இன்று சற்று உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெள்ளி வீடியோ வெளியிடும் வாய்ப்பு / எண்ணம் இல்லாதிருந்தது. நேற்று நண்பர் துரை செல்வராஜூ ஸார் மெயில் அனுப்பி இருந்தார். 'நான் ஒரு காக்கைக் கவிதை அனுப்பவா?' என்று கேட்டிருந்தார். 'சரி' என்று சொல்லி இருந்தேன்.
இன்று காலை மெயில் கண்டதும் அந்தக் கவிதை என் நிலைக்கு மருந்தாய் இருந்தது. அதாவது அதை இன்று வெளியிட்டு பொருத்தமாய் பாடல் இணைத்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். சுலபம்!
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
காக்கையின் பாட்டு..
---- ---- ----
காகா.. காகா.. கா..
காகா.. என்றபடி -
நான் வாசற்படியில்
வந்தமர்ந்தேன்..
கண்டங்கருப்பாய்
சஞ்சலம்..
காக்கையைக் கண்டதும்
சங்கடம்..
கண்களில் சகுனம்..
காலையில் சலனம்..
கண்டத்தில் வெள்ளை
மணிக் காக்கை!..
கன்னங் கரேலென்று
கருங் காக்கை?..
இடம் நல்லதா..
வலம் நல்லதா..
மனம் நல்லதென
அறியீரோ!..
மொட்டை மாடியில்
எனைக் கண்டால்
மூடியே வைப்பீர்
வற்றலைத் தான்..
அஷ்ட லச்சுமியும்
வருவள் என்றால்
அழைத்து நிற்பீர்
எங்களைத் தான்!..
ஆற்றில் குளித்து
சிறகு உலர்த்தி
குப்பை கூளம்
கிளறி நின்றோம்..
கூச்சல் கூட்டம்
பொறுக்காமல்
வேட்டுகள் போட்டு
எமை அழித்தீர்..
ஆயினும் என்பணி
மறந்தேனா..
அன்பெனும் வழியைத்
துறந்தேனா?..
கா..கா.. என்றே
கரைந்திருந்தேன்..
கா.. கா.. என்றே
சேர்ந்திருந்தேன்!..
கா.. கா.. என்றேன்..
நோக்கவில்லை..
கரியன் கரைந்ததை
கேட்கவில்லை..
சென்றவர் சேர்ந்தவர்
இது என்றான்..
முன்னோர் மூத்தோர்
வடிவென்றான்..
இல்லை.. இல்லை..
நான்.. என்றேன்..
என் விடை எவரும்
விரும்பவில்லை...
சிறு புன்னகை கூட
அரும்பவில்லை..
முனைப்பாய் எவரும்
நினைக்கவில்லை..
எனக்கே என்னைப்
பிடிக்கவில்லை..
எனக்கே என்மனம்
பொறுக்கவில்லை...
மானிடர் மடமை
தெளியவில்லை.
மானிடர் மனமும்
புரியவில்லை..
கருவில் சுமந்த
உன் அன்னை
என்னைப் போன்றே
வந்தாளா?..
தோளில் சுமந்த
உன் தந்தை
காக்கை என்றே
நின்றாரா?..
கரவாதுண்ணும்
காட்சியன்றோ
காணச் சொல்லிக்
காட்டிற்று...
கதையாய் கதையாய்
எதை எதையோ
கருதிக் கொள்ள
நான் பழியா!?..
முன்வினை இன்னும்
முடியலையா?..
ஏழ்பிறப்பு என்பதும்
தீரலையா?..
கா.. எனக் கரைந்தும்
புரியலையா!..
கருத்தில் எதுவும்
ஏறலையா?..
கா.. கா.. என்றேன்..
கரவாதிருப்பீர்..
கா.. கா.. என்றேன்..
கலந்தினிதிருப்பீர்!..
கா.. கா.. என்றேன்..
கருணையில் வாழ்க..
கா.. கா.. என்றேன்..
