வியாழன், 21 செப்டம்பர், 2017

கவிதையாகும் ஜெ... ஓவியம்
அன்புள்ள ஸ்ரீராம், உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதமாக கவிதை இருக்காது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

இருந்தபோதும், கேட்டுக்கொண்ட அன்பை மதிக்கும் விதமாக எழுத முயன்றிருக்கிறேன். இதுக்கே மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன். கதை என்றால் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டேன்.   

அன்புடன் நெல்லைத்தமிழன்


படத்துக்கான கவிதை   

வியாழன் - எங்கள்பிளாக் – மணந்துகொள் தங்கையே மாமன் மகனை

எனக்கு ஸ்ரீராம் பகிர்ந்துகொண்ட படத்தைப் பார்த்த உடனே, ஒரு சகோதரன், தன் தங்கையின் கன்னத்தில் பவுடரைச் சரி செய்வதுபோல் தோன்றியது. பெண் சிறு வயது என்று தோன்றியதால் வேறு எந்த மாதிரியும் தோன்றவில்லை. அவன் ஏன் பவுடரைச் சரி செய்யவேண்டும்? ஒரு வேளை, அவளைப் பெண் கேட்டு வந்துள்ளவர்கள் ஹாலில் காத்திருப்பதாலா? அப்படி இருந்தால் அம்மாதானே பெண்ணைக் கூட்டிவரவேண்டும் (இல்லைனா அவளின் தோழிகள்). ஒருவேளை அம்மா படுத்த படுக்கையாக இருந்தால்? 


அப்படி இருக்கும்போதும், எப்படி அண்ணன் தன் தங்கையைக் கூட்டிக்கொண்டு வருவான்? வந்தவர்கள், சொந்த மாமன், மாமியாக இருந்து, தன் பையனுக்காகப் பெண் கேட்டு வந்திருந்தால்? ஒருவேளை, சிலர் அண்ணன், தன் தங்கையின் கண்ணீரைத் துடைக்கிறான் என்று நினைத்தால்? ஏன் அவள், பெண் பார்க்க வந்திருக்கும்போது கண்ணில் நீர் வரும்படி இருக்கவேண்டும்? 


ஒருவேளை மாமன் மகன் அழகில்லாதவனாக இருந்தால்? அப்போ அவர்களின் பின்னணி என்னவாக இருக்கும்? தங்கை தேன்மொழிக்கு நிறைய படிக்கவேண்டும், வேலை பார்க்கவேண்டும் என்றும் ஆசை. அடுப்படியில் வாழ்வை முடிக்க அவளுக்கு ஆசையில்லை. அண்ணன் சபேசன் அவளின் இந்த மனதை முழுமையாக அறிந்தவன்.  [ அதென்ன பெயர் சபேசன்?  எங்கிருந்து பிடித்தீர்கள் நெல்லை?  காலத்தைக் குறிக்கும் பெயர்?!  ஸ்ரீராம் ]

அப்பா குடிகாரராக இருந்து, அதனால், பாசமுள்ள தங்கையின் குடும்பத்தோடு உறவாட முடியாமல், அண்ணணுக்கும் அண்ணிக்கும் நிலைமை ஆகிவிடுகிறது. அண்ணன், தங்கையுடனான உறவை அன்பை மிகவும் போற்றுபவன். ஆனால், குடியின் விளைவால், தங்கை கணவர் தரக் குறைவாக பேசி, தங்களின் உறவை அறுக்க நினைத்ததால் வேறு வழியில்லாமல் உறவுத் தொடர்பு அறுகிறது. 


தங்களுக்குப் பெண் இருந்திருந்தால், நிச்சயம் தங்கையின் பையனுக்குத் தான் கொடுத்திருப்பார்கள். காலத்தின் விளைவாக, தங்கை படுத்த படுக்கை ஆகிவிடுகிறாள். தங்கை கணவரும் குடியின் விளைவாக மூன்று வருடங்களுக்கு முன்பு மறைந்துவிடுகிறார். உறவு துளிர்க்கிறது. மாமன் குடும்பத்தின் அன்பையும் நல்லெண்ணத்தையும்  நன்றாக அறிந்தவன் சபேசன், மகராஜனின் நல்ல குணத்தையும் நன்றாக அறிந்தவன் சபேசன்.  மகராஜன், உறவு துளிர்க்கவேண்டும் என்ற ஆசையிலும் இயல்பாக தேன்மொழியின் மீது கொண்ட அன்பாலும் அவளை மணக்க விரும்புகிறான். மாமனுக்கும் மாமிக்கும் உறவு, அன்புப் பிணைப்பு என்பது அதைவிட மேலானதாகத் தெரிகிறது. இதனால் அவர்களே இந்த உறவை விரும்பி வேண்டி வந்திருக்கிறார்கள்.

பெண்பார்க்கும் படலத்துக்கு முன், சபேசன், தேன்மொழியின் கன்னத்தில் உள்ள பவுடரைச் சரி செய்யும்போது, அவளிடம் கூறுவதாக நான் எழுதியிருக்கிறேன்.

கவிதை ரசிக்கும் மன நிலை உள்ளவன் அல்ல நான். எனக்கு மரபுக் கவிதைகள், கொஞ்சம் Elevated contents உள்ள பக்திப் பாடல்களில்தான் மிகுந்த விருப்பம். துரை செல்வராஜன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அபிராமி அந்தாதி, நாயன்மார்களின் பாடல்கள், ஆழ்வார்களின் பாடல்கள், கண்ணதாசனின் மரபுக் கவிதைகள் (அவருடைய இயேசு காவியம் எனக்கு கல்லூரியில், மாரல் சயன்ஸ் தேர்வில் முதலாவதாக வந்ததற்காகக் கிடைத்த பரிசு. அதில் உள்ள கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்) போன்றவற்றை ரசிப்பேன். திரைப்படப் பின்னணியை மறந்துவிட்டு, கண்ணதாசனின், வாலியின் தத்துவப் பாடல்களை மிகவும் ரசிப்பேன். வாலியின் முற்றெதுகைக் கவிதைகள் சிறப்பானவை என்ற போதும், அதில் என்னால் ஆழமுடிவதில்லை. இணையத்தில் சீராளன் போன்றவர்கள் எழுதும் மரபு, சந்தக் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும்.

ரசிகன், ரசிக்கப்படுபவர் போல எழுத முடியுமா, அதிலும் கவிதை? அது சாத்தியமா? அதற்கென்ற திறமை வேண்டும். எழுத்தைவிட, ஓவியத்தைவிட, கவிதை எழுத தனிப்பட்ட மோன மன நிலைவேண்டும். என்னிடம் அது இல்லை. ஸ்ரீராம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத முயன்றிருக்கிறேன். எனக்கு கண்ணதாசன் அவர்கள் இயேசு காவியத்தில் எழுதிய முதல் பாடல்தான் ஞாபகத்தில் வருகிறது  (பொங்குமாங் கடல் புகுந்தளவெடுக்கப் போயினன் வெற்றி பெற்றேனா…… தாய்த்தமிழ் ஆசை வாய்த்த’நூற் பற்றுத் தந்ததால் துணிந்துவிட் டேனா?.)


[ கவிதையை விட விளக்கம் பெரிதாக இருந்தாலும் க(வி)தை நன்றாக இருக்கிறது நெல்லைத்தமிழன் - ஸ்ரீராம் ]

மணந்துகொள் தங்கையே மாமன் மகனை

மாமனும் மாமியு மேநம்
உறவினை வேண்டி நின்றார்
தங்கையின் மகளைத் தன்றன்
தனயனுக்காய்க் கேட்டு வந்தார்
தங்களுக்குப் பெண் இருந்தால்
என்றைக்கோ உங்கள் வீட்டில்
தேன்மொழி யின்வாழ்வு இப்போ
தொடரட்டும் எங்கள் வீட்டில்

மருமகள் என்ற போதும்
மகளேபோல் பார்ப்போம் அவள்தன்
கல்வியைத் தொடரச் செய்வோம்
களிப்புறும் வகையில் வைப்போம்
அடுப்படி வேலை என்று
அடக்கியே வைக்க மாட்டோம்
எம்முடன் வாழ்வதி லேஅவள்
இன்புறுவள் என்றே சொன்னார்

உன்நலம் எண்ணியே நாளும்
வாழ்கின்றேன் தங்காய் நானும்
தந்தையை இழந்த போதும்
மனம் தளருதல் தேவையில்லை
படிப்பதில் விருப்பம் உண்டு
அதுபற்றிக் கவலை வேண்டாம்
மணந்துகொள் மாமன் மகனை
வாழ்க்கையில் வளமுண் டாகும்

