வெள்ளி, 3 நவம்பர், 2017

வெள்ளி வீடியோ 171103 : உண்ட பக்கற மார பக்கற ஹோய் ஹோய் ஹோய்
     எப்போப் பார்த்தாலும் இலக்கியமாகவே பாடல்களை ரசிக்க முடியுமா?  லுங்கியை மடிச்சு கட்டி, கொட்டும் மழையில் ஒரு கெட்ட ஆட்டம் போடவேண்டாம்?  

கீதம் வானம் போகும்... 
அந்த மேகம் பாலமாகும்...
பாதம் மீது மோதும் 
ஆறு பாடும் சுப்ரபாதம் 
ராகம் மீது தாகம் கொண்டு 
ஆறும் நின்றுபோகும்...

     இந்த வரிகள் நல்லாத்தான் இருக்கு.   ஆனால் கீழே நான் பகிர்ந்திருக்கும் இந்த கீதத்தால் மானம் போகும் என்று நினைப்பவர்கள் இன்றைய இரண்டு பாடல்களையும் -  ஆம், இரண்டு பாடல்கள் - கேட்டுவிட்டு திட்ட வேண்டாம்!  


     என்னுள் உறங்கி கொண்டிருக்கும் ஒரு பாமர ரசிகன் விழித்துக் கொள்ளும் தருணங்களில் இது மாதிரி பாடல்களைக் கேட்பேன்!  ஹிஹிஹிஹி 

     பூந்தமல்லியில் ஒரு பொண்ணு பின்னால போயி வந்தானாம் அவ புடைவை நல்லாயில்லையாம்!   அவன் சொல்றான்!


     உடனே ஜாடிக்கேத்த மூடி சொல்கிறது...   மந்தைவெளியில் அவள் மயங்கி நின்ற மனுஷன்  மூஞ்சி நல்லால்லையாம்!

"அவ பேண்டு தந்தா சட்டை தந்தா  
போட முடியலே...  
அவ போட்டு விட்டா மாட்டி விட்டா 
கயட்ட முடியலே..."  

     இந்த வரிகளுக்குப் பின்னால் வருகிறது தலைப்பில் நம் கண்ட இலக்கியச் செறிவுள்ள வரிகள்...!  இதுவும் கண்ணதாசன் பாடல்தான்!       இசை ஷியாம்-பிலிப்ஸ் என்று போடுகிறார்கள்.  நம்ம ஷ்யாமுக்கும் ( ! ) இவருக்கும் சம்பந்தம் உண்டா தெரியவில்லை!   ஏஞ்சலின், திரு  பிலிப்ஸ் சம்பந்தமான லிங்க் அனுப்பியுள்ளார்.  நன்றி ஏஞ்சலின்.  பிரமிக்க வைக்கிறார் பிலிப்ஸ்.

     ஆனால் ஒன்று, கொஞ்சம் ஸ்லோ டெம்போவில் யோசித்தால்  இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒரு புகழ்பெற்ற ஹிந்திப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.  யாருக்கும் தெரியவில்லை என்றால் பின்னர் சொல்கிறேன்.  எனக்கே என் மகன்தான் காட்டிக்கொடுத்தான்!

      இந்தப் படத்தில் ரசிக்கக் கூடிய (இன்னொரு) பாடல் உண்டு "நேற்றுவரை விண்ணில் இருந்தாளோ..."


2)     இலங்கைப் பாடலான ' சுராங்கனி...'  உள்ளிட்ட பாடல்களின் தாக்கத்தால் உருவான பாடல் இது என்று நினைக்கிறேன்.  ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடல்.

     இந்தப்பாடலுக்கு இசை டீ வி ராஜு (ஸ்வரங்கள் ராஜா).  பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்!

     இரண்டு பாடல்களுமே அருமை அண்ணன் ஆருயிர்ப் பாடகர் பாலசுப்ரமணியம் பாடியதுதான்!     ஆன் எ ஹாட்டு சம்மரு மார்னிங்...

68 கருத்துகள்:

 1. அள்ளித் தரும் வெள்ளி..
  இனிய உதயம்.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 3. இன்னிக்கு உள்ளே பூந்து வெளையாடலாம்..
  வரிஞ்சு கட்டிக்கிட்டு மடிச்சி கட்டிக்கிட்டு எல்லாரும் ஓடியாங்கோ.....வ்!!!

