ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

திங்கக்கிழமை 170925 : தென்திருப்பேரைக் கூட்டு - கீதா ரெங்கன் ரெஸிப்பி
தென் திருப்பேரை என்பது தூத்துக்குடி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர். 
விஷ்ணு தலங்களான நவ திருப்பதி மற்றும் 108 திருப்பதிகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தலம். இத்தலம் பற்றி நீங்கள் கூகுள் செய்தால் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதாலும் பதிவும் நீண்டு விடும் என்பதாலும் இங்குச் சொல்லவில்லை. அடுத்து இந்த ரெசிப்பியை என் பிறந்த வீட்டில் ஒரு விழாவின் போது செய்தும், அப்புறம் எனக்குச் சொல்லியும் கொடுத்த நாங்குனேரி ரெங்கன் மாமா. இவர்தான் என் பிறந்த வீட்டில் எந்த விழா நிகழ்வானாலும் எங்கள் வீட்டுக் கல்யாணங்கள் உட்பட ஆஸ்தான குக் கிங்க்! என் மூன்றாவது மாமாவால் அறிமுகமானவர்.சாச்சுட்டரி வார்னிங்க்!!!: இந்த தென்திருப்பேரை கூட்டு புதிய செய்முறை என்று எல்லாம் சொல்வதற்கில்லை. பேர் தான் தென்திருப்பேரைக் கூட்டு. ஏன் இப்படி ஒரு பெயர் வந்ததுனு தெரியலை. இது பாலக்காடு எரிசேரி மற்றும் மிளகுக் கூட்டின் ட்வின் சகோதரி! வித்தியாசமே இல்லாத ட்வின்னா என்றால் பெரிதாக இல்லை ஆனால் மிகச் சிறிதாக உண்டு எனலாம். எரிசேரியில் சேனை, வாழைக்காய் அல்லது மத்தன்/மஞ்சள் பூஷணியும் பெரும்பயறும் போட்டு எரிசேரி என்று செய்வார்கள். இதில் தடியங்காய்/இளவன்காய்/வெள்ளை பூஷணி, கத்தரிக்காய், சேனை, வாழைக்காய், கொண்டைக்கடலை, தட்டைப்பயறு என்று எல்லாம் சேர்த்துக் கலந்துகட்டி செய்தார் அந்த மாமா. எரிசேரியில் தாளிப்பில் இல்லாத, உளுத்தம்பருப்பு தாளிப்பு மற்றும் புளி  இதில் உண்டு. அவ்வளவே. எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் மாமா செய்த சேனை எரிசேரி, சென்னைக்காரர்கள் அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டது!(கீதாக்கா: இத்தானா….ஜுஜுபி அல்லது போணியாவாது. நெத: இதை கொஞ்சம் மாற்றிச் செய்து இங்கு ரெசிப்பி போடுகிறேன். ஜிஎம்பி சார்: இது கேரளத்து எரிசேரியின் ஒரு வடிவம். அதிராவோ…. ஹோ இது எங்கட நாட்டில் பெப்பர் எல்லாம் சிக்கன், மட்டனில் அல்லோ பாவிப்பம். என்று சொல்லலாம்….ஹிஹிஹிஹி ஸ்ரீராம் இதற்கு நீலக்கலரில் என்ன போடுவார் என்று எதிர்பார்ப்பு அவர் பாஸ் தின்னவேலிப்பக்கமல்லோ!!!)


ரொம்பவே ஜிம்பிள் ரெசிப்பி…..ஆனால் அந்த மாமா என்னைப் போல கண்ணளவு, கையளவு என்பதால் பொத்தாம் பொதுவாகச் சொன்னார். நான் கேக், ஸ்வீட் பலகாரங்கள் மட்டுமே அளந்து செய்வேன். மற்றபடி நம் சமையல் எல்லாம் கண், கை அளவுதான். இப்போ ஸ்ரீராம் கேட்டதால் எல்லாம் அளந்து அளந்து…ஃபோட்டோ புடிச்சு…..ஹப்பா சத்தியமா ரெசிப்பி போடறவங்க எல்லாருக்கும் ராயல் சல்யூட்பா!!! ரொம்பவே பொறுமைதான்!ஸ்ரீராமுக்கு மிக்க நன்றி! இப்படி அளந்து செய்யும் ஒரு மெத்தடை நான் கற்றுக் கொண்டதற்கும், இங்கு பல கிச்சன் கில்லாடிகள் இருக்க என்னவோ நானும் கிச்சன் கில்லாடி என்று நினைத்து என்னிடமும் ரெசிப்பி கேட்டதற்கும் மிக்க நன்றி! அந்த தகிரியத்துல இனியும் ஃபோட்டோ புடிக்க வாய்ப்புக் கிடைத்தால் அளந்து செய்து, எங்கள் வீட்டில் என் கஸின்ஸ் எல்லாரும் என் செல்ல கினிபிக்குகள் ஆனது போல். உங்களை எல்லாம் என் செல்ல கினிபிக்குகளாக்க ஆசைதான்!


இந்தச் சிங்கம் (நாந்தேன்) சிங்கிளா வராது. கூட்டமாத்தான், ஃப்ரென்ட்லி ஆட்கள் கூட இருந்து பேசி, கலாய்த்து சிரித்துக் கொண்டே, செய்வது ரொம்பப் பிடிக்கும். சிங்கிளா செஞ்சு போரடிச்சுப் போச்சு! சரி கமான் கேர்ல்ஸ் அண்ட் பாய்ஸ் கையெல்லாம் நல்லா கழுவி தயாரா? எதுக்கா? நான் நல்லா கழுவி வைச்சுருக்கற காய்களைக் கட் பண்ணத்தான். கில்லர்ஜி உங்க கோடரிய எடுத்துட்டு வாங்க….சேனைக் கிழங்கைத் தோல் எடுத்துட்டு, நல்லா க்ளீன் பண்ணிட்டு அழகா சின்ன க்யூப் சைஸ்ல கட் பண்ணி ஒரு கப் எடுத்து வைங்க.


அதிரா அங்க தேம்ஸ் நதிக்கரைல சும்மானாலும் குதிச்சுருவேன்னு சீன் போட்டது போதும் இங்க வாங்க. அப்பால இருக்கற என் ப்ளாக் ப்யூட்டி மாக்கல் சட்டி (இப்படி சைக்கிள் கேப்ல நான் எங்க வீட்டுல கல் சட்டில சமைப்பேனு உதார் விடணும்ல!!) அடுப்புல வைச்சு அதுல சேனைய போட்டு, அது மூழ்கற வரை தண்ணி விட்டு, அடுப்ப பத்த வையுங்க. அதுல 1 டீ ஸ்பூன்… ஓ ஸாரி ரீ ஸ்பூன் மிளகுப் பொடி போடுங்க.கொதிக்கட்டும் பூஸாரே சேனை முக்கால் பாகம்தான் வேகணும். உங்க குழைஞ்ச சாதம் மாதிரி குழையக் கூடாது! ஒழுங்கா பாத்துக்கங்க!

அது வேகட்டும். அதுக்குள்ள, நெல்லை நீங்க சின்ன எலுமிச்சை அளவு புளி ஊற வைச்சு நல்லா கரைச்சு எடுத்து வைங்க. ஏஞ்சல் ஒருவாழைக்காய் தோல் சீவிச் சின்ன க்யூபா கட் பண்ணிடறீங்களா ஒரு கப்.  மதுரைத் தமிழன் உங்களுக்கு வெள்ளை பூஷணிக்காய், தோல் சீவி க்யூப் ஸைஸ் கட் பண்ணி ஒரு கப் கொஞ்சம் கூடுதலா எடுத்துக்கலாம். ஓகேயா. 


ஸ்ரீராம் கத்தரிக்காயை பெரிசா இருந்தா குறுக்க கட் பண்ணிட்டு அந்தப் பாதிய நாலா கட் பண்ணி அதையும் ஒரு கப் கொஞ்சம் கூடுதலா எடுத்துக்கலாம். 


