சனி, 18 நவம்பர், 2017

விஜய் சேதுபதியும் 50 லட்சமும்.
1) தங்களையும், தங்கள் குழந்தை,குடும்பங்களைப் பற்றியும் மட்டுமே கவலைப் பட்டுக் கொண்டிருப்போர் மத்தியில் தெருவில் வீடின்றி இருக்கும் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்த நமன் முனோத்.
2)  மதுரையில் ஒரு மகத்தான மனிதநேய அமைப்பு.  நேத்ராவதி மறுவாழ்வு மையம்.  பாராட்டப்பட வேண்டிய எட்டு மருத்துவர்கள் கொண்ட குழாம்.

இந்த அமைப்பிற்கு நல்ல உள்ளளங்கள் உதவ முன்வரும் போது அதனை ஏற்க முறையாக ஒரு அறக்கட்டளை வேண்டும் என்பதற்க்காக ஐஸ்வர்யம் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.உங்களால் முடிந்த அளவு இந்த மையத்தின் வளர்ச்சிக்கு நன்கொடை வழங்குங்கள் என்று கேட்கும் இந்த மனிதநேய மருத்துவர்கள் பற்றியும் மையம் பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:9597619378,9894042747.3)   ஏகாந்தன் ஸார் விருப்பம் மறுபடி நிறைவேறுகிறது.  நடிகர் விஜய் சேதுபதி.
4)   "...இந்த இயக்கத்தை நானே ஏற்படுத்தினேன்.  இதற்காக நிதி கேட்டு நான் யாரிடமும் கையேந்தவில்லை. பனியன் மற்றும் டீ ஷர்ட்டுகள் விற்று வருகிறேன். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை கொண்டு உதவுகிறேன். ஒட்டன்சத்திரத்தில் தங்கி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இப்பணியை செய்து வருகிறேன். சிலநாட்களுக்குப் பின் பக்கத்து மாவட்டங்கள் என மாநிலம் முழுவதும் செல்வேன். முதியோர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை கொடுத்து, அருகில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்கிறேன். இதனால் ஆத்ம திருப்தி கிடைக்கிறது...."  -  திருவண்ணாமலையைச் சேர்ந்த 31 வயது மணிமாறன்.


5)  காவல்துறை மக்களின் நண்பன். திருப்பூர்:திருப்பூர் நகர சிக்னல்களில், "மைக்' மூலம் போக்குவரத்து போலீசார், கனிவாகவும், கம்பீரமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, வாகன ஓட்டிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.  தமிழ்மணம்.

65 கருத்துகள்:

 1. இன்னிக்கு நான் தான் முதல் கமெண்ட் :)

  பதிலளிநீக்கு
 2. இத்தகைய நல்லோர்களால் இவ்வையகம் சிறப்புறுகின்றது...

  பதிலளிநீக்கு
 3. அடடே..... வாங்க ஏஞ்சலின். ஆச்சர்யம். (எங்க ஊர் கணக்குல) காலை வணக்கம்!

  பதிலளிநீக்கு
 4. நோஓஓஓஓ நான் இதை ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன்ன் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)...

  கொக்கரக்கோஓஓஓ:)

  பதிலளிநீக்கு
 5. வாங்க அதிரா... ஆச்சர்யாப் படுத்தறீங்களே!! குட்மார்னிங்!

  பதிலளிநீக்கு
 6. அனைத்தும் மனதுக்கு சந்தோஷத்தை தந்த செய்திகள் .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக்

  பதிலளிநீக்கு
 7. இன்றைக்கு கண்டிப்பாக நெய்ப்பாயசம் தான்...

  பதிலளிநீக்கு
 8. நன்றி & இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 9. இருங்கோ இண்டைக்கு ஒராளைத் தேம்ஸ்ல தள்ளாமல் நான் நித்திரை கொள்ளப்போவதில்லை:)... ஹையோ திரை அண்ணனின் நிலைமை கவலைக்கிடம் ஹா ஹா ஹா....