  பதிலளிநீக்கு
 4. சென்னையில தேங்கிய தண்ணீர் தலைக்கு மேல போகப் போகுது..

  இந்த மாதிரி நேரத்தில பூந்தமல்லி மந்தமல்லி.....சே... மந்தவெளி பாட்டெல்லாம். நல்ல எனர்ஜியா இருக்கும்!!...

  பதிலளிநீக்கு
 5. சென்னையில தேங்கிய தண்ணீர் தலைக்கு மேல போகப் போகுது..

  இந்த மாதிரி நேரத்தில பூந்தமல்லி மந்தமல்லி.....சே... மந்தவெளி பாட்டெல்லாம். நல்ல எனர்ஜியா இருக்கும்!!...

  பதிலளிநீக்கு
 6. பாருங்க... காலையிலயே ரவுண்டு கட்டி அடிச்சதில ரெண்டு மாங்காய்!!..

  பதிலளிநீக்கு
 7. பாட்டைக் காலங்கார்த்தாலே கேட்கணுமானு யோசிக்கிறேன். அது சரி, கண்ணதாசன் "கானா" பாடல்களும் எழுதி இருக்காரா என்ன??????????????????????

  பதிலளிநீக்கு
 8. ரெண்டு மாங்காயா? ரெண்டு பாட்டைச் சொல்றீங்களா துரை செல்வராஜூ ஸார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///ரெண்டு பாட்டைச் சொல்றீங்களா///

   யா...யா..

   ஆனா நான் சொன்னது-
   ரெண்டு தரம் கருத்து பதிவானதே அது!!..

   மகத்தான டூட்டி முடிஞ்சது..
   இருப்பிடத்துக்கு பயணம்..

   பொழுதோட பார்க்கலாம்..

   நீக்கு
 9. வாங்க கீதாக்கா.... பாட்டை எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம். மாமா காதில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!!!

  பதிலளிநீக்கு
 10. ஒரு காலத்தில் ரேடியோவில் தினம் கேட்ட பாடல் ஞாபகம் வருதே....

  பதிலளிநீக்கு
 11. நன்றி நண்பரே
  இதோ காணொலிகளைக் காணச் செல்கிறேன்
  தம +1

  பதிலளிநீக்கு
 12. வாங்க கில்லர்ஜி.. ஆமாம், அதுவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டில் !!!

  பதிலளிநீக்கு
 13. // ஆனா நான் சொன்னது-
  ரெண்டு தரம் கருத்து பதிவானதே அது!!.. //

  ஹா... ஹா..... ஹா... அப்படிச் சொல்றீங்களா துரை செல்வராஜூ ஸார்... ஓகே ஓகே

  பதிலளிநீக்கு
 14. முதல் பாட்டு என் ஃபேவரிட்


  ரெண்டாவது பாட்டு இப்பதான் கேக்குறேன். பார்க்குறேன்

  பதிலளிநீக்கு
 15. ஜெய்சங்கர் என்னா டான்சு.. அடடா

  பதிலளிநீக்கு
 16. //கண்ணதாசன் "கானா" பாடல்களும் எழுதி இருக்காரா என்ன??

  ஒருத்தி BAவாம் ஒருத்தி MAவாம்
  இரண்டையும் சேத்தாக்கா அடுத்தது BAMAவாம்

  எதுவானாலும் கண்ணதாசனை அடிச்சுக்க ஆள் கிடையாது..

  பதிலளிநீக்கு
 17. நன்றி ராஜி... அந்தப் பாட்டும் அதே ரகம்தான்!

  பதிலளிநீக்கு
 18. நான் கிண்டல் செஞ்சேன் ஸ்ரீராம்...
  மனோரமா டான்சுக்கு என்ன குறை.

  பதிலளிநீக்கு
 19. மனோரமா டான்ஸ் ஜெய்சங்கர் உடான்ஸ்.