எல்லாரும் கட் பண்ணிட்டாங்க.. அதிரா சேனை முக்கால் பாகம் வெந்துருக்குமே! சரி இப்ப நான் இந்தக் காய்களை எல்லாம் சேனையோட வேகப் போடறேன். அதோட ¼ கப் கொண்டைக்கடலை, !/4 கப் தட்டைப்பயறு ஊற வைச்சு வேக வைச்சதையும் சேர்க்கறேன்.  அதுல கொஞ்சம் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையும் போடறேன். நெல்லை நீங்க கரைச்சு வைச்சுருக்கற புளித்தண்ணியையும் இதுல விடுங்க1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடியும், தேவையான உப்பையும் போட்டுக் கிளறிவிட்டாச்சு. வேகட்டும்….அதுக்குள்ள தேங்காய் துருவிடுவோம்.

மை கேர்ல்ஸ் பாருங்க. இந்த பாய்ஸ் எல்லாம் ஜூட், இந்த கில்லர்ஜி.அதுக்குள்ள சமூகக் கோபத்துல கோடரிய தூக்கிட்டுப் போய்ட்டாரு. ஸ்ரீராம் வெள்ளிக் கிழமை பாடல் தேடப் போயிட்டாரு. நெத, கௌதம் அண்ணா அடுத்த கதைக்கரு சொல்லுவார் என்று யோசித்து எழுதி வைப்போம்னு கதை எழுதப் போயிட்டார்! மதுரைத் தமிழன் அடுத்தது யாரைத் திட்டி எழுதலாம்னு கவுந்து படுத்துட்டு லாப்டாப்ல தட்டிக்கிட்டிருக்கார்.

சரி நான் தேங்காய் துருவறேன் ஓகேயா.…அதிரா இதுல ஒரு அரைக் கப் தேங்காய் எடுத்து அதோட 3 மிளகாய் வத்தல், 1 (டீ)ரீ ஸ்பூன் ஜீரகம், 2 ஸ்பூன் பச்சரிசி (பச்சரிசி மாமா சொல்லவில்லை. நான் சேர்த்துக் கொண்டது. மாமா தேங்காய் அதிகம் சேர்த்திருந்தார். நான் அதில் பாதிதான் எனவே அரிசிசேர்த்துப் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸில நல்லா அரைச்சுக்கோங்க. 


காய் நல்லா வெந்துருக்கும், பாருங்க. அரைச்சத கூட்டுல போட்டு நல்லா கிளறி கொதிச்சதும் அடுப்ப ஆஃப் செஞ்சுருங்க. ஏஞ்சல் அதோ என் ப்ளாக் ப்யூட்டி இரும்பு வாணலி இருக்கு பாருங்க அத எடுத்து அடுப்புல போட்டு ரெண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அதுல கடுகு 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன் போட்டு வறுத்துக்கோங்க றிவேப்பிலையும் போட்டுக்கங்க. கூட்டுல தாளிச்சத போடுங்க. அப்புறம் இந்தாங்க ¼ கப் தேங்காய் சின்னச் சின்னதா கீறி வைச்சுருக்கேன் பாருங்க. அதை வாணலில போட்டு சிவக்க வறுத்து அந்தக் கூட்டு மேல போட்டுருங்க.


ஸ்ஸ்ஸ்ஸ்பா…முடிச்சாச்சு! நான் சாதமும் வைச்சுட்டேன். பப்பட் பொரிச்சு வைச்சுருக்கேன்……கமான் பாய்ஸ். மத்தவங்க எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடலாம்….பந்திக்கு யாரு முந்திக்கராங்க, கமென்ட் என்ன அடிக்கறாங்கனு பார்ப்போம்!


(ஹப்பா இதுங்கள மேச்சுக் கட்டறதே பெரிய வேலையா போச்சுங்க. நெ த அப்பப்பக் கிண்டல் அடிப்பார் ஆனா சமர்த்துப் பையன். ஸ்ரீராமும், ஏஞ்சலும் ஒன்னுமே தெரியாத மாதிரி அமுக்கா இருந்துக்கிட்டுக் குறும்பு. மதுரைத் தமிழனும் அதிராவும் வாலுங்க! இந்தக் கில்லர்ஜி அப்பப்ப அது சரியில்ல இது சரியில்லனு கோச்சுக்குவாரு. இப்பக் கூட அந்தக் காய்காரர் ஏமாத்திப்புட்டாருனு சண்டைக்குப் போயிருக்காரு!!)[ வித்தியாசமான பிரசன்டேஷன் கீதா...  நேற்று உங்கள் தளத்தில் வெளியான அந்த அட்டகாசமான சிறுகதையைப் போலவே இதுவும் புது சுவை.  படங்களை பார்க்கும்போது சுவைக்கும் ஆசை வருகிறது - ஸ்ரீராம் ]
81 கருத்துகள்:

 1. அதிசயமா, திங்கக் கிழமை பதிவு ஞாயிறு அன்றே வெளியாகிடுத்து. தமிழ்மணத்துல சேர்த்தாச்சு. படித்துக் கருத்திடுகிறேன்

  பதிலளிநீக்கு
 2. தவறுதான். நாளை வெளியாக வேண்டியது. தவறுதலாக இன்றே வெளியாகி விட்டது. அப்படியே விட்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. ரெசிப்பி ரொம்ப நல்லா வந்திருக்கு. நீங்க பூசணி, சேனை, கத்தரி, வாழை மட்டும்தான் போட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன். இதுக்கு கறுப்பு கொண்டைக் கடலைதான் நல்லா இருக்குமா? வெள்ளை கொண்டைக் கடலை சரிப்படுமா? நீங்க ரெசிப்பி போட்ட நேரம், ஒரு வாரத்துக்கு என் ஹஸ்பண்ட் இங்க வர்றா. செய்துபார்த்திடறேன் (நான் காய் கட் பண்ணி, அவ செஞ்சுடுவா).

  தேங்காய்க்கு, கொட்டைத் தேங்காயை வறுத்துப் போட்டால் இன்னும் வாசனையா இருக்குமே? ஆனா நான் உங்க ரெசிப்பியை அப்படியே ஃபாலோ பண்ணி செய்துபார்க்கப்போகிறேன்.

  கத்தரிக்காய் மட்டும், எப்படி கட் பண்ணி போட்டோ எடுத்தீங்க? அதுக்குள்ள கறுத்துராது? பச்சரி சேர்க்கறதுனால கொஞ்சம் கெட்டியா கூட்டு இருக்கும். படத்தைப் பார்க்கும்போதே கூட்டு வாசனை எனக்கு வருது.

  பதிலளிநீக்கு
 4. தென்திருப்பேரை - இதைப் பற்றி எழுதலாம். பொதுவா 'தென் கலை ஐயங்கார்கள்' ரொம்ப நல்லா சமைப்பாங்க. அது எதுனால என்று தெரியலை, ஆனால் அவங்களுக்கு இயல்பா நல்ல கைராசி. நல்ல பசி நேரத்துல (1:30 மணி) வந்த பதிவு. பாராட்டுக்கள் கீதா ரங்கன். இதுதான் நீங்க எழுதற முதல் ரெசிப்பியா? இன்னைக்கு உங்க தளத்துல அருமையான கதையை வாசித்துவிட்டு, இங்கு நல்ல ரெசிப்பி.