ஆணுக்கு அழகு என்ன
மின்னிடும் முகலட் சணமா
கட்டிய மனைவி எண்ணம்
ஈடேற்றி மகிழும் குணமா
உருவத்து அழகு எல்லாம்
காலத்தே கரைந்து போகும்
அவனகத்தில் ஒளிரும் எண்ணம்
வாழ்க்கையே மின்னும் திண்ணம்

குணத்திலே பெயருக் கேற்ற
மகராஜன் நம்மாமன் மகன்
உன்னையே துணையாய்க் கொள்ள
உறுதியாய் வேண்டி நின்றான்
எவருக்கோ கொடுத்து உந்தன்
நலத்தையே எண்ணி நாளும்
கவலையில் கிடந்து ழல்வேன்
உறவெனில் கவலை இல்லை

உன்’நலம் எண்ணியே நாளும்
வாழ்கின்றேன் தங்காய் நானும்
நம்வாழ்வின் துன்ப காலம்
சென்றது என்றே தோணும்
என்னிலும் மேன்மை யாய்உன்
நலத்தினைப் பார்த்துக் கொள்வான்
மணந்துகொள் மாமன் மகனை
வாழ்க்கையே ஒளிரும் தங்காய்

=========================================================================


அன்பு ஸ்ரீராம்,எங்கள் Blog-ல் ஜெயராஜின் படத்திற்காக, நீங்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு சிறுகவிதை தருகிறேன்:


வாசகர்களுக்குக் கவிதையை அணுகுவதற்காக ஒரு குட்டிக்குறிப்பு: 


சில பெரிசுகள், சிறிசுகளை எப்போதும் critical-ஆக observe செய்வதையும், இளசுகளின் காரியங்கள்பற்றிக் காரமாக comment பண்ணுவதையும் பார்க்கிறோம் இல்லையா. இங்கே ஜெயராஜின் ஓவியம் உயிர் பெறுகிறது. சீனை சற்றுத் தள்ளியிருந்து கவனிக்கிறது ஒரு பெரிசு: அதன் மனம் பதைபதைப்பில் ஏதோ சொல்கிறதே :


கொடுக்காதே இடம்..
மீசைக்காரப்பயல் ஏதோ திட்டம்போடுகிறான்
ஆசை கீசை வைத்துவிடாதே அழகுக் கிளியே 
காசைக் கரியாக்கிக் கடைக்குப்போய் 
ஓசைப்படாமல் ஏதோ வாங்கிவந்திருக்கிறானே
மல்லிகைப்பூவோ மசால்தோசையோ
முகவாயைத் தொட்டு முகரவைக்கிறானே - உன்
அகத்துக்குள் நுழைய ஐடியா போடு்கிறானா
அயோக்யன்.. அற்பன்.. ஆண்களில் கடையன்..
தடியனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில் - நீ
படிந்துவிட்டதாக நினைத்துவிடுவான்
மடப்பயலிடம் நீ மசிந்துவிடாதே
தடம் மாறியே பயணித்துவிடாதே !


**


அன்புடன், 
ஏகாந்தன்


[ அந்தப் 'பெரிசி'ன் பதைபதைப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது ஏகாந்தன் ஸார்...  அறியாத வயதில் புரியாத உணர்வுகளைக் குழப்பிக்கொள்ளும் பருவம் - ஸ்ரீராம்  ]

=====================================================================================


உரிமையுடன் ஒரு வேண்டுகோள்  :  கவிதையைப் படைத்த இருவரும் மனம் மகிழும் வண்ணம் அவர்கள் கற்பனை பற்றிய தங்கள் எண்ணங்களை தனித்தனியாக பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் மகிழ்ச்சி.  கவி படைத்தவர்களுக்கும் மகிழ்ச்சி 


85 கருத்துகள்:

 1. ஆகா.. அருமை.. அருமை..

  கவி மழை.. கொண்டல் எனப் பொழிந்தது கொஞ்சு தமிழ்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. எனது தொகுப்புகளும் தம்மைக் கவர்ந்தவை என்று குறித்ததைக் கண்டு மனம் நெகிழ்கின்றது..

  என்றும் அன்புடன்..

  பதிலளிநீக்கு
 3. நெல்லைத்தமிழனின் கவிதையை விட கவிதைக்கான முன்னோட்டம் - நற்கருப்பஞ்சாறு..

  பதிலளிநீக்கு
 4. எகாந்தன் அவர்களது அறிவுரை அமுத ஊற்று...

  கேட்பார் கேட்டிருந்தால் கேடுகளே இல்லை நாட்டில்..

  பதிலளிநீக்கு
 5. //எம்முடன் வாழ்வதிலே அவள் இன்புறுவாள் என்று சொன்னார்//

  ஒரு அண்ணனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் ?

  நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு ஸூப்பர் நான் மிகவும் இரசித்த வரிகள்.

  பதிலளிநீக்கு
 6. நண்பர் ஏகாந்தன் அவர்களுக்கு...

  தோசையை கொடுத்து
  ஆசையை காட்டும்
  மீசைக்காரர்களும்
  உண்டு என்பதை நாசூக்காக எச்சரிக்கையுடன் சொன்ன வரிகள் அருமை
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. நெல்லைத் தமிழன் கதையும் அதாவது கவிதையின் பின் புலமும், கவிதையும் அருமை! கலக்குகின்றீர்கள்! எல்லா ஜெர்னர்களிலும் கலக்குகின்றீர்கள் நெல்லைத் தமிழன். பாராட்டுகள்! வாழ்த்துகள்! (எங்கள் இருவரின் கருத்தும்)

  பதிலளிநீக்கு
 8. கவிதை,கதை எல்லாமே மிக அருமை நெல்லைத்தமிழன். பிடித்தோ பிடிக்காமலோ எழுதிய கவிதையே
  இத்தனை அழகாக இருக்கிறதே. இன்னும் ஈடுபட்டு எழுதினால் அமிர்தம்தான்.
  உணர்ச்சிக் குவியல். மனம் நிறைந்த வாழ்த்துகள் அப்பா.

  வேறு அலசிச் சொல்ல என் தமிழுக்கு வலு பற்றாது
  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++.
  ஏகாந்தன் அடுத்த எல்லைக்குப் போய் மீசைக்காரனை மிரட்டுகிறார்.
  அதுவும் சரிதான்.

  காலம் அப்படித்தான் இருக்கிறது.
  அருமை அருமை. வாழ்த்துகள் ஏகாந்தன்.

  இருவருக்கும் அண்ணனாகவும், வில்லனாகவும் தோன்றிய
  இந்த உருவம் உண்மைக் காதலனாக வடிவெடுத்தால்
  எப்படி இருக்கும்.
  அந்தப் பெண் உள்ளம் என்ன சொல்கிறது.
  பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. நெல்லைத் தமிழன் உறவுப் பாலத்தை, பிணைப்பை வலியுறுத்திச் சொல்லிச் செல்கிறார் என்றால் ஏகாந்தன் சார் அழகுக் கிளிக்கு எச்சரிக்கை விடுவது அசத்தல்!!! ரசித்தோம் சார். வாழ்த்துகள் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. இரு கவிதைகளும் அட்டகாசம் மிகவும் ரசித்தோம்!

  பதிலளிநீக்கு
 11. வாஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கதையா... அண்ணன் தங்கைப் பாசமா.... வயசானவரின் அறிவுரையா... மீசைக்காரக் காதலா.... ஹா ஹா ஹா இங்கின துண்டு போட்டு இடம்பிடிச்சு வச்சிட்டுப் போகிறேன் கொமெண்ட்ஸ் போட.... அதுவரை என் துண்டை யாரும் டச்சூஊப் பண்ணக்குடா:)

  பதிலளிநீக்கு
 12. நெல்லை! 'அக்கா மகளென்றால் சுக்கா? மிளகா?.. சும்மா கிடைக்குமா' என்பது மாதிரி பாரதிதாசன் கவிதை ஒன்று உண்டு. அது நினைவுக்கு வந்தது. காதலன்--காதலி டைப் படத்தை தலைகீழாக மாற்றிய பெருமை உங்களுக்கே! (இந்த மன்றத்தில் ஓடி வரும், தென்றலைக் கேட்கிறேன். (போலீஸ்காரன் மகள் திரைப்பாடலும் நினைவில் நின்றது)

  ஏகாந்தன், சார்! பிரமாதம். மிகவும் ரசித்தேன். அதுவும், 'மல்லிகைப்பூவோ, மசால் தோசையோ' படத்திற்கு ரொம்பவும் பொருந்தி வருகிறது.. மீசைக்காரப் பயலின் திட்டத்தைத் தவிடு பொடியாக்கி விட்டீர்கள்!..

