திங்கள், 13 நவம்பர், 2017

"திங்க"க்கிழமை : அரிசி உப்புமாவும், கத்திரிக்காய்ப் புளி கொத்சுவும்! -கீதாசாம்பசிவம் ரெஸிப்பி

ஹாஹா, இதுவும் தெரிஞ்சது தானேனு நினைப்பவர்களுக்கு! இதிலே ஒரு மாற்றம் இருக்காக்கும். எல்லோரும் அரிசி உப்புமாவுக்கு நொய்யிலேயோ அல்லது அரிசியை மிஷினில் உடைத்தோ பண்ணுவாங்க. நொய்யிலே பண்ணும்போது அப்படியே பண்ணுவாங்க. மிஷினில் உடைக்கும்போது ஒரு சிலர் அதிலே துவரம்பருப்பு, மிளகு, சீரகம் சேர்ப்பாங்க.  நாம பண்ணுவது தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரகம் ஆச்சே! இப்படி எல்லாம் பண்ணிடுவோமா என்ன?

இதுக்கு நான் செய்வது அரைச்சு விட்டுச் சேர்ப்பது! இது எங்க வீடுகளுக்கு என்றே பிரத்யேகமாக உள்ளதாக்கும். மற்ற வீடுகளில் பார்த்தது இல்லை. இதிலே நான் மிளகு, சீரகம் சேர்ப்பதில்லை. பிடிச்சவங்க சேர்த்துக்கலாம். எனக்கென்னமோ அரிசி உப்புமாவின் மணத்தையே இந்த மிளகு, சீரகம் மாற்றிப் பொங்கல் ருசிக்கு ஆக்கிடுதோனு ஒரு எண்ணம்! ஆகவே சேர்ப்பதில்லை. அதே போல் மிஷினில் உடைத்தோ அல்லது நொய்யிலேயோ பண்ணுவதும் இல்லை. எப்போ உப்புமா பண்ணறோமோ அன்னிக்கு வீட்டிலே மிக்சி ஜாரில் போட்டுத் தேவையான அரிசி ரவையைத் தயார் செய்துப்பேன். எத்தனை பேராக இருந்தாலும். இப்போ நாங்க ரெண்டு பேர் தானே! அதனால் கொஞ்சமாக!

இருந்தாலும் நான்கு பேருக்கான அளவு இங்கே சொல்லிடறேன்.

நல்ல பச்சரிசியாக இரண்டு கிண்ணம். அரிசியைக் களைந்து கழுவிக் கொண்டு நீரை ஒட்ட வடித்து விட்டு அந்த ஈரத்திலேயே குறைந்தது 2,3 மணி நேரமாவது மூடி வைக்கணும்.

இப்போ அரைக்கத் தேவையானதை ஊற வைக்கணும். உப்புமாவில் மி.வத்தல் போடப்போவதில்லை என்பதால் ஒரு மி.வத்தல், (காரம் இருந்தால் பாதி போதும்.) இரண்டு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பைப் போட்டு ஊற வைக்கவும். ஒரு சின்ன மூடித் தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காய் நிறைய இருந்தால் தப்பில்லை.

இப்போத் தாளிக்கும் பொருட்கள். அரிசி உப்புமான்னால் நான் தே. எண்ணெய் தான் பயன்படுத்துவேன். ஆகவே ஒரு சின்னக் கிண்ணம் தே எண்ணெய்.

கடுகு ஒரு டீஸ்பூன், உபருப்பு, கபருப்பு முறையே ஒரு டீஸ்பூன். பச்சை மிளகாய் ஒன்று அல்லது காரத்தைப் பொறுத்து 2. இஞ்சி ஒரு சின்னத் துண்டு. பெருங்காயப் பவுடர் அல்லது கட்டி, கருகப்பிலை, உப்பு தேவையான அளவு. 


இவை சமைக்கத் தேவையான பாத்திரம் வெண்கல உருளி! இதில் தான் எல்லோரும் பின் வாங்குவீங்க! நாங்க பின் மட்டும் இல்லை, பட்டன், கத்திரிக்கோல் எல்லாமும் வாங்குவோமுல்ல! நம்ம கிட்டே தயாரா இருக்கு உருளி! வெண்கல உருளி.

இப்போ ஊறி இருக்கும் அரிசியை ரவை மாதிரி உடைச்சுக்கவும். 

மிக்சி ஜாரில் போட்ட அரிசி ரவையாக உடைத்தது.தட்டில் கொட்டி இருக்கேன். 

ஊறிய மி.வத்தலைப் பருப்பு வகைகள், தேங்காய்த் துருவலோடு அரைச்சிருக்கேன். ரொம்ப நைசா எல்லாம் வேண்டாம். கொரகொரப்பா இருக்கலாம், அதுக்காகப் பருப்புத் தெரியக் கூடாது. ரவை பதம்.

வெண்கல உருளியில் தாளிதம். தே. எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் கட்டி, இஞ்சி, கருகப்பிலை சேர்த்துக் கொண்டு அரைச்சு வைச்சிருப்பதை இரண்டு கிண்ணம் நீரில் கரைத்துக் கொண்டு தாளிதம் பக்குவம் ஆனதும் அதில் சேர்க்கணும்.

தாளிதத்தில் சேர்த்திருப்பது கொதிக்க ஆரம்பிக்கிறது. இந்நிலையில் தேவையான உப்பைச் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் ரவையை அதில் கொட்டிக் கிளறிக் கொடுக்கவும். வேகக் கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆகவே இதற்குப் பொருந்துகிறாப்போல் ஓர் தட்டில் கொஞ்சம் நீர் விட்டு மேலே மூடி வைக்கவும். இந்த நீர் உப்புமா வேகும்போது சூடாக ஆகிவிடும். உப்புமாவுக்கு மேல் கொண்டு நீர் தேவைப்பட்டால் இதைச் சேர்த்துக்கலாம். அதோடு இப்படிப் பாத்திரம் அல்லது தட்டில் மேலே நீர் வைப்பதால் உப்புமா அடியில் பிடித்துக் கொண்டு விடாமலும் இருக்கும்.

