சனி, 16 செப்டம்பர், 2017

கணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்கையில்...
1)  அரியலுாரைச் சேர்ந்த, 85 வயது முதியவர் கருப்பையா, 20 ஆண்டுகளாக கோவில்கள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பசுமை காப்பாளராக திகழ்ந்து வருகிறார்.  


2)  வழியா இல்லை பூமியில்?  ".......... கணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்கையில், ஒத்தாசையாக சில வேலைகளை செய்து பழகிய நான், வெளியூருக்கு அவர் சென்ற நேரங்களில், வண்டிகளுக்கு, பங்சர் பார்க்க ஆரம்பித்தேன்.பட்டறை ஆரம்பித்து மூன்றாண்டுகளில், 'ஆல் ரவுண்டர்' ஆக, எல்லா வேலையும் கற்றேன்....."


கரூர் அருகே சுக்காளியூர் செக்போஸ்ட் பகுதியில், 'லோகநாயகி வல்கனைசிங் ஒர்க்ஸ்' என்ற பெயரில், இருசக்கர, கனரக வாகனங்களுக்கு, 'பங்சர்' பார்த்து வரும் விஜயலட்சுமி.

 
3)  இயலாதவர்களுக்கு தினமும் அன்ன சேவை செய்யும் பாலமுருகன்.
4)  தனது குடும்ப வருமானத்தில் கால் பங்கை இயலாதவர்களுக்கு உதவி செய்ய ஒதுக்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த வேளாண் அலுவலர் ஆறுமுகம்.


5)  மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மலையோரப் பகுதிகளில் பழ மரக் கன்றுகளை நடும் பணியை குமரி மாவட்ட இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்மணத்தில் வாக்களிக்க....

22 கருத்துகள்:

 1. இந்த மாதிரி நல்லவர்களால் சிறப்புறுகின்றது மானிடம்.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. முதல் இரண்டைத் தவிர்த்து (கேஜிஜி கவனிக்க!) மற்றவை புதிது! பகிர்வுக்கு நன்றி. :)

  பதிலளிநீக்கு
 3. சிறப்பானவர்களை அறிமுகப்படுத்தும் உங்களின் பணி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. முதலிரண்டை முன்னாலேயே படித்திருக்கிறேன். அனைத்தும் நல்ல செய்திகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. அட! நானும் கூட முதலிரண்டை முன்னால் படித்தேன். மூன்றாவதை அப்புறம்தான் படித்தேன்! கிண்டல் அலங்கார தண்டல் மகரிஷி

  பதிலளிநீக்கு
 6. நல்லவர்களின் பணியை ஹைலைட் செய்யும் தங்கள் பணி பாராட்டுக்குரியது !

  பதிலளிநீக்கு
 7. நல்ல மனம் கொண்ட இவர்களுக்கு எனது வாழ்த்துகளும்....

  பதிலளிநீக்கு
 8. சாதாரண மனிதர்கள் தங்களுடைய தினசரிப் பிரச்சினைகளுக்கிடையில், குறைந்த வருமானத்திலும் மற்றவர்களுக்கென நல்லது ஏதாவது செய்கிறார்கள். அல்லது செய்ய விழைகிறார்கள். சரி.

  இன்னொரு பக்கம், பெரும்பண முதலாளிகளும் தங்களின் பெருகிவரும் குடும்பத்தினருக்காகவும், வரப்போகும் சந்ததியினருக்காகவும் எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையிலும், இரவு பகலாகப் பாடுபட்டு உழைக்கிறார்களே. சொத்து சேர்க்கிறார்களே. அவர்களது உழைப்பை யாரும் பாராட்டுவதில்லையே..ஏன் இந்த ஓரவஞ்சனை!

  பதிலளிநீக்கு
 9. //கிண்டல் அலங்கார தண்டல் மகரிஷி// பெயர் நன்றாக இருக்கிறதே.
  நான் அவரில்லை!! இந்த மகரிஷி ஆசிரியர் குழுவிலிருந்து ஆராய்ச்சி செய்கிறாரோ?!

  பதிலளிநீக்கு
 10. கடமை கண்ணியம் கட்டுப்பாடூஊஊஊ.. அதிரா எந்தன் கொள்கை கீதம் ஆகும்ம்ம்ம்ம்ம்:)).. அதனால வோட் போட்டிட்டேன்ன்ன்ன்ன்.. ஆனா அஞ்சு வோட் போடல்ல இன்னும் என நினைக்கிறேன்ன்ன்.. அதனால அஞ்சுவை உடனடியாக லிஸ்ட்ல:) இருந்து தூக்கிடுங்கோ...:)) ஹையோ என் வாய் அடங்காதாமே..:).. நான் இனி தேம்ஸ் கரையிலேயே இருக்கோணும் என உறுதிமொயி:) எடுத்து அங்கு ஓடிடுறேன்ன்:)..

  பதிலளிநீக்கு
 11. செய்திகளில் சில நினைவில் நிற்கின்றன வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் பாராட்டுகள் த.ம. வாக்குடன்

  பதிலளிநீக்கு
 13. /மலையோரப் பகுதிகளில் பழ மரக் கன்றுகளை நடும் பணியை//

  உண்மையில் மிக அவசியமான நல்லதொரு செயல் எல்லாமே அருமையான விஷயங்கள்தான் ஆனா இந்த பழ மரம் மிக அத்யாவசியாமான ஒன்று .மனுஷங்களோட உணவு தேவையை பூர்த்தி செய்ய சக மனிதன் உதவக்கூடும் .ஆனால் பறவைகள் சிறு விலங்குகள் மனிதரால் காடழிப்பதால் இருப்பிடமில்லாமல் போவதை தடுக்க நல்லதொரு முயற்சி பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 14. @athira ////வெவ்வேவே :) இது அதிராவுக்கு ..

  பதிலளிநீக்கு
 15. திருமதி விஜயலக்ஷ்மியின் தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு ஏணிப்படி:)

  பதிலளிநீக்கு
 16. முதியவர் கருப்பையா, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு பாராட்டுகள்!!! பாலமுருகன் மற்றும் ஆறுமுகம் இருவரும் வாழ்க வளமுடன்! மனிதநேய உள்ளம்...

  விஜயலட்சுமி அட போட வைக்கிறார்!! பூங்கொத்து!

  பதிலளிநீக்கு
 17. கௌதம் அண்ணா கிளி பறக்குது!!!! பழ மரக்கன்றுகள் நடப்படுவதாலா??!!! ஹாஹாஹா...
  அது சரி அது என்ன //கிண்டல் அலங்கார தண்டல் மகரிஷி!!!// பெயர் நல்லாருக்கே! கௌதம் அண்ணா தானே இதுவும்....கு கு போல....குரோம்பேட்டை குறும்பன் போல!!!!..ஓகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆஸ்ரமம் அமைக்கப் போகிறார் போலும்!!! ஹிஹிஹிஹிஹி.,,...அதுக்குத்தான் கிளி பறக்கவிட்டு....முன்னோட்டமோ??!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!