  பதிலளிநீக்கு
 13. ///உரிமையுடன் ஒரு வேண்டுகோள் : கவிதையைப் படைத்த இருவரும் மனம் மகிழும் வண்ணம் அவர்கள் கற்பனை பற்றிய தங்கள் எண்ணங்களை தனித்தனியாக பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் மகிழ்ச்சி.///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*956743724... ஏன் கர் சொல்றீங்க என யாரும் என்னைக் கேட்டிடாதீங்க:) பிறகு நான் டங்கு தடுமாறி.. உண்மையைச் சொல்லிப்போடுவேன்ன்:)..

  பதிலளிநீக்கு
 14. ///நெல்லைத்தமிழன்//உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதமாக கவிதை இருக்காது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?///

  அப்போ இட்லிப்பொடி தீர்ந்திடுச்சோ?:) ஹா ஹா ஹா.. ஆரம்பிக்கும்போதே அழக்குடாது கர்ர்:)).. அதிராவைப்போல.. கூக்குரல் போட்டுக்கொண்டே எழுதப் பழகோணும்:).. ஹையோ ஏன் எல்லோரும் ஒரு மாறிரி:):) பார்க்கினம்:)...

  நீங்க வரவர நல்லாவே அனைத்திலும் கலக்குறீங்க நெல்லைத்தமிழன்.. பேசாமல் ஒரு புளொக் ஆரம்பிச்சிடுங்கோ...

  பதிலளிநீக்கு
 15. @நெ.த///மணந்துகொள் தங்கையே மாமன் மகனை///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என ஒருபக்கம் வலியுறுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில இப்பூடி ஊக்கப்படுத்துறீங்க:)..

  கவிதைதானே கேட்டார் ஸ்ரீராம்:).. பை வன் கெட் வன் ஃபிறீ ஆக்கி அனைவரையும் குளிர்விச்சிட்டீங்க:).. இதில ஸ்ரீராம் ஃபிரீஸ் ஆகிப்போயிட்டார் போலவே தெரியுதே:)..

  நெ.த... உங்களுக்கும் கற்பனை கன்னா பின்னா எனப் பறக்கிறது:).. 4 அல்லது 6ம் நம்பர்காரராக இருப்பீங்களோ?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. இருங்கோ கவிதை படிச்சிட்டு வாறேன்ன்:).

  பதிலளிநீக்கு
 16. @நெ.த//
  //மாமனும் மாமியு மேநம்//

  ஹா ஹா ஹா நான் வசனத்தை உடைச்சு உடைச்சு எழுதினால் அடிக்க வருகினமே கர்:).. இங்கு சொல்லை உடைச்சிருக்கும் விதம் அருமை:).

  உண்மையிலேயே மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க வாழ்த்துக்கள் நெ.த.. ஆனா இதில வரும் அண்ணன் ஒரு தப்பு செய்கிறார்ர்... அறிவுரைகள்தானே சொல்கிறாரே தவிர... உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா என ஒரு கிளவி.. சே..சே.. கேள்வி கேட்கல்லையே... உண்மையில் பாசமுள்ள ஒரு அண்ணன் எனில் முதல் கேள்வி அதுதானே கேட்கோணும்.. சரி விடுங்கோ:) எனக்கு இப்பூடித்தான் இடக்கு முடக்காவே எண்ணங்கள் தோன்றும்..

  உங்களுக்குள் இருக்கும் திறமையை அறிஞ்சமையாலேயே ஸ்ரீராம் விரட்டி விரட்டிக் கவிதை கேட்டார்... ஆனாலும் ஸ்ரீராமை ஏமாத்திப்போட்டீங்க நெ.த:).. ஹா ஹா ஹா ஏன் தெரியுமோ?:).. உங்கள் பின்னூட்டங்களையும் ரசனைகளையும் பார்த்து, அப்படத்தைப் போட்டு கவிதை கேட்டதே நீங்க நல்ல ஒரு காதல் கவிதை எழுதுவீங்க:).. அதை ரசிச்சுக்கொண்டே மொட்டை மாடியில இருந்து ரீ குடிக்கலாம் என எதிர்பார்த்தார்:).. சே..சே.. பொசுக்கென ஏமாத்திட்டீங்க:).. ஹா ஹா ஹா.. மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:).. தேம்ஸ் என்னை அழைக்கிறது:).

  ஊசிக்குறிப்பு:
  கவிதையில் வரும் தங்காய்.. எனும் சொல் பார்த்ததும் எனக்கு எங்கட அப்பம்மாவின் நினைவு வந்துவிட்டது. அப்பம்மாவைச் சுற்றி இருந்து கதை சொல்லச் சொல்லுவோம்.. அவ அடிக்கடி ரிப்பீட் பண்ணும் கதைகளில் ஒன்று.. “ஏழு பிள்ளை நல்ல தம்பி நாக தங்கா[ய்]..ள்”..

  பூனைக்குட்டியாகிய ராசகுமாரன், யானைக்குட்டியாகிய ராசகுமாரன்.. இப்படிப் பல கதைகள் இயற்றியும் சொல்லுவா ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
 17. அண்ணனின் பாசத்தையும் ,பெருசுவின் எச்சரிக்கையையும் ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 18. //ஸ்ரீராம் ]//[ அந்தப் 'பெரிசி'ன் பதைபதைப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது ஏகாந்தன் ஸார்.///

  அந்தந்த வயசு வரும்போது:) அந்தந்தப் படபடப்பு தொற்றிக் கொள்ளும்தானே ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா ஹையோ ஏன் ஸ்ரீராம் இப்போ கல்லெடுக்கிறார்ர்ர்:) நான் அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்ன்:) கீதாக்கா பக்கத்தில ஆண்டோடு எழுதிய ஒரு கொமெண்ட் படிச்சுத்தொலைச்சிட்டேன் ஹா ஹா ஹா:)) ஹையோ மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

  பதிலளிநீக்கு
 19. //Bagawanjee KA said...
  அண்ணனின் பாசத்தையும் ,பெருசுவின் எச்சரிக்கையையும் ரசித்தேன் :)//
  ஹா ஹா ஹா என்னால முடியல்ல பகவான் ஜீ.. ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 20. அதிரா....956743724 இது யார் நம்பர் ,என்ன உண்மை அறிய விரும்புகிறேன் :)

  பதிலளிநீக்கு
 21. @ஏகாந்தன்//சில பெரிசுகள், சிறிசுகளை எப்போதும் critical-ஆக observe செய்வதையும், இளசுகளின் காரியங்கள்பற்றிக் காரமாக comment பண்ணுவதையும் பார்க்கிறோம் இல்லையா.///

  ///சீனை சற்றுத் தள்ளியிருந்து கவனிக்கிறது ஒரு பெரிசு///

  ஹா ஹா ஹா முன்னுரை படிச்சே.. முப்பது தரம் விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்ன்ன்ன்:))எவ்ளோ அழகாக உண்மையைச் சொல்லி இருக்கிறீங்க:)... நீங்க இன்னும் சற்றுத்தள்ளியிருந்து இத்தனையையும் அவதானிச்சிருக்கிறீங்க:))...

  உண்மைதான், தம் காலத்தில் இப்பூடி எல்லாம் அனுபவிக்கக் கிடைக்கல்லியே எனும் ஆதங்கத்திலதான், இப்பூடப் பொறாமையில் அட்வைஸ்போல திட்டிக்கொண்டிருப்பார்கள் சிலர் ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
 22. //Bagawanjee KA said...
  அதிரா....956743724 இது யார் நம்பர் ,என்ன உண்மை அறிய விரும்புகிறேன் :)///

  ஹா ஹா ஹா ஹையோ அது நெம்பெர்:) எல்லாம் இல்லை... என்னுடைய கர்ர்ர்ர்ர்ர் ஐ அத்தனை தடவை பெருக்கிக் கொள்ளவும் எனச் சொன்னேனாக்கும்:) ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
 23. @ஏகாந்தன்///கொடுக்காதே இடம்..//
  ஹையோ ஸ்ரீராமைப் பார்த்து உப்பூடி எல்லாம் சொல்லக்கூடாது:) பயந்திடப்போறார்ர் ஹா ஹா ஹா:).. தலைப்பு அருமை...