உப்புமா வேகட்டும். இப்போ நாம் கத்திரிக்காயை கொத்சு செய்யத் தயார் செய்வோம். அதற்குக் கத்திரிக்காயைச் சுட வேண்டும். கத்திரிக்காய் சுட்டால் அழும் தான்! ஆனாலும் என்ன செய்வது! கத்திரிக்காயைச் சுட்டே ஆகணும். அதுக்கு முன்னால் ஓர் எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொண்டு இரண்டு கிண்ணம் புளிக்கரைசலைத் தயார் செய்துக்கணும்.

மற்றத் தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் பெரிதாக இருந்தால் ஒன்றே ஒன்று போதும். நல்ல பெரிதாக இருக்கும். அல்லது நான் வாங்கி இருக்காப்போல் நடுத்தர அளவுன்னா நான்கு அல்லது மூன்று. அவரவர் தேவைக்கு ஏற்ப.
கத்திரிக்காய்கள் கழுவப்பட்டு சுடுவதற்குத் தயாராக!கத்திரிக்காயில் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு கத்தியை அதனுள் நடுவே நன்றாக வேகும்படி கொடுத்துவிட்டு எரிவாயு அடுப்பில் இம்மாதிரிச் சுடலாம்.சுட்ட கத்திரிக்காய்கள். இவற்றைத் தோலுரித்துக் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னெல்லாம் நன்றாகக்  கைகளாலேயே பிசைவோம். இப்போதெல்லாம் மிக்சி ஜாரில் போட்டு அடித்து விடுகிறோம். கீழே மிக்சி ஜாரில் போட்டு அடித்த நிலையில்.
மிக்சி ஜாரில் போட்டு அடித்த சுட்ட கத்திரிக்காய்களின் விழுது. இதைப் புளி ஜலத்தில் கலந்து கொள்ளவும்.

கொத்சுவுக்குத் தேவையான பொருட்கள்:

தாளிக்க எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய் பாதி, மி.வத்தல் பாதி, பெருங்காயம், கருகப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு.

வறுத்துப் பொடிக்க:

மிவத்தல் ஒன்று அல்லது இரண்டு, தனியா இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு, உபருப்பு, வெந்தயம் மிளகு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் சேர்த்து எண்ணெயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு மி.வத்தல், பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு கத்திரிக்காய் விழுது சேர்த்துக் கரைத்து வைத்த புளிக்கரைசலைச் சேர்க்கவும். மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும். கொதிக்க விடவும். நன்கு புளி வாசனை போகக் கொதித்த பின்னர் வறுத்துப் பொடித்த பொடியில் தேவையானதைப் போட்டுக் கலக்கவும். எல்லாப் பொடியும் தேவை எனில் அவரவர் காரத்துக்கு ஏற்பச் சேர்க்கலாம். நான் எல்லாப் பொடியையும் கலப்பதில்லை.  தேவையான அளவுக்கு மட்டும் கலப்பேன்.  விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கலாம்.

இப்போ உப்புமாவைப் பார்க்கவே இல்லையே! அதைப் பார்ப்போமா? இதற்குள்ளாக அது நன்கு வெந்து தயார் நிலைக்கு வந்திருக்கும்.

கொத்சுவும் கொதித்துச் சாப்பிடத் தயாராக வந்து விட்டது. சூடாகச் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அரிசி உப்புமாவை மறுநாள் சாப்பிட்டால் இன்னமும் நன்றாக இருக்கும். கடாயில் கொதிக்கும் கொத்சு. கத்திரிக்காய் விழுதைச் சேர்க்கும் முன்னர்.


சாப்பிடத் தயார் நிலையில் கொத்சு!

அரிசி உப்புமா தயாராகி விட்டது. கீழே உருளியில். ஒரு டேபிள் ஸ்பூன் நல்ல நெய்யை உப்புமாவில் கலந்தால் மணமாக இருக்கும். இது அவரவர் விருப்பம் போல்! 
===============================================================


​  83 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்

  பதிலளிநீக்கு
 2. அரிசி உப்புமா பிரச்னையில்லை..
  கத்தரிக்காய் கொத்சு... !?!?...

  செய்து விடுவோம்!..

  பதிலளிநீக்கு
 3. இன்னும் தேம்ஸ் கரையில கோழி கூவலை.... போல இருக்கு!..

  பதிலளிநீக்கு
 4. //இன்னும் தேம்ஸ் கரையில கோழி கூவலை.... போல இருக்கு!.. //

  ஆமாம்! அந்தப் போட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில்தான் என்று சொல்லி இருக்கிறார்களே!

  பதிலளிநீக்கு
 5. அட! இந்த வாரம் போட்டுட்டீங்களா? துரை செல்வராஜு எங்கே இருந்து கவனிக்கிறார்? ஆனால் நான் சீக்கிரம் எழுந்தாலும் உடனே கணினிக்கு வர முடியாது! :)

  பதிலளிநீக்கு
 6. சிலுசிலு பெங்களூர் காலையில் சூடான அரிசி உப்புமாவும் கொத்சுவும் கிடைத்தால் சுகமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த நாக்குக்கு எத்தனை அள்ளிப் போட்டாலும் திருப்திப்படறமாதிரி தெரியலையே !

  பதிலளிநீக்கு
 7. கீதாக்கா நானும் சீக்கிரம் எழுந்தாலும் கணினி பக்கம் வருவதும் லேட்டாகிடும்....அதுவும் இப்ப கணினி ஓப்பன் செய்து தகராறு மீண்டும் மமூடி...இப்ப மொபைல் வழி கருத்து...

  துரை செல்வராஜு சகோ இனிய காலை வணக்கம்

  தேம்ஸ் கரை மெதுவாகத்தான் வரும்....ஹாஹாஹா..

  கீதா

  பதிலளிநீக்கு
 8. கீதாக்கா சேம்... ரெசிப்பி...நோ மெஷின், வீட்டில் மிக்சியில் அவ்வபோதுதான் எத்தனை பேர் என்றாலும்...மூடும்.தட்டில் நீர் வைத்து எனவது மூடி வேக வைக்கும் எல்லாத்துக்கும் செய்யறதுண்டு..என் அப்பா வழி பாட்டியிடம் கற்றது..
  அது போல மாமியாருக்கு பல் செட் மாட்டியத்தில்ருந்து அவர் சொல்லி பருப்புகள் தேங்காயுடன் அரைத்து, தாளிக்கும் பருப்புகள் கூட கொஞ்சம் உடைத்து தாளித்து காரம் அதிகமில்லாமல் செய்வது வழக்கமாகிடுச்சு. மிளகு ஜீரகம் பொதுவாக சேர்ப்பதில்லை. அமாவாசை டிபன், மற்றும் மழை நாளில் மாமியார் சேர்க்கச் சொல்வார்....