கனிவுடன் வாழ்க!..
கா.. கா.. என்றே
கரைந்ததனால்
கண்டவர் மனதினில்
பதியவில்லை...
காக்கையின் மொழியும்
புரியவில்லை!..
வேறொரு வழியும்
தெரியவில்லை..
ஏழரைச் சனியின்
கொடுமை பெரிது..
தப்பிப் பிழைத்தால்
நாள் இனிது!..
கைப்பிடி சோற்றில்
பழி தொலைந்தால்
காக்கைக்கன்றோ
பழி தொடரும்!?.
உன்நிழல் போல
உன் வினையும்!..
உன்னுடன் தானே
உடன் சேரும்!..
உன்பசி தீர
நான் தின்றால்
மனிதா உன்பழி
எப்படித் தீரும்?..
காரியின் நல்லருள்
வேண்டும் எனில்
காரியின் கால்களில்
விழவேண்டும்..
காரியின் அடிமை
எனக்கெதற்கு
கையூட்டளித்துக்
களிக்கின்றீர்?..
கையூட்டளிக்கும்
மானிடரே..
கா.. கா.. என்றதும்
உமக்கல்ல..
கா.. கா.. சிவனே..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க காவினை
எனக் கரைந்தேன்....
கருணை இலாமல்
காடழித்தீர்..
கா.. எனக் கலங்கி
நான் கரைந்தேன்!..
காக்கைகள் கலந்ததை
கணடதுண்டோ?.
கா.. கா.. என்றதும்
அதற்கேயாம்!.
கடுவிழி நாயாய்
அலைபவருக்கு
காக்கை மொழியும்
புரிவதில்லை!..
காக்கை நிறத்தில்
பெண் என்றால்
கலங்கித் தவித்துப்
பரிதவிப்பீர்..
கடுவினை தீர்ந்திட
வேண்டும் எனில்
காக்கையைக் கூவி
விருந்து வைப்பீர்!..
இருந்தவர் பசிக்கு
சோறிடவில்லை..
சென்றதும் பழியெனப்
பதறுகின்றீர்!..
தன்பிழை என்மேல்
ஏற்றி வைத்து..
எள்ளுடன் சோற்றை
ஏந்தி நின்றீர்!..
என்னே மடமை..
இதுவோ மானிடம்..
மானிடர் மடமை
விலகவில்லை..
காகா.. என்றதும்
தெரியவில்லை..
கா.. கா.. என்றதும்
புரியவில்லை...
சுற்றம் சூழல்
வாழ்வதற்கே
கா.. கா.. என்று
நான் கரைந்தேன்..
அஃறிணை என்றே
எனைப் பழித்தீர்..
நல்லன மறந்து
தவறிழைத்தீர்..
உன்இனம் இனிதாய்
வாழ்வதற்காய்
என்போல் பறவைக்
குலம் கெடுத்தாய்..
கூட்டினை அழித்தாய்..
காட்டினை எரித்தாய்..
தீராப் பழியை
நீயே விளைத்தாய்!..
உறவுகள் தொலைத்த
மானிடனே.. உன்
உள்ளம் முழுதும்
பாழிடம்!..
காவினை அழித்த
மானிடமே இனி
வேறெது உனக்கு
வாழ்விடம்?..
காலங்கள் ஆயிரம்
போனாலும்
காக்கையின் குணமோ
கரைய வில்லை..
கற்றவர் மொழியும்
புரியவில்லை
காக்கை மொழியும்
விளங்கவில்லை!..
ஏழைக்கு இரங்குக..
இனிதே நோக்குக.
இருகை அதனால்
இயற்கை போற்றுக..
அன்பை வாங்குக..
மனிதம் தாங்குக..
பண்பைத் துலக்குக..
பகையை விலக்குக..
காகா.. கா..
காகா.. கா..
விடியலில் நானும்
கரைகின்றேன்..
காகா.. கா..
காகா.. கா..
விடியட்டும் என்றே
கரைகின்றேன்..