  ///மீசைக்காரப்பயல் ஏதோ திட்டம்போடுகிறான்
  ஆசை கீசை வைத்துவிடாதே அழகுக் கிளியே//

  ஹா ஹா ஹா என்னா கொமெடியான ரசனை எனக்கு சிரிச்சுச் சிரிச்சே வயிறு வலிக்குது... ஹொஸ்பிட்டல் பீஸ் ஐ ஸ்ரீராம்தான் தரோணும்:)..

  ///தடியனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில் - நீ
  படிந்துவிட்டதாக நினைத்துவிடுவான்
  மடப்பயலிடம் நீ மசிந்துவிடாதே///

  ஹா ஹா ஹா எதைச் சொல்ல எதை விட.. மொத்தத்தில் அழகிய ஒரு நகைச்சுவை.. இப்பூடி இன்னும் நிறைய எழுதுங்கோ... எனக்கிது ரொம்பப் பிடிச்சிருக்குது ..

  கற்பனையில் எண்ணிப் பார்க்கிறேன்ன்.. அப்படத்தைப் பார்த்தபடி தூரத்தில் ஒரு பெரியவர் இருந்து திட்டிக்கொண்டிருப்பதை ஹா ஹா ஹா உண்மையில் சூப்பர்...

  நெ. தமிழன் கவிதை படிச்சு.. சிவாஜி சாவித்திரி பீலிங்ஸ் சோடு கீழே வந்து உங்கள் கவிதை படிச்சு சிரிச்சு உருண்டு எழுந்து போகிறேன்ன்ன் ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
 24. வாவ் !!சூப்பர்ப் நெல்லைத்தமிழன் ..ஒரு விதத்தில் நான் அண்ணன் தங்கை கவிதையை எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து ..
  படத்தை பார்த்ததும் சுஜாதா கதையில் வர வசந்த் ஜொள்ளிக்கிட்டே யாரோ ஒரு பொண்ணுக்கிட்டா மேக்கப் துடைக்கிற மாதிரி சீனுக்கு கவிதை வரும்னு நினைச்சேன் :)
  ஆனா அப்படியே மாற்றி அண்ணன் தங்கைபாசமாக்கிய விதமும் அதுக்கு முன்னுரையும் எழுதி கலக்கிட்டீங்க :)

  பதிலளிநீக்கு
 25. @ ஏகாந்தன் சார் :)

  கொடுக்காதே இடம் தலைப்பில் அமைந்த கவிதை அருமை ..


  இந்த மாதிரி காட்சி பார்த்தா இயல்பாவே நமக்குள் இருக்கும் தாய் /தந்தை /அண்ணன் அக்கா உணர்வுகள்//பீ கேர்புல்ன்னு //எச்சரிக்கை மணி அடிச்சிட்டே டபால்னு வெளிவரும் :)
  உண்மையில் நானே சில நேரம் 10-15 லிருக்கும் பெண் பிள்ளைகள் பெரிய ஆண்களுடன் பழகும் போது வெளியிடங்களில் கவனிச்சிருக்கேன் :)
  அதை அழகாய் வெளிப்படுத்தியவிதம் அருமை ..

  பதிலளிநீக்கு
 26. வெளியிட்டமைக்கு நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 27. ஸ்ரீராம் - அதிராவின் பின்னூட்டத்தைப் பார்த்து எனக்கு ஒரு கதை எழுதணும்னு ஆசை. அதற்கு இன்ஸ்பிரேஷன் நான் படித்த ஒருவரின் உண்மைச் சம்பவம். எழுதி அனுப்புகிறேன் (இதே படத்துக்கு). பொருத்தமாயிருந்தால் கே.வா.போ.கதையில் வெளியிடவும்.

  பதிலளிநீக்கு
 28. ஏகாந்தன் - உங்கள் கவிதையை ரசித்தேன்.

  "அயோக்யன்.. அற்பன்.. ஆண்களில் கடையன்." - உண்மையைச் சொன்னால், தனக்கு, வயது வந்த திருமணம் செய்துகொடுக்கும் அல்லது அதற்கு முந்தைய ஸ்டேஜில் உள்ள பெண் இருக்கின்ற தந்தைகள்தானே இவ்வாறு எண்ணுவார்கள். பொதுவாக ஆண்கள் இப்படி நினைத்தால், அது 'தனக்கு அந்த வாய்ப்பில்லையே' என்ற பொறாமை காரணமாகத்தானே.

  கர்சீப்பை, வெறும் தோசை என்று கற்பனை செய்திருந்தாலும் ஓகே. மசால்தோசை என்று கற்பனை செய்துள்ளீர்களே. மசால்தோசையை எப்படி கையால் தூக்குவார்கள் என்று நினைத்தேன் (படத்தில் உள்ளதுபோல்). சிரிப்பு வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 29. /உங்கள் பின்னூட்டங்களையும் ரசனைகளையும் பார்த்து, அப்படத்தைப் போட்டு கவிதை கேட்டதே நீங்க நல்ல ஒரு காதல் கவிதை எழுதுவீங்க:).. அதை ரசிச்சுக்கொண்டே மொட்டை மாடியில இருந்து ரீ குடிக்கலாம் என எதிர்பார்த்தார்:).. சே..சே.. பொசுக்கென ஏமாத்திட்டீங்க:).. ஹா ஹா ஹா.//

  எனக்கு என்னாச்சுன்னு தெரில இப்போ எந்த கமெண்ட் படிச்சாலும் அது காட்சியா மனத்திரையில் ஓடுது :)
  யாராவது ஹெல்ப் பண்ணுங்க ஹாஆ ஹாஆ :)

  பதிலளிநீக்கு
 30. நான் என்னமோ காதலன் தன் கைக்குட்டையால் காதலி கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்வதாக நினைக்க. நம்ம நெ.த. அடிப்படையையே மாற்றி விட்டார்! அந்தக் கோணமும் அருமை! முன் கதைச் சுருக்கமும் (ஹிஹிஹி) பின்னர் வந்த கவிதையும் அருமையாக இருக்கின்றன. நெ.த. ஒரு சகலகலாவல்லவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

  பதிலளிநீக்கு
 31. ஏகாந்தன் பார்வையே வேறே மாதிரி! ஏமாற்றுக்காரனாகத் தோன்றி இருக்கிறது அவருக்கு! கைக்குட்டையை மசால் தோசை என நினைத்து விட்டார். மசாலா எல்லாம் கீழே விழுந்துடாதோ! :)))) மல்லிகைப் பூவாட்டம் தெரியலை. கைக்குட்டையின் பார்டர் தனியாத் தெரியுதே! :) கண்ணைத் துடைக்கும் சாக்கில் முத்தம் கொடுக்க முயன்றிருக்கிறானோ?

  ஜோக் தனியா இருக்கட்டும்! அவருடைய எச்சரிக்கைக் கவிதையும் பிரமாதம். ஏகாந்தன் எழுதுவதற்குக் கேட்கவா வேண்டும்! பிரமாதம்! இரண்டையும் சேர்த்து வெளியிட்டு இருவரையும் கௌரவப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 32. //நெல்லைத் தமிழன் said...
  ஸ்ரீராம் - அதிராவின் பின்னூட்டத்தைப் பார்த்து எனக்கு ஒரு கதை எழுதணும்னு ஆசை//

  கடவுளே கதை எழுதும் ஆசை வருமளவுக்கு அப்பூடி நான் என்ன சொல்லிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா.. ஸ்ரீராம் ஃபிரீஸ் ஆகிப்போயிருக்கிறார்.. இனி ஆராவது ரிலீஸ் சொன்னால்தான் இங்கின வருவார்:).. கொஞ்ச நேரத்துக்கு ஆரும் சொல்லிடாதீங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:) மீ இங்கிருந்து போனபின் சொல்லுங்கோ:))

  http://929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89

  பதிலளிநீக்கு
 33. ///Angelin said...