  கீதா

  பதிலளிநீக்கு
 9. கொத்ஸ்உ கொஞ்சம் வித்தியாசம்.....தனியா மிளகு சேர்க்காமல்...மற்றவை அதே. ...அப்பா வழி பாட்டி இதையே பச்சை புளி கோசு என்று புளி தண்ணீர் லைட்டாகக் காரைத்து அதில் சுட்ட கத்தரிக்காய் பிசைந்து...(இப்பவும் நான் கையில்தான் பிசைவதுண்டு) தாளித்து...அவருக்கு மிகவும் பிடிக்கும்...அதுவும் நன்றாகத்தான் இருக்கு....
  கீதா

  பதிலளிநீக்கு
 10. தேம்ஸ் பூசார் மொபைல் வழி எப்படியோ பெரிய கமெண்டெல்லாம் போடுறங்களேன்னு நானும் முயற்சி செய்தென்...ஆஆ. அயர்ச்சி!!!!!!! முடிலப்பா..

  கீதா

  பதிலளிநீக்கு
 11. படங்களே அட்டகாசமாக இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
 12. பலமுறை முயன்றும் ஓட்டு விழுந்து விட்டதாக சொல்கிறதே.... பொய்யோ......

  பதிலளிநீக்கு
 13. உப்புமாவும் கொத்சும் அருமை. நான் ரொம்ப வருஷமா "அரிசி உப்புமா மிக்ஸ்"தான் வாங்கிக்கிட்டிருந்தேன். சில சமயங்களில் நானே செய்வேன். கொத்சு இதுவரை செய்துபார்த்ததில்லை. விரைவில் செய்துபார்க்கிறேன்.

  எனக்கும் அரிசி உப்புமா, ஆற ஆறத்தான் மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு

 14. உப்புமா என்றால் சிறிது பயம் ஆனால் அரசி உப்புமாவை தைரியமாக சாப்பிடலாம்..... நமக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரியாக சமைப்பதால் எனக்கு சமையல் குறிப்புக்கள் படிக்க பிடிக்கும் காரணம் சில சமயங்களில் இந்த குறிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உண்டு அதை பார்த்து நம் சமையலில் அந்த சில முக்கிய குறிப்புகளை பயன்படுத்தினால் நம் சமையல் பலராலும் பாராட்டப்படும் இது என் அனுபவ உண்மை....

  கீதாம்மா உங்களின் பயனுள்ள குறிப்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 15. என்னடா எந்தக் கருத்துமே மெயிலுக்கு வரலைனு நினைச்சால் இங்கே தொடரும் ஆப்ஷன் க்ளிக் செய்யலை!

  பதிலளிநீக்கு
 16. 'நல்லவேளை ஸ்ரீராம் கீ.சா மேடத்திடம் மதிய உணவு இடுகை ஒண்ணு தாங்கன்னு சொல்லலை. சொல்லியிருந்தால், 20 ஐட்டங்களையும் ஒரே பதிவில் எழுதிக்கொடுத்திருப்பார் போலிருக்கிறது. கொத்சு தனியா, அரிசி உப்புமா தனியான்னு ரெண்டு இடுகையா எழுதியிருக்கக்கூடாதா?

  பதிலளிநீக்கு
 17. Ascharyam, ithe murayil thaan en Amma seivaar, no inji though!
  Oru sandegam, kathrikai sutta sethuradha? :-))

  பதிலளிநீக்கு
 18. எனக்குத்தான் சரியாத் தெரியலையா? வெங்கலக் கிண்ணமா அல்லது வெங்கல உருளியா? ரொம்ப சின்ன சைசுல தெரியுது. எனக்குத் தெரிந்து வெங்கல உருளின்னா, உயரம் கம்மியா, அகலம் அதிகமா, திரட்டிப்பால் பண்ணற உருளியைத்தான் வெங்கல உருளின்னு சொல்லுவாங்க.

  உடனே, கீ.சா மேடம்.. நீங்க.. 'அது பெரிய வெங்கல உருளிதான். நீங்கதான் கொஞ்சம் குண்டாயிட்டீங்க போலிருக்கு. அதுனால உருளி சின்னதா உங்க கண்ணுக்குத் தெரியுது'ன்னு சொல்லி சமாளிக்காதீங்க.

  பதிலளிநீக்கு
 19. அரிசி உப்புமா நானும் இதே முறையில்தான் செய்வேன். முன்பு எங்கள் வீட்டில் உப்புமாவுக்கு உடைப்பதற்கென்றே ஒரு சிறு கல் எந்திரம் உண்டு. அதுதான் உடைப்போம். வீடுகள் மாறியதில் எந்திரம் போன இடம் தெரியவில்லை. இப்போதெல்லாம் மிக்ஸியில்தான் உடைத்துக் கொள்கிறோம்.

  நீங்க செய்திருக்கும் கொத்சுவைத்தானே சிதம்பரம் கொத்ஸு என்பார்கள் ?

  //இப்படிப் பாத்திரம் அல்லது தட்டில் மேலே நீர் வைப்பதால் உப்புமா அடியில் பிடித்துக் கொண்டு விடாமலும் இருக்கும்.//

  என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? ஆதி பிடித்த அரிசி உப்புமா அலாதி ருசி, இதற்காகவே உப்புமாவை அடிபிடிக்க விடுவேன்.

