பகுத்தறிவுத் திருமணங்களில் தலைமை தாங்கும் அரசியல்வாதியின் பேச்சில் அரசியல் தூக்கலாகவும், வாழ்த்துரை கம்மியாகவும் இருக்கும்.
நிறைய அமங்கல வார்த்தைகள் சர்வ சாதாரணமாக வந்து விழும். இந்தவார வாரமலரில் படித்த இந்நிகழ்ச்சி மனத்தைக் கவர்ந்தது.
ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கே.பி.சுந்தராம்பாளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையை சுற்றியிருந்தவர்கள், பூம்புகார் படப் பாடல்களை பாட வேண்டும் என்று, கூக்குரலிட்ட வண்ணமும், எழுதிக் கொடுத்த வண்ணமும் இருந்தனர்.
உடனே, கே.பி.எஸ்., 'நீங்கள் பூம்புகார் கதையை அறிந்திருப்பீர்கள். கோவலனுடைய முடிவும் உங்களுக்கு தெரியும். ஆதலால், இக்குழந்தைகளை (மணமக்களை) ஆசிர்வதிக்கிற இந்நேரத்தில், அம்மாதிரியான பாடல்களை பாடக் கூடாது என்பது, என் எண்ணம். இவர்கள், நிறையக் குழந்தை குட்டிகளை பெற்று, சுகமாக வாழ வேண்டும் என்று, முருகனை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, இன்று மட்டும் என்னை விட்டு விடுங்கள்...' என்று சொல்லி, 'பழம் நீயப்பா...' என்று, முருகனின் பாடல்களை பாட ஆரம்பித்தார். சபையில் ஏற்பட்ட கரவொலி ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.
சுவையான நிகழ்ச்சிகள்'நூலிலிருந்து...
இது போலத்தான் அதே திருமண நிகழ்ச்சிகளில் "கீழ்வானம் சிவக்கும்" படப்பாடலான "கடவுள் அமைத்தான்.. மணநாள் கொடுத்தான்..." பாடல் பாடுவதும்!
"பார்த்துக்கோ... எங்கே என்ன பேசணும்னு தெரிஞ்சிருக்கறது முக்கியம்!"
================================================================================================================
இன்ஸ்பெக்டர் : "மேல விழுந்து கடிக்கறவரைக்கும் என்ன ஸார் பண்ணினீங்க? தானாப் பேசிகிட்டு.... ஆளைப் பார்த்தாலே மனா நிலை சரியில்லாதவர்னு தெரியலையா?"
கடி வாங்கியவர் : "ப்ளூ டூத்ல பேசறார்னு நினைச்சுட்டேன் ஸார்!"
கடி வாங்கியவர் : "ப்ளூ டூத்ல பேசறார்னு நினைச்சுட்டேன் ஸார்!"
"கண்டிப்பா சிரிக்கணுமா ஸ்ரீராம்?"
===================================================================================================================
தமிழ்மணம்.
நடுவுல இருக்கோம்... கொஞ்சம் வேகமாய் போ... ஏரிக் கரை உடைஞ்சுடுச்சாம்... ஓரமாய் போயிடுவோம்....
===============================================================================================================================
=======================================================================================================================
வாழ்க வளமுடன்...
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குகேட்டா இதெல்லாம் கவிதை..ந்னு சொல்றது!!..
பதிலளிநீக்குகேக்குறதுக்கு ஆள் இல்லாம போச்சு..
வணக்கம் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
ஸ்ரீமதி KBS அவர்களைப் பற்றிய செய்தியை முன்பே வாசித்திருக்கிறேன்..
பதிலளிநீக்குபெரிய மனம் படைத்தவர்கள்...
//// புளூ டூத்..ல பேசிக்கிட்டு ////
பதிலளிநீக்குஇந்த மாதிரி புளூ டூத்களின் பின்னால் சென்றால் போதும்.. வீட்டு சேதி எல்லாம் தெரிஞ்சுக்கலாம்..
