ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஞாயிறு 170924 : மலைப்பாதையில்...நீர் இல்லா ஓடை!

கீழிறங்கும் மேகக்கூட்டம்!
மேலேயே தங்கிவிட்ட மேகக்கூட்டம்...

இந்தப்பக்கமாய்க் கொஞ்சம் மேகம்...

இன்னும் கொஞ்சம் பக்கமாய்...
நீரில்லா ஓடை இன்னொரு இடத்தில்...

தோளின்மேலே கைபோட்ட நண்பனே..  முகம் காட்ட மாட்டாயா?!
மலைச்சாரலில் சில வீடுகள்....

குதிக்கலாமா?

வழிகாட்டி சொல்வதென்ன?


தமிழ்மணம்...........

26 கருத்துகள்:

 1. மேகம் விடு தூது.. அழகான படங்கள்..
  கவிதை பிறக்கக் கூடும் அளவுக்கு நேர்த்தி.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. வழிகாட்டி யோகா செய்யச் சொல்லுதோ... ?

  பதிலளிநீக்கு
 3. மேகம் மீது மோகம் வரும்....படங்கள் அருமை !

  பதிலளிநீக்கு
 4. நீரில்லா ஓடையின்மீது இரும்புப் பாலம், குதிக்கலாமா படம், எப்போதும் விழுந்துவிடுவேன் என்று சொல்லும் கட்டிடம், வழிகாட்டி சொல்வது, வாழ்க்கையின் பிரச்சனைகள் உடனே தீர, மலைமுகட்டிலிருந்து குட்டிக்கரணம்தான், வேறென்ன. படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. இங்கே அடிக்கிற வெயிலுக்கே அங்கே போய்விடலாம் போலிருக்கு :)

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அனைத்தும் அருமையாய் எடுத்திருக்கிறார்கள். குதிக்கலாமா படம் கமலஹாசனின் படத்தை நினைவூட்டியது! மேகங்கள் எங்களோட அரவங்காடு குடியிருப்பை நினைவூட்டியது. வாசல்லே நின்று கொண்டு கீழே தெரியும் அரவங்காடு ரயில் நிலையத்தைப்பார்த்துட்டு இருக்கும்போது எதிரே வெலிங்க்டன் மலையிலிருந்து மிதந்து வரும் மேகங்கள் என்னைத் தாண்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழையும். வீட்டுக்குள் போனால் தோட்டத்திலிருந்து மேகங்கள் சமையலறைக்குள் நுழையும்! அப்போல்லாம் நான் எழுத்தாளி ஆவேன்னு தெரியாது! :)

  பதிலளிநீக்கு
 7. இயற்கை அழகு காட்டும் படங்கள்! த ம 8

  பதிலளிநீக்கு
 8. கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. கீதா சாம்பசிவம் மேடம் - நீங்கள் எழுதியிருக்கறது கற்பனையா இல்லை நெஜமாவே மேகங்கள் வீட்டுக்குள்ள போகுமா?

  பதிலளிநீக்கு
 10. நெ.த. கடவுளே, கடவுளே, இங்கே வரச்சே நேரிலே என்னோட ரங்க்ஸ் கிட்டேயும் கேட்டுக்குங்க! கையை மேலே நீட்டினால் மேகத்தைத் தொடலாம்! அப்படித் தவழ்ந்து போகும். சமீபத்தில் (சென்ற வருஷம்) கொடைக்கானல் போனப்போவும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் அதே அனுபவம்!

  பதிலளிநீக்கு
 11. நெ.த. நீங்க ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போயிருக்கீங்க தானே? அதோட விமானப் பயணங்களில் கீழே மேகக் கூட்டங்களைப் பார்த்திருப்பீங்களே!

  பதிலளிநீக்கு
 12. @கீதா சாம்பசிவம்:

  ஃப்ளைட்டிலிருந்து பார்க்கையில் கீழே மேகங்கள் தவழ்வது வேறுவிஷயம். ஏனெனில் அப்போது நாம் 32000 அடிக்குமேலிருக்கிறோம்.

  கிரிக்கெட்டில் ஆழ்ந்திருந்ததால் இந்தக் கேள்விகேட்க நேரமாகிவிட்டது. நெல்லை முந்திக்கொண்டார். நீங்கள் மேலே சொல்லியிருப்பது வாசல்புறம், கொல்லைப்புறமென மேகங்கள் துரத்தித்துரத்தி வீட்டுக்குள் நுழைவதுபற்றி! போனவருஷமும் இதே அனுபவமா? நிஜமெனில், கொடுத்துவைத்தவர் நீங்கள்தான்.

  பதிலளிநீக்கு
 13. பிள்ளையாரப்பா! இவங்களை எல்லாம் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ வரவழைச்சுக் காட்டிடேன்! :)

  பதிலளிநீக்கு
 14. இப்போத் தான் ரங்க்ஸ் கிட்டேயும் இதைச் சொன்னேன். அரவங்காடு போய்ப் பார்க்கச் சொல்லுனு சொல்றார்! :P :P :P :P :P

  பதிலளிநீக்கு
 15. இன்னும் சொல்ல விட்டுப் போச்சே, இந்தத் தென்மேற்குப் பருவக் காற்றுப் பருவத்தில் புனேயிலிருந்து மும்பை செல்லும் வழியில் ரயிலில் பயணம் செய்யுங்கள். உங்கள் பக்கத்து ஜன்னல் வழியாகக் கை நீட்ட முடியும்னா மேகத்தைத் தொடலாம். கூடவே பயணிக்கும் மேகங்கள் மும்பை வரை தொடர்ந்து வரும். காணக்கண்கொள்ளாக் காட்சி! அதே போல் கர்நாடகா எல்லையிலிருந்து ரயிலில் கோவா சென்றால்! ஆஹா சொர்க்கமே கண்ணெதிரே காணலாம். வண்ணமயமான விசித்திரமான வடிவில் மேகங்கள், மேகங்கள் மேகங்கள்! அவற்றின் பெயர் கூட முன்னெல்லாம் நினைவில் இருந்தது! இப்போ நினைவில் வரலை! :(

  பதிலளிநீக்கு
 16. பருவ காலங்களில் காணக்கிடைக்கும் அற்புதக் காட்சி இவை!