***
தமிழ்மணத்தைக் காணோம். இப்போது அதைத் தேட நேரமில்லை! என் கணினியில் தமிழ்மணம் கண்ணுக்குத் தெரியவில்லை. யார் கண்ணிலாவது தெரிந்தால் சப்மிட் செய்து விடுங்கள்.
பதிலளிநீக்குதமிழ் மணத்தைக் காணவில்லை நண்பரே
பதிலளிநீக்குசிறப்பான தகவல் சொல்லும் கவிதை. துரை செல்வராஜூ ஐயா அவர்களுக்குப் பாராட்டுகள். பொருத்தமான பாடல் தேர்வு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குத.ம. எங்கே போச்சு! எனது பதிவினையும் இணைக்க முடியவில்லை.
விடியட்டும் என்றே கரையும் காக்கையுடன் நாமும் காத்திருப்போம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குஅருமையான கவிதை! வீடியோவில் ஜிவாஜி பாடும் பாட்டைக் கேட்டிருக்கேன். திருச்சி லோகநாதனா? ஆனால் படம் பார்த்ததே இல்லை இன்று வரை! :) சி.எஸ். ஜெயராமன் மாதிரி இருக்கு! அவர் தான்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகவிதை நல்ல நீளம் என்றாலும் உண்மைகள், உண்மைகள், உண்மைகள்!
பதிலளிநீக்குகாக்கையின் கவிதையைக் களமேற்றிய ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்பின் கரந்தை Jk அவர்கள் கவிதையைப் பற்றி ஒன்றூம் சொல்லவில்லையே!..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
அன்பின் வெங்கட் அவர்களின் பாராட்டுரைக்கு மகிழ்ச்சி.. வருகைக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்பின் Dr.B.J. அவர்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குஅன்பின் கீதாசாம்பசிவம் அவர்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குநடிகர் திலகம் அவர்களின் ரசிகன் நான்..
பதிலளிநீக்குஅவரது பாடலுடன் எனது கவிதை வெளியானதில் மட்டற்ற மகிழ்ச்சி...
அட! கீ க்காவோட அபிமான நடிகர்!
பதிலளிநீக்குஅருமையான கவிதை. பாடல் பகிர்வு மிக பொருத்தம்.
பதிலளிநீக்குஇயற்கை போற்றுக..
அன்பை வாங்குக..
மனிதம் தாங்குக..
பண்பைத் துலக்குக..
பகையை விலக்குக..
காகா.. கா..
காகா.. கா..
விடியலில் நானும்
கரைகின்றேன்..
காகா.. கா..
காகா.. கா..
விடியட்டும் என்றே
கரைகின்றேன்..
***
காக்கை சொல்வது போல் விடியட்டும்.
மனிதநேயம் மலரட்டும் அன்பு ஓளி பரவட்டும்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவிற்கு.
உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகாக்கா கவிதையோடு வந்து உங்கள் உடல் நலத்தை சரி செய்து விட்டார் சகோ துரைசெல்வராஜூ அவர்கள்.
நீளமான கவிதை. ரசித்தேன்.
பதிலளிநீக்குகாக்கை கவிதை நன்று
பதிலளிநீக்குSuper! Projecting different facets of கா கா கா காக்கா!!
பதிலளிநீக்குதிருமிகு வாசுதேவன் திருமதி அவர்களின் வருகை மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குஅன்பின் கோமதிஅரசு அவர்களின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்களின் நலத்திற்கு
பதிலளிநீக்குகோமதி அரசு அவர்களுடன் நானும் வாழ்த்துகிறேன்..