அப்பளக்குழவியால் அடி வாங்கியது வரைக்கும்....
வாசகங்களும், சிவாஜி,கமல் காப்ஷன்களும் அருமை. திருமதி கே பீ எஸ். பெரிய மனுஷி.
பதிலளிநீக்குஎத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறார்.
நம்ம ஊருல ஏட்டிக்கு போட்டியாக செஞ்சா அது பகுத்தறிவாக கருதப்படுகிறது..
பதிலளிநீக்கு// கேக்குறதுக்கு ஆள் இல்லாம போச்சு.. //
பதிலளிநீக்குஅது பரவாயில்லை துரை செல்வராஜூ ஸார்... படிச்சாப் போதுமே...
// இந்த மாதிரி புளூ டூத்களின் பின்னால் சென்றால் போதும்.. வீட்டு சேதி எல்லாம் தெரிஞ்சுக்கலாம்.. //
இவர்கள் என்றில்லை, பேருந்திலோ, மின்சார ரயிலிலோ பயணம் செய்தால் போதும். அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு, ஆனால் அது இல்லாமலேயே எதிர் முனையில் இருப்பவர்களுக்குக் கேட்கக் கூடிய வகையில் சத்தமாக பேசிக்கொண்டு வருபவர்களை பார்த்திருக்கிறீர்களா? இம்சை!
வாங்க வல்லிம்மா.. மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாங்க மதுரை... இந்தியா வந்து திரும்பினீர்களோ? ரொம்ப நாளா ஆளைக் காணோம்?
பதிலளிநீக்குசுவையான தொகுப்பு. ஜிவாஜி சொல்றாப்பலே சொன்ன கருத்துகள் சூப்பர்! :)
பதிலளிநீக்குஅலைபேசி தொல்லைகள் - சமீபத்தில் இரவு முழுக்க இப்படி ஒரு அவஸ்தை - ஒரு பேருந்து பயணத்தில்!
வாங்க வெங்கட்.... அலைபேசித் தொல்லை ஓயாத தொல்லை. அலைன்னு வருது இல்லையா? ஓயாது!!
நீக்குஜிவாஜியை வைத்து சொன்னதை ரசித்திருப்பதற்கு நன்றி.
"கண்டிப்பா சிரிக்கணுமா ஸ்ரீராம்"
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் சிரிக்க வைத்தது சிவாஜி டயலாக்.
வாங்க கில்லர்ஜி... அப்போது ஜோக் சிரிக்க வைக்கலை!! சிவாஜி டயலாக்தான் சிரிக்க வைச்சதுங்கறீங்க...
நீக்குதிருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதாகக் கூறி, முழுமையாக அரசியலைப் பேசிவிட்டு கடைசியில் மணமக்களை வாழ்த்தாமல்கூட இருந்தவர்களைப் பார்த்துள்ளேன்.
பதிலளிநீக்குவாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா... இது அப்பல்லாம் ரொம்ப சகஜம்.
நீக்குதொகுப்பு அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
நீக்கு
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்.
//வாங்க மதுரை... இந்தியா வந்து திரும்பினீர்களோ? ரொம்ப நாளா ஆளைக் காணோம்?//
வெளிநாட்டுக்கு எல்லாம் அடிக்கடி வந்து போக நானெல்லாம் அதிரா & ஏஞ்சல் மாதிரி பெரிய ஆள் இல்லை
// நானெல்லாம் அதிரா & ஏஞ்சல் மாதிரி பெரிய ஆள் இல்லை. //
நீக்குஹா.... ஹா..... ஹா... ஹையோ.... ஹையோ!
சிவாஜி கமென்ட்ஸ் நல்லா இருந்தது. கேபிஎஸ் அவர்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். 'தனித்திருந்து வாழும்', 'பழம் நீயப்பா' - இரண்டும் அட்டஹாசமான பாடல்கள்.
