வெள்ளி, 22 செப்டம்பர், 2017

வெள்ளி வீடியோ 170922 : மனவ காடுவ ரூபதியே




பயலு தாரி.     




இது ஒரு கன்னடப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்.  80 களில் தொலைகாட்சி எங்கள் வீட்டுக்கு தொலைகாட்சி வந்த புதிதில் ஞாயிறுகளில் டெல்லி நேஷனல் அலைவரிசையில் பிறமொழித் திரைப்படங்கள், பிறமொழிப் பாடல்கள் இடம்பெறும்.  நான் எஸ் பி  பியின் அதி தீவிர ரசிகன் என்ற வகையில் அவர் குரல் வந்தாலே உற்றுக் கேட்பது வழக்கம்.






அப்படிக் கேட்ட வகையில் இந்தப் பாடல் என்னைக் கவர்ந்த பாடல்.  டேப்ரெக்கார்டரில் காலி கேசெட் போட்டு வைத்து  ரெகார்ட் செய்யத் தயாராய் இருப்பேன்.  நல்ல பாட்டு வந்து விட்டால் பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டு ரசிக மகா ஜனங்களிடம் கைகாட்டிவிட்டு ரெகார்ட் செய்தால், வீட்டினர் அமைதி காப்பார்கள்.  என்றாலும் டீவிப் பெட்டியின் அருகிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்  பாட்டியின் லேசான இருமல் அல்லது கனைப்புச் சத்தம் அவ்வப்போது கேட்கும்! அப்படி இந்தப் பாடலை அப்போதே ரெகார்ட் செய்து வைத்து அடிக்கடி கேட்ட பாடல்.




இசை ராஜன் நாகேந்திரா.  இவர் இசையில் நிறைய பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறேன்.  இரு நிலவுகள் குறிப்பாக.  நாம் இளையராஜாவைச் சொல்வது போல கன்னடத்தில் ராஜன் நாகேந்திராவைச் சொல்கிறார்கள், கொண்டாடுகிறார்கள்.  





ஹிந்திப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த ரசிகர்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் என்று சொல்கிறார்கள்.


இதே படத்தில் கனசாலு நீனே மனசலு நீனே என்கிற பாடலும் கேட்க இனிமையாக இருக்கும்.  இதுவும் எஸ் பி பி தான்.  பாடலின் சரணங்களில் அவர் குரலின் குழைவை ரசிக்கலாம்.  கேட்டுத்தான் பாருங்களேன்.




இந்தப் பாடலில் எஸ்பி பாலசுப்ரமணியம் குரலை ரசிக்கிறேன்.  புரியும் ஓரிரு வார்த்தைகளை வைத்து அர்த்தங்களை நானே எழுதிக் கொள்கிறேன், உருவாக்கிக் கொள்கிறேன்!!  எனக்கு கன்னடம் கொத்தில்லா!  காணொளியில் வரும் நடிகர் அனந்த் நாக்.  இவர் சகோதரர் சங்கர் நாக்கும் நடிகர் என்றாலும் இவர் கொஞ்சம் பார்க்க சுமாராக இருக்கிறார்!  இவருக்கு கன்னடத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.  ஒருவர் இவரை 'கன்னடத்து ராஜேஷ் கன்னா' என்கிறார்!









44 கருத்துகள்:

  1. பாடும் நிலா பாலு - என்பார்கள்..

    மற்றபடி கன்னடம் பற்றி ஏதும் தெரியாது..

    பதிலளிநீக்கு
  2. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. எனக்கும் கன்னடம் தெரியாது! இங்கு எஸ் பி பியை விட ராஜன் நாகேந்திரா சொல்லப்பட வேண்டியவர்கள்.

    பதிலளிநீக்கு
  3. கன்னடமும் தெரியாது, தெலுங்கும் தெரியாது. பாடலை ரசிக்க மட்டுமே தெரியும். பாடலை இன்னும் கேட்கவில்லை. மத்தியானமாத் தான் கேட்கணும். :)

    பதிலளிநீக்கு
  4. எஸ்.பி.பி. வளரும் காலகட்டம் அது ஆகவே முழுத்திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    1980 களில் ஹெலிகாப்டரின் ஒருமணிநேர வாடகை 25000/ரூபாய் இது அன்றைய நிலைப்பாட்டில் பிரமாண்டமான காட்சிகள்.

