புதன், 15 நவம்பர், 2017

புதன் தி ர் பு 171115


   
சென்ற வாரக் கேள்விகளுக்கு சிறப்பாக, சரியான பதில்கள் சொல்லிய பால கணேஷுக்கு வாழ்த்துகள் !

இந்த வாரம்: 

சிறு குறிப்பு வரைக! 

50 கருத்துகள்:

 1. 2 மனோகரா
  3 வீரபாண்டிய கட்டபொம்மன்

  பதிலளிநீக்கு
 2. ரங்கோன் ராதா
  மனோகரா
  வீரபாண்டியகட்டபொம்மன்

  எல்லாம் ஜிவாஜி மயம்!..

  பதிலளிநீக்கு
 3. ராவுல நேரத்துக்கு தூங்குனா காலையில ஆறு மணிக்கு பதிவை போடலாம்..

  நடுச்சாமத்துக்கு மேல தூங்குனா இப்படித்தான்..

  அதுசரி.. Auto publish இருக்குதில்லே...

  கம்பியூட்டரே தூங்கிடுச்சு..ப்பா!?...

  பதிலளிநீக்கு
 4. ஓட்டு போட்டாச்சுன்னு வருதே. அப்பாலிக்க்கா வரேன்

  பதிலளிநீக்கு
 5. சிவாஜிக்கு மிக நன்றாக நடித்த படங்கள் எதிலும் விருது கிடைத்ததேயில்லை. விருதுக்கமிட்டி, நடிப்பு என்பதற்கான வரையறையில், சிவாஜியின் நடிப்பு வராததே காரணம். ஆனால், மக்கள் அவருடைய ஓவர் பெர்ஃபார்மென்ஸைத்தான் விரும்பினார்கள். (அவர் பேசுகிற வசனங்களை நாம் நமது வாழ்க்கையில் பேசுவதில்லை. தங்கையைப் பார்த்து, 'அம்மா-கொஞ்சம் நீட்டிச் சொல்லுங்க, எப்படி இருக்கம்மா, எப்போ வந்தம்மா' என்றெல்லாம் வசனம் பேசும்போது நாமே நம்ம தங்கையிடம் அன்பைப் பொழிவதுபோல் பேசுவார். ஆனால் இதெல்லாம் விருதுக்கமிட்டி ஒதுக்கியது.

  வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு ஆஃப்ரோ ஏசியன் பட விழாவில் சிறந்த நடிகராக சிவாஜிக்கு விருது வழங்கப்பட்டது. இதுதான் வெளிநாட்டில் இந்திய நடிகருக்குக் கிடைத்த முதல் விருது.

  யோசித்துப்பாருங்கள்... சொந்த நாட்டில் அவருக்கு எந்த விருதுமே அதுவரை கிடைக்கவில்லை. அவருடைய முதல் விருது, வெளிநாட்டில். (எகிப்தில் இந்த விழா). அதனால் எகிப்து அதிபர் இந்தியா வந்தபோது, சிறப்பு அனுமதி பெற்று, சிவாஜி அவர்கள் எகிப்து அதிபர் கமால் நாசர் அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தார்.

  இப்போதைய நடிகர்களைப்போல, அப்போது கதா'நாயகர் முழுப்படத்தையும் டாமினேட் செய்ததில்லை. நீங்க சிரிப்பு நடிகர்கள் கூட்டத்தையும், கதா'நாயகியின் தோழிகளையும், கதா'நாயகர்களின் தோழர்களையும் பார்த்தால் தெரியும். முதன்மை நடிகரைவிட மற்றவர்கள் அட்டு ஃபிகர், அட்டு பெர்ஃபார்மன்ஸ் (பெரும்பாலும்). ஏன்னா, நல்ல அழகான திறமையானவர்களைப் போட்டால் எங்க, அவங்க முன்னுக்கு வந்துடுவாங்களோ என்ற எண்ணம்தான். ஆனால், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், பத்மினி, ஜெமினி போன்ற பலர் ஸ்டார் பெர்ஃபார்மர்ஸ். இந்தப் படத்திலேயே இருக்கிற நகைச்சுவை நடிகர் கருணானிதி (?) போன்ற பலர், அவங்க பாத்திரத்தை உணர்ச்சிபூர்வமாகச் செய்திருப்பார்கள். அதையும் மீறி சிவாஜி தன் திறமையால் மிளிர்வார்.

  இதைப்பற்றி இன்னும் எழுதலாம்.... மூன்று படங்களும் பல நினைவை வரவழைத்துவிட்டன ( நான் பிறப்பதற்கு முந்தைய காலகட்ட படங்கள் என்றாலும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //:நான் பிறப்பதற்கு முந்தைய காலகட்ட படங்கள் என்றாலும்///

   இது ரொம்பவே இடிக்குதே...

   நீக்கு
 6. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் -
  வெள்ளையனின் சதியினைத் தெரிந்து கொண்ட சுந்தரலிங்கம் - திரு A.கருணாநிதி அவர்கள் -
  குதிரையில் பரபரப்புடன் வந்து பூஜையறையில் இருக்கும் மன்னனிடம்
  தகவல் சொல்லும் இடத்தில் உயர்ந்து நிற்பார்..

  அதைக் கேட்டதும் மென்மையான பூவாகத் தொடங்கி எரிமலையாய்
  வேல்.. வீர வேல்.. வெற்றி வேல்!.. - என வெடித்துச் சிதறும் உணர்ச்சிக் கொந்தளிப்பு..

  இனி எந்தக் காலத்திலும் இப்படியொரு நடிப்பைக் காணமுடியாது..

  இந்தக் காட்சியைக் கண்டு -
  நரம்புகளில் முறுக்கேறா விட்டால் அது உடம்பும் அல்ல.. உள்ளே ஓடுவது குருதியும் அல்ல!..

  வேல்.. வீரவேல்.. வெற்றிவேல்!..

  பதிலளிநீக்கு
 7. துளசி: இரண்டாவது படம் மனோகரா, மூன்றாவது படம் வீரபாண்டியகட்டபொம்மன். முதல் படம் பராசக்தியோ ஆனால் இத்தனை அடர்த்தியான மீசையுடனா? என்றும் தோன்றுகிறது. அவர் இத்தனை அடர்த்தியான மீசையுடன் ம்ம்ம்ம்..கள்வனின் காதலியில் கூட நீள்மாக இருக்கும்...ம்ம்ம் யோசிக்கிறேன்.