  அனைவருக்கும் குட் மோனிங்... நல்லிரவு.

  பதிலளிநீக்கு
 10. @ ஸ்ரீராம் அதிரா கிட்ட சொல்லுங்க :) ஏஞ்சல் தான் first :)

  பதிலளிநீக்கு
 11. //இதை ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன்ன் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)//

  அதிரா... சபாஷ்! சரியான போட்டி. துரை செல்வராஜூ ஸார் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்!

  பதிலளிநீக்கு
 12. வாங்க ஏஞ்சலின். படிக்காமலேயே "அனைத்தும் மனதுக்கு சந்தோஷத்தை தந்த செய்திகள்"னு சொல்லிட்டீங்களே... நியாயமா?!!!!!

  பதிலளிநீக்கு
 13. அதிரா... இன்று ஏஞ்சல் தான் ஃபர்ஸ்ட்! கொஞ்சம் இருங்க... நான் ப்ளஸ்ல, ஃபேஸ்புக்ல எல்லாம் ஷேர் பண்ணிட்டு வர்றேன்!!!!

  பதிலளிநீக்கு
 14. ஹாஹா :) ஓகே ஸ்ரீராம் அண்ட் துரை அண்ணா :) இனிய காலை வணக்கம் உங்களுக்கு குட்நைட் எங்களுக்கு

  பதிலளிநீக்கு
 15. ஏழு நிமிடங்களுக்குள் எத்தனை போட்டி.. பொடி பறக்கப் போகின்றது...

  பதிலளிநீக்கு
 16. ///ஸ்ரீராம்.November 18, 2017 at 6:06 AM
  வாங்க ஏஞ்சலின். படிக்காமலேயே "அனைத்தும் மனதுக்கு சந்தோஷத்தை தந்த செய்திகள்"னு சொல்லிட்டீங்களே... நியாயமா?!!!!!///

  ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் இருங்கோ உருண்டு பிரண்டு சிரிச்சிட்டு வாறேன்ன்ன்ன்ன் ஹையோ ஹையோ பிஸ்ஸூ சூப்பர் மாட்டீஈஈஈஈ:) சந்தோசம் பொயிங்குதேஏஏஎ:)... ஹா ஹா ஹா :)

  பதிலளிநீக்கு
 17. garr for sriram :) நான் பெட்டர் இந்தியா ரெகுலரா வாசிக்கிறேன் .விஜய் சேதுபதி செய்தி ஏற்கனவே படிச்சேன் மற்றது ரெண்டையும் உடனே வாசிச்சேனே லிங்கில் போய்

  பதிலளிநீக்கு
 18. அன்பின் ஸ்ரீராம் வணக்கம்..

  சென்ற வாரமே இதனை எதிர்பார்த்தேன்..
  இப்படியாவது விழித்திருந்து சூரிய உதயத்தை பார்க்கட்டுமே...

  பதிலளிநீக்கு
 19. ஆளாளுக்கு கர்ர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்ர்...ந்ந்டு சத்தம் போட்டுட்டு அப்புறமா குறட்டைச் சாமிகளாப் போய்டுவாங்க தானே...

  பதிலளிநீக்கு
 20. ///ஸ்ரீராம்.November 18, 2017 at 6:07 AM
  அதிரா... இன்று ஏஞ்சல் தான் ஃபர்ஸ்ட்! கொஞ்சம் இருங்க... நான் ப்ளஸ்ல, ஃபேஸ்புக்ல எல்லாம் ஷேர் பண்ணிட்டு வர்றேன்!!!!///

  ஓஒ எங்கள் முதலாவது லாண்டிங் பற்றித்தானே:) ஹையோ ஷை ஷையா வருதே:).... ஹா ஹா ஹா சரி சரி முறைக்கக்கூடாது... பாய் பாய் ஹையோ இது வேற பாய்:)...

