எப்போதோ எழுதியது. ஒரு பழைய ஹிந்திப் பாடலைக் கேட்டுவிட்டு அதன் பாதிப்பில் எழுதியது. அந்தப் பாடலின் வரிக்கு வரி தமிழ் என்று அர்த்தம் அல்ல. பாடலின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நடுநடுவே புரியும் ஓரிரு வார்த்தைகளைக் கொண்டு என் மனதில் தோன்றிய எண்ணங்களின் தமிழ்! பாடலுக்கும் இதற்கும் 30 சதவிகிதம் தொடர்பிருக்கலாம்! இப்போது படிக்கும்போது, எந்தப் பாடலைக் கேட்டு இதை எழுதினோம் என்று கொஞ்சம் யோசித்தே நினைவுக்கு வந்தது!
அந்த மாலையில் சந்தித்தவள்....
இந்த இரவுக்கு
அலுப்பதேயில்லை
உன் பற்றிய
கனவுகளை
ஒரு தபால்காரனைப்போல
எனக்கு
அனுப்பிக்கொண்டேயிருக்கிறது
சந்தித்த நாட்களின்
சிந்திக்காத பொழுதுகளில்
உன் ஒரு
தாழ்ந்த பார்வையில்
என் நிழல் கூட
உயிர்ப்புடன்தான் இருந்தது
என்
இதயதாபத்தை
உன்னிடம் சொல்லத் தயங்கி
இன்னும்
எத்தனை இரவுகள்
நான்
விழித்திருக்க வேண்டுமோ...
உன்னைக் காணும்போதெல்லாம்
கனவுப் பார்வையாய்
உன் கண்களில்
நான் தெரிவதாகவே நினைக்கிறேன்
உன் உதடுகள்
உள் உச்சரிப்பாய்
என் பெயரை
அடிக்கடி
உச்சரிப்பதாகவே நினைக்கிறேன்
நீ சொல்வாய்
என நானும்
நான் சொல்வேன்
என்று நீயும் ....
ஹூம்...
இன்னும்
எத்தனை இரவுகள்
கழியும் இந்த
ஏக்கத்தில்..
வெப்பக்காற்றாய்
வெளியேறுகின்றன
பெருமூச்சுகள்..
வெவ்வேறு இடங்களில்
இருந்தாலும்
ஒரே நினைவுடன்
இருப்பதால்
இந்த இரவு
உனதும்தான்
எனதும்தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மேலே இருப்பது 2014 இல் சென்னையை மழை தன்னிடமிருந்து விலக்கியே வைத்திருந்த நேரத்தில் பகிர்ந்தது. இப்போது பொருந்தாது. ஏனென்றால் சென்னையை மழை புரட்டிப் போட்டுக்கொண்டிருப்பது நீங்கள் எல்லாம் அறிந்ததே! எனவே இதை கீதாக்காவுக்கு டெடிகேட் செய்கிறேன்! ஏனென்றால் அவர் போட்டிருக்கும் ஸ்டேட்டஸ்...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விடிந்தது வியாழன் விடுகதையாய்...
பதிலளிநீக்குஉறங்கினால் அல்லவோ விழிப்பதற்கு..
பதிலளிநீக்குஇரவானால் அல்லவோ விடிவதற்கு!..
நானோ நீயோ... யார் நிலவே!..
அழகான கவிதை..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வந்தாச்சு அட்டெண்டென்ஸ் வைச்சுட்டு-மொய் வைச்சாச் மீண்டும் வரோம். பதிவு சூப்பர்!!...
பதிலளிநீக்குகீதா
ஹூம், எல்லோரும் வேண்டிக்குங்க! அப்படியானும் மழை வரட்டும்! கவிதை நல்லா இருக்கு. எந்த ஹிந்திப் பாடல்னு யோசிச்சுட்டு இருக்கேன்.