    இப்பொழுதும் ரசிக்க கூடிய நிலையில் காட்சியமைப்பு இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  5. எஸ்பி பி குரல் ரொம்பப் பிடிக்கும். அருமையான பாடகர். அவரது பிற மொழிப்பாடல்கள் அவ்வளவாகக் கேட்டதில்லை. நன்றாகவே இருக்கிறது.

    கீதா: கன்னடப் பாடல்கள் அதிகம் கேட்டதில்லை. எஸ் பி பியின் இளமை சொட்டும் குரல்!!! பாடல் கேட்டாச்சு. நல்லாருக்கு...ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  6. அருமை. கண்கள் மூடி கேட்டால், 'புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது' பாட்டு மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
  7. மொழி எதுவானாலும் இசைக்கு மயங்கு வேன் த ம 5

    பதிலளிநீக்கு
  8. #டெல்லி நேஷனல் அலைவரிசையில் பிறமொழித் திரைப்படங்கள், பிறமொழிப் பாடல்கள் இடம்பெறும்#
    சித்ரமாலா நிகழ்ச்சியை மறக்க முடியாது ,பிறமொழிப் பாடலகளையும் ரசித்த காலமாச்சே !

    பதிலளிநீக்கு
  9. பாடலை ரசித்தேன். "கனசாலு நீனே மனசாலு நீனே" எங்க "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே"வின் உல்டாவோ என்று கேட்டுப்பார்த்தேன். பாடல் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  10. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி :-))

    பதிலளிநீக்கு
  11. ஏனிந்த திடீர் கன்னட மோகம்? எஸ்.பி.பி.-யின் ஹிந்திப்பாட்டுல ஒன்ன
    எடுத்தும் போட்டிருக்கலாமே! ஏக் துஜே கே லியே, ஸத்மா, ஸனம் தேரி கஸம்- இப்படி ஏதாவது ஒரு கேஜ்ரி-ஹாசன் படத்திலிருந்து..?

    நீரு எல்லிருவே... (where are you..) என்பதுமட்டும் புரிந்தது. கடைசியில் கன்னிகை ஓடி வந்ததும் உதட்டில் புன்னகை. பாட்டு புரிந்தாலென்ன, புரியாவிட்டாலென்ன..

    பதிலளிநீக்கு
  12. கீதாக்கா... பாடலைக் கேட்டீர்களா? நன்றாய் இருந்ததா? பாட்டெல்லாம் கேட்பீர்களா? ஜி எம் பி ஸார் மாதிரி கேட்க மாட்டேன் என்று சொல்லி விடுவீர்களா?! இந்தப் பாடல் அவர் கேட்கக் கூடும். அவர் கன்னட தேசத்தில்தானே வசிக்கிறார்!!

    பதிலளிநீக்கு
  13. வாங்க கில்லர்ஜி. ஹெலிகாப்டர் வாடகை நிலவரம் எப்படித் தெரியும்? அப்போது ஹெலிகாப்டரில் வேறு பாடல் காட்சிகள் வந்ததா தெரியாது, ஜூகுனு ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான குருவில் விமானப் பாடல் காட்சி ஒன்று உண்டு! "பறந்தாலும்... விட மாட்டேன்..."

    பதிலளிநீக்கு
  14. வாங்க துளஸிஜி... எஸ் பி பி யின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்திப் பாடல்கள் கேட்டு ரசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க கீதா ரெங்கன்... இரண்டு பாடல்களும் கேட்டீர்களா? உங்கள் சுருக்கமானப்பதில் பார்த்தால் ஒரு பாடல் கூடாக கேட்கவில்லை மாதிரி சம்சயம் வருகிறது!!

    பதிலளிநீக்கு
  16. வருக ஸ்ரீகாந்த்... புதிய அனுமானம். இப்போது கேட்டால் எனக்கும் அது போலத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  17. வாங்க பகவான் ஜி. சித்ரமாலா... ஆம். நிகழ்ச்சி பெயரை மறந்து விட்டேன்! அப்போது நான் மதுரை ரேஸ் கோர்ஸ் காலனி வீட்டில் இருந்தேன்!