  கீதா: எல்லாரும் ஒரு மார்க் ஒன் வேர்ட் ஆன்ஸர் முதல்..... 3 மார்க் சிறு குறிப்புக்குப் பதிலா நெ த 25 மார்க் பதிலை கஷ்டப்பட்டு 15 மார்க்குக்குச் சுருக்கிட, து செரா சகோவும் 10 மார்க் பெரும் குறிப்பாகவே சொல்லிட்டாங்க! இதுக்கு மேல நான் என்ன சொல்லறது!!ஹிஹிஹிஹி...தருமி ஸ்டைல்ல அவங்களுக்குக் கொடுக்கறதுல கொஞ்சம் இங்கிட்டும் கொடுத்தா போதும்!! ஹாஹாஹாஹா..ரெண்டு பேருக்கும் தாராள மனசுன்னும் தெரியும்!!!

  பதிலளிநீக்கு
 8. காலங்கள் ஆனாலும் நகைச்சுவைக்கு தருமி கை கொடுக்கிறார் பாருங்கள்..

  அங்கேயும் பட்டு உடுத்திய புலவராக நடிகர் திலகம்...

  பதிலளிநீக்கு
 9. யாருங்க அவரு? எங்கேயோ எப்போவோ பார்த்த ஞாபகம் இல்லையோ? :))))

  பதிலளிநீக்கு
 10. சிசிவாஜி X 3 = சிவாஜி. என்னத்த குறிப்பு வரையறது - புஸ்தகம் போடறதுக்கே ஆட்கள் கியூவில நிக்கையில !

  ஒரு விஷயம்: எதுக்கெடுத்தாலும் மோதியக் குறை சொல்லிப் பொளப்பு நடத்துற கும்பல் மாதிரி, சிவாஜி ஓவர் நடிப்பு, அந்தாளுக்கு நடிக்கத் தெரியாது, சே, மாத்துய்யா சேனல – இப்படியெல்லாம் விதவிதமா சொல்லி அலையும் கூட்டமும் தமிழ்நாட்டுலதான் இருக்கு..அதுக எத ரசிக்கிறதுங்கன்னு பெரிசா வெளக்கி தாளிச்சுக் கொட்டவேண்டாம்னு விட்டுடறேன்.

  பதிலளிநீக்கு
 11. //சிவாஜி ஓவர் நடிப்பு, அந்தாளுக்கு நடிக்கத் தெரியாது, சே, மாத்துய்யா சேனல – இப்படியெல்லாம் விதவிதமா சொல்லி அலையும் கூட்டமும் தமிழ்நாட்டுலதான் இருக்கு..அதுக எத ரசிக்கிறதுங்கன்னு பெரிசா வெளக்கி தாளிச்சுக் கொட்டவேண்டாம்னு விட்டுடறேன்.//// சேச்சே! ஏகாந்தன் என்னைச் சொல்லலையாக்கும்! நானெல்லாம் சானல் மாத்தாமல் ஜிவாஜி படத்தைப் பார்த்துட்டுத் தான் வித விதமாய்ச் சொல்லுவேன்! அது சரி! அதுக எத ரசிக்கிறதுங்கன்னு பெரிசா வெளக்கித் தாளிக்கலைனாலும் சின்னதாத் தாளிக்கலாம் இல்ல! நானும் அதிலே வரேனானு பார்த்துப்பேன்! :)))))

  பதிலளிநீக்கு
 12. சிறு குறிப்பு புகைப்படங்களில் நம்பர் போடாததால் ஒரே கேள்வி என்று எடுத்துக் கொள்கிறேன்!!
  இந்த புகைப்படங்களில் இருப்பவர் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன். இவரை செல்லமாக ஜிவாஜி என்று கீதா மேடம் சொல்லி எங்கள் ப்ளாகும் அப்படியே அழைக்கலாயிற்று!! இவர் வாங்கிய விருதுகள் பல - விவரமாக அறிய விக்கிபீடியா பார்க்கவும். இவரை நடிப்பின் என்சைக்ளோபீடியா என்று சொல்வார்கள்; பல அரசர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைத்தால் நமக்கு சிவாஜி கணேசனின் உருவிலேயே நினைவுக்கு வருவார்கள்!! இவர் நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று சில இடங்களில் தோன்றினாலும், நாடக மேடையிலிருந்து சினிமா சென்றவர், சினிமா உலகும் அந்தக் காலத்தில் அப்படியே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதல் மரியாதை படத்தில் சும்மா வந்து சென்றதற்கு சிறந்த நடிப்பு என்று சொல்கிறார்கள் என அவரே வியந்தார் எனக் கேள்வி!! நாட்டுப்பற்று உடையவர்; யுத்த காலங்களில் எல்லை சென்று ராணுவ வீரருக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் உற்சாகப்படுத்தியிருக்கிறார், பொருள் - பணம் தானம் செய்திருக்கிறார் எனப் படித்திருக்கிறேன்.
  சிறு குறிப்பு என்பதால் இதோடு முடித்துக் கொள்கிறேன்!! :-))

  பதிலளிநீக்கு

 13. @ கீதா சாம்பசிவம்: கிளறிவிட்டிருக்கிறீர்கள் – கொஞ்சம் சொல்கிறேன்.