பதிலளிநீக்குஇந்தெ செல்ஃபோன் தொல்லைகளைச் சொல்லி மாளாது. எனக்கு எரிச்சலாக இருப்பது, பாட்டை அவன் மட்டும் கேட்டுத் தொலையாமல், ஊர்ல இருக்கற எல்லாப் பயலுவளும் கேட்கணும்னு சத்தமா வைக்கிறது. இந்த மாதிரி கழிசடைகளைக் கண்டாலே எனக்கு அவ்வளவு ஆத்திரமா வரும். மற்றபடி காதுல செட் வச்சுக்கிட்டு அவங்களாகவே கேட்டுக்கிட்டு, இந்த உலகத்துக்குச் சம்பந்தமே இல்லாதவங்க மாதிரி இருப்பவங்க பரவாயில்லை. எனக்கு ஒரு சந்தேகம்.. எப்படித்தான் பொழுதன்னிக்கும் இப்படி பாட்டு கேட்கிறாங்களோ. இவங்கள்ளாம் 100 வருடத்துக்கு முன்னால் பிறந்திருந்தால் ஒருவேளை 'மனநிலை' சரியில்லாதவங்களா இருந்திருப்பாங்களோ?
வாங்க நெல்லை... கேபிஎஸ் பாடல்களில் இன்னும் நிறையச் சொல்லலாம்! எனக்கு உடனே நினைவுக்கு வருவது "காலத்தில் அழியாத..".
நீக்குசெல்ஃபோன் தொல்லைகள் நிறைய இருக்கு. இந்தப் பாடல் கேட்பது பற்றி முன்னர் ஒரு பதிவு கூட எழுதியிருந்தேன்.
பகுத்தறிவு திருமணங்கள் கூட பதிவு செய்யாவிட்டால் செல்லுமா வீடு மொத்தம் பார்த்திருக்க முத்தம் தரக் காத்திருக்கே ---- ரசித்த வரிகள்
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்... கவிதையை ரசித்ததற்கு நன்றி.
நீக்குநல்லதொரு கதம்பம். அந்தக் காலத்தில் கேபி சுந்தராம்பாள் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கேன். அதுவும் என்னப்பனின் அப்பனைப் பாடுபவது அருமையா இருக்கும்! அவர் நடிப்பும் கூட..
பதிலளிநீக்குஇந்த ப்ளூடூத் பல நாட்களாகத் தெரியாமல் இருந்தது. ஏன் இப்படி யார்கிட்ட பேசிக்கிட்டே போறாங்கனு நினைச்சதுண்டு. அதுவும் வண்டி ஓட்டிக்கிட்டே..சில சமயம் நம்மகிட்டதான் எதேனும் பேசறாங்களோனும் நினைச்சதுண்டு...
உங்கள் கவிதை அருமை...அனைத்தும் ரசித்தேன்
கீதா: நல்ல காலம் கேபிஎஸ் அப்படிச் சொன்னதைக் குதர்க்கமாகக் கேள்வி கேக்காம இருந்தாங்களே!!!
நல்ல பாடல். அவரது வாய்ஸ் கணீர்!! வார்த்தைகளும் தெள்ளத் தெளிவா இருக்கும்...
ப்ளூடூத் ஹாஅ ஹா ஹா..இந்த அட்ராசிட்டிஸ் ஹையோ...நான் பல சமயத்துல திரும்பிப் பார்த்துருக்கேன் நம்மகிட்டத்தான் ஏதாச்சும் சொல்லுறாங்களோனு...ஏற்கனவே காது மந்தமாச்சா ஸோ நான் ரொம்ப அலர்ட்னு காமிச்சுக்க வேண்டி கூடத் திரும்பிப் பாத்துருக்கேன் ஹிஹிஹிஹி.. ..சிவாஜி படம் போட்டு கமென்ட்ஸ் ரசித்தேன்.
கவிதை டாப்!!! அதுவும் வீடு மொத்தம் பார்த்திருக்க முத்தம் தரக் காத்திருக்கே!!! வாவ்!! ரசனை மிக்க வரிகள் ஸ்ரீராம்...