    பதிலளிநீக்கு
  18. வாங்க நெல்லைத்தமிழன். வரிகளை வைத்து "அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.." பாட்டு போல என்று முடிவெடுத்திருக்கிறீர்கள்! ஆனால் நான் கேட்கும்போது இந்தப் பாடாய்க் கேட்ட என் பாஸ் சொன்ன ஒரு ஹிந்திப் பாடல் ரொம்பவே பொருந்திப் போயிற்று. கன்னடத்திலிருந்து ஹிந்தியில் தழுவி இருந்திருக்கிறார்கள். விசேஷம் என்ன என்றால் அந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கும். இத்தனை நாள் கவனத்தில் இல்லை! இதைக் கேட்ட நினைவில் அதுவும், அதைக் கேட்ட நினைவில் இதுவும் பிடித்துப் போயிருந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  19. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி... சிரித்து விட்டேன். ஆனாலும் உங்கள் இந்த கமெண்டுக்கு அர்த்தம் இந்தப் பாடலை நீங்கள் ரசிக்கவில்லை என்பதா!

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஏகாந்தன் ஸார். கனடா மோகம் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே பல கன்னடப் பாடல்கள் ரசித்திருக்கிறேன். மலயமாருதம் என்றொரு படம். அதில் எல்லா பாடல்களும் இனிமை. யேசுதாஸ், வாணி ஜெயராம் குரலில். ஹிந்தியிலும் நிறைய எஸ் பி பி பாடல்கள் பிடிக்கும். வன்ஷ் படத்தில் ஆகே தேரி பாஹோன் பாடல் கேட்டிருக்கிறீர்களா? இந்தப் பாடல் கூட ஒரு தமிழ்ப்பாடலை நினைவு படுத்தும் ஆனால் அப்படியே இருக்காது!

    பதிலளிநீக்கு
  21. ///மனவ காடுவ ரூபதியே...பயலு தாரி. ///

    இப்பூடி எல்லாம் பபுளிக்குல:) கெட்ட வார்த்தை ஊஸ் பண்ணக்குடா ஸ்ரீராம்.. அது தப்பூ:)..

    பதிலளிநீக்கு
  22. பாட்டு முழுவதும் கேட்டேன்.. படுபயங்கரமாக ரசிக்கக்கூடியதாக இருந்துது... பாஷை புரிந்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.. ஆனா இதேபோல ஒரு தமிழ்ப்பாடல் இருப்பதுபோல வாய் நுனிவரை வருது.. பட்ட் வெளியே வருதில்லை.... வெண்...நிலவேஏஏஏஏஏஏஏஏஎ... எண்டு கேக்குது காதில ஹாஅ ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம் நான் இப்போது வரும் பாடல்களைக் கேட்பதில்லை என்றுதான் கூறி இருக்கிறேன் பாடல்களை ரசிக்காமலா வாழ்வியலில் சினிமாப்பாடல்கள் என்னு ம்பதிவை எழுத முடியும்

    பதிலளிநீக்கு
  24. நன்றி அதிரா. அதென்ன, படுபயங்கரமாக ரசிப்பது?! என்ன பாட்டு நினைவுக்கு வருகிறது? பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது (உண்மையில் முதலாவது) பாடல் கேட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  25. ஜி எம் பி ஸார்... சும்மா நகைச்சுவைக்காக சொன்னதை சீரியஸாய் எடுத்துக் கொண்டீர்களா என்ன? வருத்தப் பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ராஜி.. இசையை ரசிக்க மொழி தேவை இல்லை என்பதுதான் என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ஸ்ரீராம்ஜி நீங்களே அந்த பாய்ண்டுக்கு சரியாக வந்து விட்டீர்கள் குரு படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிக்காக படப்பிடிப்பு நிலவரத்தை இயக்குனர் ஐ.வி.சசி இந்த விடயத்தை சொல்லி இருந்தார் என்னிடமல்ல ராணி வார இதழில்.... அந்த பேட்டியின் விடயம் நினைவில் வந்தது ஆகவே சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  28. நான் எஸ்.பி.பி யை ரசிக்க ஆரம்பித்தது மஸ்கட் சென்ற பிறகுதான். நிறைய ஸ்டேஜ் ப்ரோக்ராம்கள் கேஸட் பார்ப்பேன். அதில் அவர் தான் பாடிய பாடல்களை புதிதாக சங்கதிகள் போட்டு இம்ப்ரூவைஸ் செய்து பாடுவார். என்ன கற்பனை இவருக்கு என்று பிரமித்து ரசிக்க ஆரம்பித்தேன். நீங்கள் இணைத்திருந்த காணொளியில் ஒரு பாடல் தான் கேட்டேன். பெரிதாக ரசிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  29. நான் எஸ்.பி.பி யை ரசிக்க ஆரம்பித்தது மஸ்கட் சென்ற பிறகுதான். நிறைய ஸ்டேஜ் ப்ரோக்ராம்கள் கேஸட் பார்ப்பேன். அதில் அவர் தான் பாடிய பாடல்களை புதிதாக சங்கதிகள் போட்டு இம்ப்ரூவைஸ் செய்து பாடுவார். என்ன கற்பனை இவருக்கு என்று பிரமித்து ரசிக்க ஆரம்பித்தேன். நீங்கள் இணைத்திருந்த காணொளியில் ஒரு பாடல் தான் கேட்டேன். பெரிதாக ரசிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  30. //ஸ்ரீராம். said...
    நன்றி அதிரா. அதென்ன, படுபயங்கரமாக ரசிப்பது?! என்ன பாட்டு நினைவுக்கு வருகிறது? பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது (உண்மையில் முதலாவது) பாடல் கேட்டீர்களா?//

