புதன், 20 செப்டம்பர், 2017

புதன் பு ர் 170920


சென்ற வாரப் புதிர்கள் பகுதியில் சும்மா ரெண்டு சுலபப் பந்துகள் போட்டு , ஒரு கூக்லி போடலாம் என்று நினைத்து கேட்டிருந்தேன். சுலபங்களை மட்டும் attempt செய்து, கசப்பு மருந்து பக்கம் வராமல் ஓடிவிட வாசகர்கள் முயல்வார்கள் என்று நினைத்தேன்.




ஆனால் என்ன ஆச்சரியம்! வாசகர்கள் எல்லாவற்றுக்கும் விடையளிக்க முன் வந்தது மெய் சிலிர்க்க  வைத்துவிட்டது!

முதல் இரண்டுக்கு, நான்கில் எதை வேண்டுமானாலும் வரிசையில் சேராத விஷயமாக சொல்லலாம். எல்லாம் நம்முடைய சாமர்த்தியம்!அவ்வளவுதான்.

மூன்றாவது கேள்விக்கு என்னுடைய பதில், gem. Others are related to electronics. Gem is not a part of electronics.

இனி, இந்த வாரக் கேள்விகள்:


1) ஜித், சுஜீ, கபில், ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின்மீது கடக்க வேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப் பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைவத ற்கு முன்பே அவர்கள் கடக்க வேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை கடக்க முடியாது.
ஆனால், அவர்கள் பாலத்தைக்கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆளுக்காள் வேறுபட்டது!
பாலத்தைக்கடக்க ஜித் 1 நிமிடத்தை யும், சுஜீ 2 நிமிடத்தையும், கபில் 5 நிமிடத்தையும் ராம் 10 நிமிடத்தையு ம் எடுத்துக்கொள்வார்கள்.
பாலத்தின்மீது ஒரு தடவையில் இருவர் மட்டு மே கடக்கமுடியும். அல்லது பாலம் உடைந்து விடும். வேகமாக கடக்கக்கூடியவர் எவராயினும் அவருடன் கடக்கும் நபர் மெதுவாக கடப்பவ ராக இருந்தால் மெதுவான நபருடனேயே கட ந்து செல்ல வேண் டும்.எவ்வாறு அவர்கள் ஆற்றை பாலத்தினூடாக கடப்பார்கள்?

Image result for man on bridge

2) ஒரு பெட்டியில். பத்து பொட்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு பொட்டலத்திலும், மேலே முறையே 1 or 2 or 3, .........9, or 0  என்ற எண்கள் எழுதப்பட்டிருக்கும். எழுதப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு  எண் எழுதப்பட்டிருக்கும்  பொட்டலத்திலும், அந்த  எண்  ஐந்து  எண்ணிக்கையில் இருக்கும். உதாரணமாக, இரண்டு என்று எழுதப்பட்டுள்ள பொட்டலத்தில்  "2" என்ற எண்  எழுதப்பட்ட  வில்லைகள் ஐந்து இருக்கும். 

ஒவ்வொரு பொட்டலமும் இருபது ரூபாய்கள். 

ஒரு பொட்டலத்தில் இருக்கின்ற ஐந்து வில்லைகளை மட்டும் விடை 100 என்று வருகின்ற வகையில், அமைத்துக் காட்டினால், உங்களுக்கு நூறு ரூபாய் பரிசு. 

உங்களால் எவ்வளவு அதிகபட்சம் லாபம் சம்பாதிக்க இயலும்? 


சுருக்கமாகச் சொன்னால்,  ஒற்றை இலக்க  எண் ஏதேனும் ஒன்றை, ஐந்து முறைகள் மட்டும் பயன் படுத்தி, விடை நூறு என்று வரவைக்கவேண்டும். 


சொல்லுங்க அண்ணே, சொல்லுங்க!