  எனக்கு என்னாச்சுன்னு தெரில இப்போ எந்த கமெண்ட் படிச்சாலும் அது காட்சியா மனத்திரையில் ஓடுது :)
  யாராவது ஹெல்ப் பண்ணுங்க ஹாஆ ஹாஆ :)//

  அங்கு ராமாயணம் ஓடியதைப் போலவா?:) ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 34. @ நெல்லைத் தமிழன்:

  //எவருக்கோ கொடுத்து உந்தன்
  நலத்தையே எண்ணி நாளும்
  கவலையில் கிடந்து ழல்வேன்//

  இது ஒரு பெரும்பிரச்சினை பலர் வாழ்வில். ’பெண்ணைக் கொடுத்தேனோ கண்ணைக் கொடுத்தேனோ’ எனச் சொல்வார்கள். தங்கையோ, அக்காவோ, பெற்ற மகளோ - கல்யாணம் எனப்பண்ணிவிட்டு, ஒருவேளை அந்தப்பக்கம் கதை சரியாக ஓடாவிட்டால், அந்தப் பெண்ணை நினைத்து ஒரு குற்ற உணர்வுடன் வாழும் பெற்றோர், கூடப்பிறந்தோர் சமூகத்தில் உண்டு. சகோதரனின் கவலையைச் சரியாகச் சொன்னீர்கள். மொத்தத்தில் கவிதை ஒரு பாசமலர்; நன்றாகவே வந்துள்ளது. தொடரலாம் நீங்கள். வாழ்த்துக்கள்.

  //மசால்தோசையை எப்படிக்கையால் தூக்குவார்கள்..//

  உங்களைச் சொல்லிக்குற்றமில்லை. நீங்கள் இருக்குமிடம் சென்னை; அல்லது திருநெல்வேலி. அதாவது தமிழ்நாடு. நான் இருப்பதோ பெங்களூரு.இங்குள்ள விதவிதமான ரெஸ்ட்டாரண்ட்டுகளில் அதிகம் திங்கும் பழக்கமுடையவன்; எப்போதாவது மசால் தோசை ஆர்டர் செய்தால், அது எனக்கு முன் வந்து உட்காருகையில் ஒரு முறை பிரிச்சுப் பார்த்துவிடுவேன். உள்ளே ஏதாவது உருளைக்கிழங்கு உண்மையில் இருக்கிறதா என்று. அது பெரும்பாலும் உருண்டு, வருகிற வழியிலேயே விழுந்திருக்கும்; பேருக்கு ஏதோ இத்துணூண்டு மஞ்சளாக தோசையின் உட்புறம் ஒட்டியிருக்கும். பில்வரும்போது ’நான் மசால் தோசை சாப்பிட்டிருக்கிறேன்’ என்று மனதினில் ஒருமுறை சொல்லிக்கொண்டு பணம் கொடுத்துவிட்டு வருவேன். ஒரு ஆத்ம திருப்தி.

  இந்த மாதிரி ’மசால் ’ தோசையை ஒரு இளைஞன் தூக்கமுடியாதா? அதுவும் மனதுக்குப்பிடித்தமான மங்கையின் எதிரே மலையையே தூக்கிவிடும் சக்திகொண்ட ஆண்பிள்ளை, கேவலம் ஒரு மசால் தோசையைத் தூக்கிவிடமாட்டானா?


  பதிலளிநீக்கு
 35. @ ஸ்ரீராம்: //அறியாத வயதில் புரியாத உணர்வுகளைக் குழப்பிக்கொள்ளும் பருவம்..//

  உண்மையில் இப்போது ‘அறிந்த வயதினில்தான்’ புத்திசாலித்தனமாக ஏதேதோ செய்வதாய் எண்ணிக் குழப்பிக்கொள்கிறோமோ? உண்மையில் ’அதுதான்’ ‘அறிந்த’ பருவமோ.. எனவும் சில சமயங்களில் மயங்குகிறது மனம். மனமெனும் மர்மக்குகை..

  பதிலளிநீக்கு
 36. @ஏகாந்தன் - நன்றி.

  நானும் பெங்களூரில் எல்லா தோசைகளையும் சாப்பிட்டவன்'தான் (சாப்பிட்டு நொந்தவன்'தான்). மிகச் சமீபத்திலும் வி.கே பேக்கரி (?-பெங்களூர்) தெருவில் எல்லாக் கடைகளிலும் சாப்பிட்டேன். பெங்களூர் தோசை தடிமனானது, எண்ணெய் ஜாஸ்தி. அவங்க பெண்ணே (வெண்ணெய்) தோசை நல்லா இருக்கும். மசால் தோசைனா, ஒரு பெரிய உருண்டை மசாலாவை நடுவில் வைத்துத் தருவார்கள். தோசைக்கெல்லாம், நீர்க்க தேங்காய் சட்னிதான். எம்.டி.ஆரிலும், பிராமின்ஸ் கஃபேயிலும், அடிகாஸிலும் இதே கதைதான்.

  அதேசமயம், தமிழ் நாட்டில், தோசை, மெல்லிதாகவும், பெரியதாகவும் இருக்கும். பட்டர் ரோஸ்ட்னா, நல்லா முறுகலா இருக்கும். சாம்பார், சட்னிதான் தொட்டுக்கொள்ள.

  எனக்கு பெங்களூர், ரொம்ப அன்னியமாகத் தோன்றுகிறது. அதுனாலேயே அங்கேயே கடைசியில் செட்டிலாகவேண்டும் என்ற நினைப்பே மனதுக்குள் கலவரமாக இருக்கு (எனக்கு தீனியைத் தேடிச் செல்லும் வழக்கம் உண்டு. எத்தனை நாள்தான் ஐயங்கார் பேக்கரி தில்குஷ், தில்பசந்த், ஷெட்டி ஸ்டோரின் பருப்பு போளி என்று காலம் தள்ளமுடியும்? நம்ம ஊர் சாம்பாருக்கு எங்க போக?)

  சரி...சரி... உங்கள் சமாளிப்பைப் படித்துவிட்டேன். இதற்குமேல் தொடர்ந்தால், 'திங்கக் கிழமை' அல்ல இன்று 'வியாழக்கிழமை' என்று ஸ்ரீராம் சொல்லிவிடுவார்.

  பதிலளிநீக்கு
 37. வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி துரை செல்வராஜு சார். நீங்கள் உங்கள் இடுகைகளில் சேர்க்கின்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானது. படித்து, அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்வேன்.

  பதிலளிநீக்கு
 38. கில்லர்ஜி - உங்கள் பாராட்டுக்கு நன்றி

  கரந்தை ஜெயக்குமார் சார் - உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கவிதையைப் படித்து கருத்து சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

  தில்லையகத்து துளசி, கீதா ரங்கன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 39. //ஏன் கர் சொல்றீங்க என யாரும் என்னைக் கேட்டிடாதீங்க:) பிறகு நான் டங்கு தடுமாறி.. உண்மையைச் சொல்லிப்போடுவேன்ன்:)..//

  என்ன உண்மை? சொல்லுங்களேன். பொய்களை உண்மையாக்க முயற்சிக்கும் உலகில் உண்மை சொன்னா தப்பில்லை!!!

  பதிலளிநீக்கு
 40. //கவிதைதானே கேட்டார் ஸ்ரீராம்:).. பை வன் கெட் வன் ஃபிறீ ஆக்கி அனைவரையும் குளிர்விச்சிட்டீங்க:).. இதில ஸ்ரீராம் ஃபிரீஸ் ஆகிப்போயிட்டார் போலவே தெரியுதே:)..//

  எது வந்தாலும் சுகமே!

  பதிலளிநீக்கு
 41. //ஆனாலும் ஸ்ரீராமை ஏமாத்திப்போட்டீங்க நெ.த:).. ஹா ஹா ஹா ஏன் தெரியுமோ?:).. உங்கள் பின்னூட்டங்களையும் ரசனைகளையும் பார்த்து, அப்படத்தைப் போட்டு கவிதை கேட்டதே நீங்க நல்ல ஒரு காதல் கவிதை எழுதுவீங்க:)//

  காதல் கவிதை என்று நான் எதிர்பார்க்கவில்லை அதிரா... ஒரே மாதிரி எழுதினால் போரடித்துப் போகுமே... இப்படி வரும் என்று உண்மையில் எந்த எதிர்பார்ப்புமில்லை. ஆனால் ஏதாவது ஒன்று வரவேண்டும்!!!

  பதிலளிநீக்கு
 42. //அந்தந்த வயசு வரும்போது:) அந்தந்தப் படபடப்பு தொற்றிக் கொள்ளும்தானே ஸ்ரீராம்:)//

  அதிரா.. அந்தந்த வயசில் வந்தால் வியப்பில்லை. எனக்கு இப்படி சின்ன வயதிலேயே வருவதால்தான் வியப்பை வெளியிட்டேன்!