  முதலில் சிவாஜி கணேசன். பாவம் அந்த மனிதர். அவரது நடிப்பைக் குறை சொல்லுபவர்கள் (தமிழ் சினிமாவின் தீவிர ரசிகராயிருப்பின்), அவரின் நாடகப்பின்னணி, திரையில் நுழைந்த காலகட்டம், நாட்டின் சமூக, அரசியல் பின்னணிகள் என நிறைய கவனிக்கவேண்டும். முதலில் இவர்கள் பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி, டிஆர்.மகாலிங்கம் போன்ற நடிகர்களின் படங்களை கொஞ்சம் பார்த்துவிட்டு அதன்பின், சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்றோரிடம் வந்தால் நல்லது-ஒவ்வொரு காலகட்டத்தையும் நினைவில் நிறுத்திக்கொண்டே. சரித்திர நாயகர்களாக, தெய்வங்களின் உருவிலென்று அத்தகைய படங்களில் சிவாஜியைத் தவிர வேறெவரையும் கற்பனை செய்ய முடியாது. அப்படிப்போட்டால் படம் ஓடியே போய்விடும்! இருந்தும் சிலபடங்களில் அவரது உடல்மொழி, உச்சரிப்பு என்பதெல்லாம் ரொம்ப ஓவர் என்பதையும் மறுப்பதற்கில்லை. (தன்னைவிட்டால் இங்கு யார் என்கிற அவரின் இறுமாப்பின் வெளிப்பாடோ?). சிவாஜி கணேசன், துரதிர்ஷ்டவசமாக, சிறந்த டைரக்டரின்கீழ் (சத்யஜித் ரே, மிருணால் சென், ஷ்யாம் பெனகல், மகேந்திரன் போன்றவர்களின் தரத்தைச் சொல்கிறேன்) தன் கேரியரில் ஒருபோதும் வந்ததில்லை.(அதற்கு டைரக்டர் சொன்னபடி கேட்கவேண்டும். சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் டைரக்டரை டைரக்ட் செய்யவிடமாட்டார்களே!) முதல் மரியாதை (பாரதிராஜா) ஒரு சிறு விதிவிலக்கு. அதைப் பார்த்திருக்கிறேன். Fag end of his career. Still how refreshing it was..!

  இப்போதிருக்கும் சினிமா ரசிகர்களின்–அதாவது சராசரி ரசிகர்களின் - ரசனை லெவல் ரொம்பக்கீழே. (நான் தமிழை மட்டும் சொல்லவில்லை. பொதுவாக இந்திய ரசிகர்கள்..). அதற்கு அவர்களை மட்டும் குறைசொல்லிப் பிரயோஜனமில்லைதான். நமது இயக்குனர்கள், ப்ரொட்யூசர்கள் எல்லாம் குப்பைப்படங்களாக அவர்கள் முன் வருடக்கணக்காகக் கொட்டிக்கொண்டே இருந்தால் அவர்களுந்தான் என்ன செய்வார்கள்? முதலில் குப்பையின் நாத்தம் குமட்டினாலும் காலப்போக்கில் பழகிபோய்விடுகிறது. மேலும் முன்னேறி, நாத்தம் இப்போது வாசம் ஆகிவிட்டது. பாடல், வசனம் என்கிற பெயரில், டபுள்-மீனிங், ஆபாசம் எல்லாம் அரங்கேறி ஆட்டம்போடுகிறது. பெண்கள், பெரியவர்களுக்கும் கூச்சம் போய்விட்டது. குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து ஆனந்திக்கிறது!. பெரிய திரையின் எதிரொலிப்பே சின்னத்திரை. ‘பொது ரசனை’க்கு கடந்த 20-25 வருடங்களாக இதுதான் நடந்திருக்கிறது. கீழ்நோக்கிய இந்தப் போக்கை கதை, வசனம், பாடல், டைரக்ஷன் என ஒவ்வொரு பிரிவிலும் பார்க்கலாம்.. ’த்ரிஷா இல்லன்னா நயன் தாரா’, ’மோட்டுவானி இல்லன்னா அகர்வால்’ என்றெல்லாம் பேர் வைத்து, சரக்கில்லாமல் ஆபாசக் காமெடி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்தால் அதைப்போன்ற ரசிகர்கள்தானே உருவாகுவார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் சார் சிறந்த டைரக்டர் சிவாஜி காம்பினேஷனில் வந்தது எதிரொலி என்று ஒரு படம். கே பாலச்சந்தர் + சிவாஜி. படம் பயங்கர ஃப்ளாப் ஆயிடுச்சு!

   நீக்கு
 14. சிவாஜி கணேசனின் முதல் படம் 'பராசக்தி'யை மதுரை தங்கம் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தவன் நான். அப்போது எனக்கு வயது 9.
  தங்கம் தியேட்டர் கட்டி முடித்து திரையிடப்பட்ட முதல் படமும் 'பராசக்தி'தான்.
  இப்போது கூட 'ஏ! பூசாரி! முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக் கொள்' என்று ஆரம்பித்தால் அந்தக் காட்சியின் முழு வசனத்தையும் மனப்பாடமாகச் சொல்வேன். கலைஞரின் வசனம் நாடி நரம்புகளில் முறுக்கேற்றிய காலம் அது.
  பிற்காலத்தில் 'மனோகரா' படத்துக்கு எழுதிய விமர்சனத்தில், "கலைஞரின் வசனத்தால் சிவாஜி நடிப்பு சிறப்புப் பெறுகிறதா, இல்லை, சிவாஜியின் உச்சரிப்பால் கலைஞரின் வசனங்கள் பெறுமை பெறுகிறதா-- என்பது பிரித்துப் பார்க்க இயலாத ஒன்று" என்று குமுதம் பத்திரிகை எழுதியது.

  பதிலளிநீக்கு
 15. பீம்சிங்கின் 'ப' வரிசை படங்கள் அத்தனையிலும் நடிப்பின் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் சிவாஜி அவர்கள். அப்படி எத்தனை படங்கள்?.. எதைச் சொல்ல, எதை விட?.. பாசமலரில், அந்த 'சாய்ந்தாடம்மா..சாய்ந்தாடு...' காட்சியில் தியேட்டரில் விக்கி விக்கி அழுதிருக்கிறேன். அவர் போல ஒரு நடிகர் அவருக்கு முன் யாரும் இல்லை, பின்னும் யாரும் இல்லை' என்பது எனது தீர்க்கமான முடிவு.

  பதிலளிநீக்கு
 16. இப்பொழுது புதிருக்கு வருவோம்:

  1. முதல் படம் 'முதல் தேதி' திரைப்படத்திலா?

  2. இரண்டாவது படம் 'மனோகரா' என்று குழந்தைகளுக்கும் தெரியும்.

  3. வீரபாண்டிய கட்ட பொம்மன். ஜெய்ப்பூர் கோட்டையில் எடுக்கப்பட்ட காட்சி.
  சிவாஜியின் எதிரில் படத்தின் தயாரிப்பாளர் பந்துலு. ஊமைத்துரையாக ஜெமினி, அவருக்கு இடது பக்கத்தில் நகைச்சுவை நடிகர் கருணாநிதி.