    ஓஒ நீங்க சொன்னதன் பின்புதான் லிங் போட்டிருப்பதையே கவனிச்சேன்,.. இல்லை நான் கேட்டது வீடியோவில் இருக்கும் பாடல்..

    பதிலளிநீக்கு
  31. இந்தப் பாடலைக் கேட்டதும் தமிழில் நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் பாடல் நினைவுக்கு வந்தது....

    கீதா

    பதிலளிநீக்கு
  32. எங்கிருக்கிறாய் என் காதலியே. நன்றாக இருந்தது. அனந்த் நாக்.....
    ஹிந்தியில் ஸ்மிதாவுடன் அவார்ட் வின்னிங்க் மூவி செய்தாரே.
    நடிப்பார்...ஷங்கர் நாக் மால்குடி டேய்ஸ் எடுத்தாரே.
    நானும் இந்த ரெகார்டிங்க் செய்திருக்கிறேன்.
    1980 ஸ்ல டிவியும், ரெகார்டரும் கிடைத்தது.
    எஸ்பி பி எந்த மொழியில் பாடினால் என்ன. நன்றாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  33. அடுத்த பாடலும் கேட்டேன். எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு. கல்பனா,நல்ல நடிகை. அனியாயமாகத் தற்கொலை செய்து கொண்டார்.
    காவிரித்தாயை சாட்சியாக வைத்துப் பாடல்.
    நன்றாக இருந்தது .நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  34. மீள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  35. வாங்க பானுமதி மேடம்.. பாடல் உங்களுக்குத் பிடிக்கவில்லை போலும்! நீங்கள் சொல்லி இருப்பது போல மேடையில் அவர் பாடும்பத்து நிறைய சேஷ்டைகள் இருக்கும். இம்ப்ரொவைசேஷன் என்கிற பெயரில். ஆனால் ஏனோ அதை என்னால் ரசிக்க முடிவதில்லை. ஒலித்தகடில் கேட்ட ஒரிஜினல் பாடலைக் கேட்க விழையும்போது இந்த சேஷ்டைகள் அதிருப்தியைக் கொடுக்கும்!

    பதிலளிநீக்கு
  36. மீள் வருகைக்கு நன்றி கீதா. நீலநிறம் பாடலா நினைவுக்கு வருகிறது? அட!

    பதிலளிநீக்கு
  37. வாங்க வல்லிம்மா.. "எங்கிருக்கிறாய் என் காதலியே?" தான் சரியான பொருளா? நான் ஏதோ அவர் இயற்கை அல்லது காட்டின் அழகைப் பற்றி பாடுகிறார் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? ஓ... மால்குடி டேஸ் எடுத்தவர் சங்கர் நாக்கா? கல்பனாவா அது? அதுவும் தெரியாது?

    பதிலளிநீக்கு
  38. ஆமாம். ஷங்கர் நாக் தான்.
    அந்தப் பெண் கல்பனா, அப்பா டாட்டா வோ எதுவோ
    ஜெமினி ,பானுமதி யோட நடித்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  39. கட்டிலா தொட்டிலா எப்பவோ சின்ன வயசுல பார்த்திருக்கேன்.நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!