  பதிலளிநீக்கு
 20. .//நான் கிண்டல் செஞ்சேன் ஸ்ரீராம்..//

  அடடா..... என் பாஸின் சித்தப்பா ஜெய் ரசிகர். அதுபோல நீங்களும் ஜெய்யின் டான்ஸை ரசிக்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன்.​

  பதிலளிநீக்கு
 21. இரண்டு பாடல்களுமே கேட்டதுண்டு.ஆனால் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு இப்பதான் கேட்டேன் ஸ்ரீராம். காட்சி தெரியாது படம் பார்த்ததில்லை என்பதால். இப்ப பார்த்தாச்சு உங்கள் பகிர்வால். மனோரமா ஆச்சி என்னமா பொளந்து கட்டுறாங்க!!! தலைப்பு செம!!

  இப்படியான பாடல்கள் எல்லாம் வீட்டுக்குத் தெரியாம இலங்கை வானொலியில் அப்ப நாங்க எங்க கஸின்ஸ் கூட்டம் உட்கார்ந்து கேட்டதுண்டு. நான் வீட்டுல இப்படியான பாடல்களுக்கு சும்மானாலும் ஆடி கஸின்ஸை சிர்க்க வைப்பதுண்டு. அதுங்களுக்குப் போரடிச்சுருச்சுனா, அம்மனோ சாமியோ பாட்டுக்கு என்னை ஆடச் சொல்லி விட்டு என் கஸின்ஸ் எல்லாரும் சிரிச்சு கலாய்த்து...பல நினைவுகளை மீட்டுருச்சு. அதே போல கே ஆர் விஜயாவின் நடிப்பைக் கேலி செய்து என்னைச் செய்யச் சொல்லி.. கோல்டன் டேய்ஸ்.

  ஸ்ரீராம் சமீபத்தில வந்த இப்படியான பாட்டு ஒன்னு எனக்கு ரொம்பப் பிடிச்சுது. விக்ரம் வேதா படத்துல. தாதா க்ரூப் சேர்ந்து ஆட்டம் போடும் அந்தப் பாட்டு. டசக் டசக் ரொம்ப நல்லாருக்கு அந்தப் பாடல் எனக்குப் பிடிச்சுச்சு...

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இலங்கை வானொலியில் கேட்ட பாடல்கள்.
  முதல் பாடலை பார்த்து இப்படி எல்லாம் பாட்டு எழுதி இருக்கிறார்களே என்று நினைத்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. நன்றி கீதா ரெங்கன். டான்ஸ்லாம் ஆடுவீங்களா? அட! கே ஆர் விஜயா படம்னா நான் எழுந்து ஓடிடுவேன்.

  பதிலளிநீக்கு
 24. முதல் பாடல்.. காமெடி என்கிற பெயரில் முழுநீள அசட்டாட்டம்!

  இரண்டாவது பரவாயில்லை. சில இடங்களில் ஜெய்சங்கரின் டான்ஸ் (!) ஷம்மி கபூரை நினைவுபடுத்துகிறது. Shammi-க்கு funny மூஞ்சி வேறு! அதனால் ஹிந்தி ரசிகர்களுக்கு கூடுதல் ஹாஸ்யம்!

  ஆட்டங்கள் கிடக்கட்டும் . காமெடிப்பாட்டை அலட்சியமாக அதே சமயத்தில் சுவாரஸ்யம் குன்றாமல் பாடுவது எல்லோராலும் முடியக்கூடியதல்ல. இரண்டையும் SPB சும்மா தூள்பறக்கவிட்டிருக்கிறார். Effortless elegance ! குரலின் ஏற்ற இறக்கங்கள், கொஞ்சல்கள், குழைவுகள் – SPB-யின் ரேஞ்சுக்கு இந்திய அளவில் சவால் விட எவனுமில்லை எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 25. முதல் பாட்டையே இப்போத் தான் கேட்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 26. ரெண்டாவது பாட்டுக் கேட்டாப்போல் இருக்கு! ஆனால் இப்படி இல்லை. இப்படி எல்லாம் திரைப்படம் வந்ததுனும், பாட்டுகள் இருப்பதும் இப்போத் தான் தெரியும்! அறிமுகத்துக்கு நன்றி! :)