  பதிலளிநீக்கு
 5. ஹா ஹா எனக்கு தலை சுத்திடுச்சி இன்னிகு மண்டெ ஒர் சண்டெவானு

  பதிலளிநீக்கு
 6. கூட்டுக் குழம்புனு எங்க பக்கத்திலேயும் தாளகம்னு திருநெல்வேலிக்காரங்களும் சொல்வாங்க. பருப்புச் சேர்க்க மாட்டாங்க! காய்கள் நாட்டுக்காய்களா நம்ம இஷ்டத்துக்குப் போட்டுக்கலாம். இது பண்ணி, ஒரு எளிமையான ரசமும் வைச்சு அப்பளமும் பொரிச்சால் சொர்க்கம் பக்கத்தில்! இதே மாதிரித் தான் நாங்களும் செய்வோம் என்றாலும் எங்க அப்பாவுக்கு ஜீரகம் அவ்வளவாப் பிடிக்காது என்பதால் என் பிறந்த வீட்டில் ஜீரகம் சேர்ப்பதில்லை! :) தனி வாழைக்காய், தனியாச் சேனை, கத்திரி போன்றவற்றிலும் செய்யலாம். இதுக்கு எங்க வீட்டிலே மொச்சை பிதுக்குப் பருப்புனு மதுரையிலே கிடைக்கும். பச்சை மொச்சையைப் பிதுக்கித் தோலுரித்துக் காயவைத்து வைத்திருப்பார்கள். அதுதான் நிறையப் போடுவோம். கருவடாமும் தாளிப்போம். குழம்புக் கருவடாம்! :)

  பதிலளிநீக்கு
 7. வித்தியாசமான நடையில் சுவையான சமையல் குறிப்பு! எல்லோரையும் வேலை வாங்கிய விதம் அபாரம். எனக்கெல்லாம் வேலை செய்யத் தான் தெரியும், வேலை வாங்கத் தெரியாது! :)

  பதிலளிநீக்கு
 8. திருவாதிரைக்களி, பொங்கல் என எல்லாவற்றுக்கும் அருமையான துணை! என் புகுந்த வீட்டில் எல்லாத்துக்கும் பருப்புச் சேர்க்கணும். எனக்கென்னமோ பருப்புச் சேர்த்தால் சுவை மாறிடும்னு தோணும்! :)

  பதிலளிநீக்கு
 9. அட கிழமைகூட மறந்து போச்சு. இன்னிக்கு என்ன கிழமை. நல்ல தேங்காய் மணம். இதில் குறைத்திருப்பதாகச் சொல்லுகிறீர்கள். எல்லா காயும் சேர்த்து. எல்லோரையும் வேலை வாங்கி,செய்யாவிட்டால் பரவாயில்லை. என்னையெல்லாம் கூப்பிடலை. சும்மா பார்த்துண்டு உட்காரலாமே. கேரளத்து பாணி கூட்டு ருசிதான். அனுப்பச் சொல்லி கேட்க முடியாது. உதவிக்கு கூப்பிட்டிருந்தால் ஒரு கை பார்த்திருக்கலாம். ஒரு போலில் எடுத்து வைத்து,உடன் பப்படமும் வைத்து ஒரு போட்டோ இருந்தால் ஒருகை பார்த்திருக்கலாம். தெரியாத ரெஸிப்பி கீதா ரங்கனுக்குக் கிடையாது என்று நான் நினைப்பது ஸரி. புளிியிட்ட கலவைக் கூட்டு மிக்க ருசி. தென் திருப்பேரைப் பெருமாளை வணங்குவோம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 10. ஆமாம், அது சரி, தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் சௌக்கியமா இருக்காரா?

  பதிலளிநீக்கு
 11. ஞாயிற்றுக்கிழமைக்கு கொமெண்ட் போடலாமே என கொம்பியூட்டரை ஓன் பண்ணித்திடுக்கிட்டு விட்டேன்ன்ன்.. ஒருதடவை வீட்டில் கேட்டு கொன்ஃபோம் பண்ணினேன் இன்று என்ன கிழமை என்பதை ஹா ஹா ஹா.. என்னாச்சு ச்றிராமுக்கு... சேஃப் கொடுப்பதற்குப் பதில் கைமாறி பப்ளிஸ் கொடுத்திட்டீங்களோ?:).. ஹா ஹா ஹா இதுக்குத்தான் சொல்றது போஸ்ட் எழுதும்போது தேவையில்லாத கனவெல்லாம் காணக்குடாதென:) ஹா ஹா ஹா ஹையோ.. வருகிறேன் ரெசிப்பி படிச்சு போடுறேன்ன்..

  பதிலளிநீக்கு
 12. TM 4 ரிசிப்பையை வித்தியாசமான முறையில் தந்து அசத்திட்டீங்க சபாஷ்

  பதிலளிநீக்கு
 13. அட்டகாசச் சமையல். தென் திருப்பேரைக்காரர் டோண்டு என்று ஒரு பதிவர் இருந்தார். எப்பவும் மகர நெடுங்குழைக்காதன் துணை என்று எழுதுவார்.

  அந்த நினைவுச் சுவையோடு உங்கள் பதிவைப் படித்தேன். கூட்டணி பிரமாதம்.
  ஸ்ரீராம் பாஸ் திருனெல்வேலியா. அப்படியா ஸ்ரீராம். இத்தனை தடவை பார்த்தும் பேசியும் இது தெரியாமல் போச்சே.

  இந்தக் கூட்டின் மணம் பலவித நினைவுகளை எழுப்பியது. உடனுக்குடன் படங்கள் எடுத்து அருமையாகச் செய்து விட்டீர்கள் கீதா ரங்கன்.
  சுடச்சுட சாதத்தின் மேல் இந்தக் கூட்டை விட்டு,
  பிசறிச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்னு நினைத்தேன். வயிறே நிரம்பிவிட்டது. மனம் நிறைந்த நன்றி அம்மா.

  இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது.
  காக்காக் கடி கடிச்சுக் கொடுத்தேன்
  கமர்கட்டு மிட்டாயி
  சோக்கா வாங்கித் தின்னுப்பிட்டு விட்டாரய்யா கொட்டாவி,
  ஓட்டாஞ்சல்லியை எடுத்துக்கிட்டு
  ஓடினாங்க மாருக்கெட்டு
  ஓராழுக்கு அரிசி வாங்கி உலையில தான் போட்டுக்கிட்டு
  கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு
  மகும்மாளம் தான் போட்டுக்கிட்டு....
  என்று போகும் படல்.
  எங்கள் ப்ளாக் நன்றாக இருக்கணும். உங்களுக்கு என் கனிந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. கீதா அது எப்படி இப்பவெல்லாம் உங்கள் போஸ்ட் நார்மல் சைஸில் இருப்பது மட்டுமல்லாமல் மிகவும் அட்டகாசமாகவும் மிக எளிமையாகவும் மனதை கவரும் வகையில் வருகிறது.... ஒரு வேளை கேரளா சென்று பூஜை செய்து மந்திர தாயத்து ஏதும் கட்டிட்டு வந்து எழுதீருங்கிளா

  பதிலளிநீக்கு
 15. அதிரா நோட் திஸ் பாயிண்ட் நகைச்சுவையாய் பதிவு போடுகிற சாக்கில் கீதா அவர்கள் நம்ப ரெண்டு பேரையும் குரங்கு (வாலுங்க)என்று சொல்லி இருக்காங்க....நாம என்ன அவ்வளவு அழகாகவா இருக்கோம்.  ஆனால் நான் உங்களைவிட கொஞ்சம் அழகுதான் அதற்கெல்லாம் பொறமை கொண்டு தேம்ஸ் நதியில் விழுந்திடாதிங்க

  பதிலளிநீக்கு
 16. வாவ் !!! ருசி செமையா இருக்கும் போலிருக்கே ..கீதா ஒரு பார்சல் ப்ளீச் :)

  பதிலளிநீக்கு
 17. //ஆனால் நான் உங்களைவிட கொஞ்சம் அழகுதான் அதற்கெல்லாம் பொறமை கொண்டு தேம்ஸ் நதியில் விழுந்திடாதிங்க//

  மை டியர் கடவுளே :) நான் முந்தி ரொம்ப நாளுக்கு முந்தியே ஒரு டீலிங் வச்சிக்கிட்டேன் உங்களோட :)
  என் இதயத்துக்கு பங்கம் விளைவிக்கும் பின்னூட்டங்களை என் கண்ணில் காட்டக்கூடாதுன்னு சொன்னேனா இல்லியா :)
  இப்படி சரியாய் என் கண்ல படர மாதிரி காட்டலாமா :)

  பதிலளிநீக்கு
 18. //ஆனால் நான் உங்களைவிட கொஞ்சம் அழகுதான் அதற்கெல்லாம் பொறமை கொண்டு தேம்ஸ் நதியில் விழுந்திடாதிங்க//

  திருப்பி திருப்பி என் கண்ணில படுத்து நான் அப்புறம் இன்னும் 10 கமெண்டுக்கு அப்புறம் வரேன் :)
  எதோ மூச்சு அடிக்கிற பீலிங் :)

  பதிலளிநீக்கு
 19. ஆர்வக்கோளாறு ஆகிட்டுதுபோல.