ஹையோ ச்கோ ச்வீட்!! அம்முக்குட்டி...செல்லக் குட்டீஸ் நு கொஞ்சணும் போல இருக்கு..அந்த ரெண்டையும்...அழகு...இதுங்களுக்கு வளர்ந்தாலும் வயசானாலும் குழந்தைங்கதான்...
வாங்க துளஸிஜி...
நீக்கு// உங்கள் கவிதை அருமை...அனைத்தும் ரசித்தேன் //
இப்படி ஏற்றி ஏற்றி விடுவதால்தான் வாராவாரம் இவன் எதையாவது போட்டு கவிதைன்னு ஏமாத்தறான்னு அனுஷ்கா, சிவாஜி எல்லோரும் ஃபீல் பண்றாங்க. வின்னும் யார் யார் ஃபீல் செய்வாங்களோ...!!!!
நன்றிஜி.
முந்தைய கமெண்ட்டில் "வின்னும்" என்று வந்திருப்பது தவறு. "இன்னும்" என்று வாசிக்கவும்.
நீக்குஇப்படிக்கு
(பெஞ்ச் மேல் நின்றுகொண்டு)
ஸ்ரீராம்.
வாங்க கீதா..
நீக்குநீங்களும் கவிதையை ரசித்திருப்பதற்கு நன்றி. இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு கேள்வி யாராவது கேட்பார்கள் என்று நினைத்தேன். இன்னும் அந்தக் கேள்வி வரவில்லை!!!!
மடக்கி மடக்கி
பதிலளிநீக்குஅடக்கி அடக்கி
இடுக்கி இடுக்கி
நானும் எழுதுவேன்
கவிதை!
அதுலே பாருங்க! எல்லோருக்கும் இப்போ "ஜிவாஜி" ஆயிட்டாரு! ஹெஹெஹெஹெ நாம வைச்ச பேரு! எம்புட்டுப் பிரபலம் ஆயிருக்கு!
இதெல்லாம் ஒரு கவிதை! ரசிக்கணும் நாங்க! அதான் ஜிவாஜியே கேட்டுட்டாரே! :)
யாரோ இங்கே என் பேரை சொன்ன மாதிரி இருந்துச்சே :)
பதிலளிநீக்குஆங் ஜெஸ் எல்லாத்தையும் எனக்கு உடனே சொல்லிடுது :)
//"பார்த்துக்கோ... எங்கே என்ன பேசணும்னு தெரிஞ்சிருக்கறது முக்கியம்!"'//
பதிலளிநீக்குஇதான் டாப்!.. :))
கேள்வி இருங்க கேட்கிறேன்:)
பதிலளிநீக்குமுதல் கேள்வி ..அந்த குட்டி குழந்தைகளை ஏன் ஓரமா எடுத்து விடாம படம் பிடிச்சீங்க ???
கேள்வி நம்பர் 2,
பதிலளிநீக்குகாடு போகும் வயசு ?? யாருக்கு
மனா வா இல்லை மன வா ??
ஏன் இன்னிக்கு அனுஸ்காவை காணோம் :)
காடு போகும் நேரத்தை
பதிலளிநீக்குஒத்தி வைக்கும் உபாயம் சொன்னா..
அத்தை அதை அறிவாளா?
அம்மான் மகளே சொல்லு...
கேபிஎஸ் கணீர் குரல் ரொம்ப பிடிக்கும் .பெரியவங்க பெரியவங்கதான் எந்த இடத்தில என்ன செய்யணும்னு இடம் பொருள் ஏவல் அறிந்து செஞ்சாங்க இல்லியா ..எல்லாத்துக்கும் பொருத்தமா சிவாஜி அங்கிள் கமல் படங்களும் கப்ஷனும் .சூப்பர்ப்
பதிலளிநீக்குஅந்த ப்ளூடூத் ஜோக் எழுதினது நீங்களா ??