  பதிலளிநீக்கு
 17. @ kg gouthaman :

  வாங்க கேஜிஜி சார்..

  கே.பாலசந்தர் சிவாஜியை டைரக்ட் பண்ணியிருக்காரா? இதத் தவறவிட்டிருக்கேனே.. வழக்கமான சிவாஜி படமாக இல்லாதுபோனதால், அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் போயிருக்கும். படம் பல்டி அடித்துவிட்டது. நல்ல இயக்குனர் எடுத்தாலும், படம் கமர்ஷியல் சக்ஸஸ் ஆக வாய்ப்புகள் குறைவுதான். But unlike other Art directors I have mentioned, KB was a commercially successful director. நான் குறிப்பிட்ட டைரக்டர்கள் யாரும் (மகேந்திரனைத்தவிர) கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர்கள் அல்ல! ஆனால் உன்னதக் கலைப்படைப்பை ரசிகனுக்கு வழங்கியவர்கள். சத்யஜித் ரே – சாருலதா, மிருணால் சென் – ஏக் தின் ப்ரதி தின், ஷ்யாம் பெனகல் – ஜுனூன் –ஆகியவை சில உதாரணங்கள். அந்த ஏக்கத்தில்தான் சிவாஜி அத்தகைய படங்களில் நடிக்காதுபோனாரே எனச் சொன்னேன். சிவாஜியின் படமொன்றை (சப்-டைட்டில் இல்லாமல்) ஒரு முறை பார்த்த ஹாலிவுட் லெஜெண்ட் மார்லன் ப்ராண்டோ ‘He is a fantastic actor!’ என்றிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 18. // சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் டைரக்டரை டைரக்ட் செய்யவிடமாட்டார்களே!) //

  சிவாஜி டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் இயக்குனர்களை அதிகாரம் செய்ததில்லை என்று வொய் ஜி மகேந்திரன் உட்பட சிலர் எழுதிய அனுபவங்களில் படித்த நினைவு. தெய்வமகன், கெளரவம், நீதி போன்ற படங்களில் அவரை மிகவும் ரசிப்பேன்! தெய்வமகன் கூட ஏதோ ரஷ்யத் திரைப்பட விழாவில் விருது வாங்கியது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. @ ஸ்ரீராம்:

  எம்ஜிஆர்-ஐப்பற்றி இப்படிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிவாஜி ஒருவேளை இயக்குனரோடு இணக்கம் கொண்டிருக்கலாம். ஆனாலும் அவருடைய ஹிமாலயத் திறமையை முழுமையாக வெளிக்கொணரும் சிறந்த டைரக்டரால் அவர் இயக்கப்படும் பாக்கியம் இல்லை. ரே, சென், ஆடூர் கோபாலகிருஷ்ணன், பெனகல் ஆகிய டைரக்டர்களோடு இங்கே பாரதிராஜாவையும், பாலசந்தரையும் ஒப்பிடமுடியாது. They are of a different class.

  பதிலளிநீக்கு
 20. முதல் படம் சிவாஜி காண்ட்ராக்டராக நடித்த தெய்வப்பிறவி திரைப்படமோ?

  பதிலளிநீக்கு
 21. சிவன் என்றதும் கூடவே நியாபகத்தில் வருவாரே சின்னவயதில் அவர்தானே(திருவிளையாடல் ) இவர் கட்டபொம்மன் என்ற வரலாறையே தூக்கி நிறுத்தியவர் தன் நடிப்பால் பல வரலாறு படங்களில் நடித்து ஆழமாய் அந்த விஷயங்களை உள்ளே புகுத்திவிட்டவர்

  பதிலளிநீக்கு
 22. முதல் படம் முதல் தேதி
  இரண்டாவது படம் மருதநாட்டு இளவரசி,
  மூன்றாவது படம் வீரபாண்டிய கட்டபொம்மன்

  ரங்கோன் ராதாவில் சிறு வயது சிவாஜிக்கு மீசை கிடையாது, வயதான பின் மீசை உண்டு. அந்த படமாகவும் இருக்கலாம். ஜீவி சார் சொல்கிற மாதிரி தெய்வபிறவியாகவும் இருக்கலாம்.

  இரண்டாவது படம் மனோகராவில் தூணில் கட்டி வைத்து இருக்கும் போது கோபமாய் அல்லவா இருக்கும் இந்த முகம் வருத்தமாய் இருக்கே!

  அதுதான் மருதநாட்டு இளவரசி படமோ என்று நினைக்க வைக்கிறது. பழைய படங்களை விரும்பி பார்ப்பேன் தொலைக்காட்சியில்.

  மூன்றாவது படம் போர்களத்திற்கு போவதுபற்றி உரையாடுகிறார்கள் பந்துலு அவர்கள் காட்சியை விவரிக்கிறார் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. சிவாஜிகணேசன் நடிப்பை திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கலாம்னா அது 'அபூர்வ ராகங்கள்' படத்துல தான். இதை ஏற்கனவே சொல்லியிருக்கேனோ?

  பதிலளிநீக்கு
 24. சிவாஜி ஒரே நேரத்தில் சிரித்து அழுவது தமாஷாக இருக்கும்.. சிவாஜி அழுது நடிக்கும் போதெல்லாம் எனக்கும் என் நண்பன் பாபுவுக்கும் சிரிப்பு வந்து விடும்.. அதுவும் பாபு சிவாஜி அழ அழ ஓவராக சிரிக்கத் தொடங்கி விடுவான்.. ஜீவி சார்.. நீங்க குறிப்பிட்டிருக்கும் பாசமலர் காட்சியில் நானும் பாபுவும் ரசிகர்களிடம் அடிபடாமல் வந்தது இன்னொரு நண்பன் முரளியின் புண்ணியம்.... அப்படிச் சிரித்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 25. நெல்லை சொல்லியிருப்பது போல் சிவாஜி நடிக்க வந்த காலக்கட்டம்.. (தெரு)நாடகத்திலிருந்து வந்தது .. இவையெல்லாம் அவர் மிகையாக நடிப்பதன் பின்னணியாக இருக்கலாம். அதற்காக அதையே பிடித்துக் கொண்டிருந்தது தான் அலுத்துவிட்டது.. ஆனால் ரசிகர்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதைத்தானே அவர் செய்தார் என்றால் சரிதான்...