  பதிலளிநீக்கு
 20. கீதா சிஸ் இந்த விதம் புதுசுதான் அரிசி உப்புமா நல்லாத்தான் இருக்கு வித்தியாசமாய்
  டிப்ஸும் கொடுத்தாச்சு அடி பிடிக்காமல் இருக்க
  கொஸ்தும் காண்பித்தாயிற்று

  பதிலளிநீக்கு
 21. நமக்கும் உப்புமாவுக்கும் ரொம்பத் தூரம்.
  விளக்கமாய் சொல்லியிருக்கீங்க...
  படங்களுடன் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 22. ஆஆஆவ்வ்வ் இன்று உப்புமாவும் கத்தரிக்காய் கொத்ஸ்சுமோ??? எனக்கு ரொம்பப் பிடிக்குமே...
  றவ்வை, சேமியா.. இரண்டு உப்புமாக்களும்தான் சாப்பிட்டதுண்டு... வீட்டில் அடிக்கடி செய்ய மாட்டோம்.

  அரிசி அரச்செடுத்து செய்வது கொஞ்சம் யோசிச்சுத்தான் செய்யோணும்.. பதம் பிழைச்சால் களி ஆகிடுமே....

  பதிலளிநீக்கு
 23. ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்... கத்தரிக்காயில் தான் கொத்சு... அதென்ன புளிக் கொத்சு... சத்து அப்பாலிக்கா வந்து செய்முறை படிச்சுச் சொல்றேன்ன்...

  ஊசிக்குறிப்பு:-
  எங்கட நடுச்சாமம் ஒரு 12 ...... 12.5 இருக்கும் .. என் கையிலே பெரீயா தடி.... ஒருவர் போலவும் இருக்கு இருவர் போலவும் இருக்கு:).. கலைத்துக் கொண்டே ஓடுகிறேன்... அப்பவும் முகம் தெரியவில்லை:)... ஒருவர் மெல்லிய நீலம்... மற்றவர் வெள்ளை சேட்டு.... றவுசர் கலர் தெரியல்ல... இருட்டெல்லோ...

  தேம்ஸ் எல்லைவரை ஓடினேன்... மறைந்திட்டினம்... மீ முழிச்சிட்டேன்ன்ன்ன் ஆஆவ்வ்வ்வ் இந்தக் கனவுக்கு என்ன பலன் என முனிப்பாட்டியம்மா விடம் கேட்டுக் கொண்டு வருகிறேன்ன்ன்... அதுவரை....:)

  பதிலளிநீக்கு
 24. உப்புமாவும்,கொத்ஸும் நன்றாக இருக்கு. ஒரு ஸந்தேகம். அரிசி இரண்டு கிண்ணம் உடைப்பதற்கு. தேங்காய் அரைத்த விழுதுடன் இரண்டு கிண்ணம் தண்ணீர் சேர்த்து விடச் சொல்லியுள்ளீர்கள். தண்ணீர் போதுமா. ஈர அரிசி உடைத்திருப்பதால் இந்த அளவா. நாங்கள் வரட்டு அரிசியை உடைத்துதான் உப்புமா கிளறுவது வழக்கம். துவரம்பருப்பு,கடலைபருப்பு எல்லாமும் போட்டு உடைப்பதுதான். கல் ஏந்திரத்தில் அரிசியை உடைப்போம். காலம் மாறி மிக்ஸிக்கும் மாறியாகி விட்டது. எங்களகத்தில் சிறிது வெந்தயமும் சேர்த்து உடைப்போம். மெத்தென்று உப்புமா இருக்கும்.தேங்காய்,உப்புகார பெருங்காயத்துடன் அதுவும் வாஸனையாக இருக்கும். கசக்காது. இது பழயகால பழக்கமாக இருக்கலாம். நல்ல எண்ணெய் உபயோகிப்போம். மற்றபடி தாளிதம் எல்லாம் ஒன்றேதான். தேங்காய்த்துருவல் கொதிக்கும் தண்ணீரில் சேர்ப்போம். தண்ணீர் இரண்டரை பங்கு சேர்த்தால் உப்புமா உதிரியாக இருக்கும். பழைய அரிசிதான் உப்புமாவிற்கு ஏற்றது. வயதானவர்கள் இருக்கும் வீட்டில் தண்ணீர் இன்னும் சற்று அதிகமாகவே சேர்ப்பார்கள். கமகமவென்று வேகும்போதே வாஸனை ஊரைத்தூக்கும்.கடைசியா கிளறி மூடும் போது துளி உப்புமாவை வெந்தூடுத்தா என்று தட்டில் போட்டு சாப்பிட்டா அந்த ருசியே வேறு. தண்ணீர் வைச்சு மூடறது எல்லாம் ஒண்ணுதான். இப்போது மிக்ஸியில் அரிசியை உடைக்கு முன்னரே கொஞ்சம் ஜலம் தெளித்துப் பிசறி வைக்கிரோம். பருப்புகள் தனியாகப் பொடி பண்ண வேண்டியிருக்கு. பாருங்கள் பழக்கம் வித்தியாஸமிருக்கு அவ்வளவுதான். வெண்கல உருளிக்குப் பதில் அலுமினிய குக்கர்தான். இல்லாவிட்டால் கிளறினதை மைக்ரோவேவில் வேகவைத்தாலும் ஆகிறது. கும்மட்டியில், உருளியில் கிளறினது மாதிரி வருமா. அதான் கேள்வியே! வாழைப்புமடலில் உப்புமாவும், கொத்ஸும் கொடுப்பார்கள்.ருசியோருசி. உங்களுடைய உப்புமாவும்,கொத்ஸும் இன்று லஞ்ச். டில்லி பொல்யூஷனில் தவிக்கிறது. சிலவில்லாமல் சாப்பாடு எனக்கு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 25. அரிசி ஒருபங்கு என்றால் தண்ணீர் இரண்டரை பங்கு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 26. ஐயோ உப்புமாவா? தப்பித்தேன்

  பதிலளிநீக்கு
 27. ஆஆவ்வ்வ் வன்முறை வெட்டு சுட்டு ஹாஆஹா :)
  அக்கா கொத்சுக்கு அந்த கத்திரிக்காயை நான் சுட்டதில்லை என்ன செஞ்சேன்னா எப்பவும் தண்ணி போடாம குக்கரில் ஒரு விசில் வச்சிஎடுப்பேன் ,என்னாகியிருக்கும்னு நீங்களே புரிஞ்சிப்பீங்க :) எங்க வீட்ல cooker safety valve மட்டும் 20 வச்சிருக்கேன் இப்போல்லாம் செய்றதில்ல அடிக்கடி வால்வ் மாத்தி இப்போ 3 தான் மிச்சம் .வேற வழியில்லை சுட்டுத்தான் செய்யணும் :)