  பதிலளிநீக்கு
 43. //ஸ்ரீராம் - அதிராவின் பின்னூட்டத்தைப் பார்த்து எனக்கு ஒரு கதை எழுதணும்னு ஆசை. அதற்கு இன்ஸ்பிரேஷன் நான் படித்த ஒருவரின் உண்மைச் சம்பவம். எழுதி அனுப்புகிறேன் (இதே படத்துக்கு). பொருத்தமாயிருந்தால் கே.வா.போ.கதையில் வெளியிடவும்.//

  நெல்லை... ஆஹா... காத்திருக்கிறேன். இலாபம்!

  பதிலளிநீக்கு
 44. //உண்மையில் இப்போது ‘அறிந்த வயதினில்தான்’ //

  ஏகாந்தன் ஸார்... உண்மை. அறியாத பருவம் என்பது திரும்ப வராத கொடைதான்!

  பதிலளிநீக்கு
 45. வல்லிசிம்ஹன் அம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  "இந்த உருவம் உண்மைக் காதலனாக வடிவெடுத்தால் எப்படி இருக்கும். அந்தப் பெண் உள்ளம் என்ன சொல்கிறது. பார்க்கலாம்." - இந்த வரிகளைப் படித்தவுடன் எனக்கு உடனே கதைக் கருத்து தோன்றிவிட்டது. எப்போ நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. "பெண் திருமணத்துக்கு அவசரப்படுகிறாள். வீட்டில் வேறு யாருக்காவது கட்டிவைத்துவிடுவார்கள் என்று காதலனிடம் சொல்கிறாள். அவனோ, அவசரப்படாதே.. ஒன்றும் நடக்காது. சில வருடங்கள் பொறுத்திரு" என்று ஆறுதல் சொல்கிறான்.

  பதிலளிநீக்கு
 46. //ஸ்ரீராம். said...
  //ஏன் கர் சொல்றீங்க என யாரும் என்னைக் கேட்டிடாதீங்க:) பிறகு நான் டங்கு தடுமாறி.. உண்மையைச் சொல்லிப்போடுவேன்ன்:)..//

  என்ன உண்மை? சொல்லுங்களேன். பொய்களை உண்மையாக்க முயற்சிக்கும் உலகில் உண்மை சொன்னா தப்பில்லை!!!///

  இரண்டு கவிதைகளுமே இரு வேறு கோணத்தில் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன.. அதனால தனித்தனியே போட்டிருந்தால் இன்னும் கும்மி அடிச்சுக் கொண்டாட வசதியாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 47. நன்றி மனோ சாமினாதன் மேடம்.

  வருகைக்கு நன்றி புலவர் இராமானுசம் ஐயா

  கருத்துக்கு நன்றி அசோகன் குப்புசாமி

  ரசிப்புக்கு நன்றி பகவான்'ஜி

  பதிலளிநீக்கு
 48. ///ஸ்ரீராம். said...
  //அந்தந்த வயசு வரும்போது:) அந்தந்தப் படபடப்பு தொற்றிக் கொள்ளும்தானே ஸ்ரீராம்:)//

  அதிரா.. அந்தந்த வயசில் வந்தால் வியப்பில்லை. எனக்கு இப்படி சின்ன வயதிலேயே வருவதால்தான் வியப்பை வெளியிட்டேன்!///

  ஹையோ என்னை விடுங்கோ.. விடுங்கோ தடுக்காதீங்கோ.. இதோஓஓஓஓஓஒ குதிக்கிறேன் தேம்ஸ்ல.. தண்ணி குளிர்ந்தாலும் கவலை இல்லை:) அங்கு முதலை இருந்தாலும் ஒண்ணும் பயப்பூட மாட்டேன்ன்:) இந்தப்பின்னூட்டத்து முன்னால எனக்கு அதெல்லாம் றஸ்க் சாப்பிடுவதுபோலத்தான்:)... ஹா ஹாஅ ஹா:)

  பதிலளிநீக்கு
 49. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி சார். பாரதிதாசன் கவிதையைப் படித்த ஞாபகம் இல்லை (நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கவிதை) அவருடையதுதானே, 'கொலை வாளினை எடடா' கவிதை.

  'இந்த மன்றத்தில் ஓடி வரும்'-இதனை முன்னமே நினைவுபடுத்தியிருந்தால் அது இன்னொரு கதைக்கு (கண்டிஷனல் கரு, எங்கள் கிரியேஷன்ஸ்) இட்டுச்சென்றிருக்கும். அந்தப் பாடலை நினைவுபடுத்தியது, எனக்கு சிறிய வயதில் அதனைக் கேட்ட காலத்துக்கு இட்டுச்சென்றுவிட்டது.

  பதிலளிநீக்கு
 50. நெல்லைத் தமிழன் said...///சரி...சரி... உங்கள் சமாளிப்பைப் படித்துவிட்டேன். இதற்குமேல் தொடர்ந்தால், 'திங்கக் கிழமை' அல்ல இன்று 'வியாழக்கிழமை' என்று ஸ்ரீராம் சொல்லிவிடுவார்.///

  ஹா ஹா ஹா அதைத்தான் நானும் சொல்ல நினைச்சேன்ன்.. இருவரும் சேர்ந்தால் ஒன்று பழையபாடலுக்குள் போயிடுறீங்க இல்ல.... சாப்பாட்டு ராமர் ஆகிடுறீங்க ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
 51. அஞ்சூஊஊஊஊஊ உடனடியா மேடைக்கு வரவும்:).. நெல்லைத்தமிழனுக்கு 9 மணி நெருங்கிக் கொண்டிருக்கு:) அதனால கடகடவெனக் கொமெண்ட்ஸ் போட்டு முடிக்கிறார்ர்:).. நித்திரைக்குப் போக:).... இடையே இடையே... புகுந்து வீரவாகுதேவர் ஆகிடுவோம்ம் ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 52. வெளியிட்ட எங்கள் Blog, ஸ்ரீராமுக்கு மனமார்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
 53. @ துரை செல்வராஜு, கில்லர்ஜி :

  ரசனை, பாராட்டுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 54. @ கரந்தை ஜெயக்குமார், புலவர் ராமானுசம்:

  வருகைக்கு நன்றி. நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ!

  பதிலளிநீக்கு
 55. அதிரா-வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. எல்லாவற்றையும் படித்து ரசித்தேன்.

  சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது - இது ஒருவகைப் புரிதல்தான். இப்போவும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கம் இருக்கிறதே. சிலர், 'என் பெண்ணைத் திருமணம் செய்துகொள். அமெரிக்கா அனுப்பிப் படிக்கவைக்கிறேன்' என்றெல்லாம் சொல்லும் வழக்கமும் இருக்கிறதே. ஆனாலும், 'சொந்தத்தில் திருமணம்', ஜீனின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் (will affect gene's developments in permutation combination) என்பதைத் தவிர, நிறைய சாதகங்களும் இருக்கின்றன.

  "உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா என ஒரு கேள்வி " - இதுதான் என்னை அடுத்த கதை எழுதத் தூண்டியது. முதலில் எனக்குப் பிடித்திருக்கவேண்டும். அப்புறம் ஸ்ரீராமுக்குப் பிடித்திருக்கவேண்டும். சரியான ஸ்லாட் அமையவேண்டும். அதுவரை, படிப்பவர்கள், இந்தப் படத்தை நினைவில் வைத்திருக்கவேண்டும். நிறைய 'வேண்டும்'கள் இருக்கின்றன.

  ஸ்ரீராம் விரட்டி விரட்டிக் கேட்கவில்லை. அவர் சொல்லியிருக்காவிட்டால் நான் கதை எதுவும் எழுதியிருக்கமாட்டேன். இன்னொன்று, எல்லோரும் 'காதலையே' பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் Bore அடிக்காதோ? இந்த 'காதல், பாசம்' என்று கவிதை எழுதும் கவிஞர்களின் மனைவியிடம் எனக்குக் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது. இப்படி 'காதல் காதல்' என்று உருகி கவிதை படைக்கிறாரே.. உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறாரா-அதாவது மதிப்புடன், அன்புடன் அல்லது அவரது 'காதல்' எல்லாம் கவிதை எழுதும் நோட்டுடன் முடிவடைந்துவிடுகிறதா?

  நீங்கள் 'நல்ல தங்காள்' கதையைச் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது, ஒரு காலத்தில் (1900ல், புத்தகங்களில் படித்திருக்கிறேன்) மேடை நாடகமாக தமிழகம் எங்கும் வெற்றிகரமாக நடிக்கப்பட்டது. இன்னொன்று, 'தங்காய்'-தங்கையைக் குறிக்கும் சொல், அவள் வீட்டில் தங்கமாட்டாள், வேறு வீட்டுக்கு உரியவள் அவள் என்பதைக் குறிக்கிறதோ என்னவோ.