//அட! கீ க்காவோட அபிமான நடிகர்!// தம்பி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
பதிலளிநீக்கு>>> நீளமான கவிதை. ரசித்தேன்..<<<
பதிலளிநீக்குதிருமிகு நெல்லைத்தமிழன் அவர்களின் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
//திருமிகு வாசுதேவன் திருமதி//
பதிலளிநீக்கு@துரை செல்வராஜூ
ஹிஹிஹி, அவர் பெயர் வாசுதேவன். அப்பா பெயர் திருமூர்த்தி! அதைச் சேர்த்து இணையப் பெயர் வாசுதேவன் திருமூர்த்தி அல்லது திருமூர்த்தி வாசுதேவன்! :)
>>> காக்கை கவிதை நன்று <<<
பதிலளிநீக்குதிரு அசோகன் குப்புசாமி அவர்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இந்தக் கண்ணாடியால் வந்தது வினை.. மேலொரு அளவு.. கீழொரு அளவு..
பதிலளிநீக்குகணினி பலகையும் அமரும் நாற்காலியும் சற்றே வித்தியாசங்களில்.. காக்கையைப் போலவே விழிகளைத் தூக்கித் தூக்கிப் பார்த்ததில் குழம்பி விட்டது..
எதற்கும் ஒரு திருஷ்டி வேண்டுமல்லவா!..
பொறுத்தருள்க.. திருமிகு வாசுதேவன் திருமூர்த்தி!..
பிழையினைத் திருத்திய திருமிகு கீதாசாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..
திருமிகு middleclassmadhavi அவர்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்கு>>> க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!.. <<<
பதிலளிநீக்குதிருமிகு கீதாசாம்பசிவம் - மகிழ்ச்சியின் கலகலப்பு!.. வாழ்க நலம்..
கவிதை நல்முயற்சி. நீளத்தைத் குறைத்திருந்தால் நன்றாக வந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குசில இடங்களில் flow அருமை. உதாரணம்:
கையூட்டளிக்கும்
மானிடரே..
கா.. கா.. என்றதும்
உமக்கல்ல..
கா.. கா.. சிவனே..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..
/இன்று சற்று உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெள்ளி வீடியோ வெளியிடும் வாய்ப்பு / எண்ணம் இல்லாதிருந்தது//
பதிலளிநீக்குடேக் கேர் ..
பராசக்தி பாடல் இங்கே கனப்பொருத்தம்! பாடியது சி.எஸ்.ஜெயராமன். Typical voice. ஆயினும் அவரது குரல் இளம் சிவாஜிக்குப் பொருந்தவில்லை. எழுதியது யாரோ?
பதிலளிநீக்குஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
ஆஹா !! மிகவும் அருமை அய்யா ..காகங்களை இயற்கையை பறவைகளை குறித்த அருமையான கவிதை .மனதின் ஆதங்கம் அனைத்தும் வெளிவந்ததால் கவிதை நீளமாகி விட்டது ஆனாலும் காகங்களுக்கு வாயிருந்தா இப்படித்தான் பேசிதீர்த்திருக்கும் .
பதிலளிநீக்குகருப்புநிறம் காக்காய்ப்பிடித்தால் காடழித்தல்மறைந்தோருக்கு உணவிடல் என அனைத்தையும் குறிப்பிட்டது அருமை ..வெளிநாட்டில் காகங்களை துரத்தி பார்த்ததில்லை இங்கே அண்டங்காக்கை மட்டுமே எப்பவாது காண்பேன்
அன்பின் ஏகாந்தன்..
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
திருமிகு ஏஞ்சலின்..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்கள் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் பதிவை வெளியிட்டமை அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்துகின்றது..
வாழ்க அவரது சீரிய பணி!..
அன்பின் ஏகாந்தன்..
பதிலளிநீக்குபராசக்தி படத்தில் காகா.. எனும் பாடலை இயற்றியவர் திரு உடுமலை நாராயண கவி அவர்கள்..
திரு. விஜய்..
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
திருமிகு ஏஞ்சலின்..
பதிலளிநீக்குஅன்பின் ஏகாந்தன் அவர்களும் கவிதையின் நீளத்தைப் பற்றிக் குறித்திருந்தார்..
உண்மையில் இதிலிருந்து ஆறேழு கண்ணிகளைக் குறைத்து விட்டுத் தான் பதிவுக்காக அனுப்பினேன்..