  இப்படி காய்கறிலாமா அளந்து செய்வீங்க?!

  பதிலளிநீக்கு
 20. சுவையா இருக்கேன்னு அதிகமா சாப்பிட்டேன் ,தூக்கம் வர்ற முன்னாடி உங்க கதையை படிக்கணும்,வரட்டுமா :)

  பதிலளிநீக்கு
 21. பெயர் புதுசு டிஷுக்கு அதை சொல்லி குடுத்த விதம் இருக்கே அபாரம் எல்லோருக்கும் பேஷ் பேஷ் நன்னாயிருக்க போங்கோ

  பதிலளிநீக்கு
 22. வாழ்தலாமே தவிர உண்ண இயலாது த ம 8

  பதிலளிநீக்கு
 23. தல வாழ எல போடுங்க எங்களை விருந்துக்கு வர சொல்லுங்க !!!!

  பதிலளிநீக்கு
 24. //அட்டகாசச் சமையல். தென் திருப்பேரைக்காரர் டோண்டு என்று ஒரு பதிவர் இருந்தார். எப்பவும் மகர நெடுங்குழைக்காதன் துணை என்று எழுதுவார்.//

  வல்லிம்மா, தென் திருப்பேரை என்று படித்ததுமே டோண்டு சார் நினைவு தான் வந்தது. நீங்கள் சொல்லி விட்டீர்கள்.
  மகர நெடுங்குழைக் காதன் தாசர், மறக்கவே முடியாத பதிவர்.

  பதிலளிநீக்கு
 25. சண்டே க்ரிக்கெட் மேட்ச். இப்போதான் ஒருமணிநேரம் முன்னாடி மேட்ச் முடிந்து கொஞ்சம் கொறித்துவிட்டு கம்ப்யூட்டர ஆன் செஞ்சிருக்கேன். தூங்கி எழுந்தபின் தானே திங்கள் வரணும். தூங்கவே இல்லையே நானு? ஞாயிற ஒரேத் தள்ளா தள்ளிபிட்டு திங்கள் வந்து, கீதா ரெங்கனோட ரெசிப்பியையும் கொடுத்து பண்ணி சாப்பிடுன்னா, என்ன பண்றது? ஞாயிற்றுக்கிழமை மேகம் வேற கண்முன்னாடி சுத்தோ சுத்துன்னு சுத்துது. திருப்பேரை ஆண்டவனே, ராத்திரியில இப்பிடித் திருதிருன்னு முழிக்கும்படி செஞ்சுட்டியே அப்பா!

  இந்தச் சந்திரபாபு வேற: ஒன்னுமே புரியலே ஒலகத்துலே. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது.. ஒன்னுமே புரியலே ஒலகத்துலே..

  பதிலளிநீக்கு
 26. ஆ!!! திங்க வந்துருச்சா....!!! இன்னும் 12 மணி கூட ஆகலியே!!! ம்ம் சரி சரி நாளை வந்து கமென்ட் போடுறேன்...இப்ப ஆஆஆஅவ்!!! கொட்டாவி...

  கீதா

  பதிலளிநீக்கு
 27. ஆஆஆங்ங்ங் உருளைக்கிழங்கு போண்டாவும், பாயாசமும் செய்து லஸ்மி ஆச்சிக்கு(இது வேற லஸ்மி ஆச்சி).. குடுத்திட்டு வருவதற்குள் இவ்ளோ அட்டகாசமா?:).. நவராத்திரி தொடங்கி இனி கேதாரகெளரி.. அப்படியே கந்த சஷ்டி பாறணை எல்லாம் முடிச்ச பின்பு தான் அதிரா ரோர்மல் ஆவேன்ன்:))

  அதுவரை தேம்ஸ்லே குதிக்க மாட்டேன்ன்:).. பொக்கோஸ்.. வெரி சோரி பிக்கோஸ்.. அங்கு பிஸ் இருக்குதெல்லோ:) பிறகு என்னை டச்சு பண்ணிட்டால்.. அபச்சாரம் அபச்சாரம்... பிஸ் பெயர் இருப்போரெல்லாம் கந்தசஷ்டி முடியும்வரை என்னைவிட்டு 4 அடி தள்ளி நிற்கோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 28. ///Thulasidharan V Thillaiakathu said...
  ஆ!!! திங்க வந்துருச்சா....!!! இன்னும் 12 மணி கூட ஆகலியே!!! ம்ம் சரி சரி நாளை வந்து கமென்ட் போடுறேன்...இப்ப ஆஆஆஅவ்!!! கொட்டாவி...//

  உங்க ரெசிப்பியை திங்கள் வரை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை ஸ்ரீராமால்:).. அதனால இன்றே டேஸ்ட்டுப் பண்ணிட்டார் கர்ர்ர்:).. அப்போ நாளைக்கு என்ன பண்ணுவதாம்?:).. கலக்கிடலாம்:)

  பதிலளிநீக்கு
 29. //ஹப்பா சத்தியமா ரெசிப்பி போடறவங்க எல்லாருக்கும் ராயல் சல்யூட்பா!!!//

  இப்போ புரியுதா.. புரியுதா?:) ஹா ஹா ஹா:).. ஆனா இது இன்னமும் ஸ்ரீராமுக்குப் புரியுதில்லையே:).

  // உங்களை எல்லாம் என் செல்ல கினிபிக்குகளாக்க ஆசைதான்!///
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) நான் கினிபிக் ஆகமாட்டேன்ன்ன்:) பூஸ்தேன்ன்:)..

  அந்த சேனைக்கிழங்குக்கு மேலே இருப்பது என்ன என சொல்லலியே?.. நோக்கிள்? வெண்பூசணி?..

  ///அதிரா அங்க தேம்ஸ் நதிக்கரைல சும்மானாலும் குதிச்சுருவேன்னு சீன் போட்டது போதும் இங்க வாங்க///
  ஸ்ஸ்ஸ்ஸ் இன்னும் ஒரு மாதத்துக்கு தேம்ஸ்ல குதிக்க மாட்டேன் அங்கு பிஸ் இருக்குது கீதா:) பிறகு என்னை டச்சு பண்ணிடும்:) மீ விரதம்:).. ஹையோ இது வேற பிஸ்ஸு:)

  பதிலளிநீக்கு
 30. //மதுரைத் தமிழன் உங்களுக்கு வெள்ளை பூஷணிக்காய், //

  ஓ படம் இடம்மாறிப்போச்சு.. அது ஓகே:)).. ஹா ஹா ஹா ட்றுத் கையில வெள்ளைப்.... பிடிக்க வேண்டிய நேரத்தில பூசணியைக் குடுத்திட்டீங்களே கீதா.. ஹையோ ஹையோ:)..

  //ஸ்ரீராம் கத்தரிக்காயை பெரிசா இருந்தா குறுக்க கட் பண்ணிட்டு அந்தப் பாதிய நாலா கட் பண்ணி அதையும் ஒரு கப் கொஞ்சம் கூடுதலா எடுத்துக்கலாம். ///

  அச்சச்சோ ஸ்ரீராமுக்கும் வேலையா?:) நான் அவர் அம்பயர் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்:).. சிங்கக் கூட்டம் என்றதும் களம் குதிச்சிட்டார்போல:)..

  பதிலளிநீக்கு
 31. ///கமான் பாய்ஸ். மத்தவங்க எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடலாம்….பந்திக்கு யாரு முந்திக்கராங்க, கமென்ட் என்ன அடிக்கறாங்கனு பார்ப்போம்!///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மாய்ஞ்சு மாய்ஞ்சு காதில பஞ்சு வச்சுக்கொண்டு மிக்ஸில அரைச்சது நானூஊஊஊஊஉ:)).. இப்போ கமோன் போய்ஸ் ஆம்ம்ம்ம் கர்ர்ர்:) மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. அஞ்சுவுக்கு ஆகாது:) அஞ்சூஊஊஊ டோண்ட் டச்சூஊஊஊஊஊ:))..