  பதிலளிநீக்கு
 56. வருகைக்கு நன்றி ஏஞ்சலின். நானெல்லாம் ஜெ... படத்தைப் பார்க்கும்போது (பொதுவாக அவருடைய ரசிகர்கள்), ஆண் படத்தைப் பார்ப்பது அபூர்வம். ஜெ..வின் பெண்கள் ஸ்ட்'ரோக் சர்வ சாதாரணமா வளைவு நெளிவுகளோடு இருக்கும். இருந்தாலும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக நினைத்த கரு அது.

  காட்சியை மனதில் நினைக்காமல், கதையோ, கவிதையோ ஓவியமோ வராது. அதனால் அது ஒரு குறையில்லை. எழுத்தாளர்/ஓவியர்/கவிஞரிடம் இருக்கவேண்டிய அடிப்படை குணம்.

  நடிகர் சிவகுமார் எழுதியிருக்கிறார். ஆர் சுந்தர்ராஜன் (டைரக்டர், பயணங்கள் முடிவதில்லை படம்.. பிற்காலங்களில் அவர் நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார்) அன்றைய தினத்துக்கான படப்பிடிப்புக்கு வசனமே எழுதிவைத்திருக்கமாட்டாராம். அவருடைய படத்துக்கு எப்போதுமே வசனம் எழுதமாட்டாராம். சிவகுமார் ஆச்சர்யமாக, 'இப்படி இருந்தால் எப்படி படப்பிடிப்பைத் திட்டமிடுவீர்கள்' என்று கேட்டபோது, என் மனது முழுவதும் என் கதைதான், நடு இரவில் எழுப்பிக் கேட்டாலும் எந்த கேரக்டர் என்ன வசனம் பேசணும்னு சொல்லுவேன். நான் அந்தக் கதையிலேயே படம் முடியும்வரை வாழ்கிறவன் என்றாராம்.

  பதிலளிநீக்கு
 57. கீதா சாம்பசிவம் மேடம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அனுபவமுள்ள உங்களைப் போன்றவர்கள், சாதாரண விஷயத்தையும் பாராட்டும்போது மனது மகிழ்வது என்னவோ நிஜம். கதைச் சுருக்கத்தில் ஏதேனும் சொதப்பிவிட்டேனா?

  பதிலளிநீக்கு
 58. ஸ்ரீராம் - கருத்துக்கு நன்றி. "பொய்களை உண்மையாக்க முயற்சிக்கும் உலகில்" - கவிதையைப் போலவும் இருக்கு, அரசியல் போலவும் இருக்கு.

  'அறியாத வயதில் படபடப்பில் செய்வது' - உண்மையில் செய்பவனுக்குத் தெரியாது. ஆனால் பார்ப்பவர்கள் மனதில் 'அவர்கள் வளர்ந்து இருப்பதால்' கள்ளம் தெரியும். அதாவது, அணுகுபவனுக்கு harmful எண்ணம் இருக்காது, ஒருவித படபடப்போடு அணுகுவான். ஆனால் அதனைப் பார்ப்பவர்கள் கண்ணில் கள்ளம் இருக்கும், மசாலாவைச் சேர்த்து பெரிய பிரச்சனையாக்கிவிடுவார்கள். இதையெல்லாம் பதின்ம பருவத்தில் தாண்டித்தானே வரவேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 59. அதிரா - அங்கன ஓட்டியும் இன்னும் உங்களுக்கு மயக்கம் தெளியலையா? மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  "சாப்பாட்டு ராமர் ஆகிடுறீங்க" - சாப்பாட்டு கிருஷ்ணர் இல்லையா? இன்னும் இராமாயணத்துலயே இருக்கீங்க. எழுதறது மஹாபாரதம், நினைப்பில் இராமாயணம். :)

  இன்று விடுமுறை என்பதால் நிறைய பின்னூட்டங்கள். இல்லைனா நேரமிருக்காது. அதேபோல் ஒரு கதை எழுத உட்கார்ந்தால், அது இழுத்துக்கொண்டே போகிறது. அதாவது மெயின் கதைக்கு வருவதற்கு முன்னாலேயே ஒரு இடுகை அளவு போய்விட்டது. ஸ்ரீராமோ, எடிட்டர் வேலை பார்ப்பதில்லை. நான் இப்போது எழுதுவதும், against my wishes 'தொடரும்' போடும்படியாக ரெண்டு இடுகைக்கு வருமாறு கதை அமைந்துவிடுமோ?

  இப்போல்லாம், 9 மணி இல்லை. 8 மணிக்கே நித்திரைக்குப் போக ஆரம்பித்திருக்கிறேன் (அப்போதான் 8.30க்குள்ள தூங்கியிருக்கலாம்).

  பதிலளிநீக்கு
 60. @ Thulasidharan V Thillaiakathu : துளசி சார், கீதா,

  ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி.

  @ வல்லிசிம்ஹன்: ரசனை, கருத்து மற்றும் பாராட்டுக்கும் நன்றி.

  @ மனோ சாமிநாதன்: பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 61. @ அதிரா:

  ஒரே காமெடியாகப் போய்விட்டதோ கவிதை! Laughter is the best medicine அல்லவா? வியாழக்கிழமை சிரிப்புக்கிழமையாகிவிட்டதுபோலும். உற்சாகமான ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  // இப்பூடி இன்னும் நிறைய எழுதுங்கோ... //

  இந்த மாதிரியே இன்னும் எழுதணுமா! படத்தைப் பார்த்ததும் ஏதோ மீசை, ஆசை, தோசை என்று வார்த்தைகள் மனதில் ஓடியதால் அப்படியே ஓட்டிவிட்டேன் கவிதையாய். திரும்பவும் 'flow' வருமா இப்பிடி, ஒன்னும் தெரியலையே!

  பதிலளிநீக்கு
 62. @ ஜீவி:

  ஜீவி சார், வாங்க! ’அக்கா மகளென்றால் சுக்கா, மிளகா!’ - இப்படி ஒரு பாரதிதாசன் கவிதை இருக்கிறதா? படிக்கவேண்டும். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும்..’ அருமையான ஸ்ரீனிவாஸ் பாடல். அந்தக்காலத்தில்தான் பாடல்வரிகள் எப்படியெல்லாம் இருந்தன என ஏங்க வைக்கிறது. இப்படி பின்னூட்டத்தினூடே மனதில் தோன்றும் வேறு சிலவற்றையும் பகிர்ந்துகொள்வதும் நன்றாகத்தான் இருக்கிறது.

  வருகை, பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 63. @ Asokan Kuppusamy : பாராட்டுதலுக்கு நன்றி.

  @ Bagawanjee KA : ரசனைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 64. @ ஏஞ்சலின்:

  //இந்த மாதிரி காட்சி பார்த்தா இயல்பாவே நமக்குள் இருக்கும் தாய் /தந்தை ..//

  உண்மைதான். குறிப்பாக அப்பாவி இளம்பெண்கள் பசப்பு வார்த்தைகளில் மயங்கி ஏமாந்துவிடக்கூடாதே என்று தோன்றும். ஏனெனில், தப்பு ஏதும் நடந்தால், நம் சமூகத்தில் ஆணை அது பாதிக்காது. காலரில் தூசிதட்டிக்கொண்டு அவன் போய்விடுவான் இன்னொன்றைத் தேடிக்கொண்டு. ஆனால், பெண்? அவள் என்றும் கண்டனத்தில், விமரிசனத்தில் இருப்பாள். அவளது மன அமைதிகெடும். இன்னும் என்னன்னவோ இன்னல்கள் எல்லாம் பெண்கள் தலையில்தான். அதனால்தான் அவர்களுக்கு அறியா வயதினில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாதே என்கிற கவலை இயற்கையாக உண்டாகிறது.

  கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அஞ்சு.

  பதிலளிநீக்கு
 65. @ கீதா சாம்பசிவம்:

  //ஏகாந்தன் பார்வையே வேறே மாதிரி! ஏமாற்றுக்காரனாகத் தோன்றி இருக்கிறது அவருக்கு! கைக்குட்டையை மசால் தோசை என ..//

  ஏமாற்றுக்காரன் என்று தோன்றுவதைவிடவும் அப்பாவிப்பெண் ஆபத்தில் ஏதும் மாட்டிக்கொண்டுவிட்டாலோ என்கிற கவலைதான் பெரிசை படபடக்கவைத்துவிட்டது. கைக்குட்டையைக் கவனிக்கவில்லை. ஆண், பெண், ஆசை, தோசை என வேகமாகப் பாய்ந்துவிட்டேன்!

  கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 66. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 67. ஏகாந்தன் சார்!
  'அக்கா மகளென்றால் சுக்கா, மிளகா' (மிளகா' என்பது மட்டும் சந்தேகத்தில் இருக்கிறது) என்பது புரட்சிக் கவிஞரின் கவிதை வரி.
  அக்கா மகளென்றால் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பாளா?' என்ற அர்த்தத்தில் அந்த வரி வரும்.

  அந்தக் காலத்தில் சுக்கும் மிளகும் அவ்வளவு சல்லிசாகக் கிடைத்தது என்பதை நினைக்கிற வரியாய் இது இலக்கியச் சான்றாய் பதிந்து போயிருக்கிறது.

  இப்போழுது இவற்றின் விலையை நினைத்தால்...

  பதிலளிநீக்கு
 68. @ ஜீவி:

  நீங்கள் சொல்வதுபோல் இவையெல்லாம் ஒருகாலத்தில் மிகவும் மலிவாகக் கிடைத்திருக்கிறது எல்லோருக்கும். இந்தக் காலத்தில் சுக்கு, மிளகு விலை உச்சிக்கு சென்றுவிட்டது. உறவுகளுக்கு மனிதர் மனதில் இடமோ தாழ்ந்துவிட்டது. காலத்தின் கோலம்..

  பதிலளிநீக்கு
 69. ஸ்ரீராம்,

  ஓவியத்தில் இருப்பதைப் போலவே தலைப்பில் ஓவியர் 'ஜெ' பெயரைத் தொடர்ந்து ... (மூன்று புள்ளிகள் வைத்ததற்கு) பாராட்டுகள். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு முடிந்தவரை perfect-ஆக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 70. நெத இத்தனைக் கற்பனைத்திறனை எங்கே ஒளித்து வைக்கிறீர்கள் பேசாமல் களத்தில் குதிக்க வேண்டியது தானே
  ஏகாந்தன் இன்னொருவர் பார்வையில் அதுவும் பெரிசுகளின் பார்வையில் தோன்றாததெல்லாம் தோன்றும் உண்மைதான் ஒரு எச்சரிக்கை உணர்வோ
  இருவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 71. எந்த விஷயமாகப் பதிவு போட்டாலும் அதில் தேர்ந்தவராகவே விஷயங்கள் பரிமளிக்கிறது. இது நெல்லைத் தமிழனின் விசேஷத்திறன்.
  பாசமலராக அண்ணன். வாலிபப் பருவஅண்ணன்.அழகான சிந்தனை.மாமன் மகனின் மனதறிந்து சொல்கிறான்.அவனும் அந்த வயதைக் கடந்தவன்.உறவும் விடுபடாது. நல்ல கற்பனை. முன்பு இப்படி எல்லாம் உறவுப்பிணைப்புக் கதைகள் நடந்துகொண்டுதான் இருந்தது.அழகான கவிதை. எனக்கு நெளிவு,புனைவெல்லாம் தெரியாது. பாராட்டுகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 72. ஏகாந்தன் அந்தப் பெரிசின் படபடப்பு ஸரிதான். அந்தப்பொண்ணு சின்னவளாகத் தோன்றுகிறது. உனக்கு எப்பவும் ஸந்தேகம் என்று மற்றவர்கள் சொன்னாலும் இந்தப் படபடப்பு அவசியம். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் காலமாக இருந்தாலும், உஷார் நிலையும் இந்தமாதிரிப் பெரிசுகளினால் தடைஉத்தரவு பிறப்பி த்துக் கொண்டே இருப்பதும் அவசியம். நல்ல கவிதை. இரண்டுபேரின் கவிதைகளும் ரஸிக்க விருந்து.பாராட்டுகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 73. ஓவியர் 'ஜெ' பெயரைத் தொடர்ந்து ... (மூன்று புள்ளிகள் வைத்ததற்கு) - ஜீவி சார்... இதற்கு ஜெயராஜ் அவர்கள் ஒரு விளக்கம் தந்திருந்த ஞாபகம். அதாவது, மனைவி, இரு குழந்தைகள் என்று. பின்பு ஒரு சமயம் ஒரு புள்ளி அதிகமாக்கினேன் என்று சொன்னதாகவும் ஞாபகம் (ஒரு வேளை பேரன் யாரேனும் கேட்டுக்கொண்டோ அல்லது வேறு காரணமாகவோ, as an exception)

  பதிலளிநீக்கு
 74. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி.எம்.பி. சார். மனதில் நினைப்பதை நீங்கள் எழுதுவதை நான் எல்லா இடங்களிலும் பார்க்கிறேன் (முகதாட்சண்யம் ஒன்றையே மனதில் கொள்ளாமல்). உங்களுக்குப் பிடித்தமான தி.கிழமைப் பதிவை அனுப்பவேண்டுமே என்றும் மனதில் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 75. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி காமாட்சியம்மா. உங்களுக்கு உடல் நலம் தேறி வருகிறது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. நலக்குறைவு இருந்தபோதும் நிறைவாக எழுதி வாழ்த்தும் மனப்பாங்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 76. நெல்லை, நீங்கள் சொன்னதில் -- ஓவியர் ஜெ... இடும் புள்ளிகள் பற்றி-- பாதி ரைட் என்று நினைக்கிறேன்.
  ஸ்ரீராம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 77. ஜீவி ஸார்... நீங்கள் சொல்லியிருப்பது போல ஜெ... வரையும் ஓவியத்தில் அவர் ஓடும் கையெழுத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும் என்று பார்த்திருக்கிறேன். அது மட்டுமில்லாமல் அந்த ஜெ சற்றே சாய்ந்த நிலையில் இருக்கும். ஒருவேளை தனது ஆரம்ப காலப் படங்களில் ஜெயராஜ் என்று முழு பெயரைப் போட்டுக் கொண்டிருப்பாரோ என்னவோ! 1958 இல் அவரது முதல் ஓவியம் குமுதத்தில் வெளிவந்ததாம். ரா கி ர நாவலுக்கு. நெல்லைத்தமிழன் சொல்லியிருக்கும் விவரமும் (அதைப்படித்த உடன்) ஏதோ ஒரு இடத்தில் எனக்கும் படித்த நினைவு வந்தது. பார்த்த விஷயங்கள் மனதில் தங்கி விடுவதால் அதை தலைப்பிலும் சேர்த்தேன். perfection என்று பெயர் வாங்கியது சற்று அதிகப்படிதான்!

  ஜெ... என் அம்மாவை விட ஒரு வயது இளையவர். அதாவது 80 வயது. ஆனால் சிலர் இளமையாகவே நம் மனதில் தங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு வயதாவதேயில்லை!

  பதிலளிநீக்கு
 78. ஆரம்பத்திலிருந்தே ஓவியர் ஜெயராஜ், 'ஜெ.' தான்.

  பெயருக்குப் பின்னால் ஒரு புள்ளி அவர் மனைவியையும், அப்புறம் போட்ட இரண்டு புள்ளிகள் குழந்தைகளையும், பின் போட்ட ஒரு புள்ளி மருமகனையும், பெயருக்கு முன்னால் போட்ட இரண்டு புள்ளிகள் பேரக் குழந்தைகளையும் குறிப்பதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

  'ஜெ' பெயருக்கு முன்னால் போட்ட புள்ளிகளை யாராவது கவனித்திருக்கிறீர்களா?..

  பதிலளிநீக்கு
 79. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்:

  வருகை, கருத்துக்கு நன்றி. எச்சரிக்கை உணர்வு எப்போதும் நல்லதுதான்.

  பதிலளிநீக்கு
 80. @ காமாட்சி:

  உங்களுக்கு உடல்நலமில்லை என நெல்லையின் பின்னூட்டத்தில் கண்டு அதிர்ந்தேன். தேறிவருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்செ. உடல்நலம் பேணுதல் முக்கியம்.

  கருத்துக்கு நன்றி. சிறிசுகள் கேஷுவலாக இருந்து வம்பில் மாட்டிக்கொண்டுவிடக்கூடாதே என்று பெரியவர்கள் கவலைப்படுவது இந்தக்காலத்தில் அவசியம். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

  பதிலளிநீக்கு
 81. திருத்தம்:தேறிவருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!