  பதிலளிநீக்கு
 17. வோட் போட்டிட்டேன்ன்.. படங்கள் சூப்பர்... அதிராகூடப் பொறுத்திட்டேன்ன் ஆனாப் பாருங்கோ கடவுளால பொறுமையைக் கடைப்பிடிக்க முடியல்ல:) அதனாலேயே ஞாயிறைத்திங்களாக்கிட்டார் ரெசிப்பி போட்டு:)).. ஏதோ பாரதப்போரில்... சக்கரத்தை அனுப்பி சூனியனை மறையவச்சாராமே கர்ணன்.. அந்த நினைவு வருதெனக்கு:).. ஹா ஹா ஹா என் வாய் தேன் நேக்கு எடிரி:) முறைக்காதீங்கோ:).. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).

  பதிலளிநீக்கு
 18. கீதா சாம்பசிவம் மேடம்... மேகங்களுக்கிடையில் விமானம் போகும்போதெல்லாம் அனுபவித்திருக்கிறேன். தொட்டுப் பார்க்கும்விதத்தில் மேகங்களைக் கண்டதில்லை (இல்லை... சென்ற டிசம்பரில் கொடைக்கானலில் மேகம் சூழ்ந்ததை, என்னைச் சுற்றிச் சென்றதைக் கண்டது மறந்துபோயிற்று). அந்த சமயத்தில் கொடைக்கானலில் சூடா மசால்வடைகளும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டதும் நினைவில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 19. என் வாய் தேன் நேக்கு எடிரி: - அதுனால பரவாயில்லை. ஆனா என் கண்கள் உங்கள் பின்னூட்டத்தைப் படித்துவிடுவதால், எனக்கு சமீபகாலமாக ராமாயணம், மஹாபாரதம், கர்ணன், கண்ணன் போன்ற எல்லாம் குழப்புகின்றன. கனவில், கண்ணன், அர்ஜுனன் கிட்ட, ராமரை நோக்கி அம்பை விடு என்று சொல்லாததுதான் பாக்கி.

  பதிலளிநீக்கு
 20. மிக அழகான படங்கள். மேக ஜாலம் அற்புதம். கீதாவைப் பின்பற்றி
  வந்த மேகப் பின்னூட்டங்கள் இன்னும் சுவை.

  பதிலளிநீக்கு
 21. நானும் பூனா மும்பைப் பயணத்தில் கீதாவின்
  மேகப் படலங்களை ரசித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. அனைத்துப் படங்களும் அருமை!!!

  கீதாக்கா நான் உங்களுக்கு ஆதரவு!! நெல்லை அண்ட் ஏகாந்தன் சகோ கீதாக்கா சொல்லியிருப்பது அந்த அனுபவம் எனக்கும் உண்டு...

  இப்போ நீங்க ஒரு பனி படர்ந்த மலைக்குப் போறீங்கனு வையுங்க....க்ளியரா இருக்கும் எதிர்க்க எல்லாம் தெரியற மாதிரி இருக்கும்...திடீர்னு பனி மேகம் அப்படியே உங்களைக் க்ராஸ் செய்யும் எதிர்க்க வருவது எதுவும் தெரியாது..உடம்னு சில்லென்று ஆகும். பனி மேகம் கடந்ததும் நம் மேல் சில சமயம் பனித் துளிகள் ஈரம் இருக்கும்.....கொஞ்ச நேரத்திற்கு...

  இதை நான் பாண்டிச் சேரியில் ஒரு அவுட்டர் கிராமத்தில் இருக்கும் போதும் அனுபவித்துள்ளேன். இத்தனைக்கும் மலைப் பிரதேசமா என்ன பாண்டி?.மார்கழியில் அதாவது ஜனுவரியில்.அங்கு பனி மூட்டம் ஒரு முறை அதிகம் வந்தது...அப்போது திடீரென்று வீடு தெரியாது போகும்....எதிர் வீட்டில் இருப்பவர் தெரிய மாட்டார்...அப்படியிருக்க மலைப் பிரதேசத்தில் நிகழாதா என்ன?!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 23. அதிரா விட்டா மகாபாரதக் கதையையே மாத்திடுவீங்க போலருக்கே!!! ஹாஹாஹாஹா...

  //ஏதோ பாரதப்போரில்... சக்கரத்தை அனுப்பி சூனியனை மறையவச்சாராமே கர்ணன்.. அந்த நினைவு வருதெனக்கு:)// கண்ணன் என்பதற்குப் பதிலாகக் கர்ணன் என்று அடித்து விட்டீர்களா இல்லை அப்படித்தான் என்று நினைத்தீர்களா??!!!!சூனியன் அல்ல சூரியன்.... ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 24. சில கால நிலைகளில் சென்னையில் இருந்து பெங்களூர் வரும்போது கார் பயணத்தில் மேகங்கள் ஊடே பயணிப்பது போல் இருக்கும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!