  பதிலளிநீக்கு
 32. ///வித்தியாசமான பிரசன்டேஷன் கீதா..///
  ஐ ரோட்டலீஈஈஈ புரூட்டலி அக்றீ வித் ஸ்ரீராம்.. சமையலை விட சம்பாசணைக்கே அதிகம் மார்க்ஸ் கீதா..

  நன்றாக இருக்கு கீதா.. தேங்காய்ச் சொட்டை பொரிச்சுப் போட்ட விதம் புதுசு.

  பதிலளிநீக்கு
 33. Geetha Sambasivam said...//கருவடாமும் தாளிப்போம். குழம்புக் கருவடாம்! :)///

  ஹா ஹா ஹா அவசரமாப் படிச்சேனா.. மயக்கம் போட்டு விழுந்திட்டேன்ன்ன்.. கீதாக்காவா சொல்றா என:) திரும்ப எழும்பிப் படிச்சேன் அது கருவடாம்.. நொட் கருவாடு ஹையோ ஹையோ:)..

  பதிலளிநீக்கு
 34. ///Avargal Unmaigal said...
  அதிரா நோட் திஸ் பாயிண்ட் நகைச்சுவையாய் பதிவு போடுகிற சாக்கில் கீதா அவர்கள் நம்ப ரெண்டு பேரையும் குரங்கு (வாலுங்க)என்று சொல்லி இருக்காங்க....நாம என்ன அவ்வளவு அழகாகவா இருக்கோம். ///

  அது ட்றுத் .... குரங்கு வால் என ஒரு அழகிய பேப்பிள் டார்க் மரூண் கலரில பூ இருக்குதெல்லோ.. அதைச் சொல்றாங்க கீதா:))  ///ஆனால் நான் உங்களைவிட கொஞ்சம் அழகுதான் அதற்கெல்லாம் பொறமை கொண்டு தேம்ஸ் நதியில் விழுந்திடாதிங்க///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் தான் ஒருமாதத்துக்கு தேம்ஸ்ல குதிக்க மாட்டனே:)).. அங்க பிஸ் இருக்குது ட்றுத் பிஸ் இருக்குதாம்:).. ஹையோ இது வேற பிஸ்:)

  பதிலளிநீக்கு
 35. ///Angelin said...
  வாவ் !!! ருசி செமையா இருக்கும் போலிருக்கே ..கீதா ஒரு பார்சல் ப்ளீச் :)//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்லிட்டேன் அஞ்சு உங்களுக்கு ஆகாது:).. உங்களுக்கு வல்லாரை ஸ்மூத்தி போதும் அதிரா சொன்னாக் கேட்கோணும்:).

  பதிலளிநீக்கு
 36. ///Angelin said...
  //ஆனால் நான் உங்களைவிட கொஞ்சம் அழகுதான் அதற்கெல்லாம் பொறமை கொண்டு தேம்ஸ் நதியில் விழுந்திடாதிங்க//

  திருப்பி திருப்பி என் கண்ணில படுத்து நான் அப்புறம் இன்னும் 10 கமெண்டுக்கு அப்புறம் வரேன் :)
  எதோ மூச்சு அடிக்கிற பீலிங் :)///

  அழகான மனிசரைப் பார்த்தாலே சிலருக்கு மூச்சு முட்டுவது நோர்மல்தான் அஞ்சு:)) ஒரு கப் இஞ்சிபோட்டு ரீ குடிச்சிட்டு மெதுவா வாங்கோ.. ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 37. மகர நெடுங்குழைக் காதன்
  திருப்பேரைக் கேட்டு
  அடியார்கள் ஆழ்வார்கள்
  அருளிச் செய்தார் பாட்டு..

  அதுபோல இவ்விடத்தில்
  திருப்பேரைக் கூட்டு
  மனமார்ந்த அன்பினையே
  கருத்துரையில் காட்டு..

  திருப்பேரை நாதன் அவன்
  திருப்பேரும் சுவையே
  விருந்ததனில் சுவைகூட்டும்
  சுவைகூட்டும் சுவையே..

  பதிலளிநீக்கு
 38. குவைத்தில் நள்ளிரவு 12 மணி..

  தேம்ஸ் கரையில் இருந்து சத்தம்..

  அதாரு.. அங்ஙனே?.
  நடுச்சாமத்தில பாட்டு வேறயா!..

  !?....

  பதிலளிநீக்கு
 39. நல்ல வேளை என்னை இந்த வேலைகளுக்கு உதவியாளராக நியமித்திருந்தால் திரு திருவென விழிச்சிட்டு நின்றிருப்பேன். எப்போதும் நமக்கு அடுத்தவங்களை சொல்லி வேலை வாங்கித்தான் பழக்கம். இதில் என்னை எவரேனும் சொல்லிட்டால் போச்சு. ஆனால் கீதா உங்களுக்கு என்னைப்போல் ஹோட்டலை நடத்தும் திறமை உள்ளே ஒழிஞ்சிட்டிருக்குப்பா. . எத்தனை அழகாக வேலைகளை பிரிச்சு கொடுத்து ஆளாளுக்கு வேலை வாங்கிட்டிங்க. இதுக்காகவாச்சும் நீங்க சீக்கிரம் ஒரு ஹோட்டல் தொடங்கிருங்க. நாங்க சாப்பிட வருவோம்.

  திங்களுக்கு திங்கள் வரும் ரெசிபிக்களுக்கு மட்டும் தான் நிஷாவின் பின்னூட்டமா என எங்கள் பீளாக் குழு கேட்டிராதிங்க. நிஷாவுக்கு திங்கள் மட்டும் தான் முழு நேரமும் விடுமுறை, மீதி நாளில் ஓட்டம் ஆட்டம் தான். அதனால் தான் திங்கள் பதிவில் மட்டுமேனும் என் இருப்பை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.

  ஆனாலும் என்னை சாப்பிடக்கூட அதாவது இத்தனை உதவியாளர்கள் படை சூழ சமைத்ததை சுவை பார்த்து முடிவு சொல்லவாச்சும் என்னை கூப்பிட்டிருக்கலாம் கீதா. மீ பாவம்ல. மறந்திட்டிங்க போல.

  ரெசிபீ அத்தனை சுவையாக தான் இருக்கின்றது. இந்த கிழங்கெல்லாம் கிடைக்கும் போது எனக்கும் நேரம் கிடைத்து அதை வாங்கி வந்து வீட்டில் செய்து சுவையாய் இருந்தால் ஹோட்டலிலும் அடுத்த புதிய மெனு என களம் இறக்கி விடலாம். கமிஷன்லாம் கேட்கக்கூடாது என இப்போதே சொல்லி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 40. ///சிலருக்கு மூச்சு முட்டுவது நோர்மல்தான் அஞ்சு:)) yessssஅழகான சிலருக்கு மூச்சு முட்டுவது நோர்மல்தான் /// 😄😄😄😄😄😄😄😃😃😃😃😃😃😃

  பதிலளிநீக்கு
 41. நெல்லை முதலில் எனக்கும் என்னடா இது இன்னைக்கே வந்துருச்சேனு தோணிச்சு...அப்புறம் ராத்திரி ஆகிப் போச்சா கமென்ட் கொடுக்க முடியலை...நேத்து பூரா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிஸி ஒரு மரண நிகழ்வின் பத்தாவது நால் செரிமொனி, உறவினர் அப்படி இப்படி என்று....அதுக்குள்ள நிறைய கமென்ட்ஸ் வந்துருக்கு ஒவ்வொண்ணா தரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 42. //தவறுதான். நாளை வெளியாக வேண்டியது. தவறுதலாக இன்றே வெளியாகி விட்டது. அப்படியே விட்டு விட்டேன்.// போனா போகுது ஸ்ரீராம் விட்டுட்டோம்......ஹாஹாஹாஹாஹா,....

