...வரிகளை மடக்கி, உடைத்துப் போட்டுத்தான்...ஹிஹிஹிஹி....பரவால்ல அதனால அஜீஸ் பண்ணீக்கிட்டோம்....அதிரா....தைரியமா முயற்சி பண்ணினீங்களே அதுக்கே பாராட்டுகள்!
///புலவர் இராமாநுசம்September 15, 2017 at 1:22 PM
பதிலளிநீக்குஅருமை!நன்றி !தொடரலாம்!த ம 10
///
வாங்கோ மிக்க நன்றி.
///ஜீவிSeptember 15, 2017 at 2:53 PM
பதிலளிநீக்குகவிதை பெட்டிப் பாம்பாய் ஊர்கிறது
அதிராவால் எப்படி இது சாத்தியமாயிற்று?..
தெரியவில்லை.///
வாங்கோ வாங்கோ ஹா ஹா ஹா கவிதை என்றாலே ஊர மட்டும்தான் முடியுது:) மிக்க நன்றி.
வாங்கோ துளசி அண்ணன் கீதா.... சொல்லிட்டீங்க இல்ல:)... இனிப் பாருங்கோ என் கவிதைகளை:)... ஹா ஹா ஹா மிக்க நன்றி.
பதிலளிநீக்கு