சனி, 30 செப்டம்பர், 2017

நண்பனைக் காப்பாற்றப்போய்........

1)  நண்பனைக் காப்பாற்றப்போய், தான் அந்த விபத்தில் மாட்டி உயிருக்குப் போராடியவர் ராஜேஷ்.  இவரது நண்பர்களும், கிராமத்தினரும் 8 லட்சம் வரை உதவி செய்து இவர் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.  செலவோ 16 லட்சத்துக்கும் மேலாம்.  இப்போது மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ராஜேஷ் ஒரு நம்பிக்கையின் துளி.2)  ".....இதுவரை, 190 பேர் இங்கே கண் தானம் செய்துள்ளனர். இவர்களின் விழிகள், 380 பேருக்கு இன்று, பார்வையை கொடுத்து உள்ளது....."

கண்களை தானம் செய்யும் கிராமம் குறித்து கூறும், நாகர்கோவில், மாடத்தட்டுவிளை ஊர்த் தலைவர் பயஸ் சேவியர்.3)  படிக்கும் மாணவர்களிடம், மரங்கள் வளர்ப்பு பயன் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு பராமரிப்பதை மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்துகின்றனர்.இந்நிலையில், விதை பந்துகள் தயாரித்து, ஆங்காங்கே துாவி செழிப்பான பகுதியாக மாற்ற மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஈடுபாடு காட்டத் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்கின்றனர்.


பொள்ளாச்சி அருகேயுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், விடுமுறை நாட்களையும் பயனுள்ளதாக மாற்ற ஆசிரியர்களுடன் இணைந்து 'விதை பந்து' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும், 20 மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று இரண்டு நாட்களில், இரண்டாயிரம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர்.


4)  ரவி கட்டப்பாடி.  ஒரு தினசரி சம்பள ஊழியர்.  எப்படி 16 குழந்தைகளுக்கு உதவி செய்தார்? வெள்ளை உடையில் நடுவில் இருப்பவர் ரவி.


5)  7 வயது வீரம்.  விளையும் பயிர்.  நண்பனைக் காப்பாற்றிய ஜெய்ராஜ் கோஹில்.தமிழ்மணத்தில் வாக்களிக்க.........

13 கருத்துகள்:

 1. ஒவ்வொரு செய்தியும் நெஞ்சைத் தொடுகின்றது..

  பதிலளிநீக்கு
 2. நல்ல மனங்கள் இன்னும் வாழ்கிறது பெருமைப்படுவோம்

  பதிலளிநீக்கு
 3. மனதை தொடும் செய்திகள் .உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 4. ரவி, ராஜேஷ், ஜெய்ராஜ் கோஹில் மனதை நெகிழ வைத்தார்கள். குட்டிப் பையனின் வீரம் பிரமிக்க வைக்கிறது.

  அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்! நல்ல காரியம்...

  பதிலளிநீக்கு
 5. மனதைத் தொடும் செய்திகள்
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 6. தன்னம்பிக்கை தரும் தகவலுக்கு நன்றி ஜி :)

  பதிலளிநீக்கு
 7. நல்ல உள்ளங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பகிர்தலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. ரவி கட்டப்பாடி: சாதாரணின் அசாதாரணக்காரியம்.
  The most appropriate acts of compassion comes from very ordinary people. இங்கே இவரே தினக்கூலி..

  பதிலளிநீக்கு
 9. நல்லவைகள் ஒரு ஓரமாய் தன்னை நிலை நிறுத்தி கொண்டே இருக்கிறது, எல்லா தகவல்களுக்கும்
  மனத்திற்க்கு நெகிழ்ச்சி, மகிழ்ச்சி 2 டையும் கொடுத்தது நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!