  பதிலளிநீக்கு
 27. இரண்டு பாடல்களும் ages ago கேட்டிருக்கிறேன். அட்டஹாசமான செலக்‌ஷன். இரண்டு பாடல்களையும் முழுவதும் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 28. ஸ்ரீராம் கே ஆர் வி!! ஆ!! நான் படம் பார்ப்பதே அபூர்வம் அதுல கே ஆர் வி வந்தா பாக்கவே மாட்டேன்.
  அவங்க நடிப்பு பிடிக்காது. ஆனால் கேலி பண்ணறதுக்குனு அவங்க ஸீன்ஸ் பார்த்ததுண்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
 29. ஹா ஹா உண்மை முதலில் தலைப்பை பார்த்து ஹான் ! தோன்றியது என்னது இது என்று முதல் ஆறு வரிகளும் சூப்பர் பின்னர் வரும் இரண்டு பாடல் பகிர்வும் இன்றைய என் மன நிலைக்கு மாற்றம் கிடைத்தது (என்ன அப்படி மனநிலை பிளாக்கில் பகிந்து இருக்கிறேன் )மிகவும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 30. என்ன ஒரு வித்தியாசம் அந்தக்காலக் குத்துப்பாடலுக்கும் இந்தக் காலக் குத்துபாடலுக்கும் இப்போதுபாடல் வரிகளே புரிவதில்லை

  பதிலளிநீக்கு
 31. பொழுதுபோக்கு பாடல் நன்றாக உள்ளது

  பதிலளிநீக்கு
 32. நன்றி ஏகாந்தன் ஸார்... பூந்தமல்லியிலே பாடல் நினைவுபடுத்தும் ஹிந்திப்பாடல் என்ன என்று கண்டு பிடிக்க முடிந்ததா?

  அந்த நேரத்தில் வந்த டான்ஸ் பாடல்கள் பெரும்பாலும் ஷம்மி,ஜிதேந்திரா ஸ்டைல்களிலேயே இருக்கும். ரவிச்சந்திரனும் அப்படிதான் ஆடுவார்.

  பதிலளிநீக்கு
 33. மீள் வருகைக்கும் பாடல்களை பொறுமையாகக் கேட்டதற்கும் நன்றி கீதாக்கா!

  பதிலளிநீக்கு
 34. ///
  ஸ்ரீராம்.November 3, 2017 at 7:16 AM
  வாங்க கில்லர்ஜி.. ஆமாம், அதுவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டில் !!!

  Reply///
  அவரா நீங்க?... அதுக்காகத்தான் என்னை அனுப்பியிருக்கினம் உடனடியா வாடகையை வசூல் பண்ணச்சொல்லி... என் எக்கவுண்டுக்கு இப்பவே போட்டு விடவும்... இல்லை எனில்.... பெறீஈஈஈய பிரச்சனையாகிடும்:)..

  பதிலளிநீக்கு
 35. மீள்வருகையில் கே ஆர் வி பற்றி சொன்னதற்கு நன்றி கீதா ரெங்கன்.

  பதிலளிநீக்கு
 36. நன்றி பூவிழி. உங்கள் தளம் வந்து படித்து, வாக்களித்து, பின்னூட்டமிட்டுவிட்டேன்!

  பதிலளிநீக்கு
 37. /வாடகையை வசூல் பண்ணச்சொல்லி... என் எக்கவுண்டுக்கு இப்பவே போட்டு விடவும். //

  வாங்க அதிரா.... ஹா.... ஹா... ஹா... இதற்கு உங்களுக்கு நான் வாடகை கொடுக்கவேண்டுமா? சரிதான்!

  பதிலளிநீக்கு

 38. ரெண்டாவது பாட்டு சிங்களீஸ் பைலா ஸ்டைலில் இருக்கு :)
  முதல் பாட்டும் கேட்டிருக்கேன் ..

  இந்த பாட்டெல்லாம் இப்பவும் டிவி ரேடியோல போடறாங்களா சென்னைல
  https://www.youtube.com/watch?v=l5L1uum1cAs

  பதிலளிநீக்கு
 39. அப்புறம் ஸ்ரீராம் உங்க ஏரியாலாம் மழைக்கு எப்படி இருக்கு ..நீங்கலாம் பத்திரமா இருக்கீங்களா ..

  பதிலளிநீக்கு
 40. சகோதரி ஏஞ்சலின் "பூந்த மல்லியிலே"பாடலின் இசை அமைப்பாளர் திரு பிலிப்ஸ் பற்றி விவரங்கள் அறிய ஒரு லிங்க் அனுப்பி உள்ளார். அதையும் அவர் படத்தையும் பதிவில் இணைத்துள்ளேன். நன்றி ஏஞ்சலின்.