  கீதா

  பதிலளிநீக்கு
 43. ரெசிப்பி ரொம்ப நல்லா வந்திருக்கு. நீங்க பூசணி, சேனை, கத்தரி, வாழை மட்டும்தான் போட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன். இதுக்கு கறுப்பு கொண்டைக் கடலைதான் நல்லா இருக்குமா? வெள்ளை கொண்டைக் கடலை சரிப்படுமா? நீங்க ரெசிப்பி போட்ட நேரம், ஒரு வாரத்துக்கு என் ஹஸ்பண்ட் இங்க வர்றா. செய்துபார்த்திடறேன் (நான் காய் கட் பண்ணி, அவ செஞ்சுடுவா).//

  நெல்லை மாமா அந்த நாலும் தான் போட்டுச் செஞ்சார். சேனையை விட மற்ற காய்கள் கொஞ்சம் கூடுதலா இருக்கும். கறுப்புதான் போட்டார் அந்த மாமா. ஒரு வேளை அந்தக் காலத்தில் கறுப்புதானே இங்கே கிடைச்சுருக்கும்...காபூலி சானா எல்லாம் அப்புறம் வந்ததுதானே. போடலாம் நெல்லை. க் அறுப்பு கிடைக்கலைனா போடலாம்தான்.

  ஆஹா ஹஸ்பண்ட் வராங்களா சூப்பர் எஞ்சாய் நெல்லை...

  கீதா

  பதிலளிநீக்கு
 44. தேங்காய்க்கு, கொட்டைத் தேங்காயை வறுத்துப் போட்டால் இன்னும் வாசனையா இருக்குமே? ஆனா நான் உங்க ரெசிப்பியை அப்படியே ஃபாலோ பண்ணி செய்துபார்க்கப்போகிறேன்.

  கத்தரிக்காய் மட்டும், எப்படி கட் பண்ணி போட்டோ எடுத்தீங்க? அதுக்குள்ள கறுத்துராது? பச்சரி சேர்க்கறதுனால கொஞ்சம் கெட்டியா கூட்டு இருக்கும். படத்தைப் பார்க்கும்போதே கூட்டு வாசனை எனக்கு வருது.//

  கூட்டு வாசனை வருதா...சூப்பர் நெல்லை நல்லாருக்கும் செஞ்சு பாருங்க...அப்புறம் கத்தரிக்காய் கட் பண்ணி உடனே ஃபோட்டோ ஷூட் எடுத்துட்டு தண்ணில போட்டாச்சு. ஆனா இது அத்தனை சீக்கிரம் கறுக்கவும் இல்லை...

  அரிசி சேர்க்கறதுனால கெட்டியா வரும்....ஆமாம் கொட்டைத் தேங்காய்/கொப்பரை வறுத்துப் போட்டாலும் சுவை கூடும். நான் அப்படி எல்லாம் செய்வதுண்டு. இருந்தாலும் இங்கு மாமா சொன்னதை, செய்ததை அப்படியே போட்டுருக்கேன்...நாங்குநேரி ரங்கன் மாமாவுக்கு நன்றிகள் பல...

  கீதா

  பதிலளிநீக்கு
 45. பொதுவா 'தென் கலை ஐயங்கார்கள்' ரொம்ப நல்லா சமைப்பாங்க. அது எதுனால என்று தெரியலை, ஆனால் அவங்களுக்கு இயல்பா நல்ல கைராசி. நல்ல பசி நேரத்துல (1:30 மணி) வந்த பதிவு. பாராட்டுக்கள் கீதா ரங்கன். இதுதான் நீங்க எழுதற முதல் ரெசிப்பியா? // ஆமாம் முதல் வரி யெஸ் யெஸ்.....மிக்க நன்றி பாராட்டுகளுக்கு....ஆம் முதல் ரெசிப்பி...

  கீதா

  பதிலளிநீக்கு
 46. கீதாக்கா தாளகம் யெஸ் எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம். அது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்..ஸேம் ரெச்ப்பி சற்று வித்தியாசத்துடன் எங்கள் ஊரில் இரு சமூகத்தினர் செய்வதை ஒருவர் தாளகம் என்பார்....ஒரு சமூகம் வறுத்து அரைத்த குழம்பு என்பார்கள் இரண்டையும் தருகிறேன். பொங்கல் - மஞ்சள் பொங்கல் + தாளகம் செமையா இருக்கும். திங்கவில் தருகிறேன்...செய்யும் போது அளவு எடுத்து ஃபோட்டோ ஷூட் தரணுமே...செய்கிறேன்...

  இந்த ரெசிப்பியே கூட டூ இன் ஒன் ஆக அன்று செய்து ஃபோட்டோ எடுக்க முதலில் ஸ்ரீராமுக்கு குறிப்புகளும் ஃபோட்டோக்களும் மாற்றி அனுப்ப..அப்புறம் நல்ல காலம் கண்டுபிடித்து அப்புறம் ஸ்ரீராமுக்குச் சரியானதை அனுப்பி...பாவம் ஸ்ரீராம்...பொறுத்துக் கொண்டார் நான் செய்த அட்டகாசத்தை....

  கீதா

  பதிலளிநீக்கு
 47. //கருவடாமும் தாளிப்போம். குழம்புக் கருவடாம்! :)// ஆமாம் கீதாக்கா கூட்டுக் குழம்புனு செய்வதில் கருவடாம் தாளிப்பதுண்டு....எங்கள் வீட்டிலும்...பிறந்த வீட்டில்...

  கீதா

  பதிலளிநீக்கு
 48. //எல்லோரையும் வேலை வாங்கி,செய்யாவிட்டால் பரவாயில்லை. என்னையெல்லாம் கூப்பிடலை. சும்மா பார்த்துண்டு உட்காரலாமே.//

  ஹாஹாஹா...காமாட்சிம்மா நீங்கள் எல்லாம் ரொம்ப அனுபவசாலிகள்! நீங்கள் எல்லோரும் எங்களை மேற்பார்வை இட்டு ஒழுங்காகச் செய்கிறோமா என்று பார்க்கணும் ஹாஹாஹா...உங்களையும் உதவிக்குக் கூப்பிடலாம் ஆனால் நீங்கள் தான் மெயின் கிச்சன் க்வீனாக இருக்கணும்....நாங்கள் எல்லாம் எடுபிடிகள் !!! ஹாஹாஹாஹா...உங்களை எல்லாம் வேலை வாங்க முடியாதும்மா....அம்மா ஸ்தானம்....இவர்கள் எல்லாம் என்னைப் போன்ற என் வயதொத்தவர்களா அதனால் இழுத்துப் போட்டேன்...இதில் அதிரா மட்டும் தான் கொஞ்சம் வயசானவர் போனால் போகுதுனு போட்டுக்கிட்டேன்....ஹாஹாஹா..

  கூட்டு நன்றாக இருக்கும் அம்மா...

  மிக்க நன்றிமா

  கீதா

  பதிலளிநீக்கு
 49. சுவையாக இருக்கும்போலிருக்கிறது
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 50. மதுரை ரொம்ப நன்றி!!! கருத்திற்கும் பாராட்டிற்கும்....ஹாஹாஅஹா அந்த ரகசியம் தெரியாதா....ஆமாம் ஆமாம் ரகசியம் அதே...அதே....ஹாஹாஹாஹா....

  உங்கள் எல்லோரது அறிவுரைகளையும் எடுத்துக் கொண்டேன்...முயற்சி செய்கிறேன் அவ்வளவே....மதுரை...மிக்க நன்றி...ஆனாலும் சில சமயங்களில் உணர்வுகள் கொஞ்சம் அதிகமாக வெளிப்படும் போது கட்டுரையின்/கதையின் வடிவம் பெரிதாகிவிடுகிறதுதான்....

  கீதா

  பதிலளிநீக்கு
 51. வல்லிம்மா மிக்க நன்றிமா கருத்திற்கு...

  கூடவே ஒரு அழகான பாடல் கொடுத்திருக்கின்றீர்கள்...அதை ரொம்பவே ரசித்தேன்....ஆம் அப்படி எல்லோருடனும் சேர்ந்து செய்வது மிகவும் பிடிக்கும்....மிக்க நன்றிமா

  கீதா

  பதிலளிநீக்கு
 52. மதுரை ஹாஹாஹா அதிரா இப்போதைக்கு தேம்ஸில் குதிக்க மாட்டாங்க தேம்ஸ்ல ஃபிஷ் இருக்கு. பிஸ் பிஸ் என்றதும் முதலில் வேறு ஏதோ தோன்றியது ஹாஹாஹாஹாஹா அதிரா அடிக்காதீங்க..!! அப்புறம் தான் புரிந்து கொண்டேன் இது புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள் ஃபிஷ் என்று புரிந்தது!!!! ஸோ நோ தேம்ஸ் ஒரு மாதத்திற்கு....