  பதிலளிநீக்கு
 28. ரவை உப்புமா நானா சாப்பிட முடியாதது இதை இதுவரைக்கும் செஞ்சதில்லைக்கா .ஒருமுறை இட்லி ரவைன்னு விக்கிரதை வாங்கி செஞ்சி சொதப்பிடுச்சி ...ஒரு விஷயம் தான் கஷ்டம் ..2-3 மணிநேரம் ஊற வைக்கணும்னா வின்டரில் காலைமைக்கு செய்ய முடியாது மாலைதான் முடியும்

  பதிலளிநீக்கு
 29. எல்லாம் ஓகே அந்த வெண்கல உருளிக்கு எங்கே போவேன் :)

  பதிலளிநீக்கு
 30. ///Geetha SambasivamNovember 13, 2017 at 10:45 AM
  என்னடா எந்தக் கருத்துமே மெயிலுக்கு வரலைனு நினைச்சால் இங்கே தொடரும் ஆப்ஷன் க்ளிக் செய்யலை!////

  ஹா ஹா ஹா கீதாக்காவும் வலை உலகமும் படும்பாடு ... என்னை உருண்டு பிரண்டெல்லோ சிரிக்க வைக்குது:)...

  பதிலளிநீக்கு
 31. நானும் இதே மாதிரி தான்.. ஆனால் தண்ணீர் விட்டு அரைத்ததில்லை..மிக்சியில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து உடைத்துக் கொள்வேன்.. ஒரு கப்புக்கு இரண்டரை கப் தண்ணீர்.காந்தல் இங்கு வேண்டும். கொத்சு இது போல செய்ததில்லை மாமி. செய்து பார்க்கிறேன்..

  சப்பாத்திக்கு டெல்லியில் பெரிய கத்திரிக்காயை சுட்டு பைங்கன் கா பர்த்தா செய்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 32. வாங்க துரை செல்வராஜு ஐயா, உங்க கிட்டே அவன் இருக்கா? மைக்ரோவேவைச் சொல்லலை! பெரிய அவன்? அதிலே கத்திரிக்காயைச் சுடலாம்! :) முத முதல்லே வந்து சூடா உப்புமா சாப்பிட்டதுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வாங்க ஏகாந்தன் சார், முதல்நாள் செய்த உப்புமாவை மறுநாள் சாப்பிட்டால் இன்னும் ருசி தெரியுமோ? ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க! :)

  பதிலளிநீக்கு
 34. வாங்க தில்லையகத்து கீதா, கத்திரிக்காய் கொத்சு என் அம்மா பண்ணுவது இப்படி வறுத்துப் பொடி செய்தெல்லாம் போடாமல் கத்திரிக்காயைச் சுட்டு நீர்க்கப் புளி கரைத்து அந்த ஜலத்தில் போட்டுப் பிசைந்து கொண்டு அடுப்பில் கடுகு, பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், கருகப்பிலை தாளித்து உப்புச் சேர்த்து அதில் கொட்டி உடனே இறக்கிடுவாங்க! கொதிக்கல்லாம் விட்டதில்லை. இது தெரிஞ்சவங்க ஒருத்தர் மூலம் நானும் தெரிந்து கொண்டு பண்ண ஆரம்பிச்சேன்.

  பதிலளிநீக்கு
 35. உப்புமா குறிப்பு மிக மிக அருமை கீதா சாம்பசிவம்! இது வரை ஈர அரிசியில் செய்ததில்லை. விரைவில் செய்து பார்த்து விடுகிறேன். காமாட்சி அம்மா சொன்ன மாதிரி வரட்டு அரிசி ரவாவில் செய்து தான் பழக்கம். நானும் மிளகு சீரகம் சேர்ப்பதில்லை.

  கொத்சு குறிப்பு தெரிந்த ஒன்று. சின்ன வெங்காயம் சேர்த்து விட்டால் சிதம்பரம் கொத்சு தான்!

  பதிலளிநீக்கு
 36. வாங்க நெ.த. இந்த திடீர்த் தயாரிப்பெல்லாம் நம்ம கிட்டேக் கூட வர விடறதில்லை! உப்புமாவுக்கு அவ்வப்போது உடைத்துக் கொள்வது தான். என் அம்மா கல் இயந்திரத்தில் தான் உடைப்பார்கள். அதெல்லாம் இப்போ எங்கே போச்சோ!

  பதிலளிநீக்கு
 37. அவர்கள் உண்மைகள். உப்புமாவும் தைரியமாய்ச் சாப்பிடலாம். பன்சி ரவை என்றொரு ரவை உண்டு. அதில் நான் செய்த கிச்சடியைச் சாப்பிட்ட வட இந்தியர்கள் இன்னமும் பார்க்கும்போதெல்லாம் அதன் சுவை பற்றிப் பாராட்டிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உருளி இல்லைனா, ரைஸ் குக்கரில் வைக்கலாம்.

  பதிலளிநீக்கு
 38. நெ.த. உப்புமாப் பண்ணிட்டுத் தொட்டுக்க ஒண்ணுமே இல்லாமலா விடறது? :))))

  பதிலளிநீக்கு
 39. மிகிமா, கத்திரிக்காயைச் சுட்டப்போ அழும் சில சமயம்! :)

  பதிலளிநீக்கு
 40. நெ.த. நீங்க சொல்லும் எல்லா அளவிலும் வெண்கல உருளி இருக்கு!ஆனால் எங்க ரெண்டு பேருக்கு இது போதும் என்பதால் இதைத் தான் பயன்படுத்தி வரேன். இதிலே தாராளமாக 3 பேர் வரை அரிசி உப்புமாப் பண்ணிச் சாப்பிடலாம். நான்கு பேருக்குக் குழம்பு வைக்கலாம். பாயசம் வைக்கலாம். ஒரு நாள் எல்லா உருளிகளையும் எடுத்து வைத்துப் படம் பிடித்துப் போடறேன். :)

  பதிலளிநீக்கு
 41. வாங்க பானுமதி அடிப்பிடித்த உப்புமா மொறு மொறுவென இருக்கும் பாகம் சாப்பிட எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் ரொம்பவே போய் ஒட்டிக்காமல் இருப்பதற்காகத் தண்ணீர் வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து விடுவேன். பொங்கல் பண்ணினால் கூட இந்த உருளி தான்! அப்போதும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரோடு வைச்சுடுவேன். இது சிதம்பரம் கொத்சு தான் என மனோ சுவாமிநாதன் அவர்கள் சொல்கிறார்கள். நான் சிதம்பரத்துக்கு நூறு முறை போயும் கொத்சு சாப்பிட்டதில்லை! :)

  பதிலளிநீக்கு
 42. அனுராதா பிரேம் குமார், நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 43. பூவிழி, செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க!