  ரஜினி சிகரெட் தூக்கிப் போட்டு பிடிப்பது நடிப்பென்று ஏற்றுக் கொண்டு விட்டபின்.. விஜய் அஜித்களின் 'என்னங்கணா பின்னங்க்னா' போன்ற மரமுக முனகல்களை எல்லாம் நடிப்பென்று ஏற்றுக் கொண்ட பின்.. சிவாஜியை விமரிசனம் செய்வது மனசாட்சிக்கு விரோதமானது தான். தீவிர சிவாஜி ரசிகன் இல்லையென்றாலும் ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும் சிவாஜியின் மிகை நல்ல தமாஷ்.. விட்டுற முடியுமா? :-)

  பதிலளிநீக்கு
 26. ஜீவி சார் குறிப்பிட்டிருக்கும் 'முன்னும் இல்லை பின்னும் இல்லை' பாணி நடிகர் ஒருவர் உண்டென்றால் எனக்கு அது 'நாகேஷ்'.

  பதிலளிநீக்கு
 27. பாலசந்தரை விட பாரதி ராஜா ஒரு படி உயர்ந்த இயக்குனர் என்பேன்.. சிவாஜிகணேசனை வைத்து முயற்சி செய்திருக்கிறார். பாதி நேரம் படத்தில் தூணுக்குப் பின்னாலோ கூரைக்குப் பின்னாலோ மறைந்து கொண்டிருப்பார் சிவாஜி.. அல்லது வசனம் பேசும் போது அவர் முகத்தை அதிகம் நேராகக் காட்டாமல் இருப்பார்.. சிவாஜியின் இமயத் திறமையை வெளிக்கொண்டு வர இதைச் செய்தாரோ?

  பதிலளிநீக்கு
 28. பாலசந்தரின் எதிரொலி படத்தில் ஒரு காட்சியில் சிவாஜியின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்..

  பதிலளிநீக்கு
 29. புதிரை விட பின்னூட்டங்கள் சுவாரஸ்யம். எத்தனை விஷயங்கள்!

  பதிலளிநீக்கு
 30. @ Durai. A.

  //சிவாஜி ஒரே நடிக்கும் நேரத்தில் சிரித்து அழுவது தமாஷாக இருக்கும்.. சிவாஜி அழுது போதெல்லாம் எனக்கும் என் நண்பன் பாபுவுக்கும் சிரிப்பு வந்து விடும்.. அதுவும் பாபு சிவாஜி அழ அழ ஓவராக சிரிக்கத் தொடங்கி விடுவான்..//

  பாம்பின கால் பாம்பறியும். பாபு உங்களின் கற்பனைப் பாத்திரம் என்பதை நானறிவேன்.

  பதிலளிநீக்கு
 31. @ Durai.A.
  //'முன்னும் இல்லை பின்னும் இல்லை' பாணி நடிகர் ஒருவர் உண்டென்றால் எனக்கு அது 'நாகேஷ்'//

  உங்கள் ஆதர்ச நடிகர் கமல் பாஷையில் சொல்வதென்றால் 'நாகேஷ் என்ற கலைஞன்'..

  பதிலளிநீக்கு
 32. இங்க நிறையபேர் சிவாஜியின் நடிப்பை ரொம்பவும் குறை சொல்லியிருப்பதாக மனதுக்குப் படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. தேவர் மகன், முதல் மரியாதை போன்றவை ஓரளவு எங்க ஜெனெரேஷன்ல உள்ளவங்க நடிப்புன்னு ரசிப்பதுபோல் இருக்கும். சிவாஜி நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டியவர், ஆனால் எந்தக் கலையும் மிளிர்வது பார்வையாளர்களைப் பொறுத்துத்தான்.

  நாம எல்லாரும் இளையராஜா இசைல ஞானி என்று பெரும்பாலும் ஒத்துக்கொள்வோம். ஆனால் நம்ம பசங்க/பெண்கள் அப்படி ஒத்துக்கொள்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள். என் இளைய வயதில் எம்.எஸ்.வி இசையின் பாடல்களை ரசித்திருக்கிறேன். என் பெற்றோர், அந்த காலகட்டத்து இசை மிகவும் நன்றாயிருக்கும், இளைய ராஜாவின் இசையும் பாடல்களும் சகிக்கலை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

  கால கட்டத்தை வைத்துத்தான் ஒரு கலைஞனை மதிப்பீடு செய்யமுடியும். கமலஹாசனின் ஆரம்ப கால நடிப்பை, நிச்சயம் அவரே இப்போது விரும்பமாட்டார். எனக்கெல்லாம் கமல் ஆரம்பப் படங்கள், அதில் உள்ள காமெடி போன்றவை ரொம்பக் குழந்தைத்தனமாய்த் தெரியும். அதனால், கால கட்டத்தை வைத்துத்தான் படங்களை, இசையை, நடிப்பை, எந்தக் கலையையும் மதிப்பீடு செய்யமுடியும்.

  காலத்தை மிஞ்சிப் படம் எடுக்கும்போது, அதனை அடுத்த ஜெனெரேஷன் ரசிப்பார்கள், நிச்சயமாக அடுத்த ஜெனெரேஷனுக்கு அடுத்த ஜெனெரேஷன் ரசிக்காது.

  பதிலளிநீக்கு
 33. நெ.த சகோ மிக சரியா சொல்லியிருக்கீங்க உண்மை கால கட்டம்தான் நிர்ணையக்கிறது ஆம் விரும்பிக்கேட்ட பழைய பாடல்களை நம் பிள்ளைகள் கிண்டல் அடிக்கிறார்கள் இல்லை விவாதிக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 34. ஜிவாஜியோட முதல் மரியாதை எதிரொலி படங்கள் தவிர்த்து மற்றப் படங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாதுங்க! ஆனால் அப்பாதுரை சொல்றாப்போல் சில சீரியஸான உருக்கமான காட்சிகளில் சிரிப்பு வந்துடும்! :) இதிலே நம்ம ரங்க்ஸ் எப்போவுமே எனக்குத் துணை இருப்பார்! ரெண்டு பேரும் சிரிப்போம். உலக்(கை) நாயகர் படம்னாலும் காமெடி சீன் மட்டும் பார்ப்பேன். கிரேஸி காமெடியாச்சே! மத்தபடி படங்கள் பார்ப்பதே இல்லை!