  பதிலளிநீக்கு
 21. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) @ அதிரா ..சிரிப்பைப்பாரு ராமாயணத்தை மஹாபாரதத்தில் முடிச்சி போட்ட ஆளுக்கு :)

  பதிலளிநீக்கு
 22. துரை அண்ணன் ... சரி வாணாம் நா ஒண்ணும் பேசல்ல ஹா ஹா ஹா... ஒரு பழமொயி சொல்ல வந்தேன்ன்ன்:) ஹா ஹா ஹா .. இனி நாளைக்குப் பார்ப்போம்:)

  பதிலளிநீக்கு
 23. இந்தப் பதிவின் சிலவற்றை தினமலரில் வாசித்திருக்கிறேன்..

  தலைப்பைக் காணும்போதே விசயம் விளங்கிவிடும்...

  அதனால் - பதிவைப் படிக்காமல் கொமண்ட் அடிப்போர் பட்டியலில் நான் வரமாட்டேனாக்கும்!!!....

  பதிலளிநீக்கு
 24. ஆறு மணிக்கு வெளியாகும் பதிவை 6.01க்கு படித்து விட்டேன் என்று கதை விட்டால் எந்திரி -1 ( எந்திரனுக்கு எதிர்ப்பதம்) ஆக இருக்குமோ??..

  பதிலளிநீக்கு
 25. ஆவ்வ் திருவண்ணாமலை இளைஞர் இப்போதான் வாசித்தேன் :)
  கனிவான கம்பீரமான திருப்பூர் போலீஸ் அக்கா சூப்பர் :) சும்மாதான் சிரிச்சேன் :)
  எனக்கு வயதானோரை இப்படி பார்க்கவே அழுகையா வரும் .வெளிநாடுகளில் பல வசதி இருக்கு நம்மூரிலும் இவர்களை கவனிக்கிறார்களே இந்த மருத்துவ தெய்வங்கள் க்ரேட்

  பதிலளிநீக்கு
 26. //நான் பெட்டர் இந்தியா ரெகுலரா வாசிக்கிறேன் //

  ஓகே ஓகே... அப்போ சரி... புரிந்து கொண்டேன் ஏஞ்சல்... நன்றி.

  பதிலளிநீக்கு
 27. //சென்ற வாரமே இதனை எதிர்பார்த்தேன்..
  இப்படியாவது விழித்திருந்து சூரிய உதயத்தை பார்க்கட்டுமே...​//

  ஹா.... ஹா.... ஹா.... துரை செல்வராஜூ ஸார்... இஸ்த்தில் என்ன விஷயம் எண்டால் (!!) நான் பாசிட்டிவ் பதிவுக்கு பெரும்பாலும் பதில் சொல்வதில். என்னை பதில் எழுத வச்சுட்டாங்களே........ (சிவாஜி மாதிரி இழுத்துப் படிக்கவும்!)!!​

  //ஆளாளுக்கு கர்ர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்ர்...ந்ந்டு சத்தம் போட்டுட்டு அப்புறமா குறட்டைச் சாமிகளாப் போய்டுவாங்க தானே...​//

  ஹா.... ஹா.... ஹா....

  பதிலளிநீக்கு
 28. ​/​/ஓஒ எங்கள் முதலாவது லாண்டிங் பற்றித்தானே:) ஹையோ ஷை ஷையா வருதே:)..​//

  ரொம்ப நினைப்புதான் அதிரா... பதிவு பற்றி அங்கல்லாம் கொஞ்சம் விளம்பரப்படுத்தினாத்தான் கொஞ்ச மக்களாவது வந்து படிக்கறாங்க... ​​

  பதிலளிநீக்கு


 29. /​/அதிரா ..சிரிப்பைப்பாரு ராமாயணத்தை மஹாபாரதத்தில் முடிச்சி போட்ட ஆளுக்கு ​//