பதிலளிநீக்குஎல்லாவற்றிக்கும் காப்ஷன்கள் வைத்து அதற்க்கு கீழே எழுதிய வரிகள் சூப்பர்
பதிலளிநீக்குகவிதையில்
மாமா மாமிக்கே
காடு போகும் வயசு
இதுல அத்தை கூட !
இது சின்னத்தையோ......
1)கேபிஎஸ் பாடல்கள் அவ்வப்போது வரும் நினைவுக்கு. இப்போது வருவது..’’ வாழ்க்கையெனும் ஓடம், வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்..வாழ்க்கையெனும் ஓடம்…
பதிலளிநீக்குஆரம்பமாகவிருக்கும் ஆனந்த வாழ்க்கையை நினைத்திருக்கும் இளம் தம்பதிகளை, அழுகல் அரசியல்வாதிகளைவிட்டு வாழ்த்தச் சொல்வது தமிழ்நாட்டின் தன்னிகரற்ற கலாச்சாரம்..
2)எங்கே என்ன பேசணும்னு கத்துக்குட்டிகளுக்குப் புரியப்போறதில்லே
3)ஒங்க பேரைக் கேட்டதுமே சீரியஸாயிட்டாரோ சிவாஜி?
4)இந்த அப்பிராணிகள் மனுஷனுக்கு நடுவிலே மாட்டிகிட்டு படுறபாடு இருக்கே.. இப்ப புரியுது கர்மான்னா என்னன்னு..
5)கடவுள்தான் காப்பாத்தறாரு – வேறென்ன..
6)பத்துப்பாத்திரம் தேய்க்கவில்லை..
பாதித்துணி தோய்க்கவில்லை ..
பாதியா நிக்குதே வேலையெல்லாங்கிற கவலைதான்
பாசக்கார மாமா பேச்சக் கேக்கவிடாம தடுக்குதோ ?
நானும் சத்தியமா 2 வருடம் முன் தான் பூம்புகார் படம் பார்த்தேன்ன்ன்.. எனக்கு பிளக் அண்ட் வைட் மற்றும் அரச உடுப்பில் வரும் படங்கள் பெரிதாக பிடிப்பதில்லை, ஆனா இந்தப் பும்புகார் பார்க்கத் தொடங்கியதுதான், பொதுவா.. கொஞ்சம் கொஞ்சமாகவே பார்த்து முடிப்பது வழக்கம்... இது இடைவெளி எடுக்கக்கூட மனம் வரவில்லை.. தொடர்ந்து பார்த்து முடிச்சேன்ன்ன்.. சூப்பர் படம்.. ஆனா சீதா ராமன் கதைபோல.. அதிலும் கோவலனைத் திட்டியபடியேதான்ன்ன்ன்ன் இருந்தேனாக்கும்:) ஹா ஹா ஹா:)).. பாவம் கண்ணகி... மாதவியும் பாவம்தான்....
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குகடவுளே... இதுங்களை நீதான்பா காப்பாத்தணும்....///
ஆமாம்ப!!.. இங்கின வந்து போகும் எங்களை நீங்கதான் காப்பாத்தோணும் வைரவா:).. முக்கியமா இன்று குல்ட்டால ஸ்ரெயிட்டா எங்கள் புளொக்கிலேயே எட்டிக் கால் வச்ச அஞ்சுவை முதலில் காப்பாத்துங்கோ:))..
//Avargal Unmaigal said...
வெளிநாட்டுக்கு எல்லாம் அடிக்கடி வந்து போக நானெல்லாம் அதிரா & ஏஞ்சல் மாதிரி பெரிய ஆள் இல்லை///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... எங்கட டெய்சி ஒளிச்சிருந்துகொண்டு.. பேர்ட் வோச்சிங்:) செய்வதைப்போல., ட்றுத்தும் ஒலி:)ச்சிருந்து ...ஏஞ்சல்.. அதிரா வோச்சிங் செய்கிறார்ர்.... யுவர் ஆனர் இது 3567 ஆம் சட்டத்தின்படி இ டி சிங்:)) ஹையோ இது வேற சிங்:).. இவரை உடனே கைது செய்து, கில்லர்ஜி யின் அந்தக் கூண்டின் இடப்பக்கக் கூண்டில் வைக்குமாறூ கனம் கோட்டார் அவர்களைக் கேட்டு அமர்கிறேன்ன்:))..