  Image result for numbers

3) ரெண்டாவது கேள்விக்கு விடைகள் தேடி ரொம்பக் களைச்சுப் போயிருப்பீங்க !  சுலபமா ஒரு கேள்வி: இந்தக் கேள்வியின் எண் சம்பந்தப்பட்ட நடிகைக்கு என்ன வயது ஆகிறது? 

Image result for trisha

               

  

25 கருத்துகள்:

  1. புதிர் வாழ்க..

    மூன்றாவது கேள்வியின் கீழுள்ள படம் அழகு..

    எல்லாமே புதிர் தானே!..

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் வேலையா இருக்கேன். பார்த்துட்டு வந்து பதில் சொல்றேன்

    பதிலளிநீக்கு
  3. பயணம். பிறகு நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. த்ரிஷா 34 வயதினிலே!

    கறுப்பு வெள்ளையா தேம்ஸ் நதிப்பாலம் போலருக்கே!! அதுல இருக்கற அந்த ஆள் அதிரா போல இருக்கே!! ஹா!!! அதிரா குதிக்க ரெடியா இருக்கீங்களா! இல்ல பாலத்தைக் கடக்க போறீங்களா ஆ வேண்டா அதிரா அப்புறம் அந்த நாலு பேரும் கடக்கணுமே!! பாலம் இருக்கணூமே!! இறங்கிடுங்கோ ப்ளீஸ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. முதலில் மெதுவாகக் கடக்கும் ராம் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு பாலத்தில் கடக்கத் தொடங்கனும்....அதன் பின் அந்த நேரத்தை அனுசரித்தி மற்ற மூவரில் ஒவ்வொருவரா ஏறிக் கடக்கணும்...இங்க இருக்கு டைம் கேல்குலேஷன்...அது யோசிக்கனுமே...ம்ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இதாரிது புதுஷா பிரெஷா ஒரு எண்ட்றி:)... தமனா, அனுஷ்காவையே சமாளிக்க முடியாமல் தள்ளாடுறோம் அதில இவ வேறயா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    பாருங்கோ இந்தக்காவைப் பார்த்துக்கொண்டே ஹெடிங் ரைப் பண்ணியதால்... கெள அண்ணன் என்ன போட்டிருக்கிறார் தெரியுதோ??? :).. அதிரா கண்ணுக்கு எல்லாமே தெரியுமாக்கும்....:) ஹா ஹா ஹா

    ////புதன் பு ர் 170920///

    பதிலளிநீக்கு
  7. //// அதிரா குதிக்க ரெடியா இருக்கீங்களா! இல்ல பாலத்தைக் கடக்க போறீங்களா ஆ வேண்டா அதிரா அப்புறம் அந்த நாலு பேரும் கடக்கணுமே!! பாலம் இருக்கணூமே!! இறங்கிடுங்கோ ப்ளீஸ்!!!////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்4 கீதா:)... நான் எண்டைக்காவது பாலத்தையோ நதியையோ டச்சூப் பண்ணுவேனோ?:)... 4 அடி தள்ளி நிண்டே கொக்கரிப்பேன்ன்ன்:))ஹா ஹா ஹா

    .. சரி சரி நீங்க இவ்ளோ ஆசையாக் கேட்பதால அஞ்சுவை முதலில் ஏத்திடுவோம்:)... ஆமா அந்த மிகுதி 4 வரும் ஆரூஊஊஊ:)

    பதிலளிநீக்கு
  8. /// ஏறிக் கடக்கணும்...இங்க இருக்கு டைம் கேல்குலேஷன்...அது யோசிக்கனுமே...ம்ம்ம்ம்///
    நான் இப்போ யோசிப்பதையே விட்டுட்டேன்ன் கீதா:)..