  ஏஞ்சல் ! இந்த விஷயத்தில் அதிரா சூப்பரா ஒரு பதம் யூஸ் பண்ணினாங்க... "கம்ப பாரதம்" நான் ரசித்த பதம் அது!​​

  பதிலளிநீக்கு
 30. /அதனால் - பதிவைப் படிக்காமல் கொமண்ட் அடிப்போர் பட்டியலில் நான் வரமாட்டேனாக்கும்!!!.... ​//

  ஐயோ... துரை ஸார்.. நான் உங்களை(யும்) சொல்லவில்லையாக்கும்!!!​

  //( எந்திரனுக்கு எதிர்ப்பதம்) ஆக இருக்குமோ??..​//

  சூப்பர்... ஆனா அவங்க தூங்கினாத்தானே 'எந்திரிக்க'!!!​

  பதிலளிநீக்கு
 31. //எனக்கு வயதானோரை இப்படி பார்க்கவே அழுகையா வரும் .​//

  ஆம். பாவம். படிச்சுட்டு ஃபீல் பண்ணினதுக்கு நன்றி ஏஞ்சல். இப்போ அங்க மணி என்ன? எப்போ தூக்கம்?​

  பதிலளிநீக்கு
 32. @athiraaaaw அதிரா திருவண்ணாமலை இளைஞர் பேர் என்ன சொல்லுங்க ?
  அப்புறம் விஜய் சேதுபதி யாருக்கு ஹெல்ப் பண்ணார்
  மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை டாக்டர்ஸ் எத்தினி பேர்
  Naman யாருக்கு ஹெல்ப் பண்ணார் சொல்லுங்க இப்போ

  பதிலளிநீக்கு
 33. @ஸ்ரீராம் அந்த கம்ப பாரததம் இப்போ உலக புகழ் பெற்றாச்சு :) எல்லா புகழும் பூனைக்கே :)

  பதிலளிநீக்கு
 34. @அதிராவ் அந்த போலீஸ் அக்கா எந்த ஊர்ல இருக்காங்க அதையும் சொல்லணும் :) அப்போதான் நம்புவேன் நீங்களும் படிச்சீங்கன்னு :)

  பதிலளிநீக்கு
 35. எல்லாருக்கும் லண்டன் லருந்து குட்நைட் சொல்லிக்கறேன் :) இப்போ இங்கே அதிகாலை 1 மணி :) நான் தூங்க போற நேரமென்பதால் குட்நைட் :)

  பதிலளிநீக்கு
 36. @ஏஞ்சல் கேள்விகள் இங்கே... விடைகள் எங்கே? அதிரா பரீட்சைக்குப் படிச்சுக்கிட்டு இருக்காங்க!

  பதிலளிநீக்கு
 37. துரை அண்ணா நான் இப்போதான் தூங்கபோறேன்:)

  பதிலளிநீக்கு
 38. @ஸ்ரீராம் இதிலிருந்து என்ன தெரியுது ..ஏஞ்சல் எல்லாத்தையும் படிச்சிட்டேன் :)

  பதிலளிநீக்கு
 39. நோ நோ :) பூனை முதியோர் கல்வி :) எழுத்து கூட்டி படிக்கிறாங்க இப்போதான் :)

  பதிலளிநீக்கு
 40. ஏஞ்சலின்...

  //பூனை முதியோர் கல்வி ://

  ஹா.... ஹா... ஹா..

  //OKAY :) BYE FOR NOW :) //

  குட் நைட்!

  பதிலளிநீக்கு
 41. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 42. அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளின் பகிர்வு. சிலவற்றைப் படித்துள்ளேன். இருந்தாலும் உங்கள் தளம் மூலமாக ஒட்டுமொத்தமாகக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.

  பதிலளிநீக்கு
 43. அனைவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 44. சூப்பர் நண்பர்களையும் நம்பரையும் பகிந்தர்க்கு நன்றி கடைசியில் வரும் நண்பர் செய்வது மிகவும் நல்லது

  பதிலளிநீக்கு
 45. வாழ்வில் நம்பிக்கை கொள்ளச் செய்யும் செய்திகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 46. அருமையான மனிதர்கள்.
  பாராட்டப்பட வேண்டியவர்கள்.