பதிலளிநீக்கு"சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை!" அப்படினு தமிழ்ப் பாடல் தான் நினைவில் வருது. :) ஜிவாஜி இல்லையோ அது?
நேத்து கல்லா கட்டவேயில்லை..
பதிலளிநீக்குஆனா இன்னிக்கு வியாழக்கிழமை...
விறு..விறு..ந்னு போணியாகுது...
:-(
நீக்குகவிதை அருமை
பதிலளிநீக்குதம+1
துளசி: ஸ்ரீராம் நீங்கள் நல்ல சிந்தனைகளுடன் கவிதை எழுதுகிறீர்கள். நீங்கள் சில பின்னூட்டங்களில் அடிக்கடி சொல்லும் மடக்கிப் போட்டு எழுதுவது என்றாலும் அதிலுள்ள சிந்தனைகள், கருத்து தானே முக்கியம்?!! நன்றாகவே இருக்கிறது!
பதிலளிநீக்குகீதா: மழை நமக்கு வராட்டாலும் எங்கிருந்தாலும் வாழ்க வாழ்க னு நம்மை விட்டுப் பிரிந்த காதலியை கண்ணீருடன் வாழ்த்துவது போல!! நல்லாருக்கு ஸ்ரீராம். கீதாக்காவின் கமென்டும்!! ரசித்தோம்.
தபால்காரனைப் போல அனுப்பிக் கொண்டே/// வாவ் செம கற்பனை!...அதே போல இந்த இரவு உனதும் தான் எனதும் தான்!! சூப்பர்!
இப்பல்லாம் வயசாயிடுச்சா..கவிதை எழுதறது இல்லையோ??!!!! ஹிஹிஹிஹிஹி...அதிரா அண்ட் ஏஞ்சல் நோட் திஸ்!!
ச்சீ.. பாவம் இல்ல ஸ்ரீரங்கத்துக்காரங்க....!// ஹாஹாஹாஹாஹாஹாஹா.....தாங்கலை!!
பதிலளிநீக்குகீதா
துரை செல்வராஜு சகோ!! //நேத்து கல்லா கட்டவேயில்லை..
பதிலளிநீக்குஆனா இன்னிக்கு வியாழக்கிழமை...
விறு..விறு..ந்னு போணியாகுது...// ஹாஹாஹாஹாஹாஹா......கௌதம் அண்ணா வெயர் ஆர் யு?!! ஓ! அதுக்குத்தான் அந்த பொம்மையா??!!! கணினில அது என்ன பொம்மைனே தெரியலையே!!!
இப்ப அடுத்த வார பு பு ஒழுங்கா வரும்னு நம்பறோம் என்ன சொல்றீங்க நெல்லை, பானுக்கா??!!!
கீதா
பெருமூச்சு விட்டு படித்தேன் ஸ்ரீராம் ஜி
பதிலளிநீக்குகவிதைக்கு நல்ல படத்தை செலெக்ட் செய்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு"ஒரு நாளைக்கு ஒழி என்றால் ஒழியாய், இரு நாளைக்கு ஏல் என்றால் ஏலாய், இடும்பைகூர் என் வயிரே" என்ற பாடல் மழை செய்யும் ஆட்டத்தை நினைத்து, மனதில் தோன்றுகிறது.
கவிதையை ரசித்தேன்.
பதிலளிநீக்குNice!!
பதிலளிநீக்குஆஆஆஆ கவித கவித.... படத்தில் இருப்பது அனுஸ்காவோ? பார்த்தா தமனா மாதிரியே இருக்கிறா:)... சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...