மனதின் ஆதங்கம் - அத்தனையும்..
இதற்கு மேலும் பல கொடுமைகளைக் காக்கைக்குச் செய்திருக்கின்றனர் மனிதர்கள்..
அதற்காகவே அவர்களை விடாமல் துரத்துவார் - சனைச்சரன் ..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இங்கே மதியம் 12.30 ஆகி விட்டது.. இப்போது உறங்கினால் தான் இரவு 9 மணிக்கு வேலைக்குச் செல்ல முடியும்..
பதிலளிநீக்குவருகை தர இருக்கும் நண்பர்களுக்கு அன்பின் நல்வரவு..
மீண்டும் சந்திக்கலாம்!..
நான்ன் டமில்மனத்துக்கு வோட்டுப் போட்டுவிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).. 4 வது வோட்ட் இங்கே என்னோடது:).. ஸ்ரீராம் கண்ணுக்கு அது தெரியாட்டில் அது மீ பொறுப்பல்ல:).. ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குநேற்று வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வோட் போடலாமே என கிளிக் பண்ணினேன்.. போச்சுது.. லொக்கின் கொடுத்தேன்ன்.. சுத்துத்டு சுத்துது சுத்திக்கொண்டே இருந்துது... என்ன இது எனக்கு எப்பவும் இப்படி ஆனதில்லையே என ஒரு கணம் திடுக்கிட்டுப் போட்டு... விட்டு விட்டேன்:).
பின்னர் என் போஸ்ட் வெளியான கையோடு தமிழ்மணம் தெரிஞ்சுது இணைச்சேன் இணைக்க முடியவில்லை... அப்பவே புரிஞ்சுபோச்சு.. சூஊஊஊனியக் கியவியைக்:) கொண்டு டமில்மணத்துக்கு சூனியம் வச்சிட்டாங்கோ:)..
ஹா ஹா ஹா எல்லாம் நன்மைக்கே... இதுவும் கடந்து போகும்:).
ஆஹா ஆஹா காகத்தின் மதிப்பு வரவர உயர்ந்து கொண்டே போகிறதே... ஆனா உண்மைதானே எந்தப் பறவையையும் வணங்குவதில்லையே.. ஆனால் கோயில்களில் சனிபகவானோடு காகத்தையும் சேர்த்துத்தானே வணங்குகிறோம்.. அப்போ உயர்ந்ததுதானே.
பதிலளிநீக்கு//அஷ்ட லச்சுமியும்
வருவள் என்றால்
அழைத்து நிற்பீர்
எங்களைத் தான்!..//
ஹா ஹா ஹா மிக மிக அழகான உண்மை வரிகள்.. ரசிச்சேன்ன்ன்...மனிதர்கள் எவரும் பலனை எதிர்பார்க்காமல் எதுவும் செய்வதில்லை:).
///Angelin said...
பதிலளிநீக்கு/இன்று சற்று உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெள்ளி வீடியோ வெளியிடும் வாய்ப்பு / எண்ணம் இல்லாதிருந்தது//
டேக் கேர் ..///
இது அதிரா சொல்கிறேன்:-
ஸ்ரீராம் ரெஸ்ட் எடுங்கோ.. மல்லித்தண்ணி குடிங்கோ.. ஆவி பிடியுங்கோ ஹையோ இது வேற ஆவி.. கொம்பியூட்டர் பார்க்காதீங்கோ.. ம்ம்ம்ம்ம் வேற என்ன சொல்லலாம்ம்?:))... ஹா ஹா ஹா எப்பூடியாவது அஞ்சுவை விடக் கொஞ்சம் அதிகமா சொல்லிடோணும்... அதாவது... எல்லோரும் அழும்வரை இடத்தை விட்டு நகராமல் இருந்துபோட்டு... பின்னர் தான் தான் அதிகம் அழுகிறேன் என.. ஏனையோரை விட அதிகம் தேம்பி அழும் ஜூலியைப்போல:).. சரி சரி இப்போ எதுக்கு முருங்கிக்கொப்பு ஆடுதூஊஊஊஊஉ வாணாம் முறிக்காதீங்க அஞ்சு.. மீ ரன்னிங்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு யூ நோ?:).