  பதிலளிநீக்கு
 47. அணைக்கும் உள்ளங்களுக்கு அன்பான வணக்கங்கள் த.ம வாக்குடன்

  பதிலளிநீக்கு
 48. வயதால் இளையவர்களாக இருந்தாலும், செயலால் உயர்ந்து நிற்கிறார்கள் நமன் முனோத், நேத்ராவதி மறுவாழ்வு மைய மருத்துவர்கள் மற்றும் திருவண்ணாமலை மணிமாறன். வணங்குகிறோம்.

  பதிலளிநீக்கு
 49. ஸ்ரீராம் இன்று வேற வழியில்லாம லேட்டா வந்தா இங்க என்னெல்ல்லாமோ நம்பமுடியாத அளவிற்கு நடந்திருக்கே!!!! இங்க ஒரு தூறல் கூட போடலையே!! யாரப்பா அது எங்க துரை செல்வராஜு சகோக்குப் போட்டியா??!!! தேம்ஸ் எல்லாம் விடிக்காலைல எப்படி வந்துச்சுங்கோ?!! அதுவும் அவங்களுக்கு பேய் உலாவுற நேரத்துல!!ஸ்ரீராம் நம்பாதீங்க!!! சொல்லிப்புட்டேன்! ஹேய் அப்ப இது பேயேதான் இங்க வந்து கமென்ட் போட்டுறக்கறது..ஹாஹாஹாஹா....

  கீதா

  பதிலளிநீக்கு
 50. ஓ! இன்று சனி லீவு ங்கறதுநால தேம்ஸ் எல்லாம் நேத்து பேய்க்கு ஹலோ சொல்லிட்டு லேட்டா தூங்கிருக்கு போல!!! ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 51. கண்ணுல தேம்ஸ் ரெண்டும் முதல்ல பட்டதுநால பதிவுக்குக் கமென்ட் போடாம ஸ்டன் ஆகிட்டேனாக்கும்!!!ஹிஹிஹி..

  விஜய் சேதுபதி தலைப்புல வந்தா கொஞ்சமேனும் எட்டிப்பார்ப்பாங்கனு ....தலைப்புக் கவர்ச்சியாக இல்லையா ஸ்ரீராம்!!...பாராட்டுகள் சேதுபதிக்கு அது என்ன ஏகாந்த ஸார் விருப்பம்..அவருக்கு வி சே ரொம்பப் பிடிக்குமோ??!!

  மணிமாறன் தன்னந்தனியாக அவர் சேவையைச் செய்து வருவது ரொம்பவே பாராட்டணும்!! வாழ்த்துகள் மணிமாறன்!!

  அதே போன்று நமன்....24 வயதே ஆன இந்த இளைஞரின் சேவை மிகவும் போற்றப்பட வேண்டும்! அவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்! நமன்!

  டாக்டர் டீம்!! மிகச் சிறந்த சேவை! அவர்களின் சேவையும் சிறந்து வளர்ந்திட வாழ்த்துகள்! இப்படியான நல்ல உள்ளங்கள் இருப்பதுதான் உலகை இயங்க வைக்கிறது. இந்த எண்களைக் குறித்துக் கொண்டுவிட்டேன். இப்படி நீங்கள் இங்கு கொடுக்கும் எண்களை நான் குறித்துக் கொண்டு தேவைப்படுவோருக்கு, நன்கொடை வழங்குபவர்களுக்குக் கொடுக்கிறேன். எனக்கு ஃபீட் பேக் வருகிறதோ இல்லையோ...அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

  திருப்பூர் போலீஸாரையும் வாழ்த்துவோம்!