பதிலளிநீக்கு///துரை செல்வராஜூNovember 9, 2017 at 6:01 AM
பதிலளிநீக்குவிடிந்தது வியாழன் விடுகதையாய்...///
நீங்க புதனை விட்டு இன்னும் வெளில வரவே இல்லயே திரை அண்ணன்:)
கீதாக்காஆஆஆஆ நீங்கட ஜொந்த ஊர் ஸ்ரீ ரங்கமோஓஓ? முதல்ல பெயரின் முதல் எழுத்தை மாத்துங்கோ:) அப்போதான் மழை சோஓஓஓஓஒ எனக் கொட்டும்.. வானத்தைப் பிளந்துகொண்டு:).. நான் ஜொன்னா யாரு கேட்கிறா:)
பதிலளிநீக்குஆஹா முதல் படத்தில் நிற்பது ஸ்ரீராமா?? அதைச் சொன்னால்... 2ம் படத்தில் இருப்பது எந்தக்கா என கரீட்டாச் சொல்லிடுவனே:)... எதுக்கு மாலையில சந்திக்கிறீங்க ???? கர்ர்ர்ர்.. இனிமேல் சூரிய உதயத்தில் சந்திக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்... :)..
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் கவிதை சூப்பர் காதல் ரசம் கொட்டுது... நல்லாத்தான் எழுதியிருக்கிறீங்க...
என் பட ரிவியூ மாதிரி இது பாடல் ரிவியூ:) ஹா ஹா ஹா...
பேஸ் புக் கவிதை.... நீங்க ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்... ஆந்திராவுக்காக எல்லாம் மழை பெய்யோணும் என வாழ்த்துறீங்க....
பதிலளிநீக்குஅஞ்சூஊஊஉ...., கீதாஆஆஆஅ.., அனுஸ்கா புரொம் ஆந்திரா????:) பீஸ்ஸ் கிளியர் மை டவுட்ட்ட்ட்ட்:)..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... நன்றி முதலாவதாக வந்து பின்னூட்டமிடுவதற்கும், முதல் பாராட்டுக்கும்.
பதிலளிநீக்குசட்டென வந்து தலைகாட்டி விட்டுப் போனதற்கு நன்றி கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா... என்ன ஹிந்திப் பாடல் என்று யோசித்து விட்டீர்களா? உங்கள் மன்னியாலும் கண்டு பிடிக்க முடியாதாக்கும்! ஸ்ரீரங்கத்தில், திருச்சியில் சீக்கிரமே மழை பொழியட்டும்.
பதிலளிநீக்குமீள் வருகையில் விறுவிறுன்னு போணியாகுது என்று சொன்னீர்கள் துரை செல்வராஜூ ஸார்... போதுமான அளவு வந்து விட்டதா?!
பதிலளிநீக்கு:)))
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குகேஜிஜி எதற்கு விசனப்பட்டிருக்கிறார் என்று அபுரி!
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி துளஸிஜி.
பதிலளிநீக்குவாங்க கீதா ரெங்கன். கீதாக்காவின் ஸ்டேட்டஸ் என் மழைக் கவிதைக்கு பதில் இல்லை. நான் எழுதிய 'வருவாய் வருவாய் என' 2014 இல் ஒரு மழை இல்லா வருடத்தில் பகிர்ந்தது. கீதாக்கா எழுதிய இந்த ஸ்டேட்டஸ் தனியாக அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பகிர்ந்தது!
பதிலளிநீக்குஇரண்டு மூன்று வருடங்களில் வயதாகி விடுமா என்ன? வயதானால்தான் கவிதை எழுத்தாக கூடாதா என்ன? இன்னொன்று,இதைக் கவிதையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றிகள்!
புதன் புதிரில் என்ன குறைங்கறீங்க? சரியாக சொன்னால் கேஜிஜி விளக்கம் கொடுப்பார்!!!
நன்றி கில்லர்ஜி. ஆமாம், எதற்குப் பெருமூச்சு?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... கவிதைக்குப் போட்ட படத்தை மட்டும் பாராட்டினீர்கள்... "கவிதை" பற்றி சொல்ல ஒன்றுமில்லையா?!!
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா....
பதிலளிநீக்குநன்றி மிடில்க்ளாஸ்மாதவி. ரத்தினச்சுருக்கம்!