  பதிலளிநீக்கு
 44. பரிவை குமார், உப்புமா சாப்பிட்டுப் பாருங்க, கிட்டத்தில் வந்துடும்! :)

  பதிலளிநீக்கு
 45. அதிரா, அரிசியை அரைச்சு எல்லாம் எடுக்க வேண்டாம். களைந்து நீரை வடிகட்டிட்டு வைங்க! ஒரு இரண்டு மணி நேரத்தில் ஊறிக் கொண்டு நீரே இல்லாமல் பொல பொலனு ஆகிடும். அப்போ அதை மிக்சி ஜாரில் போட்டுப் பொடிங்க! ரவை மாதிரி வரும். களியெல்லாம் ஆகாது!

  பதிலளிநீக்கு
 46. அதிரா, புளி ஜலம் சேர்த்துப் பண்ணுவதால் புளி கொத்சு! :)

  பதிலளிநீக்கு
 47. வாங்க காமாட்சி அம்மா, அரிசி இங்கேயும் பழைய அரிசி தான்! சில சமயம் தண்ணீர் தாங்காமல் உப்புமா குழைந்து விடுவதால் இரண்டு கிண்ணம் விட்டுக் கிளறிக் கொண்டு தேவை எனில் மேலே பாத்திரத்தில் வைக்கும் நீரைச் சேர்ப்பேன். அதுவும் அந்தச் சூட்டில் நன்றாகக் காய்ந்துவிடுமே! புளிப் பொங்கலுக்குத் தான் வெந்தயம் சேர்ப்போம். நல்லெண்ணெய் தாளிதம்! அதுவும் வரும்! ஶ்ரீராமோட பட்டியலில் எத்தனாவது இடத்தில் இருக்கோ தெரியலை! அரிசி உப்புமான்னா தே.எண்ணெய், இறக்கும்போது நெய்!

  பதிலளிநீக்கு
 48. அசோகன் குப்புசாமி! அரிசி உப்புமாவுக்குப் பல ரசிகர்கள் உண்டு!

  பதிலளிநீக்கு
 49. வணக்கம்
  ஐயா
  செய்முறை விளக்கத்துடன் அசத்தல் சிறப்பு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 50. ம்ஹூம், ஏஞ்சலின், குக்கரில் சமைப்பதையே நான் இப்போல்லாம் குறைத்து வருகிறேன். ஆகவே கத்திரிக்காய் அழுதாலும் அதைச் சுட்டே தீரணும்! :) அப்புறமா இட்லி ரவை வெளிநாடுகளில் கிடைப்பதை வைத்து நான் அரிசி உப்புமா செய்திருக்கேன். நன்றாகவே வருகிறது. தாளிதம் எல்லாம் அலுமினியம் சட்டியில் போட்டுத் தாளித்து அரைத்துக் கலந்து ரவையையும் கலந்து உப்புச் சேர்த்துப் பின்னர் ரைஸ் குக்கரில் வைச்சுடுவேன். உப்புமா நன்கு வெந்து பதமாகி விடும். அரிசியை உடைக்க எப்போதுமே காலையில் ஊற வைச்சு மாலையில் உடைக்கலாம். இங்கே இந்தியாவில் இருப்பதால் நான் மதியம் சாப்பிட்டதும் அரிசியைக் களைந்து ஊற வைப்பேன். மாலை உடைக்கச் சரியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 51. ஏஞ்சலின், வெண்கல உருளி வேண்டாம். ரைஸ் குக்கரில் வைங்க!

  பதிலளிநீக்கு
 52. //ஹா ஹா ஹா கீதாக்காவும் வலை உலகமும் படும்பாடு ... என்னை உருண்டு பிரண்டெல்லோ சிரிக்க வைக்குது:)...//

  அதிரா, வைக்கும், வைக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 53. உப்புமா ஓக்கே ஆனால் கத்தரிக்காய் பிடிக்காதே

  பதிலளிநீக்கு
 54. கீதாக்கா இன்று என்ன டிஃபன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வசதியாக மழைக்கு ஏற்றார் போல் அரிசி உப்பும்மா அண்ட் கத்தரி புளி கொத்சு!! ரொம்பப் பிடிக்கும். ஆமாம் நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லிருப்பது போலத்தான் இதுவரை என் பாட்டி மெத்தடில் செய்துவந்தேன். இன்று நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் கொத்ஸு ரெசிப்பி.....செய்தாச்சு. ராத்திரிக்கு....நன்றாக இருக்கிறது...

  அப்புறம் நானும் இந்த உப்புமா தே எண்ணையில்தான் செய்வேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 55. கத்தரிக்காயைச் சுட்ட பின் கொத்சா?:).. நாங்க இப்படிச் சுட்டு சம்பல் போடுவோம் இலங்கையில் அச்சம்பல் பேஏஏஏஏஏஏஏஏஏஏஏமஸ் ஆக்கும்..க்கும்..க்கும்:).. பழப்புளி சேர்க்கும்போது கொத்சு நல்லாத்தான் இருக்கு.. அரிசி ரவா செய்ய மாட்டேன், கொத்சு முயற்சிப்பேன்...

  பதிலளிநீக்கு
 56. அன்பார்ந்த எங்கள்புளொக் ரசிகப் பெருமக்களுக்கோர் நற்செய்தி:).. அது எண்ணெண்டால்ல்ல்ல்ல்ல்ல்:)..