  பதிலளிநீக்கு
 35. //சிவாஜிகணேசன் நடிப்பை திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கலாம்னா அது 'அபூர்வ ராகங்கள்' படத்துல தான். இதை ஏற்கனவே சொல்லியிருக்கேனோ?//

  அப்பாதுரை, விவிசி, விவிசி! விவிசி!

  பதிலளிநீக்கு
 36. //உங்கள் ஆதர்ச நடிகர் கமல் பாஷையில் சொல்வதென்றால்

  ஆ! சிவாஜியை விமரிசனம் பண்ணினதுக்காக இந்த தண்டனையா? நியாயமா ஜீவி சார்? என் பேரே இப்போ ரிப்பேராயிடுச்சே.. நாளைக்கு நான் வெளில தலை காட்டினா என்னை கமல் ரசிகன்னு நினைச்சுடுவாங்களே.. சிவாஜி தான் பெஸ்ட்.. சிவாஜி தான் பெஸ்ட்..

  பதிலளிநீக்கு
 37. முதல் படம் எதுவென்று தெரியவில்லை.

  இரண்டாவது படம் மனோகரா என்றுதான் தோன்றுகிறது. கோமதி அரசு கொஞ்சம் குழப்புகிறார். மனோகரா என்றே எடுத்துக் கொண்டு அதைப் பற்றி சொல்கிறேன்.

  இந்தப் படத்தில் வேறு ஒரு நடிகர்தான் (பி.ஆர். ராமசாமியா, எம்.ஆர்.ராமசாமியா?) கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானராம். கருணாநிதி வசனம் என்றதும் கொள்கை ரீதியாக வேறுபட்டவர் என்பதால் அவர் நடிக்க மறுத்து விட, அவரை எப்படியாவது சம்மதிக்க வைக்கச் சொல்ல வேண்டும் என்பதற்காக அறிஞர் அண்ணாவிடம் சிபாரிசுக்கு சென்றாராம் பட இயக்குனர். அண்ணவோ இந்த படத்தில் கணேசன் கதாநாயகனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறி சிவாஜிக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தந்தாராம்.

  இந்தப் படத்தில்தான் கருணாநிதியின் பெயருக்கு முன்னால் கலைஞர் என்னும் அடைமொழியோடு வெளியானதாம்.

  இந்தப் படத்தின் பன்ச் டயலாக்கான,"பொறுத்தது போதும் மகனே மனோகரா பொங்கி எழு " என்னும் வசனத்தை பேசியது கதாநாயகன் கிடையாது என்பது ஒரு விந்தை. படம் முழுவதும் நான் கதாநாயகனாக நடித்தேன், இந்த வசனத்திற்குப் பிறகு கலைஞர் கதாநாயகனாகி விட்டார் என்று சிவாஜி கூறியிருக்கிறாராம்.

  வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு அந்தஸ்து பெற்றுத் தந்தவர் சிவாஜி.

  பதிலளிநீக்கு
 38. // பி.ஆர். ராமசாமியா, எம்.ஆர்.ராமசாமியா? //

  நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி.

  பதிலளிநீக்கு
 39. எனக்கு சிவாஜி நடிப்பு பிடிக்கும் என்றாலும் சிவாஜி ரசிகை என்னும் tag ஐ இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் எனக்கு நன்றாக நடிக்கும் எல்லோரையும் பிடிக்கும். அரியகுடியோடு சங்கீதம் செத்து விட்டது, கல்கியோடு எழுத்து செத்து விட்டது. சிவாஜியோடு நடிப்பு செத்து விட்டது என்று புலம்பும் கூட்டத்தில் நான் சேர விரும்பவில்லை. எனக்கு மனசுக்குள் மத்தாப்பு பார்த்தபொழுது விஜய்யை கூட பிடித்தது. மங்காத்தா பார்த்தபொழுது அஜித் கூட பிடித்தது. இப்பொழுதும் நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நன்றாக நடிக்கும் நிறைய பேர் இருக்கின்றனர். இருந்தாலும் மற்றவர்களுக்கும் சிவாஜிக்கும் உள்ள வித்தியாசம் சிவாஜியின் நடிப்பில் ஒரு அழகு இருக்கும்.

  தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர கலைஞனின் மேனரிஸங்களை (மற்றவர்களோடு பேசும் பொழுது மேல் துண்டை கைகளில் வைத்துக் கொள்ளுதல் உட்பட) அப்படியே செய்திருப்பார்.

  அவருடைய நடை, அடடா!!! ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அது மாறுபடும் அழகு! மன்னவன் வந்தானடி பாடலில் முதல் வரியைத் தொடர்ந்து ஒரு பி.ஜி.எம். வரும், அதற்கு அவர் நடந்து வருவாரே..!

  மிருதங்க சக்கரவர்த்தி படத்தில், வறுமையில் இருக்கும் மிருதங்க வித்துவானை நீண்ட வருடங்களுக்குப் பிறகு கச்சேரிக்கு புக் பண்ணவந்தவர்கள் வண்டிச் சத்தம் கொடுக்க மறந்து விட்டார்களே, பஸ் ஸ்டாண்டில்தன இருப்பார்கள், நான் போய் வாங்கி வந்து விடுகிறேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கும் வேகு வேகு நடையும், அங்கு அவர்கள்,'என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான், நாம் அவருக்கு ட்ரெயின் சார்ஜ் கொடுக்க மறந்து விட்டோம், அனால் அவர் அதை கேட்கவே இல்லை , இப்போது நாமாக கொண்டு பொய் கொடுத்தால் அவருடைய வறுமையை சுட்டி காட்டியது போல இருக்கும், அதனால் கொடுக்க வேண்டாம்" என்று பேசிக் கேட்டு வண்டி சத்தம் கேட்காமல் திரும்பி வரும் தளர்ந்த நடையாகட்டும்,

  திருவிளையாடல் படத்தில் தருமியை இழுத்துக் கொண்டு பாண்டியன் சபைக்குள் நுழையும் அந்த அதிகார நடை..