நேற்றைய காகப் போஸ்டின் கடசிப் பின்னூட்டம் படிக்கவும்:).. இப்போ புரியுதோ ... என்ன ஆச்சு என்பது:)
/கா.. கா.. என்றேன்..
பதிலளிநீக்குநோக்கவில்லை..
கரியன் கரைந்ததை
கேட்கவில்லை..
சென்றவர் சேர்ந்தவர்
இது என்றான்..
முன்னோர் மூத்தோர்
வடிவென்றான்..
இல்லை.. இல்லை..
நான்.. என்றேன்..
என் விடை எவரும்
விரும்பவில்லை...
சிறு புன்னகை கூட
அரும்பவில்லை..
முனைப்பாய் எவரும்
நினைக்கவில்லை./என் ரசனை சரியா
:-)
நீக்கு///ஹா ஹா ஹா எப்பூடியாவது அஞ்சுவை விடக் கொஞ்சம் அதிகமா சொல்லிடோணும்... //
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர் :) ஹாஆஹாஆ இதுக்கு அந்த ஜூலியே பெட்டர் :)
எனக்கென்னமோ உங்க கோவைக்காய் ரெசிப்பி மேலதான் சந்தேகமா இருக்கு எதுக்கும் ஆன்டிஸிபேட்டரி பெயில் எடுத்துவைங்க :)
திரு. துரை.
பதிலளிநீக்குஅற்புதமான கவிதை. காகம் காணும்போது நமக்கு எவ்வளவூ
எண்ணங்கள் அலை மோதுமோ அதுபோல அதன் மந்திலும் ஓடும்
நினைவுகளை. ,உட்சென்று பார்த்தது போல் இருக்கிறது உங்கள் வரிகள்.
காகா என்று காக்க அழைக்கும் தெய்வங்கள் தான் எத்தனை. முருகா,ஷண்முகா, சிவனே,
கண்ணா என்று எல்லோரையும் தன்னைக் காக்க அழைத்து நம்மையும் சொல்லவைக்கிறது.
இத்தகைய எண்ண ஓட்டத்தை இதுவரை நான் படித்ததில்லை.
அருமை மிக அருமை.
பாடல் அதையும் சொல்கிறது. சி.எஸ் ஜயராமன் குரலில்
வந்த இந்தப் பாடலே எனக்கு முதல் பாடல்.
குழந்தைகளை ஈர்க்கும் காக்கை.
\அதை அழைக்கும் ஒரு பாடல்.
பகிர்ந்துண்ணும் அழகு.
மறக்கவே முடியாது. இப்பொழுது உங்கள் கவிதையும் அந்த வரிசையில் சேர்கிறது.
மிக நன்றி.வாழ்க வளமுடன்,.
முதலில்@ ஸ்ரீராம்,
பதிலளிநீக்குஉடல் நலம் எப்படி சார். கவனமாக இருக்கவும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிரு உடுமலை நாராயண கவி அவர்கள் பாடலை மறந்து போய் வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் என்று சொல்லி விட்டேன்.
பதிலளிநீக்குபராசக்தி படத்துக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய
பதிலளிநீக்குபாடல் என்று தவறாக சொல்லி விட்டேன்.
என் நலம் பற்றி விசாரித்த நண்பர்களுக்கு நன்றி.... நன்றி.... நன்றி... எனக்கு ஒற்றைத்தலைவலி பிரச்னை. இப்போது சரியாகியிருக்கிறது என்று நம்புகிறேன்!
பதிலளிநீக்கு@அப்பாதுரை
பதிலளிநீக்குஎப்படி ஒரு புள்ளி கூட வைக்காமல் வெறும் பின்னூட்டம் இடமுடிகிறது?!!!