  பதிலளிநீக்கு
 41. சென்னையில் மழையா?நேற்று மாலை 6மணிக்கு பெய்யெனப் பெய்யத் தொடங்கிய மழை, விடாமல் சீராகப் பொழிந்து காலை மூன்று நான்கு மணியில் நிற்கத் தொடங்கியது! நன்றி ஏஞ்சலின்.

  பதிலளிநீக்கு
 42. @ஸ்ரீராம்:

  //.. பூந்தமல்லியிலே பாடல் நினைவுபடுத்தும் ஹிந்திப்பாடல் என்ன என்று கண்டு பிடிக்க முடிந்ததா?//

  முடியவில்லை!

  பதிலளிநீக்கு
 43. //நீங்களும் ஜெய்யின் டான்ஸை ரசிக்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன்.​

  ஜெய்சங்கர் ஜாலியான நடிகர் - எனக்குப் பிடிக்கும்.. இந்த பாட்டுக்கான டான்ஸ் தமாஷ்.. அவ்வளவு தான்.

  பதிலளிநீக்கு
 44. இதில் ரெண்டாம் பாட்டு கொஞ்சம் yodeling டெக்னீக்காம் என் பொண்ணு சொல்றா .வாய்ஸ் வைபிரேட் ஆகரத்தை யோடெலிங் னு சொல்வார்களாம் .
  சவுண்ட் of ம்யூஸிக்ல மரியா ஆன்டி பாடுவாங்களே High on a hill was a lonely goatherd
  Lay ee odl lay ee odl lay hee hoo இது மாதிரி பாட்டுங்க

  பதிலளிநீக்கு
 45. ஏகாந்தன் ஸார்... படோஸன் படத்தின் 'மேரே சாம்னேவாலி...' பாடலை நினைவு படுத்தும்.

  பதிலளிநீக்கு
 46. நன்றி ஏஞ்சலின். யொடெலிங் என்றால் என்ன என்றும் தெரிந்து கொண்டேன். முன்னர் நீங்கள் கொடுத்திருந்த லிங்க் போய் அந்தப் பாடலைக் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 47. @ sriram:

  //.. படோஸன் படத்தின் 'மேரே சாம்னேவாலி...' பாடலை..//

  ஓ! மேரே சாம்னேவாலி கிடுக்கி மே.., இக் சாந்துக்கா துக்கடா ரெஹ்தா ஹை..! -கதை இப்பிடியா போகுது..!

  பதிலளிநீக்கு
 48. இதுவரை காணாத பாடல்கள் + தெரியாத தகவல்கள் - நன்றி!!

  பதிலளிநீக்கு
 49. பூந்தமல்லியிலே பாடல் எனக்குப் பிடிக்கும். இரண்டவது பாடல் ஏதோ ஷம்மி கபூரின் ஹிந்தி பாடலை நினைவு படுத்துகிறது. இந்த பாடலுக்கு முத்துராமன் டான்ஸ் ஆடியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்..சிரிப்பை அடக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 50. ஒருத்தி BAவாம் ஒருத்தி MAவாம்
  இரண்டையும் சேத்தாக்கா அடுத்தது BAMAவாம்

  எதுவானாலும் கண்ணதாசனை அடிச்சுக்க ஆள் கிடையாது..

  மேற்கண்ட பாடல் கே.பாலசந்தர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் 'இனிமை நிறைந்த உலகமிருக்கு' பாடல்தான். அதை எழுதியது வாலி இல்லையோ?

  பதிலளிநீக்கு
 51. இரண்டு பாட்டுமே எனக்குப் பிடிக்கும். மனோரமா பாட்டுக்கு எங்க லிங்க்.....
  ஜெய்சங்கர் நிறையவே பிடிக்கும். நேரில் பழக இனிதான மனிதர்.

  பதிலளிநீக்கு
 52. // மனோரமா பாட்டுக்கு எங்க லிங்க்.... //

  வல்லிம்மா... பூந்தமல்லியிலே பாட்டில் பெண் குரலும், காட்சியில் ஆடுவதும் மனோரமாதான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!