பதிலளிநீக்குவாங்க அதிரா... ரொம்ப நாளா அப்பாவியாகவே இருக்கீங்க... அடுத்த பெயர் மாற்றம் எப்போது?!!
பதிலளிநீக்குஅனுஸ்கா, தமன்னா? முதுகைப் பார்த்தே கண்டு பிடிக்கிறீர்களே!
துரை அண்ணன் சொல்லியிருப்பது விடிந்தது வியாழன் விடு அந்தக் கதையை என்பதாய்....!
//ஜொந்த ஊர் ஸ்ரீ ரங்கமோஓஓ? முதல்ல பெயரின் முதல் எழுத்தை மாத்துங்கோ:) //
ஊர் பெயரின் முதல் எழுத்தையா? அவர் பெயரின் முதல் எழுத்தையா? சொல்வதைத் தெளிவாகச் சொல்லலாமுல்லோ?!!!
அனுஷ்க்கா ஆந்திரமா? ஆம்... அங்கு புயல் மழை, இங்கு ஜொள்ளு மழை!
//வாங்க கீதாக்கா... என்ன ஹிந்திப் பாடல் என்று யோசித்து விட்டீர்களா? உங்கள் மன்னியாலும் கண்டு பிடிக்க முடியாதாக்கும்! ஸ்ரீரங்கத்தில், திருச்சியில் சீக்கிரமே மழை பொழியட்டும்.// என்னாது? மன்னியால் கண்டு பிடிக்க முடியாதா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னனு நினைச்சீங்க அவங்களை! இதோ கண்டு பிடிச்சுச் சொல்லச் சொல்றேன்! இருங்க! :))))
பதிலளிநீக்குஅந்த மாலையோ எந்த மாலையோ
பதிலளிநீக்குமாலை என்றாலே சிக்கல்தான்
மாலைக்குப் பின்னோ இரவு வரும்
இரவில் விடாது விரட்டும் கனவு
கனவில் வருமே அந்த உதடுகள்
உள்பக்கமாய்வேறு உச்சரிக்கும்
உபத்திரவம் அதிகம் மொத்தத்தில்
உலகில் ஆணாய்ப் பிறந்துவிட்டாலே
கீதாக்கா...
பதிலளிநீக்கு// இதோ கண்டு பிடிச்சுச் சொல்லச் சொல்றேன்! இருங்க! : //
ஐ யம் வெயிட்டிங் கீதாக்கா...! நேரடி மொழிபெயர்ப்பாய் இருந்தாலே சாத்தியம் கம்மி. இதில் உணர்வுகள்தான் பெரும்பாலும் கடத்தப் பட்டிருக்கின்றன. எனவே சற்று அல்ல, ரொம்பவே கடினம். ஆனாலும் சில கீ வர்ட்ஸ் உண்டு!
வாங்க ஏகாந்தன் ஸார்...
பதிலளிநீக்கு// இரவில் விடாது விரட்டும் கனவு//
உறக்கமில்லா விழிகளில் கனவு எப்படி வரும்?
//உபத்திரவம் அதிகம் மொத்தத்தில்
உலகில் ஆணாய்ப் பிறந்துவிட்டாலே //
ஹிஹிஹி... ஆமாம் ஸார்... கரெக்ட்டா சொன்னீங்க...
@
பதிலளிநீக்கு//..உறக்கமில்லா விழிகளில் கனவு எப்படி வரும்? //
உறக்கமில்லா விழிகளும் ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் கண்ணயரும்.. கண்ணயர்ந்த வேளையிலே கனவு வரும்! கனவுகூட இல்லையெனில் ஆண்களின் கதை என்னாகும் ?