    பதிலளிநீக்கு
  9. நாளைலேருந்து நவராத்திரி ஆரம்பம். இந்த வருஷம் கொலு இல்லைனாலும் வீடு சுத்தம் செய்யறேன். அதனால் மெதுவா சாவகாசமா வந்து விடையைப் பார்த்துக்கறேன். பாலத்தை அவங்கல்லாம் அதுக்குள்ளே கடந்து அந்தப்பக்கம் போயிட மாட்டாங்க?

    பதிலளிநீக்கு
  10. //Geetha Sambasivam said...
    நாளைலேருந்து நவராத்திரி ஆரம்பம்.//

    என்ன கீதாக்கா இப்பூடிக் குண்டைத்தூக்கிப் போட்டிட்டுப் போயிட்டீங்க கர்:) எங்களுக்கு இண்டைக்கே ஆரம்பம்.. நாங்கள் ஒன்பது நாளும் விதம்விதமா செய்து படைப்போம் அம்மாள் ஆச்சிக்கு... நான் எல்லாம் ரெடி பண்ணி இன்று கொங்கோ பீஸ் சுண்டலும், அவலும் என, செட் பண்ணிட்டு பார்க்கிறேன் இப்பூடி ஒரு குண்டு:).. உடனே ஊரில் மாமிக்கு கோல் பண்ணிக் கேட்டேன் மாமி சொன்னா இல்ல இலங்கையில் இன்றுதான் ஆரம்பம் என.. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆ.. எல்லோரும் பின்னேரம் 6 மணிக்கு எங்கட வீட்டுக்கு வாங்கோ சுண்டல் சாப்பிட:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  11. பட்த்துல இருக்கிறது யாருன்னு தெளியலையே......

    பதிலளிநீக்கு
  12. அதிரா - Congo (தேசம்,) Peas சுண்டலா? நானே கஷ்டப்பட்டு புரிந்துகொண்டேன். கடவுளர்கள் பாடுதான் திண்டாட்டம்.

    பதிலளிநீக்கு
  13. @அதிரா:

    கொங்கோ பீஸ் சுண்டலா? அப்படியே கடந்துவிடலாம் என்றிருந்தேன். நெல்லையின் சந்தேகக் கேள்வி வேறு குழப்புகிறது. 3 வருடம் காங்கோவில் இருந்திருக்கிறேன். கொஞ்சம் சுற்றியிருக்கிறேன். (ஜாஸ்தி சுத்தமுடியாது. செக்யூரிட்டி இஷ்யூஸ்..). என்னை இந்த கொங்கோ பீஸ், பீஸ் பீஸாக்கிடும்போலிருக்கே! ஒருவேளை வியாபாரப் புலிகளான இந்த இங்கிலீஷ்காரங்க, சாதாரண பட்டாணியை கொங்கோ, மொங்கோ என்று பேர்வைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்களோ? தேம்ஸுக்கே வெளிச்சம்!

    பதிலளிநீக்கு
  14. ///நெல்லைத் தமிழன் said...
    அதிரா - Congo (தேசம்,) Peas சுண்டலா? நானே கஷ்டப்பட்டு புரிந்துகொண்டேன். கடவுளர்கள் பாடுதான் திண்டாட்டம்.//

    ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனுக்கு நெட் கிடைச்சதால மீ மாட்டிக் கொண்டேன்:)).. எனக்கு விதம் விதமா தானியங்கள் வாங்கி வகை வகையா செய்யப் பிடிக்கும்.. [எங்கள் அப்பாவின் ஜீன்ஸ் எனக்கு அதிகம் இருக்குதென நினைக்கிறேன்:)].

    கொள்ளு சுண்டல் அடிக்கடி செய்வேன்(படத்துக்கு வைப்பதில்லை)... தினை, சாமி, வரகுக்கஞ்சி அடிக்கடி செய்வேன். கோதுமை வாங்கி 3 நாளாக ஊறவிட்டு சுண்டல் செய்வேன்.. இப்போ என் கண்ணிலே கம்பு பட்டுதே:).. வாங்கி வந்திட்டேன்.. அது போகட்டும்..