  யூன் மாதம் என நினைக்கிறேன், தமிழ்க்கடையில கத்தரிக்காய் வாங்கி ஒரு கொத்சு செய்தேன்ன்ன்ன்ன்.. அதனை அனுப்பலாம் என நினைச்சு.. அப்படியே விட்டிருந்த வேளை... என் கொம்பியூட்டர் டவுண் ஆனதோடு.. படங்களும் போயிந்தி என அழுதேனே... {இதெல்லாம் உங்களுக்கு எங்கே நினைவிருக்கப்போகுது:)).. எல்லாம் போச்ச்ச்ச்ச்ச்ச் என நினைச்சேன்ன்ன்..

  ஆனாப் பாருங்கோ.. நீங்க எல்லோரும் முற்பிறப்பில் செய்த புண்ணியம்:)[சரி சரி கல்லைக் கீழே போடுங்கோ:)].. அந்தப் படங்களை என் அண்ணிக்கு அனுப்பியிருந்தேன்:).. என் சமையல் புகழ் ஊரெல்லாம் பரவட்டும் என எண்ணி:).. அது அவவின் எக்கவுண்டில் இருக்கே:)...

  ஆவ் விரைவில் எங்கயோ ஒரு இடத்தில வெளியாகும் என்பதனை மிகவும் பெறு:)மையோடு சொல்லிக் கொள்கிறேன்:).

  பதிலளிநீக்கு
 57. //கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:///

  ஹா ஹா ஹா வரவர உலகில் சாப்பாட்டுப் பிரியர்களே அதிகமாகிக் கொண்டு வருகின்றனர் என்பது.. எங்கள்புளொக்கின் இடது பக்கம் பார்ப்பதிலேயே புரியுது... எல்லாம் சமையல் குறிப்புக்கள்.. ஒன்றைத்தவிர...

  ஊசிக்குறிப்பு:
  என் வாழைக்காய்ப் பிரட்டலையும் இன்னும் ஆராச்சி பண்ணி முடியல்லப்போல:) அதிலேயெ நிக்குதே:) ஹா ஹா ஹா நோட் திஸ் கோல்டன் பொயிண்ட்....அஞ்சு, கீதா, துரை அண்ணன்.. நெல்லைத்தமிழன், ட்றுத்:)

  பதிலளிநீக்கு
 58. வாங்க ஆதி, உங்களைப் பார்க்கவே முடியறதில்லை. அரிசி உப்புமாவில் மிளகு, ஜீரகம் சேர்த்தால் எனக்கு என்னமோ பிடிக்கிறதில்லை. :) மற்றபடி பெரிய கத்திரிக்காய் வாங்கி பைங்கன் பர்த்தா நானும் செய்திருக்கேன். இப்போவும் செய்வேன்.

  பதிலளிநீக்கு
 59. வாங்க மனோ சாமிநாதன், இது தான் சிதம்பரம் கொத்சுவா? தெரியலை! இது தெரிஞ்சவங்க ஒருத்தர் இப்படிப் பொடி செய்து போடுனு சொல்லிச் செய்ய ஆரம்பித்தேன்.

  பதிலளிநீக்கு
 60. ஜிஎம்பி சார், சிலருக்குக் கத்திரிக்காய் பிடிக்கிறதில்லை. எங்க வீட்டில் எல்லோரும் கத்திரிக்காய் ரசிகர்கள்.

  பதிலளிநீக்கு
 61. அதிரா, கத்திரிக்காயைச் சுட்டு விட்டு நாங்களும் துவையல் அரைப்போம். அதுவும் குமுட்டி அடுப்பு எனப்படும் கரி அடுப்பில் சுட்டால் அந்தத் துவையலோ கொத்சுவோ ஈடு இணை இல்லை!

  பதிலளிநீக்கு
 62. எஞ்சாய் தில்லையகத்து கீதா! ஹாப்பி உப்புமா அன்ட் கொத்சு!

  பதிலளிநீக்கு
 63. செய்முறை விளக்கம் நன்று!

  பதிலளிநீக்கு
 64. @ athiraav ஊசிக்குறிப்பு:
  என் வாழைக்காய்ப் பிரட்டலையும் இன்னும் ஆராச்சி பண்ணி முடியல்லப்போல:) அதிலேயெ நிக்குதே:) ஹா ஹா ஹா நோட் திஸ் கோல்டன் பொயிண்ட்....அஞ்சு, கீதா, துரை அண்ணன்.. நெல்லைத்தமிழன், ட்றுத்://

  ஸ்ட்ரெயிட்டா புள்ளிக்கு வரேன் ..

  ஒரு விஷயத்தை அடிக்கடி பார்க்கிறார்கள் நிறைய வியூஸ் என்றால் அது ரொம்ப பிடிச்சி ஆசையில் பார்ப்பது ஒரு வகையினர் (கீதாக்கா காமாட்சியம்மா ட்ரூத் கீதா நெல்லைத்தமிழன் பானுக்கா ரெசிபிஸ்லாம் இந்த வகையில் அடங்கும் )
  ********************************************************************************************************************
  #அதை பார்த்தும் புரியாம என்னவா யிருக்கும்னு மயங்கி மயங்கி விழுந்து தெளிஞ்சி பார்க்கிறவங்க ரெண்டாம் வகையினர் ஒரு வரி படிச்சதும் டமால்னு விழறாங்க தண்ணி அடிச்சி எழும்பி மீண்டும் அடுத்த வரிக்கு விழறாங்க இப்படி வியந்து விழுந்து படிக்கிறதால் தான் உங்க பிரட்டல் மேலே வந்திருக்கு .ஆக மொத்தம் மக்கள் வாழ்க்கையை பிரட்டி போட்ட வாழைக்காய் பிரட்டல் டாப்புக்கு வந்துருது அவ்ளோதான் :)