உணர்வுகளை சிதறிவிட்ட கவிதை மிகவும்அழகு அருமையா யோசித்து இருக்கீங்க வார்த்தைகளை கோர்வையாய்தேர்ந்தெடுத்து அர்த்தங்களை கொடுக்கும் வரிகள் ரசித்தேன்
பதிலளிநீக்கு//நிழலும் உயிர்ப்புடன்// நல்ல கற்பனை வாழ்த்துக்கள் உங்களுக்கு மிக அருமையா கவிதை வருகிறது நிறைய எழுதுங்க, எழுதியதை பகிருங்கள்
அதிராஆவ் வந்திட்டேன்ன்ன்ன்ன் .அனுஷ்கா ஷெட்டி இருப்பது ஆந்திரா பிறந்தது மங்களூர்
பதிலளிநீக்குஅனுஷின் செல்ல பெயர் ஸ்வீட்ட்டு
கவிதா நல்லா இருக்கு :) ஆனா எனக்கு தமிழ் பாட்டே ததிங்கினத்தோம் :) ஹிந்தி எப்படி தெரியும் :)
பதிலளிநீக்கு//கனவுகூட இல்லையெனில் ஆண்களின் கதை என்னாகும் ?//
பதிலளிநீக்குஹா.... ஹா.... ஹா.... இந்தக் கடைசி வரிக்காக மிச்ச வரிகளை விட்டு விடலாம் ஏகாந்தன் ஸார்.
வாங்க பூவிழி.. வரிவரியாய் ரசித்து, பாராட்டியதற்கு(ம்) நன்றிகள்.
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சலின்... அனுஷ்க்கா பற்றிய மேலதிகத் தகவல்களுடன் வருகிறீர்கள். நன்றி. இது அதிராவுக்கு உதவும்!
பதிலளிநீக்கு//கவிதா நல்லா இருக்கு //
கவிதா? யார் அது? பாராட்டுக்கு நன்றி!
ஹாஹா :) கவிதையைத்தான் தா ஆக்கினேன் :)
பதிலளிநீக்குநியாயப்படி நீங்கதான் fan பேஜ் ஆரம்பிச்சி மேலதிக விவரம்ஸ் கொடுத்திருக்கணும் :) நான் கொடுத்திருக்கேன் இங்கே
வாங்க ஏஞ்சலின்
பதிலளிநீக்கு//நியாயப்படி நீங்கதான் fan பேஜ் ஆரம்பிச்சி மேலதிக விவரம்ஸ் கொடுத்திருக்கணும் :)//
அந்த அளவுக்கு எல்லாம் fan இல்லீங்க.. ரசிக்கறதோட சரி! இருந்தாலும் நன்றீஸ்!
அழகான கவிதை அண்ணா...
பதிலளிநீக்குரசித்தேன்...
சமீபத்திய சென்னை மழையில் எங்க தேவகோட்டையெல்லாம் வெயிலில் ஜொலித்ததாம்...:)
இந்த ஆண்டில் இந்த ரிஷ்ய சிருங்கர் வராமலேயே சென்னையில் மழை. தேவர்கள் வானத்தில் இருந்து சில இடங்களுக்கு மட்டும் உச்சா பொழிவார்களோ எதையும் கடவுள் குறித்து சிந்திப்பதால் இந்தக் கற்பனயோ
பதிலளிநீக்கு“மழை“ என்றாலே கவிதைதான்,என்ன இப்போது முரட்டுத்தனமான கவிதையா இருக்குது அம்புட்டுதான்
பதிலளிநீக்குகவிதை பிரமாதம் எழுத மறந்து விட்டேன்
பதிலளிநீக்கு////
பதிலளிநீக்குஏகாந்தன் Aekaanthan !November 9, 2017 at 2:18 PM
உபத்திரவம் அதிகம் மொத்தத்தில்
உலகில் ஆணாய்ப் பிறந்துவிட்டாலே////
ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்:).... உபத்திரவம் பெண்களுக்கே அன்றி ஆண்களுக்கேது?:)....