    இது நவராத்திரி வருதே வித்தியாசமா ஏதும் கிடைக்குமோ எனத் தேடினேன்... கொங்கோ கிடைச்சுதே.. பயறு போலவே இருக்குது, ஆனா ஊறவிட்டால் நல்லா பொங்கி வீங்கி வருது பட்டாணிப் பருப்புபோல உள்ளே தெரியுது.. gungo peas என ஆங்கிலத்தில் இருக்கு..

    நான் நினைச்சேன்ன் ஆந்திராக் கீரை.. கொங்குரா இருக்குதெல்லோ.. அதன் அடியைச் சேர்ந்ததாக இருக்குமோ என:).. முன்னமுன்னம் செய்யும்போது கடவுளுக்கு கொடுத்திட்டால் பயமில்லையெல்லோ:) ஹா ஹா ஹா ஈவினிங் 6 மணிக்கு வாங்கோ:).

    பதிலளிநீக்கு
  15. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @அதிரா:

    கொங்கோ பீஸ் சுண்டலா? அப்படியே கடந்துவிடலாம் என்றிருந்தேன்//

    ஹா ஹா ஹா என்னால சிரிச்சு சிரிச்சு முடியுதில்லை:)... இல்ல இது பாசிப்பயறு வகையைச் சேர்ந்தது போல இருக்கு.. கோது பிரவுண் கலர். பயறை விடக் கொஞ்சம்தான் பெரிசு.. பட்டாணிக்கடலையோடு ஒப்பிடும்போது இது மிகக் குட்டி, ஊறியதும் நல்ல பெரிதாக வருகிறது.. அவிய கொஞ்சம் நேரமெடுத்துது.... பிஜ்ஜன் பீஸ் எனவும் போட்டிருக்கினம் ஹா ஹா ஹா:).. இவை எல்லாம் எந்த நாட்டுப் பாஷையோ தெரியல்ல.. அநேகமா கேரளாவைச் சேர்ந்ததாக இருக்கலாம்..

    ஈவினிங் வாங்கோ:) 6 மணிக்கு:)... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா சந்தேகங்களைப் பட்டுப்பட்டெனத் தீர்த்து விட்டேன் என நினைக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
  16. படத்தோட திங்கக்கிழமை போடறதுனால ஏதோ செய்துபார்ப்போம் என்று தோன்றும். பெயர் தெரியாத தானியத்தில் சுண்டல். விளக்கம்வேறு கொடுத்துட்டீங்க. இதுக்கு நேரிடையாக, விருந்தினர்கள் இன்று வரவேண்டாம் என்பதால் சங்கிமங்கி சுண்டல் செய்தேன் என்று போட்டுவிட வேண்டியதுதானே.

    நான்கூட பயறு இனிப்புச் சுண்டல் செய்து திங்கட்கிழமைக்கு அனுப்பலாம்னு நினைத்தேன். கீ.சா. மேடம் சொல்றமாதிரி போணியாகாதுன்னு நினைச்சேன். இனி, அதையே செய்து, பாலைவன சுருள்பயிறு பேரீச்சை சுண்டல் என்ற தலைப்பில் அனுப்பிடவேண்டியதுதான். கீதா சாம்பசிவன் மேட்மேன், இது என்ன புது ஐட்டம் என்று படிக்க வருவார்கள். நன்றி அதிரா

    பதிலளிநீக்கு
  17. கீ.சாம்மசிவம் மேடம் - மேட்மேன்- ஆட்டோ கரெக்‌ஷன் செய்த சதி. Sorry