  கீதா

  பதிலளிநீக்கு
 52. பூஸாரின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கு அவர் அப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்...என்று அர்த்தம் தூக்கக் கலக்கத்தில் இங்கு வந்து அதுவும் அவர் செக்கரட்டரி ஏஞ்சல் வந்துவிட்டாரே முதலில் என்று புகைந்து வந்ததாக்கும்...இல்லையா ஏஞ்சல்!!?? ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 53. நல்ல செய்திகளைப் பகிர பாருங்கள் எங்கள் ப்ளாக்

  பதிலளிநீக்கு
 54. // நல்ல செய்திகளைப் பகிர பாருங்கள் எங்கள் ப்ளாக் //

  ஜி எம் பி ஸார்... இவை நல்ல செய்திகள் இல்லையா?​

  பதிலளிநீக்கு
 55. @ ஸ்ரீராம் / கீதா:

  //.. அது என்ன ஏகாந்தன் ஸார் விருப்பம்..அவருக்கு வி சே ரொம்பப் பிடிக்குமோ??!!

  நான் தமிழ்ப் படங்கள் பார்த்து வருஷங்கள் ஆகிவிட்டது. ஜோசப் விஜய், விஜய் சேதுபதி,விஜய் ஆண்டனி போன்றவர்களை எல்லாம் நெட்டில் பார்த்துவருகிறேன்! அதுவே போதுமென்றும் எண்ணம்..

  நான் அன்று சொன்னது - இந்த அரசியல்வாதிகள், அவர்களது பிள்ளைகுட்டிகள், எண்ணற்ற சொந்தபந்தங்கள் இப்படி யாராவது ஏதாவது நல்லது செய்து அது எங்கள் ப்ளாகில் வராதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றேன் !சேதுபதியைப்பற்றி/நடிகர்களைப்பற்றி அல்ல!

  இருந்தும் மனுஷன் நல்லது செய்திருக்கிறார். பாராட்டப்படவேண்டியதுதான். நெட்டில் பார்த்த ஞாபகம் ரெண்டுவாரம் முன்பு . வயதான ஏழைகளின்பேரில் கரிசனம் காட்டும் வேலூர்க்காரர் வித்தியாசமான இளைஞர். இப்படி ஆங்காங்கே கொஞ்சம் பேர் இருந்துகொண்டு, அவ்வப்போது ஆங்காங்கே மழைபெய்ய வழி வகுக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 56. @geethaa :)
  ///ஓ! இன்று சனி லீவு ங்கறதுநால தேம்ஸ் எல்லாம் நேத்து பேய்க்கு ஹலோ சொல்லிட்டு லேட்டா தூங்கிருக்கு போல!!! ஹாஹாஹாஹா//

  கீதா :) ஹாஹா :) ஆமா :)

  பதிலளிநீக்கு
 57. மதுரை நேயமிக்க மருத்துவர்கள் தொண்டை படிக்கும் போது கண்ணீர் வருகிறது.

  விஜயசேதுபதிக்கு வாழ்த்துக்கள்.
  மணிமாறன் தொண்டு பாராட்ட தக்கது.

  அவர் நலமாகவும், வளமாகவும் வாழவேண்டும், வாழ்த்துக்கள்.

  பெண்போக்குவரத்து காவலர் பணி பாராட்டவேண்டும். போக்குவரத்து காவலருக்கு மைக் கொடுத்து இருப்பது நல்ல செயல்.

  நல்ல செய்தி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 58. மதுரையில் இன்னொரு மருத்துவமனையும் கூட இப்படி மக்கள் சேவை செய்வதாகக் கேள்விப் பட்டேன். அல்லது இங்கே தான் படிச்சேனா? தெரியலை! விஜய் சேதுபதி தவிர்த்து மற்றவை புதிது. நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 59. மற்ற நடிகர்களும் இதை படித்துக்கொள்ள வேண்டும்

  பதிலளிநீக்கு
 60. சிறப்பான மனிதர்கள்... பாராட்டுகள் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!