இங்கே நீங்க சொல்லும் உபத்திரவம் என்பது... நீங்களாகவே வலியத் தேடுவது:)... அதுக்கு நாங்க ஒண்ணும்ம்ம்ம்ம்ம்ம்ம் பண்ண முடியாதூஊஊஊ ஹா ஹா ஹா ஹையோ மீ ஒரு அப்பாவீஈஈஈ சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்:)
////ஸ்ரீராம்.November 9, 2017 at 2:52 PM
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சலின்
//நியாயப்படி நீங்கதான் fan பேஜ் ஆரம்பிச்சி மேலதிக விவரம்ஸ் கொடுத்திருக்கணும் :)//
அந்த அளவுக்கு எல்லாம் fan இல்லீங்க.. ரசிக்கறதோட சரி! இருந்தாலும் நன்றீஸ்!////
அஞ்சூஊஊஊஉ .... அவங்கட "பொஸ்" உம் இப்போ கொமெண்ட் படிப்பதாக பிபிசி ல சொன்னாங்கோ:).. அதுதான் இப்பூடி ரசிப்பதோடு நிண்டிடிச்சோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).. மீ ஒரு அப்பாஆஆஆஆவி:).
haaahaa :) my mind voice athira solittaanga :))))
பதிலளிநீக்குநான் மிளகு குழம்பு செஞ்சிட்டு கன்டினியூ பண்றேன் :)கொஞ்சம் நேரத்தில் வாங்க மியாவ்
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
கவிதையின் வரிகளை இரசித்தேன் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-த.ரூபன்-
சில சமயங்களில் எங்கள் ப்ளாக் பார்க்க, நெருப்புநரியின் உதவி தேவைப்படுகிறது
பதிலளிநீக்குநன்றி கவிஞர் ரூபன்.
பதிலளிநீக்குஏகாந்தன் ஸார்... நானும் அடிக்கடி க்ரோமுக்கும் நெருப்புநரிக்குமாய் அலைபாய்வேன்!
பதிலளிநீக்குஅருமையான மழைக் கவிதை. ஸ்ரீராம். ஸ்ரீரங்கத்தில் மழை பெய்யட்டும்.
பதிலளிநீக்குஏதோ நினைவுகள் கனவிலே வருகுதே. காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே.
எண்ணங்கள் எப்பொழுதும் இடம் மாறும் டெலிபதிதான் கவிதை.
சொல்லிப் புரிய வைப்பர் சிலர்.
பேசிப்புரிய வைப்பர் பலர்.
கவிதை என்பது மின்னி விட்டுப் போவது!..
பதிலளிநீக்குஅதற்காக எந்த ஆயத்தமும் தேவையில்லை..
-- யாரோ (யாரு? ஜீவியோ?)
வார்த்தைகளை சிரமம் எடுத்துக் கொண்டு கோர்வையாகத் தேர்ந்தெடுக்காத கவிதை என்று நினைக்கிறேன்.
அதான் இயல்பா இருக்கு! ... :))
வெவ்வேறு இடங்களில்
பதிலளிநீக்குஇருந்தாலும்
ஒரே நினைவுடன்
இருப்பதால்
இந்த இரவு
உனதும்தான்
எனதும்தான்.//
நம் இரவுதான் என்று சொல்லவில்லை.
கவிதை அருமை.
ஸ்ரீரங்கத்தில் நல்ல மழை பெய்யவேண்டும் அதற்கு ரங்கன் அருள்புரிய வேண்டும்.
குன்றம் ஏந்தி குளிர்மழைக் காத்தவன் அல்லவா?
பதிலளிநீக்குமழை வேண்டும் என்று கேட்டால் தான் கொடுப்பார்.
மழை இல்லையென்றாலும் தண்ணீர் கஷ்டம் இல்லையே!
அதற்கே ரங்க்கனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இரசித்தேன் கவிதையை!
பதிலளிநீக்குதாழ்ந்த விழிகளுக்குள் உயிர்ப்புடன் இருக்கும் நிழலை ரசித்தேன். கவிதை அருமை.
பதிலளிநீக்கு