    பதிலளிநீக்கு
  18. மண்டைய பிச்சிக்கிறமாதிரி கேள்வியை கேட்டுட்டு போயிட்டீங்க ..
    1st one
    a ,b ,c ,d னு வச்சிக்கலாம் பேருக்கு பதிலா ஹீ ஹீ
    முதலில் d யும் a வும் போறாங்க dயை முதலில் விட்டு கையில் தீ பந்தத்தோடு a பின்னால் நிதானித்து நடக்கணும் டி கொஞ்ச தூரம் நடந்தவுடன் பந்த வெளிச்சம் இரண்டு பக்கமும் தெரியும் இப்பொது எ வேறு வேறு என்று கடந்து சென்று விட வேண்டும் அதன் பின் b போக வேண்டும் d பாதியில் இருப்பான் b யம் வெளிச்சத்தில் நடந்துவிட வேண்டும் அவன் நிமடத்திற்குள் பின் c இவன் d யை விட கொஞ்சம் வேகமாக நடக்க கூடியவன் d நடக்க இவனும் நடக்க பாலம் கடக்கும் முன் c முன்னாள் போயி விட கடைசியாக d சென்றுவிடுவான் தீ பந்தம் அணைவதர்குள்...... எப்படா..... சரியா??

    2nd one
    ans (5 ͓ 5 ͓ 5)-(5 ͓ 5)
    3 rd one
    என்ன ஒரு 38 அல்லது 39 இருக்குமா இது தான் ரொம்ப கஷ்டமான கேள்வி போங்க

    பதிலளிநீக்கு
  19. ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
    ஜித் (1நிமிடம்) திரும்புகிறார் = 1 நிமிடம்
    கபில்(5 நிமிடம்) + ராம்(10 நிமிடம்)= 10 நிமிடம்
    சுஜி (2 நிமிடம்) திரும்புகிறார் = 2 நிமிடம்
    ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
    -------------
    17 நிமிடங்கள்
    ---------------

    முன்னாலேயே இந்த புதிரை கேள்விபட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. 3. 34 வயசாச்சு...... ஆதாரம் https://en.wikipedia.org/wiki/Trisha_(actress)

    பதிலளிநீக்கு
  21. அதிரா /ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆ.. எல்லோரும் பின்னேரம் 6 மணிக்கு எங்கட வீட்டுக்கு வாங்கோ சுண்டல் சாப்பிட:) ஹா ஹா ஹா:). முகவரியும் மெயில் அட்ரெசும் தராமல் வரச் சொன்னால் எப்படி

    பதிலளிநீக்கு
  22. ஏன் மூன் மூன் சென் இல்லையா? எல்லாரும் திரிஷாவையே பிடித்துத் தொங்கிக்கிட்டிருக்காங்களே (அவங்க எனக்கு அக்கா வயது-அல்லது ஆன்டியோ?)

    பதிலளிநீக்கு
  23. // Thulasidharan V Thillaiakathu said...
    த்ரிஷா 34 வயதினிலே! //

    முதலில் பதியப்பட்ட சரியான பதில்.

    // Ponchandar said...
    ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
    ஜித் (1நிமிடம்) திரும்புகிறார் = 1 நிமிடம்
    கபில்(5 நிமிடம்) + ராம்(10 நிமிடம்)= 10 நிமிடம்
    சுஜி (2 நிமிடம்) திரும்புகிறார் = 2 நிமிடம்
    ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
    -------------
    17 நிமிடங்கள்
    ---------------

    முன்னாலேயே இந்த புதிரை கேள்விபட்டிருக்கிறேன்//

    பொன்சந்தர் கூறியதுதான் சரியான பதில். வாழ்த்துகள்.

    // Madhavan Srinivasagopalan said...
    2) (5*5*5)-(5*5) = 125-25 = 100

    # take & give (me) that 100...//

    Madhavan has given one of the right answers.

    Others are :

    (33 X 3) + 3/3 = 100

    111 - 11 = 100

    one more combination for 5 is there.

    (5+5+5+5)X5 = 100

    ஆர்வத்துடன் பங்குபெற்று பதில் அளித்தவர்களுக்கும், பரீட்சை ஹாலுக்கு வந்து வேற சப்ஜெக்டில் கும்மி அடித்தவர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!