இந்தப்பாடலைக் கருணாநிதி எழுதியது என்றபின் மீண்டும் தேடிப்பார்த்தேன். கா..கா..கா.. உடுமலை நாராயணகவி இயற்றியதேதான். (கோமதி அரசுவும் தெளிவுபடுத்திவிட்டார்). இசை ஆர்.சுதர்சனம்.
பதிலளிநீக்குநாட்டுப்புறப்பாடல்களின் பலவகைகளைத் திரைஇசைக்குக் கொண்டுவந்த கவிஞர். கூடுதல் தகவல்: இந்திய அரசு நாராயணகவியை கௌரவித்து 2008-ல் தபால்தலை வெளியிட்டது.
திருமிகு athira ....
பதிலளிநீக்கு>>> சுத்துது சுத்துது சுத்திக்கொண்டே இருந்துது... என்ன இது எனக்கு எப்பவும் இப்படி ஆனதில்லையே என ஒரு கணம் திடுக்கிட்டுப் போட்டு... விட்டு விட்டேன்:).<<<
தங்கள் வருகை கலகலப்பு.. மகிழ்ச்சி..
திருமிகு athira..
பதிலளிநீக்கு>>> மனிதர்கள் எவரும் பலனை எதிர்பார்க்காமல் எதுவும் செய்வதில்லை:)<<<
தங்களைப் போல அஞ்சுவைப் போல - நமது வலைத்தள நண்பர்களைப் போல நல்லவர்களும் நிறையவே இருக்கின்றார்களே!..
தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
உங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது ஸ்ரீராம்?
பதிலளிநீக்குதுரை செல்வராஜு ஐயா உங்கள் காக்கைப்பாடல் அருமை! மீண்டும் காக்கை. எந்த வரியைக் குறிப்பிட்டுப் பாராட்டுவது என்று தெரியவில்லை. தமிழும் அருமை! ஸ்ரீராம் அதற்கு நீங்கள் பகிர்ந்துள்ள காணொளியும் அருமையான பாடல் பல வருடங்களுக்குப் பிறகுக் கேட்கக் கிடைத்தது உங்களால். மிக்க நன்றி. இந்த வாரம் காக்கை வாரம் என்றிடலாமோ??!!! எங்கள் தளம், உங்கள் தளம் என்று காக்கைகள் பறந்து கொண்டே இருக்கின்றனவே!!!
கீதா: ஹை மீண்டும் காக்கை!!! வியாழன் மற்றும் நேற்றைய உங்கள் பதிவைப் படித்து துளசி அனுப்பியிருந்தக் கருத்தையும் சேர்த்து நானும் உங்களின் வியாழன் பதிவைப் படித்துக் கருத்திட்டு பட் என்று கம்ப்யூட்டர் ஆஃப் ஆகிப் போய்விட்டது...மீண்டும் அது உயிர்ப்பெற்று வர நேரம் கடந்தது...மீண்டும் கருத்தை அடிக்க ஒரு சுணக்கம்...பார்த்தால் ஏகாந்தன் சாரின் காக்கைப் பறந்த பிறகு துரை செல்வராஜு சகோவின் காக்கையும் பறந்திருக்கிறது இங்கு...
துரை செல்வராஜு சகோ உங்கள் காக்கைப்பாடல் மிக மிக அருமை. கையூட்டளிக்கும்
மானிடரே..
கா.. கா.. என்றதும்
உமக்கல்ல..
கா.. கா.. சிவனே..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க காவினை
எனக் கரைந்தேன்....
கருணை இலாமல்
காடழித்தீர்..
கா.. எனக் கலங்கி
நான் கரைந்தேன்!..//
இன்னும் கீழே வரும் வரிகளும் பிடித்திருந்தது அனைத்தும்....