  தங்கப் பதக்கம் படத்தில் மனைவி இறந்தவுடன், தன் சோகத்தை வெளிக்காட்ட விரும்பாமல் மாடிப் படியில் ஏறும் சிம்மகதியாகட்டும் எதை மறக்க முடியும்? பிறகு மனைவியின் உடலைப் பார்த்து, லக்ஷ்மி நான் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டேன் என்று ஆரம்பித்து பின்னர் வெடித்து அழுவாரே அப்போது கூடவா கீ.சா. மேடம் சிரித்தார்கள்..!?

  திருவிளையாடல் படத்தில் 'பாட்டும் நானே...' பாடல் காட்சியில் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.." என்னும் வரிகளுக்கு அவர் காட்டும் எக்ஸ்பிரஷனை வேறு எந்த நடிகனாலும் காட்ட முடியாது என்று என்னால் பெட் கட்டி சொல்ல முடியும்.ஏனென்றால் மிகவும் கடினமான பாவம் அது. கர்வமாக தோன்றி விடக் கூடாது, அதே சமயத்தில் தன்னுடைய சர்வக்ஞயத்தை காட்ட வேண்டும். டி.எம்.எஸ்.சும் மிக நன்றாக பாடியிருப்பார்.

  சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.

  கப்பலோட்டிய தமிழன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன் இவை சிவாஜி நடிப்பில் என்னைக் கவர்ந்த படங்கள். ஸ்ரீராம், உடனே என்னை சீனியர் சிட்டிசன் ஸ்டில் சேர்த்து விடாதீர்கள். நான் இந்தப் படங்களை எல்லாம் தொலை காட்சியில்தான் பார்த்தேன்.

  சிவாஜி ஓவர் ஆக்டிங்கை தொடங்கியது அறுபதுகளின் இறுதியில் என்று பழைய படங்களை பார்க்கும் பொழுது தோன்றுகிறது. அது கூட எப்பொழுது மிகையாக நடிக்க வேண்டும் எவ்வளவு மிகையாக நடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

  பதிலளிநீக்கு
 40. நாகேஷ் நல்ல நடிகர்தான், ஆனால் சிவாஜியோடு ஒப்பிட முடியாது. அப்படி பார்த்தால் எம்.ஆர்.ராதா? நாகேஷும் ஓவர் ஆக்ட் பண்ணுவார்.

  கே.பாலசந்தர், சிவாஜி காம்பினேஷனில் மற்றொரு படம் நீல வானம். அது வெற்றியா தோல்வியா தெரியாது.

  பதிலளிநீக்கு
 41. நீலவானம் படத்தின் டைரக்டர் பி மாதவன். கதை வசனம் மட்டுமே கே. பாலச்சந்தர்.

  பதிலளிநீக்கு
 42. //நியாயமா ஜீவி சார்? என் பேரே இப்போ ரிப்பேராயிடுச்சே.. நாளைக்கு நான் வெளில தலை காட்டினா என்னை கமல் ரசிகன்னு நினைச்சுடுவாங்களே.. சிவாஜி தான் பெஸ்ட்.. சிவாஜி தான் பெஸ்ட்..// ஹாஹா அப்பாதுரை, கமல் உங்க ஆதர்ச நடிகர்னு படிக்கும்போதே எனக்கு விவிசி, விவிசி. உங்களோட எதிர்வினையை எதிர்பார்த்திருந்தேன் ஆவலோடு! இப்படி டகால்னு பல்டி அடிச்சுட்டீங்களே! :)))))