  //

  பதிலளிநீக்கு

 65. #அதை பார்த்தும் புரியாம என்னவா யிருக்கும்னு மயங்கி மயங்கி விழுந்து தெளிஞ்சி பார்க்கிறவங்க ரெண்டாம் வகையினர் ஒரு வரி படிச்சதும் டமால்னு விழறாங்க தண்ணி அடிச்சி எழும்பி மீண்டும் ///அடுத்த வரிக்கு விழறாங்க இப்படி வியந்து விழுந்து படிக்கிறதால் தான் உங்க பிரட்டல் மேலே வந்திருக்கு .ஆக மொத்தம் மக்கள் வாழ்க்கையை பிரட்டி போட்ட வாழைக்காய் பிரட்டல் டாப்புக்கு வந்துருது அவ்ளோதான் :)
  ///ஏஞ்சல் இப்படி எல்லாம் உண்மையை போது இடத்தில் போட்டு உடைக்க கூடாது அப்புறம் ஆத்தா கோவிச்சுட்டு தேம்ஸ் நதியிலே குதிச்சிட்டும்....அப்புறம் நாம் வலையுலக "கோவை சரளாவை" பார்க்க முடியாது ஹீஹீ வலையுலக கோவைசரளா அதுதான் நம்ம அதிராவும் கையில் பூரிக்கட்டையை எடுக்கும் முன் நான் ஆபிஸுக்கு போய்விடுகிறேன்

  பதிலளிநீக்கு
 66. @ட்ரூத் :) ஹாஹா வலையுலக கோவை சரளா நல்லா இருக்கு ..:)

  பதிலளிநீக்கு
 67. எனக்கென்னமோ உப்புமாவை விட கத்தரிக்காய் கொத்ஸு மேல்தான் பிரியம் அதிகம்! சுட்ட கத்தரிக்காய் சுவாரஸ்யங்கள்! அந்நாளில் கரி அடுப்பில் கத்தரிக்காயை வைத்து சுட்டு துவையலும், கொத்ஸுவும் செய்தது நினைவில்.. கொத்ஸு வேண்டுமானால் நான்தான் செய்து கொள்ள வேண்டும். பாஸ் செய்து தர மாட்டார்! ஹூம்!

  பதிலளிநீக்கு
 68. ஹலோ கோவை சரளா ஆன்ரிக்கு:) இப்போ 60+... மீக்கு இப்போதான் சுவீட் 16 வோக்கிங்:) என்பதனை பெருமையோடு சொல்லி அமர்கிறேன்ன்ன்ன்:))

  ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடித்தான் நம்மளை நாமளே புகழ்ந்து தள்ளினாலும்:).... ஏதோ ஆத்தங்கரையில நிண்டு ஓசிச்சு ஓசிச்சுப் புரட்டி எடுக்கிறாங்க:)... அடுத்து கெதியா ஒரு சீனி அரியதரம் ரெசிப்பி அனுப்பி எல்லோரையும் என் பக்கம் இழுத்திடோணும்:)

  பதிலளிநீக்கு
 69. அரிசி உப்புமா, கத்திரிக்காய் கொத்சுவும் அருமையாக இருக்கிறது.
  எல்லோருடைய கருத்தும் படிக்க நன்றாக இருக்கிறது.
  சுவையான பல குறிப்புகள் கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
 70. வாழைப்புமடலில் உப்புமாவும், கொத்ஸும் கொடுப்பார்கள்.ருசியோருச++++++++காமாட்சி மா சொல்லி இருப்பதுதான் எங்கள் வீட்டு முறை. அரிசி உப்புமாவில் தேங்காய் சேர்த்து, பிடி கொழுக்கட்டை பிரமாதமா இருக்கும். தொட்டுக்க தேங்காய்த் தொகையல்.

  கீதா முறைப்படி செய்து பார்க்கணும். மணக்கும் உப்புமா.

  பதிலளிநீக்கு
 71. அரிசி உப்புமா / தக்காளி வெங்காய கொட்சு | Rusikkalam Vanga | 13/11/2017 | Puthuyugamtv/ என்ன ஆச்சரியம் யூ ட்யூபில் மேய்ந்து கொண்டிருதபோது பார்த்தேன்

  பதிலளிநீக்கு
 72. அரிசி உப்புமா மை ஃபேவரிட், கத்திரிக்கா கொத்சு செஞ்சு பார்த்துடவேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 73. கீதா அக்கா, உங்க உபயத்தில் இன்று அரிசி உப்புமா, புளி கொத்ஸு செய்து சாப்பிட்டாச்சு. கொத்ஸு செய்யும் பொழுதுதான் சிதம்பரம் கொத்சுவிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. சிதம்பரம் கொத்சு செய்யும் பொழுது கத்தரிக்காயை சுட மாட்டார்கள், வேக வைப்பார்கள். அரைத்து சேர்க்கும் பொடியில் மிளகு கிடையாது. தவிர அது தளர இல்லாமல் சட்னி போல இருக்கும். சிதம்பரம் கொத்ஸு ஏறத்தாழ பைங்கன் பர்தா போல இருக்கும். பைங்கன் பர்தாவில் தக்காளி, இதில் புளி.

  பதிலளிநீக்கு
 74. அரிசி உப்புமா கேள்விப்பட்டிருக்கின்றேன். இதுவரை சாப்பிட்டதில்லை. நீங்கள் சொல்லி இருக்கும் மெதட்டில் செய்து பார்க்க முயற்சிக்கின்றேன்.

  கத்தரிக்காய் கொத்சு மெதட்டில் என் அம்மா நான் ஊரில் இருக்கும் காலங்களில் விறகடுப்பில் வரும் நெருப்புத்தணலில் கத்தரிக்காயை வைத்து சுட்டு கையால் பிசைந்து பின்னர் தளிகை செய்து புளிஜலம் விட்டு கொதிக்க வைத்தெடுப்பார். எனக்கு நிரம்பவும் பிடித்த உணவு இது. சுடு சாதத்தில் கத்தரிக்காய்சட்னி வைத்து பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையும் மணமுமே பசியை கிளறும்.

  இங்கே வந்தபின் எலெக்டிக் அடுப்பு என்பதனால் ஓவனில் வைத்து சுட்டெடுத்து அதே மெதட்டில் சட்னி செய்திருக்கின்றேன். ஊரில் செய்யும் சுவை வரவில்லை. ஒரு வேளை ஊர்க்கத்தரிக்காய்க்கும் இங்கே வரும் கத்தரிக்காய்க்கும் வித்தியாசம் இருக்கலாம்.

  நீங்கள் கத்தரிக்காயை சுட்டு அதன் தோலை உரித்தபின் மிக்சியில் அடித்து எடுப்பீர்களோ? தோல் கருகி விடுவதனால் தோலுடன் அரைத்தால் கசக்கும் தானே?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!