  கீதா

  பதிலளிநீக்கு
 53. ஏஞ்சல் நல்லா மூட்டிவிட்டுட்டேன்ல மதுரைக்கும் அதிராவுக்கும் நடுவுல போட்டி பாருங்க யாரு அதிகம் வாலுனு!!!! சரி சரி நாம வேடிக்கை பார்ப்போம்...உங்க டீலோட நானும்....ஸ்பா இன்னும் இருக்கு கமென்ட்ஸ் பார்த்துட்டு வரேன்...சரி சரி அப்படியே உங்களுக்குப் பார்ஸல் அனுப்பிடறேன்...அடுத்து ஃப்ரெஷா செய்யும் போது...

  கீதா

  பதிலளிநீக்கு
 54. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மாய்ஞ்சு மாய்ஞ்சு காதில பஞ்சு வச்சுக்கொண்டு மிக்ஸில அரைச்சது நானூஊஊஊஊஉ:)).. இப்போ கமோன் போய்ஸ் ஆம்ம்ம்ம் கர்ர்ர்:) மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. அஞ்சுவுக்கு ஆகாது:) அஞ்சூஊஊஊ டோண்ட் டச்சூஊஊஊஊஊ:))..//

  ஹாஹாஹாஹா ஹலோ எல்லாரும் தான்!!! ஆமாம் நீங்க சொல்லறதும் சரிதான்....நீங்கதானே க்ரூப்ல சீனியஸ் மோஸ்ட்!!! அக்ரீட்!!ஹாஅஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 55. துரை செல்வராஜு சகோ!!! மிக்க நன்றி அருமையான கருத்திற்கு

  தேம்ஸில் யாரு ஆ ஆ பாட்டுச் சத்தமா!! பூஸாரா??!!! ஆனா பூஸார் இப்ப அவங்க விரதம் சகோ!!! அங்க போக மாட்டாங்க!!! ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 56. வாங்க நிஷா! எனக்கும் வேலை வாங்குவது தெரியாது உண்மையாய்ச் சொல்லப் போனால். ஆனால் டீம் லீடர் என்று பொறுப்பேற்றுக் கல்லூரிக்காலத்தில் செய்ததுண்டு. ஆனால் அதில் பட்ட கஷ்டம் நிறையவே. வீட்டில் நான் மிக அரிது யாரிடமேனும் வேலை சொல்லுவது என்பது....ஆனால் குழுவாகச் செய்யப் பிடிக்கும். கலந்து ஆலோசித்து பிறர் சொல்லும் ஐடியாக்களையும் கேட்டுக் கொண்டு என்று ரொம்பவே பிடிக்கும்.....அப்படித்தா இந்தப் பதிவு!! பதிவில்தான் வேலை சொல்லுவது ஹாஹாஹாஹாஹா...

  இந்த டிஷ் நீங்கள் ஹோட்டலில் செய்து பார்க்கலாம். நிஷா! ஆனால் ஹோட்டல்களில் பொதுவாக வெங்காயம் பூண்டு இல்லாமல் செய்தால் ஈர்க்குமா??! மெஸ்ஸில் செய்யலாம் ஆனால் ஹோட்டல்களில்? பாரம்பரிய சுவை என்று போட்டாள் க்ளிக் ஆகலாம்!! மிக்க நன்றி!!! கருத்திற்கும் பாராட்டிற்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 57. கரந்தை சகோ மிக்க நன்றி கருத்திற்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 58. மிக்க நன்றி மிடில்க்ளாஸ் மாதவி கருத்திற்கு....

  பதிலளிநீக்கு
 59. வித விதமாக இப்படி பதிவு போட்டு சாப்பிட தூண்டி விட்டதற்காக உங்களை “அண்டா” சட்டத்தின் பேரில் அடைத்து வைக்கிறோம் ஜாடியிலே

  பதிலளிநீக்கு
 60. //சின்ன க்யூபா கட் பண்ணிடறீங்களா.. ஓகேயா..//

  என்ன ஓகேயா? ஏற்கனவே க்யூபா சின்ன நாடாத்தானே இருக்கு..அதப்போயி ஏன் கட் பண்றீங்க..கேக்கறதுக்கு ஆள் இல்லன்னுதானே! இருங்க, கிம் ஜாங்-உன் -ட்டே சொல்றேன்..

  பதிலளிநீக்கு
 61. வித விதமாக இப்படி பதிவு போட்டு சாப்பிட தூண்டி விட்டதற்காக உங்களை “அண்டா” சட்டத்தின் பேரில் அடைத்து வைக்கிறோம் ஜாடியிலே// ஹாஹாஹாஹாஹாஹா அசோகன் குப்புசாமி சகோ... ஹையோ சிரிச்சுட்டேன் வாசித்ததும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 62. //என்ன ஓகேயா? ஏற்கனவே க்யூபா சின்ன நாடாத்தானே இருக்கு..அதப்போயி ஏன் கட் பண்றீங்க..கேக்கறதுக்கு ஆள் இல்லன்னுதானே! இருங்க, கிம் ஜாங்-உன் -ட்டே சொல்றேன்..//

  ஹாஹாஹாஹா ஹப்பா இப்பத்தான் அசோகன் சகோவோட கமென்ட் பார்த்துச் சிரிச்சு முடிக்காம வந்தா ஏகாந்தன் சகோ... உங்க கமென்ட் ஹாஹாஹாஹாஹா....ம்ம்ம் சொல்லிக் கொடுங்க...கிம்முக்கிட்ட.....சொல்லிட்டீங்க போல அதான் இங்க எனக்கு பதில் கொடுக்க விடமாட்டேங்குது,....நான் ரோபோ இல்லைனு சத்தியம் பண்னச் சொல்லுது ப்ளாகர்!!! நல்லகாலம் ஆதார் கேக்கலை!!!

  க்யுபா // ரொம்பவே ரசித்தேன் வார்த்தை விளையாட்டை!!!

  ஆமாம் கிரிக்கெட் பார்த்து தலை கிறு கிறுனு சுத்தினா க்யூப் எல்லாம் க்யுபா வாத்தான் தெரியும்!!! ஹாஹாஹாஹாஹா...

  மிக்க நன்றி ஏகாந்தன் சகோ...

  பதிலளிநீக்கு
 63. அசோகன் சகோ ஸ்ரீராமை ஜாடியில போட்டு அடைச்சீங்கனா....ஆஹா பட்டணத்து பூதம் போல ஜீ பூம்பானுதான் இனி அவரைக் கூப்பிடணும்...ஹை அப்ப நிறைய மந்திர வேலைகள் எலாம் செய்வாரில்ல??!!! சூப்பர்!! அன்ண்டா காகசம்...ஜீ பூம்பா அந்த தேம்ஸ் நதிக்கரைல பெரிய தடுப்புச் சுவர் எழுப்பிடுங்க...இனி பூஸார் தேம்ஸ்க்குப் போகக் கூடாதுனு!!! ..ஹாஹாஹாஹாஹா
  கௌதம் அண்ணாவை அடைச்சுராதீங்க ஏற்கனவே அவர் புதிர் புதிரா போட்டு..குழப்பி..பிச்சுக்க வைக்கிறார்....ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 64. கீதா ரங்கன்... நீங்க வெறும்ன படத்துக்காகத்தான், அந்தக் காய்கறிகளை ஒவ்வொரு கப்ல போட்டு படம் எடுத்திருக்கீங்கன்னு நினைச்சேன். அளவுக்காகவா அப்படிப் பண்ணியிருக்கீங்க? (ராஜி சொல்றமாதிரி).

  உங்க வீட்டுல சாப்பிட்டவங்க என்ன சொன்னாங்க? நல்லா வந்ததா?