ஸ்ரீராம் சப்போர்ட்டிவ் காணொளி! நல்ல பாடல்...இந்தப் பாடல் உடுமலை நாராயகவி எழுதியது என்பதை இணையத்தில் எப்போதோ வாசித்த நினைவு காக்கையைக் குறித்துச் சில தகவல்கள் தேடிய போது..(முன்பும் தளம் தொடங்கிய போதும் ஒரு காக்கைப் பதிவு எழுதியிருந்தேன்!!!) முதலில் நானும் கருணாநிதி என்று நினைத்திருந்தேன்...
இன்னும் காக்கைகள் பறக்கட்டும் அதன் சிறப்பு உயரட்டும்! இப்படிக்கு எல்லா பறவைகள் காக்கை உட்பட நலச் சங்கம் ஹிஹிஹிஹி...
திருமிகு athira ....
பதிலளிநீக்கு>>> ஹா ஹா ஹா எப்பூடியாவது அஞ்சுவை விடக் கொஞ்சம் அதிகமா சொல்லிடோணும்... அதாவது..<<<
சரியான போட்டி!?..
அன்பின் GMB ஐயா..
பதிலளிநீக்கு>>> என் ரசனை சரியா!.. <<<
தங்கள் ரசனை சரியே!.. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
திருமிகு athira ....
பதிலளிநீக்கு>>> ஹாஆஹாஆ இதுக்கு அந்த ஜூலியே பெட்டர் :) <<<
இது வேறயா!?..
அன்புக்குரிய வல்லிசிம்ஹன் அவர்களுக்கு..
பதிலளிநீக்கு>>> முருகா,ஷண்முகா, சிவனே, கண்ணா என்று எல்லோரையும் தன்னைக் காக்க அழைத்து நம்மையும் சொல்லவைக்கிறது. இத்தகைய எண்ண ஓட்டத்தை இதுவரை நான் படித்ததில்லை.. <<<
சி.எஸ். ஜயராமன் அவர்கள் பாடிய -
வீணைக் கொடியுடைய வேந்தனே..
இன்று போய் நாளை வாராய்..
ஆயிரங்கண் போதாது..
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரே..
- ஆகிய பாடல்கள் காலத்தை வென்றவை..
கவிதையில் ஒரு சில கண்ணிகளைத்தான் திட்டமிட்டேன்..
மற்றவை பெரியோர்களின் நல்லாசிகள்..
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
திருமிகு கோமதிஅரசு..
பதிலளிநீக்குகா.. கா.. பாடலை எழுதிய திரு உடுமலை நாராயண கவி அவர்களாஇ நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
அன்பின் ஏகாந்தன்..
பதிலளிநீக்கு>>> எழுதியது யாரோ?.. <<. என்று தாங்கள் கேட்தற்குப் பின் - பாடலாசிரியர் திரு உடுமலை நாராயணகவி என்று குறித்திருக்கின்றேன்..
தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி..
அன்பின் திரு துளசிதரன் - கீதா அவர்களுக்கு..
பதிலளிநீக்குநேற்று தளத்தில் தங்களைக் காணாதது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது..
வெளியூர் - விடுமுறையாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன்..
>>> எல்லா பறவைகள் (காக்கை உட்பட) நலச் சங்கம் >>>
சிந்தனைக்கு உரிய விஷயத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள்..
நேற்றைய பதிவில் ஸ்ரீராம் அவர்கள் இணைத்த காணொளியே சிறப்பு.. அவர் தமக்கு நன்றி..
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி
காவியமா நெஞ்சின் ஓவியமா...கவிதை அல்லவா.
பதிலளிநீக்குவெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை குலதெய்வம்
பாடல்.
தங்கப் பதுமைப் பாடல்கள்.
அவர் போலக் குரல் படைத்தவர் யார்.
அன்புக்குரிய வல்லிசிம்ஹன் அவர்களுக்கு..
பதிலளிநீக்குதிரு. CSJ.. அவர்கள் இனிய பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்..
மீண்டும் வருகை தந்து மேலதிக பாடல்களைக் குறித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..