  பதிலளிநீக்கு
 43. //பிறகு மனைவியின் உடலைப் பார்த்து, லக்ஷ்மி நான் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டேன் என்று ஆரம்பித்து பின்னர் வெடித்து அழுவாரே அப்போது கூடவா கீ.சா. மேடம் சிரித்தார்கள்..!?// இதுக்கு நான் பதில் சொல்லணும்னா பெரிய பதிவாயிடும். நான் திரை அரங்கங்களில் ஜிவாஜியோ, ஜெமினியோ அல்லது மற்ற நடிகர்களோ நடிச்ச படங்களைப் பார்த்தது என்பது மிகக் குறைவு! எண்ணிக்கை இரண்டு இலக்கத்தைத் தாண்டினால் அதிகம். சின்ன வயதில் அப்பாவின் கண்டிப்பு! அப்பா அனுமதிக்கும் படத்துக்கு அதுவும் அவருக்குப் பாஸ் கிடைக்கும் இரண்டு தியேட்டர்கள் தங்கம் தியேட்டர், சென்ட்ரல் தியேட்டர்! இந்த இரண்டு தியேட்டர்களில் வரும் படங்களுக்குத் தான் போக முடியும்! அதுவும் படத்தைத் தியேட்டரிலிருந்து தூக்கப் போகும் முன்னர் தான் பாஸே வாங்குவார். கூட்டம் இருக்காது என்பதால்! பார்த்த மற்ற ஜிவாஜி படங்கள் என்னோட இன்னொரு சித்தப்பா மருத்துவர் பிச்சுமணி என்னும் சுப்பிரமணியன் அவர்கள் தயவால் சின்னமனூரில் பார்த்தவை. அங்கே போனால் வாராவாரம் திரைப்படம் தான்! அதுவும் அப்பா அனுமதிக்கவே அனுமதிக்காத இரவுக் காட்சி! சித்தப்பாவுக்கு அப்போத் தான் நேரம் கிடைக்கும். பல சமயங்களிலும் எங்களைத் தியேட்டரில் உட்கார வைச்சுட்டு அவர் அவசர கேஸ் என்று போயிருப்பார். ஆகவே தங்கப் பதக்கம், வைரப்பதக்கம்னு சினிமா வந்ததெல்லாம் தெரியவே தெரியாது என்பதே உண்மை!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 44. வியட்நாம் வீடுன்னோ என்னமோ ஒரு படம்! ஜிவாஜி பிராமணராக வருவார் பத்மினி அவர் மனைவி! அந்தப் படத்தை நாங்க பார்க்கலைனு தெரிஞ்சதும் எல்லோரும் ஏதோ அதிசயப் பிராணிகளைப் போல் எங்களைப் பார்த்திருக்காங்க. கல்யாணம் ஆகியும் நாங்க பார்த்த ஜிவாஜி படம் இரண்டே இரண்டு. கௌரவம், ராஜராஜ சோழன்! இரண்டுமே அம்பத்தூரில் நாங்கள் இருந்த கலைமன்றத்தில் சார்பில் அழைத்துப் போன படங்கள். மற்றபடி பாலசந்தர் படங்கள் ஆரம்ப கட்டங்களில் எடுத்தவை எல்லாம் பார்த்திருக்கேன். கிட்டத்தட்டப் புன்னகை வரை! சத்யகாம் பார்த்ததும் புன்னகையில் ஈர்ப்பு இல்லை! அதற்குப் பின்னர் எடுத்த படங்கள் எல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினரின் வக்கிரத்தைக் காட்டுவதாக அமைந்த படங்கள் என்று என் சொந்தக் கருத்து! அவற்றை எல்லாம் விமரிசனங்கள் படிப்பதோடு சரி. இப்போவும் படங்கள் பார்ப்பதில்லையே தவிர்த்து விமரிசனங்களை விடாமல் படிப்பேன். :) அவ்வளவு தான் என் சினிமா அறிவு. ஶ்ரீராமும் சரி மற்றவர்களும் சரி படங்களையும் திரைப்படப் பாடல்களையும் அலசும்போது கொஞ்சம் வெட்கத்தோடு ஒதுங்கி இருந்து படித்துக் கொள்வேன். எம்ஜிஆர் படங்கள் அதிகம் பார்த்ததே இல்லை. தொலைக்காட்சியில் போடறாங்களேனு சொல்லலாம். அப்படி எல்லாம் உட்கார்ந்து பார்க்கும்படியான சூழ்நிலை அமைந்ததில்லை. அதுக்காக வருத்தமும் இல்லை. மத்தியானங்களில் படங்கள் எப்போதாவது பார்ப்பேன். நல்ல படங்கள் எனில்! சமீபத்தில் நான் அம்பேரிக்காவில் இருந்தப்போ பார்த்த நல்ல படங்கள் குறித்து விமரிசனங்கள் எழுதினேன். அதே போல் இதற்கு முன்னர் யு.எஸ் போனப்போவும் படங்கள் பார்த்திருக்கோம். அவற்றைக் குறித்தும் எழுதி இருக்கேன். சமீபத்தில் பார்த்த படங்களில் திரு விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜயகுமார் நடித்த ஓர் அருமையான படம் பார்த்தேன். அருண் இத்தனை நன்றாக நடிப்பார் என எதிர்பார்க்கவே இல்லை. மற்றபடி நான் பார்த்தவரைக்கும் ஜிவாஜி படங்களில் என்னைக் கவரும்படி எதுவும் இருந்ததில்லை. மிருதங்கச் சக்கரவர்த்தியின் பாடல் காட்சிகள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கேன். ரசிக்கும்படி இல்லை! அதோடு இல்லாமல் நகைச்சுவைக் காட்சிகளில் கூட அனைவரையும் கவர்ந்த செந்தில், கவுண்டமணி நகைச்சுவை என்னைக் கவர்ந்ததில்லை. எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்கள், தங்கவேலு, சந்திரபாபு(சபாஷ் மீனா ஒண்ணு போதுமே)நாகேஷ், சோ, எஸ்.வி.ரங்காராவ். தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு, பார்த்திபன் கூட்டணியில் வந்தால் பிடிக்கும். ஆகவே இந்தச் சிரிப்பொலியோ, ஆதித்யா சானலின் நகைச்சுவைக் காட்சிகளோ பார்ப்பதே இல்லை.

  நீல வானம் படம் பார்த்தேன். ஜிவாஜி தேவிகாவுக்கு விட்டுக் கொடுத்து அடக்கி வாசித்திருப்பார். அது சித்ராலயா பானரில் வந்ததோ! ஏனெனில் எங்களுக்கு சித்ராலயா பாஸ் கிடைச்சுத் தான் படம் பார்த்தோம். வடக்கே அதிகம் இருந்ததால் தமிழ்ப்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் குறைவு. எப்போதாவது ராணுவ முகாம் திறந்தவெளித் திரையரங்கில் மாதம் ஓர் தமிழ்ப்படம், தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி வரும். பார்ப்போம். பல சமயங்களிலும் ரீல் சரியில்லாமல் இடைவேளையிலிருந்து அல்லது முடிவிலிருந்து வரும்! அதையும் பார்த்து ரசித்திருக்கோம். அப்படி ரசித்த படம் எதிரொலி. முடிவு முன்னாடியே தெரிஞ்சப்பறமாப் பார்த்த படம் அது! :))))))

  பதிலளிநீக்கு
 45. மறந்துட்டேனே! இப்போ ரஜினியோட "படையப்பா" ம்ஹூம், பார்த்ததே இல்லை! அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காட்சிகளைப் பார்த்ததோடு சரி. இப்போவும் எல்லோருக்கும் எங்களிடம் வியப்புத் தான்! படையப்பா கூடப் பார்க்கலையானு! பார்க்காததால் படம் ஓடாமல் இருந்துடுமா என்ன? பார்க்கிறவங்க இருக்காங்களே! அவங்க தானே பெரும்பான்மை! தியேட்டருக்குப் போகும் செலவு, டிக்கெட் செலவு, செலவு செய்யும் நேரம் எல்லாத்தையும் கணக்குப் பார்த்தால் அரை நாள் வீணாகி விடுகிறது! ஆகவே அதை எல்லாம் கணக்குப் பார்த்துட்டு வீட்டிலேயே எப்போதாவது தொலைக்காட்சியில் படம் வரும்போது பார்த்துக்கலாமே! அப்படித் தான் நான் ஈ, அரண்மனை1 அரண்மனை2, காஞ்சனா சீரீஸ் எல்லாம் பார்த்தோம். அது மாதிரிப் பார்த்ஹ்டுக்கலாம். ஒண்ணும் அவசரமே இல்லை!

  பதிலளிநீக்கு
 46. வியட்நாம் வீடு... நினைத்தாலே நடுங்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!