  பதிலளிநீக்கு
 65. //ஆமாம் நீங்க சொல்லறதும் சரிதான்....நீங்கதானே க்ரூப்ல சீனியஸ் மோஸ்ட்!!! அக்ரீட்!!ஹாஅஹாஹாஹா

  கீதா//

  இந்த கமெண்டை படிச்சு அந்த நாலுகால் வால் பதிவர் எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடுகிறார் தேம்ஸ் நோக்கி :)

  பதிலளிநீக்கு
 66. ////துரை செல்வராஜூ said...
  குவைத்தில் நள்ளிரவு 12 மணி..

  தேம்ஸ் கரையில் இருந்து சத்தம்..

  அதாரு.. அங்ஙனே?.
  நடுச்சாமத்தில பாட்டு வேறயா!..

  !?..../////

  ஸ்ஸ்ஸ்ஸ் துரை அண்ணன்.. நீங்க இப்போ காய்ச்சுவது போதாது:).. நல்லாக் காய்ச்சி எடுப்பீங்க என்று பார்த்தால் ஜாமத்தில பாட்டுப் பாடிட்டுப் போகலாமோ கர்ர்ர்ர்:))..

  கீதா நான் புரட்டாசி விரதம் எல்லாம் இல்லை.. அது பார்ப்பதில்லை.. இது நவராத்திரி தொடங்கினால் ஒன்றின் முடிவில் ஒன்றாக கெளரி விதம்.. கந்தசஷ்டி விரதமும் வரும்... அதனால்தான் தேம்ஸ்ல குதிக்க மாட்டேன் எனத்தான் சொன்னேன்:).. போகவே மாட்டேன் எனச் சொல்லிட்டீங்க கர்:))..

  என்னை ஒருநாள் காணாது விட்டாலே, தேம்ஸ் ஓடிப்போய் அஞ்சு வீட்டு வேலியில் நிற்கும் புளியமரத்தில மோதி சூஊஊஊஊ சைட்டு பண்ணிடும்:).. ஹா ஹா ஹா... ஓ லலலாஆஆஆஆஆ:)

  பதிலளிநீக்கு
 67. //நெல்லைத் தமிழன் said...
  கீதா ரங்கன்...
  உங்க வீட்டுல சாப்பிட்டவங்க என்ன சொன்னாங்க? நல்லா வந்ததா?///

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெ.தமிழன் பப்புளிக்கில வச்சு, கீதாவை.. உப்பூடிக் கேள்வி கேட்டு மானபங்கப் படுத்தக்குடா சொல்லிட்டேன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 68. ///Angelin said...
  //ஆமாம் நீங்க சொல்லறதும் சரிதான்....நீங்கதானே க்ரூப்ல சீனியஸ் மோஸ்ட்!!! அக்ரீட்!!ஹாஅஹாஹாஹா

  கீதா//

  இந்த கமெண்டை படிச்சு அந்த நாலுகால் வால் பதிவர் எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடுகிறார் தேம்ஸ் நோக்கி :)//

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது அதிராவுக்கு சுவீட்16 லயே ஞானம் கிடைச்சிட்டுதெல்லோ:) அந்த சீனியர் சிட்டிசென் பற்றிப் பேசுறா கீதா:).. இது புரியாம குய்யோ முறையோ எண்டு:)).. ஆங்ங்ங்ங்ங் கிட்ட வரக்குடா 4 அடி தள்ளி நிண்டே பேசிடலாம்:)) ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
 69. இதோ ஒரு சகல கலாவல்லி உருவாகிறார்

  பதிலளிநீக்கு
 70. ராஜி ஸாரி உங்க கமென்டை கமென்ட்களின் நடுவில் விட்டுவிட்டேன்....ஆமாம் அளந்துதான் போட்டேன்...சேனையை விட மற்ற காய்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கணும் அவ்வளவுதான் இருந்தாலும் பதிவுக்காக நான் போட்ட காய்களை அளந்தேன்...அவ்வளவே....மிக்க் நன்றி ராஜி கருத்திற்கு....

  கீதா

  பதிலளிநீக்கு
 71. ஏஞ்சல், //இந்த கமெண்டை படிச்சு அந்த நாலுகால் வால் பதிவர் எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடுகிறார் தேம்ஸ் நோக்கி :)//

  ஹாஹாஹாஹா...பூஸார் ஃபிஷ் பிடிக்க போக மாட்டரே தேம்ஸ்க்கு ஏஞ்சல் இப்ப விரதமாச்சே அவர்....ஹஹஹஹ்

  கீதா

  பதிலளிநீக்கு
 72. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெ.தமிழன் பப்புளிக்கில வச்சு, கீதாவை.. உப்பூடிக் கேள்வி கேட்டு மானபங்கப் படுத்தக்குடா சொல்லிட்டேன்ன்ன்:))// ஹாஹாஹாஹா அதிரா இது நான் அடிக்கடிச் செய்வதுதான் அதனால பிரச்சனை எல்லாம் இல்லை..

  கீதா

  பதிலளிநீக்கு
 73. நெல்லைத் தமிழன் //கீதா ரங்கன்... நீங்க வெறும்ன படத்துக்காகத்தான், அந்தக் காய்கறிகளை ஒவ்வொரு கப்ல போட்டு படம் எடுத்திருக்கீங்கன்னு நினைச்சேன். அளவுக்காகவா அப்படிப் பண்ணியிருக்கீங்க? (ராஜி சொல்றமாதிரி).

  உங்க வீட்டுல சாப்பிட்டவங்க என்ன சொன்னாங்க? நல்லா வந்ததா?//

  ஆமாம் அளந்துதான் போட்டேன்...அதாவது நான் வழக்கமாக எடுக்கும் அளவு காய்களை கட் செய்ய்யச் செய்ய அளந்து பதிவிற்காக..... எல்லாம் கப் அளவிற்கு வந்தது. சேனையை விட மற்ற காய்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கணும்...அதையும் சொல்லத்தான் குறிப்பாகக் கொஞ்சம் கூடுதல் என்று கப்பில் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்....அளந்துதான் போட்டேன்..

  அப்புறம் இது நான் மாதத்தில் ஒரு முறையேனும் செய்துவிடுவேன் நெல்லை அதனால் வீட்டில் எப்போதும் சாப்பிடுவதுதானே நோ கமென்ட்ஸ். பொதுவாக எங்கள் வீட்டில் ரொம்ப ரேர் நன்றாக இருக்கிறது என்று வாய் திறந்து சொல்லுவது எல்லாம். மகன் இருந்தால் ரசித்துச் சாப்பிடுவான். மாமியார் எல்லாம் எதுவும் சொல்ல மாட்டார்கள். மச்சினர் நன்றாக இருக்கு சூப்பர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சாப்பிடுவார். குறை இருந்தாலும் சொல்லுவார். அவர் எப்போதும் செய்யும் கூட்டு என்பதால்
  அன்று வழக்கம் போல என்று சொல்லிச் சாப்பிட்டார்...

  கீதா

  பதிலளிநீக்கு
 74. ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி என்னிடமும் சமையல் குறிப்பு வாங்கி இங்கு வெளியிட்டமைக்கு!

  இந்த அளவிலிருந்து குறைத்தும் செய்யலாம்.....இது 6 பேர் சாதத்தில் பிசைந்து சாப்பிட என்று செய்ததால் இந்த அளவு...

  மிக்க நன்றி ஸ்ரீராம் மீண்டும் என்னை ஊக்கப்படுத்தி வருவதற்கு....

  கீதா

  பதிலளிநீக்கு
 75. பூவிழி மற்றும் கில்லர்ஜி இருவருக்கும் மிக்க நன்றி....விட்டுப் போச்சு கமென்ட் கூட்டத்தில்!!!ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 76. ரெசிபி படிக்க பிரமாதமா இருக்கு.. கொஞ்சம் கடினமான செய்முறையோ? இதைச் செய்ய எத்தனை நேரமானது?

  ஆமா.. கவுந்து படுத்துட்டு லேப்டாப் தட்டுறாரா மதுரைத் தமிழன்.. ஏன்னன்னன்?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!