///Angelin said...
பதிலளிநீக்குஅந்த ப்ளூடூத் ஜோக் எழுதினது நீங்களா ??///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆரைப்பார்த்து என்னா கிளவி கேய்க்கிறீங்க?:)).. புளூ எண்டால் நீலம்:).. டூத் எண்டால் பல்லு:)..
///நடுவுல இருக்கோம்... கொஞ்சம் வேகமாய் போ... ஏரிக் கரை உடைஞ்சுடுச்சாம்... ஓரமாய் போயிடுவோம்....///
பதிலளிநீக்குஹா ஹா ஹா இந்த இருவரும் அனுக்கா:) ரசிகரும்.. தமனா ரசிகருமோ?:))..
எனக்குப் பிடிச்ச சிவாஜி அங்கிளைப் பக்கம் பக்கமாகப் படம் பிடிச்சுப் போட்டமைக்கு நன்னி ஹை:)).. ஐஐ கீதாக்கா அடிக்க வரப்போறா கடவுளே.. இண்டைக்கு மீ ஆஞ்சநேயர் விரதமாக்கும்ம்ம்ம்ம்:))
முக்கியமான ரெண்டை விட்டிட்டனே:)).. ஹையோ என் ஓல் ரைம் பேவரிட் சோங்.... கடவுள் நினைத்தான்.. ரிப்பீட்ல போட்டு 2000...3000 தடவைகளாவது கேட்டிருப்பேன்ன்ன்ன்... ஏன் தெரியுமோ.. எனக்கு நம்ப மாட்டீங்க 4,5 வயதிலிருந்து நடந்தவைகள் அத்தனையும் பசுமரத்தாணிபோல நினைவில் இருக்கு...
பதிலளிநீக்குநாங்கள் அடிக்கடி ரெயின் பிரயாணம் செய்வோம்ம்.. அப்போ ஒருதடவை நைட் ரெயினில் போனபோது, சிலர் கையில் சில குட்டிக் குட்டி இன்ஸ்டூமெண்ட்ஸ் வச்சுப் பாட்டுப் பாடினார்கள்... அதிலே ஒரு பாட்டு இது, பல பாடல்களில் இது எனக்கு என்னமோ அப்படியே மனதில் பதிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்:))..
அடுத்து கவிதை நல்லாத்தான் இருக்கு.. ஆனா கடசி வரிகள் எனக்குச் சரியாகப் படவில்லையே.. அல்லது எனக்குப் புரியவில்லையோ...
அதாவது மாமா, மருமகளைக் கூப்பிடுவதைப்போலவும், மருமகள், அத்தையிடம் சொல்லிக் கொடுப்பேன் என்பது போலவும் வருதே....
இப்போது தானே ஒரு சிவாஜி எபிசோட் முடிந்தது, மறுபடியும் இன்னொன்றா? என்று பயந்து விட்டேன். கே.பி.எஸ் குரலைப்போலவே மனப்பான்மையும் கம்பீரம்.
பதிலளிநீக்கு"கேட்டா இதைக் கவிதைம்பான்....."
பதிலளிநீக்குஎன்றால் - இதை
வாசித்து சுவைத்த பின்
கவிதை என்று சொல்லாமே!
கவிதை அழகாக இருந்தாலும்
செய்தி சுவையாக இருந்தால் போதுமே!
"காலத்தில் அழியாத..". பாடல் அடிக்கடி வானொலியில் கேட்பேன் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குபிடித்த பாடல் நன்று த.ம. வாக்குடன்
பதிலளிநீக்கு